Home » Articles » வெற்றிக்கு அடிப்படை

 
வெற்றிக்கு அடிப்படை


செல்வராஜ் P.S.K
Author:

எந்த ஒரு மனிதனும் தன் முயற்சியில் நம்பிக்கை வைத்தால், அவனால் எதையும் செய்ய முடியும். ஏனெனில் அவன் வெற்றியால் உருவாக்கப் பெற்றவன். எடுத்துக்கொண்ட எந்த பணியானாலும் அவன் தோல்வியடைவதை ஏற்றுக்கொள்ள மாட்டான்.

தன் சுயமுயற்சியால் உருவானவர்களின் அற்புதமான வெற்றிகளை ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் வெற்றியால் உருவாக்கப்பட்டவர்கள் என்பது உறுதியாகத் தெரியும். அவர்கள் தன் வாழ்க்கையில் முதன் முதலில் தொழிலைச் சுறுசுறுப்புடன் துவங்கியபோது, தான் எடுத்துக்கொண்ட பணியில் எதையும் சாதிக்க முடியும் என்கிற திறமையின் மீது நம்பிக்கையான, மிகத் தீவிரமான மற்றும் உறுதியான எண்ணமும் கொண்டிருந்தனர். அவர்களது மனோபாவம் அவர்களது இலட்சியத்தை அடைவதில் பிடிவாதமான நிலையிலேயே இருந்தது.

சைரஸ் யஃபீல்டு என்பவர் 35 வயதில் பெரிய செல்வத்தோடு தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது காலகட்டத்தில் வாழ்ந்த அனைத்து விஞ்ஞானிகளும் அட்லாண்டிக் பெருங்கடலில் குறுக்கே கம்பிகளை வைப்பது சாத்தியமல்ல என்று அவருக்கு அறிவுரை கூறினார்கள்.

இருந்த போதிலும் அவரது தன்னம்பிக்கை அவருடைய சொத்து முழுவதையும் இழக்கச் செய்து, 50 முறைக்கு மேல் அவரை கடலுக்குள் செல்ல வைத்து, சீற்றம் கொண்ட கடலைப்போல செயலாற்றத் தூண்டியது.

மனதைத் தளர்வடையச் செய்யக்கூடிய தோல்விகள் மற்றும் ஒத்திவைப்புகளுக்கு இடையிலும் அவர் மீதும், தனது திட்டத்தின் மீதும் கொண்டிருந்த உறுதியான நம்பிக்கை அவரைத் தனது பணியால் சிறப்பாக நிலைபெறச் செய்தது.

தனது போராட்டங்கள் அனைத்தும் வெற்றி மகுடம் சூடிக்கொள்ளும் என்றும், தனது சீரிய பணி முடிந்துவிட்டது என்றும், அவர் நினைத்த அந்த நாளிலேயே கடலடிக் கம்பி, நடுக்கடலிலேயே பிரிந்து போனது. ஆனாலும் இறுதிச் சாதனையிலும் அவர் நம்பிக்கை இழக்காமல் தனது எண்ணங்களை இறுதியில் வெற்றிகரமாக நிறைவேற்றினார்.

ஒருவருடைய காரியங்களில் தன்னம்பிக்கை எவ்வளவு அற்புதங்களை உருவாக்கியுள்ளது என்பதற்கு மேற்கூரியவரின் அசாத்திய பணியைக் கூறலாம்.

நீங்கள் உங்கள் மீது வைத்திருக்கும் தன்னம்பிக்கை மற்றும் நீங்கள் ஆரம்பித்த செயலைச் செய்துவிட முடியும் என்கிற நம்பிக்கையை வைத்துத்தான் வாழ்க்கையில் உங்கள் சாதனைகள் நிர்ணயிக்கப்படுகிறது.

 ஆரம்பத்திலேயே நீங்கள் உங்களைப் பற்றி தோல்வியாக நினைத்துவிட்டால், நீங்கள் எந்த ஒரு நிலையையும் அடைய முடியாது. மேலும் நீங்கள் எடுத்துக்கொண்ட எந்தப் பணியிலும் வெற்றிபெற முடியாது. வாழ்வில் என்றும் எதையும் சாதிக்க முடியாது.

 நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால், உங்கள் எதிர்காலத்தைப் பற்றிய வெற்றி பெறும் சிந்தனையையே எப்போதும் இடைவிடாது, உறுதியாகப் பிடித்துக் கொண்டிருங்கள். உங்களது பணியில் நீங்கள் சிறப்பாகச் செயல்பட முடியாது என்று யாரும் உங்களுக்குத் தெரிவிக்கவோ, யோசனை கூறுவதற்கோ இடமளிக்க வேண்டாம்.

 உங்கள் மீதா உங்கள் நம்பிக்கை தான் உங்களது வெற்றிக்கான ஆதாரமாகும். வெற்றிபெற முன்னேறுவதைப் போல நடந்து முன்னேறிச் செல்லுங்கள். உங்களைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இந்த உணர்வை ஏற்படுத்துங்கள். வெற்றி உங்கள் கண்களில் இருந்து உறுதியுடன், ஆவேசமான தீர்மானத்துடன் வெளிப்படுவதற்கு அனுமதியுங்கள்.

 அப்பொழுதுதான் நீங்கள் வெற்றியால் உருவாக்கப்பட்டு வெற்றி பெறும் பழக்கம் கொண்டவராக இருப்பதால் உங்களை அதைரியப்படுத்தக்கூடிய எந்த விஷயமும் இல்லை என்று மக்கள் தெரிந்து கொள்வார்கள்.

 நீங்கள் ஒரு முதலாளியாக இருந்தால், நீங்கள் நம்பிக்கையோடு, வெற்றி பெறும் உணர்வோடு ஒரு வெற்றியாளராக உங்களது அன்றாட வேலைக்கு வருகிறீர்களா அல்லது சந்தேகத்தோடு, நம்பிக்கையில்லாத ஒரு தோல்வியுற்ற மனிதராக வருகிறீர்களா என்பதை உங்கள் பணியாளர்கள் சுலபமாகச் சொல்லிவிட முடியும்.

 உங்களது முகபாவம், உணர்ச்சி வெளிப்பாடு மற்றும் நடத்தையின் மூலம் நீங்கள் அதே நாளில் வெற்றி பெறப் போகிறீர்களா அல்லது தோல்வியடைவீர்களா என்றும் அவர்களால் சொல்லவிட முடியும்.

 நமது மனோபாவமே நமது வெற்றியை வெளிப்படுத்துகிறது.

 அந்த வெற்றி நமது முகத்திலிருந்து வெளிப்படுகிறது.

          “வெற்றி பெறுபவராகத் தோற்றமளித்து

            ஒவ்வொரு துளியில்     இருந்தும்

            வெற்றியைப் பரப்புவது தான்

            வெற்றியைப் பெறுவதற்கான

            முதற்படியாகும்!”

 வெற்றியின் மனோபாவம் மற்றவர்களிடமிருந்து மட்டுமின்றித் தன்மீதும் நம்பிக்கை உணர்வை உந்தச் செய்கிறது.

 நீங்கள் விரும்பியதைப் போன்ற மனிதனாக ஏற்கனவே ஆகிவிட்டதைப் போல நடைபயின்று பேசிச் செயல்படுங்கள். மேலும் உங்கள் மன உறுதியை நிறைவேற்றுவதற்காகச் சூழ்நிலைகளை இணங்கச் செய்யும் கண்ணுக்குத் தெரியாத சக்திகளை நீங்கள் அறியாமலேயே செயல்படுத்துவதாகப் பாவணை செய்யுங்கள்.

 நீங்கள் என்றும் வெற்றியாளராகப் பரிமளிப்பீர்கள். பின்பு எதையும் சாதிப்பீர்கள். சாதிக்கக்கூடிய சக்தியும், ஆற்றலும் உங்களுக்குள் பிறக்கும். பின்பு தோல்விகள் வர மறுக்கும்.

இந்த மாத இதழை


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2014

இதயம் காப்போம்
ஒரு சின்ன சரி
இலட்சியப் பயணம்
என் பள்ளி
வெற்றிக்கு அடிப்படை
இந்திய ராணுவத்தில் அதிகாரி ஆவது எப்படி?
பொறுமையாக இருங்கள்
இன்னும் வேறு என்ன வேண்டும்?
சான்றோர் சிந்தனை
வெற்றி உங்கள் கையில் – 3
மகத்தான மனிதர்களுள் மறைந்திருந்த சக்தி
விளையாட்டு
தன்னம்பிக்கை மேடை
வரலாற்றைப் படி! வரலாறு படை!!
உள்ளத்தோடு உள்ளம்