Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


ஆசிரியர் குழு
Author:

ஓர் ஆறு. அந்த ஆற்றின் நீரோட்டத்தில் ஒரே மாதிரியான மரங்கள் மிதந்து வருகிறது. தச்சர் ஒருவர் ஒவ்வொரு மரமாய் புரட்டிப் பார்த்து பலபேர் உதவியுடன் கரை கொண்டு வந்து சேர்க்கிறார்.

அவர் அப்படி சேர்த்த மரங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. நிறைய மரங்கள் ஆற்றின் நீரோட்டத்திலேயே சென்று கொண்டிருந்தது.

நடந்ததையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பெரியவர் ஒருவர் வியப்போடு, தச்சரிடம் “எனக்கு எல்லா மரங்களும் ஒன்று போலவே இருந்தது. ஆனால் நீங்களோ சில மரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்துவிட்டு பல மரங்களை அப்படியே விட்டுவிட்டீர்களே, ஏன்?” என்று கேட்டார்.

“பெரும்பாலான மரங்கள் மலைப்பகுதிகளில் பாதுகாப்பாக வளர்ந்தவை. அவைகள் அடுப்பு எரிக்க விறகாகத்தான் பயன்படக்கூடியவை. நான் தேர்ந்தெடுத்த மரங்கள் மலை உச்சியில் வளர்ந்தவை. எத்தனையோ காற்று, மழை, புயல்களைச் சந்தித்துப் போராடி, போராடி உயிர் வாழ்ந்து வலிமையை வளர்த்துக் கொண்டவை. அடிமரம் வைரம் பாய்ந்திருக்கும். அதில் பலகை செய்தால் நீண்ட காலம் உழைக்கும் என்றுதான் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தேன்” என்றார் தச்சர்.

பிரச்சனைகளை எதிர்கொண்டு “எதிர்நீச்சல்” போட்டு வாழ்பவர்களே மனவலிமை பெறுகிறார்கள்; மகத்தான சாதிப்புகளை நிகழ்த்துகிறார்கள் என்கிற சிந்தனை நமக்கு பாடமானால் சந்திக்கும் சோதனைகள் சாதனைகளாய் மாற்றம் பெறும்!


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2014

என் பள்ளி
சாதிக்கலாம் வாங்க
மனித நேயமிக்க மருத்துவர் டாக்டர் கோ. இராமநாதன்
சான்றோர் சிந்தனை
கவலை நம்மிடம் வராது
விருப்பு வெறுப்பு விடுவோம்
உரிமையும்! கடமையும்!!
பொறியியல்கல்விதுறையின் ஏற்றம்
பள்ளி குழந்தைகளுக்கான சுகாதார பழக்க வழக்கங்கள்
வெற்றி உங்கள் கையில் – 4
தன்னம்பிக்கையின் தந்தை டாக்டர்.இல.செ.கந்தசாமி
கால்பந்தும் காலப்பந்தும்
மனதில் மகிழ்ச்சி! செயலில் வளர்ச்சி!!
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்