Home » Articles » காய்ச்சல்

 
காய்ச்சல்


இராஜேந்திரன் க
Author:

காய்ச்சல் என்பது சீரான அளவில் அதிகரிக்கும் உடலின் தட்பவெப்பம் ஆகும். குழந்தைகளின் உடல் பெரியவர்களை விட பொதுவாகவே அதிக தட்பவெப்பத்தை கொண்டிருக்கும். உடலின் வெப்பம் பொதுவாக 36.60C முதல் 37.90C வரை (97.80F-100.20F) இருக்கும்.

அளவிடும் முறை

உடலின் தட்பவெப்பத்தை அளவிட பல வழிமுறைகள் உள்ளன. வெப்பமானி என்பது உடலின் வெப்பத்தைக் கண்டறிய உதவும் கருவி. இதை நாக்கிற்கு அடியிலோ, அக்குள் (Axila) பகுதியிலோ, ஆசன வாயிலோ வைத்து கண்டறியலாம். ஆசன வாயில் வெப்பமானி வைத்து கண்டறியும் முறையே சிறந்ததாகும். ஆனால் நடைமுறையில் சாத்தியம் இல்லாததால் குழந்தைகளுக்கு அக்குளில் வைத்து கண்டறியலாம். இம்முறையில் கண்டறியும் போது வெப்பமானியில் 10F அளவை வரும் அளவோடு கூட்டிக் கொள்ளவேண்டும். உதாரணத்திற்கு அக்குளில் வைத்து அளக்கும் போது 98.60F என்று வந்தால், இதனுடன் 10F  கூட்டி 99.60F என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு 1000F மேல் வெப்பநிலை இருந்தால், காய்ச்சலுக்கான மருந்து கொடுக்க வேண்டும்.

காய்ச்சலைக் கண்டறிய இரண்டு வகை வெப்ப மானிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஒன்று பாதரசம் அடங்கியது. இவ்வகையில் ஆபத்து என்னவென்றால், பாதரசம் எதேச்சையாக கசிந்துவிட்டால் அது குழந்தைக்கு ஆபத்து ஏற்படுத்தலாம். அதனால் தற்பொழுது டிஜிட்டல் வெப்பமானிகளை மருத்துவர்கள் உபயோகப்படுத்த அறிவுறுத்துகிறார்கள்.

காரணம்

காய்ச்சல் ஏற்பட பல காரணங்கள் உண்டு. தொற்றுநோய், தடுப்பூசிகள், காயங்கள், மருந்துகள், புற்றுநோய் மற்றும் பரம்பரை சார்ந்த நோய்கள் என்று பல்வேறு காரணங்கள் உள்ளன.

காய்ச்சல் என்பது நோயின் அறிகுறி; நோய் அல்ல. எனவே காய்ச்சலின் காரணத்தைக் கண்டறிவது முக்கியமாகும். காய்ச்சலின் தன்மையை வைத்து சிலசமயம் காய்ச்சலின் காரணத்தைக் கண்டறியலாம்.

சிகிச்சை

காய்ச்சல் என்பது நோயல்ல என்பதால் காய்ச்சலை வரும்போதெல்லாம் அதைக் கட்டுப்படுத்த வேண்டாம் என்பது சில மருத்துவர்களின் கணிப்பு. ஆனால் காய்ச்சலினால் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவது, நீர் சத்து குறைதல், வலிப்பு ஏற்படும் அபாயம் ஆகியவையினால் காய்ச்சலைக் குறைக்க வேண்டும்.

பொதுவாகக் காய்ச்சலுக்கு இரண்டு வகையான மருந்துகள் உபயோகப்படுத்தப் படுகின்றன. பாராசிடமால் (Paracetamol) மற்றும் இபுபுரூஃபன் (ibuprofen). இதைத் தவிர அஸ்பிரின் (Aspirin), நிமுசுலைட் (Nimesulide) மற்றும் மெஃபெனமிக் அசிட் (Mefenamic Acid) போன்ற மருந்துகள் சிலரால் பயன்படுத்தப்பட்டாலும் குழந்தைகளுக்கு இம்மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் இவ்வகையான மருந்துகள் வயிற்று எரிச்சல், வயிற்றுப்புண், ஈரல் மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்.

பாராசிடமால்

பாராசிடமால் மருந்து பொதுவாக எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தாது. எனவே காய்ச்சலுக்கு பாராசிடமால் மருந்தே சிறந்தது. ஒரு வேளைக்கு 10-15 மி.கி./கிலோ என்ற கணக்கில் ஒரு நாளைக்கு நான்கு வேளைகள் கொடுக்கலாம். ஒரு நாளைக்கு 60 மி.கி. மேல் போகாமல் இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமானால் இம்மருந்தும் ஈரல் மற்றும் இரத்தம் உறைவதில் பாதிப்பை ஏற்படுத்தும். ஈரத் துணியால் துடைக்கும் (Tepid water therapy) முறை நிரூபிக்கப்படாவிட்டாலும், இம்முறையைக் கையாள்வதால் ஆபத்தில்லை.

பெரும்பாலான காய்ச்சல்கள் வைரஸ் கிருமிகளால் ஏற்படுவதாகும், குழந்தைகளின் வெப்பநிலை 100.40F மேல் இருந்தால் மாத்திரமே காய்ச்சல் என்று கருதப்படுகிறது.

பாக்டீரியா மற்றும் வேறு நுண்கிருமிகளால் ஏற்படும் காய்ச்சல்கள் வீரியம் மிக்கவை. காய்ச்சல் வருவதால் உடம்பில் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். ஆனால் அனைத்துக் காய்ச்சல்களையும் நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. குழந்தைகள் உணவு எதுவும் உண்ணாமல் சோர்ந்து இருந்தாலோ, காய்ச்சலுடன் வாந்தி, வயிற்றுப்போக்கு இருந்தாலோ மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2015

வெற்றியை தீர்மானிக்கும் 4 எழுத்துக்கள்
இரகசியம் – பரம ரகசியம் – வெள்ளைப் பொன்னி அரிசி
பல்லும்… சொல்லும்……
குளியல் குறிப்புகள்
உறவின் பெருமை
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்
உள்ளத்தோடு உள்ளம்
நீ நடந்தாய் உலகம் நிமிர்ந்தது
திருவள்ளுவர் வழிபடும் தெய்வம் திருக்குறளே வழிபடும் நூல்
பழந்தமிழரின் சூழல் சிந்தனை
உறவுகள் அமைவதெல்லாம்…
சுற்றுப்புறச்சூழலின் தாக்கம் வெற்றியைப் பாதிக்குமா ?
காய்ச்சல்
நான் ஸ்டாப் கொண்டாட்டத்திற்கு நான்கு வழிகள்
தன்னம்பிக்கையுடன் செயல்படும் மண்பாண்டத் தொழிலாளர்கள்
செயலின் தைரியம் மகிழ்ச்சியின் ரகசியம்!
என் பள்ளி
தன்னம்பிக்கை மேடை