Home » Articles » உலகைமாற்றிய சிறுபொறி

 
உலகைமாற்றிய சிறுபொறி


ஆதி வள்ளியப்பன்
Author:

உலகின் அடிப்படை அம்சங்களான ஐம்பூதங்களில் ஒன்று தீ. உலகின் ஆரம்பகாலக் கண்டுபிடிப்புகளில் வேறு எதையும் விட தீ கண்டுபிடிக்கப்பட்டதே மனிதர்கள் இனப்பெருக்கம் செய்யவும், உலகெங்கும் பரவவும் உதவியாக அமைந்தது.

மனிதன் பல புதிய பகுதிகளுக்கு இடம் பெயர்ந்த போது அந்த புதிய சூழலில் ஏற்பட்ட சவால்களை சமாளிக்கவும், அவற்றை எதிர்கொள்ளவும் உதவியாக இருந்தது தீ.

இயற்கையில் நெருப்புக்கு எடுத்துக்காட்டாக சூரியன் குறிப்பிடப்படுகிறது. அந்த சூரியன் தான் உலகவளத்துக்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது. இன்று சௌராஸ்டிரர்கள் சூரியனை கடவுளாக வணங்கும் பழக்கத்தை கொண்டுள்ளார்கள். முதன் முதலில் மனிதகுலம் தோன்றிய ஆப்பிரிக்காவில் உள்ள ஆஷ்லியன் பகுதியைச் சேர்ந்த யாரோ ஒருவர்அல்லது சில பேர் தான் 7,90,000 ஆண்டுகளுக்கு முன்னால் செய்துபார்த்த ஒரு பரி சோதனையின்  விளைவு வரலாற்றில் முதல் திருப்பு முனையானது.

அவரின் பரிசோதனையில் தான் நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அவரே தீயை உருவாக்கவும், அவற்றைப் பயன்படுத்தவும், கட்டுப்படுத்தவும் முதன்முதலில் முயற்சித்துள்ளார். தொடர்ந்து சிக்கிமுக்கிக் கற்களைக் கொண்டு தீ பொறியை உருவாக்க முயற்சித்தனர்  பலரும்.

தீப்பொறியை உருவாக்கும் போது ஏற்பட்ட அச்சத்தை மீறி தீபந்தங்களை ஏற்றியதன் மூலம் இரைகொல்லி விலங்குகளிடம் இருந்து தங்களையும், தங்களின் வாரிசுகளையும் மனித இனம் காப்பாற்றியது.

குளிர்காலங்களில் உயிர்வாழ்வதற்குத் தேவையான கதகதப்பை ஏற்படுத்துவதற்கு ஆதாரமாகவும் தீப்பொறி அமைந்தது. கூடுதலாகத் தாவரங்களைச்சுட்டு சாப்பிடும்பழக்கம், இறைச்சியைச்சுட்டு சாப்பிடும்பழக்கம் என்று மாறுபட்ட உணவு வகைகளையும், ஊட்டச்சத்து பற்றாக்குறையைத் தவிர்க்கவும் இந்தத் தீப்பொறி உதவியது.

தீப்பொறி கண்டறியப்பட்ட தன்விளைவாகவே நியாண்டர்தால் மனிதர்கள் 3,00,000 முதல் 4,00,000 ஆண்டுகளுக்கு முன்உலோகவியலை உருவாக்கினர் என்று வரலாறுகூறுகிறது. ஒருவேளை தீ

கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை எனில் மனிதகுலம் எந்தக்கருவிகளையும் உருவாக்கி இருக்க முடியாது. ஒரு பொருள் வேகமாக ஆக்சிஜனேற்றம் அடைவதே தீ என்ற அறிவியல் செயல்பாட்டில் இது வெப்பத்தை வெளியேற்றும் ஒரு வேதியியலாக பார்க்கப்படுகிறது.

ஒரு பொருள் எரியும்போது ஆக்சிஜனேற்றம் அடைவதால் அப்பொருளில் சேமிக்கப்பட்ட கரி மீண்டும் தன் பழைய நிலையை அடையும் என்ற அறிவியல் செயல்பட்டால் தான் கந்தகம் போன்ற வேதிப்பொருளைப் பிரிக்கமுடிந்தது. அதன் தொடர்ச்சியாக தீக்குச்சி தயாரிக்க முடிந்தது.இன்றைக்கு உலகம் பரபரப்பாக இயங்குவதற்குக் காரணம் மின்சாரமும்,எரிபொருளும் தான்.உணவு எரிக்கப்படாவிட்டால் உடலுக்கு ஆற்றல் கிடைக்காது. எனவே நெருப்பு மிகமுக்கிய பங்கு வகிக்கிறது நம் வாழ்வில்.

மேற்கண்டவாறு உலகில் மூலை முடுக்கெல்லாம் வெவ்வேறு வடிவங்களில் தீ உறைந்து கிடக்கிறது என்பதே அறிவியலின் கண்டுபிடிப்பு.

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2013

உள்ளத்தோடு உள்ளம்
“விருந்தோம்பல்”
தன்னம்பிக்கை மேடை
சாம்பியன் உருவான கதை
நோபல்பெற்றுத்தந்த‘கடவுள் துகள்’
மரித்துப் போகும் வரை சாதனை “நிக் வாலெண்டா”
படிப்பது எப்படி?
மார்ஸ் மிஷன்
ரஸியா சுல்தான்
எப்படி ஜெயித்தார்கள்
நீங்கள்சாதனையாளரே!
உலகைமாற்றிய சிறுபொறி
உழைப்பில் ஆர்வம்! உயர்வில் ஆனந்தம்!!
மனோலயம்