Home » Articles » சாதிக்க வயது தடையல்ல 73 வயது மூத்த குடிமகனின் சாதனை

 
சாதிக்க வயது தடையல்ல 73 வயது மூத்த குடிமகனின் சாதனை


ஆசிரியர் குழு
Author:

தேனி மாவட்டம், உத்தம பாளையம் வட்டம், கோம்பை என்ற ஊரைச் சேர்ந்தவர் திரு. கே. அரங்கசாமி. சென்னை, விருகம்பாக்கம், ஆவிச்சி மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற (வயது 73) இவர் சென்னை மாவட்ட மூத்தோர் தடகளப் போட்டியில் (2012 ஆகஸ்ட் 19, 20ல்) 70 முதல் 75 வயது பிரிவில் 400 மீட்டர் ஓட்டம், ஈட்டி எறிதலில் முதல் இடமும், குண்டு எறிதலில் 2வது இடமும் பெற்று, ஈரோட்டில் டிசம்பர் 29, 30ல் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மூத்தோர் போட்டியில் (32 மாநிலங்கள்) 3 போட்டிகளில் பங்குகொண்டு 400 மீட்டர் ஓட்டத்தில் 2ம் இடம் பெற்றார்.

இவர் கடந்த ஆண்டும் (2011) மூத்தோர் போட்டியில் ஈட்டி எறிதல், குண்டு எறிதலில் முதல் இடமும், 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் 2ம் இடமும் பெற்று, அந்த ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில போட்டியில் 3 போட்டிகளிலும் கலந்துகொண்டார்.

இவர் 2009ல் கோவை மாவட்ட மூத்தோர் போட்டியில் ஈட்டி எறிதலில் முதல் இடம், 400 மீட்டத்தில் 2ம் இடம் பெற்று, அந்த ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் 2ம் இடம் பெற்று, அந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற ‘அகில இந்திய மூத்தோர் தடகளப் போட்டியில்’ 400 மீட்டர் ஓட்டத்தில் கலந்து பெருமை சேர்த்தார்.

இவர் விளையாட்டு வீரராக திகழ்ந்தாலும் (மேடைகளில்) பாடல் பாடுவதிலும், ஓவியம் வரைவதிலும் வல்லவர். ஓவியத்தில் இந்திய தேசிய தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர்கள், முன்னாள், இன்னாள் தமிழக முதல்வர்கள் ஆகியோரின் படங்களை தானே வரைந்து தான் பணிபுரிந்த பள்ளிகளுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

பாடுவதில் பல இலக்கிய கூட்டங்கள், நூல் வெளியீட்டு விழாக்கள், திருக்குறள் வட்டம் ஆகியவைகளில் கலந்து கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவிஞர் கண்ணதாசன், வாலி ஆகியோரின் ‘பல தத்துவ’ பாடல்களை (திரைப்படப் பாடல்கள்) பாடி பார்வையாளர்களை மகிழ்விக்கிறார்.

கடந்த 30 ஆண்டு காலமாக ‘கோம்பரை ரங்கராஜ்’ வழங்கும் ‘வசந்த ராகங்கள்’ என்ற இசைக்குழுவை திறம்பட நடத்தி வருகிறார்.

ஆரம்ப காலத்தில் இவர் ஊருக்கு (கோம்பை) பக்கத்து ஊரைச் சேர்ந்த (பண்ணைப்புறம்) இவரின் நண்பர்கள் இசையமைப்பாளர்கள் இளையராஜா, கங்கை அமரன் ஆகியோருடன் அவர்கள் இசைக்குழுவில் பல பாடல்கள் பாடி அவர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். இவர் மகள் இசைக்கலைமணி கே.ஆர். வசந்தகுமாரியும் (Dip. in Music, B. Music) ஒரு சிறந்த பாடகியே. தற்சமயம் ஒரு அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் “இசை ஆசிரியையாக” பணிபுரிகிறார்.

திரு. அரங்கசாமி அவர்கள் திரைப்படங்களிலும், குறும்படங்களிலும் சிறுசிறு வேடங்களில் நடித்து வருகிறார்.

சாதிக்க வேண்டும் என்கிற எண்ணமே சாதிக்கக் காரணமாகிறது… வயது தடையல்ல…

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2013

தன்னம்பிக்கை மேடை…
உள்ளத்தோடு உள்ளம்
என் பள்ளி–பாண்டிய மன்னனும் என் உணர்வுகளும்
உனக்குள்ளே உலகம்-40–மாணவர்களைத் தாக்கும் ஆயுதங்கள்
சாதிக்க வயது தடையல்ல 73 வயது மூத்த குடிமகனின் சாதனை
பொய் கடிகாரம்
இந்தியா விரும்பும் ஆசிரியர்கள்
கனவு மெய்ப்பட
நம்மை நாம் நம்ப வேண்டும்
புகைப்படக் கலையில் புதிய மாற்றம்…
சான்றோர் சிந்தனை “காலம் மாறும்”
வளர்ச்சிக்கு வழி
சினத்தைக் கையாள்வது எப்படி?
உங்கள் வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல்
நீங்கள் சாதனையாளரே
மனக்கண்ணாடி
விடாத முயற்சி தொடாத எல்லை… இல்லை