Home » Articles » வேலை கலாச்சாரம்

 
வேலை கலாச்சாரம்


சைலேந்திர பாபு செ
Author:

வேலை உண்டு; ஆள் இல்லை

கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டால் நீங்களும் பெரிய சாதனை படைக்க முடியும். உங்கள் பெற்றோர்களிடம் நாற்பது லட்சம் ரூபாய் பணமிருந்தால் உங்களை சென்னையில் பெரிய மெடிக்கல் காலேஜில் சேர்த்திருப்பார்கள். இருபது லட்சம் ரூபாய் பணமிருந்தால் பி.இ. எலக்ட்ரானிக்ஸில் சேர்த்திருப்பார்கள். பத்து லட்சம் ரூபாய் பணமிருந்தால் நல்ல ஒரு என்ஜினியரிங் காலேஜில் சேர்த்திருப்பார்கள்.
அப்படிச் சேர்ப்பதற்கு அவர்களுக்கு ஆசை இருக்கிறது. ஆனால் பணமில்லை. அது முடியாத காரணத்தால் தான் ஆர்ட்ஸ் காலேஜில் சேர்த்திருக்கிறார்கள். பணம் அதிக செலவில்லை. சாதாரணமான செலவுதான். இதில் படித்துக்கூட பெரிய ஆளாகிவிடலாம்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற படிப்பு படித்து என் பிள்ளைக்கும் ஏதாவது ஒரு பெரிய வேலை கிடைக்கும். வெளிநாடு சென்று மாதம் ஒரு லட்சம் ரூபாய் என் பிள்ளையும் சம்பாதிப்பான் என்னும் ஆசையில் உங்களது பெற்றோர்கள் எவ்வளேவா சிரமங்களுக்கிடையிலும் உங்களை படிக்க வைக்கிறார்கள்.
ஒரு மாணவனுடைய நடத்தையில் விரும்பத்தக்க பல மாற்றங்களை ஏற்படுத்துவதுதான் கல்வி. முதல் வருடம் சேரும்போது எப்படியிருந்தானோ, அதேபோல் இறுதியாண்டுவரை இருக்கிறான் என்றால், அவன் கல்வி பெறவில்லை என்று பொருள். அறிவியல் மாற்றிமிருக்க வேண்டும்; செய்யும் செயல்களில் மாற்றமிருக்க வேண்டும். மனப்போக்கில் நல்ல மாற்றமிருக்க வேண்டும். இந்த மூன்று விதமான மாற்றங்கள் விரும்பத்தக்க மாற்றங்களாக இருக்க வேண்டும். அப்படி மாற்றங்களை கொண்ட வந்தீர்கள் என்றால்தான் கல்வியிருக்கிறது என்று பொருள். எனவே, கல்விக்காகத்தான் உங்கள் பெற்றோர்கள் உங்களை கல்லூரிக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
உங்கள் பெற்றோர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள்? நல்ல வேலை மற்றும் பெரிய பதவி. சாதாரணப் பதவியே போதும் என்றால் நீங்கள் எதற்காக கல்லூரிக்கு வந்தீர்கள்? கல்லூரிக்கு வர வேண்டிய அவசியமே கிடையாது. பாலிடெக்னிக்கில் படித்திருக்கலாம். ஐ.டி.ஐ.யில் படித்திருக்கலாம் (ஐ.டி.ஐ. படிப்பதை நான் கௌரவக் குறைவாக கருதவில்லை. மாறாக பட்டப்படிப்பிற்கு மேலாக கருதுகிறேன்).
இந்த சூழ்நிலையில் ஒரு நல்ல செய்தி சொல்ல விரும்புகிறேன். இன்று படித்த திறமையுள்ளவர்களுக்கு நல்ல வேலைகள் ஏராளமாக உள்ளன. ஆனால் திறமையுள்ளவர்கள் குறைவாக இருக்கிறார்கள். விஞ்ஞான முறையில் விவசாயம் பார்க்க ஆளே கிடையாது. டிராக்டர் ஓட்டுவதற்கு ஆட்கள் இல்லை. மோட்டார், ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்க்க ஆட்கள் பற்றாக்குறை.
பி.காம். படிப்பவர்கள் ( ) தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும். ஒரு வருடம் படித்த பின்பு இன்டர் படிக்க வேண்டும். நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு சி.ஏ. முடித்துவிடலாம். சி.ஏ. முடித்த பின்பு சென்னையில் ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலையிருக்கிறது. இராணுவத்தில் அதிகாரிக்கான பதவிகள் பல காலியாக உள்ளன. தகுதியுள்ள இளைஞர்கள் தான் இல்லை.
பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் பி.எட். படியுங்கள். வெளியில் வரும்போது தனியார் பள்ளியில் ஆசிரியர் வேலை 50,000 சம்பளத்தில் உள்ளது.
“நல்ல முனைவர் பட்டம் வாங்கிய ஓர் ஆசிரியை இருந்தால் சொல்லுங்கள். எனது பள்ளியின் முதல்வராக நியமிக்கிறேன். ஒரு வீடு, கார், செல்போன் கொடுத்து மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கிறேன்” என்று ஒரு சி.பி.எஸ்.இ. பள்ளியின் உரிமையாளர் என்னிடம் கூறினார்.
நல்ல திறமையுள்ள ஆசிரியர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஒரு நல்ல தலைமைப் பண்புள்ள பேராசிரியருக்கு கல்லூரி முதல்வராக வேலை பார்க்க இன்றைய சம்பளம் மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய். நிறைய வேலைகள் இருக்கின்றன. ஆனால் என்ன பிரச்சனை என்றால் அந்த வேலை தெரிந்த இளைஞர்கள் இல்லை. வெறும் பட்டப்படிப்பு சான்றிதழால் உங்களுக்கு வேலை கிடைக்காது. உங்களுக்கு அதீத திறமைகள் இருந்தால் அதுதான் உங்கள் வேலைக்கான சான்றிதழ்.


Share
 

1 Comment

  1. kasi says:

    very super

Post a Comment


 

 


March 2013

உனக்குள்ளே உலகம்-34
என் பள்ளி
வேகமாய் வருகிறது வெற்றி – 5
டாப் 10 பொறியியல் படிப்பு
மர்மமாய் இருக்கும் மனசு – 4
படிப்பது சுலபம்
பசுமரத்தாணி
புனித யாத்திரை – கயிலயங்கிரி
சிகரத்தை நோக்கி…
வெற்றிக் கனிகளைச் சுவையுங்கள்
அண்டார்டிகாவில் பாதாள ஏரியில் நுண்ணுயிரிகள்
வேலை கலாச்சாரம்
பிப்ரவரி மாத முக்கிய தினங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
சமூக நலனுக்கு பாதையாகு! சம காலத்தில் மேதையாகு!!