– 2013 – March | தன்னம்பிக்கை

Home » 2013 » March

 
  • Categories


  • Archives


    Follow us on

    கழுகிற்கும் உந்துதல் அவசியமே!

    பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல.

    Continue Reading »

    வெற்றி மேல் வெற்றி…

    எண்ணெய், தன்னையே எரித்துக் கொண்டுவிளக்கிற்கு ஒளி தருகிறது. நீங்களும் உங்களை பிறர் சேவைக்கு அர்ப்பணியுங்கள். மற்றவர்கள் உங்கள் மதிப்பை குறைத்துக் கொள்வதற்கு இடம் கொடுக்காதீர்கள்.

    Continue Reading »

    எத்தனை அதிர்ஷ்டக்காரர் நீங்கள்?

    “நல்லதே பார், நல்லதே நினை, எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்” என்று நம்பியது மட்டுமல்லாமல் அனைவருக்கும் அதை உபதேசிப்பவர் அந்த அறிஞர். இறைவன் தந்திருக்கும் நன்மைகளை சிந்திக்கவும், அவற்றிற்காக நன்றியுடன் இருக்கவும் தன் பிரசாரங்களில் கூறுவார் அவர்.

    Continue Reading »

    வாழ்வதற்கு வேண்டிய தகுதி…

    பிறருக்காக செய்யும் சிறிய முயற்சி உள்ளிருக்கும் சக்தியை எழுப்புகிறது, பிறருக்காக நன்மையை எண்ணுவதால் சிங்கத்தின் பலம் இதயத்திற்கு கிடைக்கிறது.வாழ்க்கையில் எப்போதும் தூய்மை உடையவன் கடவுளுக்கு மிக நெருங்கியவனாகிறான்.

    Continue Reading »

    உங்களைத் தொலைத்து விடாதீர்கள்!

    ஒரு மனிதனின் குழந்தைப் பருவத்தில் இருந்தே அவனை மற்றவர்கள் போல் மாற்றும் முயற்சி ஆரம்பிக்கிறது. “அந்தப் பாப்பாவப் பாரு எப்படி சமத்தா இருக்கு”. குழந்தையில் இருந்தே மற்றவர் சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும் அவன் திணிக்கப் பெறுகிறான்.

    Continue Reading »

    கடுகை மலையாக்காதீர்கள்!

    உள்ளதை உள்ளபடி பார்ப்பது மிக நல்ல குணம். ஆனால் இதை மிக அபூர்வமாகவே நாம் சமூகத்தில் காண முடிகிறது. சிறிய காய்ச்சல் வந்தால் தனக்குத் தெரிந்த ஓரிருவர் சமீபத்தில் டைபாய்டில் படுத்தது நினைவுக்கு வர, முதல் நாள் அது டைபாய்டாக இருக்குமோ என்று சந்தேகித்து, இரண்டாம் நாள் அது டைபாய்டு தான் என்று நம்பி, மூன்றாம் நாள் படுத்த படுக்கையாகி அவதிப்படும் ஆட்கள் பலர் உண்டு.

    Continue Reading »

    யார் மாற வேண்டும்?

    ஒரு சமயம் இரண்டு அமெரிக்க போர்ப்படைக் கப்பல்கள் கடலில் கடற்படையினருக்குப் பயிற்சி அளிக்கும் பணியில் பயணித்துக் கொண்டு இருந்தன.பனிமூட்டத்தினால் சில நாட்கள் தொடர்ந்து அவர்களுடைய பயணம் தாமதப்பட்டு வந்தது.

    Continue Reading »

    வாழ்க்கையில் ஒரு சவால்…

    சிலர் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க வேண்டும் பிறப்பதே அதற்காகத் தான் என்று நம்புகிறார்கள். சிலரோ வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் அது தான் அர்த்தமுள்ள வாழ்க்கை என்று சிந்திக்கிறார்கள்.

    Continue Reading »

    கவனிப்பே அவசியம்… பேசுவதை காது கொடுத்துக் கேளுங்கள்…

    நமது குடும்பத்தினரோ, உறவினரோ, நண்பரோ நம்மிடம் ஒரு விஷயத்தைக் கூறும் போது அதனை காது கொடுத்துக் கேட்க வேண்டியது மிகவும் அவசியம். அதுவும் அவரது பிரச்னை பற்றி கூறும் போது அதனை உதாசீனப்படுத்தக் கூடாது.

    Continue Reading »

    அடி மேல் அடி விழும் போது….

    துரதிர்ஷ்டவசமாக துரதிர்ஷ்டம் தனியாக வருவதில்லை. சில நேரங்களில் படையாக சேர்ந்து வந்து தாக்குகின்றன. பல முனைத் தாக்குதல் வரும் போது, இதற்கெல்லாம் தீர்வு ஒன்று கண்ணுக்கெட்டிய வரை தெரியாத போது மனிதன் உடைந்து போவது இயல்பே.

    Continue Reading »