Home » Articles » மர்மமாய் இருக்கும் மனசு – 4

 
மர்மமாய் இருக்கும் மனசு – 4


மாரிமுத்துராஜ் A.G
Author:

சொல்லும் பொருளும்:
மன் என்றால் உயிர். உயிர்ப்பொருளின் அழகே மனம் தான். மனம் என்ற பெயரில் உணர்வும், புத்திசாலித்தனமும் உயிரில் இணைந்துள்ளன. இதை மனஸ் என்று வடமொழியில் கூறுவர். மனஸ் உள்ளவன் மனுஷ்யன் என்று வரும்.
முள் – முல் – முன் – முன்னுதல் – முன்றுதல் என்றால் பொருந்துதல், கருதுதல் என்றாகும். முள் – மள் – மன்னுதல் – பொருந்துதல், கருதுதல் எனப்படும். அதுபோல், மன் – மனம் – கருதும் என்ற அர்த்தமுடைய அகரக்காரணமாகும் என்று பொருள் தருகிறது அகராதி.

மனம் குறித்த மனிதனின் மறுமொழிகள்:
நெஞ்சு, மனசு, உள்ளம், நெஞ்சம், எண்ணம், ஞாபகம், நினைவு, பிராணன், விருப்பம், ஆசை என தன் விருப்பத்திற்கு ஏற்ப பலவாறு மனத்தை அழைக்கின்றான்.

எங்கே இருக்குது இந்த மனம்:
ஆரம்பத்தில் இதயத்திற்கு அருகே உள்ளது என்றார்கள். பின் புருவத்தின் மையத்தில் உள்ளது என்றார்கள். தற்போது மூளையுடன் தொடர்பு கொண்டுள்ளது என்கிறார்கள். இப்படி மனம் இருக்கும் இடத்தை தங்கள் மனம் போல ஊகமாகச் சொல்ல முடிந்ததே தவிர மர்மமாய் இருக்கும் மனசை, உறுதியாக, அறுதியிட்டுக் கண்டுபிடிக்க முடியவில்லை இன்று வரை.

என்றாலும் இன்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துப்படி, மனம் என்பது புற உலகில் இருந்து வரும் உணர்வுகள் உடல் மூலம் ஓரிடத்தில் குவிக்கப்பட்டு, மூளையில் பதிவு செய்யப்படும் இடத்தில் இருக்கலாம் என்ற கூற்றை ஏற்று நமது ஆய்வை முன் எடுத்துச் செல்வோம்.

நமது உடம்பானது, நம் ஒவ்வொருவரின் ஒரு கையின் பெருவிரல் முதல் சுண்டுவிரல் வரை உண்டான விரிவு தூரம் ஒரு சாண் என்றால் அதுபோல் அவரவர் கை அளவிற்கு, எண் சாண் உடையது உடல் அமைப்பு என்றாகும். இந்த எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்றார்கள் நம் முன்னோர்கள். சிரசில் தான் உடல் இயக்கத்திற்குத் தேவையான அனைத்தும் நடக்கின்றது. ஆகையினால் தலையைப் பிரதானம் என்றனர். அதுமட்டும் அல்லாது வழக்கில் பயன்படுத்தி வந்த சில சொல்லைப் பார்த்தோமானால் “தலைமை, தலைவர், தலைவன், தலைவி….” இதுபோன்ற சொல்லும் அதன் தன்மையும் நமக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை உறுதிப்படுத்துகின்றது. எதிலுமே தலைமை என்ற ஒன்று இல்லை என்றால் அங்கே ஆட்டம் கண்டு அழிவு ஏற்பட்டு விடும் என்பதை நடைமுறையில் நாம் கண்டுணர்ந்ததே. ஆகையினால் மனம் என்பது சிரசில் இருக்கலாம் என்பதும், சிந்திக்கத்தக்கதாக இருக்கின்றது.

உடலின் தலைமைச் செயலகமான தலைப்பகுதிக்குத் தலைவர் பொறுப்பேற்று இருப்பது மூளையாகும். மூளைக்கு ஆற்றலாக, சக்தியாக இருப்பது மனமென்னும் மின்காந்த அலையாகும். மனம் தான் மூளையை இயக்குவிப்பதும், மூளையின் உத்தரவை செயலாக்கம் செய்யும் பணியையும் மேற்கொள்கின்றது. மூளையின் அசைவுமாய் அசைவற்றுமாய் இருப்பது மனம் தான்.Read More


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2013

உனக்குள்ளே உலகம்-34
என் பள்ளி
வேகமாய் வருகிறது வெற்றி – 5
டாப் 10 பொறியியல் படிப்பு
மர்மமாய் இருக்கும் மனசு – 4
படிப்பது சுலபம்
பசுமரத்தாணி
புனித யாத்திரை – கயிலயங்கிரி
சிகரத்தை நோக்கி…
வெற்றிக் கனிகளைச் சுவையுங்கள்
அண்டார்டிகாவில் பாதாள ஏரியில் நுண்ணுயிரிகள்
வேலை கலாச்சாரம்
பிப்ரவரி மாத முக்கிய தினங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
சமூக நலனுக்கு பாதையாகு! சம காலத்தில் மேதையாகு!!