Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

1. தொழில் படிப்பை முடித்தவர்களுக்கு வேலை கிடைப்பதில்லையே காரணம் என்ன?    

தொழில் படிப்பை படித்த மாணவர்கள் படித்து முடித்த பின்னர் வேலையைத் தேடாதீர்கள். வேலையை மற்றவர்களுக்குக் கொடுங்கள்.

நீங்கள் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தீர்களோ? அந்தத் துறையிலுள்ள அனைத்து நுணுக்கங்களையும் முதலில் நன்றாகக் கற்றுக்கொள்ளுங்கள். அதன்பிறகு வேலையை உருவாக்கலாம். தொழில் முனைவோராகலாம்.

பெரிய நிறுவனங்களில் உயர்ந்த பதவிக்கு சரியான ஆட்கள் கிடைப்பதில்லை என்று கூறுகிறார்கள். திறமையான ஆட்கள் தான் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். பணியிடம் காலியாக இருந்தாலும் பணியாற்ற அழைக்காமல் இருக்கக் காரணம் அம்மாணவனுக்கு செயல்திறன் இல்லை என்பதுதான்.

படிக்கும் காலத்தில் திறமைகளை மற்றவர்களைவிட ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பெரிய நிறுவனங்கள் உங்களின் திறமை அறிந்து அவர்களே முன்வந்து உங்களை அவர்களது நிறுவனங்களில் பணியமர்த்த முன்வர வேண்டும். அந்த அளவிற்கு நுட்பங்களைக் கண்டுபிடித்து வைத்திருக்க வேண்டும்.

இந்தியாவில் தொழில் படிப்பை (Engineering) படித்த மாணவர்களில் 80% பேர் வேலை செய்யத் தெரியாதவர்களாக (Unemployable) இருக்கிறார்கள் என்று ஒரு சர்வே கூறுகிறது. கல்வியின் தரம் எப்படி இருக்க வேண்டுமென்றால், வேலை கிடைக்கவில்லை என்றாலும் சொந்தமாக தொழில் துவங்கும் திறன் உள்ளவராக அந்த பட்டதாரி இருக்க வேண்டும். ஒரு Motor Mechanic / AC Mechanic / TV / Mobile Phone Repairing கடை என்று தொடங்கலாம் அல்லது Spare Parts தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்கலாம்.

2. இந்தியாவில் 54 சதவிகிதம் இளைஞர்கள் இருந்தும் ஒம்பிக்கிலும் வேறு விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெறமுடியாததற்குக் காரணம் என்ன?

இன்று, பல கல்வி நிறுவனங்கள் மாணவர்களின்  விளையாட்டுத் திறனை ஊக்குவிப்பதில்லை. விளையாட்டில் அதிக கவனம் செலுத்தினால் படிப்பு பாதிக்கப்படும் என்றும், அதனால் பள்ளி  கல்லூரி தேர்ச்சி சதவிகிதம் குறைந்து விடும் என்று அஞ்சி விளையாட்டுகளில் மாணவர்களை ஈடுபட விடுவதில்லை.

பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் படிப்பில் மட்டும் கவனம் கொண்டால் போதும். படிப்பில் ஜெயிப்பவன் தான் வாழ்விலும் ஜெயிப்பான் என்று தவறாக எண்ணி விடுகிறார்கள். படிப்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் பணம் செலவு செய்யத் தயாராக இருக்கும் பெற்றோர்கள் அவர்களது கவனம் படிப்பைத் தவிர விளையாட்டில் சிதறி விடுமோ? என்று கவலைப்படுகிறார்கள். குழந்தைகள் முதல் மதிப்பெண் பெறவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள், நல்லது தான். அப்படியானால் எல்லாப் பிள்ளைகளும் முதல் மதிப்பெண் பெறுவது எதற்கு? பிற்காலத்தில் உயர்ந்த பதவி அடைய வேண்டும் என்பதற்குத் தானேÐ உயர் பதவியில் சிறந்து விளங்கி உயர்ந்து வளர நல்ல உடல்நலம் வேண்டும். அதுபோல நல்ல தலைமைப் பண்புகள் வேண்டுமே. இவை அனைத்தும் விளையாடுவதனால் தானே வரும்.

சென்றஆண்டு பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் சுமார் ஒரு இலட்சம் மாணவர்கள் தோல்வியடைந்தார்கள். அதற்கு காரணம் விளையாட்டு என்றால், அந்த மாணவர்களில் ஒருவர் கூட விளையாட்டு வீரனாக இல்லையே. படிப்பிற்கு தடை விளையாட்டு என்றால் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

“பெற்றோர்களும், கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கு விளையாட்டை ஊக்கப்படுத்தினால் மட்டுமே போட்டிகளில் பதக்கம் வெல்ல முடியும்”.

மைக்ரோசாஃப்ட் கம்பெனியின் உயர் அதிகாரி (CEO) இந்திய வம்சாவழியினரான திரு. சத்யா நாதெள்ளா என்பவர். இவருக்கு ஆண்டு சம்பளம் ரூ. 112 கோடி. இவர் தனது தலைமைப் பண்புக்கும், உயர்விற்கும் தான் பள்ளியில் படிக்கும் போது விளையாடிய ‘கிரிக்கெட்’ தான் காரணம் என்கிறார். பாரதி கூட பிள்ளைகளை விளையாடவிடுங்கள் என்று தான் கூறுகிறார். நாம் அனைவரும் விளையாடினால், விளையாட்டை ரசித்தால், நாமும் ஒம்பிக்கில் பதக்கம் பெறலாம்.

3. எனது இலட்சியம் விண்வெளி வீராங்கனை ஆக வேண்டும் என்பது. என் பெற்றோர்கள் நான் மருத்துவராக வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் எனக்கு தௌpவில்லை…

படிப்பை அல்லது உயர்கல்வியைத் தேர்ந்தெடுப்பதில் எப்பொழுதும் கவனமாகவும், ஒருமுறைக்கு இருமுறை நன்றாக யோசித்தும் முடிவெடுக்க வேண்டும். உங்கள் பெற்றோரின் விருப்பத்தில் தவறு இல்லை. ஏனென்றால் தனது பிள்ளைகள் மருத்துவராக இருந்தால் அவர்களுக்கு பெருமை என்பதால் அப்படி சொல்வார்கள். பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்ற நினைப்பது பிள்ளைகளின் கடமை தானே.

அதே சமயம் பெற்றோர்களுக்கு உங்களது ஆசையையும் எடுத்துக் கூறுங்கள். அதன் நியாயத்தைப் புரிய வையுங்கள். எந்த பெற்றோரும் பிள்ளைகளின் எதிர்கால கனவுக்கு தடைபோட மாட்டார்கள். விண்வெளி வீராங்கனை பற்றி அவர்களுக்கு தெரிந்திருக்காது. தெரியப்படுத்துங்கள்.

பெற்றோர்கள் பிள்ளைகளின் கருத்துகளுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும். பிள்ளைகளும் எதையாவது கேட்க நினைத்தால் அதை வெளிப்படையாகவே கேட்டுவிட வேண்டும். பெற்றோர் தமது பிள்ளைகளின் எதிர்கால இலட்சியங்களைக் கேட்டு அதற்கு ஊக்கமும், உதவியும் செய்ய வேண்டும். அவ்வாறல்லாமல், உங்களுடைய ஆசைகளை அவர்களுக்குக் கட்டாயமாகத் திணிக்க நினைத்தால் அவர்களால் முழு ஈடுபாட்டுடன் அச்செயல் செயல்பட முடியாது. ஆர்வமில்லாமல் படிப்பதால் படிக்கும் படிப்பு யாருக்கும் பயன்படாமல் போகும். தங்களது ஆசைகளை பிள்ளைகளுக்கு திணிக்க நினைப்பது மிகவும் அபத்தமான செயல் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.

இந்த மாத இதழை

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2014

என் பள்ளி
சாதிக்கலாம் வாங்க
மனித நேயமிக்க மருத்துவர் டாக்டர் கோ. இராமநாதன்
சான்றோர் சிந்தனை
கவலை நம்மிடம் வராது
விருப்பு வெறுப்பு விடுவோம்
உரிமையும்! கடமையும்!!
பொறியியல்கல்விதுறையின் ஏற்றம்
பள்ளி குழந்தைகளுக்கான சுகாதார பழக்க வழக்கங்கள்
வெற்றி உங்கள் கையில் – 4
தன்னம்பிக்கையின் தந்தை டாக்டர்.இல.செ.கந்தசாமி
கால்பந்தும் காலப்பந்தும்
மனதில் மகிழ்ச்சி! செயலில் வளர்ச்சி!!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்