Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


ஆசிரியர் குழு
Author:

“பல்வேறு கடவுள் சிலைகள் இருக்கக்கூடிய ஆலயம் அது. அவ்வாலயத்திற்கு பக்தர் ஒருவர் வருகை புரிந்தார். தனக்கு பிடித்த சிலையைத் தேர்ந்தெடுத்து, மாலை சூட்டி, ஊதுவத்தியைக் கொளுத்தி வழிபாடு செய்தார். அவருக்குள் தனக்குப் பிடித்த சிலைக்கு தான் ஏற்றும் ஊதுவத்தி மற்ற சிலைகளுக்கும் செல்வதை பார்வையுற்று தன் பணம் இப்படி வீணாகிறதே என்று நினைத்தார். உடனே தனக்குப் பிடித்த சிலையைச் சுற்றி நான்கு புறமும் தடுப்புகளால் மறைத்தார். இப்பொழுது ஊதுவத்திப் புகை மற்ற சிலைகளுக்குச் செல்வது தடுக்கப்பட்டது; பக்தர் மகிழ்ந்தார். ஆனால் சில நாட்கள் சென்ற பின்பு பெரிய தவறு செய்துவிட்டோம் என்பதை அவர் உணர்ந்தார். ஆம், அவருடைய அபிமான சிலை புகை பிடித்து கருத்துப் போனது. பிற சிலைகள் பிரகாசமாக சுத்தமாக இருந்தது.

நமக்குள் ஓர் ஆற்றல் இருக்கிறது என்றால் அது தனக்கும் தன் நலத்திற்கு மட்டுமே என்றில்லாமல் எல்லோருக்கும் அது உதவும் வகையில் அதைச் செயல்படுத்த வேண்டும். அப்போது தான் நம் அறிவும் ஆற்றலும் இன்னமும் பிரகாசமாக வளரும்.
சுயநல போக்கைத் தவிர்ப்போம்!
பொதுநல நோக்கை வளர்ப்போம்!!

அன்புடன்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2013

உனக்குள்ளே உலகம்-34
என் பள்ளி
வேகமாய் வருகிறது வெற்றி – 5
டாப் 10 பொறியியல் படிப்பு
மர்மமாய் இருக்கும் மனசு – 4
படிப்பது சுலபம்
பசுமரத்தாணி
புனித யாத்திரை – கயிலயங்கிரி
சிகரத்தை நோக்கி…
வெற்றிக் கனிகளைச் சுவையுங்கள்
அண்டார்டிகாவில் பாதாள ஏரியில் நுண்ணுயிரிகள்
வேலை கலாச்சாரம்
பிப்ரவரி மாத முக்கிய தினங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
சமூக நலனுக்கு பாதையாகு! சம காலத்தில் மேதையாகு!!