Home » Articles » வளர்ச்சிக்கு வழி

 
வளர்ச்சிக்கு வழி


தங்கவேலு மாரிமுத்து
Author:

வளர்ச்சி. இதற்கு மிக எளிமையான இலக்கணம் என்ன? அல்லது விளக்கம் என்ன?

மனிதன் என்பவன், நேற்றைய தினத்தைவிட இன்றைக்கு, சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு, பல வகையிலும் ஏற்றம் கண்டிருக்க வேண்டும். அவனுடைய,

• பொருளாதார நிலை சற்றாவது உயர்ந்திருக்க வேண்டும்.
• உலக அறிவு கூடியிருக்க வேண்டும்.
• கல்வியறிவும் கூடியிருக்க வேண்டும்.
• பதவியிலும் ஏற்றம் இருக்க வேண்டும்.
• வீட்டில் வசதிகள் அதிகரித்திருக்க வேண்டும்.
• நகையோ, நிலமோ, பாங்க் பாலன்ஸோ கூடுதலாகி இருக்க வேண்டும்.

இவ்வளவு தான். (ம்… இதுவா, எளிமையான இலக்கணம்?)

வாழ்க்கையில் வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள், அவரவர்க்கு என்று ஏதாவது ஒரு ரூட்டைப் பிடித்து வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள். தங்களுக்கென்று சில கொள்கைகளை, சில திட்டங்களை, சில யுக்திகளை, சில வழிகளை வைத்திருப்பார்கள்.

அப்படி ஒரு நண்பரை சமீபத்தில் சந்தித்தேன். எப்போதும் தன்னம்பிக்கை நூல்களையும், சுயமுன்னேற்ற நூல்களையும், சாதனையாளர்களின் சரித்திரத்தையும் படித்துக் கொண்டேயிருப்பார் (என்னைப் போலவே). மிகவும் சுவாரஸ்யமான மனிதர் (என்னைப் போலவே).

வெற்றிப் படிகளில் வேகமாக ஏறிக் கொண்டிருக்கிறவர். சாதனை ஏணியில் சரசரவென்று ஏறிக் கொண்டிருப்பவர். வெற்றிக்கான, வளர்ச்சிக்கான தன்னுடைய கொள்கைகளையும், வழிகளையும் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

அதைத்தான் நான் இப்போது உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

சுருக்கமாகவும், தெளிவாகவும் சொல்லிவிடுகிறேன்.

1.   ஒவ்வொரு நாளும் இரவு, அடுத்த நாளுக்கான முக்கிய வேலைகளைக் குறித்துக் கொள்கிறார்.

2.   ஒவ்வொரு வாரமும் ஞாயிறு இரவு, அடுத்த வாரத்திற்கான முக்கிய வேலைகளைக் குறித்துக் கொள்கிறார்.

3.   ஒவ்வொரு மாதமும் 31ம் தேதி அல்லது 30ம் தேதி இரவு, அடுத்த மாதத்திற்கான முக்கிய வேலைகளைக் குறித்துக் கொள்கிறார்.

4.   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் கடைசியில், அடுத்த ஆண்டிற்கான முக்கிய வேலைகளைக் குறித்துக் கொள்கிறார்.

இப்படி முக்கிய வேலைகளைக் குறித்துக் கொள்வதோடு நின்றுவிடுவதில்லை.

அந்த முக்கிய வேலைகளிலும் லட்சியம் நோக்கிய வேலைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்.

  • அந்த வேலைகளை தெளிவாய்த் திட்டமிட்டு செய்து முடிக்கிறார்.
  • எண்ணிய வேலைகளில் எத்தனை வேலைகளை செய்யாமல் விட்டோம். எதனால் செய்யாமல் விட்டோம் என்று பிறகு ஆய்வு செய்கிறார்.
  • அப்படி செய்யாமல் விட்ட வேலைகளை, மீண்டும் முயன்று முடிக்கிறார்.

இப்படி சில பழக்கங்களை வைத்திருக்கும் இவர், இப்படி சில வழிகளைப் பின்பற்றும் இவர்… எப்படி வளராமல் இருப்பார்? எப்படி முன்னேறாமல் இருப்பார்?

எனக்குப் புரிந்தது. உங்களுக்கு?

இந்த மாத இதழை EBook வடிவத்தில் படிக்க – Click


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2013

தன்னம்பிக்கை மேடை…
உள்ளத்தோடு உள்ளம்
என் பள்ளி–பாண்டிய மன்னனும் என் உணர்வுகளும்
உனக்குள்ளே உலகம்-40–மாணவர்களைத் தாக்கும் ஆயுதங்கள்
சாதிக்க வயது தடையல்ல 73 வயது மூத்த குடிமகனின் சாதனை
பொய் கடிகாரம்
இந்தியா விரும்பும் ஆசிரியர்கள்
கனவு மெய்ப்பட
நம்மை நாம் நம்ப வேண்டும்
புகைப்படக் கலையில் புதிய மாற்றம்…
சான்றோர் சிந்தனை “காலம் மாறும்”
வளர்ச்சிக்கு வழி
சினத்தைக் கையாள்வது எப்படி?
உங்கள் வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல்
நீங்கள் சாதனையாளரே
மனக்கண்ணாடி
விடாத முயற்சி தொடாத எல்லை… இல்லை