Home » Articles » தன்னம்பிக்கை உள்ளத்தின் உறுதியே வெற்றியின் பாதை

 
தன்னம்பிக்கை உள்ளத்தின் உறுதியே வெற்றியின் பாதை


இலக்குமணசுவாமி சு
Author:

தன்னம்பிக்கை என்பது ஆற்றல் வாய்ந்த நமது சிறப்பு இயல்பாகும். அது நம்மை ஊக்குவிக்கும். நமது உள்ளுரத்தை (Stamina) மேம்படுத்தும். தன்னம்பிக்கை என்பது நம் மீதும், நம்முடைய திறமையின் மீதும் நாம் வைக்கும் நம்பிக்கை தான்.

நம்முடைய வாழ்வில் ஒவ்வொரு முறையும் தோல்வி எனும் பாறையால் இடறி வீழ்கிறபோது, நம்மை எழுந்து நிற்கச் செய்வது நம்முடைய தன்னம்பிக்கை தான்.

ஒரு வெற்றிக்கும், பல சாதனைகளுக்கும் “தன்னம்பிக்கை” தான் வெற்றியை உறுதிபடுத்துகிறது.

நாம், நம்மிடம் தன்னம்பிக்கை வளர்த்திடல் வேண்டும். நமக்குச் சொந்தமான சிறந்த அம்சங்களில் காணப்படுகிற அவைகளில் வைத்திருக்கும் நம்பிக்கையே நம்முடைய தன்னம்பிக்கை ஆகும். அந்தத் தன்னம்பிக்கையே நம்முடைய வாழ்க்கையை வடிவமைக்கிறது. நம்முடைய முதலடியை நம்பிக்கையோடு எடுத்து வைத்துவிட்டாலே போதும். அவை உலகத்திலுள்ள நெடுஞ்சாலைகளைக் கடந்து, நடந்து முடிந்தாகிவிடும்.

தன்னம்பிக்கையின் ஆணிவேர் எங்குள்ளது தெரியுமா? எங்கும் அதனைத் தேட வேண்டியதில்லை. அது நம்முடைய நல்லெண்ணம் அல்லது நல்ல அபிப்பிராயத்திலே உள்ளது.

நம்மீது நாம் வைக்கும் சுயமரியாதைக்குள்ளே தான் (Self- Esteem) நம்முடைய நம்பிக்கை ஒளிந்துகொண்டு இருக்கிறது.

தன்னம்பிக்கையை வளர்க்கும் குணம் நேர்மறைச் சிந்தனை (positive Thinking) தான்.

நம் நாட்டில் ஒரு பழமொழி உண்டு. அது “பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும்” என்று. இதை நம் நாட்டிலே மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகளிலேயும் “Misfortunes Never Come Single” இப்படிச் சொல்வதுண்டு.

நமக்கு வருகின்ற துன்பங்கள் எல்லாம் அடுக்கடுக்காய் வருகின்றன. மேற்கூறிய பழமொழிகள் எல்லாமே ஒரு எச்சரிக்கை மணிகளாகவே இருக்கின்றன.

இது ஒருவித ஈர்ப்பு விதி தான். இதைத் தான் ஆங்கிலத்தில் “Laws of Attraction” என்று சொல்வார்கள். மேல் நாட்டு மனோவியலாளர்களும் இதை சமீபத்திய ஆய்வில் உறுதிபடுத்தியுள்ளனர்.

புராண நூலிலும் கூட “நீ எதை எண்ணுகிறாயோ… அதுவே நிகழும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நமது நாட்டில் கையாளப்படுகின்ற மந்திர சுலோகங்களில் கூட, எதிர்மறைவாக்கியங்கள் இடம் பெற்றிருக்காது. புத்தி, தைரியம், வீரம், ஜெயம் என்று நேர்மறையான வார்த்தைகளே இடம் பெற்றிருப்பதைக் காண முடியும்.

நம்முடைய தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டுமானால், நல்லதொரு குறிக்கோளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு சில உதாரணங்களை காண்போம்.

ஜோனி என்றபெண், அவருடைய இடுப்பிற்குக் கீழே முழுவதும் உணர்வற்றுப் போன பின்பும், மிகச்சிறந்த ஓவியராகப் பெயர் பெற்றார்.

பெரிய ஓவியராக வேண்டும் என்ற அவருடைய ஓயாத எண்ணமே அவரது தன்னம்பிக்கைக்கு உரமானது.

கைகளை இழந்தவர்கள் பலருக்கு எழுத வேண்டும், வரைய வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றுவதால் தனது கால்களின் மூலம் எழுதவும், வரையவுமான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

டிஸ்ரேலி எனும் இங்கிலாந்தைச் சேர்ந்த இலக்கியவாதி தன் மனைவியிடம், நீ வருங்கால இங்கிலாந்தின் பிரதம மந்திரியின் மனைவி என்பதை மறந்துவிட்டு புலம்புகிறாய்… என்றிருக்கிறார். பின்னாளில் அவர் சொன்னதுபோலவே, அந்நாட்டின் பிரதமரானார். இது அவரது குறிக்கோள் அவருக்குத் தந்த தன்னம்பிக்கை.

எனவே நாமும் வாழ்வில் குறிக்கோளுடன் வாழ்ந்தால், தன்னம்பிக்கையுடன் சாதனைகள் பல புரிந்து வெற்றிக்கனியை ருசிக்கலாம்… குறிக்கோளுடன் கூடிய தன்னம்பிக்கையே தடம் பதித்து, வடம் பிடித்து நம்மை உயர்நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பதில் மாற்றம் ஏதும் இல்லை!

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2014

என் பள்ளி
எழுந்து வா… இளையவனே!
தன்னம்பிக்கை உள்ளத்தின் உறுதியே வெற்றியின் பாதை
கவலைப்பட ஒன்றுமில்லை
பத்து நிமிடம் பத்து வருடம்
வீட்டில் கவனக்குறைவால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்துகள்
வெற்றி உங்கள் கையில் – 10
பேச்சுப் பட்டறை பேச்சுக் கலை
இயற்கை
முயற்சி திருவினையாக்கும்
ஸ்வீட் கார்ன்
பிரச்னைகளுக்கான LSD தீர்வுகள்
வாழ்க்கை
உலகமே வியந்தது! மங்கள்யான் செவ்வாயை அடைந்தது!!
தன்னம்பிக்கை மேடை
உள்ளதோடு உள்ளம்