Home » Articles » மனித நேயமிக்க மருத்துவர் டாக்டர் கோ. இராமநாதன்

 
மனித நேயமிக்க மருத்துவர் டாக்டர் கோ. இராமநாதன்


சூரியன்
Author:

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 

டாக்டர் கோ. இராமநாதன் பல ஆண்டுகளாக என்னுடைய நெருங்கிய நண்பராக இருந்தார். கடின உழைப்பால் படித்து தன்னை முழுமையான மருத்துவராக தயாராக்கிக் கொண்டார். பிறகு தொடர்ந்த இடைவிடாத உழைப்பினால் முன்னேறி ஜி.ஆர். மருத்துவமனை என்ற ஒரு நல்ல மருத்துவ குழுமத்தை உருவாக்கினார்.

டாக்டர் தனிமனித வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை அனைத்திலும் வெற்றி பெற்றார். “தன்னம்பிக்கை மாத இதழ்” தான் நடத்திவந்த மருத்துவ இதழான “இன்றைய மருத்துவம்” மூலமாக நல்ல விதைகளை சமுதாயத்திற்கு விதைத்து வந்தார். நோய் வராமல் தடுக்கக்கூடிய வழிமுறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். ஆகவே அவர் வாழ்க்கையில் முழுமையான வெற்றி பெற்றார் என்றே நாம் கூறமுடியும். தன் நிறுவன பணியாளர்களுக்கு பயிற்சிகள் நடத்த என்னை பலமுறை அழைத்துள்ளார். பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். அவர் நம்மை விட்டு செல்வதற்கு முன்பு, பல மாதங்களாகவே ஒவ்வொரு முறை நான் சந்தித்துப் பேசும் போதும் அவர் கூறியது, “சூரியன், குடும்பத்தையும், தொழிலையும் சரியாக உருவாக்கிவிட்டேன். இனி இருக்கும் அமைப்பை அவர்களாகவே நிர்வாகம் செய்து கொள்வார்கள். நான் சமுதாயத்திற்கு பல விசயங்களை செய்ய விருப்பப்படுகிறேன். அதற்காக திட்டங்களையும் தீட்டி வருகிறேன்”. சமூக அக்கறையுடன் இதயப்பூர்வமாக மேற்கண்டவற்றை சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் இயற்கை அவரது உயிரைப் பறித்துக் கொண்டது. அவர் உயிரோடு இருந்திருந்தால் இந்த உலகத்திற்கு நிறைய நல்லவை செய்திருப்பார். அவரது இழப்பு ஒரு பேரிழப்பாகும்.

அவரோடு பழகிய அனுபவத்தில் கீழ்கண்ட சிறப்பு அம்சங்கள் பாராட்டுக்குரியதாக இருக்கிறது.

  • அவர் நோயாளிகளை கவனிக்கும்போது அமைதியாக, முழுக்கவனத்துடன் நோயாளிகள் சொல்வதை பொறுமையாக கேட்பார். முழு அக்கறையுடன் நோயினை தீர்மானித்து வைத்தியம் செய்வார். ஆறுதல் வார்த்தைகளை கூறுவார். தைரியம் ஊட்டுவார். நோயாளிகள் அவரைப் பார்த்து முடித்தபின்பு மன நிறைவோடும், நம்பிக்கையோடும் வெளிவருவார்கள்.
  • நிறைய ஏழை மக்களுக்கு கட்டணம் பெறாமலே சேவை செய்துள்ளார். சில சமயங்களில் சில நேரங்களில் இருக்கும் பணத்தைக் பெற்றுக் கொண்டு மீதிப்பணத்தை ஊருக்குச் சென்று மெதுவாக அனுப்பவும் அனுமதிப்பார்.
  • உரிய சமயத்தில் மருந்துகளைவிட உணவுக்கட்டுப்பாடே நோய்களை தீர்க்கும் என்பதை நன்கு விளக்கிச் சொல்வார்.
  • எல்லோரிடமும் அன்பாகவும், எந்த நேரத்திலும், பொறுமையாக, மென்மையாக, இனிமையாக பேசுகின்றதன்மை, பெருந்தன்மையாக நடந்து கொள்கிற தன்மை, மற்றவர்களின் சிறந்த குணங்களை பாராட்டுகின்றநல்ல மனம், எப்பொழுதும் சிரித்த முகம்… இவையெல்லாம் அவருடைய சிறப்பு குணங்களாகும்.

நேர ஒழுங்குத்தன்மையை அவர் கையாள்வார். அவரிடம் இதுபற்றி நான் கேட்டபோது, “ஆரம்பத்தில் மருத்துவராகப் பணியைத் துவங்கிய போது காலை முதல் இரவு வரை தொடர்ந்து உழைப்பு… உழைப்பு மட்டும் தான். இப்படிப் பல ஆண்டுகளைக் கழித்தேன். அதற்குப் பிறகு, உணவிலும், வாழ்க்கை முறையிலும் ஒழுங்கு செய்தேன். யோகா, தியானப் பயிற்சி, நடை பயிற்சி, எழுதுதல் என்று எல்லாவற்றிற்கும் நேரம் ஒதுக்கி திட்டமிட்டு வாழ்வினை ஒழுங்குபடுத்தியுள்ளேன்” என்று கூறினார்.

அந்த நல்ல மனிதர், பலரின் இதயத்தில் இடம்பிடித்த மனிதர், இன்று நம்மிடம் இல்லை. இப்போது அவர் விட்டுச்சென்ற பணியை ஜி.ஆர். மருத்துவமனையின் நிறுவனமும், அவரது குடும்பமும் தொடர்ந்து செய்து வருகின்றது. அவரது ஆத்மா நிறைவு கொள்ள நம் முதலாமாண்டு பிரார்த்தனைகள்!

இந்த மாத இதழை

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2014

என் பள்ளி
சாதிக்கலாம் வாங்க
மனித நேயமிக்க மருத்துவர் டாக்டர் கோ. இராமநாதன்
சான்றோர் சிந்தனை
கவலை நம்மிடம் வராது
விருப்பு வெறுப்பு விடுவோம்
உரிமையும்! கடமையும்!!
பொறியியல்கல்விதுறையின் ஏற்றம்
பள்ளி குழந்தைகளுக்கான சுகாதார பழக்க வழக்கங்கள்
வெற்றி உங்கள் கையில் – 4
தன்னம்பிக்கையின் தந்தை டாக்டர்.இல.செ.கந்தசாமி
கால்பந்தும் காலப்பந்தும்
மனதில் மகிழ்ச்சி! செயலில் வளர்ச்சி!!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்