Home » Articles » என் பள்ளி

 
என் பள்ளி


ஆசிரியர் குழு
Author:

கடந்துபோன காலங்கள் காலத்தால் அழியாத ஓவியமாக கண்முன் நிற்பது இளமைகால பள்ளி பருவம். தாயின் மடியில் ஒருமுறை படுத்திருந்த போது கிடைத்த சுகம் ஒரு சிம்மாசனமாகும். அந்த சிம்மாசனம் மீண்டும் வராது. பள்ளிப்பருவமும் அப்படித்தான்.

மவுனமாகிபோன மனசின் பக்கங்களையும், பசுமையான அனுபவங்களையும் நம்மோடு பகிர்கிறார் சுயமுன்னேற்ற பேச்சாளர் அ. டோமினிக் சேகர்.

வாழ்வின் இனிப்பான முதல் அத்தியாயம் பள்ளிப்பருவம் தான். நட்சத்திர பூவாய் பூமணக்கும் வாசனை பருவம். பட்டாம் பூச்சியாய் பறக்கும் பள்ளிக்காலங்கள். நிஜமான நினைவுகளைச் சொல்லிச் சொல்லி செல்லும் வசந்தகாலம். பள்ளிப்பருவத்தில் ஆசான்கள் சொன்ன வார்த்தைகள் அருவியாய் இனித்தது. சங்கிலித் தொடராய் ஞாபக பின்னல்கள் கனவுகளாக காட்சியளித்தது.

தஞ்சைக்கு அருகில் உள்ள நாகத்தி என்ற கிராமத்தில் தான் தொடக்க வகுப்புக்கு என் தந்தை அஸ்திவாரமிட்டார். அரசு ஆரம்பப்பள்ளி ஐந்தாம் வகுப்பு வரை நான் படித்ததும் அந்தப் பள்ளி தான். எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்து முன்னுரை எழுதியது அந்த பள்ளியின் ஆசிரியராக இருந்தவர் என் தந்தை தான்.

என் பள்ளி பருவ காலங்களில் பாசகைகளை பிடித்து பாதையை காட்டிய பாதை நினைவுகள் இன்றும் என் கண்முன் நிழலாடுகிறது. அப்பா வாங்கி கொடுத்த முதல் அறிவு சொத்து “அறிச்சுவடி தான்” அனா, ஆவனா அட்டை எனது எதிர்கால அடிசுவடாக அன்று கிடைத்தது.

அன்று அடம்பிடித்து அம்மா அப்பாவிடம் ஆசையாய் கேட்டு வாங்கிய சிலேட்டும் சிலேட்டு குச்சியும் தான் தாய் தந்தையர். நித்தம் நித்தம் நீதிக்கதைகள் சொல்லி என் நிஜமான பயத்தை போக்கிய ஆசிரியர்களை பயபக்தியோடு நினைத்து பார்க்கிறேன்.

மேகத்தின் மழைத்துளி மனதில் விழும் பரிசுத்தமான அந்த பள்ளிப்பருவம் திரும்ப வருமா? புல்லாங்குழலில் நிரம்புகிற காற்றைபோல இனிமையாக வீசிய தென்றலான பருவம் என் பள்ளிப்பருவம். ஒரு வேப்பங்குச்சியில் புத்தகப் பைகளை, எல்லா மாணவர்களும் மாட்டிக்கொண்டு இரண்டு மாணவர்கள் அந்த குச்சியை பள்ளி வரைக்கும் பிடித்துக்கொண்டு சென்றது இன்று நினைத்தாலும் சுகமான சுகமாத் தெரிகிறது.

முதல் முதல் பள்ளி ஆண்டு விழாவில் போட்ட மாறுவேட போட்டியில் இரண்டு பக்கமும் ஆசிரியர்கள் பாதுகாப்பாக மேடையில் ஏற்றிவிட்ட பணிகளை நினைத்து பார்க்கிறேன். பேச்சுப்போட்டியில் தட்டுத்தடுமாறி முதல் முதல் பேசியபோது என் ஆசிரியர் ஆசையாய் தட்டிக்கொடுத்து தன்னம்பிக்கை ஊட்டியது, இன்று நான் தன்னம்பிக்கை பேச்சாளராக வருவதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. நினைக்கும்போது என் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சி பூக்கள் பூக்கின்றன. தொலை தூர வெளிச்சங்களை தொட்டுத்தொட்டு காட்டிய தொடக்க பள்ளி ஆசிரியர் இன்று அவர்களை தொலைத்துவிட்டதை நினைத்து கண்களின் ஓரம் கண்ணீராய் நிற்கின்றன.

இப்படி என் பள்ளிப்பருவம் மாறிமாறி கலர் கலர் பஞ்சு மிட்டாயாய் மனசின் பக்கங்களில் இனிக்கிறது.

தொடர்ந்து உயர்நிலைப் பள்ளிப் படிப்பு நான்கு கிலோமீட்டர் தூரம் உள்ள அருள்நெறி உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று படித்தேன். அம்மன்பேட்டை என்ற இடத்திற்குச் செல்வதற்கு வெட்டாறு ஒன்று அதை கடந்து சென்றால் இரண்டு கிலோமீட்டரில் பள்ளிக்கு சென்றுவிடலாம். ஆற்றில் தண்ணீர் வந்தால் அதை கடந்து போய் பள்ளிக்குச் சென்று பத்தாம்வகுப்பு முடித்தேன். கிராமத்து இயற்கை சூழலையும், இடையூறுகளையும் கடந்துதான் உயர்நிலை கல்வி படித்தேன்.

உயர்நிலைப் பள்ளி என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான பளபளப்பான புத்தகத்தின் அட்டைப்படம் போல் இன்றும் ஃப்ளாஷ்பேக் காட்சியாக நிற்கின்றன. ஆசிரியர் மாணவர் உறவு, அன்பு, பாசம், கோபம் போன்றவை எல்லாம் மாறி மாறி வந்தன. ஒருமுறை என் டிபன் பாக்சில் இருந்த இட்லியை எடுத்தற்காக சண்டை போட்டது. பிறகு அந்த நண்பனிடமே நட்பின் மகத்துவத்தை உணர்ந்தது. இப்படி சின்னச்சின்ன சிணுங்கலும், சந்தோச ராகங்களும் மீட்டப்பட்டன.

தொடர்ந்து மேல்நிலைப் பள்ளி பெரம்பலூர் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியும், கல்லூரி படிப்பு திருச்சி புனித ஜோசப் தன்னாட்சி கல்லூரியிலும், ஆ.உக்.  புனித சேவியர் கல்வியியல் கல்லூரி பாளையங்கோட்டையிலும் முடித்து ஆசிரியர் பணியாக தஞ்சையில் பணியாற்றுவது மட்டுமல்லாது, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சுயமுன்னேற்ற பயிற்சியை நடத்தி வருகின்றேன்.

இன்று தமிழகம் முழுவதும் தன்னம்பிக்கை பேச்சாளராக அடையாளப்படுத்தியது “தன்னம்பிக்கை” இதழ் தான் என்பதை பெருமையோடு சொல்ல ஆசைப்படுகிறேன். அது மட்டுமல்லாது, பல்வேறு மாவட்ட கிராமபுரத்தில் படிக்கும் பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசுத் தேர்வில் வெற்றி பெறுவதற்கும், மாணவர்களுக்கு ஊக்கத்தையும் உந்து சக்தியையும் ஏற்படுத்துவதற்காக பேச்சாளராக மாணவர்கள் மத்தியில் முகவரியை கொடுத்தவர் தொழுதூர் நாவல் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி என்பதையும் மகிழ்வுடன் நினைத்து பார்க்கிறேன்.

தொடர்ந்து 22 மாவட்டங்களுக்கும் மேலாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கவிதையாலும், பாடல்களாலும், பலவிதமான மேற்கோள்களையும் சொல்லி வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களையும், சாதித்தவர்களையும், மாணவர்கள் மனதில் உரமேற்றி வருகிறேன். மாணவர் சரித்திரத்தில் இடம் பெற முயற்சி செய்து வருகிறேன். மாணவர்கள் வெற்றி பெற விழியாகவும், வழியாக செயல்பட்டு வருகின்றேன். நம்பிக்கையின் விதைகளைத் தெளிக்கிறேன். நாளைய சமுதாயத்தின் விருட்சமாக மாறுவார்கள் என்ற நம்பிக்கை பயணத்தில்…

  • 23 உலக சாதனைகளைச் செய்துள்ளேன்
  • 25 முறை இரத்த தானம் செய்துள்ளேன்
  • தஞ்சை அரசு மருத்துவமனை மாணவர்களுக்கு கல்விப்பணிக்காக உடல் தானம் செய்துள்ளேன்
  • கல்வி பணிக்காகவும், தமிழ் பணிக்காகவும் மாநில அளவில் பரிசுகள் மற்றும் விருதுகளைப் பெற்றுள்ளேன்.
  • நல்லாசிரியருக்கான விருதை இவ்வாண்டு பெற்றுள்ளேன் (2014 – 15)

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2015

வெற்றியை தீர்மானிக்கும் 4 எழுத்துக்கள்
இரகசியம் – பரம ரகசியம் – வெள்ளைப் பொன்னி அரிசி
பல்லும்… சொல்லும்……
குளியல் குறிப்புகள்
உறவின் பெருமை
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்
உள்ளத்தோடு உள்ளம்
நீ நடந்தாய் உலகம் நிமிர்ந்தது
திருவள்ளுவர் வழிபடும் தெய்வம் திருக்குறளே வழிபடும் நூல்
பழந்தமிழரின் சூழல் சிந்தனை
உறவுகள் அமைவதெல்லாம்…
சுற்றுப்புறச்சூழலின் தாக்கம் வெற்றியைப் பாதிக்குமா ?
காய்ச்சல்
நான் ஸ்டாப் கொண்டாட்டத்திற்கு நான்கு வழிகள்
தன்னம்பிக்கையுடன் செயல்படும் மண்பாண்டத் தொழிலாளர்கள்
செயலின் தைரியம் மகிழ்ச்சியின் ரகசியம்!
என் பள்ளி
தன்னம்பிக்கை மேடை