Home » Articles » சிகரத்தை நோக்கி…

 
சிகரத்தை நோக்கி…


உஷாராணி ராஜாராமன்
Author:

நினைத்தது நடக்க வேண்டும் கனவு மெய்ப்பட வேண்டும், இதற்காக வாழ்க்கையில் பல விதமான இன்னல்களைச் சந்திக்க நேரிடலாம். அதற்காக மனம் தளரி அங்கேயே நின்றுவிடக்கூடாது. நாம் நம் கனவுகளை நோக்கி நடக்கும் போது பல்வேறு காரணங்களால் ஏன் ஆரம்பித்த இடத்திற்கே கூட வரலாம். இந்தச் சூழ்நிலையில் நம் மனதை எப்படி நேர்மû\யாக நினைப்பது. இதற்கு ஓர் உதாரணம் சொல்கிú\ன் நம்பிக்கை இருந்தால் நீங்களே செய்து பாருங்கள். எறும்புகள் கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருக்கின்றன. அவைகளின் பாதையை ஒரு விரலால் தடுத்து நிறுத்துங்கள். அந்த எறும்புகள் உங்கள் விரலை கண்டு பயந்து அங்கேயே நிற்பதில்லை அதைத் தவிர்த்து வேறு வழியை நோக்கி தனது பயணத்தை மேற்கொள்வதைப் போல மனிதனுக்கும் ஏற்படும் தடைகள், தடங்கல்கள் அனைத்தையும் விட்டு விட்டு வேறு வழியைத் தேடிச் செல்ல வேண்டும். அதற்கு வலிமையான எண்ணம் வேண்டும்.

‘எண்ணங்களின் வலிமை’ – இந்த வலிமை எப்படி இருக்க வேண்டும்? கிழக்கே உதிக்கின்ற சூரியன் மேற்கே உதிக்க வேண்டும் என்ற வலிமையான தாக்கத்தை நம் எண்ணத்தில் ஏற்படுத்தி அது ஒரு நாள் நமது எண்ணத்திற்குக் கட்டுப்பட்டு மேற்குத் திசையிலும் சூரியன் உதிக்கும் அளவிற்கு நமது எண்ணங்களின் வலிமை இருக்க வேண்டும்.

இதைத்தான் எண்ணங்களே வாழ்க்கை என்றும், வாழ்க்கையே எண்ணங்கள் என்றும் கூறுகின்ú\ôம். மனத்தில் எண்ணிவிட்டால் என்ன ஆகப்போகி\து என்று அலட்சியப்படுத்தாமல் கவனமாக எண்ணுதல் வேண்டும். ஏனென்றால் நம்முடைய ஆழ்மனதுக்கு மிகவும் மகத்தான சக்தி உண்டு. ஒருவர் எண்ணியதை எண்ணியவரால் செய்ய முடியாவிட்டாலும் அந்த செயல் யாரால் முடியுமோ அவருடன் ஒரு இணைப்பு ஏற்படுத்தி பின்பு அதைச் செயல்படுத்திவிடும். எனவே எண்ணம் சீராக இருக்க வேண்டும்.

எத்தனை தோல்விகள் ஏற்பட்டாலும், எத்தனை இடையூறு வந்தாலும் அவற்û\யெல்லாம் பொருட்படுத்தாமல் இலட்சியம் தான் முக்கியம் என்று எண்ணி அந்த எண்ணத்தில் உறுதியாக இருக்க வேண்டும். இது போல ஒவ்வொருவரும் தங்களுடைய மனதை தயார் செய்து கொண்டால் மற்றவற்û\ அந்த மனதே பார்த்துக்கொள்ளும்.

இந்த உலகில் நமக்கு எதிராக எது வேண்டுமானாலும் நடக்கலாம், உலகமே நமக்கு எதிராகக் கூடத் திரும்பிவிடலாம், கடக்க வேண்டிய பாதையில் திடீரென்று தடை ஏற்படலாம், ஆகவே நாம் முன்னேற வேண்டுமானால் நம்முடைய ஆர்வத்தை முழுமுயற்சிவுடன் செலுத்த வேண்டும். மிகப் பெரிய சாதனையாளர்கள் கூட நம்மில் மும்மடங்கு தோல்வியைச் சந்தித்திருக்கி\ôர்கள்.

தோல்வி இல்லை என்றால் வெற்றியின் சுகத்தை அனுபவிக்க முடியாது. ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னால் ஆயிரம் ஆயிரம் சோகக் கதைகள் உண்டு. அவை யாதும் யாருக்கும் தெரியாது. எனவே தோல்விகளைத் தோழர்களாக்குங்கள்; வெற்றிக்கு அடிக்கல் நாட்டுங்கள்; மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொளுங்கள்.

“நம்பிக்கை நூல் மட்டும்
உங்களிடம் இருந்துவிட்டால் …
உந்திர்ந்த பூக்கள் எல்லாம்
ஒன்றன் பின் ஒன்றாக வந்து
ஒட்டிக் கொண்டு
தன்னைத் தானே கட்டிக்கொள்ளும் …
கழுத்து மாலையாக சூடிக்கொள்ளும்”
மு. மேத்தாவின் இந்த வரிகள் தான் தன்னம்பிக்கை கானம். நான் இப்படி ஆவேன் அப்படி ஆவேன் என்று கனவு கண்டால் மட்டும் போதாது சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நாம் செய்ய வேண்டிய காரியங்களை முதல் நாள் இரவே எழுதி வைத்துக் கொண்டு செய்ய வேண்டும். அதில் ஓர் இரண்டு காரியங்கள் செய்ய முடியாமல் போனாலும் தவறு இல்லை, இப்படி இல்லை என்றால் ஒரு காரியம் கூட முழுமையாக செய்ய முடியாது. நாளை நாளை என்று தள்ளிக்கொண்டே போகும். அதற்காக நாளை செய்ய வேண்டியதை மனதில் ஏற்றிக்கொண்டு இன்று செய்ய வேண்டிய வேலையைச் செய்யாமல் இருக்கக் கூடாது. அதேநேரம் “இன்று விதை விதைத்தால் தான் நாளை துளிர்விடும்” என்பதை மறக்கக்கூடாது.

கனவுகள் நினைவாக வேண்டுமெனில் ஒவ்வொருவரும் தம் கனவுகளை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒரு சிலர் தம் கனவுகள் மெய்ப்படட்டும் சொல்கிú\ன் என்பார்கள். ஒரு வேலை கனவு மெய்ப்படவில்லை எனில் அந்த இலட்சியம் அவர்கள் மனதில் உதிர்த்து அவர்களுடனே மû\ந்துவிடும். அடுத்தவரிடம் பகிர்ந்து கொள்ளும் போது அதை நிû\வேற்ற ஒவ்வொரு வினாடியும் மனம் துடித்துக் கொண்டிருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இதன் மூலம் எளிதில் கனவுகளை மெய்ப்பிக்கலாம்.
கடவுள் உங்களுக்கு என்று தர இருப்பதை யாராலும் தடுக்க முடியாது. எனவே நாம் எந்த சூழ்நிலையிலும் நேர்மையாக இருக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும்.

இவ்வுலகத்தில் உன்னிடம் தோற்றுப் போவதற்குப் பல பேர் காத்துக்கொண்டிருக்கும் போது தேவை இல்லாத பயம், தாழ்வு மனப்பான்மை இவற்றினால் உங்களை நீங்களே புதைத்துக் கொள்ளாதீர்கள்.

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே !
என்று தாழ்வு மனப்பான்மையைப் போக்க, தைரியத்தை வளர்க்க பாரதி பாடிய வீர முழக்கம் இது.

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கி\து என்று வருந்தாதீர்கள். மற்றவர்களைப் போல் வெற்றி எளிதில் கிடைக்கவில்லை என்றும் புலம்பாதீர்கள். உங்களுடைய வெற்றி உலக அதிசயங்களில் ஒன்றாக திகழப்போகி\து அதற்கு பல வருடங்கள் தேவைப்படும். எனவே அதற்கான வெற்றியை விரைவில் எதிர்பார்ப்பது அறிவீனம்.

நாம் யாருக்காகவும், எதற்காகவும், கொண்ட கொள்கையிலிருந்தும் எடுத்த முடிவுகளையும் விட்டுக் கொடுக்கக்ககூடாது. அதில் ஆணித்தரமாக இருக்க வேண்டும். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழவேண்டும் என்கி\ கொள்கையில் வாழ்நாள் முழுவதும் பண்பாட்டோடு வாழவேண்டும். உங்களுக்கு ஒரு பிரச்சனை, தடங்கள் ஏற்பட்டால் அது உங்கள் தி\மைக்கு விடப்பட்ட சவாலாக ஏற்றுக்கொள்ளுங்கள். இந்த பிரச்சனையைச் சமாளிக்க உங்களைத் தவிர வேறு யாராலும் முடியாது. எனவே சவால்களைச் சமாளியுங்கள்.

உங்களுடைய கவனம் முழுவதும் உங்களின் இலட்சியத்தை நோக்கித்தான் இருக்க வேண்டும். தடைகள் எதிர்படும்பொழுதும் இலட்சியத்திலிருந்து உங்கள் மனத்தையும், செயலையும் பின்வாங்கவிடாதீர்கள். இவையெல்லாம் உங்கள் உறுதியைச் சோதிக்க வந்தவை என்று கருதி அந்தத் தடைகளையும் தாண்டி உங்களுடைய உயர்ந்த இலட்சியத்தை அடையுங்கள்.

எளிமையாக இருங்கள். எளிமைதான் உண்மையாக வாழக் கற்றுக் கொடுக்கும். மாபெரும் கண்டுபிடிப்புகளுக்குத் தேவையான அறிவைத் தரும் சாவி எளிமையில் தான் அடங்கி இருக்கி\து. நல்லவற்றிற்கு உடனே நம் மனதைத் தி\க்கவும், கெட்டதற்கு உடனடியாகவும் நம் மனக்கதவை மூடக்கூடிய சக்தியும், எளிமையாக வாழும்போதுதான் கிடைக்கும். எளிமையாக வாழத்தான் நமக்கு நிû\யத் துணிச்சல் வேண்டும். அது இருந்தால் நாம் நினைத்ததை சாதிக்கலாம். உங்கள் இதயம் ஈரமாக இருக்கட்டும் அந்த ஈரம் இந்த சமுதாயத்தை பசுமையாக்கும்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுû\யும்
தெய்வத்துள் வைக்கப்படும்
என்னும் வள்ளுவர் வாக்கிற்கு இணங்க வாழ்வோம்! வாழ்வில் ஜெயிப்போம் !!


Share
 

2 Comments

  1. suresh says:

    Good article, these are all very basic to follow by everyone, thanks to usha ji for reminding these…

  2. D.Sathiyaraj says:

    Very nice madam. I like your all articles..

Post a Comment


 

 


March 2013

உனக்குள்ளே உலகம்-34
என் பள்ளி
வேகமாய் வருகிறது வெற்றி – 5
டாப் 10 பொறியியல் படிப்பு
மர்மமாய் இருக்கும் மனசு – 4
படிப்பது சுலபம்
பசுமரத்தாணி
புனித யாத்திரை – கயிலயங்கிரி
சிகரத்தை நோக்கி…
வெற்றிக் கனிகளைச் சுவையுங்கள்
அண்டார்டிகாவில் பாதாள ஏரியில் நுண்ணுயிரிகள்
வேலை கலாச்சாரம்
பிப்ரவரி மாத முக்கிய தினங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
சமூக நலனுக்கு பாதையாகு! சம காலத்தில் மேதையாகு!!