Home » Post » கர்ப்ப கால பராமரிப்பு முறைகள்

 
கர்ப்ப கால பராமரிப்பு முறைகள்


admin
Author:

வரையறை
1. கர்ப்ப கால பராமரிப்பு என்பது ஒரு பெண்ணின் கர்ப்ப காலத்தில் வரையறுக்கப்பட்ட கவனிப்பு (பரிசோதனை, அறிவுரைகள்) முறைகளைக் கடைபிடிப்பதே ஆகும்.

கர்ப்பகால பராமரிப்பின் நோக்கம்

கர்ப்ப கால பராமரிப்பின் மூலம் கீழ்க்கண்ட வியாதிகளைக் கண்டறியலாம்.
 இரத்தக் கொதிப்பு
 சர்க்கரை நோய்
 சிசுவின் வளர்ச்சியில் காணலாகும் குறைபாடு
 இரத்த சோகை

பரிசோதனைகள்
 மருத்துவரிடம் கலந்தாய்வு
 எடை பார்த்தல்
 உயரம் அளத்தல்
 இரத்த அழுத்தம் அளவிடல்
 இரத்த சோகை பரிசோதனை
 இரத்த சர்க்கரை பரிசோதனை
 சிறுநீர் பரிசோதனை
 அல்ட்ரா சவுண்டு ஸ்கேன்
 கணவன் மனைவி இருவருக்கும் எய்ட்ஸ் பரிசோதனை

பராமரிப்பு முறைகள்
 உறக்கம் (6-8 மணி நேரம்)
 அதிக நீர் குடித்தல் (2-3 லிட்டர்)
 தினமும் குளித்தல்
 தூய ஆடை அணிதல்
 பல் சுத்தம்
 மார்பக பராமரிப்பு

கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
• பெண் கருத்தரிக்கும் முன் மருத்துவரைக் கலந்தாலோசித்து ஃபோலிக் ஆசிட் (ஊர்ப்ண்ஸ்ரீ அஸ்ரீண்க்) மற்றும் மருத்துவ ஆலோசனைகளைப் பெற வேண்டும்.
• பெண் கருவுற்றவுடன் மருத்துவரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
• பேறு காலத்தில் குறைந்த பட்சம் மூன்று முறையேனும் முழு பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும்.
• தாய்க்கு நூறு நாட்கள் இரும்புச்சத்துடன் ஃபோலிலிக் ஆசிட் மாத்திரைகள் கொடுக்கப்பட வேண்டும்.
• கால்சியம் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.
• 3, 5 வது மாதங்களில் இரணஜன்னி தடுப்பூசி போட வேண்டும்.
• 10 மாத பேறு காலத்தில் தாய் 8 முதல் 10 கிலோ எடை அதிகரிக்க வேண்டும்.

உடற்பயிற்சிகள்
• தினமும் அரை மணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
• மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.
• மனதில் மகிழ்ச்சி ஏற்பட யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

உணவுமுறைகள்
 பழங்கள், காய்கறிகள்
 இரும்புச் சத்து அடங்கிய உணவுகள்
 கால்சியம் அடங்கிய உணவுகள்
 கொழுப்புச் சத்து அடங்கிய உணவுகள்
 பழங்கள்- ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம், மாங்கனி, தக்காளி, சாத்துக்கொடி, திராட்சை
 உடல்சூட்டை ஏற்படுத்தும் பழங்களைத் தவிர்க்க வேண்டும் (உதா.) பப்பாளி, அன்னாசி.
 காய்கறிகள்- கேரட், பீட்ரூட், கத்திரிக்காய், பீன்ஸ், தக்காளி, சவ்சவ், கிழங்கு வகைகள், கீரை வகைகள்.
 இரும்புச் சத்து உள்ள உணவுகள்-ராகி, கோதுமை, நிலக்கடலை, பேரிச்சம்பழம், தேன், வெல்லம், கரும்புச் சர்க்கரை பீட்ரூட், இளம்சிவப்பு நிற உணவுகள், ஈரல். இரும்புச் சத்தினை உட்கிரகிக்க வைட்டமின் “இ” (யண்ற்ஹம்ண்ய் இ) நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். எ.கா. எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிலிக்காய்
 புரதச் சத்துள்ள உணவுகள்- பால், முட்டை, இறைச்சி, மீன், நண்டு, அனைத்து வகையான பயறு வகைகள்.
 கொழுப்புச் சத்துள்ள உணவுகள்-பால், பால் பொருட்கள், முட்டை, மீன், இறைச்சி

இவையனைத்தும் ஆரோக்கியமான முறைகளில் சமைத்து உண்ண வேண்டும்.

எப்போது மருத்துவரிடம் செல்ல வேண்டும்?

 பிரசவ வலிலி
 பனிக்குடத்திலிருந்து நீர் கசிதல்
 இரத்தப் போக்கு
 குழந்தையின் அசைவு தெரியாமை
 அதிகப்படியான வாந்தி

இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஏனெனில், இதனால் குழந்தையின் உயிருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.


Share
 

2 Comments

  1. Gopal says:

    Great simple content. Need more womens related content.

Post a Comment


 

 


September 2013

தன்னம்பிக்கை மேடை…
உள்ளத்தோடு உள்ளம்
என் பள்ளி–பாண்டிய மன்னனும் என் உணர்வுகளும்
உனக்குள்ளே உலகம்-40–மாணவர்களைத் தாக்கும் ஆயுதங்கள்
சாதிக்க வயது தடையல்ல 73 வயது மூத்த குடிமகனின் சாதனை
பொய் கடிகாரம்
இந்தியா விரும்பும் ஆசிரியர்கள்
கனவு மெய்ப்பட
நம்மை நாம் நம்ப வேண்டும்
புகைப்படக் கலையில் புதிய மாற்றம்…
சான்றோர் சிந்தனை “காலம் மாறும்”
வளர்ச்சிக்கு வழி
சினத்தைக் கையாள்வது எப்படி?
உங்கள் வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல்
நீங்கள் சாதனையாளரே
மனக்கண்ணாடி
விடாத முயற்சி தொடாத எல்லை… இல்லை