Home » Articles » வெற்றி வேண்டுமா? – 2

 
வெற்றி வேண்டுமா? – 2


கோமதி சங்கரலிங்கம் ச
Author:

ஆரம்பம் ஆர்வத்துடன் அமையட்டும்

தனக்கான தொழிலோ, வணிகமோ, தேர்ந்தெடுத்து பிறிதொரு சிறப்பான நிறுவனத்தில் பயிற்சி எடுத்தபின் புதிய முயற்சிக்கு ஆயத்தம் செய்ய வேண்டும். பயிற்சி எடுத்த நிறுவனத்தில் பயிற்சியின் போது கிடைத்த அனுபவங்களை அன்னப்பறவை போல் தேர்ந்தெடுத்து கொள்ளுதல் சிறப்பு. நம்முடைய புதிய சிந்தனைகளையும் செயல்படுத்துவதில் தவறில்லை. ஆரம்பம் ஆடம்பரமாக இல்லாமல் தனது ஆளுகைக்கு உட்பட்டதாக இருக்கட்டும். “முயலாக ஓடி தோற்பதை விட ஆமையாக நடந்து சென்று வெற்றி பெறுவதே சாமர்த்தியமாகும்”.

தொழிலுக்குத் தேவையான இடத்தைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தெளிவாக இருக்க வேண்டும். மிகச்சிறப்பான இடமாகவும், மலிவான மதிப்பிலும் இருந்தால் பொருளாதார வலிமை தாராளமாக இருந்தால் சொந்தமாக ஆக்கிக் கொள்வது சிறப்பு, தொடக்கத்தில் சிறுகச்சிறுக வளர்ந்து பெரிதாக வளரும்போது வாய்ப்பாக இருக்கும். வாடகை இடமாக இருந்தால் நீண்ட காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முடியுமா? என ஆராய வேண்டும். குடியிருக்கும் வாடகை வீடு போல் தொழில் நிறுவனங்களை அடிக்கடி இடம் மாற்றுதல் செலவும் கூடுதல் சிரமமும் கூடுதல். தொழிலுக்கான இடம் மக்கள் தயக்கமின்றி வந்து போகும் இடமாகவும், போக்குவரத்து, தண்ணீர் வரவும், கழிவு நீர் போகவும், மின்சாரம், காற்று, வெளிச்சம் ஆகிய காரணிகளை உள்ளடக்கியதாக இருத்தல் நல்லது.

ஆடம்பரமும், கவர்ச்சியையும் விட அமைதியும், சுத்தமும் முக்கியம். எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலுக்குள் நுழைந்துவிட்டால், ஓய்வு பொழுதுபோக்கு அம்சங்கள் சிறிது காலம் ஒத்தி வைத்துவிட வேண்டும்.

“மெய்வருத்தம் பாரார், பசி நோக்கார், கண் துஞ்சார்

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி

அருமையும் பாரார், அவமதிப்பும் கொள்ளார்

கருமமே கண்ணாயினார்”                                                                                                                        (குமரகுருபரர்)

 முதலீடு முடங்கிப் போக வேண்டாம்

சரியான தொழிலைத் தேர்ந்தெடுத்து, அதற்கான இடத்தைத் தேர்வு செய்துவிட்டு தொழிலுக்கான முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டும். வளர்ந்துவிட்ட நிறுவனத்துக்கு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் போட்டி போட்டி நிதிஉதவ முன்வருவார்கள். ஆனால் புதிதாக தொழில் தொடங்குவோரின் ஆரம்ப காலகட்டத்தில் உதவ யோசிப்பார்கள். எனவே சொந்த முதலீடு ஓரளவுக்கு இருத்தல் அவசியம். அதிக வட்டிக்கு வெளியில் கடன் வாங்குதல் ஆபத்து. எனவே தான் நமது முதலீட்டுக்குத் தகுந்தபடி ஆரம்பத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.

வளர வளர பணியாளர்களையும், தொழில்நுட்ப இயந்திரங்களையும் கூட்டிக் கொள்வது சிறப்பு. “சிறுகக் கட்டி பெருக வாழ்” என்பது பழமொழி. தொழில் சிறக்க, சிறக்க, சிந்தனையுடன் செயல்பட்டு வேண்டிய வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம். விடாமுயற்சியும், கடுமையான உழைப்பும் தீவிரமான தேடுதலும் முழுமையான ஈடுபாடு இருக்கும் பொழுது வெற்றிக்கனி உங்கள் கைகளில். தங்களின் வளர்ச்சியைக் கண்டு யோசித்தவர்கள் உங்களுடைய முகவரிக்காக தவம் கிடப்பார்கள். தாங்கள் உயர்ந்து நிதியைப் பெறவாய்ப்புக் கிடைத்தால், சிறந்த தொடர்பு வைத்து சிறப்பான வாடிக்கையாளராக வளர்ச்சி அடையுங்கள். வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்! உயருங்கள் உங்கள் உழைப்பால்!

உழைப்பிற்கும் உண்டோ உற்ற எல்லை?

விடாமுயற்சிக்கு என்றுமே தோல்வி இல்லை.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2014

என் பள்ளி
நலமாக வாழ நயமான நல்பத்துக் கூற்றுகள்
தயாராகுதல்
கரிம உணவுகள் (ஆர்கானிக் உணவுகள்)
அகல் விளக்கு ஏற்றுவோம்
தகவல் பரிமாற்றம்
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் கேழ்வரகின் பங்கு…
விரக்தி வீழ்த்துகிறது விடா முயற்சி வெல்கிறது
உலகையே ஒரு குலுக்கு குலுக்கியது
வெற்றி வேண்டுமா? – 2
தொழில் திறனை வளர்ப்பது எப்படி?
சிரிப்பு
அச்சம் என்பது மடமையடா…
தகவல்கள் இங்கே! முடிவுகள் எங்கே?
அடுத்தவர் நலனில் அக்கறை அகில உலகமே உச்சரிக்கும் பெயரை!
தன்னம்பிக்கை மேடை
உள்ளதோடு உள்ளம்