Home » Articles » பழந்தமிழரின் சூழல் சிந்தனை

 
பழந்தமிழரின் சூழல் சிந்தனை


சிதம்பரம் ரவிச்சந்திரன்
Author:

இரண்டே இரண்டு வரிப்பாட்டின் வழியாக உலகின் மிகச்சிறந்த சூழல் உணர்வுள்ளவர்களாக பழந்தமிழர்கள் வாழ்ந்து வந்தனர் என்பதற்கு ஐங்குறுநூறு நூலில் வரும் இந்தப் பாடல் ஒரு சான்றாகும்.

“மரம் சார் மருந்தும் கொளார்”

இந்த இரண்டு வரிப்பாட்டு காட்சிப்படுத்தும் சுமார் 1800 வருடங்களுக்கு முந்தைய வாழ்க்கையின் ஒரு கதைக்களம் இதோ. ஒருவர் மரணப்படுக்கையில் கிடக்கிறார். மருத்துவர் வருகிறார். அவர் உடலை பரிசோதிக்கிறார். மருத்துவர் கூறுகிறார், “வீட்டிற்கு முன்னால் இருக்கும் ஒரு அபூர்வ மரத்தை வெட்டி அதன் ஆணிவேரைப் பிடுங்கி அதை கஷாயமாக்கிக் கொடுத்தால் நோயாளி உயிர் பிழைக்க முடியும்” என்று. அதற்கு மறுமொழியாக நோயாளியாக இருக்கும் பழந்தமிழர் கூறுவது தான் இந்த இரண்டு வரிப்பாட்டு ‘மரம் சார் மருந்தும் கொளார்’ அதாவது…

‘வீட்டிற்கு முன்னால் இருக்கும் அந்த அபூர்வ மரத்தின் இலைகளைப் பறித்து எடுத்து கஷாயமாக்கிக் கொடுத்தால் நோய் குணமாகும் என்றால் அந்த இலைகளைப் பறித்துக் கொடுங்கள். அந்த மரத்தின் காய், கனிகளைப் பிய்த்து எடுத்துக் கொடுங்கள். ஆனால் அந்த மரத்தை வெட்டிக் கொன்று தான் நோயாளியான என் நோய் குணமாகும் என்றால் நான் சாகிறேன். அந்த மரம் உயிரோடு இருக்கட்டும்’. இது தான் மரம் சார் மருந்தும் கொளார்.

பழந்தமிழர்கள் எந்த அளவுக்கு சூழலை நேசித்து இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்தார்கள் என்பதற்கு இதைவிட சிறந்த ஒரு உதாரணம் உலகத்தில் இருக்க முடியுமா? இப்பேர்பட்ட சிறந்த சூழல் உணர்வுள்ளவர்களாக வாழ்ந்த நம் தமிழர் பரம்பரையில் வந்த நாம் இந்த உணர்வில் ஒரு சிறிய பங்கையாவது பெற்றிருக்க வேண்டாமா? நம்மால் முடிந்த சிறுசிறு சூழல் பாதுகாப்பு செயல்களிலாவது நாம் ஈடுபட வேண்டாமா? சிந்திப்போம்!

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2015

வெற்றியை தீர்மானிக்கும் 4 எழுத்துக்கள்
இரகசியம் – பரம ரகசியம் – வெள்ளைப் பொன்னி அரிசி
பல்லும்… சொல்லும்……
குளியல் குறிப்புகள்
உறவின் பெருமை
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்
உள்ளத்தோடு உள்ளம்
நீ நடந்தாய் உலகம் நிமிர்ந்தது
திருவள்ளுவர் வழிபடும் தெய்வம் திருக்குறளே வழிபடும் நூல்
பழந்தமிழரின் சூழல் சிந்தனை
உறவுகள் அமைவதெல்லாம்…
சுற்றுப்புறச்சூழலின் தாக்கம் வெற்றியைப் பாதிக்குமா ?
காய்ச்சல்
நான் ஸ்டாப் கொண்டாட்டத்திற்கு நான்கு வழிகள்
தன்னம்பிக்கையுடன் செயல்படும் மண்பாண்டத் தொழிலாளர்கள்
செயலின் தைரியம் மகிழ்ச்சியின் ரகசியம்!
என் பள்ளி
தன்னம்பிக்கை மேடை