Home » 2013 » September (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    தீரன் சின்னமலை -மன்றாடியார்கள்!

    கொங்கு வேளிர் தலைவர்கட்கு மன்றாடியார் என்ற பட்டம் உண்டு நீதிபதிகளாகவும், கால்நடைகளின் காவலர்களாகவும் விளங்கிய வேளிர் தலைவர்கள் மன்றாடியார் எனப்பட்டனர். சிலருக்கு அரசரும் பட்டம் அளித்தனர்.

    1. ஏழுநூற்றுவன் மன்றாடியார் – கண்ணந்தை குலம்
    2. கொலுசேனை மன்றாடியார் – ஓதாள குலம்
    3. சர்க்கரை மன்றாடியார் – பயிர குலம் (சின்னமலை வம்சத்தார்)
    4. வேணாடுடைய மன்றாடியார் – பெரிய குலம்
    5. காங்கேய மன்றாடியார் – பொருள் தந்த குலம்
    6. பல்லவராய மன்றாடியார் – செங்கண்ண குலம்
    7. வாணவராய மன்றாடியார் – பவள குலம்
    8. உலகுடைய மன்றாடியார் – சாத்தந்தை குலம்
    9.கவறை மன்றாடியார் – எண்ணை குலம்
    10.வாழை மன்றாடியார் – பொன்ன குலம்
    11.தேவ மன்றாடியார் – குழாயர் குலம் முதலிய பல கொங்கு வேளாளக்கவுண்டர்கள் மன்றாடியார் பட்டம் பெற்றுள்ளனர்.

    சங்ககாலப் பழைய மரபினர் பழையன் கோட்டையில் இருந்து காங்கய நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்தனர். காங்கய நாட்டின் சிறப்பினை,
    “ஒடக்காண்பது மாநதி நீர்கள்
    உயரக்காண்பது வீதியெங்கும் தேர்கள்
    தேடக்காண்பது தான தர்மங்கள்
    செழிக்கக் காண்பது தேவத் தலங்கள்
    ஆடக் காண்பது அன்னக் கொடிகள்
    அதிரக் காண்பது முரசுத்துடிகள்
    பாடக் காண்பது கீதங்கள் யாரும்
    பகரும் காங்கய நாடெங்கள் நாடே””என்றும்
    “முத்துரத்னம் விளைவுள்ள நாடு
    முனிவர் வேள்வி வளங்கொண்ட நாடு
    சாத்திர சாலை மிகுந்துள்ள நாடு
    தடந்தோறும் தண்ணீர்ப் பந்தல் உள நாடு
    நித்திய மங்கள கலியாண நாடு
    நிறைந்த செல்வம் சிறந்துள்ளநாடு
    மெத்த வீரம் விசயம் புகழும்
    விளங்கும் காங்கய நாடெங்கள் நாடே””
    என்றும் இலக்கியங்கள் பாராட்டும். காங்கயம் காளைகள் உலகப் புகழ்பெற்றவை பயிரன்குலத்தில் வந்த உத்தமக் காமிண்டன் இம்மரபினில் பெரும் புகழ் பெற்றவர்.
    “காமத்துரோக எதிரியர் மிண்டன்
    தக்க சொட்டை முனைவலர்க்குக் கண்டன்
    தாய் முதுகில் கவிஞர்கள் ஏறிச்
    சவுக்கிலே அடிக்கப் பெறுத்துமே
    நாமிந்தப் புலவனுக்குத் தொண்டான
    நல்லதம்பிச் சருக்கரை உத்தமக்
    காமிண்ட மன்றாடி மன்னன் கீர்த்தி
    கதிக்கும் காங்கய நாடெங்கள் நாடே”
    என்று நல்லதம்பிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியாரைப் பற்றி இலக்கியங்கள் புகழ்ந்து பேசுகின்றன.

    To buy this book click below.

    theeranbuy now

    புதிய விடியல் -வெற்றி வாசல்

    எல்லாம் விதி என வீழ்ந்துவிடாதே
    எல்லாம் நேரம் என பாரம் சுமக்காதே

    Continue Reading »

    முன்னேற்றதுற்கு மூன்று சொற்கள் -நூறு பேர் வாழ்வுக்கு

             வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் வாய்ப்பது நல்லது. அது கிடைத்தற்கரிய பெருஞ்செல்வமாகும். நல்ல நண்பர்கள் என்பவர்கள் நமக்கும் அவர்கட்கும் வேறுபாடு இல்லாதவர்கள். உள்ளத்தால் உணர்வால், பழக்க வழக்கங்களால், பண்பால் ஒன்றுபடுபவர்கள். இரண்டு நண்பர்களில் ஒருவர் தவறு செய்தால் மற்றவர் அதைச் சுட்டிக்காட்டித் திருத்தும் தகுதி படைத்தவராக இருப்பவர்கள்.
    இத்தகைய நண்பர்கள் வாழ்நாளில் ஒருவர் அல்லது இருவர் கிடைத்தால்கூடப் போதுமானது. ஆனால், கிடைப்பது அரிது. கிடைத்தால் அப்படிக் கிடைத்தவர்களைப் போற்றிப் பாதுகாத்து, நம் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து வாழ்ந்தால், வாழ்க்கையில் ஒரு பிடிப்பு உண்டாகும். வாழ்வு சிறக்கும், வாழ்வு செழிக்கும். நமக்கும் பயன், நம்மால் நாட்டுக்கும் பயன்.
    நூறுபேர் : ஆனால், வாழ்க்கை என்பது ஒருவர் இருவரோடு முடிந்துவிடுவதில்லை. நாம் சமுதாயத்தோடு கலந்து வாழ்ந்தே ஆகவேண்டும். அதனால், வெற்றி தவழும் வாழ்க்கையை ஒருவர் வாழ வேண்டுமானால் அவருக்குப் பல்வேறு பிரிவுகளிலும் சில நண்பர்கள், சில முன்னோடிகள், சில ஆதரவாளர்கள், இவரது வளர்ச்சியில் மகிழ்ச்சி கொள்பவர்கள், பாதுகாப்பான உறவினர்கள் என்று பிரிவுக்கு ஒரு பத்துப்பேரை மொத்தமாக ஒரு நூறு பேரையாவது தேர்ந்துகொண்டு அவர்களின் தொடர்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். நெருக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். இது வாழ்க்கையில் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளவும், சோர்வு வராமல் காத்துக் கொள்ளவும், நாம் வழி தவறிச் செல்லாதிருக்கவும் பெரிதும் உதவும்.
    பத்துப் பிரிவுகள் எவை?
    1. ஞானிகள்
    நீங்கள் விரும்பும் புத்தர், இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்ற ஞானிகள், ஏசுநாதர், முகமது நபி போன்றஅறவாளர்கள் அல்லது இவர்கள் வழியில் இப்போது வாழ்ந்துகொண்டு இருக்கின்றவர்கள் # இவர்களில் ஒரு பத்து பேரைத் தேர்ந்து இவர்கள் கருத்துக்களை வாழ்க்கையில் பின்பற்றுதல் நன்மை தருவதாகும். இவர்கள் இன்று இல்லை என்றாலும் இவர்கள் என்றென்றும் கருத்துக்களால் நம்மோடு வாழ்கின்றவர்கள். நமக்கு வழிகாட்டுகின்றவர்கள்.
    2. அறிஞர்கள்
    நாட்டில் இன்றுள்ள அல்லது வாழ்ந்து மறைந்த அறிஞர்களில் குறைந்தது ஒரு பத்து பேரைத் தேர்ந்து அவர்களது நூல்கள், கருத்துக்களில் மனம் செலுத்துதல் பயனுள்ளதாகும். உலக அறிஞர்கள் வரிசையில், பொதுவாகவும் குறிப்பாகவும் யார் யார் எந்தத் தொழில் செய்கின்றார்களோ அந்தத் துறைஅறிஞர்களைப் பட்டியலிட்டு அவர்கள் வளர்ந்த முறை, வாழ்ந்த முறை, அவர்கள் வாழ்க்கை நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடம் இவற்றைஅறிந்து நாம் பின்பற்றலாம்.
    பொதுவாக அறிஞர்கள் என்றவகையில் சிந்திக்கத் தூண்டிய கிரேக்க அறிஞர் சாக்ரட்டீஸ், ரஷ்யப் பேரறிஞர் டால்ஸ்டாய், அமெரிக்கப் பேரறிஞர் எமர்சன், ஐரோப்பிய அறிஞர் ஜான் ரஷ்கின் இந்தியப் பேரறிஞர் காந்தியடிகள என்று ஒரு பத்து பேரைத் தேர்ந்து வரிசைப்படுத்திக்கொள்ளலாம்.
    3. ஒரே தொழில் செய்பவர்கள்
    மேலே குறிப்பிட்ட இரண்டு பிரிவைச் சார்ந்தவர்களும் உலக அளவிலானவர்கள் # நம் வாழ்க்கையை கருத்துக்
    களாலேயே உயர்த்தும் ஆற்றல் பெற்றவர்கள் # இத்தகைய வர்களின் கருத்து நெருக்கம் வெற்றிப்பாதையில் நாம் நடக்க பாதுகாப்பான அரணாக அமையும்.
    இனி குறிப்பிடுகின்றவர்கள் நடைமுறையில் நம்மோடு அன்றாடம் அல்லது எப்போதேனும் சந்திக்கக் கூடியவர்கள். இவர்களின் பட்டியல் நீளும் என்றாலும் தொழிலில் நமது வளர்ச்சிக்கு வழி காட்டியவர்கள் # துணை நிற்பவர்கள் # இவர்களில் நம் தேவைக்கு ஏற்ப வரையறைப்படுத்தி வரிசைப்படுத்திக் கொள்ளலாம்.
    தாம் செய்யும் தொழிலில் பெரிதும் முன்னேற்றம் விரும்புகின்றவர்கள் தம் பிரிவைப் பற்றி மட்டும் தனிக் கவனம் செலுத்தி இதில் துறைவாரியாகப் பிரித்து இதில் நூறு பேரைத் தேர்ந்துகொள்ளலாம்.
    4. உடன் தொழில் செய்பவர்கள்
    அரசுத் துறையாகட்டும், தனியார் துறையாகட்டும் நம்மோடு நம் தகுதிக்கு இணையாகக் தொழில் செய்பவர்கள் பலர் இருக்கக்கூடும். அவர்களில் சிலருக்கு மட்டும் நல்ல பெயர் இருக்கும். அவர்கள் தொழிலில் ஈடுபாடுடையவர்களாக (ஒய்ஸ்ர்ப்ஸ்ங்ம்ங்ய்ற்) உண்மையானவர்களாக (நண்ய்ஸ்ரீங்ழ்ங்), எல்லோரிடமும் நன்கு பழகும் பண்பு உள்ளவர்களாக (டப்ங்ஹள்ண்ய்ஞ் ம்ஹய்ய்ங்ழ்ள்) இருப்பார்கள். அத்தகையவர்களில் ஒரு பத்து பேரைத் தேர்ந்து கொள்வது வளர்ச்சிக்கு வழி கோலுவதாகும். நமக்கு இணையானவர்களில் நம்மிடம் உள்ள குறைநிறைகள் என்ன? அவர்களிடம் உள்ள நற்பண்புகள் என்ன என்பதை அறிந்து திருத்திக்கொள்ளவும் உதவியாக இருக்கும்.
    5. நம்மிடம் தொழில் செய்பவர்கள்
    சிலர் சொந்தத் தொழில் செய்யக்கூடும். சிலர் அரசு அலுவலகங்களில் பணியாற்றக்கூடும். அவர்கள் தலைமையின் கீழ் பலர் பணிபுரியலாம். அவர்கள் அனைவரையும் சமமாகக் கருதவேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. எனினும் அதில் நல்லவர்கள், நம்பிக்கையானவர்கள், தொழிலை மதிப்பவர்கள் # இப்படி ஒரு பத்து பேரைத் தேர்வு செய்து, அலுவலகம் நடத்துவதையே எளிமையாக்கிக் கொள்ளலாம். தொழில் வளர்ச்சிக்கு அவர்களுடைய ஆலோசனைகளைக் கேட்கலாம். இவ்வாறு செய்யும்போது எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் நமக்கு உதவியாக இருப்பார்கள்.
    6. உடன் பயின்றவர்கள்
    பள்ளியிலும் கல்லூரியிலும் தொழில் துறையிலும் உடன் பயின்றவர்கள் நூற்றுக் கணக்கில் இருப்பினும் நினைவில் நிறுத்திப்பார்த்தால், மிகச் சிலரே நம் வாழ்க்கை முழுதும் தொடர்புடையவர்களாக # நம் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருப்பவர்கள் நம் கண்முன் தென்படு வார்கள். அவர்களின் இளமை வாழ்க்கையிலிருந்து அவர்கள் படித்த விதம், வளர்ந்த விதம் இப்போது அடைந்திருக்கின்றஉயர்நிலை இவைகளை ஒப்பிட்டுப் பார்த்து நாம் பயனுள்ளவற்றைக் கடைப்பிடிக்கவும், வேண்டாதவற்றைத் தவிர்க்கவும் அவர்கள் வாழ்க்கையே ஒரு பாடமாக அமையும். நம் வாழ்க்கைப் பயணத்தில் பங்கு கொள்பவர்களை நாம் தொடர்ந்து போற்றுவது, நினைவு கூர்வது நம் வளர்ச்சியைச் செழுமைப்படுத்துவதற்கு உதவுவதாகும்.
    7. உறவினர்கள்
    பொதுவாகவே பல குடும்பங்களில் உறவினர்கள்தாம் பல்வேறு சிக்கல்களுக்குக் காரணமாய் இருப்பார்கள். அதனால் யார் யாரை எப்படி வைத்துக்கொள்ள வேண்டுமோ, அப்படி வைத்துக்கொண்டு நம்முடைய நடைமுறைகளுக்கு ஒத்துவருகின்றஒரு பத்துபேரை # பத்துக் குடும்பங்களை தேர்ந்து கொள்வது பெரிதும் நன்மை பயப்பதாகும். கொடுக்கல் வாங்கல் போன்றவற்றைக் கூட இந்த வரையறைக்குள் அடக்கிக் கொள்ளலாம். இவர்களின் துணைகொண்டு பல்வேறு காரியங்களைச் சிரமமின்றிச் செய்ய இயலும்.
    8. நமக்கு உதவி செய்பவர்கள்
    நன்றி மறப்பது கொடுமையான செயலாகும். அதனால் நமக்கு மட்டுமல்லாது நமது குடும்பத்திற்கும் நமது முன்னோர்களுக்கும் உதவிய குடும்பங்கள் ஒருவேளை இப்போது தாழ்ந்துபோய் இருக்கலாம். அவர்கள் யார்? யார்? சிறிய உதவியாய் இருந்தாலும் நமக்கு முடியாத காலத்தில் அவர்கள் செய்த சிறிய உதவியையும் மறக்காமல் நம்மால் முடிந்த அளவு உதவிட வேண்டும்; நன்றி பாராட்ட வேண்டும். இது நம் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும். நம் தகுதியை சமுதாயத்தில் பெரிதும் உயர்த்தும். அன்றியும் இது நமது கடமையும் கூட.
    9. நாம் உதவ வேண்டியவர்கள்
    வாழ்க்கை என்பது உண்பதும் உறங்குவதுமாக மட்டும் முடிந்து விடுவதில்லை. நாம் வளர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது பலர் உதவினார்கள். அதனால் நாம் இந்த அளவு உயர்ந்து இருக்கின்றோம். அதேபோல் வளரமுடியாமல் இருக்கின்றசிலருக்கு நாமும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவவேண்டும். இது ஒரு மனிதன் ஈரநெஞ்சோடு இருப்பதற்கு ஓர் எடுத்துக் காட்டாகும். இதைக் கேட்டுச் செய்தாலும், கேளாமல் நாமே முன்வந்து செய்தாலும் தகும்.
    10. நாம் தேடிப்போய் உதவ வேண்டியவர்கள்
    நாட்டுக்காக உழைத்தவர்கள், நாட்டுக்காகப் போராடித் துன்புற்றவர்கள், வாழ்ந்து கெட்டவர்கள், இந்தச் சமூகத்தில் வாழத் தெரியாத நல்லவர்கள் ஆகியோர்க்கு உதவுவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். இப்படிப்பட்டவர்கள் ஏராளமானவர் இருந்தாலும் நாம் தேர்ந்து தகுதி படைத்த சிலருக்காவது உதவுவது நமது கடமையாகும். அந்தந்த ஊரில் உள்ள விடுதலைப் போராட்டத் தியாகிகளின் குடும்பங்களுக்கு முன்னுரிமை கொடுத்து உதவலாம். இத்தகைய செயலில் நாம் ஈடுபடும்போது நாம் மனிதத் தன்மையால் உயர்ந்துபோகிறோம்.
    அறநிறுவனங்கள்
    இந்தத் தனி மனிதர்கள் தவிர அனாதை இல்லங்கள், சேவா நிலையங்கள், மகளிர் நலமன்றங்கள், உடல் ஊனமுற்ற, நோயற்றமக்களின் பாதுகாப்பு அமைப்புகள் ஆகிய அமைப்புகளுக்கு நாம் உதவலாம். தொடர்பு வைத்துக் கொள்ளலாம். இது உலக உயிர்களை நேசிக்கின்றபரந்த உள்ளம் வளர்வதற்கு வழிகோலுவதாகும்.
    மற்றவர்கள் வேண்டாதவர்கள் அல்ல
    இவர்கள் நூறு பேர் மட்டுமே நமக்கு வேண்டியவர்கள், மற்றவர்கள் எல்லாம் நமக்கு வேண்டாதவர்கள் என்று பொருள் அல்ல. உலகிலுள்ள 523 கோடி மக்களும் நமக்குச் சகோதரர்கள் என்றாலும் வாழ்க்கையில் ஒட்டி உறவாடுகின்றவர்களில் இந்த நூறுபேரும் முதன்மையானவர்கள் என்பது பொருள்.
    தொழிலுக்கு ஏற்ப இந்த எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்ளலாம். அரசியலில் ஈடுபடுகின்றவர்களுக்கு இந்த எண்ணிக்கை போதாது. அவர்கள் கூட இத்தகைய பிரிவுகளில் ஆட்களைத் தேர்ந்து, அவர்களை முதன்மையாகக்கொண்டு பணிபுரிவது நல்லது. வெற்றியை எளிமையாக்கும்.
    இவர்களைக் குறைந்தது ஆண்டுக்கு ஒரு முறையேனும் சந்திப்பது, அவர்கள் குடும்ப நலன்களை அறிந்து கொள்வது பெரிதும் நலம் பயக்கும். சந்திக்கவே முடியவில்லை என்றால்கூட பொங்கல், புத்தாண்டு போன்றசிறப்பு நாட்களில் வாழ்த்துக்கள் # கடிதங்கள் மூலம் நினைவு கூர்ந்துகொள்வது சிறப்புடைய தாகும். அவர்களது இன்ப துன்பங்களில் பங்குகொள்ளலாம்.
    இவைகள் எல்லாம் வளமான வாழ்விற்கு மட்டுமின்றி, வெற்றி நிறைந்த வாழ்க்கைக்கும் இன்றியமையாத செயல்பாடுகள் ஆகும். இத்தகைய போக்கு பழக்கம் நம்மை நிரந்தர வெற்றிக்கு அழைத்துச் செல்லும்.

    To buy this book click below……

    b16   buy now

    குழந்தை நலம் -குறைப்பிரசவ சிசு

    குழந்தை பிறக்கும் காலத்தின் வகைகள்

     குறைப்பிரசவம் – குழந்தை 37 வாரத்திற்கு குறைவாக பிறத்தல்
     நிறைமாத பிரசவம் – குழந்தை 37 – 40 வாரத்திற்குள் பிறத்தல்
     காலம் கடந்து குழந்தை பிறப்பது – குழந்தை 42 வாரத்திற்கு மேல் பிறத்தல்

    குறைப்பிரசவம் (அல்லது) முதிராநிலை பிரசவம்

    குறைப்பிரசவம் என்பது குழந்தை 37 வாரத்திற்குக் குறைவாகப் பிறப்பது.

    நிகழ்வுகள்

    அயல்நாடுகளில் 12 சதவீத குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கிறது. தற்போது குறைப்பிரசவத்தின் மூலம் குழந்தை பிறப்பது அதிகரித்து உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    காரணங்கள்

    • குறைந்த பொருளாதார நிலை
    • தாயின் வயது 16க்குக் குறைவாக இருப்பது அல்லது 35க்கு அதிகமாக இருப்பது.
    • தாயின் செயல்பாடு
    • குறுகிய கால அல்லது நாட்பட்ட தாய்வழி நோய்
    • பலமுறை கருத்தரித்தல்
    • முற்கால பிறப்பு விளைவுகள்

    குறைபிரசவத்தின் பிரச்சனைகள்

    • மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுவது
    • சுவாசம் நின்று விடுதல்
    • நுரையீரல் சம்பந்தமான நோய்கள்
    • நரம்பியல் தொந்தரவுகள்
    • இதய நோய்கள் (இரத்த அளவு குறைவு, இதயச் செயலிழப்பு)
    • ஊட்டச்சத்து (உணவின் அளவு மற்றும் ஊட்டும் முறையில் மாற்றம் ஏற்படுதல்)
    • இரைப்பை மற்றும் குடல் சம்பந்தபட்ட நோய்கள் (குடல் சுழற்சி)
    • வளர்சிதை மாற்றக் குறைபாடு
    • சிறுநீரகக் கோளாறு (வளர்ச்சி அடையாத சிறுநீரகம்)
    • உடல் வெப்பநிலையில் மாற்றம் (அதிக உடல் உஷ்ணம், உடல் வெப்பநிலை குறைவு)
    • நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது.
    • கண் பார்வைக் குறைபாடு (விழித்திரையில் மாற்றம்)

    குறைப்பிரசவ குழந்தைகளைக் கையாளும்முறை:

    பிறந்த சில மணி நேரத்திற்குள் கையாளுமுறை:

    பிரசவம்

    பிரசவ அறையில் பயிற்சி பெற்ற செவிலிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் அதற்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் தயார்நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    சுவாசம் மற்றும் நிலைபேறுடைமை

    குறைப்பிரசவ குழந்தைகளைக் கவனிப்பதற்குப் பயிற்சி பெற்ற பணியாளர்கள் தேவை. உடல் வெப்பநிலையைப் பராமரிக்க வேண்டும். தேவைக்கேற்ப பிராண வாயுவைச் செலுத்த வேண்டும்.

    சிசுவைக் கையாளுமுறை

    ண்) உடல் வெப்பநிலையைச் சீரான முறையில் வைத்தல்

    குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையின் உடல் வெப்பநிலை சீரான முறையில் வைத்துக் கொள்ள குழந்தையை நன்றாகப் போர்த்தி வெப்பமூட்டியில் வைக்க வேண்டும்.

    பிராணவாயு சிகிச்சை மற்றும் காற்றோட்டம்

    திரவ மற்றும் எலக்ரோலைட் சிகிச்சை

    குறைப்பிரசவக் குழந்தைகளுக்கு அதிக அளவில் உடலின் நீர்ச்சத்து குறைய வாய்ப்பு உள்ளது. நீர்ச்சத்து குறைவதைத் தடுக்க வேண்டும்.

     ஊட்டச்சத்து

    குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் தாய்ப்பாலை உறிஞ்சவும், விழுங்கவும் மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்குக் குழாய் மூலம் உணவு அளிக்க வேண்டும். குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மிகவும் முக்கியமானது.

     இரத்தத்தில் மஞ்சள்காமாலையின் அளவு அதிகரித்தல்

    குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இரத்தத்தில் மஞ்சள் காமாலையின் அளவு அதிகமாக காணப்படும். அவ்வாறு அதிகரிக்கும் பட்சத்தில் குழந்தைகளை ஒளிக்கதிர்களில் (டட்ர்ற்ர்ற்ட்ங்ழ்ஹல்ஹ்) வைக்க வேண்டும்.

    தடுப்பூசி

    தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், இரணஜன்னி தடுப்பூசிகளைக் குழந்தையின் வயதுக்கு ஏற்பப் போடப்படும். ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்குப் போடுவதில்லை.

     குறைமாதக் குழந்தைகளை மற்ற குழந்தைகளிடமிருந்து மருத்துவமனையில் தனிமைப்படுத்துதல்

    குறைமாத குழந்தைகளை மற்ற குழந்தைகளிடமிருந்து தனிமைப்படுத்துவதால் குழந்தையின் சிகிச்சை பயனுள்ளதாகவும் மற்றும் குழந்தையை தொற்றும் நோயிலிருந்தும் பாதுகாக்கலாம்.

    ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து

    ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து குறைப்பிரசவ (26 – 28 வாரத்திற்குள் பிறந்த) குழந்தைகளுக்குப் போடப்பட மாட்டாது. 37 வாரத்திற்கு மேல் பிறந்த குழந்தைகளுக்கு 6 – வாரத்திற்கு மேல் இந்த தடுப்பூசியைப் போடலாம்.

    குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளின் நீண்டகால பிரச்சனைகள்

    குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிக அளவில் நோய் வருவதற்கும், இறப்பு சதவீதம் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

    வளர்ச்சி குறைபாடு

    • அதிக அளவில் உடல் ஊனமாகுதல்
    • பெருமூளைப் பிறழ்ச்சி
    • உணர்ச்சி சேதம்.

    விழித்திரை வளர்ச்சி அடையாதிருத்தல்

    வளர்ச்சி குறைவு

    பிறவிக் குறைபாடு

    To buy this book click below ….

    kl   buy now

    இடை குறைப்பு ரகசியங்கள் -எடை குறைப்பு மாயைகள்

                உள்ளம் போல் உடலையும் அழகாக வைத்துக் கொள்ள விருப்பப்படும் இனிய நண்பர்களே! உடல் எடை குறைக்கும் இரகசியங்களை அறிய ஆசையா? கொஞ்சம் பொறுங்கள், இந்த இரகசியங்கள் எல்லாம் பத்தோடு பதினொன்றாக சொல்லப்படுபவையல்ல. சுயமாக சரியான உடல் எடையை இருபது வருடமாக வைத்திருந்த சொந்த அனுப அறிவாலும், அடுத்தவர்கள், உடல் எடை அதிகரிப்பால் படும்பாட்டின் உணர்வுபூர்வ புரிதலாலும், கடந்த பத்து வருடங்களாக மற்றவர்களுக்கு அளித்த ஆலோசனைகளின் பயன் மற்றும் பாதிப்புகளின் வெளிப்பாடும் கலந்த வாழ்வியல் இரகசியங்கள் மற்றும் ஆழ்ந்த ஞானத்தில் உணர்ந்தது ஆகியவற்றை உள்ளடக்கியதாகும் இந்த இரகசியங்கள். ஆக, இந்த நுட்பங்களைப் பயன்படுத்தினால் நிச்சையமான பலன்களை அடைய முடியும். இந்த இரகசியங்களை இரண்டு விதமாக நாம் பார்க்கப் போகிறோம். ஒன்று, எப்படியெல்லாம் எடை குறைக்க முடியாது அல்லது எடை குறைக்கக் கூடாது என்ற இரகசியங்கள். மற்றொன்று, உண்மையாக வேலைக்காகும் எடை குறைப்பு இரகசியங்கள். முதலில், நாம் எப்படியெல்லாம் எடையை குறைக்க முடியாது அல்லது எடையை குறைக்கக் கூடாது என்று பார்ப்போம். ஆக, முதலில் எடை குறைப்பு மாயையில் இருந்து விடுபட்டால்தான் உண்மையான எடை குறைப்பு இரகசியங்களை புரிந்து உண்ர்ந்து பயன் படுத்திக்கொள்ள முடியும். ஆகவே, எடை குறைப்பு பொய்களை இன்று பார்த்து விடுவோம்.
    1. நடை மற்றும் உடற்பயிற்சியால் உண்மையில் எடை குறைக்க முடியாது: ஒரு ஒல்லியானவரையும் ஒரு குண்டானவரையும் ஓடவிட்டால் யார் ஜெயிப்பார்கள்?. நிச்சயமாக ஒல்லியானவர்தானே?. இதற்கு காரணம், ஒல்லியானவரிடம் கழிவு குறைவு, அதனால் சக்தி அதிகம் இருக்கும். அதுவே, குண்டானவரிடம் சுமை (எடை) அதிகம், கழிவும் அதிகம், அதனால் சக்தி குறைவு. குண்டானவர்க்கு பத்திருபது கிலோ சுமையை கட்டிவிட்டதுபோல் அவரின் உடல் சுமை இருக்க, ஒல்லியானவர்க்கு சுமை எதுவும் இல்லாமல் ஓடுவது போல் அல்லவா இருக்கிறது. இந்த பந்தயம் நியாயம் இல்லைதானே? நண்பர்களே! குண்டானவர் அதிக உடல் எடையை வைத்துக்கொண்டு எவ்வளவுதான் நடந்தாலும், ஓடினாலும் அதற்குக் கெட்டக் கொழுப்பு சக்தியளிக்க முடியாது. ஆக, கொழுப்பு அப்படியே இருக்க நடை பயிற்சிக்கு சதையும் எலும்புதான் கரையும். இது தேவையா?
    2. அதிரடியாக எடை குறைக்கக் கூடாது: இன்னும் சில் அமைப்புகள் உடல் எடையைக் குறைக்க வயிற்று பெல்ட் அல்லது எந்திர உடற்பயிற்சி கருவிகளை பயன்படுத்த பரிந்துரைக்கின்றன. இங்கேயும் அதிரடியாக கரைவது கெட்டக் கொழுப்பல்ல, சதையும் எலும்பும்தான். அப்படியே அதிரடியாக கெட்டக் கொழுப்பு கரைந்தாலும், அவையாவும் சிறுநீரகங்களை பதம்பார்க்கும் விதமாகவே அமையும். நண்பர்களே! உடற் கழிவுகளை எப்பொழுதும் படிப்படியாகத்தான் சிறு நீரகங்கள் தாங்கும் விதமாக வெளியேற்ற வேண்டும்.
    3. சத்தும் சக்தியும் இல்லாமல் எடை குறைப்பு கூடாது: இயற்கை மருத்துவ முறைகளில் எடை குறைப்பை மூலிகை மற்றும் பழச்சாறுகளைக் கொண்டு குறைக்க வழி செய்து, பிற்பாடு சத்துள்ள பயறு, பாதாம் பிஸ்தா போன்ற பருப்புகள் முதலியவற்றைக் கொண்டு உடலைத் தேற்ற முயற்சிக்கின்றன. இதில் இரண்டு பிரச்சனைகள் உள்ளன. ஒன்று, முற்றிலுமாக ஓய்வெடுத்து எடை குறைக்க வேண்டும். இன்னொன்று, எடை குறைப்பில் உடல் மிகவும் பலஹீனப்பட்டுவிடுவதால் பிற்பாடு உடலை தேற்ற அதிக பணம் செலவு செய்ய வேண்டியதிருக்கும்.
    4. பட்டினி கிடந்தெல்லாம் எடை குறைத்துவிட முடியாது: கெட்டக் கொழுப்பை உடலில் வைத்துக் கொண்டு எவ்வளவுதான் ஓய்வாக பட்டினி கிடந்தாலும் உள்ளுறுபுகளின் செயலாக்கத்திற்கு சக்தியளிக்க கெட்டக் கொழுப்பால் முடியாது ஆகையால், சதை மற்றும் எலும்புதான் கரையும். இன்னும் சொல்லப் போனால், இவர்கள் விரதம் இருப்பது கூட கடினமாகவே இருக்கும்.
    5. கொழுப்பு நீக்கும் அறுவை சிகிச்சை மூலமெல்லாம் எடை குறைக்க முடியாது: இன்னும் சிலர், கெட்டக் கொழுப்பு அதிகம் தேங்கும் போது அறுவை சிகிச்சையை தேர்ந்தெடுக்கின்றனர். இவர்கள் ஒவ்வொரு முறையும் அப்படி அறுவை சிகிச்சைதான் மேற்கொள்ள வேண்டியிருக்குமே தவிர, இவர்கள் கெட்டக் கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்ளும் வழிக்கு வராத வரை தீர்வு என்றுமே இல்லை. இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். இவர்கள் இப்படி அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்கம் செய்வதால் கெட்டக் கொழுப்புத் தன்மை உடல் முழுவதும் பரவ காரணமாகிறது. ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு நோய்த் தொற்றை நீக்க (உதாரணமாக புற்று நோய்) அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது, அந்நோய் உடல் முழுவதும் பரவ அறுவை சிகிச்சையே காரணமாகிவிடும். இத்தோடு இன்னொன்றையும் சொல்ல வேண்டும். அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பை நீக்கும் போது கெட்டக் கொழுப்போடு நல்லக் கொழுப்பு, புரதம் மற்றும் தாதுச் சத்துக்களையும் சேர்த்துதான் நீக்கப்படுவதால் உடல் பலவீணப்பட்டு விடுகிறது.
    6. பசியை அடக்கும் மருந்துகள் மூலம் எடை குறைக்கக் கூடாது: உடல் எடை குறைக்கச் சில மருத்துவ நண்பர்கள் இப்படி முடிவு செய்கிறார்கள். பசியை குறைத்து விட்டால் சாப்பிடமாட்டார், ஆகையால் உடல் பருமனாகாது என்று நம்புகிறார்கள். இதில் மூன்று அபத்தங்கள் அடங்கியிருக்கின்றன. ஒன்று, சக்தியளிக்க முடியாத கெட்டக் கொழுப்புச் சுமையால் சக்தியிழந்திருக்கும் பருமன் நபர்களுக்கு இன்னொரு சாபமாக பசியின்மையையும் பரிசாக கொடுத்தல் நிகழ்கிறது. இரண்டாவதாக, உடல் உழைப்புக்கும், உள்ளுறுப்பு செயல்பாட்டிற்கும் தேவையான சக்திக்காக சதை மற்றும் எலும்பு கரைகின்றன. மூன்றாவதாக, உயிர் வாழ்தலுக்கு ஆதாரமாக உள்ள ஜீரணத்தின் மீது கைவைக்கும் மகாபாதகச் செயலை செய்கிறார்கள். நண்பர்களே! இப்படியெல்லாம் பெயருக்கு எடை குறைத்து ஆயுளைக் குறைத்துக் கொள்ள வேண்டுமா?
    7. கொழுப்பு சாப்பிடுவதை நிறுத்தியெல்லாம் எடை குறைப்பது தவறு: தட்ப வெட்ப சூழலுக்கேற்பவும், நோய் எதிர்ப்புக்காகவும் நமது தோல் சுருங்கி விரிந்து செயல்பட நல்லக் கொழுப்பு வேண்டும். அதேபோல், இரத்தக் குழாய் சுருங்கி விரியவும், நரம்பு சூட்டிகைக்குச் சுருங்கி விரியவும் நல்லக் கொழுப்பு அவசியம் வேண்டும். நல்லக் கொழுப்புச் சேமிப்பானது அவசரத் தேவைக்கு (விரதம் மற்றும் சாப்பிட முடியாத சூழலில்) உதவியாக இருக்கும். என் இனிய நண்பர்களே! உங்களுக்குக் கொழுப்பை தவிர்க்கவோ அல்லது பகுதியாக தவிர்க்கவோ (உதாரணமாக, முட்டையின் மஞ்சள் கருவை தவிர்த்தல்) சொல்லும் எவரும் உங்களுக்குக் குழி தோண்டுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
    8. தண்ணீர் அதிகம் குடித்தெல்லாம் எடை குறைக்க முடியாது: அளவுக்கதிகமாக உணவு எடுத்துக் கொண்டால் இரைப்பை, மண்ணீரல் மற்றும் கல்லீரல் சோர்வை ஏற்படுத்திவிடும். அதேபோல், அளவுக்கதிகமாக தண்ணீர் குடிப்பதும், சிறுநீரகங்களை சோர்வடையச் செய்யும். தண்ணீர் குடித்து எடையைக் குறைக்கிறேன் என்று, சிறுநீரகங்களைக் கெடுத்து, துர்நீர் கோற்று உடல் வீங்க வேண்டுமா?
    9. ஹார்மோன் சிகிச்சையால் எடை குறைப்பு: நண்பர்களே! ஜீரணத்தின் மீது கைவைப்பது எப்படியோ, அதேபோல், ஹாமோன்களுடன் விளையாடுவதும் மகாபாதகச் செயலே. ஹார்மோன்களை வெளியில் இருந்து கொடுக்கும் போது சரியான அளவில் சரியான நேரத்தில் கொடுக்க முடியாது. இதனால் ஹார்மோன் சமன்பாட்டை குலைத்து மனநிம்மதியோடு விளையாடும் நிலை ஏற்படுகிறது.
    சரி, அப்படியானால், உண்மையான எடை குறைப்பு வழிகள்தான் என்ன என்று கேட்பவர்கள் அடுத்த அத்தியாயத்தைப் பாருங்கள்.
    உடல் பருமன் மற்றும் எடை குறைப்பு மாயைகளில் சிகாமல் இருக்கத் தேவை விழிப்புணர்வு!
    உடலைக் குப்பையாக்காமல், மூளையை வளமாக்குவோம்! விழிப்புணர்வாய் வாழ்வோம்!

    To buy this book click below……

    b4buy now

    சித்திரகனி-வடிவு

            அவள் சொன்னது பொதுவாக உண்மைதான். ஆனால் நம் வீட்டில் அப்படி இல்லையே. சில தாய்மார்கள் தங்கள் வயதையும் மறந்து அரையும் குறையுமாக உடுத்திக் கொண்டு ஊர்வலம் செல்வதைப் பார்த்து நானே மிகவும் வேதனைப் பட்டு இருக்கின்றேன்.
    என்னை நான் எவ்வளவு காத்துக் கொண்டேனோ அந்த அளவு என் பெண்ணைக் காக்க முடியாமல் போய்விட்டதே!
    சிறியவளாக இருக்கும் வரை அவளுடைய ஒவ்வொரு செயலும் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஆனால் பருவமடைந்த பிறகும் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டால்?
    எவ்வளவு பெரியவர்கள் வந்தாலும் அவள் அந்த ஊஞ்சலைவிட்டு எழவே மாட்டாள். வந்தவர்களோடு அன்பாகப் பேசமாட்டாள். வந்தவர்கள் போன பிறகு கேட்டால்? சட்டையே செய்ய மாட்டாள். கண்டவர்களோடு எல்லாம் பேச எனக்கு விருப்பம் இல்லை என்பாள். சீ, சீ, நம் வயிற்றில் இப்படியுமா ஒரு குழந்தை பிறக்க வேண்டும்?
    இப்படிக் குழம்பிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் தான் புனிதா வேலைக்குச் சேர்ந்தாள். அவள் வந்து சேர்ந்தும் ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிவிட்டது.
    எவ்வளவு அடக்கமான பெண்! நெற்றித் திலகமும், நீண்ட சடையும் அவள் அழகை மேலும் அதிகப்படுத்தின. அவளது அமைதியான பார்வையால் என்னைக் கவர்ந்து கொண்டாள்.
    வீட்டில் என்ன வருகிறது, என்ன போகிறது, என்பதே புனிதா வந்த பிறகுதான் தெரிந்தது. அதற்குமுன் அவரவர்கள் விருப்பப்படி நடந்துபோக, இருப்பதுதான் மிச்சமாக இருந்தது.
    அன்று கல்லூரிக் கட்டணம் கட்டப் பணம் வேண்டும் என்று என் மகள் கேட்டாள். ‘புனிதாவிடம் கேட்டு வாங்கிக் கொள்’ என்றேன்.
    ‘நான் ஒன்றும் வேலைக்காரியிடம் கைநீட்டிக்கொண்டு நிற்கமாட்டேன்’ என்றால் வெறுப்பாக.
    எனக்குக் கோபம் வந்துவிட்டது.
    ‘யாரடி வேலைக்காரி? அவள் ஒன்று வீடுபெருக்க வந்தவள் அல்ல, அவள் உன்னைவிட அதிகம் படித்தவள். அவள் தான் இப்போது இந்த வீட்டின் வரவுசெலவுக் கணக்கையே பார்க்கிறாள். இப்போதைக்கு அவள்தான் இந்த வீட்டுக்காரி. அவளிடம் கேட்டால் உன் அந்தஸ்துக்கு ஒன்றும் குறைவு வந்து விடாது’ என்றேன்.
    ‘அந்தஸ்து எல்லாவற்றிலும் பார்க்கணும், இதில் மட்டும் பார்த்தால் போதுமா? என்று மேலும் என் வாய் முணுமுணுத்ததும் அவள் காதில் விழுந்திருக்கும்.
    அவளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது.
    சத்தம் கேட்டு, மாடியில் இருந்து கீழே வந்தார்.
    மகளைச் சமாதானப்படுத்திப் பணத்தைக் கொடுத்து விட்டுப் போனார்.
    “நீங்கள் கொடுக்கின்ற ‘செல்லம்’ அவளை இன்னும் குட்டிச் சுவராக்கிவிடும்” என்றேன்.
    ‘என்ன வடிவு? காலையில் ஏன் இப்படிக் கோபமாக இருக்கிறாய்?’ என்றார்.
    சமையல் அறை வரை வந்து ‘கொஞ்சம் காபி கொடு’ என்று என் கோபத்தை மாற்ற, வலியக் கேட்டு வாங்கிக் குடித்துவிட்டு, ‘கோபப்படாதேடா கண்ணு’ என்றார் மெதுவாக.
    அவர் மில்லுக்குச் சென்றார். மகளும் கல்லூரிக்குச் சென்றுவிட்டாள்.
    புனிதாவை அழைத்து ஒரு பெரிய பீடிகை போட்டுச் செய்தியை அரையும் குறையுமாகச் சொன்னேன். ‘இதை வெளியில் சொன்னால் அவள் வாழ்க்கையே போய்விடும் அம்மா’ என்றேன்.
    “அவர் யார் என்று கண்டுபிடிப்பதுதான் இனிச் செய்ய வேண்டிய முதல் வேலை” என்றாள் புனிதா.
    “தகுதி இல்லாதவனாக இருந்தால் தேடிக் கண்டு பிடிப்பதால் என்ன பயன்?” என்றேன் நான்.
    என் கோபம் அழுகையாக மாறியது. “இப்படிச் செய்துவிட்டாளே” என்று தலையில் அடித்துக் கொண்டேன். புனிதா தடுத்தாள்.
    “காலைச் சிற்றுண்டியே சாப்பிடவில்லை, சாப்பிடுங்கள்” என்று வற்புறுத்திச் சாப்பிட வைத்தாள்.
    இப்படி ஒரு நாளாவது அகிலா என்னிடம் அன்பாக நடந்து கொண்டது உண்டா? என்ன பெண்? தான்
    செய்தது மாபெரும் தவறு என்று இன்னும் உணராமல் இருக்கிறாளே!
    வசதி படைத்த பெண்கள் என்றால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதுபோல் அல்லவா ஆகிவிட்டது.
    இதுவே சாதாரணக் குடும்பத்தில் நடந்திருந்தால்? ஊரே கூடி அமர்க்களப் பட்டிருக்கும். டாக்டர் வந்துதான் பார்த்துவிட்டுச் சென்றிருக்க முடியுமா?
    வசதியாக இருந்துவிட்டால் எத்தனை பெரிய தவறாக இருந்தாலும் மூடி மறைத்துவிட முடிகிறது என்பது எவ்வளவு பெரிய உண்மை!
    ஒரு நாள் மதியம் எதிர்பாராத வகையில் விருந்தினர் வந்ததால் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அகிலாவுக்கு மதிய உணவு அனுப்பி இருந்தேன். என் கார் டிரைவர் எங்கே கேட்டுக்கொண்டு போய்விட்டதால், அவருடைய டிரைவரையும் புனிதாவையும் அனுப்பினேன். அவள் இன்று கல்லூரிக்கே வரவில்லை என்ற செய்தி கேட்டுத் திடுக்கிட்டேன்.
    யாரோ சிநேகிதி வீட்டுக்குப் போயிந்தாளாம். கல்லூரிக்கு மட்டம் போடும் அளவிற்கு என்ன நட்பு வேண்டிக்கிடக்கிறது? கையும் களவுமாகப் பிடிக்கின்ற வரை அவள் சொல்வதையெல்லாம் நம்பத்தானே ஆக வேண்டும் என்று பொறுமையாக இருந்துவிட்டேன்.
    நல்லவேளை, அவள் கல்லூரியில் இல்லை என்ற செய்தியைப் புனிதா டிரைவருக்குச் சொல்லவில்லை. ஒரு ஆள் தேவை என்று பட்டது. அதற்குப் பிறகு தான் புனிதாவை ‘டிரைவிங்’ கற்றுக்கொள்ளச் சொன்னேன்.
    “அப்படிச் சொல்லாதே புனிதா! யார் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பது எப்போதும் நிச்சயமில்லை. இது
    ஒரு காலத்தில் உனக்கு நன்மையாகவும் இருக்கக்கூடும்” என்றேன்.
    “இப்போது இதுதான் உனக்குக் கொடுத்த வேலை என்று செய். உன்னை வைத்துத்தான் அவளைச் சீர்படுத்த வேண்டும்” என்று சொன்னேன்.
    ஒரு மாதத்திலேயே மிக நன்றாகக் கார் ஓட்டக்கற்றுக் கொண்டாள். அறிவுக் கூர்மை உள்ளவர்களுக்கு எதுவும் எளிமையாகப் பிடிபடுகின்றது? அவள் பெயரில் லைசென்ஸ் எடுக்கவும் ஏற்பாடு செய்தேன்.

    To buy this book click below….

    b11buy now

    சுக பிரசவ சூச்சமங்கள் -இரத்தம் சதை மற்றும் எலும்பு

               உலக சுகாதார நிறுவனம் (WHO), 2007ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் படி இந்தியாவில், 90 விழுக்காடு பெண்கள் கருவுற்றிருக்கும் போது இரத்த சோகையால் பாதிக்கப்படுவதாகக் கூறுகிறது. இது உண்மையில் அதிர்ச்சித் தரக்கூடிய செய்திதான். இதில் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அனேக பெண்கள் ஏதோ இருக்கிறோம் என்றுதான் வாழ்கிறார்கள். இவர்களின் இரத்தம் சராசரி வாழ்க்கையை ஒப்பேற்ற உதவுகிறது. அதை மீறி கருவுறுதல் காலத்தில் இவர்களின் சாயம் வெளுத்து விடுகிறது. அப்படி என்னதான் கருவுருதலில் நிகழ்கிறது?. இது புரிய வேண்டுமானால், ஒரு உதாரணம் தேவைப்படுகிறது. ஒரு தென்னை மரமானது அதன் உச்சபட்ச உயரத்தை அடையும் வரை வீரியமாக வளர்ந்து, அதன் பின்னர்தான் நின்று நிதானமாக குலைகுலையாக காய்த்து தள்ளுகிறது. ஆக, தென்னையின் உச்ச உயரம் எட்டும் வரை வளர்ச்சி தடைபடுவதில்லை. அது போலத்தான், கருப்பையில் வளரும் கருவானது தாயின் சத்து மற்றும் சக்தி நிலைகள் எப்படியிருந்தாலும், கரு வளர்ச்சியானது தடை படாமல் வளரத்தான் செய்கிறது. அப்போது தாயின் இரத்தம் குறை நிலையில் இருந்தாலும், கருவின் வளர்ச்சிப் பசிக்கு ஈடு கொடுக்க தாயானவள், தன் இரத்தத்தையும் சேர்த்து இழக்க நேரிடுகிறது. இதன் பொருட்டுதான் பேருகாலத்து இரத்தச் சோகையும் ஏற்படுகிறது.
    ஆக, இது இத்தோடு நில்லாமல், கருவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்குச் செல்லச் செல்ல, தாயின் எலும்பும் சதையும் கரைக்கப்படுகின்றன. இதன் பயனாய், தாயானவள் சத்தாகச் சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும், வளரும் சிசுவானது தன்னால் முடிந்த அளவுக்கு தாயின் சத்தையும் சக்தியையும் உறிஞ்சி, வளர்ந்து விடுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், தாய் சக்தியிழப்பதும், உடல் கரைவதும் வெளிப்படையாகத் தெரிவதில்லை. பிற்பாடு, குழந்தை பிறந்த பின்புதான் தெரிய வருகிறது. சரி, தாய்மார்களே! நாம், சாதரணமாக உடல் கரைந்தால், உடல் வலியும், உயிர்ச் சக்தி குறைவும் காட்டிக் கொடுக்குமல்லவா?. அப்படியிருக்கும் போது, கருவுற்ற நிலையில், தாயானவள் கரைவது ஏன் தெரிவதில்லை?. இதற்குக் காரணம் இருக்கிறது. அதன் விளக்கம் அடுத்த பத்தியில்.
    தாய் கருவுற்றிருக்கும் போது, அவளுக்குள் இரண்டு உயிர்கள் இயங்குகின்றன. ஒன்று, தாயின் உயிர். மற்றது வளரும் சிசுவின் உயிர். இதில் தாயின் உயிரைவிட குருத்துத் தன்மை (Juvenile) உள்ள சிசுவின் உயிர் வீரியமாக இருப்பதால், தாயானவள், இன்னும் வீரியமாக இருப்பதாக உணர்வாள். ஆக, இரண்டு உயிரின் தெம்பில் தான் நல்லபடியாகத்தான் இருப்பதாக நினைப்பாள். இந்தச் சூழலில், சிசு வளர்ச்சிக்காக தாயின் எலும்பும் சதையும் கரையும் போது உடல் பலஹீணம் வெளித் தெரிவதில்லை. பிற்பாடு குழந்தை தனி, தாய் தனி என்று பிரசவத்தால் பிரிந்த பின்னர்தான் தன் நிஜ பலம் மற்றும் பலஹீணம் புரிய வரும். அப்போது இருக்கும் தனித்த தாயின் உயிரானது, உடலின் நிஜத் தன்மையால் வலியையும், பாதிப்பையும் உணர்ந்து வெளிப்படுத்துகிறது. ஆக, அனேக தாய்மார்கள், பிரசவ காலத்தில் ஏற்படும் பாதிப்பை உணரத் தவறி, பின்னர் பிரசவத்திற்குப் பின் அதிகமாக பாதித்திருப்பதை தெரிந்து கொண்டு செய்வது தெரியாமல் திண்டாடுகின்றனர். இந்நிலையினைத் தவிர்க்க வேண்டுமாயின், தாயானவள் அடிப்படையில் சில ஆரோக்கிய முறைகளை கையாள வேண்டும். அது பற்றி இனி பார்ப்போம்.
    1. இரத்த விருத்தி: பொதுவாக, பெண்களுக்கு இரத்தச் சிவப்பு அணுக்களின் (Haemoglobin) 14 கிராம்/ டெசிலிட்டர் என்ற அளவில் இருக்க வேண்டும். இதன் அளவு 13 கிராம்/டெசிலிட்டர் என்ற அளவில் இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், நம் இந்தியப் பெண்களுக்கு இதன் அளவானது சராசரியாக, 11 முதல் 12 அளவுகளில்தான் இருக்கிறது. இந்த அளவுகளை வைத்துக் கொண்டுதான் இவர்கள், மாதவிடாயின் இரத்த இழப்புகளையும் சமாளித்தாக வேண்டும். இவ்வித பெண்கள் தாங்கள் நன்றாகத்தான் இருப்பதாக சொல்லிக் கொள்வார்கள். ஆனால், ஒன்று அல்லது இரண்டு பிரசவங்களில் இவர்களின் சிவப்புச் சாயம் வெளுத்து இரத்தச் சோகையாகிவிடுவார்கள். இதன் பிறகு இரத்தச் சிவப்பு அணுக்களின் அளவுகள் 8 முதல் 10 வரை வைத்துக் கொண்டு வாழ்க்கையை நகர்த்தவும் ஓட்டவும் தான் முடியும், வாழ்க்கையை வாழ முடியாது. வாழ்க்கையை வாழ வேண்டுமாயின், சக்தியும் சத்தும் அவசியம் வேண்டும். இவர்கள் எல்லா அத்தியாவசிய அமினோ அமிலங்களைக் கொண்ட சமச்சீர் புரதமும் (Balanced and Complete Protein), இயற்கையான இரும்புச் சத்தை (Iron) போலேட் உருவில் (Folate Form) எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால், ஹீமோகுலோபினில் (Haemoglobin) உள்ள குலோபின் (Globin) புரதமும், இரும்புக் கூறும் (Haem) விரைவாக உருவாகி இரத்தச் சோகையில் இருந்து மீட்டெடுக்க உதவும்.
    2. உடல் வலிமை: நம் இந்தியப் பெண்கள், இன்றைய நிலையில் மூட்டு வலியாலும், எலும்புருக்கி நோயாலும் அதிகம் பாதிப்படைந்த நிலையில் இருக்கிறார்கள். மாதாந்திர இரத்த இழப்போடு, கால்சிய இழப்பையும் சந்திக்க நேரிடுகிறது. உண்மையில் மாதப்போக்கு திரவமும், யோனி திரவமும் காரத்தன்மை உடையது. இது சுரக்க, சதை மற்றும் எலும்புக் கால்சியம் கரையத்தான் செய்யும். இவைகளை ஈடு செய்ய கால்சியம் மற்றும் மெக்னீசிய தாதுக்கள் அதிகமுள்ள உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். பச்சையாக உள்ள இயற்கை காய்கள் மற்றும் கீரைகளில் மெக்னீசியம் அதிகமாக உள்ளது. இவற்றின் பசுமை வீணாகாத முறையில் (சாலட், மசியல் மற்றும் சூப்) எடுத்துக் கொண்டால், சதைக்கு மெக்னீசியமும் இரத்தத்திற்கு புரதக் கூடும் (Porphyrin Ring) கிடைக்கும். கால்சியம் அதிகம் உள்ள உணவுகளான ஆறு மணி நேரம் ஊறிய நிலக்கடலை, காரட், பாதாம், பிஸ்தா பருப்புகள், தேன் மற்றும் பசும் பால் (Fresh Milk) ஆகியன எலும்பு வலுவாக உதவும். சதைத் தளர்ச்சி மற்றும் எலும்புத் தேய்மானத்திலிருந்து மீண்டுவர சமச்சீர் புரதம், கால்சியம் மற்றும் மெக்னீசிய தாதுச் சத்துக்கள், ஒமேகா-3 கொழுப்பு மற்றும் இப்ரிபிலாவான் தாவரச் சத்து ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். எலும்பு மூட்டு தேய்மானம் குணமாக சமச்சீர் புரதம், குளுக்கோஸ்சமைன் தாவரச் சத்து, கால்சியத் தாது, ஒமேகா-3 கொழுப்பு மற்றும் இப்ரிபிலாவான் தாவரச் சத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
    அன்புத் தாய்மார்களே! உங்கள் தாயுள்ளம் எனக்குப் புரிகிறது. ஆனால் தாய் ஆரோக்கியமாக இருந்தால்தான் தாய் பாசம் காட்ட முடியும். அதற்கு தாயானவர் அல்லது தாயாகப் போகிறவர் தன்னை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் எல்லோரும் சாப்பிட்ட பின், பசியெல்லாம் அடங்கிய பின்னர் தான் சாப்பிடும் வழக்கத்தை விட வேண்டும். அதேபோல், எல்லோரும் சாப்பிட்ட பின் உள்ள மிச்சத்தை தான் சாப்பிடுவதும் மோசம்தான். இதையெல்லாம் தியாகம் என்றும் அனுசரித்துப் போவது என்றும், பாசம் இருப்பவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்று நீங்களாக நினைத்து கொண்டு அபத்தமான செயல்களைச் செய்யாதீர்கள். உண்மையில் உங்கள் குடும்பத்தை நேசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில் வலிமை குன்றி நோயாளியாகி உங்கள் குடும்பத்திற்கு பாரமாக இருக்க விரும்ப மாட்டீர்கள்.
    கணவரும், பிள்ளைகளும் நன்றாக இருந்தால் போதும் என்ற உங்கள் எண்ணத்தை நான் தாழ்த்திச் சொல்ல வரவில்லை. அதே சமயம், நீங்கள் நன்றாக இருந்தால்தான் உங்கள் பிள்ளைகள் வாழ்க்கை அமைத்து பிள்ளை பெறும் போது அவர்களுக்கு நீங்கள் குழந்தை வளர்க்க ஒத்தாசையாக இருக்க முடியும். அதற்கு பதில், நீங்கள், உடல் நலம் குன்றி அவர்களுக்குச் அந்த சமையங்களில் சுமையாக இருப்பதா பாசமும் நேசமும் உள்ளத் தாய் செய்யும் செயல்?. ஆகவே, உணர்வு பூர்வமாக மட்டும் செயல்படுவதை மாற்றி, அறிவும் உணர்வும் சமநிலையில் கொண்டு செயல்படுவதுதான் உங்களுக்கும் உங்கள் பாசக் குடும்பத்திற்கும் நல்லது. ஆகவே, எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் இனிய சூழலுக்கு வருவோம். அதே போல் சாப்பிடும் போது தொலைக்காட்சி தொல்லையின்றியும், குடும்பப் பிரச்சனைகளை அப்போது பேசாமலும் இருப்போம். உன்னத ஆரோக்கியம் குடும்பத்தில் திகழும்.
    இரத்த வீரியம்மும், சதை வளமும் எலும்பு உறுதியும் பெண்ணே உன்வசம் இருந்தால்,
    மாதப் போக்கும், பிரசவ நேக்கும், தாய் பால் சுரப்பும் சிறப்பாய் இருக்கும் கண்ணே!

    To buy this book click below…

    b2buy now

    தீரன் சின்னமலை -சின்னமலை மரபினர்

    “பிற பகுதிகளில் பண்பாடுகள் அழிந்து விட்டன கொங்கு வேளாளரிடத்து அப்படியே இருக்கின்ற விருந்தோம்பல் – தன்மானம் – ரோசம் – எளிதில் பிறரை நம்புவது – வஞ்சகம் செய்யின் பகை யொழிப்பது – நாணயமிக்க வாழ்க்கை – பொதுவாழ்வில் தரம் தாழாமை, கடும் உழைப்பு – கொலைப்பழிவாங்கால் – அண்டிப்பிழைப்பவர்க்கு ஆதரவு – பேச்சில் உறுதி” போன்ற பண்புகளின் நிலைக்களன் கொங்கு வேளாளர்கள் என்று அறிஞர்கள் பலரும் குறித்துள்ளனர்”. நிக்கல்சன் என்னும் மாந்தவியல் அறிஞர் “வேளாளக் கவுண்டர்கள் கடும் உழைப்பாளிகள், சொன்ன சொல்லைக் காப்பாற்றும் நேர்மையானவர்கள். நல்ல உடல் வலிமை படைத்தவர்கள். தங்கள் இனத்தை யார் இழிவு படுத்தினாலும் பொறுக்க மாட்டார்கள். அவர்கள் நாட்டுப் பெண்கள் குதிரைச் சவாரி செய்வார்கள். இது மற்ற தென்னிந்திய நாடுகளில் காணப்படாத சிறப்பாகும்” என்று தம் நூலில் கூறுகின்றார். இவ்வாறு உலகு போற்றும் உயர்பேரினமான கொங்கு வேளாளர்தம் மரபின் முழுமையான தகுதிகளுடன் தோன்றியவன்தான் தீரன் சின்னமலை.

    கொங்குநாட்டில் “மன்றாடியார் என்ற பட்டம் பெற்றவர்கள் பல்வேறு கூட்டங்களிலும் உள்ளனர்” “மன்றாடி”” என்ற சொல்லும் பல்வேறு விளக்கங்களுக்கு உட்பட்டதாக உள்ளது. “மன்றாடி””என்பது வரியை வாங்குவோர் என்றும், மன்றில் வழக்குத் தீர்ப்போர் என்றும், ஆடுமாடுகளைப் புரப்போர் என்றும் இச்சொல்லுக்குப் பல்வேறு விளக்கங்கள் தரப்படுகின்றன. ஆயினும் ஆட்சியதிகாரம் பெற்றவர்களே மன்றாடியார் என்னும் பட்டம் பெற்றனர் என்பதும் அறியத்தக்கது.
    பழைய கோட்டை பட்டக்காரர் கொற்றவேல் சர்க்கரை உத்தமக்காமிண்ட மன்றாடியார் என்று சொன்னால் கொங்கு நாட்டில் தெரியாமல் யாரும் இருக்க முடியாது.

    மன்றாடி என்ற சொல் பாண்டி நாட்டிலும், சோழ நாட்டிலும் இடையர்களைக் குறிக்கும். கொங்கு நாட்டில் மன்றாடி என்பது ஒரு சபை அமைப்பாகவோ, குறிப்பிடத்தக்க ஒரு பெருந்தனக்காரனாகவோ இருக்கலாம் என்ற முறையில் கல்வெட்டுக்கள் அமைந்துள்ளன. மருதன் மலையனான வணிச் சக்கரவர்த்தி ஒருவன் மன்றாடியாக விளங்கினான் என அவிநாசிக் கல்வெட்டால் நன்றாக அறிய முடிகிறது. சமூக நீதிபதிகளாகத் திகழ்ந்த இவர்கள் மன்றாடி எனப் பெயர் பெற்றனர். நீதிமன்றத்தினை மன்று என்றும், அதற்குச் செலுத்தும் தொகையை மன்றுபாடு என்றும் கல்வெட்டுக்கள் சொல்கின்றன.

    பழையகோட்டை பட்டக்காரராக இன்றும் இருக்கிற N. நல்லசேனாபதிச் சக்கரை மன்றாடியார் சின்னமலை குடும்பத்தைச் சேர்ந்தவர். வெட்டுக்காட்டு வலசு மு. கொற்றைவேல், மு. சின்னச்சாமி, ஜெயராமபுரம் கே. ஜெயராமன் சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர் எஸ்.கே. குமார ரத்தின வேணாடுடையார், காடையூர்ப்பட்டக்காரர் அமராவதி காங்கேய மன்றாடியார், புதூர்ப்பட்டக்காரர் சிங்கை சிதம்பரப் பல்லவராயர் ஆகியோர் சின்னமலை வழித்தோன்றல்களாவர். சின்னமலையின் அப்பா இரத்தினச் சர்க்கரை மிகுதியாக விவசாயம் செய்ய வேளாண்மை நிலம் தேடி அந்தியூர் பாலமலைப் பகுதிக்குச் செல்லத் தன் மக்களோடு மேலப்பாளையத்திலிலிருந்து புறப்பட்டுச் சென்றபோது ஓடாநிலை அருகில் உள்ள குமாரபாளையம் நாதங்காடு குமாரசின்னைய கவுண்டர் என்பவர் இன்றைய வாழைத் தோட்டத்து வலசில் நிலபுலன்களை அளித்து இருக்கச் செய்தார் என்பது வரலாறு. குமாரபாளையம், குமாரசின்னைய கவுண்டர் அளித்த நிலம் வாழைத் தோட்டத்து வலசில் உள்ள கல்லங்காடு, பெரிய தோட்டத்துப் பகுதிகள் என்பர். குமார சின்னைய கவுண்டர் மகன் குமார பேட்டைய கவுண்டர், அவர் வாரிசுகள் ஐந்து, ஆறு குடும்பத்தார் இன்றும் சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.

    To buy this book click below.

    theeranbuy now

     

    புதிய விடியல் -வலி இல்லா வெற்றிகள் உண்டோ?

    வலிபடாத கல்
    அழகான சிலையாவதில்லை
    அரைபடாத கரும்பு
    இனிக்கும் சர்க்கரையாவதில்லை
    பட்டை தீட்டப்படாத வைரம்
    ஜொலிப்பதில்லை
    நெருப்பால் சுடுபடாத தங்கம்
    அழகான ஆபரணமாவதில்லை
    நெருப்பால் துளைபடாத மூங்கில்
    இசைதரும் புல்லாங்குழல் ஆவதில்லை

    ஆம் தெரிந்து கொள் இளைஞனே
    வலி இல்லாமல் வெற்றி இல்லை
    போராட்டம் இல்லாமல் புகழ் இல்லை
    சிரமங்கள் இல்லாமல் சிகரம் இல்லை
    சோதனைகள் இல்லாமல் சாதனைகள் இல்லை
    உழைப்பு இல்லாமல் உயரங்கள் இல்லை

    To buy this book click below….

    b3    buy now

    முன்னேற்றதுற்கு மூன்று சொற்கள் -வாழ்ககை நமது குணநலன்களின் பிரதிபலிப்பு

             வாழ்க்கை என்பது என்ன? அது நமக்கும் அப்பாற்பட்டு தனியே இயங்கிக்கொண்டு இருப்பது அல்ல. வாழ்க்கை நம்மோடு நிழல்போல் தொடர்ந்து வருவது, நம்மை விட்டுத் தனித்துப் பிரித்துப் பார்க்க முடியாதது. நமது உருவம் பெரிதாக இருந்தால், அதற்கேற்ற நிழல் விழும் நாம் உயரமாக இருந்தால் அல்லது குள்ளமாக இருந்தால் அதற்கேற்ற நிழல்வரும். ஆக நம்மோடு என்றும் இணைந்து நடந்து நம்மை வெளிப்படுத்துவது வாழ்க்கை (கண்ச்ங் ண்ள் ப்ண்ந்ங் ஹ ள்ட்ஹக்ர்ஜ்).
    நமது நிழலை நமது உருவத்திற்கு அப்பாற்பட்டு சிறிதாக்கவோ பெரிதாக்கவோ இயலாது. நம் உருவத்தின் பிரதிபலிப்பாகவே அது இருக்கும் (கண்ச்ங் ண்ள் ஹய் ங்ஸ்ரீட்ர்). இந்த எடுத்துக்காட்டு வெளித்தோற்றத்திற்கு மட்டுமல்ல.
    அதேபோல் ஒருவரின் பழக்க வழக்கங்களின்
    பிரதிபலிப்பே, குணநலன்களின் பாதிப்பே. அவனுடைய புகழாகவும் இகழாகவும் மதிப்பீடு செய்யப்படுகின்றது.
    “இவர் நல்ல பழக்க வழக்கங்கள் உடையவர்ணி என்பதை அவரது நீண்டகால வாழ்க்கை முறையைப் பார்த்துச் சொல்கின்றோம். சிலருடைய குணநலன்களைப் பார்த்து இவர் நல்லவர், இவர் நல்லவர் அல்ல என்று குறிப்பிடுகின்றோம்.
    ஆக ஒவ்வொருவர் வாழ்க்கையும் அவரவர்களின் செயல்பாடுகளின் விளைவாகவே, செயல்பாடுகளின் பயனாகவே இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொண்டால், வளமான வெற்றியான வாழ்க்கையை நாம் அமைத்துக் கொள்ளமுடியும்.
    நாம் எதைச் செய்கிறோமோ அதற்கேற்றபலனையே அனுபவிக்கின்றோம் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. நீங்கள் யாரிடமாவது அன்பாகப் பேசினால் # அவர்களும் உங்களிடம் அன்பாகப் பேசுகிறார்கள். வெறுப்பாகப் பேசுவதே தமது இயல்பாகக் கொண்டவர்கள் கூட, குறைந்தது நம்மிடமாவது அன்பாகப் பேசுகிறார்கள்.
    நீங்கள் வெறுப்பாகப் பேசினால், எதிரில் இருப்பவர்கள் அதற்கு இணையான வெறுப்பையே உமிழ்கிறார்கள். நெருப்பு நெருப்பை வளர்க்கும் என்பதுபோல் வெறுப்பு வெறுப்பைத்தான் வளர்க்கும்.
    எங்கேயும் அன்பாகப் பேசினால் அன்பு அன்பை வளர்க்கும். வெறுப்பாகப் பேசுகின்றவர்கள் கூட அன்பாகப் பேசத் தொடங்குவார்கள். அன்பு தண்ணீர் போன்றது. வெறுப்பு நெருப்பு போன்றது. தண்ணீர்தான் நெருப்பை அணைக்கும். செயலால் பிறர்க்கு உதவி செய்வதை இலட்சியமாகக் கொண்டால் # அது நமக்குத் திரும்ப ஏதேனும் ஒரு உருவத்தில், வடிவத்தில் உதவியாக வந்து சேர்ந்துவிடுகின்றது, என்பதையும் நாம் அனுபவத்தில் காண்கிறோம், அனுபவிக்கின்றோம். “நன்மை செய்வதே நமது இலட்சியம்ணி # இதுவே நமது தாரக மந்திரமாக அமைய வேண்டும்.
    இதில் அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டியது ஒன்று உண்டு. நம்மிடம் உதவி பெற்றவர்களே நன்றியாகத் திரும்ப நமக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதனாலேயே சிக்கல்கள் எழுகின்றன. பிறர்க்கு உதவும் மனம் கொண்ட நல்லவர்கள்கூட இந்த எதிர்பார்ப்பால்
    சலித்துக் கொள்கிறார்கள். நன்றி கெட்ட சமுதாயம் என்று குறைபட்டுக் கொள்கிறார்கள்.
    உண்மையில், இவர்களும் நல்லவர்கள் அல்ல; இந்தச் சமுதாயம் அப்படி ஒன்றும் கெட்டதுவுமல்ல. இவர்கள் உதவியை வியாபாரம் போல எதிர்பார்த்துச் செய்வதால் விளையும் விளைவு அது.
    ஒருவர்க்கு முடியாத நேரத்தில் நம்மால் முடிந்த அளவு உதவுவது கடமை என்பதோடு, பிரதிபலன் எதிர்பாராது செய்து முடித்துவிடுங்கள். உங்களால் முடிந்த அளவு செய்யுங்கள். உங்களை அழித்துக்கொண்டு, துன்புறுத்திக்கொண்டு செய்யாதீர் கள். அவ்வளவுதான் உங்கள் வேலை. உங்களுக்கு முடியாதபோது இந்த உதவி பெற்றவர் நன்றியாகத் திரும்ப உதவினால் நல்லதுதான்; ஆனால் இவர் உதவாவிட்டாலும் யாரேனும் ஏன் முன்பின் அறியாதவர்கள்கூட உங்களுக்குத் தேவை நேர்ந்தபோது உதவி செய்வார்கள். காரணம் இது பாவ புண்ணியக் கணக்கு அல்ல. நல்லது செய்ததன் விளைவு இதுதான்.
    ஒரு புதிய இடத்தில், ஒரு சிக்கலான சூழ்நிலையில், ஒரு விபத்து நேர்ந்தபோது பலருக்கு எப்படி உதவி கிடைத்தது என்று எண்ணிப்பாருங்கள், உண்மை விளங்கும்.
    நீங்கள் எப்போதும் உதவும் எண்ணம் உடையவராக இருந்தால், உங்களைப் பற்றி மற்றவர்கள் பேசிக்கொள்ளும் போதெல்லாம் கடைசியாக ஒரு வார்த்தையில் உங்களை மதிப்பிட்டுவிடுகிறார்கள். அவர் நல்லவர், என்று கூறி முடிக்கிறார்கள். இந்தச் செய்தி மெல்ல மெல்லப் பரவுகிறது. நம்மை நேரில் பார்த்திராதவர்கள்கூட நம் தன்மையை அறிந்து இருக்கிறார்கள்.
    ஏன் உங்களையே எடுத்துக்கொள்ளுங்களேன். ஒருவரைப் பற்றி மற்றொருவரோடு பேசும் போது நீங்கள் எப்படிப் பேசுகிறீர்கள் என்று இப்போது எண்ணிப் பாருங்கள். “அவர் நல்லவர், அவர் நல்லவர்போல் நடிப்பவர், அவர் சுயநலக்காரர், அவர் தாராளமாகப் பொய் பேசுவார். அவர் ஒரு மாதிரி என்று தொடர்ந்து பின்னர் ‘அவர்’ என்ற வார்த்தையிலிருந்து மரியாதை குறைந்து அவனா? அவன் ஒரு அயோக்கியன் ஆயிற்றே. அவனா? அவன் ரொம்பத் திமிர் பிடித்தவனாயிற்றே!ணி இப்படிக் கடினமாகச் சொல்லி இருக்கிறீர்களா இல்லையா என்று எண்ணிப் பாருங்கள்.
    இவ்வளவிற்கும் அந்த மனிதருக்கும் நமக்கும் நேரடித் தொடர்புகூட இருந்திருக்காது. பிறரிடம் அவர் நடந்து கொள்ளும் முறையை செவி வழியாக அறிந்து, நாம் அவரைக் கணித்து வைத்திருக்கிறோம். அதே போல்தான் நம்மோடு நேரடித் தொடர்பு இல்லாத மற்றவர்கள்கூட நம்மைப் பற்றிய கணிப்பைக் கொண்டுள்ளார்கள்.
    இதற்கு அடிப்படையான காரணம் இந்தச் சமுதாயத்தில் நாம் நடந்து கொள்கின்ற நடைமுறைகள்தாம் நாம் செய்கின்ற செயல்கள்தாம்.
    அதனால், நாம் செய்கின்றநம்மைகள் நமக்கே வந்து சேர்கின்றன. நமக்குத் தீமைகள் வந்து சேர்வதற்கும் நாமே காரணமாக அமைகின்றோம் என்பதையும் நாம் புரிந்துகொண்டு செயல்பட்டால் நீண்ட கால வாழ்க்கையில் நாம் பெரும் வெற்றியைப் பெறலாம்.
    நம்மால் முடிந்த அளவு நன்மை செய்வதே நமது இலட்சியமாகக் கொள்வோம். காரணம், நாம் கொடுப்பதையே இந்தச் சமுதாயம் நமக்குத் திரும்பக் கொடுக்கிறது. வாழ்க்கை எதிர் ஒலியைப் போன்றது. நீங்கள் வாழ்க என்று சொன்னால் அந்த எதிரொலி உங்களையே வாழ்த்துகிறது. இந்த உண்மையை உணர்வோம். இந்த உலகம் வாழ உழைப்போம். உலகம் நம்மை வாழ வைக்கும், உயர்நிலைக்கு அழைத்துச் செல்லும். முன்னேற்றத்திற்கு இதுவே வழி.

    To buy this book click below……

    b16   buy now