– 2012 – October | தன்னம்பிக்கை

Home » 2012 » October (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    இலட்சியத்தைப் பின் தொடர்ந்தால்…

    தமிழில் ஒரு பழமொழி உண்டு; கேள்விபட்டிருப்பீர்கள்; “அடிக்க அடிக்க அம்மியும் நகரும்.”

    அதை ஏன் போட்டு அடித்துக் கொண்டிருக்க வேண்டும்? துணைக்கு ஒருவரை அழைத்து நகர்த்தி வைத்துவிட்டுப் போனாலென்ன? இங்கு தூக்கி வைப்பதன்று பிரச்சினை. விடாமுயற்சி! அதுதான் பேச்சு இங்கு!

    Continue Reading »

    உங்களால் முடியும்

    வழியில் வருகிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு வெற்றி காண்பது ஒருவிதம். மற்றவர்கள் கண்களுக்கு எளிமையாய்த் தென்படும் விஷயங்களில்கூடப்பெரிய வாய்ப்புகளைக் கண்டறிந்து, அதன் வழியே வெற்றிபெறுவது இன்னொருவிதம்.

    Continue Reading »

    வெற்றி வேண்டுமா வழிகள் இதோ!!

    எதைச் செய்தாலும் வெற்றிக்காகவே செய்கிறோம். ஆனால், எப்படிச் செய்கிறோம் என்பதைப் பொறுத்ததுதான் வெற்றியும் தோல்வியும். செய்கிற வேலைகளும் தொழில்களும் வேறுபடலாம். பொதுவானதாக இருப்பது அணுகுமுறையும், நம்மை ஆயத்தம் செய்து கொள்கிற விதங்களும்தான்.அவற்றில் கவனம் செலுத்துகிறபோது வெற்றிக்கான விதை விழுகிறது.

    Continue Reading »

    வாழ்கையின் 20 கோட்பாடுகள்

    * எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை அழகா கையாளுங்கள்.

    * அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.

    Continue Reading »

    ஆகாது-முடியாது-நடக்காது

    நீராவிப் படகை(Steam Boat) கண்டு பிடித்த ராபர்ட் புல்டன் (Robert Fulton) முதன் முதலில் அதைப் பொது மக்கள் மத்தியில் செயல்படுத்திக் காட்ட முயன்ற போது அது உடனடியாகக் கிளம்பவில்லை. ஓரமாக நின்று பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் “இதெல்லாம் ஸ்டார்ட் ஆகாது. இந்தப் புதிய வகைப் படகு வேலை செய்யக் கூடியதல்ல.

    Continue Reading »

    குறையை நிறையாக்கலாம்

    ஒரு கிறித்துவ தேவாலயத்தில் புதிதாக ஒரு மதகுரு பொறுப்பேற்றார். அவர் நிர்வாகத்தை முற்றிலும் மாற்றி அமைக்க முடிவு செய்தார் தேவாலயத்தில் பணிபரியும் எல்லோருக்கும் எழுதப்படிக்க தெரிய வேண்டும் என்று எதிர் பார்த்தார். கையெழுத்துக் கூட போடத் தெரியாதவர்களை வேளையைவிட்டு நீக்கிவிடுவேன் என்று எச்சரித்தார். கொஞ்ச அவகாசமும் கொடுத்தார்.

    Continue Reading »

    வெற்றியின் ரகசியம்

    ஒரு மகாராஜா தன் அரண்மனையில் மிகச் சிறந்த சேவல் ஓவியத்தை வைக்க நினைத்தார். மன்னனின் ஆசை காட்டுத் தீ போல் எல்லா ஊரிலும் பரவியது. ஏத்தனையோ ஓவியங்கள் வந்தும் அவற்றில் மன்னனுக்கு முழுத் திருப்தி ஏற்படவில்லை. மற்ற நாடுகளில் உள்ள ஓவியர்களுக்காக ஒரு போட்டி வைத்தார் மன்னர்.

    Continue Reading »

    எங்கே தொடங்கியதோ அங்கேயே முடியும்

    ஒரு ஊரில் கல் உடைக்கும் தொழிலாளி ஒருவன் இருந்தான். அவன் தன் வாழ்க்கை நிலை பற்றி அதிருப்தியும், கவலையும் அடைந்திருந்தான். ஒரு நாள் ஒரு செல்வந்தனின் வீட்டின் வழியே சென்றான்.

    Continue Reading »

    கண்களை திறங்கள்… கனவுகள் நிஜமாகட்டும்!

    ஹோவர்ட் கார்னர் எழுதிய எதிர்காலத்துக்கான ஐந்து அறிவு என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

    1. ஒழுக்கமான மனம்: அறிவியல், கலை மற்றும் வரலாறு என்று பல்வேறு துறைகளில் சிந்தனைகளை வளர்க்கக்கூடிய மனம். இவற்றில் ஏதாவது ஒன்றில் நாம் மிகச்சிறந்து விளங்க வேண்டும்.

    Continue Reading »

    நீ ஆளப்பிறந்தவன்!

    ஒரு மனிதனின் வெற்றி என்பது தான் டாக்டராகவோ, எஞ்சினியராகவோ, வக்கீலாகவோ, கலெக்டராகவோ ஆவதில் இல்லை. வரலாறு நமக்குக் கூறும் செய்தி என்னவென்றால் தன் ஆதாயத்துக்கு வாழ்ந்தவர்களுக்கு மண்ணில் இடம் கிடைக்கும். ஆனால் ஆகாயம் போல் பிறருக்காக வாழ்ந்தவர்களுக்கே வரலாற்றில் இடம் கிடைக்கும் என்பதேயாகும்.
    வெற்றிகள் தோல்விகள், தொல்லைகள் பிரச்சனைகள், சிக்கல்கள் குழப்பங்கள் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. வாழ்வில் தோல்விகள் ஏற்படுவது நமக்குள் பல கேள்விகள் ஊற்றெடுக்கவே! தோல்வி ஏற்படும்போது ஏன்? என்ற சிந்தனை மனதில் பிறக்கிறது. பின் சிந்தனை செயலாக மாறும்போது வெற்றி நிச்சயமாகிறது. தோல்வி ஏற்படும்போது நேர்மறையான சிந்தனையை வளர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக மனதின் எண்ண ஓட்டத்தை, கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
    தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார பல்பைக் கண்டறிய 1000 தோல்விகளை சந்தித்தார் என்று எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் கூறுகிறார்கள். ஆனால் எடிசன் அவர்களோ நான் 1000 முறைகளில், வழிகளில் எப்படியெல்லாம் ஒரு மின்சார பல்பைக் கண்டறிய முடியாது என்பதை தெரிந்து கொண்டேன் என்று நேர்மறை எண்ணத்தோடு, உயர்ந்த மனப்பான்மை கொண்ட கண்ணோட்டத்தோடு சிந்தித்து செயல்பட்டு இருண்டு கிடந்த இவ்வுலகை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.
    முயற்சியும், பயிற்சியும், சிந்தனையும், செயலும், வேகமும், விவேகமும் ஒன்று சேரும்போது வெற்றி நிழல்போல் நம் காலடியை விட்டு, கையைவிட்டு அகலாது.
    “எண்ணம்போல் வாழ்வு”“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
    “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்”
    “வினைத்திட்டம் என்பது ஒருவரது மனத்திட்பம்”
    போன்ற கருத்தாழமிக்கக் கருத்துக்களை முன்னோர் எழுதியது ஏட்டை நிரப்புவதற்கல்ல, வெற்றிடமாய் இருக்கும் இளைஞர்களின் மனதில் நம்பிக்கையை நிரப்புவதற்காக முன்னோர் நமக்கு விட்டுச்சென்ற, கட்டளையிட்டு சென்ற சொத்துக்கள் ஆகும்.
    இப்புவி கூட அழிந்துபோகும் பூகம்பம் ஏற்பட்டால்…
    ஆனால், மனித வாழ்க்கை என்றுமே அழியாது.
    தனக்குள் தன்னம்பிக்கை துளிர்விடும்போதும் மனதிற்குள் துணிச்சல் வேர்ப்பிடிக்கும் போதும்.
    அய்யன் திருவள்ளுவர் முதல் அய்யா அப்துல்கலாம் வரை அவர்களின் வாழ்க்கை சரித்திரத்தில் இருப்பதற்கு காரணம் தன் எண்ணத்தின் மீது கொண்ட அளவிட முடியாத தன்னம்பிக்கையால் தான். எனவே தான் அய்யன் திருவள்ளுவர்,
    “வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு” என்கிறார்.
    “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாகத் தெரியும்” என்ற பழமொழிக்கேற்ப தன் மீதும், தன் திறமை மீதும், தன்னம்பிக்கையில்லாத நபர்களுக்கு பஞ்சு மூட்டை கூட பாறையாகத் தெரியும். லாட்டரி சீட்டு, ஜோதிடம், ஜாதகம் போன்ற குருட்டு நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கை இருள் சூழ்ந்து தோல்வி பெறுவது வியப்பொன்றும் இல்லை.
    குளத்தில் குளிக்க நினைத்தவர் கரையில் நின்று தண்ணீர் சுடுகிறதா இல்லை, குளிர்கிறதா என்று ஆராய்ச்சியில் மூழ்கி எந்தப்பயனும் இல்லை. குளிக்க நினைத்தவுடனே தண்ணீரில் மூழ்கினால் தானே அதன் உண்மை நிலை புரியும். குளத்திலுள்ள நீர் சுடுகிறதா இல்லை குளிர்கிறதா என்று உடனே தெரியும். எனவே ஒருவர் ஒரு செயலில் வெற்றி பெற நினைத்தால் அந்த செயலில் நீந்த வேண்டும் அல்லது மூழ்க வேண்டும். நீந்தும் நபர் வெற்றி பெறுகிறார். மூழ்கும் நபர் சாதனை படைக்கிறார்.
    போர்க்களத்தில் ஒருவர் புத்தகம் வாசித்துக் கொண்டு இருந்தார் ஒருநாள் அந்த நபரைப் பார்த்த பெண்மணி கேட்டார், ‘ஏன் எல்லோரும் ஓய்வெடுத்து உறங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் நீ மட்டும் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறாய்?’ என்று. அதற்கு அந்த நபர் சொன்னார், ‘இன்று சிப்பாயாக பணிபுரியும் நான் இந்தப் படைக்கு ஒருநாள் தலைவனாக ஆக வேண்டுமென்று’.
    அப்படித் தன் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட நபர் பின்னாளில் அந்தப் படைக்கு மட்டுமல்ல, அந்த நாட்டுக்கே மன்னன் ஆனார். அவர் வேறு யாருமில்லை பிரான்ஸ் நாட்டையாண்ட மாவீரன் நெப்போலியன் தான்.
    வாழ்க்கையென்பது அற்ப விஷயங்களில் ஈடுபட்டு அற்புதமான பொழுதுகளை வீணாக்குவதற்கல்ல! அச்சடித்த வரலாற்றை படிக்க எல்லோருக்கும் எளிது. ஆனால் அழகான உங்கள் வாழ்க்கை வரலாற்றை பொன்னெழுத்துக்களால் பொறிக்க, சாதனை படைக்க தன்னம்பிக்கை இதழைப் படித்து தன்னம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களால் நிச்சயம் முடியும். ஏனென்றால், நீ அழப்பிறந்தவனல்ல… ஆளப்பிறந்தவன்