Home » Articles » குளியல் குறிப்புகள்

 
குளியல் குறிப்புகள்


அனுராதா கிருஷ்ணன்
Author:

அன்பு நண்பர்களே! குளிப்பதற்கு கூடவா செயல் முறை விளக்கம் தேவை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனாலும், அது பற்றிய புரிதல் நம் ஆரோக்கிய வாழ்க்கைக்குத் தேவைப்படுவதால் அது பற்றி இனிப் பார்ப்போம். குளியல் என்பது ஆரோக்கிய கண்ணோட்டத்தில் கீழ்கண்ட விதமாக நாம் விவாதிக்கலாம்.

1. அன்றாடக் குளியல்: நாம் எல்லா நாட்களலும் எந்தச் சூழலிலும் (ஜுரம் அடிக்கும்போதும்) குளிப்பது நல்லதுதான். நாம் குளிக்க தண்ணீரைத்தான் (பச்சைத் தண்ணீரை) பயன்படுத்த வேண்டும். வெய்யில் மற்றும் குளிர் நாளிலும் பச்சைத் தண்ணீரைப் பயன்படுத்தினால் நம் உடலானது அதிக கோடை வெப்பம் மற்றும் பனிக்காலக் குளிர் ஆகிய இரண்டையுமே இயல்பாக எற்றுக்கொள்ளும் தனமையில் நம் உடல் இருக்கும். நம்ப முடியாவிட்டால் நீங்களே முயற்சித்துப் பார்க்கலாம். அப்புறம் பச்சைத் தண்ணீரில் குளித்தால் சளி பிடித்துக்கொள்ளும் என்று பயப்படுபவர்கள்தான் அன்றாடம் சளி என்ற சனியனுடன் மல்லுக் கட்டுகிறார்கள். அப்புறம் குளியல் என்று சொல்லிக்கொண்டு உடலுக்கு மட்டும் தண்ணீர் ஊற்றிக்கொள்வது சரியல்ல. நாம் தினமும் தலைக்கும் சேர்த்தே தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும். புதிதாக ஒரு ஊரில் குளிக்க நேர்ந்தால் முதலில் அந்தத் தண்ணீரை சிறிது எடுத்து நம் காதுகளன் பின்னால் தடவிவிட்டு பின்னர் குளித்தால் அந்தத் தண்ணீரால் யாதொரு கேடும் உண்டாகாது. அப்புறம் குளியலுக்கு இரசாயன சோப்பு கட்டிகளைப் பயன்படுத்தக்கூடாது. மூலிகை சோப்புகளைப் பயன்படுத்தலாம். அப்படி பயன்படுத்தும்போது அந்தச் சோப்பை ஒரு முறை தேய்த்து நுரைக்க வைத்து அதனை உடலில் தேய்த்துக் குளிக்கலாம். சோப்பை அப்படியே உடலில் நேரடியாகப் போடுவது நம் தோலின் வியர்வைச் சுரப்பிகளை அடைத்துவிடும்.

2. தலைக்குளியல்: வாரம் ஒரு முறை நம் உச்சம் தலை முதல் பாதம் வரை இலேசாக சுட வைத்த நல்லெண்ணெய்யை தடவி மஸாஜ் செய்ய வேண்டும். உடலில் மஸாஜ் செய்வது எல்லாம் மூலாதாரத்தை நோக்கிய திசையிலேயே இருக்க வேண்டும். அதற்கு எதிரான திசையில் செய்தால் உடலில் வாய்வு சிக்கிக்கொண்டு உடல் வலி மற்றும் சோர்வைத் தரும். ஆக, எப்படி எண்ணெய்த் தேய்ப்பது என்று தெரியாமல் தலை குளித்துவிட்டு அப்புறம் உடல் அசௌரியம் ஏற்படும்போது எண்ணெய்த் தேய்துக் குளிப்பதே தவறு என்ற முடிவிற்கு வந்துவிடுவோம். பின்னர் கொஞ்சம் வியர்க்கும் அளவிற்கு சிறிது வெய்யலிலோ அல்லது வேலையோ செய்து விட்டு பின்னர் மூலிகை பொடி அல்லது ஷாம்பு கொண்டு தலை முதல் பாதம் வரை எண்ணெய்ப் பிசுக்கு போகும் வரைத் தேய்த்துக்குளிக்க வேண்டும். தலைகுளிக்கும் அன்று பகலில் தூங்கக்கூடாது. இரவில் உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது.

3. தொட்டிக் குளியல்: நாம் கால்களை வெளியே நீட்டி வைத்துக் கொண்டு இடுப்புப் பகுதி மட்டும் தண்ணீரில் இருக்கும்படி (தொப்புள் வரை நீர் மட்டம் இருக்க வேண்டும்) 15 நிமிடங்கள் அமர்ந்து இருக்கலாம். இப்படிச் செய்வதால் நம் மூலாதாரம் குளிர்ந்து நம் உடலும் குளிர்ச்சியடைகிறது. இதன் மூலம் நம் கல்லீரலின் வெப்பம் தணிகிறது. மூலம் குணமடையும். தினமும் தொட்டிக் குளியல் செய்வதால் உடல் புத்துணர்வு பெறும்.

4. மண் குளியல்: மாதம் ஒரு முறை புற்று மண்ணை நீரில் கரைத்து உடல் முழுவதும் பூசி, சற்று காய்ந்த பின்னர் தண்ணீரில் குளித்தல் வேண்டும். மண் குளியலானது நம் தோல் மற்றும் உடலில் உள்ள கழிவுகளை வியர்வைச் சுரப்பிகளின் மூலம் வெளியேற்றம் செய்கிறது. உடல் புத்துணர்வு பெறுகிறது.

5. வாழை இலைக் குளியல்: ஆறு மாதம் ஒரு முறை பச்சை வாழையிலைகளை உடலின் அனைத்து பாகங்களிலும் நாரால் கட்டி, 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் காயவைத்து பின்னர் இலைகளை நீக்கிவிட்டு தண்ணீரில் குளிக்க வேண்டும். இதனால் நம் உடலில் உள்ள விஷங்கள் நீக்கப்படுகின்றன. இவ்விதமானக் குளியல் நாட்பட்ட நோய்கள் மற்றும் நீடித்த காய்ச்சலிலிருந்து விடுபட முடியும்.

ஆக, ஆரோக்கியத்திற்கான குளியல் வகைகளை நாம் பார்த்துள்ளோம். இதில் அன்றாடக் குளியல் மற்றும் தொட்டிக்குளியலை நாம் தினம்தோறும் காலையில் செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.

தினசரிக் குளியலால் நம் உடலின் இருபது சதவீத தண்ணீர் தேவைப் பூர்த்தியாகிறது.

தினசரி தொட்டிக் குளியலால் நம் உடலின் இருபது சதவீத உஷ்ணம் தணிகிறது

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2015

வெற்றியை தீர்மானிக்கும் 4 எழுத்துக்கள்
இரகசியம் – பரம ரகசியம் – வெள்ளைப் பொன்னி அரிசி
பல்லும்… சொல்லும்……
குளியல் குறிப்புகள்
உறவின் பெருமை
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்
உள்ளத்தோடு உள்ளம்
நீ நடந்தாய் உலகம் நிமிர்ந்தது
திருவள்ளுவர் வழிபடும் தெய்வம் திருக்குறளே வழிபடும் நூல்
பழந்தமிழரின் சூழல் சிந்தனை
உறவுகள் அமைவதெல்லாம்…
சுற்றுப்புறச்சூழலின் தாக்கம் வெற்றியைப் பாதிக்குமா ?
காய்ச்சல்
நான் ஸ்டாப் கொண்டாட்டத்திற்கு நான்கு வழிகள்
தன்னம்பிக்கையுடன் செயல்படும் மண்பாண்டத் தொழிலாளர்கள்
செயலின் தைரியம் மகிழ்ச்சியின் ரகசியம்!
என் பள்ளி
தன்னம்பிக்கை மேடை