Home » Uncategorized » சுகப்ரசவ சூசமங்கல்-திருமணப் பரிசு

 
சுகப்ரசவ சூசமங்கல்-திருமணப் பரிசு


ஆசிரியர் குழு
Author:

        உண்மையான பரிசு என்பது, வாழ்க்கைக்குப் பயன் படுவதாகவும் இருக்க வேண்டும், அந்தப் பரிசைப் பெறுபவர் உண்மையில் கொடுத்து வைத்தவராக உணரவும் வேண்டும். அப்பொழுதுதான் பரிசுக்கு மதிப்பு இருக்கும். அந்தப் பரிசும் திருமணப் பரிசாக இருக்கும் பட்சத்தில், இன்னும் சிறப்பானதாக இருக்க வேண்டுமல்லவா?. நான் இங்கு கொடுக்கப் போகும் பரிசும் அத்தகைய மதிப்பு வாய்ந்ததுதான். கொடுப்பவரே பெருமை பேசலாமா? கூடாதுதான். ஆனால், நான் கொடுக்கப் போகும் பரிசுக்கு ஈடு இணை கிடையாது. ஆகையால், இந்தப் புகழாரம் தேவைதான். அப்படி என்ன அபூர்வமான பரிசு என்கிறீர்களா? ஒவ்வொரு திருமணப் பெண்ணிற்கும் அவசியமாக கொடுக்க வேண்டிய பரிசுதான். அது என்னவென்றால் போலேட் உருவில் இரும்புச் சத்துணவு கொடுப்பதே ஆகும். இதில் என்ன விஷேசம் என்கிறீர்களா? விஷேசம் இருக்கிறது. அது பற்றிதான் நாம் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
அன்புத் தோழியர்களே! மாதவிடாய் சுழற்சியின் 9வது நாள் முதல் 20வது நாள் வரை (அதிலும், 13 முதல் 16நாட்களில்) தாம்பத்திய உறவு கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம் என்று ஏற்கனவே பார்த்தோம் (கடவுளின் பரிசு கட்டுரை). அப்படி கருத் தரிக்கும் வாய்ப்பு அதிகமாக இருந்தாலும், கருத்தரிக்கவும், தரித்த கருவானது ஒரு செல் நிலையில் இருந்து 2, 4, 8, 16, 32, 64 என்று பல்லணு கருவாக பெருகவும், பெருகிய கரு சினைக் குழாயில் நீந்தி, கருப்பையை அடைந்து, கருப்பையின் உட்சுவரில் ஒட்ட போலிக் அமிலமும் இரும்புச் சத்தும் அவசியம் தேவை. இவையெல்லாம் கருத்தரித்த ஏழு நாட்களில் நடந்து விடுகிறது. அந்த ஏழு நாட்களில் போலிக் அமிலமும் இரும்புச் சத்தும் குறைபாடாக இருந்தால், கரு செல் பிரிதலில் தவறு நிகழ வாய்ப்பிருக்கிறது. இந்தத் தவறுகளால், பிறக்கின்ற குழந்தையானது பிறவிக் குறைகளைக் கொண்டிருக்க வாய்ப்பு அதிகம் ஏற்படுகிறது. தவமிருந்து பெற்றப் பிள்ளையானது பிறவி ஊணத்துடன் இருப்பதை எத்தாயும் விரும்ப மாட்டார்கள். அப்படிப்பட்ட நிலையை, வரும் முன் தடுக்காமல், வந்த பின், ஒன்றும் செய்ய முடியாமல் ஏற்றுக் கொள்வதா வேண்டும்?. ஆகவே, இந்த போலிக் அமில இரும்புச் சத்து அவ்வளவு முக்கியமானது. இது திருமணமானதும் ஏன் கொடுக்க வேண்டும் என்று சற்று விளக்கமாகப் பார்ப்போம்.
கருத்தரித்த ஏழு நாட்களுக்குள் கருவின் செல் பிரிதல்கள் உருவாகி, சிசுவின் உறுப்புகளை நிர்ணயம் செய்து விடுகின்றன. உதாரணமாக ஒரு செல் தலையாகவும் மற்றொரு செல் இருதயமாகவும் இன்னபிற உறுப்புகளாகவும் தீர்மாணிக்கப்படுகின்றன. இந்த விதமாக வளரும் கருவின் செல்களின் தலை விதியை தீர்மானம் செய்வதில் (Determination) போலிக் அமிலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் கவனிக்க வேண்டியது என்ன வென்றால், கருத்தரிப்பு நிகழ்வு நடப்பது மாத விடாயின் மத்திம நாட்களில். ஆனால், கருத்தரித்த விஷயம் நமக்குத் தெரிய வருவது 8 முதல் 14 நாட்கள் கழித்து, மாதப் போக்கு வராத போதுதான். மாதப் போக்கு சில சமயங்களில் ஒன்று இரண்டு நாட்கள் தள்ளி வரவும் வாய்ப்பு இருப்பதால், உறுதிப்படுத்த இன்னும் சில நாட்கள் கூட ஆகலாம். அப்புறம்தான் மகப்பேறு மருத்துவரை பார்க்கிறோம், அல்லது கருத்தரிப்பை உறுதி செய்யும் பரிசோதனையைச் செய்கிறோம். இவையெல்லாம் நடந்த பின்னர்தான் நாம் கரு வளர்ச்சிக்கு பொறுப்பு கொள்கிறோம். அதன் பிறகு எடுக்கப்படும் போலிக் அமிலம் ஒன்றுக்கும் உதவாது. குறைபாடு ஏதேனும் இருப்பின், போலிக் அமிலத்தால் ஒன்றும் செய்ய முடியாது. காலத்தால் பயிர் செய் என்பதன் அர்த்தம் வேளாண்மையில் புரிகிறதோ இல்லையோ, கருவாக்கத்தில் அவசியம் புரிய வேண்டும். வேளாண்மையில் மாற்று ஏற்பாட்டிற்கு ஏதேனும் வாய்ப்பு இருக்கலாம், ஆனால், கரு வளர் தீர்மானத்தை மாற்ற முடியாது. அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆகவே போலிக் அமிலக் குறைபாடு கரு உருவாக்க குறைபாட்டை ஏற்படுத்தும். இதனைக் கையாளும் விதம் பற்றி இனி பார்ப்போம்.
1. குடிநீர்: நாம் அருந்தும் குடிநீரின் தன்மைக்கு ஏற்ப போலிக் அமில தேவை மாறுபடுகிறது. நான் இப்பொழுது கூறப்போகும் விஷயம் உண்மையில் ஆச்சரியமாகத்தான் இருக்கும். காரணம், நாம் குடிக்கும் தண்ணீர் பற்றி நாம் கொண்டுள்ள கருத்து அப்படி. உண்மையில் நம் வீட்டுத் மேல் நிலைத் தொட்டியில் பாசிப் பிடித்துள்ள நீரில் போலிக் அமிலம் கணிசமாக இருக்கிறது. இவ்வித நீரைக் கொதிக்க வைக்காமல் குடித்தால், நமக்குக் கனிசமான போலிக் அமிலம் கிடைக்கப் பெறுவோம். ஆனால், நமக்கு அவ்விதமாகக் குடிக்க மனசுதான் வராது. உண்மையில் இயற்கையாக எல்லா வித நுண்கிருமிகளையும் சம அளவில் கொண்டிருக்கும் இருக்கும் நம் மேல் தொட்டி நீர் அல்லது சுகாதாரமான குளத்து நீர் நம் நோய் எதிர்ப்புச் சக்திக்கும், உயிர்ச் சத்து (Vitamins) மற்றும் தாது (Minerals) சத்துகளுக்கும் மிகவும் நல்லது. நாம் அதிகமாக சுத்தகரிக்கப்பட்ட பாட்டில் தண்ணீரில் தாதுச் சத்துக்களும் குறைவு, போலிக் அமிலம் உள்ளிட்ட உயிர் தாதுக்களும் குறைவு. ஆக, சுத்தம் சுத்தம் என்று மினரல் வாட்டர் பருகுபவர்கள்தான், உயிர் மற்றும் தாதுச் சத்துகளின் குறைபாட்டிற்கு ஆளாக நேரிடுகிறது. இவர்கள் கண்டிப்பாக இயற்கையான போலிக் அமிலம் மற்றும் இரும்பு உள்ளிட்ட இயற்கையான தாதுக்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. சத்துணவுகள்: போலிக் அமிலத்தோடு சமச்சீர் புரதமும் சேர்த்து எடுக்கும் போது கரு வளர்ச்சி தரமாகவும் வலுவாகவும் இருக்கும். அதோடு, நாம் இரும்புச் சத்தை எடுத்துக் கொள்ளும் போது அதனுடன் போலிக் அமிலமும் இருந்தால் இரும்புச் சத்து கிரகிப்பு மிக அதிகமாக இருக்கும். இரத்தச் சோகை உள்ளவர்கள் போலிக் அமில உருவில் இரும்புச் சத்தெடுக்கும் போது விரைவாக, சோகை நீங்கி குணம் கிடைக்கும்.
3. போலிக் அமில உணவுகள்: போலிக் அமிலம் அதிகமாக உள்ள கீரைகளான பசலைக் கீரை, புளிச்சைக் கீரை, அசைவ உணவுகளான முட்டை, ஈரல், பால், நெய், வெண்ணை, உலர்ந்த திராட்சை, பீன்ஸ், துவரை, சோயா, தேங்காய், முளைக் கட்டிய பயறுகள், ஆறு மணி நேரம் ஊறிய நிலக்கடலை, பீட்ரூட், காரட், முட்டைக் கோஸ், புருக்கோலி, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, வாழைப் பழம், ஆரஞ்சு, பீச், முழு தானிய உணவுகள், பாதாம், பிஸ்தா ஆகியவற்றில் கனிசமான போலிக் அமிலங்கள் இருக்கின்றன.
4. போலிக் அமிலத்தை திருடும் உணவுகள்: இரசாயன குளிர் பானங்கள் (Soft Drinks), பனிப்பாகு (Ice Creams), பாலாடை இனிப்பு (Chocolate), துரித உணவுகள் (Fast Foods) தேனீர் (Tea), குழம்பி (Coffee) உள்ளிட்ட உணவு வகைகள் நம் உணவிலும் இரத்தத்திலும் உள்ள போலிக் அமிலத்தை திருடிக் கொள்ளும். இந்த வேண்டாத விஷயத்திற்குப் பணம் செலவு செய்து பாதிப்பை வாங்க வேண்டுமா?
அன்பான தோழியர்களே! போலிக் அமிலக் குறைபாடு இருப்பதை அறிந்து கொள்ள கீழ் கண்ட அறிகுறிகள் உள்ளனவா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
1. கை கால்கள் சில்லிட்டுப் போதல்.
2. கை கால்களில் சிறு உதறல் ஏற்படுதல்
3. குதிக்கால் வலி பிரதாணமாக இருத்தல்.
4. தோல் வெளுப்பாக இருத்தல்.
5. ஞாபக மறதி அதிகமாக இருத்தல்
6. சதைப் பிடிப்பும், வாய்வுப் பிடிப்பும் அதிகமாக இருத்தல்
7. நரம்புத் தளர்ச்சி ஏற்படுதல்.
8. இரத்தச் சோகை அதிகரித்தல்
9. மத்தியம் சாப்பிட்ட பின், கொஞ்சமாவது தூங்கினால்தான் அடுத்த வேலையைச் செய்ய முடியும் என்ற நிலை ஏற்படுதல்.

இல்லறப் பெண்களே! போலிக் அமிலம் எடுப்பீர்!
வளமான, தரமான கரு வளர்ச்சியை பெறுவீர்!

To buy this book click below…

b2buy now


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2013

தன்னம்பிக்கை மேடை…
உள்ளத்தோடு உள்ளம்
என் பள்ளி–பாண்டிய மன்னனும் என் உணர்வுகளும்
உனக்குள்ளே உலகம்-40–மாணவர்களைத் தாக்கும் ஆயுதங்கள்
சாதிக்க வயது தடையல்ல 73 வயது மூத்த குடிமகனின் சாதனை
பொய் கடிகாரம்
இந்தியா விரும்பும் ஆசிரியர்கள்
கனவு மெய்ப்பட
நம்மை நாம் நம்ப வேண்டும்
புகைப்படக் கலையில் புதிய மாற்றம்…
சான்றோர் சிந்தனை “காலம் மாறும்”
வளர்ச்சிக்கு வழி
சினத்தைக் கையாள்வது எப்படி?
உங்கள் வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல்
நீங்கள் சாதனையாளரே
மனக்கண்ணாடி
விடாத முயற்சி தொடாத எல்லை… இல்லை