Home » Articles » பொறியியல்கல்விதுறையின் ஏற்றம்

 
பொறியியல்கல்விதுறையின் ஏற்றம்


மூர்த்தி செல்வகுமாரன்
Author:

வளர்ந்து வரும் மாணவர்கள் சமுதாயத்தை ஓர் ஆக்கபூர்வமான சக்தியாக மாற்றுவதில் உயர்கல்வி பெரும்பங்கு வகிக்கின்றது. மாணவர்களின் ஆர்வத்திற்கும், திறமைகளுக்கும் ஏற்றாற்போல் உயர்கல்வி அமைவதில் அவர்களின் எதிர்கால வாழ்வு மிகச்சிறந்த நிலையை அடைவதுடன் பொன்னும் பொருளும் அதிக அளவில் வந்துசேரும்.

அதற்கு மாறாக, ஒரு சில மாணவர்கள் தங்களின் எதிர்கால நிலை என்னவாக இருக்க வேண்டும் என்பதை தெளிவாக மனதில் கொள்ளாமல் ஏனோதானோ என்றும், மற்றவர்களின் அறிவுரைப்படி கல்லூரியையும், அதன் படிப்பையும் தேர்வு செய்வதனால் பல மாணவர்கள் தங்களது உயர்கல்வியை முழுவதுமாக முடிக்காத நிலையில் தடுமாறி நிற்கின்றனர்.

2014ம் ஆண்டு பிளஸ் டூ தேர்வை எழுதும் மாணவனுக்கு எதிர்காலம் வளமாக அமையுமா? இல்லையா என்பது 2014ம் ஆண்டுவாக்கில் தான் தெரியவரும். அதாவது 10 ஆண்டுகளுக்குப் பிறகு நமது செயல் என்னவாக இருக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே சரியாக தேர்வு செய்தால் அது அவர்களின் நிலையை மேன்மையடையச் செய்வதுடன், தான் எடுத்தது சரியான உயர்கல்வி என்பதும் சரியாக தெரியவரும். 8.5 லட்சம் மாணவர்கள் இந்தாண்டு ப்ளஸ் டூ முடிவை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இவர்களில் எத்தனை மாணவர்கள் சரியான இலக்கை நோக்கி பயணிக்கப் போகின்றனர் என்பது அவரவர் தேர்ந்தெடுக்கும் உயர்கல்வியைப் பொறுத்தே அமையும்.

பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர் சரியான திட்டம் இல்லாமையால் எதிர்காலத்தில் வாழ்க்கையில் தடுமாறுவதும், குறைந்த மதிப்பெண்களுடன் தேர்வாகிய மாணவர்கள் சரியான உயர்கல்வி வழிகாட்டுதல் இல்லாமல் நல்லதொரு நிலையை அடையமுடியாமல் தவிப்பதும். ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாக நடந்துகொண்டு தான் உள்ளது.

ப்ளஸ் டூ தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் வாழ்வில் மேன்மை அடைய மாட்டார்கள் என்று எண்ணுவது தவறு. சரியான திட்டமும், இடைவிடாத பயிற்சியும் பெற்றால் மதிப்பெண் குறைவாக பெற்ற மாணவர்களும் கூட சாதனையாளர்கள் ஆவார்கள் என்பது சாத்தியமே.

வேலை கிடைக்கவில்லையா?

உயர்கல்வி தேர்வில் பலவகையாக பிரிவுகள் இருந்தாலும் பொறியியல் துறைக்கென்று தனி இடம் உள்ளது. சமீப காலமாக பொறியியல் படித்தால் வேலை இல்லை என்ற தவறான எண்ணம் இருந்து வருகிறது. பொறியியல் படித்தவர்களில் பலருக்கு வேலை சரியாக அமைவதில்லை. உண்மையில் பொறியியல் துறையில் வேலை செய்யும் அளவிற்கு தகுந்த திறமையுள்ள பொறியாளர்களை பொறியியல் கல்லூரிகள் உருவாக்கவில்லை. உண்மையான ஆர்வம் உள்ள ஒவ்வொரு மாணவனும் பொறியியல் துறையில் சாதிக்கிறான் என்பது மறுக்கமுடியாதது. உதாரணமாக, பக்கத்து வீட்டுப் பையன் பொறியியல் துறையைத் தேர்ந்தெடுத்து வேலை இல்லாமல் இருக்கிறான் என்பதால் பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்று எண்ணுவது தவறான கருத்து. அவனிடம் காரணம் கேட்டால், அவன் தேர்வு செய்தது சரியானதாக இருந்தாலும் அதற்கான முயற்சிகளை சரியாக பயன்படுத்தினானா? வேலைக்குத் தேவையான தகுதிகளை திறம்பட செய்தானா? போன்று பல்வேறு கேள்விகளை எழுப்பினால் தான் அதற்கான காரணம் என்ன என்பது தெரியவரும்.

பொறியியல் கல்வியின் உயர்வு

தொழிற்கல்வியின் உயர்வு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் என்பதை அறிந்த தமிழக அரசு ஆண்டுதோறும் பல நூறு கோடி ரூபாயை மாணவர்களின் பொறியியல் கல்விக்காக ஒதுக்கீடு செய்துள்ளது.

குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருக்கம் மாணவர் பொறியியல் கல்வியைத் தேர்வு செய்தால் அவருடைய ஆண்டு கட்டணம் ரூ.20,000 மட்டுமே. இதுவே அதே மாணவன் கலை அறிவியல் பிரிவைத் தேர்வு செய்தால் ரூ.25,000 ஆண்டு கட்டணம் செலுத்த வேண்டி வரும்.

மூன்று ஆண்டுகள் கலை அறிவியல் படிப்புக் கல்விக்கட்டணத்தை விட நான்கு ஆண்டுகள் பொறியியல் படிப்புக்கான கட்டணம் குறைவாக இருப்பதால் கடந்த ஆண்டு மட்டும் 77,000 மாணவர்கள் ஆண்டிற்கு ரூ.20,000 மட்டுமே செலுத்தி, இந்த முதல் பட்டதாரி கட்டணச் சலுகைகளில் மூலம் படித்துள்ளனர்.  பெரிய கம்பெனிகள் பல கலை அறிவியல் பாடங்களைக் காட்டிலும், பொறியியல் மாணவர்களின் மீது அதிக ஈடுபாடு காட்டுவதால் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளைத் தர முன்னுரிமை கொடுக்கிறார்கள்.

இரண்டாவது, பெரிய கல்விக் கட்டணச் சலுகையாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் முழு கல்விக் கட்டணங்களை அரசே ஏற்றுக்கொள்ளும். இதனால் SC/ST மாணவர்கள் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் படிக்கலாம். அரசு அளிக்கும் கல்விக் கட்டணமும், பொறியியல் நிறுவனங்கள் காட்டும் ஆர்வமும் பொறியியல் துறையைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு ஓர் வரப்பிரசாதமாக அமையும். பொறியியல் துறையைத் தன் எதிர்கால உயர்கல்வியாக எடுக்க நினைக்கும் மாணவர்கள் மற்றவர்களின் பேச்சைக் கேட்டு குழம்ப வேண்டிய அவசியம் இல்லை. பொதுவாக என்னுடைய கருத்துப்படி நீ எந்தப் படிப்பை எடுத்து படித்தாய் என்பது முக்கியமல்ல. நீ அதை எப்படி படித்தாய் என்பதே முக்கியம். எந்தப் படிப்பையும் ஆர்வமுடன் படித்தால் அதற்கான பலன் கைமேல் காத்திருக்கும் என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை.

மாணவர் பணியே மகேசன் பணி எனக் கொண்டு செயல்பட்டு வரும் செல்வக்குமரன் கல்வி ஆலோசனை மையம் நேர்முகமாகவும், தொலைபேசி வழியாகவும் ஆலோசனைகள் பல தந்து கல்விக்கு வழிகாட்டி வருகிறது. இதில் பயன்பெற வேலை நாட்களில் இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை 0424 2500073 என்ற எண்ணிற்கு அழைத்து ஆலோசனைகளைப் பெறலாம்.

மருத்துவக்கல்வி …

அடுத்த இதழில் மலரும்…

இந்த மாத இதழை

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2014

என் பள்ளி
சாதிக்கலாம் வாங்க
மனித நேயமிக்க மருத்துவர் டாக்டர் கோ. இராமநாதன்
சான்றோர் சிந்தனை
கவலை நம்மிடம் வராது
விருப்பு வெறுப்பு விடுவோம்
உரிமையும்! கடமையும்!!
பொறியியல்கல்விதுறையின் ஏற்றம்
பள்ளி குழந்தைகளுக்கான சுகாதார பழக்க வழக்கங்கள்
வெற்றி உங்கள் கையில் – 4
தன்னம்பிக்கையின் தந்தை டாக்டர்.இல.செ.கந்தசாமி
கால்பந்தும் காலப்பந்தும்
மனதில் மகிழ்ச்சி! செயலில் வளர்ச்சி!!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்