– 2012 – December | தன்னம்பிக்கை

Home » 2012 » December

 
  • Categories


  • Archives


    Follow us on

    வாழையில் புதிய தொழில்நுட்பங்கள்…

    வாழையில் அறுவடைக்குப் பின் புதிய தொழில் நுட்பங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் விவசாயிகள் கூடுதலாக 25 முதல் 40 சதவீதம் வருவாய் பெறலாம்.இந்தியாவில் அதிக அளவு உற்பத்தி செய்யப்படும் பழங்களில் வாழை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. நமது நாட்டில் கணிசமான அளவு வாழைப் பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது.

    Continue Reading »

    தோல்விக்கான விதிகள்…

    ‘பிஸினஸில் தோல்வியைச் சந்திக்க பத்து விதிகள்’ – என்ன இது, தலைப்பே தடாலடியாக இருக்கிறது என்று பார்க்கிறீர்களா? கோகோ – கோலா கம்பெனியின் முன்னாள் தலைவர் டொனால்ட் ஆர் கியோக் எழுதிய இந்த புத்தகம் தான் இன்றைக் ஹாட் கேக்காக விற்பனையாகிறது.

    Continue Reading »

    பிஸினஸில் ஜெயிக்க 8 தியாகங்கள்…

    நேரம்:தொழில் முனைவோரானாலே உங்கள் நேரம் உங்கள் கையில் இல்லை. உங்கள் பிஸினஸை ஓரளவுக்கு நல்ல நிலைக்குக் கொண்டுவரும் வரை நேரம் உங்களை முழுமையாக கையில் எடுத்துக் கொள்ளும்.

    Continue Reading »

    சோதனைகளில் புலப்படும் சாதனை வழிகள்!

    அந்த இளைஞனுக்கு வித்தியாசமாய் கார்ட்டூன்கள் வரையும் திறமை இருந்தது. ஆனால் அவன் பல பிரபல பத்திரிக்கைகளில் கார்ட்டூனிஸ்டாக வேலைக்குச் செல்ல முயற்சி செய்தும் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை.

    Continue Reading »

    ஒரு தாவோ கதை …

    பண்டைய சீன நாட்டில் ஒரு சிறிய நகரத்தில் ஒரு கொல்லன் வாழ்ந்து வந்தான். அவன் வீட்டின் முன் பகுதியிலேயே அவன் தொழில் செய்யும் கடை வைத்திருந்தான்.

    Continue Reading »

    விதியை நம்பியவர் வென்றதில்லை

    நமது அன்றாட வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் பல திறமைசாலிகளைப் பார்த்து ஆச்சர்யப்படுவோம். ‘இவர்கள் பிற்காலத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்று பிரபலமாவார்கள்’ என்று கணித்திருப்போம்.

    Continue Reading »

    முடியும் என்று நினை! வெற்றிக்கு அதுவே துணை!!

    C.K. குமரவேல்

    சி.இ.ஓ மற்றும் இணைநிறுவனர், ‘நேச்சுரல்ஸ்’ சென்னை

     “வெற்றிக் கனியை ருசிக்க வேண்டுமானால் தோல்விகளைத் தாங்கும் மனப்பக்குவம் அடைந்திருக்க வேண்டும். ஏனெனில் இந்த உலகில் தோல்வியே அடையாமல், வெற்றி பெற்றதாக எவருக்கும் சரித்திரம் இல்லை.

    Continue Reading »

    வேலை கலாச்சாரம்

    எனது அலுவலகத்தில் தினமும் ஏறத்தாழ ஐம்பதுபேர் தங்கள் குறைகளைச் சொல்வதற்காக வருவார்கள். இளைஞர்கள் சிலர் வந்தார்கள். ஒரு சாப்ட்வேர் நிறுவனம்யில் வேலை பார்த்தவர்கள். 25000 ரூபாய் சம்பளம் கொடுப்பதாகச் சொல்லிய நிறுவனம் மூன்று மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை. பலமுறை கேட்டும் கிடைக்கவில்லை. வேலையை விட்டுவிட்டார்கள். பின்பு நிறுவனம் நடத்தியவரை எப்படியாவது சிறையில் அடைக்க வேண்டுமென்று போலீஸ் ஸ்டேஷன், கலெக்டர் அலுவலகம், முதல்வர் தனிப்பிரிவு என்று எல்லாவற்றிற்கும் புகார் அனுப்பியுள்ளார்கள். ஆறுமாதங்களாக இந்தப் பழிவாங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
    ஒரு நிறுவனம் துவங்கி உங்களுக்கு வேலை கொடுத்து, உங்களை வைத்து வேலை வாங்கியவரின் நிறுவனம் வளர்ந்துள்ளதா? என்று கேட்டேன். இல்லை. நிறுவனத்தை மூடிவிட்டார்கள் என்றனர். உங்களைப் போன்றவர்களை வைத்து வேலை வாங்கினால் எப்படி நிறுவனம் வளரும்? என்று மனதில் நினைத்துக் கொண்டேன். நிறுவனம் நடத்தியவருக்கு ஐந்து கோடி ரூபாய் நஷ்டம். அவர் எப்படி உங்களுக்குப் பணம் தரமுடியும் என்று கேட்டேன். அவர் தரணும் சார். ரூ.25,000 கொடுக்கிறோம் என்று பேப்பரில் விளம்பரப்படுத்தினார்கள். எனவே தந்தாக வேண்டும் என்று பதிலளித்தனர். அவர் நிறுவனம் ஆரம்பித்து நஷ்டமடைந்துள்ளார். அவரிடம் போய் எப்படி சம்பளம் கேட்க முடியும்? எனவே விட்டுவிடுங்கள் என்று கூறினேன். கடந்த ஆறு மாதங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் இதே வேலையாகத் தான் இருக்கிறோம்; விடமாட்டோம். நீங்கள் அவரை உடனே கைது செய்யுங்கள் என்றார்கள்.
    இவர்களுடைய மனப்பான்மையைப் பாருங்கள். ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறோம். அந்தக் நிறுவனம் மூடும் நிலைக்கு வந்துவிட்டது. அந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு முயற்சி செய்வோம் என்றில்லாமல் நிறுவனரைப் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதில் யாருக்கு லாபம்? மனப்பான்மை சரியில்லை. இப்படிப்பட்ட மனப்பான்மை இருக்கும்போது, இந்தியாவில் தொழில் தொடங்கும் ஒருவர் தொழிலை வளர்த்து சர்வதேச நிறுவனங்களோடு எப்படி போட்டியிட முடியும்?
    இதேபோல் ஒரு சம்பவம், ஜப்பானில் நடந்திருந்தால், அந்த மாணவர்கள் என்ன செய்திருப்பார்கள்? நீங்கள் எங்களை வேலைக்கு வைத்துவிட்டீர்கள். நாங்களும் நிறுவனத்தின் ஒரு அங்கமாகிவிட்டோம். இன்னும் ஆறுமாதம் நாங்கள் வேலை செய்கிறோம். சம்பளமே எங்களுக்கு வேண்டாம். இந்த நிறுவனத்தை எப்படியாவது தூக்கி நிறுத்துவோம். இந்த நிறுவனம் நம்பர் 1 ஆக வரவேண்டும். அதற்காகப் போராடுவோம் என்பார்கள். இதுதான் ஜப்பானியர்களின் மனப்பான்மை பொதுவாக, ஜப்பானியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடமாட்டார்கள். வேலைநிறுத்தம் செய்யும் சூழ்நிலை வந்தால் கூட வேலையை முடித்துவிட்டு மாலையில் பேசித் தீர்வு காண்பார்கள். ஆண்டிற்கு ஒருமுறை ஐந்து நிமிடங்கள் வேலை செய்யாமல் அமைதியாக இருப்பார்களாம். வேலைநிறுத்தத்தில் ஈடுபட உரிமையுள்ளது என்பதை ஞாபகப்படுத்துவதற்காக அதைச் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் நாம் போட்டி போட வேண்டி இருக்கிறது. நமது வேலைக் கலாச்சாரம் (Work Culture) மேம்படுத்துதல் வேண்டும்.
    பீத்தோவன் எப்படி இசையமைப்பாரோ, பிக்காஸோ எப்படி ஓவியம் வரைவாரோ அதுபோல் ஈடுபாட்டுடன் நீங்கள் உங்கள் வேலையைச் செய்ய வேண்டும். ஒரு சிறிய வேலை என்றாலும் முழு ஈடுபாட்டுடன் செய்யுங்கள். கிடைத்தது சிறிய வேலை என்று நினைக்காமல் அதில் சேர்ந்து, வேலையைக் கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்குக் கொடுக்கக்கூடிய சம்பளத்தைவிட அதிகமாக வேலை செய்தால் சில ஆண்டுகள் சென்ற பின்னால், நீங்கள் செய்யும் வேலையைவிட அதிகமாகச் சம்பளம் உங்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும்.

    வெற்றி மந்திரம் – சந்தோசமாக ஏற்றுக்கொண்டால் சுமை தெரியாது

    கட்டுமஸ்தான உடம்புடன் இருந்த இளைஞன் டென்சிங், ஒரு கோணிப்பை நிறைய கற்களை அள்ளிப்போட்டுக் கட்டி, தன் தோளில் சுமந்த படி ஊரைச் சுற்றி வந்தான். பார்த்தவர்கள் எல்லாம் கேலியும், கிண்டலும் செய்தனர்.
    டென்சிங்கின் மனைவிக்கும், அவரது இச்செயல் பிடிக்காததால், அந்த மூட்டையை இரவோடு இரவாக அப்புறப்படுத்த நினைத்தாள். ஆனால், அவளால் அதை அசைக்கக்கூட முடியவில்லை. “இத்தனை கனமான சுமையைச் சுமந்துகொண்டு எப்படி உங்களால் சிரிக்க முடிகிறது?” என்று தன் கணவரைப் பார்த்துக் கேட்டாள்.
    “சந்தோசமாக ஏற்றுக்கொண்டால் சுமை தெரியாது” என்றான் டென்சிங்.
    “சுமை தெரியவில்லை சரி… மற்றவர்களின் கேலியும், கிண்டலும் கூடவா உங்களை வேதனைக்குள்ளாக்கவில்லை?” என மீண்டும் கேட்டாள்.
    “அவற்றையும் நான் சந்தோசமாகவே ஏற்றுக்கொள்கிறேன்” என்றான்.
    இமயமலை அடிவாரத்தில் இருக்கும் ‘கும் ஜிங்’ என்ற கிராமத்தில், ஏழ்மையான குடும்பத்தில் பதினோராவது குழந்தையாக 1914ம் வருடம் பிறந்தான் ‘நாம்கியால்’. அந்த கிராமத்திற்குச் சுற்றுப்பயணம் வந்த திபெத்திய மத குரு தலாய் லாமா, ‘நாம்கியாலை’ சுட்டிக்காட்டி, “இவன் உலகப் புகழ் பெறுவான். இவனை இனி ‘டென்சிங் நார்கே’ என்று அழையுங்கள்” என்றார்.
    யாக் எருமைகளை மேய்த்துக் கொண்டிருந்த டென்சிங்குக்கு மலையின் உயரம் கிளர்ச்சியை ஊட்டியது. மலை ஏறும் தனது ஆசையை தாயிடம் சொன்னான். அழ்ற்கு, “டென்சிங், நம்மைப் போன்றவர்கள் மலை ஏறும் வீரனாக அல்ல, ஒரு சுமை தூக்கியாகத்தானப்பா போக முடியும்” என்றாள் தாய். உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி நேபாளத்தில் சுமைதூக்கியாக வேலையில் சேர முயன்றான் டென்சிங். ஆனால் அவனால் அதிக சுமையைத் தூக்க முடியவில்லை. எனவே வேலை கிடைக்காத வருத்தத்துடன் அவன் கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, தலாய்லாமாவைச் சந்தித்து தன் ஏக்கத்தைச் சொன்னான்.
    “சந்தோசமாக ஏற்றுக்கொண்டால் எந்த சுமையும் தெரியாது” என்றார் தலாய் லாமா.
    அந்த மந்திரச் சொல்லை மனதில் ஏற்றிக்கொண்டு, தன் உடலை உறுதி செய்யும் விதமாகத் தான் கோணிப்பை நிறைய கற்களை அள்ளிப் போட்டுக்கொண்டு சந்தோசமாகச் சுமக்கத் தொடங்கினான் டென்சிங். அவனது உடல் இரும்பு போல் உரமேறியது. மலை ஏறும் சூழலில், சுமை தூக்கியாக, 1937ம் ஆண்டு வேலையும் கிடைத்தது.
    மலையின் மீது குறைவான உணவே கிடைக்கும் என்பதால், பசியுடன் அதிக எடையைச் சுமக்க வேண்டும். அதிக குளிரான பனிக்காற்றும் உடம்பை ஊசிபோல் குத்தும். பள்ளத்தாக்குகளைக் கடக்கும்போது, பாலம் கட்ட வேண்டும். மலைச்சரிவில் ஏறும்போது கோடாரிகளால் பாறைகளை வெட்டி படி அமைக்க வேண்டும். இதைத்தவிர மிகக் குறைவான நேரமே தூங்க முடியும். சில நேரங்களில் பனிப் புயலாலும், பனிப் பாறைகள் விழுந்தும் மரணத்தை ஏற்படுத்தும் அபாயமும் நிறைந்தது.
    ஆனால் இத்தனை சிரமங்களையும் மீறி, மலைகளின் மீது சர்வ சாதாரணமாக புன்னகை மாறாமல் நடைபோட்டான் டென்சிங். உயரம் செல்லச் செல்ல மற்றவர்கள் சோர்வடைந்து விட இவன் மட்டும் உற்சாகமாக தனது இலக்கை நோக்கிப் போய்க்கொண்டே இருந்தான்.
    நியூசிலாந்தைச் சேர்ந்த ‘எட்மண்ட் ஹில்லாரியுடன்’ ஏழாவது முயற்சியாக எவரெஸ்ட் நோக்கி கிளம்பினான். மிகக் கடுமையான பயணத்திற்குப் பின் டென்சிங், ஹில்லாரி இருவரும் 1953ம் வருடம் மே மாதம் 29ம் நாள் பகல் 11.30 மணிக்கு எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் கம்பீரமாக நின்றார்கள். தன் மகள் ஆசையுடன் கொடுத்தனுப்பிய சின்னஞ்சிறு பென்சிலை அங்கே நட்டுவைத்தான் டென்சிங்.
    கல்வியறிவு இல்லாத, வசதியற்ற, எவ்விதப் பயிற்சியும் இல்லாத குக்கிராமத்தில் பிறந்த டென்சிங்கை உலகப் புகழ்பெற வைத்த அந்த மந்திரம், “சந்தோசமாக ஏற்றுக்கொண்டால் எந்த சுமையும் தெரியாது”. டென்சிங்குக்கு மட்டுமல்ல வெற்றி பெற விரும்பும் அனைவருக்கும் அதுதான் வெற்றி மந்திரம்.

    சும்மா இருப்பதே சுகம்!

    “சும்மா இருப்பதே சுகம்” என்பார்கள். நம்மால் சில வினாடிகள் கூட சும்மா இருக்க முடிவதில்லை. பரபரவென எதையோ செய்யத் துடிக்கிறோம். மனதில் ஓயாத எண்ண ஓட்டங்கள். தேவையில்லாமல் பிறர் விஷயத்தில் தலையிடுவது, வீணான கவலை, பயம், அவசரம், பதட்டம், டென்சன் என்று உணர்ச்சிக் கொந்தளிப்பால் தவிப்பு. முடிவு செய்ய முடியாமல் சிந்தனை தெளிவில்லாமல் படும் சங்கடம். இதனால் ஏற்படும் குழப்பம். இப்படிப் பல காரணங்கள்.
    எங்கே அமைதி? அங்கே எனக்கோர் இடம் வேண்டும்? என்ற தவிப்பு. அமைதி என்பது கடைச்சாக்கல்ல, காசு கொடுத்து வாங்குவதற்கு. அந்த அமைதி உங்களிடமே தான் இருக்கிறது. அந்த உள்ளார்ந்த அமைதியை அனுபவிக்க முடியாமல் பல்வேறு காரணங்கள் திரையிட்டு மறைத்துள்ளன.
    பித்தளை பாத்திரத்தில் களிம்பு ஏறியது போல உங்கள் மனதில் உள்ள அமைதியை உணர்ந்து அனுபவிக்க முடியாமல் மறைத்திருக்கும் திரையை விலக்கிவிட்டால், கதவைத் திறந்து வைத்தால் இதமான பூங்காற்று உள்ளே வருவது போல அமைதி பூத்துக் குலுங்குவதைக் காணலாம்.
    உங்கள் சுமை வருவதற்கான வழிகளை அடைத்துவிடுங்கள். அப்போது அந்த அமைதியில் திளைத்து அனுபவிக்கலாம். அதற்கான வழிகள்.
     மற்றவர் விஷயத்தில் வீணாக மூக்கை நுழைக்காதீர்கள். கருடா சௌக்கியமா? என்று நாகம் கேட்டது. கருடன் சொன்னது. அவரவர் இருக்குமிடத்தில் அவரவர் இருந்தால் அனைவருமே சௌக்கியம் என்றது. இது தான் உண்மை.
    நாம் ஏதோ மற்றவர்களுக்கு ஆலோசனை கூறக் கடமைப்பட்டிருக்கிறோம் என்று நினைத்து, அவர் கேளாமலேயே ஆலோசனை கூற முற்படும்போது தான் பிரச்சனையே எழுகிறது. ஏன் தான் அவருக்கு யோசனை சொல்கிறோம் என்று நாமும் வருந்துகிறோம். அவருக்கும் எரிச்சல் வருகிறது. இது தேவையா?
     ஒருமித்த கருத்து என்று எதுவும் இல்லை. அதனால் தான் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண கூட்டம்போட்டு விவாதிக்கும்போது, பெரும்பான்மையாளரது (மெஜாரிட்டி ஒபினியன்) கருத்தை ஏற்றே தீர்மானம் போடுகிறோம்.
    சில சமயங்களில் ஒரு முடிவிற்கு வர முடியாமல் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதும் உண்டு. Consensus என்று எதுவும் இல்லை. கணவன் மனைவிக்கிடையே ஒருமித்த கருத்து இல்லையே. அவரவர் வழி, அபிப்ராயம், சிந்தனை, முடிவு வேறு வேறாகத் தானே இருக்கிறது Let Us Agree to Disagree என்பதுவே சரியான அணுகுமுறை.

    ஆண்களும், பெண்களும் அவரவர் கருத்துப்படி தான் நடக்கிறார்கள். என்னுடைய கருத்தே சரி என்று வலியுறுத்துவதாலேயே பிரச்சனை எழுகிறது. மாற்றுக் கருத்துக்கு மதிப்பு கொடுத்து, விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போனால் பிரச்சனையே கிடையாது.

     மன்னிப்போம், மறப்போம். மன்னிப்பதும், மறப்பதும் தெய்வ குணம். யேசு பிரான் சிலுவையில் அறையப்பட்டபோது, “பரம பிதாவேÐ அவர்கள் செய்வது இன்னதென அறியமாட்டார்கள். அவர்களை மன்னித்தருள்வாயாகД என்று பிரார்த்தனை செய்தவர்.
    அந்தத் துன்பத்தை அவர் அமைதியாக ஏற்றுக்கொண்டதால், தனக்கு தீங்கு இழைத்தவர்களையும் அவர் மன்னித்ததால் அவர் “நிம்மதி” குலையவில்லை. இதுதான் “சமத்துவம் யோக முச்யதே” என்பது. இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக ஏற்றுக்கெள்ளும் மனநிலையே அமைதிக்கான ஊற்றுக்கண்ணாகும்.
    நம்மை யாராவது குறை சொன்னாலும், நமக்கு யாராவது தீங்கு செய்தால் அதனை நம்மால் எளிதில் மறக்க முடிவதில்லை. அவரை மன்னிப்பதும் சாத்தியமில்லை. இதுவே நமது மன உளைச்சலுக்குக் காரணம். அமைதி அதனால் பறிபோகிறது.
     அங்கீகாரத்திற்காக நாம் ஏங்குவதாலும் நம் மன அமைதி பறிபோகிறது. பாராட்டும், பரிசும் எதிர்பார்க்கிறோம். அது கிடைக்காவிடில் துன்பப்படுகிறோம். ஏமாற்றத்தில் திளைக்கிறோம்.
    பிறருடைய அங்கீகாரத்தை (Recognition) எதிர்பார்த்து நாம் ஏன் செய்ய வேண்டும். நம் பணியை கர்ம சிரத்தையுடன், நல்ல முறையில் நிறைவேற்றினால் அதற்குண்டான பலன் நமக்குக் கிடைக்கும் அல்லவா?
    நமக்கு கிடைக்க வேண்டிய புகழை, கௌரவத்தை யாராலும் தட்டிப் பறிக்கவும் முடியாது.
     பொறாமை எனும் தீயில் வெந்து மடிய வேண்டாம். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னா சொல் இவை நான்கும் இழுக்கா இயன்றது அறம் என்பது வள்ளுவர் வாக்கு.
    பொறாமை உங்கள் அமைதியைக் குலைத்துவிடும் பெரிய அரக்கன். உங்களுடைய துரதிர்ஷடத்துக்காக மற்றவர்களைப் பழிக்க வேண்டாமே. என்ன கிடைக்க வேண்டுமோ, எப்படி கிடைக்க வேண்டுமோ அது உரிய நேரத்தில் உங்களுக்குக் கிடைத்தே தீரும். இதுதான் இயற்கை நியதி.
     சுற்றுச்சூழலுக்கு ஏற்ப நடந்து கொள்ளுங்கள். இங்கிதம் தெரிந்து பேசுங்கள், பழகுங்கள், மனதில் உள்ளதையெல்லாம் அப்படியே கொட்டிவிடாமல் சிந்தித்துப் பேசுங்கள்.
    உங்களால் ஒருபோதும் இயற்கைச் சூழலை மாற்ற முடியாது. ஆற்றுப்போக்கோடு அனுசரித்துப் போனால் கரை சேரலாம். அனுசரித்துப் போகும்போது எதிரான சூழல்களும் கூட சாதகமானதாக அமையும்.
     தீர்க்க முடியாத பிரச்சனைகளை மனப்பூர்வமாகக் கற்றுக்கொள்ளுங்கள். “God give me the wisdom to discriminate my problem whether it is soluable or not. If I can find the solution I can. If I can’t let me accept it” என்று யேசு பிரான் இறைவனிடம் பிரார்த்திக்கின்றார். இதுதான் உண்மை.
    தீர்க்க முடியாத பிரச்சனைகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை நாம் வளர்த்துக் கொண்டால் அது நம்மை பாதிக்காது. மன அமைதியும் கெடாது.
    அதை மறந்துவிட்டு வேறு வேலைகளில் நம் கவனத்தைத் திருப்பினால் கவலைப்படத் தேவையில்லை. செய்ய முடியாத வேலைகளை வலுக்கட்டாயமாக ஏற்றுக்கொண்டு பின் வருந்துவானேன்.
    தேவையில்லாத வேலைகளை இழுத்துப் போடாமல் இருந்தாலே அமைதியாக இருக்க முடியும்.
    தியானம் பழகுங்கள். அன்றாடம் காலை, மாலை 10 நிமிடமாவது தியானத்தில் ஆழ்ந்திருப்பீர்களானால் உங்கள் மனம் அமைதியுற்று, எண்ண ஓட்டங்கள் குறைந்து நீங்கள் நிம்மதியாக இருக்க முடியும்.
    உண்மையான ஆர்வத்துடன் தொடர்ந்து தியானம் செய்து வந்தீர்களானால் அதன் பலன் வெகுவாக இருக்கும் என்பதை உணர்வீர்கள்.
    மனதை எப்போதும் நல்ல விஷயங்களில் திருப்புங்கள். அதனை வேண்டாத விஷயங்களைப் போட்டு வைக்கும் குப்பைத் தொட்டி ஆக்காதீர்கள்.
     நமக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்தி நம்மை செயல்படுத்துகிறது என்பதை உணர்ந்து அறிந்து அவற்றை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வோமானால் அவை நமக்குத் தொல்லை தராது.
     உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நம்பிக்கையுடன் உங்கள் பணிகளைச் செய்யுங்கள். நம்பிக்கையே உயிர்நாடி பொறுமையும், நம்பிக்கையும், சகிப்புத்தன்மையும் அளப்பறிய நன்மை பயக்கும்.
     மெல்ல முடியாததைக் கடிக்காதீர்கள். இயன்றது போதும் என்று நினைவில் கொள்ளுங்கள். வீணாக ஏன் சுமைகளை உங்கள் தோள் மீது சுமக்கிறீர்கள். உங்களால் செய்ய முடிந்ததைச் செய்யுங்கள்.
    நல்லுணர்வு, நற்சிந்தனை, நற்செயல், இறைபக்தி, ஸ்வாத் யாயம் என்ற நல்ல நூல்களைப் படித்தால், நம்பிக்கை தரும் நல்ல விஷயங்களிலேயே கவனத்தைச் செலுத்தும்.