Home » Post » அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்

 
அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்


அனுராதா கிருஷ்ணன்
Author:

14.தூக்கமும் ஊக்கமும்

தூக்கம் என்பது நாம் வேலை செய்த களைப்பு நீங்குவதற்காக இறைநிலை செய்த ஏற்பாடுதான் என்று நீங்கள் நினைப்பது கடவுள் சத்தியமாக உண்மையில்லை. உண்மையில் தூக்கத்தின்போது தன்னிச்சை நரம்பு மண்டலம் ஓய்விற்குப் போய், நம் தானியங்கி நரம்பு மண்டலம் விழிப்பு பெற்று நம் உள் உறுப்புகளைப் புத்துணர்வாக்கவே தூக்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நாம் மிக துக்கமாக இருக்கும்போதும், மிக ஆனந்தமாக இருக்குபோதும் நமக்குத் தூக்கம் வருவதில்லை. முந்தைய சூழல் நமக்கு அதிகமான உடல் சோர்வும், பிந்தைய ஆனந்த
மான சூழல் தூக்கம் இல்லாவிட்டாலும் நமக்கு சோர்வு தட்டுவதில்லை. இதற்குக் காரணம்
தூக்கத்திற்கு சம்மான புத்துணர்வை நம் சந்தோஷச் சூழல் அளிக்கிறது.
14
நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், நமக்குத் தூக்கம் வராதபோது தூக்க மாத்திரை எடுப்பது. இதன்பின்னர் நாம் தூங்கி விழிக்குபோது நமக்கு முழுமையான புத்துணர்வு கிடைப்பதில்லை. இதிருந்து நமக்குப் புரிவது என்னவென்றால், நாம் வெறுமெனே உடலை கிடத்துவதாலோ அல்லது மூளையின் விழிப்பைத் தூக்க மாத்திரை மூலம் குறைத்துவிட்டுத் தூங்குவதாலோ நமக்கு புத்தாக்கம் கிடைப்பதில்லை. மாறாக, நம் ஆழ்நிலைத்
தூக்கத்தின் மூலம் வெளி மனதை உறங்க வைத்து, ஆழ்மனதை விழிப்பு நிலைக்குக் கொண்டுவருவதால் மட்டுமே நமக்கு உள்ளுறுப்பு புத்தாக்கம் நடைபெறுகிறது. இது புரியாத ஞானமற்ற ஆங்கில மருத்துவம் தூக்கம் வராதவர்களுக்குத் தூக்க மாத்திரைகளைக் கொடுத்து தூங்க வைப்பதாகக் கூறிக்கொள்கிறது. ஞானமுள்ள மாற்று மருத்துவத்தில் தூக்க மாத்திரை என்ற ஒன்று கிடையவே கிடையாது. அவர்கள் தூக்கம் வராததன் காரணத்தை நீக்கும் செயலைச் செய்கிறார்கள். இதனால், நமக்கு நிம்மதியான தூக்க வரம் கிடைக்கிறது. ஆங்கில மருத்துவ தூக்க மாத்திரையால் மனச்சோர்வும் மன உளைச்சலுமே ஆரோக்கியமற்ற தன்மையுமே கிடைக்கின்றன.

அன்பு நண்பர்களே! ஆழமான தூக்கத்தில்தான் நம் பித்தப்பை மற்றும் கல்லீரல் புத்துணர்வு பெறுகிறது. அப்படி கிடைக்காதபோது மறுநாள் பகல் முழுவதும் ,கல்லீரல் சோர்வும் உடல் வெப்பம் இருக்கத்தான் செய்யும். பகலெல்லாம் உடல் உழைப்போடு இதயமும் உழைத்து களைத்து பின் இரவு 11 மணி முதல் அதிகாலை 1 மணி வரையான கால கட்டத்தில் ஆழமான தூக்கத்தில்தான் தளர்ந்த நிலையில் ஓய்வெடுக்கிறது. இந்த நேரத்தில் ஆழமான தூக்கம் இல்லையென்றால் நம்
இதயமும் உடலும் பலவீணப்படும்.

அடுத்து, நமக்கு ஊக்கம் கொடுக்கும் உடலுறவு பற்றிப் பார்ப்போம். இனிய தாம்பத்தியத்தின் மூலம் நம் உடல் ஆரோக்கியமாகிறது. உடலுறவுக்கு முன் நிகழும் சில்மிஷ
விளையாட்டுகள் நம் உடன்வாய்வை வெளியேற்றுகிறது. உடலுறவுச் செயல் பித்தத்தைப்
போக்குகிறது. உடலுறவிற்குப் பிந்தைய புத்துணர்வு கபத்தை (சளியை) நீக்குகிறது. நம் உடல்
உள்ள உயிர்ச் சத்தியானது நல்ல கொழுப்பிருந்துஎலும்பு மற்றும் நரம்பு வழியாக விந்து நாதத்திற்கு வந்து சேர்கிறது. ஆக, நம்மிடம் உள்ள உயிர்ச் சக்தியும் நல்ல கொழுப்பின் அளவுமே ஆரோக்கிய உடலுறவை தீர்மானிக்கிறது. ஆரோக்கியமான உடலுறவு என்பது இரவு 7 மணி முதல்
9 மணி வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ள வேண்டும். பட்டப்பகல்மேற்கொள்ளும் உடலுறவால், நம் உடன் நெருப்புச் சக்தியை வெகுவாகக் குறைக்கும். உணவு சாப்பிட்ட பின் உடனே மேற்கொள்ளும் உடலுறவும் ஜீரணத்தைக் கெடுக்கும். அதிகாலையில் மேற்கொள்ளும் உடலுறவானது, உடற்கழிவு வெளியேற்றத்தைத் தடுக்கும். ஆயுர்வேத மருத்துவ
அறிவுரைப்படி மாதம் இருமுறை உடலுறவு மேற்கொள்வது சிறந்ததாகும். ஆனால், இன்றைய
வாழ்வியல் அழுத்தம் மற்றும் கலாச்சார பாதிப்பில் வாரம் ஒரு முறை என்பது பரவாயில்லை. அதேபோல். இல்லற இணக்கம் இல்லாத உடலுறவும், இல்லறமே இல்லாத நிலையும் நம் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். அதேபோல, இனிய தாம்பத்தியம் நமக்கு இயற்கையான தூக்க
நிவாரணியாக இருக்கும்.
ஆழ்ந்த உறக்கமும், அழகான தாம்பத்தியமும்
ஆரோக்கிய வாழ்வின் அடித்தளமாகும்.
ஆழ்ந்த தூக்கத்தையும், அளவான, முறையான
இல்லறத்தையும் அமைத்துகொள்வோம்

ebaylogo1


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2013

வேகமாய் வருகிறது வெற்றி
இந்தியா ஆரோக்கியமாக இருக்கிறதா?
சான்றோர் சிந்தனை
முயற்சிகள் பலவிதம்
நீங்கள் சாதனையாளரே
மாற்றங்களின் வலிமையும் மாறும் தெருக்களும்..
மதிப்பெண் உலகம்
கண் வாசனை
உனக்குள்ளே உலகம்-38
சாதிக்கலாம் வாங்க
என் பள்ளி
பலம் பற்றி சிந்தியுங்கள் பலனை நாளும் சந்தியுங்கள்