– 2014 – September | தன்னம்பிக்கை

Home » 2014 » September

 
  • Categories


  • Archives


    Follow us on

    வாங்க சார்…வாழலாம்

    சேலம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 21.09.2014; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.30 மணி

    இடம் : லட்சுமி அரங்கு,

    சாமுண்டி காம்ப்ளெக்ஸ்,4 ரோடு,

    சேலம்- 7.

    தலைப்பு: வாங்க சார்…வாழலாம்

    சிறப்புப் பயிற்சியாளர்: Jc. Dr. R. சுப்ரமணிய பாரதி,

    மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர், சேலம்

    போன்: 98652 65208

    தொடர்புக்கு

    Jc. தாமோதரன் – 93601 22377

    கற்க கசடற

    கும்பகோணம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் சோழ மண்டல மாணவர் முற்றம் இணைந்து வழங்கும் மாணவர் சிறப்புப் பயிலரங்கம்

    நாள் : 14.09.2014; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை

    இடம் : A.M. மஹால், மோதிலால் தெரு பஸ் நிலையம் அருகில்,

    கும்பகோணம்.

    தலைப்பு: கற்க கசடற

    சிறப்புப் பயிற்சியாளர்: திரு. ந. அரிய அரச பூபதி, M.A., M.Phil., M.Ed., B.L. ,

    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்,

    அம்மாபேட்டை

    போன்: 93658 92912

    தொடர்புக்கு

    திரு. அப்துல்சலாம் (எ) பள்ளியூர் பாபா  93453 53113

    வீழ்ச்சியும் எழுச்சியே!

    பள்ளிபாளையம் கிளை (ஈரோடு), தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 12.09.2014; வெள்ளிக்கிழமை

    நேரம் : மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை

    இடம் : M.G.V. மெட்ரிக்பள்ளி (G.V. மஹால் அருகில்)

    திருச்செங்கோடு ரோடு, பள்ளிபாளையம்

    தலைப்பு: வீழ்ச்சியும் எழுச்சியே!

    சிறப்புப் பயிற்சியாளர்: திரு. N. ஜாஹிர் உசேன்,

    HRD Trainer, ஈரோடு போன்: 98427 03690

    தொடர்புக்கு:

    தலைவர் – திரு. D.S. ஜெயசீலன்: 94432 44850

    பொருளாளர் – திரு. V. சண்முகசுந்தரம்: 98423 95373

    PRO – திரு. M. ராதா கிருஷ்ணன்: 99657 95856

    உன்னை நீ அறிவாய்

    திருப்பூர் தன்னம்பிக்கை வாசகர்வட்டம், திருப்பூர் அரிமா சங்கம் மற்றும் செல்வக்குமார் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், திருப்பூர் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 14.09.2014; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.30 மணி

    இடம் : அரிமா சங்க அரங்கம்,

    குமரன் சாலை, திருப்பூர்

    தலைப்பு: உன்னை நீ அறிவாய்

    சிறப்புப் பயிற்சியாளர்: திருமதி K. ராஜலட்சுமி, M.A., B.Ed.(SE), PGDGC

    பயிற்சியாளர்,

    ஹெலிக்ஸ் பயிற்சி மையம்,

    திருப்பூர்

    தொடர்புக்கு:

    திரு. A. மகாதேவன் 94420 04254

    திரு. S. வெங்கடேஸ்வரன் 94423 74220

    திரு. S. மாரப்பன் 95242 73667

    வையத் தலைமை கொள்!

    மதுரை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள்:  21.09.2014 ஞாயிற்றுக்கிழமை

    நேரம்:  காலை 11.00  மணி

    இடம்: சிபி பயிற்சி கல்லூரி

    3/182 P.R. வளாகம்,

    முதல் தளம் ப்ரொபசனல் குரியர்மாடி,

    பேங்க் காலனி,

    மதுரை – 14

    தலைப்பு: வையத் தலைமை கொள்!

    சிறப்புப் பயிற்சியாளர்: கவிச்சுடர் சு. இலக்குமணசுவாமி

    ஆசிரியர்(ஓய்வு)

    போன்: 97897 88989

    தொடர்புக்கு :

    தலைவர் : திரு. எ. எஸ். இராஜராஜன்: 94422 67647

    செயலர்-கவிஞர். இரா. இரவி: 98421 93103

    ஒருங்கிணைப்பாளர் திரு. திருச்சி சந்தர்: 94437 43524

    Born to Win

    தொழுதூர் தன்னம்பிக்கை வாசகர்வட்டம்  மாணவர் பிரிவு வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள்  :  4.9.2014; 5.9.2014; 6.9.2014

    நேரம் : காலை 10.00 மணி

    இடம் : டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன்,

    பொறியியல் கல்லூரி,

    தொழுதூர் – 606 303

    தலைப்பு: Born to Win

    சிறப்புப் பயிற்சியாளர்: Dr.C.S. ராஜூ, Ph.D. அறந்தாங்கி போன்: 98659 04284

    தொடர்புக்கு : வாசகர்வட்ட தலைவர்: Dr. M. சுப்ரமணியம், M.E. PhD – 7867083702

    ஒருங்கிணைப்பாளர் திரு. G. சுரேஷ் 94436 78709

    குடும்பத்தில் குதூகலம்

    சென்னை தன்னம்பிக்கை வாசகர்வட்டம், லிங்கம் ஸ்டோர்ஸ் (காய்கனிகள் மொத்த வியாபாரம்), கிட்ஸ் & குயின்ஸ், வளசரவாக்கம் மற்றும் கிரி பிரதர்ஸ் வேயிங் மிஷின்ஸ், சென்னை  இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள்  :  21.09.2014; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : மாலை 6.00 மணிமுதல் 8.30 மணி வரை

    இடம் : ‘ஸ்ரீ காமகோடி தியான மண்டபம்

    காமகோடி நகர்,

    வளசரவாக்கம்,

    சென்னை-87.

    (ஆஞ்சநேயர்கோவில் பின்புறம்)

    தலைப்பு: குடும்பத்தில் குதூகலம்

    சிறப்புப் பயிற்சியாளர்: Jc. HCF. R. தென்றல் பன்னீர்செல்வம்,

    அறந்தாங்கி

    போன்: 98659 04284

    தொடர்புக்கு:

    தலைவர்  R. பாலன்  94442 37917,

    செயலாளர்  L. கருணாகரன்  98419 71107

    PRO யமுனா கிருஷ்ணன்  94440 29827

    உன்னை அறிந்து உலகை வெல்!

    திருச்செங்கோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் ஒஇஐ திருச்செங்கோடு டெம்பிள் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 21.09.2014; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்: மாலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை,

    இடம்: ஹோட்டல் சித்தார்த்தா கான்பிரன்ஸ் ஹால்

    ஜோதி தியேட்டர் அருகில்,

    திருச்செங்கோடு.

    தலைப்பு: உன்னை அறிந்து உலகை வெல்!

    சிறப்புப் பயிற்சியாளர்: Jc. Dr. ஸ்டார் ஆனந்த்,

    தொழில் மேம்பாட்டு பயிற்சியாளர், கோவை

    போன்: 97900 44225

    தொடர்புக்கு:

    தலைவர்: JCI. Sen. G. கோவிந்தசாமி  98427 96868

    செயலாளர்: Jc. A. திருநாவுக்கரசு – 99429 66554

    ஒருங்கிணைப்பாளர்: Jc. Dr. S. சரவணகுமார் 94423 83833

    வெற்றி எனும் விண்ணைத் தொடு!

    கோவை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் இன்டக்ரல் யோகா இன்ஸ்டிடியூட் இணைந்து வழங்கும் 309 – வது சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 21.09.2014; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.00 மணி

    இடம் : இன்டக்ரல் யோகா இன்ஸ்டிடியூட்,

    139/86, மேற்கு சம்பந்தம் சாலை,

    ஆர்.எஸ். புரம் (மேற்கு),

    பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில், கோவை.

    தலைப்பு: வெற்றி எனும் விண்ணைத் தொடு!

    சிறப்புப் பயிற்சியாளர் : அருள்நிதி Jc. S.M. பன்னீர்செல்வம்,

    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்,

    கோவை

    போன்: 97893 75278

    தொடர்புக்கு: தலைவர் திரு. A.G. மாரிமுத்துராஜ் 98422 59335

    துணைத்தலைவர் திரு. R. மணிகண்டன்  90036 56567

    செயலாளர்  திரு. E. விஜயகுமார்  94426 10230

    பொருளாளர் திரு. AD. A.  ஆனந்தன்  74026 10108

    PRO விக்டரி விஸ்வநாதன்  97877 44533

    என் பள்ளி

    எஸ். நரேந்திரபாபு

    இந்திய வனத்துறை (பயிற்சி)

    டேராடூன்

    பள்ளி வாழ்க்கை என்பது ஒரு மகிழ்ச்சியான கனவு. இந்தக் கனவை தூங்கும்போது காண்பதைவிட, விழித்திருக்கும் பொழுதே எண்ணினால் அதைவிட மகிழ்ச்சி தருவது வேறெதுவும் இவ்வுலகில் இருக்க முடியாது. தன் கனவை நம்மோடு பகிர்கிறார் இந்திய வனத்துறையில் பணியாற்றும்

    திரு. எஸ். நரேந்திரபாபு அவர்கள்.

    நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் ஊட்டி அருகிலுள்ள கூடலூரில் தான். சாலை வசதி இல்லை. பள்ளிக் கட்டிட வசதி இல்லை. இப்படிப்பட்ட அரசுப்பள்ளியில் தான் எனது பள்ளி வாழ்க்கை அமைந்தது. எனது குடும்ப வறுமையின் காரணமாகவே இப்பள்ளியில் படிக்கும் சூழல் அமையப்பெற்றேன்.

    சூழலை சாதகமாக அமைக்க விரும்பினேன். வறுமை எனக்கு ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. கோயிலின் மேற்கூறை எப்படி இருந்தாலும் அதில் இருக்கும் தெய்வத்தின் மதிப்பு குறையாது. அதுபோலவே எனது பள்ளியும், அங்கு பணியாற்றிய எனது ஆசிரியர்களும். அவர்கள் கற்றுக்கொடுத்த கல்விமுறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

    பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவர்களையும் அப்பள்ளி ஆசிரியர்கள் அன்போடு அரவணைப்பார்கள். அதிலும் அரசுப்பள்ளி என்றால் கூடுதலாக கவனம் இருக்கும். ஒவ்வொரு ஆசிரியரிடமும் ஒவ்வொன்றைக் கற்றுக்கொண்டேன்.

    சரியான நேரத்திற்குள் வகுப்பிற்கு செல்ல வேண்டும். காரணம் இல்லாமல் விடுமுறை எடுக்கக் கூடாது. மற்றவர்களிடம் பழகும் நல்ல மனப்பக்குவம் போன்றவற்றை என் பள்ளி ஆசிரியர்களிடம் தான் கற்றுக்கொண்டேன்.

    பெரியவர்கள் அடிப்பதும், திட்டுவதும் சிறியவர்களின் நலனுக்கு தான் என்று எனது அப்பா அடிக்கடி சொல்வார். அவரது வார்த்தைகளை நான் நன்கு புரிந்து கொண்டே வளர்ந்தேன். பெரியவர்களின் வார்த்தைகளை புரிந்து கொண்டாலே வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம் என்பதை தெரிந்து கொண்டேன்.

    நல்ல நண்பர்கள் கிடைப்பது கடினம். அதிலும் கிடைத்த நண்பர்களை தக்கவைத்துக் கொள்வது அவரவரின் பழக்கத்தில் தான் இருக்கிறது. இன்றளவும் என்னுடைய நட்பு வட்டாரத்தில் சிறிதும் விரிசல் இன்றி தொடர்வதை பெருமிதம் கொண்டு பகிர்கிறேன். காரணம் எங்களுக்குள் நல்ல விட்டுக்கொடுக்கும் பண்பு உள்ளது.

    பள்ளிக்காலத்தில் படிப்பின் மேல் இருந்த ஆர்வத்தில் பாதி விளையாட்டின் மீதும் குறையாதிருந்தது. படிப்பில் சாதனை படைத்தாலும் பாராட்டு சான்றிதழ், அதுபோல விளையாட்டிலும் கிடைத்தது. விளையாடுவது எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. கால்பந்து, கைப்பந்து, கபடி முதலான அனைத்து போட்டிகளிலும் கலந்து சான்றிதழ் பெற்றிருக்கிறேன்.

    பத்தாம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று என் பெற்றோரிடம் மதிப்பெண் சான்றிதழைக் கொடுத்தேன். அதைப் பார்த்த என் பெற்றோர் பெற்ற மகிழ்ச்சியை என்றும் மறக்காமல் எனது வாழ்நாள் மகிழ்ச்சியாக எண்ணினேன். அந்த மகிழ்ச்சியை அவர்களுக்கு எப்பொழுதும் கொடுக்க எண்ணி அடுத்தடுத்த எல்லா தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று அவர்களது ஆசையை நிறைவேற்றினேன்.

    படிக்கும் போதே ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஏதாவதொரு ஆசை இருக்கும். அந்த ஆசையை நூற்றில் 20 சதம் பேர் மட்டுமே இறுதிவரை கடைபிடிப்பார்கள். அவ்வாறு கடைபிடித்தவர்களில் நானும் ஒருவன். ஆமாம்… என்னுடைய ஆசையெல்லாம் இந்திய வனத்துறையில் சேர வேண்டும் என்பது தான். அதற்காக என்னைத் தயார்படுத்திக் கொள்ள மேற்படிப்பை மிகக்கவனமாக தேர்ந்தெடுத்தேன். பி.எஸ்.சி., எம்.எஸ்.சி. இரண்டையும் வேளாண் சார்ந்த துறையைத் தான் தேர்ந்தெடுத்துப் படித்தேன்.

    கல்லூரியில் படிக்கும் போதும் படிப்புடன், விளையாட்டு, என்.சி.சி. போன்றவற்றில் கலந்துகொண்டு சான்றிதழ் பல பெற்றிருக்கிறேன். என் சான்றிதழ்களைப் பார்த்து என் ஆசிரியர்கள் எனக்கு மிகுந்த ஊக்கமும், உந்துதலும் கொடுத்தார்கள். இது எனக்கு மிகுந்த ஆற்றலைக் கொடுத்தது.

    தொடர்ந்து வனத்துறை சார்ந்த தேர்வுகளை எழுதத் தொடங்கினேன். பல தேர்வுகளுக்குப் பின்னரே வெற்றி அடைந்தேன். தேர்ச்சி மதிப்பெண்ணுடன் பள்ளி, கல்லூரிகளில் பெற்ற சான்றிதழ்களும் எனக்கு பெரிதும் உதவியாக இருந்தன.

    வனத்துறையில் சேர்ந்ததும் எனக்கு மொழி ஒரு பிரச்சனையாக இருந்தது. வெறும் தமிழ்மொழியோடு தமிழ்நாட்டில் இருப்பதே கடினம். ஆனால் மாநிலத்தை விட்டு மாநிலம் செல்லும்போது அதற்கு ஏற்றாற்போல் மொழியைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றாலும் பயிற்சியின் போது மொழிப்பயிற்சி கொடுப்பார்கள். அப்பொழுது கற்றுக் கொள்ளலாம்.

    எந்தவொரு தேர்வு என்றாலும் அதோடு சம்பந்தமான அனைத்து புத்தகங்களையும் தேடித்தேடிப் படிக்க வேண்டும். எந்த புத்தகத்தையும் சாதாரணமாக நினைக்கக் கூடாது. ஒன்றில் சொல்லாத முக்கியமான கருத்துக்கள் மற்றொரு புத்தகத்தில் சொல்லி இருப்பார்கள். அதனால் எல்லாவற்றையும் படியுங்கள். வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

    இந்த இதழை மேலும்