Home » Articles » இரகசியம் – பரம ரகசியம் – வெள்ளைப் பொன்னி அரிசி

 
இரகசியம் – பரம ரகசியம் – வெள்ளைப் பொன்னி அரிசி


கமலக்கண்ணன் P
Author:

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானால், அதை சர்க்கரை வியாதி (Diabetes) என்று சொல்கிறோம். பரம்பரை, தட்பவெப்ப நிலை, உடற்பயிற்சி செய்யாதது, உணவைச் சரியாக மென்று சாப்பிடாதது, அதிக இனிப்பு சாப்பிடுவது என்ற காரணங்களால் இந்நோய் வருவதாகச் சொல்கின்றனர்.

நம் தமிழ்நாட்டில் அரிசி உணவு அனைத்து மக்களாலும் விரும்பி உண்ணப்படுகிறது. கர்நாடகாவில் கேழ்வரகு, வட இந்தியாவில் கோதுமை என ஆங்காங்கு விளையும் தானியங்களே உணவாகின்றன.

பொதுவாக உலகம் முழுதும் இன்று பரவியுள்ள ஆங்கில மருத்துவம் பயின்ற மருத்துவர்கள், சர்க்கரை நோய் வருவதற்கும், அரிசிக்கும் சம்பந்தமில்லை என்று கூறிவருகின்றனர். எல்லா தானியங்களிலும்  கார்போஹைட்ரேட் எனும் மாவுப்பொருள் பெரிய அளவில் மாறுபடுவதில்லை. எனவே, அரிசி உணவையே உண்ணுங்கள் என்று பரிந்துரைக்கின்றனர்.

தற்போது இது தவறு என விஞ்ஞான பூர்வமாகவும், அனுபவ பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இரத்தத்திலுள்ள குளுக்கோஸின் அளவு தான் இரத்த சர்க்கரை (Blood Suger) என்று கூறப்படுகிறது. இது GI ஆகும்.

கிளைசெமிக் இண்டெக்ஸ் (Glycemic Index) என்பது இரத்த சர்க்கரையின் அளவைக் குறிப்பதாகும்.

உணவிலுள்ள ஒரு கிராம் கார்போஹைட்ரேட் (மொத்த கார்போஹைட்ரேட்  நார்ச்சத்து), அதை உண்டபின், இரத்தத்தில் சர்க்கரை அளவை எவ்வளவு அதிகமாக்குகிறது என்பது தான் இந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (GI). சுத்தமான குளுக்கோஸின் அளவு 100 என்றால், நாம் உண்ணும் தானியங்களின் அட்டவணை:

வெள்ளைப் பொன்னி அரிசி      – 75

பாஸ்மதி அரிசி                              –  58

சீரகச் சம்பா அரிசி                       –   56

 கைக்குத்தல் அரிசி                      –  50

இந்த அளவு 70 முதல் 100 வரை உள்ள உணவுகள் சர்க்கரை அளவை சீக்கிரம் அதிகப்படுத்தும்.

55 முதல் 70 வரை உள்ள உணவுகள் மெதுவாக (மீடியம்) உயர்த்தும்.

55க்குக் கீழ் உள்ள உணவுகள் சர்க்கரை அளவைஅதிகரிக்காது.

இந்த அட்டவணையின் படி, கைக்குத்தல் அரிசி சாப்பிட்டால் இரத்த சர்க்கரை உயராது என்பது தெளிவாகிறது. கோதுமை, குறுந்தானியங்களான சாமை, வரகு, ராகி, தினை, குதிரை வாலி என்றபலவும் கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைந்தவைகளே.

இவற்றிலுள்ள அதிக நார்ச்சத்து வாயு பிரச்சனைகளை நீக்கி, உடல் எடையைச் சரியாக வைத்துக் கொள்ளும்.

பல நாடுகளில் தானிய GI அட்டவணை அதன் பாக்கெட் மீது குறிக்கப்பட வேண்டுமெனச் சட்டங்கள் உள்ளன.

  தமிழ்நாட்டில் மக்கள் வெள்ளைப் பொன்னி அரிசியை அதிக அளவு உண்பதால், வட இந்தியர்களை விட அதிக அளவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்து, நம் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவைக் கணக்கிடுவதற்கு, எந்த அளவு உணவு சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம். உணவு அளவைக் குறிக்க GL (Glycemic Load) என்று சொல்கிறோம். பொதுவாக நாம் உண்ணும் உணவில்

கார்போஹைட்ரேட்    50%

கொழுப்பு                            30%

புரோட்டின்                        20%

என்ற அளவில் இருந்தால் நல்லது.

ஆனால், புள்ளி விபரங்கள் நாம் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட் 75% உள்ளதாய் தெரிவிக்கின்றன. இதனால் இரத்த சர்க்கரை அதிக அளவில் உள்ளது உறுதியாகிறது.

கிளைசெமிக் இன்டெக்ஸ் (GI) அதிகமான உணவுகளை அதிக அளவு  சாப்பிட்டால் (GL), அனைவருமே சர்க்கரை நோயாளிகளாக விரும்புகிறோம் என்று அர்த்தம்.

எனவே, வாசகர்களே! உஷார்.

மல்லிகைப் பூ போல் உள்ள வெள்ளைப் பொன்னிக்குப் பதிலாக கைக்குத்தல் அரிசி, கோதுமை, ராகி உள்ளிட்ட குறுந்தானியங்களை உணவாக உட்கொண்டு, எதிர்கால சமுதாயத்தையாவது சர்க்கரை நோயற்றதாக மாற்றுவோம்.

தொகுப்பு: Jc. S.M.பன்னீர்செல்வம்

கோவை

97893 75278

இந்த இதழை மேலும்


Share
 

1 Comment

  1. pselvam says:

    dear sir, u wrote needy information about diabetic problem. pl write much more information on health.jc smp.

Leave a Reply to pselvam


 

 


January 2015

வெற்றியை தீர்மானிக்கும் 4 எழுத்துக்கள்
இரகசியம் – பரம ரகசியம் – வெள்ளைப் பொன்னி அரிசி
பல்லும்… சொல்லும்……
குளியல் குறிப்புகள்
உறவின் பெருமை
இடைவெளியை பூஜ்யமாக்குவோம்
உள்ளத்தோடு உள்ளம்
நீ நடந்தாய் உலகம் நிமிர்ந்தது
திருவள்ளுவர் வழிபடும் தெய்வம் திருக்குறளே வழிபடும் நூல்
பழந்தமிழரின் சூழல் சிந்தனை
உறவுகள் அமைவதெல்லாம்…
சுற்றுப்புறச்சூழலின் தாக்கம் வெற்றியைப் பாதிக்குமா ?
காய்ச்சல்
நான் ஸ்டாப் கொண்டாட்டத்திற்கு நான்கு வழிகள்
தன்னம்பிக்கையுடன் செயல்படும் மண்பாண்டத் தொழிலாளர்கள்
செயலின் தைரியம் மகிழ்ச்சியின் ரகசியம்!
என் பள்ளி
தன்னம்பிக்கை மேடை