Home » Post » அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்

 
அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்


அனுராதா கிருஷ்ணன்
Author:

15.ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்று

நம் வாழ்வின் எல்லா அம்சங்களிலும் நாம் சிறப்பாகச் செயலாற்ற முடியாது. அதேபோல் நாம் பார்க்கும் ஒவ்வொரு நபரிடமும் எல்லாமும் போற்றக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒவ்வொருவரிடமும் இருக்கும் தன்மைகளில் நமக்குத் தேவையான
ஒன்றை நாம் உள்வாங்கி நம் வாழ்க்கை மேம்பட பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவரிடமிருக்கும்
சிறப்பு குணத் தன்மையை நாம் உள்வாங்கிக் கொள்ள அவர் சிறப்பானவராகவோ அல்லது
மிகப் பெரிய வெற்றியாளராகவோ இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதேபோல்,
வெற்றியாளராகவோ சிறப்பானவராகவோ இருப்பவரின் எல்லாத் தன்மைகளும் நமக்கு
அவசியம் பிடித்திருக்க வேண்டும் என்றில்லை. ஆக, ஒருவரின் நல்ல குணங்களை காப்பியடிக்க
நமக்கு அவர் பற்றிய விருப்பு வெற்ப்பற்ற தன்மைஇருந்தால் போதும்.

அன்பு நண்பர்களே! தரமாகவும் அதிகமாகவும் படித்ததால் உண்டான தலைகணமும், அடைக்கியும் ஒடுக்கியும் வளர்க்கப்பட்ட விதத்தால் ஏற்பட்ட தன்னம்பிக்கை குறைவும், வெளியுலகத் தொடர்பும் விளையாட்டுமற்ற விதத்தில் கழிந்த இளமைக் காலத்தால் உறவுபாராட்டுதல் இல்லாமலும் இருந்த இந்த அனுராதா கிருஷ்ணன் தான் இன்று உங்களோடு பல புத்தகங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் தொடர்பு நிலையில் இருக்கும்படி வளர்ந்துள்ளேன். இதற்குக்
காரணம் அருட்தந்தை வேதாத்திரி மகரிµ அவர்களிடமிருந்து நான் உள்வாங்கிகொண்ட விருப்பு
வெறுப்பு விட்டு யாரையும் எதனையும் பார்க்கும் தன்மையே காரணமாகும். இந்த ஞானத்தை
உள்வாங்கிக்கொள்ள நான் மக்ரிµன்ய ஆராயவில்லை. அதற்கு பதிலாக நான் என்னை ஆராய்ந்து பார்த்தேன். அது எனக்குத் தேவையாகப்பட்டது. உடனே எடுத்துக்கொண்டேன்.

ஆக, இப்படி நான் என் வாழ்க்கையில் சந்தித்த ஒவ்வொருவரிடமும் நல்லதான ஏதோ ஒன்றை நான் எடுத்துக் கொண்டதால்தான் நான் உங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறேன். நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிடத்திலும் நமக்கான செய்தி காத்திருப்பதாக ஞானி சாக்ரெட்டீஸ் கூறியுள்ளார். அதன்படி நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபரிடம் ஒரு செய்தியையாவது நாம் எடுத்துக்கொள்ள முடியுமல்லவா? ஆகவே, நாம் சந்திக்கும் மனிதர்கள் ஞானியாக அல்லது
போனியாக, முற்றிய ஆன்மாவாக அல்லது முட்டாளாக இருந்தாலும் அவர்களிடம் எப்படி வாழ்வது அல்லது வாழக்கூடாது என்று நாம் அறிந்துகொள்ள முடியும்.

அப்படிச் எல்லோரிடமும் விருப்பு வெறுப்பு விடுத்து சேகரித்த விஷயங்களை என் உள் செலுத்தி அனுபவ முலாம் பூசி வாழ்வியல் இரகசியங்களாக உங்களிடம் விவரித்தும் விரித்தும் காட்டுகிறேன். அப்படிப்பட்ட தேர்ந்தெடுத்த வற்றைத்தான என் அன்றாட வாழ்க்கைச்
செயல்களாக நான் செய்து வாழ்கிறேன். அதன் அனுபவச் சாரம்தான் இந்தப் புத்தகம். இது ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழத் தன் உடலையே பரிசோதனைக் கூடமாக பயன்படுத்தி கண்ட பலன்களை சக மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஆரோக்கியமான வாழ்கையை வாழ வழிகாட்டும் நூலாகப் படைத்துள்ளேன். ஆகவே, இவையாவும் என்னுடையவை அல்ல. இந்த மனிதச் சமுதாயத்திருந்து எடுக்கப்பட்டவையாகும். வேதாத்திரி மகரிµ சொன்னதுபோல் அறிவானது மனித குலத்திற்குப் பொதுவானது ஆகையால், நானும் எனக்குக் கிடைத்ததை என் அனுபவப் பூச்சோடு பொதுவில் வைத்துள்ளேன்.

அன்புத் தோழ தோழியர்களே! இவனுக்கு மட்டும் எப்படி இவ்வளவு விஷயங்கள் தெரிந்திருக்கிறது என்று பொறாமைப்படாமலும், இவன் எங்கேயோ சுட்டுதான் எழுதுகிறான் என்று சந்தேகப்படாமலும், இவன் விடும் கதைகளெல்லாம் உண்மைதானா? என்று கேள்வி
எழுப்பாமலும், இவையெல்லாம் உங்களுக்கு தேவைப்படுமா என்று பாருங்கள். அடுத்து உங்களை
நோக்கி வரும் எந்த ஒரு ஞானத்தையும் விறுப்பு வெறுப்பு விடுத்து விழிப்புணர்வோடு ஞானக் கண் கொண்டு பாருங்கள். அப்புறம், நீங்களும், மற்றவர்களுக்கு நல்லுதாரணமாக ஆவீர்கள்.

நம்மிடம் வரும் ஞானத்தை விழிப்புணர்வுக்
கண் கொண்டு பார்த்து, ஞானக் காது வழி கேட்டு
விருப்பு வெறுப்பற்ற மனம் கொண்டு,
ஆத்ம சுத்தியால் தெரிவு செய்து வாழ்வினில் புகுத்து

ebaylogo1


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2013

வேகமாய் வருகிறது வெற்றி
இந்தியா ஆரோக்கியமாக இருக்கிறதா?
சான்றோர் சிந்தனை
முயற்சிகள் பலவிதம்
நீங்கள் சாதனையாளரே
மாற்றங்களின் வலிமையும் மாறும் தெருக்களும்..
மதிப்பெண் உலகம்
கண் வாசனை
உனக்குள்ளே உலகம்-38
சாதிக்கலாம் வாங்க
என் பள்ளி
பலம் பற்றி சிந்தியுங்கள் பலனை நாளும் சந்தியுங்கள்