Home » Cover Story » விதி என்று மயங்காதே! மதி உண்டு தயங்காதே!!

 
விதி என்று மயங்காதே! மதி உண்டு தயங்காதே!!


ஆசிரியர் குழு
Author:

திரு. G. செந்தில்குமார்

சேர்மன், ஹெலிக்ஸ் கல்வி மையம், சேலம்

தமிழகத்தில் “School Social Work” என்கிற ஆராய்ச்சி சார்ந்த கல்விக்கூடமாக ‘ஹெலிக்ஸ்’ கல்வி மையத்தை தமிழகத்தில் முதன்முதலாக உருவாக்கிய பெருமைக்குரியவர்.

  • தமிழகத்தின் “Special Resource Committee” மெம்பர் என்ற சிறப்பிற்குரியவர்.
  • தொழில் நிறுவனங்களுக்கு தொழிலாளர் நலன்களுக்கான பயிற்சிகளை பல வருடங்களாக கொடுத்து வருபவர்.
  • குழந்தைகளின் “Interest Profile” தயாரித்து அவர்களை அவர்கள் ஆற்றல் வழியே உருவாக்கும் ஆய்வுகள் மேற்கொண்டும்,
  • சமூக சேவை புரிய வேண்டும் என்பதற்காகவே ‘சமூகவியல்’ படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படித்து இன்று அத்துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்.

கற்றலில் குறைபாடு உள்ள மாணவ மாணவிகளுக்கு நல்வழிகாட்டியாகத் திகழ்ந்து அவர்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து வரும் ‘ஹெலிக்ஸ்’ கல்வி மையம் சேர்மன் திரு. எ. செந்தில்குமார் அவர்களை நாம் நேர்முகம் கண்டதிலிருந்து இனி.

பிறந்ததுவளர்ந்ததுபடித்தது

நான் பிறந்தது வளர்ந்தது பள்ளிப் படிப்பு படித்தது எல்லாமே சேலத்தில் தான். எனது மேற்படிப்பை கோவையில் முடித்தேன். எனது பெற்றோர்கள் P.M. கோவிந்தராஜூலு, இந்திராணி. அப்பாவுக்குத் தொழில் எண்ணெய் வியாபாரம். இந்த வியாபாரத்தை தான் நானும் செய்ய வேண்டும் என்ற நிலையில் ஓர் ஆறு மாதம் அத்தொழிலில் ஈடுபட்டேன். ஆனால் தொடர முடியவில்லை. இந்தத் தொழிலுக்காகவே பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் தொழில் மேலாண்மையைப் (BBM) படித்தேன். ஆனாலும் தொழிலில் எனக்கு ஈடுபாடு வரவில்லை. சமூகப்பணி சார்ந்தே என் எண்ணம் இருந்தது. அதனால் Social Work Department என்கிற சமூகவியல் பாடத்தையும் பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் கற்றுத் தேர்ந்தேன்.

சமூகவியல்பாடத்தின்மீதுஆர்வம்வரக்காரணம்

பள்ளிக் காலங்களிலேயே நான் NSS, NCC போன்ற பயிற்சியில் கலந்திருக்கிறேன். அதன் தாக்கமே இந்தப் படிப்பை மிகவும் ஈடுபாட்டுடன் படிக்க வைத்தது. அதன் பிறகு இதையே சேவையுடன் கூடிய தொழிலாக மாற்றிக் கொண்டேன். அப்பொழுது சமூகப் பணித்துறையின் துறைத்தலைவராய் இருந்த டாக்டர். முரளிதரன் அவர்களின் ஆலோசனை இந்தத் துறையில் என்னை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றது. அன்று அவர் கூறிய ஆலோசனைகளும், அறிவுரைகளும் தான் இந்தப் பணியை சிறப்பாக செய்ய வைத்திருக்கிறது என்று கூறுவேன்.

சமூகப்பணிக்கானபடிப்பைபடித்தபின்உங்களுக்குள்எதுமாதிரியானஅனுபவங்கள்ஏற்பட்டது?

இந்தப் படிப்பை படிக்கும் போதே என் ஆசிரியர் 14 ஆண்டுகள் நீ காத்திருந்தால் தான் இந்தத் துறையில் சாதிக்க முடியும் என்றார். மேலும் முடித்தவுடன் நான் சேவை செய்கிறேன் என்று இறங்கிவிட முடியாது. பொறுமையாக இருந்து மக்கள் பணியாற்றி பெயர் எடுத்தால் தான் சாதிக்க முடியும். அதற்கு நீண்டகாலம் தேவைப்படும் என்றார். அந்தத் தருணம் எனக்கு மிகவும் கடுமையாகவே அமைந்தது. சமூகப்பணி செய்வதற்கெல்லாம் ஒரு படிப்பு இருக்கின்றதாÐ எனக் கேட்பார்கள். அவர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாத நிலையில் தான் இருந்தேன்.

என்றாலும், என் படிப்பு எந்தெந்த இடத்தில் எவ்வாறு துணைபுரியும், இதன் மூலம் என்ன பயன் இருக்கிறது, இதில் யார் யார் பயனடைவார்கள் போன்றவை குறித்து அவர்களிடம் எடுத்துச் சொல்வேன். அதன் பின்பு அவர்கள் இப்படிப்பைப்பற்றி தெரிந்து கொண்டு பாராட்டச் செய்தார்கள். முதல் மூன்று வருடம், மாதம் 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்று இப்பணி செய்தேன். அதன்பிறகு, சேலம் நஓந மருத்துவமனையில் நிர்வாக மேலாண்மை பொறுப்பிற்காகப் பணியில் சேர்ந்தேன். இந்தப் பணியானது என்னுடைய சமூகப் பணிக்கு பெரிதும் துணைபுரிந்தது. அங்கிருந்த மருத்துவர்களிடம் நல்ல ஆலோசனையும் கிடைத்தது. அப்போது எந்தத் தொழில் புரிபவர்களாகவும், எந்த வேலையில் இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு என்னால் ஆலோசனை கூறமுடியும் என்ற நிலைபாடு என்னுள் வந்தது.

கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களுக்கான கல்விக்கு ஒரு பள்ளியை உண்டாக்க வேண்டும் என்கிற எண்ணம் எழக்காரணம்?

அடிப்படையில் நானும் குழந்தைப் பருவத்தில் இந்தக் கற்றல் குறைபாட்டைச் சந்தித்தவன் தான். நான் படித்த காலத்தில் இக்குறைபாட்டிற்கு எவ்வித விழிப்புணர்வும் கிடையாது என்பதை உணர்ந்து, இன்றும் நிறைய பள்ளிகளில் நிறைய குழந்தைகள் இக்குறைபாட்டுடன் இருப்பதைப் பார்த்தேன்.  அவர்களுக்கு இக்குறைபாடு குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதை அறிந்த பின்னர் இக்குறைபாடு சார்ந்த விழிப்புணர்வு தரும் துறையைத் தேர்ந்தெடுத்து அதையும் படித்து முடித்தேன்.

மருத்துவமனை, பொது இடங்கள், ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப் என்று எங்கெல்லாம் பேச வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் கற்றல் குறைபாடு பற்றி பேச ஆரம்பித்தேன். நாளடைவில் எனக்குள்ளே இதற்கென்று ஒரு பள்ளியைத் தொடங்க வேண்டும் என்றஎண்ணம் எழுந்தது. ஆனாலும் அதற்கு நிறைய பிரச்சனைகள், சிக்கல்கள் வந்தது. அதை எல்லாம் நான் கற்றகல்வியின் மூலம் தீர்த்துக் கொண்டு சேலத்தில் 1998-ல் என் வீட்டிலேயே ஒரே ஒரு மாணவனை வைத்துக்கொண்டு தொடங்கினேன். இன்று அது ஒரு கல்வி மையமாக விரிவடைந்துள்ளது.

தங்கள் கல்வி மையத்திற்கு “ஹெலிக்ஸ்” (Helikx) என்று பெயர் வைக்கக் காரணம்?

தொடக்கத்தில் இந்தப் பள்ளிக்கு “ஜாந்வனாந்” (மன அமைதி) என்று தான் பெயர் வைத்தோம். பின்பு தான் “ஹெலிக்ஸ்” என்று பெயர் மாற்றம் செய்தோம். ஹெலிக்ஸ் என்பதற்கு கிரேக்க மொழியில் “சூரியக் கடவுள்” என்று பொருள்.

தொடக்கத்தில் இந்தப் பள்ளிக்கு “ஜாந்வனாந்” (மன அமைதி) என்று தான் பெயர் வைத்தோம். பின்பு தான் “ஹெலிக்ஸ்” என்று பெயர் மாற்றம் செய்தோம். ஹெலிக்ஸ் என்பதற்கு கிரேக்க மொழியில் “சூரியக் கடவுள்” என்று பொருள்.

வேதியியல் பாடத்தில் “ஸ்பைரல்” என்று ஒன்று வரும். அந்த ஸ்பைரல் வெடிக்கிற போது ஒரு மிகப்பெரிய வெளிச்சம் தோன்றும். அந்த இடத்தை ‘ஹெலிக்ஸ்’ என்று சொல்வார்கள். இருட்டில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய வெளிச்சத்தைக் கொடுக்கிறோம் என்கிற நோக்கில் தான் இந்தப் பெயர் வைத்தோம். இதில் e என்ற ஆங்கிலச்சொல் நேர்மாறாக ý என்று இருக்கும். காரணம் கற்றலில் குறைபாடுள்ள மாணவர்கள் வார்த்தைகளை இப்படி தான் மாற்றி எழுதுவார்கள். அதுமட்டுமல்லாமல் e என்பது Education என்றபொருள். Education என்பதில் யார் யாருக்கெல்லாம் பிரச்சனை உள்ளதோ அவர்களுக்காகத் தான் நாங்கள் இருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்டவும் e என்ற எழுத்தை நேர் மாறாக சிவப்பு நிறத்தில் எழுதியுள்ளோம். சிவப்பு என்றாலே ஒரு புரட்சிக்காகவும், புதிய முயற்சிக்காகவும் உள்ள குறியீடு ஆகும்.

தங்கள்பள்ளியின்நோக்கம்என்பது

மாணவர்கள் வெறும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதாது. இன்னபிறதிறமைகள் அவனிடம் என்னென்ன இருக்கிறது என்பதை ஆராய்ந்து அதில் அவனுக்கு ஊக்கம் கொடுப்பதுவே இப்பள்ளியின் நோக்கம்.

சென்றஆண்டு ஓவியம் வரைவதில் ஆர்வமுள்ள மாணவர்கள் ஓவியப்போட்டியில் கலந்து கொண்டு ஓவியங்களை வரைந்தனர். அவ்வாறு வரைந்த ஓவியங்களை 20,000 ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்து சாதனை படைத்தனர்.

வகுப்பறையிலேயே வைத்து அவர்களுக்கு பாடங்கள் சொல்லிக் கொடுப்பதால் படிப்பதில் குறைபாடுள்ள மாணவர்களின் படிப்பில் மேலும் தொய்வு நிலை தான் ஏற்படும் என்று கருதி, ‘சலீம் அலீ’ என்ற நிறுவனம் மூலம் பறவைகள் சரணாலயம் சென்று, அங்கு பறவைகள் பற்றிய ஆய்வுகளை மாணவர்கள் மேற்கொள்ள ஊக்கப்படுத்தப் படுகிறார்கள். இந்தக் கல்வியில் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்கலாம். அவர்களுக்கு எவ்வித கட்டாயமோ, கட்டுப்பாடுகளோ கிடையாது.

கட்டாயத்திற்கு உட்படுத்தி மாணவர்களை பாடங்களைத் தேர்ந்தெடுக்கச் செய்தால் அவர்களின் தன்னார்வம் நிச்சயம் குறைபடும். எனவே அவரவர் விருப்பப்படியே பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுக்கச் செய்து அவர்கள் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் பாடங்கள் நடத்தப்படுகிறது. மேலும், சமுதாயப் பிரச்சனைகளை இம்மாணவர்களுக்கு அதிகமாகக் கற்றுத்தருகிறோம். படிப்பிற்கும் மேலாக சமுதாயத்தின் மீது தனக்கிருக்கும் அக்கறையையும், அவசியத்தையும் அவனுக்கு உணர்த்தச் செய்கிறோம்.

2011ம் ஆண்டு “ஜாகித்யாத்நா” என்ற ஒரு ரயில் பயணத்தில் 500 இளைஞர்களுடன், 20 நாளில் 12 மாநிலங்களில் ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டோம். இப்பயணத்தில் ஒவ்வொரு இடத்திலும் பல்வேறு விதமான மனிதர்களைச் சந்திக்க நேர்ந்தது. அம்மனிதர்களின் ஆளுமைப் பண்புகளை இம்மாணவர்கள் நேரடியாக பார்த்தன் மூலம் சமுதாயத்தில் எப்படிப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது என்றும், அதை தீர்ப்பதற்கான வழிமுறைகளைத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அந்தப் பயணம் அமைந்தது.

இளைய தலைமுறையினர் தங்களுக்கான சமுதாய மேம்பாடுகள் பற்றிய கடமைகளை செய்ய வேண்டுமெனில் அவர்களுக்கு குழந்தைப் பருவம் முதலே சமுதாய விழிப்புணர்வுகளை ஊட்ட வேண்டும்.

ஒவ்வொரு பள்ளிகளும் இம்மாதிரியான முயற்சிகளை பள்ளி விடுமுறைகாலங்களில் செய்துவர பள்ளிப்பருவம் முதலே பண்பட்ட மாணவர்களாக இளைய சமுதாயம் உருவாகும். அப்படி உருவாக்குவதில் பள்ளிகளுக்கும் முக்கிய பங்கு உண்டு.

கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களை எவ்வாறு இனம் காண்பது?

இக்குறைபாடுள்ள மாணவர்கள் யாரும் மூளை வளர்ச்சி குறைபாடு உள்ளவர்கள் அல்ல. மற்றவர்களைப் போல சாதாரணமானவர்கள் தான். அதுமட்டுமல்லாமல் எல்லா விதத்திலும் மற்றவர்களைவிட புத்திசாலியானவர்கள். ஆனால் படிப்பு என்று வரும் பொழுது மட்டும் சிரமத்தை வெளிக்காட்டுவார்கள். அந்த சிரமத்திற்குக் காரணம் நிறைய இருக்கிறது. கரு உருவாவது முதல், வளர்ச்சிப் பருவம் வரை குழந்தைகளுக்கு முக்கியமான தருணம். குழந்தைப் பருவத்தில் தவழ்வதை விட்டு நடத்தல், பேசுவதில் தாமதம், வலிப்பு மற்றும் எக்காரணம் இல்லாமலும் கற்றலில் குறைபாடுகள் என்பதெல்லாம் அறிகுறிகள் ஆகும்.

இன்னும் சில குழந்தைகளுக்கு இயற்கையாகவே படிக்க முடியாத நிலை உருவாகும். போட்டி, ஓவியம், விளையாட்டு போன்றவற்றில் மிகவும் ஈடுபாட்டோடு செய்வார்கள். ஆனால் படிப்பு என்று வரும்போது, ஈடுபாடு குறைவாக இருக்கும். பெற்றோர்களோ, ஆசிரியர்களோ சொல்லிக் கொடுக்கும்பொழுது நன்றாக சொல்வார்கள். தானாகப் படிக்கும் பொழுது அவர்களால் ஒரு வார்த்தையைக் கூட படிக்க முடியாது. மற்றமாணவர்களைக் காட்டிலும் எழுத்துப் பிழை மிகவும் அதிகமாக வரும். இதுபோன்ற காரணங்களே இக்குறைபாடுள்ள மாணவர்களை கண்டறிய உதவுகிறது.

இவர்கள் தான் கற்றலில் குறைபாடு உள்ளவர்கள் என்பதை முதலில் ஆசிரியர்கள் அறிந்துணர வேண்டுமே? அதற்கு நீங்கள் எடுத்திருக்கும் முயற்சி குறித்து?

நாங்கள் முன் கூட்டியே ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று நிர்வாகத்திடம் இந்த பயிற்சியின் நிலையைப் பற்றிக் கூறுகிறோம். இந்தப் பயிற்சியின் நிலையை அறிந்து நிர்வாகத்தினர் ஆசிரியர்களை அனுப்பி வைப்பார்கள். தனியார் பள்ளி நிறுவனத்தில் மட்டும் தான் நாங்களே நேரடியாக சென்று ஆலோசனைகள் கூறுகிறோம். அரசுப் பள்ளிகளில் அவர்களே வருடத்திற்கு ஒருமுறை அழைப்பார்கள்.

ஒவ்வொரு வகுப்பிலும் 10 முதல் 12 சதவிகித மாணவர்கள் இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கவனிக்கப்படாமல் இருப்பதன் மூலம் எதிர்காலத்தில் இவர்களால் பிரச்சனைகளை பெரிய அளவில் எதிர்கொள்ள முடியாமல், மாணவனுக்கும் மாணவனின் குடும்பத்திற்கும் சிரமங்கள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. தங்களின் திறமைகளை வெளிக்காட்டுவதில் சிக்கல்கள், திறமை இருந்தும் தன்னைத்தானே குறைத்து மதிப்பிட்டு, சமுதாய சட்டவிரோதமான செயல்களைச் செய்யவும் இக்குறைபாடு ஒருவரை ஆளாக்கும் என்பதை உணரத்தான் வேண்டும்.

இந்தக் கற்றல் குறைபாடுள்ள மாணவர்கள் தங்கள் கல்வி மையத்திற்கு வந்த பின்னர் சாதித்துள்ளார்களா?

நான் 2001ல் இப்பள்ளியைத் தொடங்கிய அந்த முதல் வருடத்தில் வந்து சேர்ந்த மாணவர்கள் இப்பொழுது MBA, MCA போன்ற படிப்புகள் படித்து பெரிய பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்து வருகிறார்கள். எங்களது மாணவர்கள் இன்போசிஸ் நிறுவனங்களில் நல்ல பணியில் உள்ளார்கள். மும்பையில் IIT போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். இதுபோன்ற இன்னும் பல மாணவர்கள் பல நிறுவனங்களில் பணியில் உள்ளனர்.

இயற்கை வேளாண்மை வகுப்பு, நாடகத் துறை போன்றவற்றையும் செய்து, நிறைய நினைவாற்றல் பயிற்சிகளை முதல் வகுப்பிலிருந்தே கொடுத்து வருகிறோம்.

இக்கல்விக்கு வயது வரம்பு ஏதும் உள்ளதா?

எங்கள் நிறுவனத்தில் 10ம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளன. ஆனால் நாங்கள் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று கூறமாட்டோம். ரெமிடியல் ஒன்று, ரெமிடியல் இரண்டு என்று தான் சொல்வோம். அதாவது ரெமிடியல் ஒன்று என்றால் கற்றலில் மிகவும் பின்தங்கியவராக இருப்பார்கள். வயது அதிகம் இருந்தாலும் கூட அவர்களின் படிப்பு மிகவும் பின் தங்கியதாக இருக்கும். வாசித்தலிலும், எழுதுவதிலும் பிழைகள் அதிகமாக காணப்படும்.

அந்த வயதில் அவனுக்கு எதைச் சொல்லிக் கொடுத்தால் அவன் மனநிலை ஏற்கிறதோ அதை மட்டுமே சொல்லிக் கொடுத்து விளக்குகிறோம். முதலில் ஒவ்வொரு குழந்தைகளின் “ஐக்யூ” தேர்வு, பிரச்சனைகள் என்ன, அவனின் நிலை என்ன என்பதை முதலில் ஆய்ந்து அவனுக்கு எது தலையாய பிரச்சனையாக இருக்கிறதோ அதிலிருந்து அவனுக்கு சொல்லிக் கொடுத்துப் புரிய வைப்போம்.

பெற்றோர்கள் இக்குறைபாட்டை ஆறு வயதிலேயே இனம்கண்டு பயிற்சி நிலையத்தை அணுகினால் நிச்சயம் மற்ற பிள்ளைகள் போல் படிப்பை தொடர்ச்சியாக முடிக்க முடியும். அதன்பின்னர் வரும் குழந்தைகள் வயதுக்கு ஏற்றாற்போல் வகுப்பை முடிக்க முடியாது.

16 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு இக்கல்வி பொருந்தாது. காரணம், அதற்கு மேல் இக்கல்வியைக் குழந்தைகள் ஏற்றுக்கொள்வதில் சிரமங்கள் இருக்கும். 16 வயதில் தொழிற்படிப்பை படிக்கும் சூழலுக்கு அவர்கள் வந்துவிடுகிறார்கள். இதனால் 16 வயதுக்குட்பட்டவர்களையே நன்றாக கவனித்து சிறந்தவர்களாக உருவாக்க முடியும்.

இம்மாணவர்களுக்கான தேர்வு முறை பற்றிக் கூறுங்கள்?

எங்கள் நிறுவனம் மனிதவள ஆராய்ச்சி மேம்பாட்டு மையம், புதுடெல்லியின் மேற்பார்வையின் கீழ் இயங்கக் கூடியது. இது ஒரு திறந்தநிலைப் பள்ளிக்கல்வி முறை. இருந்தாலும் மற்றகல்வியைப் போல இதிலும் அதே சமச்சீர் கல்விமுறையைத் தான் பின்பற்றி வருகிறோம். இந்நிறுவனத்திற்கென்று அரசாங்கம் பாடத்திட்டங்களைக் கொடுத்துவிடுகிறது. அந்தப் பாடத்திட்டத்தின் கீழ் பாடங்களை நடத்தி மாணவர்கள் தேர்வு எழுதிய பின்னர் அந்தத் தேர்வு தாள்களை டெல்லிக்கு அனுப்பி வைத்து விடுவோம். அவர்கள் எங்களுக்கு A, B, C என்ற முறையில் சான்றிதழ்களைக் கொடுப்பார்கள். C என்றால் மூன்றாம் வகுப்பு, B சான்றிதழ் என்றால் 5ம் வகுப்பு, A சான்றிதழ் என்றால் 8ம் வகுப்பு என பிரித்து வைத்துள்ளார்கள்.

இப்பொழுது இந்தத் துறைசார்ந்த வளர்ச்சி போதுமானதாக உள்ளது என்று நினைக்கிறீர்களா?

இப்பொழுது தான் இந்தத் துறையின் அடிப்படையை 20% மக்களிடம் புரிய வைத்திருக்கிறோம். அவர்களும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அப்படியிருந்தும் நிறைய படித்தவர்களுக்கே இது பற்றிய புரிதல் இன்னும் வரவில்லை. இதிலிருந்து கிடைக்கப்பெறும் அனுபவம் ஒவ்வொருவருக்கும் நல்ல பாடத்தைக் கற்றுக்கொடுக்கும்.

ஒரு தனி மனிதனின் வெற்றிக்குக் காரணம் படிப்பறிவா? பட்டறிவா?

ஒருவர் தன் படிப்பை மட்டும் வைத்துக்கொண்டு, அந்த படிப்போடு மட்டுமே தன்னை தொடர்புபடுத்திக் கொண்டு தன்னை தயார்படுத்துவதன் மூலம் இந்த சமூகத்தில் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது. படிப்பறிவோடு பட்டறிவு சேரும் பொழுதுதான் வெற்றி பெறமுடியும். பட்டறிவு என்பது அனுபவம் தான். வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு இது மிகவும் அவசியம்.

உங்களின் எந்தச் செயல்பாடு ‘சாதிக்க வைத்தது’ என்று நினைக்கிறீர்கள்?

ஒரு செயலை எடுத்துக்கொண்டு இச்செயலை என்னால் தான் சாதிக்க முடியும் என்று எவன் ஒருவன் முனைப்போடு செயல்படுகிறானோ அந்த முனைப்பு தான் அவனின் முதல் வெற்றி.

ஒருமுறை நான் மும்பை சென்றிருந்தேன். அங்கிருந்த பிச்சைக்காரர்களுடன் 15 நாள் தங்கி அவர்களைப் பற்றிய ஒரு ஆய்வு மேற்கொண்டேன். அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டவை தான் என் வெற்றியாக கருதுகிறேன்.

  • க்ஷி  பிச்சைக்காரர்கள், மழையானாலும் வெயிலானாலும் தங்களது செயல்பாடான பிச்சை எடுப்பதில் இருந்து பின்வாங்க மாட்டார்கள். தொடர்ந்து ஓடிக்கொண்டே தான் இருப்பார்கள்.
  • மற்றவர்கள் தன்னை நிச்சயம் திட்டுவார்கள், ஏளனமாய் பேசுவார்கள் என்று அவர்களுக்குத் தெரியும். இருந்தும் அவர்களது தொழிலான பிச்சை எடுப்பதைத் தொடர்ந்து செய்துகொண்டு தான் இருக்கிறார்கள்.
  •   பிச்சை எடுக்கும்பொழுது எல்லா மனிதர்களையும் நன்றாக கூர்ந்து கவனிக்கிறார்கள். மனிதர்களின் மனநிலையை அறிந்து கொள்கிறார்கள்.

இம்மாதிரியான முனைப்பை நான் அவர்களிடமிருந்து தான் கற்றுக்கொண்டேன். இந்த அனுபவம் தான் என் வாழ்க்கையை திசைதிருப்பியது என்று கூட சொல்லலாம்.

நீங்கள் ஒரு சுயமுன்னேற்றப் பயிற்சியாளர் என்ற வகையில் ஒரு சுயமுன்னேற்றப் பயிற்சியின் மூலம் ஒரு மனிதனை எந்த அளவிற்கு மாற்றமுடியும்? அந்த மாற்றத்தின் மூலம் நடந்த மறக்க முடியாத நிகழ்வு?

ஒரு பயிற்சியின் மூலம் ஒரு மனிதனுக்கு 7 முதல் 10 சதவீதம் மட்டுமே மாற்றம் கொடுக்க முடியும். தொடர்ச்சியாக பயிற்சி கொடுப்பதன் மூலம் வேண்டுமென்றால் மேலும் மாற்றத்தைக் கொடுக்க முடியும். ஒரு ராக்கெட் மேலே பறக்க வேண்டுமென்றால் கீழிருந்து உந்துசக்தி கொடுத்தவுடன் மறையும் ‘இனர்ஷயா’ என்ற இயந்திரத்தைப் போல் அவர்களுக்கு பயிற்சியின் மூலம் உந்துதல் கொடுக்கப்படுகிறது. மேலே ஏறுவது அவரவர் கையில் தான் இருக்கிறது.

நான் சேலத்தில் ஒரு தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் நிகழ்ச்சியைக் கொடுத்துக் கொண்டிருந்த பொழுது சண்முகம் என்பவர் என்னிடம் தினமும் தொலைபேசியில் பேசுவார். சாதாரண சைக்கிள் கடையில் வேலைபார்த்து வந்த அவர் இப்பொழுது கடையின் உரிமையாளராக உயர்ந்துள்ளேன் என்றார். இப்படிப் பலர் அவர்களது வாழ்க்கையில் உயர்ந்துள்ளார்கள்.

குடும்பம் குறித்து…

ஒவ்வொருவரின் வெற்றிக்கும் அவர்களின் குடும்பம் ஒரு காரணமாக இருக்கும். அந்த வகையில் என் வெற்றிக்கு என் குடும்பமே முக்கிய காரணம். எனது மனைவி திருமதி தேவிப்பிரியா இந்நிறுவனத்தின் செயலாளராக இருந்து எனக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறார். இவர் உளவியல் படித்ததால் பள்ளியின் மேலாண்மைகளை சரியாக கவனிக்க முடிகிறது. மேலும் கற்றலில் குறைபாடு சம்பந்தமாக 4 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

இக்கல்வி சம்பந்தமான தமிழ்நாடு சிறப்பு ஆய்வுக்குழுவில் உறுப்பினராக இருக்கிறார். எனக்கு இரு குழந்தைகள் உபநிஷா, சைந்தவி.

எனது மனைவியின் பெற்றோர்கள் திரு. வெங்கட கிருஷ்ணன் அவர்களும், திருமதி. சந்திரிகா அவர்களும் எங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.

எதிர்கால இலக்கு?

இந்தச் சமுதாயத்தில் குழந்தைப்பருவம் முதலே சமுதாய உணர்வை மாணவர்களுக்கு உட்புகுத்த வேண்டும். அடுத்த 20 ஆண்டுகளில் இப்பொழுது இருக்கும் வளங்கள் முற்றிலும் அழிந்துவிடும் என்பதனை இப்பொழுது உள்ள குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பின்வரும் விளைவுகளை அறிவுறுத்தி என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம் என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறேன்.

அவரவர் பிரச்சனைகளோடு அல்லாமல் சமுதாய பிரச்சனைகளுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காண வேண்டும் என்பது பற்றி அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இப்படி நிறைய கனவுகள் உண்டு.

பெற்றவிருதுகள்…

பல சமூக நிறுவனங்கள் எனக்கு பல விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளது. அதில் குறிப்பாக, 2013ம் ஆண்டு டெல்லியிலிருந்து தன்னார்வ நிறுவனம் ஒன்று “National Educationalist Award” என்கிற விருதை வழங்கி சிறப்பித்தது.

“நேர நிர்வாகம்” உங்களிடம் எப்படி?

என் குடும்பத்தினருடன் நேரம் செலவழித்தது என்பது மிகவும் குறைவு. இந்த ஒரு வருட காலமாகத்தான் என்னால் குடும்பத்தினரிடம் நேரத்தை சரியாக செலவிட முடிகிறது.

என்னிடம் 18 பேர் வேலை செய்து வருகிறார்கள். அவர்களில் இயக்குனர்களாகிய பாலாஜி மற்றும் குமரகுரு ஆகியோரும், பங்கீட்டாளர்களாகிய (Partners) சசிகலா, ராஜலட்சுமி ஆகியோரும் சமுதாய அக்கறையோடு வந்தவர்கள் தான். இதனால் என் வேலைப்பளுவை இவர்கள் வெகுவாக குறைத்திருக்கிறார்கள். எனவே இப்போது என்னால் எல்லா வேலைகளையும் சரியாக பிரித்துப் பார்க்க முடிகிறது.

நன்றிக்குரியவர்கள் என்று நீங்கள் சொல்ல விரும்புபவர்கள்?

Dr. சுரேஷ்குமரன், ஜான் பிரிட்டோ, அருப்புக்கோட்டை ஜெயவிலாஷ் நிறுவனம், பார்னி ஜார்ஜ், துவாரங்கநாதன், ஆத்தூர் ராஜகோபால், லலிதா ராமானுஜம் (சென்னை), திரு. கார்மேகம், R.K.G. நிறுவனம், ரோட்டரி கேலக்ஸி, JCI சேலம் மெட்ரோ, பாபு, சங்கர், பொறி. மோகன்ராஜ், NSIT சேலம், ஹரி, நிர்மலா பாலாஜி, ராஜா, காசி மாயாண்டி ஆகியோருக்கு இத்தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தன்னம்பிக்கை குறித்து?

எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்தது “தன்னம்பிக்கை இதழ்” தான். நான் பயிற்சியாளராக இருந்தபோது எல்லாதரப்பு மக்களையும் சந்திக்கும் வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது என்றால் அது மிகையாகாது. தன்னம்பிக்கை மாத இதழ் மூலம் என் பேச்சாற்றல் சமூக முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமைந்ததை எண்ணி மனமகிழ்ச்சி கொள்கிறேன்.

முடியாது இது என்பதையெல்லாம் முடித்துக் காட்டுவது “தன்னம்பிக்கை” தான். தொழிற்படிப்பு முடித்து தொழில் சார்ந்து செல்ல மனமில்லாமல் “சமூகவியல்” படிப்பை முடித்து தனிமனிதப் போராட்டம் தொடர்ந்த போது உன்னால் முடியும் முன்னேறு என என்னை முன்னோக்கி அழைத்துச் சென்றது என்னிடம் இருந்த “தன்னம்பிக்கை” தான். தன்னம்பிக்கை உள்ள மனிதன் என்றும் “ஜெயிப்பவன்”.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment