– 2013 – August | தன்னம்பிக்கை

Home » 2013 » August

 
  • Categories


  • Archives


    Follow us on

    தகுதிகள் பெருக்கு… தரணியே உனக்கு

    திருச்சி வாசகர்வட்டம் மற்றும் Jc. திருச்சி இணைந்து வழங்கும்
    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் 11.8.2013; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

    இடம் : ரவி மினி ஹால் (மீட்டிங் ஹால் A/C)
    கரூர் பை-பாஸ் ரோடு
    சத்திரம் பேருந்து நிலையம், திருச்சி

    தலைப்பு : “தகுதிகள் பெருக்கு… தரணியே உனக்கு”

    பயிற்சியாளர் : P. ஆனந்தராஜன், M.Sc., MBA
    மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர்
    AVR, Global-Chennai (CEO)
    Ph: 95662 00333

    தொடர்புக்கு : மண்டல அமைப்பாளர் Er. K. நாகராஜன் – 95784 08301
    Jc. J. ராஜா – 99944 44466
    Jc. C. கோபி – 97509 34876
    T. நல்லதம்பி (PRO) – 90921 77006

    அனுமதி இலவசம்

    நலம் தரும் நகைச்சுவை

    சென்னை தன்னம்பிக்கை வாசகர்வட்டம்
    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் 18.8.2013; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.00 மணி முதல் 12 மணி வரை

    இடம் : ‘வுமன்ஸ் கிளப்’ / ஆனந்த விநாயகர் ஆலயம்
    58, 8வது வீதி, சவுத்ரி நகர், வலசரவாக்கம்
    சென்னை-87
    (வலசரவாக்கம் கேசவர்த்தினி பஸ் ஸ்டாப், உமா
    மெடிக்கல்ஸ் எதிரில்)

    தலைப்பு : “நலம் தரும் நகைச்சுவை”

    பயிற்சியாளர் : நகைச்சுவைத் தென்றல் ‘தஞ்சை தாமு’
    போன்: 94435 08846

    இடம் பற்றிய தொடர்புக்கு: தலைவர் – R. பாலன் – 94442 37917
    செயலாளர் – L. கருணாகரன் – 98419 71107
    PRO யமுனா கிருஷ்ணன் – 94440 29827

    அனுமதி இலவசம்

    “உன்னையே நீ அறிவாய்” மற்றும் “புகை நமக்கு பகை”

    திருப்பூர் தன்னம்பிக்கை வாசகர்வட்டம், திருப்பூர் அரிமா சங்கம் மற்றும் செல்வக்குமார் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், திருப்பூர் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்ற பயிலரங்கம்

    நாள் 11.8.2013; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10 மணி

    இடம் : அரிமா சங்க அரங்கம்
    குமரன் சாலை
    திருப்பூர்

    தலைப்பு : “உன்னையே நீ அறிவாய்” மற்றும்
    “புகை நமக்கு பகை”
    தன்னம்பிக்கை விழிப்புணர்வு நகைச்சுவை
    நாடகங்கள்

    சிறப்பு பயிற்சியாளர் : தமிழ்நாடு புதிய வெளிச்சம் அறக்கட்டளைக்
    கலைக்குழு, கோவை.

    தொடர்புக்கு : திரு. மகாதேவன் – 94420 04254
    திரு. வெங்கடேஸ்வரன் – 94423 74220
    திரு. மாரப்பன் – 95242 73667

    குடும்பத்துடன் வருக அனுமதி இலவசம்

    உன்னை அறிந்தால்…

    ஈரோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும்
    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள்:25.8.2013; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்:மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை

    இடம் : மாயா பஜார் A/C ஹால்,
    Opp. E.B. அலுவலகம் எதிரில்,
    E.V.N. ரோடு,
    ஈரோடு.

    தலைப்பு : “உன்னை அறிந்தால்…”

    சிறப்புப் பயிற்சியாளர் : அருள்நிதி Jc.S.M. பன்னீர்செல்வம்
    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர், கோயம்புத்தூர் – 41.
    போன்: 97893 75278

    தொடர்புக்கு
    தலைவர் Jc. A. குப்புசாமி – 98432 69931
    செயலாளர் Jc. நூர்முகம்மது – 99945 00575
    பொருளாளர் Jc. S. சையது ஜைனலாபுதீன் – 99942 29080

    அனுமதி இலவசம்

    வாழ்வே கொண்டாட்டம்

    திருச்செங்கோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் JCI திருச்செங்கோடு டெம்பிள்
    இணைந்து வழங்கும் சுயமுன்னேற்ற பயிலரங்கம்

    நாள்:25.8.2013; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்:மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை

    இடம்:ஹோட்டல் சித்தார்த்தா கான்பிரன்ஸ் ஹால்
    ஜோதி தியேட்டர் அருகில்
    திருச்செங்கோடு

    தலைப்பு:“வாழ்வே கொண்டாட்டம்”

    சிறப்புப் பயிற்சியாளர் : Jc. R. சசிபிரபா, தேசிய பயிற்சியாளர்
    கோபி போன்: 97505 17779

    தொடர்புக்கு:
    தலைவர்: JCI. Sen. G.கோவிந்தசாமி – 98427 96868
    செயலாளர்: Jc. A. திருநாவுக்கரசு – 99429 66554
    ஒருங்கிணைப்பாளர்: Jc. Dr. S. சரவணகுமார் – 94423 83833

    அனுமதி இலவசம்

    பெரிது கேள்

    கோவை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் இன்டக்ரல் யோகா இன்ஸ்டிடியூட்
    இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள்: 18.8.2013;ஞாயிற்றுக்கிழமை
    நேரம்:காலை 10.00 மணி

    இடம் : இன்டக்ரல் யோகா இன்ஸ்டிடியூட்,
    139/86, மேற்கு சம்பந்தம் சாலை,
    ஆர்.எஸ். புரம் (மேற்கு),
    பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில்,
    கோவை.

    தலைப்பு : “பெரிது கேள்”

    சிறப்புப் பயிற்சியாளர் : திரு. J. மனவாளன், M.A., M.Sc., M.Phil., PG Dip. Guidance & Counselling, Dip (Ag)
    பெரம்பலூர்.
    போன்: 94438 13657

    தொடர்புக்கு:
    தலைவர் திரு. A.G. மாரிமுத்துராஜ் – 98422 59335
    செயலாளர் திரு. A. சரவணகுமரன் – 90920 92080
    பொருளாளர் திரு. ஆனந்தன் – 74026 10108

    அனுமதி இலவசம்
    குடும்பத்துடன் வருக

    பிறர் வாழ வாழ்ந்திடு பலர் வாழ்த்த வளர்ந்திடு

    டாக்டர்ஆர். ஈஸ்வரமூர்த்தி

    தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்,

    ரேவதிமருத்துவமையம், திருப்பூர்

                எந்தவொரு மிகப்பெரிய செயலும், சிறிய அளவில் இருந்து தான் தொடங்குகிறது என்பதற்கேற்ப சிறிய அளவில் கிளினிக்காக ஆரம்பித்து மிகக் குறைந்த காலத்திலேயே தன்னுடைய சிறப்பான மருத்துவ சேவையின் மூலம் பல ஆயிரக்கணக்கான பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளவர் இவர்…

    உலகத் தரமான சிகிச்சையா? குறைந்த செலவில் சிகிச்சையா? என்று பிரிக்காமல் தரமும் உயர்வாக இருக்க வேண்டும், செலவும் குறைவாக இருக்க வேண்டும். இதில் சமரசமே கூடாது என்று நோயாளிகளுக்கு உலகத் தரமான சேவையை அளித்துக் கொண்டிருப்பவர்…

    சிறந்த மருத்துவராக மட்டுமின்றி மிகச்சிறந்த நிர்வாகத் திறனும், தொலைநோக்குப் பார்வையும் கொண்டவர்…

    பின்தங்கிய பகுதியாக இருந்தாலும் அங்குள்ள பொதுமக்களுக்கு மிகச்சிறந்த சிகிச்சையைக் கொடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தின் வெளிப்பாடாக, திருப்பூரிலேயே பெரிய ஐ.சி. யூனிட் மற்றும் அதிநவீன மருத்துவக் கருவிகள் உள்ள மருத்துவமனையை உருவாக்கியுள்ளவர் இவர்…

    திருப்பூரில் உள்ள மருத்துவமனைகளிலேயே நான்கடுக்கு சி.டி. ஸ்கேன், மேúமôகிராம், டிஜிட்டல் எக்ஸ்ரே போன்றவற்றை முதன்முறையாக நிறுவியர்…

    ஏறத்தாழ பத்துக்கும் மேற்பட்ட இலவச ஆம்புலன்சுகளை திருப்பூர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வைத்து நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சைகள் கொடுக்கும் வண்ணம் தனது மருத்துவமனையை வைத்துள்ளவர்.

    இலட்சக்கணக்கான மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையைக் கொடுத்துள்ளவர்… என்று பல்வேறு சிறப்புகளைப் பெற்றுள்ள திருப்பூர் ரேவதி மருத்துவ மையத்தின் தலைவர் டாக்டர் ஈஸ்வர மூர்த்தி அவர்களை சந்தித்து அவரின் வெற்றிப் பயணத்தைப் பற்றி கேட்டபோது அவர் நம்மிடையே பகிர்ந்து கொண்டது…

    உங்களின்இளமைக்காலம்குறித்து

    என்னுடைய ஊர் சோமனூருக்கு அருகில் உள்ள பள்ளபாளையம். அப்பா அமரர் திரு.ராமசாமிக்கவுண்டர், அம்மா திருமதி. கமலாத்தாள் அவினாசிபாளையம், பொங்கலூர் போன்ற பகுதிகளில் இருந்து வெங்காயத்தை விவசாயிகளிடம் இருந்து வாங்கி, வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைத்து நேர்மையாக வியாபாரம் செய்து வந்தவர். தொடர்ந்து வியாபாரத்தை விரிவுபடுத்தும் நிமித்தமாக என் அம்மாவின் ஊரான திருப்பூருக்கு குடிபெயர்ந்தோம்.

    எல்.கே.ஜி. முதல் 10ம் வகுப்பு வரை திருப்பூர் செயின்ட் ஜோசப் ஸ்கூலில் படித்தேன். தொடக்கத்தில் சுமாராகப் படித்த நான் உயர்நிலைக் கல்விக்கு வரும்போது நன்றாக படிக்க ஆரம்பித்தேன். இதன் காரணமாக 10ம் வகுப்பு  அரசுப் பொதுத் தேர்வில் பள்ளி அளவில் மூன்றாம் இடம் பெற்றேன். தொடர்ந்து மேல்நிலைக் கல்விக்கு திருப்பூரின் புகழ்பெற்ற அரசு பள்ளியான நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். அந்த வருடம் நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவனாக தேர்வு பெற்றதோடு அல்லாமல் அரசு பள்ளியில் படித்த ஒரு மாணவர் மாவட்டத்திலேயே முதலாவது மதிப்பெண் பெற்ற சிறப்பையும் பெற்றேன். இப்படி ஒரு சராசரி மாணவனாக இருந்த நான் மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெறுவதற்கு என்னுடைய பள்ளி ஆசிரியர்கள் குறிப்பாக பேராசிரியர் சுவாமிநாதன் ஆகியோர் முக்கிய காரணமானவர்கள்.

    ஒரு சராசரி மாணவனாக இருந்த நான் முதல் மதிப்பெண் பெறுவதற்கு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமின்றி நான் டியூசன் படிக்கச் சென்ற பேராசிரியர் சாமிநாதன் அவர்களும் முக்கியக் காரணமானவர்கள். பேராசிரியர் சாமிநாதன் அவர்கள் தான் எனக்கு கல்வியின் முக்கியத்துவத்தையும், அதன் மூலம் கிடைக்கும் சிறப்பையும் எனக்கு தெளிவாக உணரவைத்தார். கடின உழைப்பினால் எதையும் சாதிக்க முடியும் என்ற உண்மையையும் எனக்குக் கற்றுக்கொடுத்தார். அவரது அர்ப்பணிப்புடன் கூடிய வழிகாட்டுதல் தான் நான் நல்ல மதிப்பெண் பெறவும் இப்படி ஒரு மருத்துவராக மக்கள் சேவை ஆற்றவும் வழிவகுத்துக் கொடுத்தது. எடுத்துக் கூறியதுடன் எப்படி படிக்க வேண்டும்? எப்படி எழுத வேண்டும்? என்று ஒவ்வொன்றையும் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். அவரது அர்ப்பணிப்புடன் கூடிய வழிகாட்டுதல் மூலம் நல்ல மதிப்பெண் பெற்றேன்.

    மருத்துவ நுழைவுத் தேர்வில் 197 கட் ஆப் பெற்றதால் சென்னை மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பைப் பெற்றேன்.

    வியாபார பின்புலம் கொண்ட நான் மருத்துவம் படித்தது பெரிய திருப்புமுனை என்றே கூறுவேன். அப்பா வெங்காய வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது என்னுடைய நெருங்கிய உறவினர்கள் நிறைய ‘டையிங்’ தொழிற்சாலையை வைத்திருந்தார்கள். அந்த காலகட்டத்தில் திருப்பூர் பின்னலாடை தொழில் வளர்ச்சியில் மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்ததால் நான் 12ம் வகுப்பு முடித்தவுடன், என்னையும் பின்னளாடை தொழில் சார்ந்த டையிங் தொழிலில் ஈடுபடுத்த வேண்டும் என என் அப்பாவும், மாமாவும் நினைத்திருந்தார்கள். இந்நிலையில் 12ம் வகுப்புப் பொதுத் தேர்வில் நான் பெற்ற அதிக மதிப்பெண்கள் அனைவரின் மனதையும் மாற்றி அமைத்தது. அத்தோடு மட்டுமன்றி, என்னைத் தொடர்ந்து படிக்க வேண்டுமென அனைவரும் உற்சாகப்படுத்தினனார்கள். இதன் காரணமாகவே நான் மருத்துவம் படித்து மக்கள் சேவை செய்யும் வாய்ப்பினை பெற முடிந்தது. ஏதாவது ஒரு ‘டையிங்’ தொழிற்சாலையை என்னுடைய பொறுப்பில் கொடுத்துவிட வேண்டும் என்றே நினைத்தார்கள் என் அப்பாவும், என் மாமாவும்.

    நான் படித்த சென்னை மருத்துவக் கல்லூரியில் இந்தியாவில் பிறந்து உலகப் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்களான டாக்டர் ரங்கபாசியம், டாக்டர் வி.பி. பல்ராமன், டாக்டர் சாரதா கதிரேசன், டாக்டர் கல்யாணராமன், டாக்டர் கே.கே. ராமலிங்கம், டாக்டர் சுனிதி சாலமன் போன்றவர்கள் பேராசிரியர்களாக பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் கற்ற மருத்துவக் கல்வி என்னை சிறந்த மருத்துவராக மாற்றியது என்பது மறுக்க முடியாத உண்மை மற்றும் மறக்க முடியாத அனுபவம் என்றே கூறுவேன்.

    அப்போது என்னுடன் மருத்துவம் படித்த 184 பேரில் ஐந்தாண்டுகளிலேயே முழுமையாக மருத்துவ படிப்பு வெற்றிகரமாக முடித்து வெளியே வந்த 35 பேரில் நானும் ஒருவன். மேலும் 65 சதவீதம் மதிப்பெண்களோடு முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். தொடர்ந்து அதே கல்லூரியில் 2 வருடம் குழந்தைகள் நல மற்றும் பொது மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சி பெற்றேன்.

     

    இந்நிலையில் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றேன். அந்த மதிப்பெண்கள் அனைவரின் மனதையும் மாற்றியமைத்தது. தொடர்ந்து படி என்றே அனைவரும் கூறினார்கள். அதனால் மருத்துவம் படிக்க முடிவு செய்தேன். என் விருப்பத்திற்கேற்ப சென்னை மருத்துவக் கல்லூரியில் வாய்ப்பு கிடைத்தது. அப்போது சென்னை மருத்துவக் கல்லூரியில், டாக்டர் அன்புமணி ராமதாஸ், டாக்டர் செங்கோட்டுவேல், விநாயகா மிஷன்ஸ் டாக்டர் கணேசன், திண்டிவனம் ராமமூர்த்தி அவர்களின் மகன், ஆர்காடு வீராசாமி அவர்கள் மகன் என்று 184 பேர் படித்தோம். 6000 பேர் படிக்கும் 175 வருட பாரம்பரியம் கொண்ட சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்தது சிறந்த அனுபவமாக இருந்தது.

    மூன்றாம் ஆண்டின் முடிவில் 65 பேர் தோல்வியடைந்து 120 பேர் மட்டுமே நான்காம் ஆண்டிற்குச் சென்றோம். ஐந்தாண்டுகள் முழுமையாக மருத்துவப் படிப்பு முடித்து வெளியே வந்த 35 பேரில் நானும் ஒருவன். பின்னர் அதே கல்லூரியில் 2 வருடம் குழந்தைகள் நலம் மற்றும் பொது மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சியும் பெற்றேன்.

    பணிஅனுபவத்தைப்பற்றிக்கூறுங்களேன்?

    மேற்படி மருத்துவ படிப்பை முடித்தவுடன் சென்னையிலேயே இரண்டு மருத்துவமனைகளில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பு எனது மருத்துவ பணியின் துவக்க காலத்தில் தமிழகத்தின் தலைநகரில் பணியாற்றியது என்ற வகையில் எனக்குச் சிறந்த அனுபவத்தைக் கொடுத்தது. தொடர்ந்து நான் வளர்ந்த ஊரான திருப்பூர் மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதை ஆட்கொண்டிருந்தது. இதன் காரணமாக திருப்பூருக்கு வந்து அடுத்தடுத்து அறக்கட்டளைகள் நடத்திய மூன்று மருத்துவமனைகளில் பணியாற்றி ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். தொடர்ந்து அரிமா சங்க மருத்துவமனையில் பணியாற்றி பல்வேறு விதமான மக்களை சந்தித்தது அவர்களுக்கான மருத்துவ சிகிச்சை கொடுத்தது என் வாழ்வில் என்றும் நினைவில் நிற்கும் நிகழ்வாகும். குறிப்பாக ஏழை எளியவர்களுக்கு மருத்துவ சிகிச்சையளிக்கும் வாய்ப்பை அந்த அமைப்புகளின் வாயிலாக நான் பெற்றேன். அந்த அனுபவம் தான் பிற்காலத்தில் எனக்கு குறைந்த கட்டணத்தில் சிறந்த தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற உந்துதலைக் கொடுத்தது.

    தனியாகமருத்துவமனைஆரம்பிக்கவேண்டும்என்றஎண்ணம்எப்போதுஉதித்தது?

    வருடம் 1994. திருப்பூரில் உள்ள ஒரு டிரஸ்ட் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். திடீரென ஒரு நாள் தங்கள் மருத்துவமனைக்கு வேறு மருத்துவரை பணியமர்த்திக் கொள்ளவிருப்பதால் என்னுடைய சேவையை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள்.

    மருத்துவத்துறையில் பின்தங்கியிருந்த திருப்பூர் மக்களுக்கு உடனடி சிகிச்சை தேவைப்படும்போது அதற்கான மருத்துவக் கருவிகள் உள்ள ஒரு நல்ல மருத்துவமனை திருப்பூரில் இல்லாமல் இருந்தது. அதுபோன்ற ஒரு நல்ல மருத்துவமனையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு தனியாக இப்போது இருக்கும் மருத்துவமனைக்கு எதிரில் சிறிய அளவில் ஒரு கிளினிக்கை ஆரம்பித்தேன்.

    அன்றிலிருந்து தனியாக மருத்துவம் பார்க்கத் தொடங்கினேன். தற்போது இருக்கும் மருத்துவமனைக்கு எதிரில் தான் என்னுடைய முதல் ‘கிளினிக்’கை ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றிய அனுபவமும், அதில் சந்தித்த பல்வேறு வகையான மனிதர்களின் சந்திப்பும் என்னை சிறந்த மருத்துவர் என்று மக்கள் மனதில் அடையாளப்படுத்தியிருந்தது அந்தக் காலகட்டத்தில்.

    அதனால் நிறைய பேர் சிகிச்சைக்காக வர ஆரம்பித்தார்கள். புதிதாக ஆரம்பித்த ‘கிளினிக்’கில் 24 மணிநேரமும் தொடர்ந்து காலை முதல் நள்ளிரவு வரை 300 – 400 பேர் வரை மருத்துவம் பார்த்தேன். அடுத்தடுத்த மாதங்களில் ‘கிளினிக்’கின் வேகமான வளர்ச்சி நோயாளிகளுக்கு போதுமான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்கியது. நிலையை ஏற்படுத்தியது. உடனடியாக மருத்துவமனையை தொடங்க முயற்சிகளை மேற்கொண்டேன். அப்படி உருவானது தான் தற்போது இருக்கும் ரேவதி மருத்துவ மையம்.

    குறுகியகாலத்திலேயேஏற்பட்டுவிட்டரேவதிமருத்துவமையத்தின்சாதனைகுறித்து

    எங்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கான செலவு வெகு குறைவு. எனவே ஆயிரக்கணக்கான நோயாளிகள் தினமும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கிறார்கள். இங்கு வரும் நோயாளிகளில் 60 சதவிகிதம் பேர் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள். இவர்கள் மற்ற மருத்துவமனைக்கு செல்லும் போது ஆகும் செலவைவிட இங்கு சிகிச்சை பெறுவதற்கு ஆகும் செலவு குறைவு தான். ஆனôலும் மருத்துவ சேவையிலும், தரத்திலும் எந்தக் குறைபாடும் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

    எங்களுடைய அடிப்படைக் கொள்கையே இதுதான். குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவை. தரமான சிகிச்சை. இதனை ஒரு புண்ணியமாகவே கருதுகிறேன். இந்த மாதிரி செய்யப்படும் புண்ணியங்கள் ஒரு வட்டம் மாதிரி நமக்கே திரும்ப வரும். அதிக எண்ணிக்கையில், குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிப்பதால் இன்னும் அதிகம் பேர் வருகிறார்கள்.

    எங்களிடம் சிகிச்சை பெற்று சென்றவர்களின் மதிப்பு வாய்ந்த பரிந்துரைகளினால் ரேவதி மருத்துவ மையத்தின் மதிப்பும், கௌரவமும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கூடுகின்றன. அதைத் தொடர்ந்து மேலும் பல நோயாளிகள் வந்து குறைந்த கட்டணத்தில் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். குறைந்த கட்டணம், தரமான சிகிச்சை என்பதே எங்களின் சாதிப்பிற்குக் காரணம். மக்கள் எங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையே இந்த சாதனைக்கு முக்கிய காரணம். தவிர எங்கள் மருத்துவ மையத்தின் இருதய துறை நிபுணர் டாக்டர் பார்திபன், நரம்பியல் நிபுணர் டாக்டர் குணசேகரன், மயக்கவியல் நிபுணர் டாக்டர் ராஜா போன்றோரின் சேவையும், செவிலியர்கள், பணியாளர்கள், போன்றோரின் சேவையும் இந்த வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

     தமிழக முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்ததற்காக விருதினை எங்கள் மருத்துவ மையம் பெற்றுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு அப்பெல்லோ மருத்துவமனை இருதய நோய் நிபுணர் டாக்டர் செங்கோட்டுவன் தலைமையில் நடைபெற்ற இலவச இருதய நோய் சிகிச்சை முகாம் எங்கள் மருத்துவமனை வரலாற்றில் ஒரு மைல் கல்.

    2005ம் ஆண்டு மெட்ராஸ் மெடிக்கல் மெசினோடு இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமில் 2000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றது மருத்துவ உலகில் ஒரு வரலாற்றுச் சாதனையாகும்.

     

    திருப்பூரில்அமைதியாகசெயல்பட்டுவரும்ரேவதிமருத்துவமையம்ஏழைஎளியவர்களுக்குஒருகலங்கரைவிளக்கமாகமாறியதுஎப்படி?

    திருப்பூரில் பணியாற்றும் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் படிப்பறிவு குறைவானவர்கள் அல்லது படிப்பறிவே இல்லாதவர்கள் என்றே சொல்லலாம். கடுமையான உழைப்பாளிகள், ஆனால் அவர்களின் ஊதியம் குறைவானதாகவே இருக்கும். அதில் சேமிப்பு என்பது முற்றிலும் இருக்காது.

    இந்நிலையில் அவர்கள் பெரிய மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறும் நிலையில் அவர்கள் இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். அத்தகையவர்களுக்கு ஒரு பெரிய மருத்துவமனையில் கொடுக்கப்படும் தரமான சிகிச்சையைக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு கனவின் வெளிப்பாடு தான் இந்த ரேவதி மருத்துவ மையம்.

    முதலில் சிறிய அளவில் தொடங்கிய இந்த மையம் ஒரு நெகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத ஒரு நிகழ்வின் மூலம் அனைத்து அடிப்படை கட்டமைப்புடன் கூடிய அனைத்து வசதிகளும் நிறைந்த மருத்துவமனையாக உருவெடுத்தது. அந்த நெஞ்சை நெகிழச் செய்யும் நிகழ்வு, ஒருநாள் காலை 9.30 மணி அளவில் ஒரு ஏழை தொழிலாளி ‘பார்பர்’ தனக்கு நெஞ்சில் அங்கிருந்து 2 பர்லாங்கு தொலைவில் உள்ள ஒரு இடத்திற்குச் சென்று எரிச்சல் இருப்பதாக என் மருத்துவமனைக்கு வந்தார். பரிசோதித்து பார்த்த நான் அவரிடம், தனியார் திரையரங்கிற்கு அருகில் உள்ள பரிசோதனை சென்டருக்கு சென்று ஒரு ECG எடுத்து வாருங்கள் என்று கூறினேன். அதற்கு ‘அய்யா, நான் இன்று வேலைக்குச் சென்றால் 1000 ரூபாய் சம்பாதிக்க முடியும். அதை விட்டுவிட்டு நான் ECG எடுத்துக்கொண்டு வந்து சிகிச்சை பெறும் நிலையில் இல்லை. உங்களால் முடிந்தால் இந்த மருத்துவமனையில் பரிசோதித்து எனக்கு சிகிச்சையளியுங்கள். இல்லை என்றால் நான் வேலைக்குச் சென்று விடுகிறேன்’ என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

    அப்போது எங்களிடம் ECG கருவி இல்லாததால் அவரை பரிசோதிக்க முடியாமல் அனுப்பி விட்டோம். பகல் 12.30 மணி அளவில் அதே மனிதரை எங்கள் மருத்துவமனைக்கு எடுத்து வந்தார்கள், உயிர் இருக்கிறதா என்று பரிசோதிக்க, பெரிய அதிர்ச்சி எனக்கு. காலையில் உயிருடன் வந்தவர், மூன்று மணிநேரத்தில் உயிரற்ற சடலமாகிவிட்டார். இருந்தார்.

    இந்த நிகழ்வு எனக்குள் பல்வேறு கேள்விகளை எழுப்பியது க் கேட்டது. இதயத்தை பலமாக அதிர வைத்த இந்த நிகழ்விற்குப் பின்னர் பல திட்டங்களை வரையறுத்தேன். உடனடியாக ஒரு ECG மெசினை வாங்க முடிவு செய்தேன். தாமதிக்காமல் அடுத்த நாளே ஒரு மெசினை வாங்கினேன்.

    ECG மெசின் மட்டும் என்னிடம் அன்று இருந்திருந்தால் அந்த ஏழைத் தொழிலாளியைக் காப்பாற்றியிருக்கலாம் என்ற என்னுடைய ஏக்கம் தான் என் மருத்துவமனையில் அனைத்து உயிர் காக்கும் அடிப்படை கருவிகளையும் நிறுவச் செய்தது. மேலும் எல்லா தரமான மருத்துவக் கருவிகளையும் மருத்துவமனையில் நிறுவினேன். தொடர்ந்து  வற்றையும் தரப்படுத்தினேன். மருத்துவமனைகளில் உள்ள பல்வேறு பிரிவுகள், கருவிகள், சேவைகள் அனைத்தும் தரம் உயர்த்தப்பட்டது. இப்போது அனைத்து வசதியும் நிறைந்த ஒரு மருத்துவ மையமாக 24 மணி நேரமும் செயல்படுகிறது.

    ஒருமருத்துவராகஇருப்பதற்கும், மருத்துவமனையைநிர்வாகம்செய்யும்நிர்வாகியாகஇருப்பதற்கும்உள்ளவேறுபாடுகளைஎப்படிஎடுத்துக்கொள்கிறீர்கள்?

    கண்டிப்பாக நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. மருத்துவராக எத்தனை நோயாளிகள் வந்தாலும் சிகிச்சையளித்துவிட முடியும். ஆனால் ஒரு சிறந்த நிர்வாகத்தைக் கொடுப்பது என்பது மிகவும் சவாலான காரியம். ஆனாலும் செய்து வருகிறேன். அதற்கு உதவியாக என்னிடம் இருக்கும் தன்னம்பிக்கையும், உடனடியாக கற்றுக்கொள்ளும் பழக்கமும், அப்பா, அம்மாவிடம் பெற்றோரிடம் இருந்து கற்றுக்கொண்ட கடுமையான உழைப்பும், விடாமுயற்சியும், சரியான நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருக்கிறது.

    பணி நிமித்தம் உடனடியாக முடிவை எடுத்துவிடுவேன். தொலைநோக்குப் பார்வை இருப்பதால் சின்னச்சின்ன விசயங்களைக் கூட கருத்தில் கொண்டு முடிவு செய்வேன். அதனால் தான் நிர்வாகத்தில் பிரச்சனை இன்றி செல்கிறது. மேலும் வரவு, செலவு நோயாளிகள் மற்றும் பொதுமக்களை உபசரிப்பது போன்றவற்றை எனது மனைவி பார்த்துக் கொள்வதால் நிர்வாகத்தை சிறப்பாக நடத்த முடிகிறது.

    பெரியநகரங்களில்இருக்கும்மருத்துவமனைக்கும், திருப்பூர்போன்றசிறியநகரங்களில்இருக்கும்மருத்துவமனைக்கும்உள்ளவேறுபாடு?

    சிகிச்சையளிப்பதில் எந்த மாறுபாடும் இல்லை. ஆனால் பொதுமக்கள் மனதில் பெரிய நகரங்களில் இருக்கும் மருத்துவமனைகளில் தான் சிறப்பான சிகிச்சை கிடைக்கும் என்ற தவறான எண்ணம் நிலைகொண்டுள்ளது.

    பெரிய மருத்துவமனைகளில் இருக்கும் அனுபவம் குறைந்த டாக்டர்கள் சொல்வதைக் கேட்கும் அவர்கள் எங்களைப் போன்ற சிறிய மருத்துவமனையில் அதிக அனுபவம் பெற்ற டாக்டர்களான நாங்கள் சொல்வதைக் கேட்பதில்லை. இந்நிலை மாறவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இது மாற வேண்டும் என்பதே என் கருத்து. மேலும் நாங்களும் பெரிய நகரங்களின் மருத்துவமனைகளால் கைவிடப்பட்ட நோயாளிகளுக்குக் கூட பல்வேறு சவாலான நேரங்களில் சிகிச்சையளித்து பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறோம். ஆனால் சிறிய நகரங்களில் மருத்துவமனையாக இருப்பதால் அதற்கான அங்கீகாரம் எங்களுக்குக் கிடைப்பதில்லை… கண்டிப்பாக இதை எங்கள் மருத்துவமனை மாற்றியமைக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

    முதன்முதலாகஆன்லைனில்சி.டி. ஸ்கேன்ரிப்போர்ட்பெற்றுசிகிச்சையளித்ததாகக்கேள்விப்பட்டோம். அதைப்பற்றி

    பொதுவாக ‘சி.டி. ஸ்கேன் ரிப்போர்ட்’ கொடுப்பதற்கு குறைந்தபட்சம் 6 மணி நேரத்தையாவது எடுத்துக்கொள்வார்கள். ரிப்போர்ட் கிடைத்தவுடன் தான் மேல் சிகிச்சைக்குச் செல்ல முடியும் என்ற நிலையில் காலதாமதம் பெரிய நெருக்கடியைக் கொடுத்தது. அப்போதுதான் என்னுடைய நண்பரும் டாக்டருமான சேலத்தில் ரேடியாலிஜிஸ்ட்டாக பணியாற்றும் ஈ. ரவி, சி.டி. ஸ்கேனைப் பார்த்து பரிசோதித்து உடனடியாக ஆன்லைனில் ரிப்போர்ட்டை அனுப்பிவிடுவார். அதிகபட்சம் 3 நிமிடங்களில் ‘சி.டி. ஸ்கேன் ரிப்போர்ட்’ எங்களுக்குக் கிடைத்துவிடும். அதனால் விரைவாக, மேல்சிகிச்சையைத் தொடர முடிகிறது.

    இந்த முயற்சிக்குப் பல்வேறு விதமான இடையூறுகள் ஏற்பட்டன. சட்டத்தின்படி இந்த ‘ரிப்போர்ட்’ செல்லத்தக்கது அல்ல… பின்னால் ஏதாவது பிரச்சனை வந்தால் சட்டச்சிக்கல் ஏற்படும் என்றெல்லாம் கூறினார்கள். ஆனாலும் நாங்கள் இந்த முறையைத் தொடர்ந்தோம். தற்போது எலக்ட்ரானிக் கையெழுத்து (Electronic Sign) சட்டப்படி செல்லும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது எங்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன்.

    ரேவதிமருத்துவமையத்தின்சமூகசேவைகுறித்து?

    பல்வேறு சமூக அமைப்புகளுடன் இணைந்தும், ரோட்டரி, அரிமா போன்ற சங்கங்களுடன் இணைந்தும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையளித்து வருகிறோம். இதுவரை சுமார் 2000க்கும் மேற்பட்ட சிறப்பு இலவச மருத்துவ முகாம்கள் (Special Camp) நடத்தி இலட்சக்கணக்கான மக்களுக்கு இலவச மருத்துவ சேவையை வழங்கி உள்ளோம். வசதியைக் கொடுத்திருக்கிறோம்.

    ரேவதி அறக்கட்டளை மூலம் திருப்பூருக்கு அருகில் உள்ள மங்கலம் மற்றும் பூளுவபட்டியில் சிறிய அளவிலான மருத்துவமனையை நிறுவி அங்கும் சிகிச்சைக்கான வசதியை செய்து கொண்டும் இருக்கிறோம். திருப்பூரில் பத்துக்கும் மேற்பட்ட நெடுஞ்சாலைகயில் ஆம்புலன்ஸ்களை நிறுத்தி வைத்து விபத்துக் காலங்களில் சிறப்பாக செயல்பட்டு பல உயிர்களைக் காப்பாற்றியதற்காக தமிழக கவர்னரின் பாராட்டையும், விருதையும் பெற்றுள்ளோம். ரோட்டரின் சங்கத்தின் சார்பில் எனக்கு வழங்கப்பட்ட தொழில் முறை இளம் சாதனையாளர் விருது எங்கள் மருத்துவமனையின் சேவைக்குக் கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன். இனியும் இதே சேவையைத் தொடருவோம்.

    மிகக் குறைந்த கட்டணத்தில் சிகிச்சையளித்தும், திருப்பூருக்கு அருகில் உள்ள பூளுப்பட்டியில் ஒரு கிளினிக்கை ஏற்படுத்தி அங்கும் இலவச மருத்துவ வசதியைச் செய்து கொடுத்துக்கொண்டும் இருக்கிறோம். ரேவதி மருத்துவ மையம், விபத்து காலங்களில் சிறப்பாக செயல்பட்டு பல உயிர்களைக் காப்பாற்றியதைத் தமிழக கவர்னர் அவர்கள் பாராட்டி பரிசுகளைக் கொடுத்திருக்கிறார். இதற்காக

    ரோட்டரி சங்கத்தின் சார்பிவாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றிருக்கிறேன். எங்களின் சீரான சேவைக்குக் கிடைத்த அங்கீகாரமே இது எனக் கருதுகிறேன்… தொடர்ந்து இதே சிகிச்சையைக் கொடுப்போம்.

    பல்வேறுவேலைப்பளுகளுக்கிடையிலும்தொடர்ந்துபடிக்கிறீர்களேஎப்படி?

    பொது மருத்துவம் முடித்த நான் தற்போது பல்வேறு சிறப்பு பட்டயப் படிப்புகளை முடித்திருக்கிறேன். அதற்குக் காரணம் புதிய விசயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தீராத ஆர்வம் தான். குறிப்பாக ‘ஐ.சி.யு. கிரிட்டிகல் கேர்’ (ICU Critical Care) சம்பந்தமாக ஒரு வகுப்புக்கு அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்ற போது பல ஆக்கப்பூர்வமான விசயங்களை, புதிய விசயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது. ஏற்கனவே அவசர சிகிச்சைப் பிரிவில் சிறிது அனுபவம் பெற்றிருப்பதால், புதிதாக அவர்கள் கற்றுத்தந்தவை சொல்லித்தரும் விசயம் எனக்கு பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியது.

    அதேபோல் இதய நோய் சிகிச்சை, சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவம், குடும்ப நலம் போன்ற பல்வேறு பிரிவுகளில் பட்டயப் படிப்புகளை முடித்திருக்கிறேன். இதற்கெல்லாம் காரணம் புதிய விசயங்களைக் சிகிச்சை முறைகளைக் கற்றுக்கொண்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் தான்.

    குடும்பத்தினரின்ஒத்துழைப்புகுறித்து

    என்னுடைய மனைவி ரேவதி , மருத்துவமனையை நிர்வகிப்பதில் மிகப்பெரிய பங்களிப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இரண்டு குழந்தைகள். எனது பெரிய மகன் விஷ்ணு ராகவா ‘கிரின் பார்க்’ பள்ளியில் பதினொன்றாம் வகுப்பும், சிறிய மகன் பிரனவ் 9ம் வகுப்பும் ஊட்டியில் உள்ள பள்ளியிலும் படிக்கிறார்.

    ரேவதிமருத்துவமையத்தின்எதிர்காலத்திட்டம்என்பது

    எந்த ஒரு புதிய செயலில் இறங்கும்போதும் நீண்டகால தொலைநோக்கோடு தான் திட்டமிடுவேன். எனவே குறுகிய காலத்தில் அதிநவீன சிகிச்சைகளான ஏன்ஜியோகிராம், ஏன்ஜியோ பிளாஸ்டர், டையாலிஸிஸ், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற வசதிகளை எங்கள் மருத்துவமனையிலேயே ஏற்படுத்துவது. மேலும் புற்றுநோய் போன்ற நோய்களுக்கான தனிப்பிரிவுகளை உருவாக்கி கதிர்வீச்சு சிகிச்சை போன்ற அதிநவீன சிகிச்சைகளையும் எங்கள் மருத்துவமனையிலேயே ஏற்படுத்துவது.  மேற்குறிப்பிட்ட இரண்டு திட்டங்களையும் நிறைவேற்றி திருப்பூர் மக்களுக்கு திருப்பூரிலேயே உலகத்தரம் உள்ள சிகிச்சையை குறைவான செலவில் ரேவதி மருத்துவ மையத்திலேயே பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்பதுவே எங்கள் எதிர்காலத்திட்டம்.

    திட்டத்துடன் ‘பெரியதாக குறி வை’ என்ற தத்துவத்தைப் பின்பற்றியே தான் செல்வேன். என்னுடைய எதிர்காலத் திட்டம், நோயாளிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையை மிகக்குறைந்த செலவில் கொடுக்க வேண்டும். அந்த உயர்ந்த நோக்கத்தை நோக்கியே என்னுடைய திட்டம் அமைந்திருக்கிறது. தற்போது இரண்டு விதமான திட்டங்களை வகுத்திருக்கிறேன். 1. குறுகிய காலத்தில் ஏற்படுத்த வேண்டிய வசதிகள். 2. நீண்ட காலத்தில் ஏற்படுத்த வேண்டிய வசதிகள்.

    குறுகிய காலத்தில் (ஓராண்டுக்குள்) ஏன்ஜியோகிராம், ஏன்ஜியோ பிளாஸ்டர், டையாலிஸிஸ், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற வசதிகளை ஏற்படுத்துவது.

    நீண்டகாலத்தில் (5 ஆண்டுகளில்) புற்றுநோய்க்கான சிகிச்சையளிக்க தனியாக ஒரு கட்டிடம் (Cancer Block) அதில் புற்றுநோய் கதிர்வீச்சு மற்றும் புற்றுநோய்க்கான சிறப்பு மருத்துவம் கொடுக்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்துவது.

    இந்த இரண்டு திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துவிட்டால் நோயாளிகள் மிகச்சிறந்த உலகத்தரமான சிகிச்சையைக் குறைந்த செலவில் ரேவதி மருத்துவ மையத்திலேயே பெற முடியும்.

    வளர்ச்சிக்காலம்

    ரேவதி மருத்துவ மையத்தின் வெற்றிப்பயணத்தில் சில மைல் கற்கள் இவை:

    1994ல் சிறிய அளவில் ‘கிளினிக்’ தொடங்கப்பட்டது.

    2001ல் 20 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டது.

    2005ல் 5 மாடி கட்டிடமாகவும், 75 படுக்கைகள் கொண்ட குறைந்த செலவு மருத்துவமனையாக மாறியது. அப்போது சி.டி. ஸ்கேன். ரத்த வங்கி, நவீன தீவிர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, இருதய நோய் பிரிவு, நரம்பியல், எலும்பு முறிவு, விச முறிவு, குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவு, லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை பிரிவு ஆகியவை தொடங்கப்பட்டன.

    2006ல் – சி.டி. ஸ்கேன், இரத்த வங்கி கொண்ட மருத்துவமனையாக விரிவடைந்தது.

    2013ல் தீவிர சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், இதய நோய் பிரிவு கொண்ட மருத்துவ மையமாக விரிவடைந்தது.

    2013ல் 150ஆக படுக்கைகளுடன் வசதிகள் அதிகரிப்பதுடன் பல்வேறு சிறப்பு பிரிவுகள் மற்றும் அதிநவீன உலகத்தரம் வாய்ந்த மருத்துவக் கருவிகளுடன் விரிவுபடுத்தப்பட்டது. கொண்ட மருத்துவ மையமாக மாறுவதற்குத் தேவையான கட்டமைப்புடன் கூடிய 5 மாடிக் கட்டிடம் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டது.

     

    ரேவதிமருத்துவமையத்தில்அளிக்கப்படும்சிலசிறப்புசிகிச்சைகள்

    கருவுற்ற 4 மாதம் முதல் குழந்தை பிறக்கும் வரை ஆகும் பிரசவ கால செலவுகள் அனைத்துக்கும் ரூ.4500 மட்டுமே.

    இ.எஸ்.ஐ. சந்தாதாரர்களுக்கு அனைத்துவிதமான சிகிச்சையும் இலவசமாக செய்யப்படுகிறது.

    நெசவாளர்கள் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை கொடுக்கப்படுகிறது.

     உலகத் தரம் வாய்ந்த முழுமையான உடல் பரிசோதனை ( ) மிகக் குறைந்த செலவில் செய்யப்படுகிறது.

     இரத்த வங்கி ஏற்படுத்தியதன் நோக்கம்:

    2003-04ம் ஆண்டுகளில் சாலை விபத்தில் கடுமையான காயங்களுடன் வருபவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கும்போது அவர்களுக்குத் தேவையான இரத்தம் கிடைப்பது அரிதாக இருந்தது. உடனடியாக தேவைப்படும் ரத்தம்கூட கோவை மாநகரில் இருந்துதான் வாங்கிவர வேண்டிய சூழ்நிலை.

    இரத்தம் பெறுவதில் ஏற்பட்ட இந்த காலதாமதத்தால் சாலை விபத்தில் காயமுற்றவர்களை காப்பாற்றுவதில் பெரிய பின்னடைவு ஏற்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு ரேவதி மருத்துவ மையத்திலேயே இரத்த வங்கியை ஏற்படுத்தினால் அவசர காலங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், 2005ம் ஆண்டில் இரத்த வங்கி ஏற்படுத்தப்பட்டது.

    தற்போது திருப்பூர் மாவட்டத்தில் இரத்தம் தேவைப்படுபவர்களுக்கு உடனடியாக கிடைக்கச் செய்து வருகிறது ரேவதி மருத்துவமனை.

    அளிக்கப்படும்சிகிச்சைகள்:

    மாரடைப்பு, பக்கவாதம், மூட்டு மாற்று மற்றும் எலும்பு முறிவு, விபத்து அவசர சிகிச்சை, லேப்ராஸ் கோபிக், சர்க்கரை நோய், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை, சிறுநீரகக் கல், சதை வளர்ச்சி, விசமுறிவு சிகிச்சை, குடிபோதை மறுவாழ்வு சிகிச்சை என்று அனைத்து விதமான சிகிச்சைகளும் உலகத் தரமான முறையில் அளிக்கப்படுகிறது.

    அன்றாடக் கேள்விகள் – 5

    தங்கவேலுமாரிமுத்து

     

    அது ஒரு பெரிய தொழில் நிறுவனம். காலை பதினொரு மணி. நிறுவனத்தின் சேர்மன் தலைமையில் மேலாளர்களின் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது.   உற்பத்திப் பிரிவின் மேலாளரைப் பார்த்து சேர்மன் கேட்கிறார்,

    இந்த ஆண்டு நமது நிறுவனத்தின் உற்பத்தி இலக்கு எவ்வளவு என்று தெரியுமல்லவா?

    தெரியும் சார். பன்னிரெண்டு லட்சம் பொருட்கள்.

    ஆண்டு தொடங்கி எவ்வளவு மாதம் ஆகியிருக்கிறது?

    நான்கு மாதங்கள் சார்.

    இதுவரை எவ்வளவு உற்பத்தி ஆகியிருக்க வேண்டும்?

    நான்கு லட்சம் சார்.

    எவ்வளவு ஆகியிருக்கிறது? மூன்று லட்சத்து எண்பதினாயிரம் பொருட்கள் சார்.

    மீதி இருபதாயிரம்?

    சார், அதுவந்து… ஒரு மெஷின் திடீர்னு பிரேக்டவுன் ஆகிவிட்டது. சரி செய்வதற்கு நாலைந்து நாட்கள் ஆயிடுச்சு சார்.

    அது சரி. இந்த இருபதாயிரத்தை எப்போது ஈடுகட்டப் போகிறீர்கள்?

    இந்த மாதமே ஈடுகட்டிடலாம் சார்.

    ஓ.கே.

    அடுத்து மெயின்டனன்ஸ் மேனேஜரை பார்க்கிறார் சேர்மன்.

    ஏன் இந்த திடீர் பிரேக்டவுன்? என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

    சார், ஒரு முக்கியமான ஸ்பேர் பார்ட், ஏற்கனவே ஆர்டர் செய்திருந்தோம். அந்த சமயத்துல அது வராம போய்டுச்சு.

    அடுத்ததாக பர்ச்சேஸ் மேனேஜரைப் பார்க்கிறார்.

    உற்பத்தி இலக்கு எவ்வளவு முக்கியம் என்றும் அதற்கு இயந்திரங்களின் பராமரிப்பு எவ்வளவு முக்கியம் என்றும் தெரியுமல்லவா?

    தெரியும் சார்.

    என்னத்த தெரியும்? அந்த ஸ்பேர் பார்ட் வாங்கித் தர்றதுல ஏன் இவ்வளவு லேட்?

    சார், ரொம்ப அட்வான்ஸாவே ஆர்டர் போட்டுட்டோம் சார். ஆனா அந்தக் கம்பெனியில ஏதோ லேபர் ப்ராப்ளம். அதான் இப்படி டிலே ஆயிடுச்சு.

    இதப்பாருங்க. எல்லாத்துக்கும் எல்லார்கிட்டயும் காரணம் இருக்குது. காரணங்களைச் சொல்லிக்கிட்டிருக்கிறது நம்ம வேலை இல்ல. இனி மேலாவது இந்த மாதிரி எந்தப் பிரச்சனையும் வராமப் பார்த்துக்கங்க. டார்கெட்டை மீட் பண்றது தான் நம்ம எய்ம். மறந்துடாதீங்க. மறுபடியும் இந்த மாதிரி என்னை அட்வைஸ் பண்ண வைக்காதீங்க.

         – இப்படிப் போகிறது மீட்டிங்.

    இந்த உரையாடலின் சாரம்சத்தை, அதாவது மெஸேஜை, நமது வாழ்க்கையில் நாம் ஏன் கடைபிடிப்பதில்லை? ஏனென்றால் எதிலிருந்தும் எந்த மெஸேஜயும் நாம் கற்றுக்கொள்வதில்லை.

    இந்த நிறுவனம், தினந்தோறுமோ, வாரந்தோறுமோ, மாதந்தோறுமோ இப்படி மீட்டிங் நடத்தி, தங்களைத் தாங்களே சுய ஆய்வு செய்து கொள்வதால் தானே ஆண்டின் இறுதியில் தனது இலக்கை அடைந்து காட்டுகிறது?

    நீங்கள் ஒரு குடும்பத் தலைவனாக இருக்கலாம். சிறுதொழில் செய்பவராக இருக்கலாம். சிறுவியாபாரியாக இருக்கலாம். மாணவனாகவும் இருக்கலாம்.

    எல்லோருக்குமே ஏதாவது ஒரு இலக்கு இருக்கும். அப்படியென்றால், அந்தத் தொழில் நிறுவனத்தின் சேர்மனைப்போல் உங்களை நீங்களே அவ்வப்போது சுயஆய்வு செய்து கொள்ள வேண்டாமா?

    அவ்வப்போது என்ன அவ்வப்போது? ஒவ்வொரு தினமுமே காலையிலோ அல்லது இரவிலோ உங்களை நீங்களே சிறிய அளவில் ஒரு ஆய்வு செய்து கொள்ளலாமே.

    உதாரணத்திற்கு, தினமும் இரவில் படுக்கைக்குப் போவதற்கு முன்னால் நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய ஐந்தே ஐந்து கேள்விகளை இங்கே தருகிறேன். முயற்சி செய்து பாருங்களேன்.

    எனது இலட்சியம் என்ன?

    எந்தத் தேதிக்குள் (ஆண்டுக்குள்) அதை அடைய வேண்டும்?

    அதற்காக இன்று என்ன செய்தேன்?

    அதற்காக நாளை என்ன செய்யப்போகிறேன்?

    இதுவரை, எந்த அளவுக்கு அந்த லட்சியத்தை நெருங்கியிருக்கிறேன்?(%)

    பதில்கள், மிகச்சரியாக, மிகத் தெளிவாக வர வேண்டும். அந்த பதில்கள், உங்களுக்கு திருப்தி தர வேண்டும். அல்லது சுளீரென்று நெஞ்சில் உறைக்க வேண்டும். உங்கள் சோம்பலைச் சுட்டுப்பொசுக்க வேண்டும். உறக்கத்திலிருந்து உங்களை எழுப்பிவிட வேண்டும். எழுந்தால் போதாது. இலக்கை நோக்கி ஓட வைக்க வேண்டும்.

    அப்படி ஓடினால், இலக்கை எளிதாகத் தொட முடியும். நிச்சயமாகத் தொட முடியும்.

    இன்றைக்கே ஆரம்பிக்கலாமே, அன்றாடக் கேள்விகள் ஐந்தை…

    தன்னம்பிக்கை மேடை

    காவல் நிலையம் செல்வதிலுள்ள தயக்கம் பயம் நீங்க மக்கள் பிரதிநிதிகள் சார்பாக ஒரு அமைப்பு தேவை என்று கருதுகிறேன்? தங்கள் கருத்து?

    க. சோமசுந்தரம், I.T.S.

    ஸ்ரீ வில்லிபுத்தூர் – 626 125.

     

         நகை திருட்டுப் போகுதல், வயது வந்த பிள்ளை காணாமல் போகுதல், பக்கத்து வீட்டுக்காரரின் தொந்தரவு, டெபாசிட் செய்த பணத்தை ஏமாற்றியவர்கள் மீதான புகார், வரதட்சனைக் கொடுமை இப்படி பல்வேறு விசயங்களுக்காக காவல்நிலையத்திற்கு அவசியம் நியாயம் கேட்டு வந்துதான் ஆக வேண்டி இருக்கிறது. அதனால் இப்போது உள்ள சூழலில் பொதுமக்களிடம் காவல்நிலையத்திற்கு வருவதில் தயக்கம் உள்ளதாக நான் கருதவில்லை.

          சின்னச்சின்ன விசயங்களுக்கு வேண்டுமானால் காவல்நிலையம் வருவதற்கு தயக்கம் இருக்கலாம்.

          இப்போது தமிழக காவல்நிலையங்களில் 80 சதவீத குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விடுகின்றன. மேலும் வெளிக்காட்டிக்கொள்ள தயக்கப்படுகின்ற (ஈவ் டீசிங், வயது பெண் காணாமல் போவது) விசயங்களுக்கு வழக்கு பதிவு செய்யாமலேயே விசாரித்து தீர்வுகள் வழங்கப்படுகிறது.

          காவல்நிலையத்திற்கும் பாதிக்கப்பட்டவருக்கும் நேரடித் தொடர்பு இருப்பது தான் நல்லது. காரணம் விசயம் இன்னொருவருக்குத் தெரியவரும்போது அதனால் பல பிரச்சனைகள் வர வாய்ப்பும் இருக்கிறது.

          24 மணிநேரமும் காவல்நிலையங்கள் செயல்படுகின்றன. அங்கு வரவேற்பு அதிகாரிகள் மக்களின் பிரச்சனைகளுக்கு நியாயம் கிடைக்கச் செய்ய தயாராக இருக்கிறார்கள். அதனால் காவல்நிலையம் வருவதற்கு மக்களிடையே தயக்கம் தேவையில்லை. தைரியமாக வரலாம்.

    சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாழ நினைக்கிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

     

    ஆதிசிவம்

    நடுக்காவேரி, திருவையாறு

          சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாழ வேண்டுமென்பது ஒரு குடிமகனின் தலையாய கடமையாகும். முதலில் நீங்கள் என்னென்ன சட்டங்கள் உள்ளது என்பதை அறிந்து கொள்வது அவசியமாகிறது.

          வாகனங்களை ஓட்டுபவர்கள் குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது.

         மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர் தலையில் ஹெல்மெட் அணிவது அவசியம்.

         அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருப்பவர்கள் ஒலி பெருக்கியை அதிகம் வைத்து பக்கத்து வீட்டுக்காரருக்கு தொல்லை கொடுக்கக்கூடாது.

         இதுபோன்ற சட்டதிட்டங்களைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப தாங்களாகவே நடந்து கொள்ள முன்வர வேண்டும்.

          சட்ட திட்டங்களை மீறினால் அதற்கான தண்டனை அவசியம் உண்டு என்பதனை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட்டாலே போதுமானது.

          பான்பராக் தற்பொழுது தடைசெய்யப்பட்டுள்ளது. அதனை விற்பது மிகப்பெரிய தவறு. அதனால் பொதுமக்களுடைய ஆரோக்கியத்திற்கு கேடுகள் ஏற்படக்கூடும் என்பதனை பான்பராக் விற்பவர்கள் உணர்ந்து கொண்டு சட்டத்திற்கு உட்பட்டு அச்செயலைக் கைவிடுதல் வேண்டும். அதனால் வருமான இழப்புகள் ஏற்பட்டாலும் இந்தக் கொடிய செயலைச் செய்யக்கூடாது. அதேபோல கந்துவட்டித் தொழில் செய்வது அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. அந்தத் தொழிலைச் செய்பவர்கள் தானாகவே முன்வந்து நிறுத்திக் கொள்ள வேண்டும். மீறுபவர்களுக்கு தண்டனையும், இழப்பும் காத்திருக்கிறது.

         மற்றவர்களுடைய பொருளுக்கு ஆசைப்படுவது, அவர்களை ஏமாற்ற நினைப்பது மிகப்பெரிய தவறாகும். மீறிப் பிறர் பொருளை அபகரிப்பவர்கள் தண்டனைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக நேரிடும். எனவே மற்றவர்களின் உரிமையையும், சுதந்திரத்தையும் மதித்து நடந்தாலே நீங்கள் சட்டத்தையும், விதிகளையும் மதிப்பவர்களாக ஆகிவிடுகிறீர்கள்.

          பேச்சாலோ, செய்கையாலோ, செயலாலோ மற்றவர்களுடைய உயிருக்கும், உடமைக்கும், தன்மானத்திற்கும், நற்பெயருக்கும், சுதந்திரத்திற்கும் ஆபத்து ஏற்படாமல் நீங்கள் நடந்து கொண்டாலே போதுமானது.

    சான்றோர் சிந்தனை திருப்தி

    ஆர்.கே. ராமசாமி

    ஆர்.கே.ஆர். கல்விநிறுவனங்கள்

    உடுமலைப்பேட்டை

     

    சாதித்து விட்டோம் என்ற முழுமையான மனத்திருப்தி இருந்தால் தான் அவன் மகிழ்ச்சியோடு இருக்க முடியும். முழு மகிழ்ச்சியோடு இருந்தால்தான் உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகும். உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்.

     திருப்தி இரண்டு வகையானது ஒன்று உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் உண்மையான திருப்தி; மற்றொன்று உதட்டளவில் இருந்து வரும் போலியான திருப்தி.

    உணவு, உறக்கம், சுகம், புகழ், செல்வம், அந்தஸ்து, கௌரவம், சகல சுகபோகங்கள், பிள்ளைச் செல்வங்கள், அசையாத சொத்துக்கள் எனக்கு போதுமான அளவு கிடைத்து விட்டது; நான் திருப்தியாக இருக்கிறேன் என்று சொன்னால் அது போலியான திருப்தி.

     கடுமையான முயற்சிகளின் மூலம் செயற்கரிய செயலைச் சாதித்து காட்டிய பின்பு ஏற்படுகிற சந்தோஷமும், திருப்தியும் தான் உண்மையான திருப்தி ஆகும். இதில் தான் முழுமையான மகிழ்ச்சியும், ஆனந்தமும் அடங்கியுள்ளன.

     கடுமையான உழைப்பின் மூலம் ஒரு சாதனையைச் சாதித்துக் காட்டுவது தான் பெருமைக்கும் சிறப்புக்கும் உயர்வுக்கும் புகழுக்கும் காரணமாகிறது.

     யாரும் வெல்ல முடியாத எவரெஸ்ட் சிகரத்தை வென்று காட்டிய டென்சிங் மற்றும் கில்லாரி இருவரிடமும் நிருபர்கள் கேள்வி கேட்டனர். எவரெஸ்ட் சிகரத்தை வெற்றி கண்ட அந்தத் தருணத்தை எப்படி உணர்ந்தீர்கள் என்று கேட்டார்கள்.

     பல பேர் பல ஆண்டுகள் முயற்சித்தும் வெல்ல முடியாது என்று நம்பப்பட்ட அந்த சாதனையைச் செய்து காட்டிய தருணம் விவரிக்க முடியாத அனுபவமாகும். எங்கள் முயற்சி, உழைப்பு அதனால் எங்களுக்கு ஏற்பட்ட வெற்றி எங்களுக்கு மன நிறைவையும் முழு திருப்தியையும் தந்தன. அடுத்த சில நொடிகளில் எங்கள் உள்ளம் வெறுமையாகவும் தோன்றியது. இன்னொரு முறை வெற்றி பெற வேறு சிகரம் உலகில் இல்லையேயென்று ஒரு ஏக்கம் தோன்றியது என்றார்கள். அந்த அசுர சாதனை அவர்களுக்கு முழுதிருப்தியைத் தந்தது.

     காந்தர்வ நாட்டு அரசன் யயாதி, சாதாரண அரசன் அல்ல பேரரசன். அவனுக்கு நூறு வயது 100 மகன்கள். ஒரு அரசன் தன் வாழ்க்கையில் எவ்வளவு இன்பத்தையும், சந்தோஷத்தையும் அடைய முடியுமோ, அதைவிட பன்மடங்கு சந்தோஷத்தை அனுபவித்தவன் தான் இந்த யயாதி.

     ஒருநாள் இரவு திடீரென அவன்முன் வந்து நின்றது மரணம். “புறப்படு, உன் நேரம் வந்துவிட்டது. உன்னைக் கொண்டு போகத்தான் நான் வந்திருக்கிறேன்”. கடமை தவறாத குரலில் சொன்னது மரணம்.

     யயாதி மிகப்பெரிய வீரன். இருந்தாலும், மரணத்தைக் கண்டு நடுங்கினான். “இவ்வளவு சீக்கிரத்தில் என் உயிரைக் கொண்டு போக வந்துவிட்டாயா?” என்று மரணத்திடம் கெஞ்சலாக கேட்டான் யயாதி.

     “சீக்கிரமா? உனக்கு நூறு வயதாகிவிட்டது. உன் முதல் மகனுக்கே எண்பது வயது இன்னும் உனக்கு வாழ ஆசையா?” என்று கேட்டது மரணம்.

     “ஏ… மரணமேÐ எனக்கு நூறு மனைவிகள். எனவே நூறு மகன்கள். எனக்குப் பதிலாக, என் மகன்களில் ஒருவர் உயிர் துறந்து, உன்னோடு வருவதற்கு தயாராக இருந்தால் என்னை விட்டுவிடுகிறாயா?” என்று மரணத்திடம் பேரம் பேசினான் யயாதி.

     “தாராளமாக விட்டுவிடுகிறேன். ஆனால் நூறு வயதான நீயே வாழ ஆசைப்படும்போது, உன்னைவிட வயது குறைந்த உனது மகன்கள் எப்படி உயிர் துறக்கச் சம்மதிப்பார்கள்?” யயாதியிடம் கேட்டது மரணம்.

     யயாதி எல்லா மகன்களையும் அழைத்தான். “எனக்காக உங்கள் உயிரை தியாகம் செய்யப் போகிறவர் யார்?” என்று கேட்டான்.

     கேள்விக்கும் பதில் அமைதி தான். ஆனால் பதினாறு வயது நிரம்பிய அவனுடைய கடைசி மகன் மட்டும் எழுந்து “நான் தயார்” என்றான்.

     அவன் பதிலைக் கேட்டு மரணமே ஒருகணம் திடுக்கிட்டது. “நீ சிறுவன்; ஒன்றும் அறியாதவன்; வாழ்க்கையை அனுபவிக்காதவன்; வயதான உன் அப்பானும், அண்ணன்களும் வாழ்க்கையை நன்றாக அனுபவித்தவர்கள். அவர்களே வரத் தயங்குகிறபோது நீ மட்டும் தயார் என்கிறாயேÐ நன்றாக யோசித்துப் பார்” என்றது மரணம்.

     எந்த தடுமாற்றமும் இல்லாமல் பேச ஆரம்பித்தான் அந்தச் சிறுவன். “நூறு வயது வாழ்ந்த என் அப்பாவால் திருப்தியடைய முடியவில்லை. என் அண்ணன்களும் அப்படியே. யாருமே திருப்தி அடையாத போது நான் மட்டும் ஏன் நூறு ஆண்டுகள் வாழ ஆசைப்பட வேண்டும்? இவர்களைப் போன்று போலித் திருப்தியில் வாழ்வதில் எந்தப் பயனும் இல்லை. குறைந்தபட்சம் என் தந்தைக்காக என் உயிரைத் தியாகம் செய்ய முடிகிறதேÐ அந்த ஆழ்ந்த திருப்தி ஒன்றே போதும்” என்று சொன்னான் அந்தச் சிறுவன்.

     சிறுவன் சொன்னதைக் கேட்டு மரணத்தால் கூட மறுப்புச் சொல்ல முடியவில்லை.

     இந்தக் கதையில் வரும் யயாதி மாதிரி தான் நம்மில் பலரும் இருக்கிறோம். திருப்தி என்கிற விஷயம் நம்மிடம் அவ்வளவு எளிதில் உருவாகிவிடுவதில்லை.

     இலட்சாதிபதி கோடீஸ்வரனாக வேண்டுமென்று நினைப்பது ஆசை, கோடி ரூபாய் சேர்ந்த பிறகும் திருப்தியடையாமல், அதை இன்னும் பல கோடிகளாக்க வேண்டுமென்று நினைப்பது பேராசை.

     நான் நிம்மதியாக இருக்கிறேன் என்று கற்பனை எண்ணமும், நான் திருப்தியாக இல்லை என்ற உணர்வும் கலந்து வெளிப்படும்போது அது போலி திருப்தியாக மாறிவிடுகிறது. உலக விஷயங்களால் திருப்தியே இல்லாமல் அடுத்து, அடுத்து என்று பேராசை பட்டுக்கொண்டு இருப்பது, நம்மிடம் இருந்த கொஞ்ச நஞ்ச நிம்மதியைக்கூடக் கெடுத்துவிடும்.

     சாதித்துக் காட்டுவதில் திருப்தி

    வெற்றி இலக்கை தொட்டு ஜெயிப்பதில் திருப்தி

    மீண்டும் சாதிக்க முனைவதில் திருப்தி

    வானம் வசப்படும் என்ற தன்னம்பிக்கையில் திருப்தி

    ஒழுக்கமாக நடந்து கொள்வதில் திருப்தி

    தியாகம் செய்வதில் திருப்தி

    உண்மையாக இருப்பதில் திருப்தி

    மன்னிப்பதில் திருப்தி

    உதவி செய்வதில் கருணை காட்டுவதில் திருப்தி

    மனித சேவைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொள்வதில் திருப்தி

    வரலாற்றில் தன் பெயரை பதிவு செய்வதில் திருப்தி

    வாழ்வை வென்று காட்டுவதில் திருப்தி

    நன்றே செய்வதில் திருப்தி

    மற்றவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதில் திருப்தி

    கற்றுத் தருவதில் திருப்தி

    பெருந்தன்மையாக நடந்து கொள்வதில் திருப்தி

    நாட்டுப் பற்றில் திருப்தி… என திருப்தி வாழ்க்கைத் திடலில் கொட்டிக் கிடக்கிறது.

     செய்ய முடியாத ஒன்றை செய்து சாதிப்பதில் தான் ஆழ்ந்த திருப்தி உங்களுக்குள் மலரும். ஆழ்ந்த திருப்தியைப் பெறுவதற்குத் தொடர்ந்து உங்கள் புத்திசாலித் தனத்தையும், திறமையையும், தன்னம்பிக்கைûயும், சாதிக்க வேண்டும் என்ற வெறியையும் மனதிலே வளர்த்துக்கொண்டு ஒவ்வொரு நிமிடமும் முனைப்போடு விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்.

     எல்லோரும் திறமையானவர்களே ஒரு சிலரே அந்த திறமையை சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான முறையில் பயன்படுத்தி தன் திறமையை நிரூபிக்கிறார்கள், சாதித்துக் காட்டுகிறார்கள்.

     ஒவ்வொரு மனிதனும் சாதித்த பின்பு தன்னுடைய திறமையை உணர்ந்து கொள்ளும் அந்தத் தருணம் அற்புதமானது.