Home » Articles » பத்து நிமிடம் பத்து வருடம்

 
பத்து நிமிடம் பத்து வருடம்


சண்முகசுந்தரம். A
Author:

மக்களின் வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கிறது. எங்கு பார்த்தாலும் மக்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் பறந்து செல்லவே விரும்புகிறார்கள். சிக்னலில் நிற்பதற்கு பொறுமை இல்லை. முன்னால் செல்பவன் சற்று மெதுவாக சென்றால் ஹாரன் அடித்தே கொன்று விடுவார்கள். அலுவலகத்திற்கு நேரத்திருக்கு போக வேண்டுமே என்ற அவசரம்.

ஒரே டென்ஷன், பரபரப்பு, எரிச்சல், இதற்கெல்லாம் மூல காரணம் என்ன? வீட்டிலிருந்து சற்று முன்னதாக கிளம்பாததுதான். அது என்னவோங்க. சீக்கிரம் புறப்படவே முடியலேங்க என்ற அங்கலாய்ப்பு வேறு.

அலுவலகத்திற்கு முன்னதாக போக கூடாது என்று நாம் ஒரு கொள்கையை வைத்திருக்கிறோம். 10 மணிக்கு ஆபீஸ் என்றால் அதற்கு முன்னால் கண்டிப்பாக போக கூடாது என கங்கணம் கட்டி கொண்டுள்ளோம். முன்னால் செல்வது ஒரு குற்றம் போல ஒரு உணர்வு சரியாக 10 மணிக்குதான் போய் சேர வேண்டும் என நினைத்தால் அது போக முடியாதவாறு வழியில் பல்வேறு பிரச்சனைகள். டிராபிக் ஜாம். ஒருவர் இருவர் அல்ல. அனைவருமே அவசரப்படுகிறார்கள். அதனால் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. சிக்னலை மீறி நான் மட்டும் எப்படியாவது போய் விட வேண்டும் என்ற நினைப்பில் அனைவருமே மற்றவர்களைப் பற்றி கவலை படாமல் அவசர படுகிறார்கள்.அதனால் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. சிக்னலை மீறி நான் மட்டும் எப்படியாவது போய் விட வேண்டும் என்ற நினைப்பில் அனைவருமே மற்றவர்களைப் பற்றி கவலை படாமல் அவசர படுகிறார்கள்.

எப்படியோ அலுவலகம் போய் சேர 10.15 ஆகி விடுகிறது. நாம் லேட்டாக வந்ததை யாரவது பார்த்து விடுவார்களோ யாராவது கேட்பார்களோ என்ற படபடப்பு. அப்படி கேட்டால் என்ன பதில் சொல்லலாம் என்று இரண்டு மூன்று பதில்கள் தயாராக இருக்க வேண்டும். அப்படி யாரும் கேட்கவில்லை என்றாலும் கூட மேலதிகாரி எதற்கு கூப்பிட்டு விட்டாலும் இதைதான் கேட்க போகிறார் என்ற பதைபதைப்பு, யாரும் கேட்பதற்கு முன்னால் நான் சற்று கோபமாக இருப்பது போல் கத்தி கொண்டு இருந்தால் யாரும் நம்மிடம் வந்து “ஏன் லேட்” என கேட்க மாட்டார்கள் என கத்த ஆரம்பிப்போம்.

கொஞ்சம் கொஞ்சமாக டென்ஷன் ஏறுகிறது, எகிறுகிறது. மாலை அதே மூடில் வீட்டிற்கு செல்கிறோம். வரும்போது எதையோ வாங்கி வரசொன்னாளே என வீட்டிற்குள் அடி எடுத்து வைக்கும் பொழுது தான் ஞாபகம் வருகிறது. இன்னும் எரிச்சல் அதிகமாகிறது. மனைவி “வாங்கி வர வில்லையா? என கேட்பதற்கு முன்னால் ஏதாவது கத்தி விட்டால் நம்ம கிட்ட கேட்க மாட்டாள் என்றுக் கத்துகிறோம்.

மொத்தத்தில் மன நலம், உடல் நலம் இரண்டும் கெட்டுப் போய் விடுகிறது. இது இப்படியே போனால் ஆட தொற்றிகொள்ளும். அடிக்கடி டென்ஷன் ஆகி விடுவோம். இப்படியே விட்டு வைத்தால் எளிதில் வியாதிகளை வரவழைப்போம். நமது வாழ் நாள் 10 ஆண்டுகள் குறைந்து விட வாய்ப்புண்டு. இதற்கு ஒரே வழி: அலுவலகத்திற்கு 10 நிமிடம் முன்னதாக சேர்ந்து விட வேண்டும் என திட்டமிட்டு சீக்கிரமே வீட்டிலிருந்துப் புறப்பட்டு விட வேண்டும். நடு வழியில் டிராபிக் ஜாம் ஆனாலும் பிரச்சனை இல்லை.

பத்து நிமிடம் முன்னதாக சென்று விட்டீர்களா. உலகம் ஒன்றும் கவிழ்ந்து விடாது. நிதானமாக பாத் ரூம் சென்று வாருங்கள். தண்ணீர் குடியுங்கள். உங்கள் நாற்காலியை சுத்தப்படுத்துங்கள். சரியாக 10 மணிக்கு வேலையை ஆரம்பித்தால் போதும். ஆனால் அன்றைய நாள் பொழுது எவ்வளவு அழகாக ஆரம்பிக்கிறது என்று பாருங்களேன். வாழ ஆசைப்படுகிறோம். நன்கு வாழ ஆசைப்படுவோமே!

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2014

என் பள்ளி
எழுந்து வா… இளையவனே!
தன்னம்பிக்கை உள்ளத்தின் உறுதியே வெற்றியின் பாதை
கவலைப்பட ஒன்றுமில்லை
பத்து நிமிடம் பத்து வருடம்
வீட்டில் கவனக்குறைவால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்துகள்
வெற்றி உங்கள் கையில் – 10
பேச்சுப் பட்டறை பேச்சுக் கலை
இயற்கை
முயற்சி திருவினையாக்கும்
ஸ்வீட் கார்ன்
பிரச்னைகளுக்கான LSD தீர்வுகள்
வாழ்க்கை
உலகமே வியந்தது! மங்கள்யான் செவ்வாயை அடைந்தது!!
தன்னம்பிக்கை மேடை
உள்ளதோடு உள்ளம்