Home » Articles » தயாராகுதல்

 
தயாராகுதல்


அனுராதா கிருஷ்ணன்
Author:

இரண்டு நண்பர்கள் மரம் வெட்ட காட்டிற்குப் போனார்கள். ஒருவர் போனதும் மரத்தை வெட்ட ஆரம்பித்தார். இன்னொருவர் அதோ இதோ என்று போக்கு காட்டிக் கொண்டிருந்தார். முதலாமவர் பாதி மரத்தை வெட்டிய பிறகு இரண்டாமவரைப் பார்த்து “என்ன இன்னும் வெட்டவே ஆரம்பிக்கவில்லையே, பொழுது போய்விடும் போ’ என்றார். ஆனால் இரண்டாமவர் கோடாறியை எடுத்தார். ஒரே போடாய் மரத்தை வெட்டி சாய்த்தார். முதலாமவர் அசந்து போனார். “எப்படி இதைச் செய்தாய் என்று அதிசயமாகக் கேட்டார்’.  இரண்டாமவர் சொன்னார், “நீ வெட்டிக் கொண்டிருந்த  நேரத்தில் நான் என் கோடாறியைக் கூர் தீட்டினேன். அப்போதுதான்  முதலாமவர் தன் புத்தியைத் தீட்டாதது புரிந்தது.

அன்பு நண்பர்களே! ஐந்தறிவு புலி கூட பாய்வதற்கு முன் பதுங்கித் தயாராகிறது. ஓரறிவு இலவம் பஞ்சு மரம் பூத்து காய்ப்பதற்கு முன் தன் இலைகள் முழுவதையும் உதிர்த்துவிடுகிறது. இரைக்காக மானை விரட்டும் சிறுத்தை கூட மானை நன்றாக ஓடவிட்டுத்தான் பின்னர் ஒரே போடாக சாய்க்கிறது. பகல் முழுக்க ஓடும் டவுன் பஸ் கூட இரவில் பழுது பார்த்தால்தான் அடுத்த நாள் ஓட்ட முடிகிறது. ஒரு வீடு கட்ட வேண்டுமாயின் அதன் வரைபடம் தயாராக வேண்டும். ஒரு புத்தகம் எழுத வேண்டுமென்றால் அது நம் சிந்தனையில் கருகொள்ள வேண்டுமல்லவா? அதே புத்தகத்தை படிக்க வேண்டுமாயின் அதற்கான முன்னுரையை முதலில் படிக்க வேண்டுமல்லவா? ஆக, எந்த ஒரு செயலைச் செய்வதாக இருப்பினும் அதற்கு நாம் தயாராக வேண்டும் என்பது தெரிகிறது தானே?

ஒவ்வொரு நாளும் நாம் வெற்றிகரமாகச் செயலாற்ற வேண்டுமாயின், நாம் ஒவ்வொரு நாளும் அதற்கான தயாரிப்பைச் செய்ய வேண்டும். “எனக்கெங்கே அதற்கெல்லாம் நேரம் இருக்கிறது? என் அன்றாட வேலைப் பளுவே எனக்குப் பெரும் சுமையாக இருக்கிறது. இதில் நான் தயாராவதற்கு எங்கே போவேன்” என்று நீங்கள் கூறுவது புரிகிறது. உண்மையில் நாம் நம்மைத் தயார் படுத்தாமல் செய்யும் ஒவ்வொரு நாளின்  10 முதல் 14 மணி உழைப்பு நேரங்களின் உண்மையான உற்பத்தித் திறன் வெறும் நான்கு அல்லது ஐந்து மணி நேரமாகத்தான் இருக்கும். ஆனால், அதுவே நாம் நம்மைத் தரமாகத் தயார்படுத்திச் செயல்படும்போது  நம் உழைப்பு நேரத்தின் உற்பத்தி திறனானது இரு  மடங்காக அதாவது 10 மணி நேரமாக ஆகும் என்றால் நாம் நம்மை முறையாக தயார்படுத்திக் கொள்வோமல்லவா?

சரி, நாம் நம்மை தயார் செய்துகொள்ள நேரத்தை எப்படி கண்டுபிடிக்க முடியும் என்பது நம் அடுத்த கேள்வியாக இருக்கிறதா? நாம் தயாராகாமல் செய்த முந்தைய நாளின் வேலையைப் பார்த்தால் நாம் இன்றைய காலைப் பொழுதை ஓய்வு என்ற பெயரில் சற்று கூடுதலாகத் தூங்கித்தான் கழிப்போம். ஆகவே, நாம் முறையாகத் தயாராகி செயல்படுவோமேயாயின்  நம் உற்பத்தி திறனால் நாம் விரைவாகச் செயலினை முடிப்போம். ஆகையால், நமக்கு போதிய ஓய்வு கிடைப்பதால் மறுநாள் காலையில் முன்னதாக எழ முடியும். நாம் ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரம் உழைக்க வேண்டுமாயின் நாம் குறைந்தது இரண்டு மணி நேரமாவது நம்மைத் தயார்படுத்த வேண்டியிருக்கும். “ஆக! காலையில் இரண்டு மணி நேரமா? அப்படியெல்லாம் காலையில் ஹாயாக கால் ஆட்டிக்கொண்டு இருக்க நாங்கள் ஒன்றும் வேலையற்று இல்லை’ என்று நீங்கள் கூறுவது எனக்குப் புரிகிறது. நீங்கள் காலை எழுந்தவுடன் சுடுநீரைக் காலில் ஊற்றிக்கொண்டு பறப்பதுபோல் நீங்கள் பரபரப்பாக வேலைக்குத் தயாராவது எனக்கும் தெரியும். இருப்பினும் நான் சொல்வதைக் கொஞ்சம் காது கொடுத்து கேட்பீர்களேயாயின் நீங்களும் என்னைப்  போல் தரமாகத் தயாராகி பின்னர் தரமாக செயலாக்கமும் செய்து ஒவ்வொரு நாளும் ஆனந்தமாகவும் வெற்றிகரமாகவும் வாழமுடியும். அதாவது ஒவ்வொரு நாளும் நாம் ஆரோக்கியமாக வாழத் தயார் செய்துகொண்டால் நாம் தரமாகச் செயல்பட முடியும். ஆக, நாம் தயாராவதற்குக் காரணமும் நேரமும் கண்டுபிடித்தாயிற்று.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2014

என் பள்ளி
நலமாக வாழ நயமான நல்பத்துக் கூற்றுகள்
தயாராகுதல்
கரிம உணவுகள் (ஆர்கானிக் உணவுகள்)
அகல் விளக்கு ஏற்றுவோம்
தகவல் பரிமாற்றம்
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் கேழ்வரகின் பங்கு…
விரக்தி வீழ்த்துகிறது விடா முயற்சி வெல்கிறது
உலகையே ஒரு குலுக்கு குலுக்கியது
வெற்றி வேண்டுமா? – 2
தொழில் திறனை வளர்ப்பது எப்படி?
சிரிப்பு
அச்சம் என்பது மடமையடா…
தகவல்கள் இங்கே! முடிவுகள் எங்கே?
அடுத்தவர் நலனில் அக்கறை அகில உலகமே உச்சரிக்கும் பெயரை!
தன்னம்பிக்கை மேடை
உள்ளதோடு உள்ளம்