Home » Articles » சான்றோர் சிந்தனை

 
சான்றோர் சிந்தனை


ராமசாமி R.K
Author:

காபி குடிப்பதனால் ஞாபக சக்தி கூடுமா?

காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பதால் நமது ஞாபக சக்தி கூடும் என்ற இனிய செய்தியை இன்றைய தலைமுறை முழுமையாக நம்புகிறது.

ஆவி பறக்கும் காபி ஒரு கையிலும் சூடு பறக்கும் செய்திகளைத் தாங்கிய செய்தித்தாள் ஒரு கையிலுமாக காலைப் பணியை ஆரம்பிக்கும் நிகழ்வு பல காலங்களாக நம் நாட்டு வழக்கமாகி விட்டது. நவீன செய்தி தொடர்பின் யுகத்திலும் இதில் எந்தவித மாற்றங்களும் ஏற்படவில்லை.

எப்படியானாலும் நாள் முழுவதும் நீடிக்கக்கூடிய உற்சாகமும், ஊக்கமும், புத்துணர்ச்சியும் தரும் சக்தி இந்த காபிக்கு உண்டு என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகி விட்டது.

காபி குடிப்பதால் நினைவுகள் குறைந்து போகுமா? என்ற சந்தேகம் பலருக்கு இன்று வந்து விடுகிறது.

வயோதிகத்தின் காரணமாகவும், வேறு உடல்நலக்குறைவின் காரணமாகவும் வயதானவர்களுக்கு நினைவுத்திறன் சற்று குறைந்து விடும்.

இதைத் தவிர்க்க காபி அருந்துவதுதான் நிவாரணம் தரும் வழி என நிரூபிக்கப்பட்டுள்ளது. நினைவுத்திறனை அதிகரிக்கும் சக்தி காபிக்கு உண்டு என்பது இப்போதைய கண்டுபிடிப்பு.

அமெரிக்காவில் அரிசோனா பல்கலைக்கழகத்தில் முதியோரின் நினைவுத்திறன் பற்றி நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காபியில் அடங்கியுள்ள காஃபீன் என்றவேதிப்பொருள் 65 வயதுக்கு மேற்பட்டவர்களின்  ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

மேலும் காபி குடிப்பதால் அல்சைமர்,  பார்கின்சன்ஸ், இதய நோய், ஈரல் வாதம், கீல்வாதம், நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைக்கமுடியும் என்று ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் கூறுகிறார்கள்.

மூளை நரம்புகளில் அடினோசினின் ஆதிக்கத்தைக் காஃபீன்  குறைப்பதால் மனஅழுத்தம் குறையும் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

வயது கூடகூட 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு  ஞாபக சக்தி சில நேரங்களில் கூடுகிறது (அல்லது) சில நேரங்களில் குறைகிறது. அதிகாலையில் ஞாபக சக்தி அதிகமாகவும், நண்பகலுக்கு மேல் குறைந்தும் விடுகிறது. காபி உட்க்கொள்ளும் போது நினைவுத்திறன் மாறுபாடு முற்றிலுமாக நீக்கப்படுகிறது.

மூளையின் செல்களைச் சோர்வடையச் செய்து நினைவுத்திறனைத் தாறுமாறாக்கும் ‘அல்#ல்மேர்ஸ்’ என்ற நோயைக் கூட காபி அருந்துவதால் தடுத்து நிறுத்த இயலும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நல்ல காபி ஒரு மந்திரக்கோல். மூளையினுடைய செயல்கள், வேலைகள், நினைவாற்றல் மற்றும் சக்தி அளவு ஆகியவற்றை காபி அதிகப்படுத்துகிறது. மிகப்பெரிய அளவிலே Anti Oxidents – யை உருவாக்குகிறது. நேர்மறையான ஆரோக்கிய விளைவுகளை உண்டாக்குகிறது. அது Chi-Gong பயிற்சிகளை போல உடலிலும் உள்ளத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. தசை நார்களை  வலுப்படுத்த உதவுகிறது.

காபி உபயோகப்படுத்தும் முறை இந்தியாவிற்கு 17ம் நூற்றாண்டிலேயே வந்திருந்தாலும் கூட இந்தியாவின் தென்பகுதியில் 19ம் நூற்றாண்டில் தான் நன்கு அறிமுகமானது.

 • காபி அருந்துவதன் மூலம் உடலிலுள்ள சர்க்கரை அளவை சீர்படுத்தி இரண்டு வகையான சர்க்கரை நோய்கள் வராமல் கட்டுபடுத்தலாம்.
 • காபி ஒரு சில வகையான புற்று நோய்கள் குறிப்பாக மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
 • காபி மனஅழுத்தத்தை குறைக்கும் பானமாகும் (Good Anti – depressant drink). மூளைக்கு புத்துணர்ச்சி அளித்து மூளையை சுறுசுறுப்பாக்குகிறது. ஓய்வைத் தருகிறது
 • காபி அருந்துவது இதயத்திற்கு நல்லது. காபியில் கலந்துள்ள டெனின் இதய தசைகளுக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது. சிறிய அளவிலே காபி அருந்துவது இதயத்தைப் பலப்படுத்துகிறது. எந்த விதமான எதிர்மறை விளைவையும் ஏற்படுத்துவதில்லை.
 • கல்லீரலுக்கும் உதவிகரமாக இருக்கிறது. கல்லீரல் வீக்கம், கல்லீரல் சுருக்கம் வராமல் தடுக்கிறது.
 • ஆஸ்துமா நோய் வராமல் தடுக்கிறது. காபியில் கலந்துள்ள Coffeine சுவாசத்தை சீராக்கி ஆரோக்கியத்தைத் தருகிறது.
 • கண்ணுக்கு சக்தி அளிக்கிறது
 • வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது.
 • உடலின் செல் அமைப்புகளை விரிவுபடுத்துகிறது
 • இரத்திலுள்ள Serum Cholestrol – யை சமநிலைப்படுத்துகிறது.
 • சருமத்திலுள்ள சுருக்கங்களை குறைத்து சருமத்தை அழகுபடுத்துகிறது
 • சிறுநீரகத்தின் பணிகளை சீர்படுத்துகிறது
 • ஜுரண சக்திக்கு உதவுகிறது
 • நோய் தடுப்பாற்றல் சக்தியை பலப்படுத்துகிறது
 • சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது
 • உடலிலுள்ள உறுப்புகளின் வீக்கங்களை தடுக்கிறது
 • புத்துணர்ச்சி தருகிறது

காபியை அதிகமாக அருந்துவதால் சில தீமைகளும் உண்டு

 • காபி மனிதனை அதற்கு அடிமையாக்குகிறது
 • அதிகமான மன அழுத்தத்தையும், நரம்புத்தளர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.
 • குடற்புண்ணை உண்டாக்குகிறது
 • திட உணவு எடுத்துக் கொள்ளாமல் காபி அருந்தினால் வயிற்றுக் கோளாறுகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகமாகிறது.

நினைவுத்திறன் அதிகமாக வேண்டுமெனில் காபி அருந்துங்கள். இதனால் உடலில் உற்சாகமும், புத்துணர்ச்சியும் கூடும். ஊக்கமும் நினைவுத்திறனும் அதிகமாகும். காபி அருந்துவது உடலுக்கு நலம் காக்கும் மற்றும் உள்ளத்துக்கு நலம் பயக்கும் அருமருந்தாக அமைந்துள்ளது. எனவே காபியை அளவாகக் குடித்து வளமாக வாழ்வோம்.

இந்த மாத இதழை

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2014

என் பள்ளி
சாதிக்கலாம் வாங்க
மனித நேயமிக்க மருத்துவர் டாக்டர் கோ. இராமநாதன்
சான்றோர் சிந்தனை
கவலை நம்மிடம் வராது
விருப்பு வெறுப்பு விடுவோம்
உரிமையும்! கடமையும்!!
பொறியியல்கல்விதுறையின் ஏற்றம்
பள்ளி குழந்தைகளுக்கான சுகாதார பழக்க வழக்கங்கள்
வெற்றி உங்கள் கையில் – 4
தன்னம்பிக்கையின் தந்தை டாக்டர்.இல.செ.கந்தசாமி
கால்பந்தும் காலப்பந்தும்
மனதில் மகிழ்ச்சி! செயலில் வளர்ச்சி!!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்