Home » Articles » மரித்துப் போகும் வரை சாதனை “நிக் வாலெண்டா”

 
மரித்துப் போகும் வரை சாதனை “நிக் வாலெண்டா”


சாந்தி R
Author:

ஒருமுறை கின்னஸ் சாதனை செய்வதற்குள்ளேயே மனிதனின் வாழ்நாள் முடிந்துவிடுகிறது. ஒருவர் ஏழாவது முறை கின்னஸ் சாதனையைப் புரிந்துள்ளனர்.

கடைசியாக அவர் செய்த சாதனை அமெரிக்காவில் உள்ள அரிஸோனா மாநிலத்தில், கென்யான் பகுதியில் ஓடும் லிட்டில் கொலராடோ நதியைக் கடந்தது… சும்மா வெறுமனே நீந்திக் கடந்துவிடவில்லை…

1500 அடிக்குமேல் உயரம் கொண்ட நதியின் கரையில் உள்ள இரு மலைகளையும் ஒரு கம்பியால் கட்டி அந்தக் கம்பியின் மீது நடந்து நதியைக் கடந்தார். பார்த்தாலே தலை சுற்றிவிடும் 1500 அடி உயரம், தரையில் பாதுகாப்பாக நின்று கொண்டிருக்கும் மனிதர்களையும் சாய்ந்துவிடும் பேய்க்காற்று, மேலே இருந்து விழுந்தால் ஒரு எலும்பைக்கூட பெற முடியாத கொடூரமான பாறைகள், இப்படிப்பட்ட சூழ்நிலையுள்ள இடத்தில் தான் எந்தவொரு பாதுகாப்பும் இன்றி தனி ஆளாக தன்னம்பிக்கையைக் கொண்டு இச்சாதனையைச் செய்திருக்கிறார் நிக் வாலெண்டா.

200 வருடமாக, ஏழு தலைமுறையாக கம்பியின் மீது நடந்து கொண்டிருப்பதால், ‘ஃபிளையிங் வாலெண்டாஸ்’ என்று அழைக்கப்படுகிறது நிக் வாலெண்டா குடும்பம். நிக் வாலெண்டாவின் மூதாதையர்கள் சர்க்கஸில் பார் விளையாடுவது, கம்பி மீது நடப்பது போன்றவற்றையே தங்கள் தொழிலாகக் கொண்டிருந்தவர்கள்.

நிக் வாலெண்டாவின் கொள்ளுத்தாத்தா தான் முதல் முறையாக சர்க்கஸ் கூடாரத்துக்குள் அதுவரை செய்யப்பட்டு வந்ததை கூடாரத்துக்கு வெளியே செய்தார். தொடர்ந்து நிக்கின் தாத்தா கர்ல் வாலெண்டா இரண்டு மிக உயர்ந்த கட்டிடங்களுக்கு இடையே கம்பியைக் கட்டி, அதில் நடந்து பல சாதனைகளைச் செய்திருக்கிறார்.

தன்னுடைய 73வது வயதில், 1978ம் ஆண்டு வழக்கம் போல மிக உயர்ந்த இரண்டு கட்டிடங்களுக்கு இடையே கம்பியைக் கட்டி நடக்கும்போது ‘போலன்ஸ்’ தவறி கீழே விழுந்து, உடல் சிதறி உயிர்விட்டார்.

ஆனாலும் அத்துடன் நின்றுவிடவில்லை அவரது குடும்பத்தினர். நிக்கின் மாமா, அவரின் மகன் ஆகியவர்கள் இதே மாதிரி சாதனையை நிகழ்த்தும்போது தவறி விழுந்து உயிர்விட்டிருக்கிறார்கள்.

இப்படிப் பல இழப்புகள் தங்கள் குடும்பங்களில் ஏற்பட்டிருந்தாலும் தொடர்ந்து அதிலேயே ஈடுபட்டார்கள் நிக்கின் குடும்பத்தினர். அதற்குக் காரணமாக அவர்கள் சொல்வது, ‘சாதனை என்பதே மரணத்துக்கும், வாழ்வுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தானே. அதில் ஏதாவது ஒன்று தானே ஜெயிக்க முடியும். பல நேரங்களில் சாதனைகளைப் பரிசாக பெற்ற நாங்கள் சில நேரங்களில் மரணத்தைப் பரிசாகப் பெற்றிருக்கிறோம். இதனால் எங்களின் துணிச்சல் குறைந்துவிடவில்லை. எங்கள் குடும்ப உறுப்பினர்களின் மரணங்கள் எங்கள் குடும்பத்தை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை என்பதால்.

கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி அமெரிக்க – இந்தியப் பழங்குடியினர் வாழும் கரடுமுரடான கென்யான் பகுதியில் லிட்டில் கொலராடோ என்ற நதி ஓடுகிறது. லிட்டில் கொலராடோ ஒரு காட்டாறு. திடீர் வெள்ளப் பெருக்கும், திடீர் வறட்சியும் இதன் இயல்பு. அங்கு நிலவும் சீதோசன நிலையும் அப்படித்தான் இருக்கும். அதிக குளிர், அதிக வெயில் என்று எப்படி வேண்டுமானாலும் மாறும்.

1400 அடி அகலம் கொண்ட அந்த நதியின் கரையில் இருக்கும் இரண்டு மலைகளுக்கு இடையே 5 செ.மீ. அகலம் கொண்ட இரும்புக் கேபிளால், தலையில் இருந்து 1500 அடிக்கு மேல் உயரத்தில் கட்டி, மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசிக்கொண்டிருந்த நேரத்தில், இரண்டு கேமரா, ஒரு மைக், கையில் 20 கிலோ எடைகொண்ட பேலன்ஸ் போல் (Balance Pole), காலில் ஃபிலக்ஸிபில் லெதர் ஷு அணிந்து கம்பியின் மீது நடக்கத் தொடங்கினார் நிக்.

கம்பியின் மேல் நடக்க ஆரம்பித்தது முதல் 13 நிமிடங்களுக்கு ‘தேங்யூ ஜீஸஸ்” என்று கூறிக்கொண்டே நடந்தார். பிறகு தன் கையில் இருந்த மைக்கின் மூலம் தன்னுடைய உணர்வு எப்படி இருக்கிறது, காற்றின் வேகம் எப்படியுள்ளது என்று சொன்னபடி இருந்தவர், சிறிது நேரம் நடக்காமல் ஒரு காலை மடக்கி கம்பியின் மீது அமர்ந்து கொண்டார். காரணம் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் பேலன்ஸ் செய்ய கடினமாக இருப்பதாகக் கூறினார். சிறிது நேரத்தில் நடக்கத் தொடங்கி 27 நிமிடங்கள், 54 விநாடிகளில் நதியைக் கடந்தார்.

கம்பியில் இருந்து இறங்கியது நிலத்தை முத்தமிட்ட நிக் வாலெண்டா தனது கனவு நிறைவேறிவிட்டது. அடுத்த கனவான நியூயார்க்கில் உள்ள எம்பெயர் ஸ்டேர் பில்டிங்கிற்கும், கிறிஸ்லர் பில்டிங்கிற்கும் இடையே நடப்பது தான் என்று கூறி அதற்கான முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார். அவரது கனவுகள் நனவாக வாழ்த்துவோம்!.

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2013

உள்ளத்தோடு உள்ளம்
“விருந்தோம்பல்”
தன்னம்பிக்கை மேடை
சாம்பியன் உருவான கதை
நோபல்பெற்றுத்தந்த‘கடவுள் துகள்’
மரித்துப் போகும் வரை சாதனை “நிக் வாலெண்டா”
படிப்பது எப்படி?
மார்ஸ் மிஷன்
ரஸியா சுல்தான்
எப்படி ஜெயித்தார்கள்
நீங்கள்சாதனையாளரே!
உலகைமாற்றிய சிறுபொறி
உழைப்பில் ஆர்வம்! உயர்வில் ஆனந்தம்!!
மனோலயம்