Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


ஆசிரியர் குழு
Author:

இந்தியக் குடியரசுத் தலைவராக சர்வபள்ளி திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் பொறுப்பேற்றிருந்தபோது அவரை மாணவர் சிலர் சந்தித்து அவரின் பிறந்த தினத்தை கொண்டாடிட அனுமதி கேட்டிருக்கிறார்கள். அதற்கு ஆசிரியர் தொழிலுக்கே மரியாதை தேடிக்கொடுத்த அவர், தனது பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால் மகிழ்வுறுவேன் என்று சொல்லியிருக்கிறார். அன்று முதல் அவர் பிறந்த தினமான செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாக 1962ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

அளவிடப்பட முடியாத மதிப்புமிக்க பணி ஆசிரியப்பணி. ஒரு சமூகம் அதி உன்னதநிலை அடைந்து சிறந்து விளங்குகிறது என்றால் அதற்குப்பின் அற்புதமான ஆசிரியர் சமூகம் உள்ளது என்றே அர்த்தம். அதேபோல் ஒரு சமூகம் தாழ்ந்துபோகிறது என்றால் ஆசிரியர் சமூகம் சரியாக தன் பணியைச் செய்யவில்லை என்று சொல்லிவிட முடியும். ஒவ்வொருவருக்குள்ளும் ஞானத்தின் சுடரை ஏற்றுகிற ஆசிரியர்களே அறிவு வழங்குபவர்களாக, அறிவைக் கூட்டுபவர்களாக, அறிவைத் துலக்குபவர்களாக இருக்கிறார்கள்.

இதில் ஆசிரியர்கள் அறிவைத் துலக்குபவர்களாக இருத்தலே இன்றைய தேவை. ஆம், ஒரு மாணவரின் உள்ளே இருக்கும் திறமையை அவரே உணரும்படியாகத் துலக்கி பளபளப்பாக்கி விடக்கூடிய ஆசிரியராக ஒவ்வொருவரும் உயர்ந்து நிற்கக் கூடிய காலமே மாணவர்களுக்கு பொற்காலம்.

ஊதியத்திற்கான பணி அல்ல ஆசிரியப்பணி. ஒவ்வொரு மாணவரையும் உயர்த்தி அழகுபார்க்கும் அற்புதமான பணி ஆசிரியப்பணி என உண்மையாக பாடுபடும் ஆசிரியர்களுக்கு எமது “ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!”

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment