Home » Articles » தகவல் பரிமாற்றம்

 
தகவல் பரிமாற்றம்


ராமசாமி R.K
Author:

“கேட்கும் ஒரு வார்த்தை

உதிக்கும் ஓர் எண்ணம்

உள்ளெழும் ஓர் உணர்வு

உண்டாகும் ஓர் அனுபவம்

உள்ளே நடந்தேறும் ஓர் நிகழ்வு

உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போடலாம்”

 -மஹாத்ரயாரா

“உலகின் மிகப்பெரிய அரிய சாதனைகள் எல்லாம் மனிதனும் மலைச்சிகரங்களும் சந்திக்கும் போது தான் நிகழ்கின்றன. அந்த அரிய செயல்கள் எல்லாம் வீதியிலே விளையாடும் போது நடைபெறுவதில்லை.”

-வில்லியம் பிளேக்

தன் வெற்றியின் போது அதை சாதாரணமாக ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவமும்,  தன் வீழ்ச்சியின் போது அதை தாங்கிக்கொள்கிற மனோபலமும், அதை ஈடுசெய்ய கடுமையாக உழைக்கின்ற மனோபாவமும் கொண்டவர்கள் தான் சாதனையாளர்களாக விளங்குவார்கள். புகழ்பெற்ற அமெரிக்கா கால்பந்து பயிற்சியாளர் வின்ஸ் கோமெர்டி தன்னுடைய அணிக்கு ஒரு உந்து சக்தியாக விளங்கினார். அவர் சொல்வதெல்லாம் “ஒருவன் ஒன்றை அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டால் தான் தோல்வி அவனுக்கு இறுதியானதாகும்”. இந்த வரி அந்த அமெரிக்க கால்பந்து அணிக்குள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி பல வெற்றிகளை பெற உதவியது. மிகப்பெரிய சாதனையாளர்களுடைய வாழ்க்கை, வெற்றிக்கான கதைகள் மட்டுமல்ல அவர்கள் வாழ்க்கையில் பல தோல்விகளும் உள்ளன. அந்த தோல்வியின் அனுபவங்களை அறிந்து அதிலிருந்து பாடம் கற்று தவறுகளை திருத்திக் கொண்டு புதிய முயற்சிகளை செய்து சாதனை சிகரங்களை எட்டியிருக்கிறார்கள் என்பது உண்மை.

தனக்கு ஏற்பட்ட அனுபவ அறிவை பகிர்ந்து கொள்ளுதல் என்பது உயர்ந்த குணம். அதை சரியான நேரத்தில் சரியான மனிதனுக்கு சரியான தகவல் பரிமாற்றம் செய்வது உன்னதமானது. அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் என்பது இதயங்களை இணைப்பதிலும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதிலும், அமைதியை நிலைநாட்டுவதிலும் வெற்றிக்கு வழிகாட்டுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஒரு எரியும் மெழுகுவர்த்தி ஆயிரம் மெழுகுவர்த்திகளை எரிய வைக்கமுடியும். மற்றவைகளை எரியவைக்க உதவும்போது அந்த மெழுகுவர்த்தி எதையும் இழப்பதில்லை. மாறாக மற்ற மெழுகுவர்த்திகளுக்கு எரிய உதவிய பலனைப் பெறுகிறது. ஒன்று ஆயிரமாக ஒளிர அது வழிவகுக்கிறது. ஒரு மெழுகுவர்த்தியிலிருந்து வரும் ஒளி அடுத்தடுத்து அனுபவங்களும் மற்றவர்களுக்கு தகவல் பரிமாற்றமாக பகிர்வு செய்யப்படுகிறது. சரியான நேரத்தில் சரியான நபரிடம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் தானும் வெற்றி அடைந்து மற்றவர்களும் அதே வெற்றியை அடைய வழிகாட்டுகிறது. The Road not Taken என்ற அழகான ஆங்கிலக்கவிதை Robert Frost என்ற ஆங்கிலக் கவிஞனால் எழுதப்பட்டது. அந்தக்கவிதையில் அந்தக்கவிஞன் ஒருசந்திப்பில் எந்த திசையில் செல்வது என்றுதெரியாமல் குழம்பி நிற்கிறான். குறைந்த அளவில்பயணம் செய்யப்பட்டபாதையில் சென்றால் பாதுகாப்பாகதிரும்ப முடியாது என்றும்ஆகவே அதிக அளவில் பயணம் செய்யப்பட்ட பாதைதான் பாதுகாப்பானது என்றும் உணர்கிறான். பலர் பயணம் போன அனுபவப்பட்ட பாதையே இலக்கை அடையும். அனுபவப்பட்டவர்களின் வழிகாட்டுதலே வெற்றிப்பாதையை நிர்ணயிக்கும். “யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்”எனும் வைரவரிகள் இதற்குப் பொருத்தமாக அமைகிறது”.

ஒருவன் பல முயற்சிகளுக்குப்பின் ஒரு சாதனையைச் செய்து முடிக்கிறான் பலசோதனைகளுக்குப் பின் அந்தச் சாதனையை சாதித்த பிறகு அவன் மனதில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி உண்டாகும். அந்த ஒரு நிமிட மகிழ்ச்சிதான் அவனுக்கு ஆழ்ந்த மனத்திருப்தியை அளிக்கிறது. மகிழ்ச்சி என்பது மனதின்ஓர் உயர்ந்த மகோன்னதமான நிகழ்வு. மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துதல் தான் தன்னை மகிழ்ச்சிப்படுத்துவதற்குஓர் உயர்ந்த வழியாகும். உங்களுடைய சிந்தனைகளும் செயலும் வார்த்தைகளும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்குமானால் அது உங்களுக்கும் அதற்கு இணையான மகிழ்ச்சியை உண்டாக்கும். மற்றவர்களை மகிழ்ச்சிப் படுத்துகிற இன்சொல் பேசுகிற நாக்கு ஒருவனிடம் இருக்குமானால் எந்தச்சூழ்நிலையிலும் எந்த இடத்திலும் அவனால் வெற்றி பெற முடியும். அவனுடைய இன்சொல்லால் மகிழ்ந்து போகும் மற்றவர்கள் அவனுக்குஉதவக்காத்திருப்பார்கள். எந்த சூழ்நிலையிலும் கசப்பானவார்த்தை களை உபயோகப்படுத்தாமல் இருக்க அவன் கவனமாக இருக்க வேண்டும். அவனுடைய இனிய சொற்கள் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தி வாழ்வை உயர்த்தும். கசப்பான வார்த்தைகள் மற்றவர்களின் மனதைப் புண்படுத்தி வாழ்வின் முன்னேற்றத்தைக் கெடுக்கும். வார்த்தைகள் வலிமையானவை.

இரண்டாம் உலகப்போர்நடை பெற்றுக் கொண்டிருந்த இறுதி நேரத்தில் அமெரிக்க அரசிடமிருந்து ஜப்பானிய அரசுக்கு ஒரு போர் செய்தி அனுப்பப்படுகிறது. போரை நிறுத்தா விட்டால் ஜப்பான் மீது அணுகுண்டு வீசப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. ஜப்பான் அரசு அமெரிக்காவின் இந்தக் கோரிக்கை பரிசீலிக்கப்படுகிறது என்று பதில் தர விரும்புகிறது, “We are considering your Proposal”என்ற பதில்அது. ஆனால் ஆங்கிலம் தெரியாத ஒரு மொழி பெயர்ப்பாளரால் “We are considering your Proposal” (நாங்கள் உங்கள் கோரிக்கையை ஏற்கிறோம்) என்பதற்கு பதிலாக “We are Rejecting your Proposal” (உங்கள் கோரிக்கையை நிராகரிக்கிறோம்) என்று தவறுதலாக பதில் தரப்படுகிறது. உங்கள் கோரிக்கையை பரிசீலிக்கிறோம் என்று பதில் தர விரும்பிதவறுதலாக உங்கள் கோரிக்கையை நிராகரிக்கிறோம் என்றுதகவல் அனுப்பப்பட்டது. விளைவு ஜப்பான் மீது அணுகுண்டு வீசப்படுகிறது. ஜப்பானில் இரு பெரும் நகரங்கள் அழிகின்றன. பல்லாயிரக்கணக்கானோர் செத்துமடிகின்றனர். பரிசீலிக்கிறோம் என்ற வார்த்தைக்குப் பதிலாக நிராகரிக்கிறோம் என்ற அந்த ஒரு வார்த்தை மிகப்பெரிய அழிவை, தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. சில வார்த்தைகள் வெல்லும், சில வார்த்தைகள் கொல்லும்.

வேட்டைக்குப் போகிறவன் ஒரு பறவையைக் குறிவைத்தால் அது கிடைக்கும். ஒரே நேரத்தில் பல பறவைகளைக் குறிவைத்தால் ஒரு பறவை கூட கிடைக்காது.  ஒரே நேரத்தில் இரு குதிரைகளின் மேல்சவாரி செய்ய முடியாது. அதே போல ஒரே இலக்கோடு முன்னேறினால் மட்டுமே ஒரு மனிதன் வாழ்வில் வெற்றி பெறமுடியும்.  பல இலக்குப் பயணம் தோல்வியில் முடியும்.

சிலர் மந்திரத்தால் மாங்காய் வரவழைக்க முடியும் என்று நம்புகிறார்கள். மந்திரத்தால் மாற்றங்களைக் கொண்டுவர முடியாது. கடுமையான உழைப்பு மட்டுமே வெற்றியைத் தரும். சாதனையாளர்களின் வெற்றிப்பக்கங்கள் எல்லாம் அவர்களுடைய உழைப்பாலும், கடுமையான முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும், தளராத ஈடுபாட்டாலும் மனஉறுதியாலும் உருவானவை.

“என்னிடத்தில் கடுகளவு நம்பிக்கைவைத்து மலையேநகரு என்றுசொன்னாலும் அது நகரும்.உன்னால் முடியாதது ஏதுமில்லை” என இயேசுபிரான் சொல்கிறார். ராமன் மீது கொண்ட நம்பிக்கையால்தான் அனுமனால் கடலைத் தாண்ட முடிந்தது. நம்பிக்கை இருந்தால் மலையைக்கூடந கர்த்தமுடியும் என்பது உண்மை. சாதனையாளர்கள் பொழுது போக்குகளை, துக்கத்தை, சுகபோகங்களைத் தியாகம் செய்ததால்தான் வெற்றி அடைந்தனர். ஒன்றை இழந்தால்தான் ஒன்றைப்பெற முடியும் என்பது அவர்கள் வாழ்க்கை கற்றுத்தந்த பாடம்.  பாலுக்குள் மோர் கலந்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். பால் தயிராக காத்திருக்க வேண்டும், தயிர் கடையப்பட்டு வெண்ணெயும் மோரும் கிடைக்கும் வரை காத்திருக்கப் பழக வேண்டும். இதில் விடாமுயற்சியும் பொறுமையும் இலக்கை அடைய உதவும் காரணிகள்.

ஓடுமீன் ஓடஉறுமீன் வரு மளவும்

வாடி இருக்குமாம் கொக்கு

என்பது பழம் பாடல்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2014

என் பள்ளி
நலமாக வாழ நயமான நல்பத்துக் கூற்றுகள்
தயாராகுதல்
கரிம உணவுகள் (ஆர்கானிக் உணவுகள்)
அகல் விளக்கு ஏற்றுவோம்
தகவல் பரிமாற்றம்
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் கேழ்வரகின் பங்கு…
விரக்தி வீழ்த்துகிறது விடா முயற்சி வெல்கிறது
உலகையே ஒரு குலுக்கு குலுக்கியது
வெற்றி வேண்டுமா? – 2
தொழில் திறனை வளர்ப்பது எப்படி?
சிரிப்பு
அச்சம் என்பது மடமையடா…
தகவல்கள் இங்கே! முடிவுகள் எங்கே?
அடுத்தவர் நலனில் அக்கறை அகில உலகமே உச்சரிக்கும் பெயரை!
தன்னம்பிக்கை மேடை
உள்ளதோடு உள்ளம்