குழந்தை பிறக்கும் காலத்தின் வகைகள்
குறைப் பிரசவம் – குழந்தை 37 வாரத்திற்கு குறைவாக பிறத்தல், நிறைமாதப் பிரசவம் – குழந்தை 37 – 40 வாரத்திற்குள் பிறத்தல், காலம் கடந்து குழந்தை பிறப்பது – குழந்தை 42 வாரத்திற்கு மேல் பிறத்தல்
குறைப்பிரசவம் / முதிராநிலைப் பிரசவம்
குறைப்பிரசவம் என்பது குழந்தை 37 வாரத்திற்கு குறைவாகப் பிறப்பது.
நிகழ்வுகள்
அயல்நாடுகளில் 12 சதவீத குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கிறது. தற்போது குறைப்பிரசவத்தின் மூலம் குழந்தை பிறப்பது அதிகரித்து உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காரணங்கள்
குறைந்த பொருளாதார நிலை, தாயின் வயது 16 யை விட குறைவாக இருப்பது அல்லது 35 க்கு மேல் அதிகமாக இருப்பது, தாயின் செயல்பாடு, குறுங்கால அல்லது நாட்பட்ட தாய்வழி நோய், பலமுறைகருத்தரித்தல், முன்கால பிறப்பு விளைவுகள்
குறைப்பிரசவத்தின் பிரச்சனைகள்
மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுவது, சுவாசம் நின்று விடுதல், நுரையீரல் சம்பந்தமான நோய்கள், நரம்பியல் தொந்தரவுகள், இதய நோய்கள் (இரத்த அளவு குறைவு, இதய செயலிழப்பு), ஊட்டச்சத்து (உணவின் அளவு மற்றும் ஊட்டும் முறையில் மாற்றம் ஏற்படுதல்), இரப்பை குடல் சம்பந்தபட்ட நோய்கள் (குடல் சுழற்சி) , வளர்சிதை மாற்றகுறைபாடு, சிறுநீரகக் கோளாறு (வளர்ச்சி அடையாத சிறுநீரகம்), உடல் வெப்பநிலையில் மாற்றம் (அதிக உடல் உஷ்ணம், உடல் வெப்பநிலைக் குறைவு), நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, கண் பார்வை குறைபாடு (விழித்திரையில் மாற்றம்)
குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்த சில மணி நேரத்திற்குள் கையாளுமுறை:
பிரசவம்
பிரசவ அறையில் பயிற்சி பெற்ற செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் அதற்கு தேவையான அனைத்து ஆயுதங்களையும் தயார்நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சுவாசம் மற்றும் நிலைபேறுடைமை
குறைப்பிரசவ குழந்தைகளைக் கவனிப்பதற்குப் பயிற்சி பெற்ற பணியாளர்கள் தேவை. உடல் வெப்பநிலையைப் பராமரிக்க வேண்டும். தேவைக்கேற்ப பிராண வாயுவைச் செலுத்த வேண்டும்.
சிசுவை கையாளுமுறை
உடல் வெப்பநிலையைச் சீரான முறையில் வைத்தல்
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையின் உடல் வெப்பநிலை சீரான முறையில் வைத்துக் கொள்ள குழந்தையை நன்றாகப் போர்த்தி வெப்பமானியில் வைக்க வேண்டும்.
பிராணவாயு சிகிச்சை மற்றும் காற்றோட்டம்
திரவ மற்றும் எலக்ரோலைட் சிகிச்சை
குறைப்பிரசவக் குழந்தைகளுக்கு அதிக அளவில் உடலின் நீர்சத்து குறைய வாய்ப்பு உள்ளது. நீர்சத்து குறைவதைத் தடுக்க வேண்டும்.
ஊட்டச்சத்து
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் தாய்ப்பாலை உறிஞ்சவும், விழுங்கவும் மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்குக் குழாய் மூலம் உணவு அளிக்க வேண்டும். குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மிகவும் முக்கியமானது.
இரத்தத்தில் மஞ்சள் காமாலையின் அளவு அதிகரித்தல்
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இரத்தத்தில் மஞ்சள் காமாலையின் அளவு அதிகமாக காணப்படும். இதனால் குழந்தைகளை ஒளிக்கதிர்களில் வைக்க வேண்டும்.
தடுப்பூசி
தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், இரணஜன்னி தடுப்பூசிகளைக் குழந்தையின் வயதுக்கு ஏற்பப் போடப்படும். ஹெபடைடிஸ் – பி தடுப்பூசி குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்குப் போடுவதில்லை.
குறைமாதக் குழந்தைகளை மற்ற குழந்தைகளிடமிருந்து மருத்துவமனையில் தனிமைப்படுத்துதல்
குறைமாதக் குழந்தைகளை மற்ற குழந்தைகளிடமிருந்து தனிமைப்படுத்துவதால் குழந்தையின் சிகிச்சை பயனுள்ளதாகவும் மற்றும் குழந்தையைத் தொற்று நோயிலிருந்து பாதுகாக்கலாம்.
ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து
ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து குறைப்பிரசவ (26 – 28 வாரத்திற்குள் பிறந்த) குழந்தைகளுக்குப் போடப்பட மாட்டாது. 37 வாரத்திற்கு மேல் பிறந்த குழந்தைகளுக்கு 6 – வாரத்திற்கு மேல் இந்த தடுப்பூசியைப் போடலாம்.
குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளின் நீண்டகால பிரச்சனைகள்
குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிக அளவில் நோய் வருவதற்கும், இறப்பு சதவீதமும் அதிக அளவில் வர வாய்ப்பு உள்ளது.
வளர்ச்சிக் குறைபாடு
அதிக அளவில் உடல் ஊனமாகுதல், பெருமூளை பிறழ்ச்சி, உணர்ச்சி சேதம்.
விழித்திரை வளர்ச்சி அடையாதிருத்தல் வளர்ச்சிக் குறைவு, பிறவிக் குறைபாடு
கர்ப்பப்பையில் சிசு வளர்ச்சி அடையாத நிலை குழந்தையின் எடை, வளர்ச்சி அட்டையில் வரையும் போது பத்து சதவீதத்திற்கு கீழ் இருந்தால் அது சிசு வளர்ச்சி அடையாத நிலை என்று கூறலாம்.
காரணங்கள்
தாய்வழிக் காரணங்கள்
மரபணு அளவு, தாயின் வயது, தாயின் எடை பிரசவத்திற்கு முன் குறைவாக இருத்தல், நாள்பட்ட நோய் (சர்க்கரை நோய், இருதய நோய், சீறுநீரக நோய்), ஊட்டசத்து குறைபாடு
நஞ்சுக்கொடி உடற்கூறியல் காரணிகள்
குறைபாடு, இரத்த ஓட்டத்தடையால் சிசு இறப்பு, நஞ்சுக் கொடி தகர்வு, முன் நஞ்சுக் கொடி
கருகாரணிகள்
குரோமோசோமினால் ஏற்படும் காரணங்கள், குறைபாடு, பிறவியிலே தொற்று நோய், பல சிசுக்கள் கருப்யையில் இருத்தல்
கையாளும்முறை
கர்ப்பகாலம்
கர்ப்ப காலத்தில் சிசுவின் இதயத் துடிப்பு மற்றும் சிசுவின் வளர்ச்சியைக் கண்காணிக்க வேண்டும். தாய்க்கு ஏதேனும் நோய்கள் இருந்தால் அதைத் தடுக்க வேண்டும்.
பிரசவம்
சிசுவின் வளர்ச்சி கர்ப்பபையில் குறைவாக இருந்தால் உடனடியாக பிரசவம் செய்ய வேண்டும்.
தாய்க்கு இரத்த கொதிப்பு அதிகமாக இருந்தால் உடனடியாக பிரசவம் பார்க்க வேண்டும்.
பிறந்த குழந்தைக்கு அவசர சிகிச்சைப்பிரிவு
குழந்தை பிறந்தவுடன் குழந்தையை அவசர சிகிச்சை பிரிவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அங்கு குழந்தையை தலை முதல் கால் வரை பரிசோதிக்க வேண்டும். குழந்தையின் உடல் வெப்ப நிலை, இதய துடிப்பு, மூச்சு விடுதல் அனைத்தையும் பரிசோதிக்க வேண்டும்.
நஞ்சுக் கொடியைப் பரிசோதித்தல்
நஞ்சுக்கொடியைப் பரிசோதிக்கும் போது ஏதேனும் தொற்று நோய் உள்ளதா? என்பதைப் பரிசோதிக்க வேண்டும்.
பின்விளைவுகள்
தாழ் வெப்பநிலை, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவது, வெள்ளை அணுக்களின் குறைபாடு, கால்சியம் குறைபாடு, இரத்தத்தின் அளவு அதிகரித்தல்
குறிப்பிட்ட உறுப்புகளைக் கையாளுதல்
இரத்தத்தின் சர்க்கரை அளவைக் கண்காணித்தல், இரத்தத்தின் கால்சியம் அளவைக் கண்காணித்தல், இரத்தத்தின் சோடியம் அளவைக் கண்காணித்தல்
எடை குறைந்த குழந்தை
பிறந்த குழந்தையின் எடை 2500 கிராமிற்குக் குறைவாக இருத்தல்
எடை குறைந்த குழந்தையின் உணவுமுறை
எடை குறைந்த குழந்தைகளுக்கு உணவுமுறை என்பது தாய்ப்பால், பால் பீச்சி கொடுப்பது, தாய்ப்பால் கொடுப்பவர்களிடமிருந்து வாங்குதல், அதிக சத்து நிறைந்த பால்.
தாய்ப்பால்
குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைக்குத் தாய்ப்பால் மிகவும் அவசியம். இது குழந்தையை பல விதமான தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
பிற தாய்மார்களின் தாய்ப்பால் (Donor Breast milk)
டோனர் பால் கொடுக்கும் தாய்மார்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்னவென்றால் டோனர் பால் குழந்தையின் வளர்ச்சியைக் குறைக்கிறது.
அதிகசத்து நிறைந்தபால் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட பால்
கொழுப்பு நீக்கப்பட்ட பால் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் குழந்தையின் எடை அதிகரிக்கிறது.
மாட்டுப்பால்
எந்த ஆராய்ச்சிகளும் மாட்டின்ப்பால் நல்லது என்று கூறவில்லை. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் சிறந்த பால், தாய்ப்பால் இல்லாத நேரத்தில் பால்பொடி மூலம் பால் கொடுக்கலாம், கொழுப்பு நீக்கப்பட்ட பால் கொடுப்பதைத் தடுக்கவும்.
முன் பாலின் முக்கியத்துவம்
முன் பால் என்பது குழந்தை பிறந்த நான்கு நாட்களுக்குள் தாய்ப்பால் தவிர வேறு ஏதேனும் பால் மற்றும் சர்க்கரை தண்ணீர் கொடுப்பது.
பரிந்துரைகள்
முன்பால் கொடுப்பது தவிர்க்க வேண்டும்.
குழாய் மூலம் பால் ஊட்டுதல்
32 வாரத்திற்கு மேல் குழந்தை பிறந்தால் தாய்ப்பால் கொடுக்கலாம். 32 வாரத்திற்கு கீழ் இருந்தால் குழாய் மூலம் பால் கொடுக்கலாம்.
பரிந்துரைகள்
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்குக் குழாய் மூலம் பால் கொடுப்பது மிகவும் நல்லது என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறைந்த பட்ச முறையில் பால் கொடுத்தல்
32 வாரத்திற்கு கீழ் பிறந்த குழந்தைகளுக்கு பிறந்த ஒரு வாரத்திற்குக் குறைந்த அளவு பால் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுப்பதனால் குழந்தையின் குடல் வளர்ச்சி அடையும்.
பரிந்துரைகள்
குறைந்த அளவு பால் கொடுப்பதன் மூலம் குடல் சுழற்சி போன்ற நோய்கள் தடுக்கலாம்.
பாலின் அளவு அதிகரிக்கும் முறைகள்
பாலின் அளவு குழந்தையின் எடையை பொருத்தும், கருதாங்கல் வயதைப் பொருத்தும் அதிகரிக்கலாம். அதிகபட்சமாக 180 லிருந்து 200 மி. லிட்டர் / கி. கி / நாள்.
LCPUFA மற்றும் DHAயின் முக்கியத்துவம்
ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்னவென்றால் LCPUFA மற்றும் DHA பாலில் இருப்பதால் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது மற்றும் கண்பார்வைக்கும் உதவுகிறது.
ஊட்டச்சத்து அல்லாத உறிஞ்சும் பொருட்களின் முக்கியத்துவம்
ஊட்டச்சத்து அல்லாத உறிஞ்சும் பொருட்களின் மூலம் பால் கொடுப்பதனால் குழந்தையின் உறிஞ்சும் தன்மை அதிகரிக்கும்.
ENTERAL FEEDING–யின்முறைகள்
குழாய் மூலம் பால் கொடுப்பது
கப், ஸ்பூன், பாலாடை, குப்பி மூலம் பால் கொடுத்தல், குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு உறிஞ்சும் தன்மை அதிகமாக இருந்தால் நேரடியாக தாய்ப்பால் கொடுக்கலாம்.
உறிஞ்சும் தன்மை குறைவாக இருந்தால் கப், ஸ்பூன், பாலாடை மூலம் பால் கொடுக்கலாம்.
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு எத்தனை முறைபால் கொடுக்கலாம்?
குழந்தையின் எடையைப் பொருத்தும், கருதாங்கல் எடையைப் பொருத்தும் எத்தனை முறைபால் கொடுக்கலாம் என்பதை நிர்ணயிக்கலாம். பொதுவாக இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பால் கொடுக்கலாம்.
பால் கொடுத்த பின்குழந்தையை படுக்க வைக்கும் நிலை
குழந்தையை மல்லாந்து, குப்புறமற்றும் ஒரு பக்கமாக படுக்க வைக்கலாம்.
குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தையின் ஊட்டச்சத்து
வைட்டமின்டி
தாய்ப்பாலின் குழந்தைக்கு போதுமான அளவு வைட்டமின் டி ஊட்டச்சத்து இல்லை. இதனால் குழந்தைகளுக்கு வைட்டமின் ஊட்டச்சத்து குறைபாடு நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. எனவே குழந்தை பிறந்த சில நாட்களுக்கு வைட்டமின் டி 400 செலுத்த வேண்டும்.
கால்சியம், பாஸ்பரஸ்
குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு எலும்பில் கால்சியம், பாஸ்பரஸ் அளவு குறைவாக இருக்கும். தாய் பாலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போதுமான அளவு இல்லை. எனவே கால்சியம் 120 – 140 மி.க. கி.கி நாள் மற்றும் பாஸ்பரஸ் 60-90மி.க. / கி.கி. / நாள் கொடுக்கவும்.
இரும்புச்சத்து
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு 2-3 மி.க / கி.கி. / நாள் இரும்புச்சத்து 6- 8 வாரத்திற்குக் கொடுக்க வேண்டும்.
குறைப்பிரசவம் குழந்தையின் வளர்ச்சியை கண்காணிக்கும் முறை
குழந்தையின் எடை, தலைச்சுற்றளவு, நீளம் மற்றும் மார்பகச் சுற்றளவு பார்க்க வேண்டும். அதன் மூலம் வளர்ச்சி குன்றிய குழந்தைகளை எளிதில் கண்டுபிடிக்கலாம்.
இந்த இதழை மேலும்