– 2012 – September | தன்னம்பிக்கை

Home » 2012 » September

 
  • Categories


  • Archives


    Follow us on

    வளமூட்டும் சிந்தனைகள்………………..

    அவருக்கு ஐந்தடி பதினோரு அங்குலம் உயரமிருக்கும். அகன்ற மார்பு. கைகளைப்பிடித்தால் இரும்பைப்போன்ற உறுதி; நடக்கும்போது தரை அதிரும். அறுபத்தைந்து கிலோ எடை கொண்ட குமாராசாமி, ஒரு விளையாட்டு சாம்பியன். நூற்றுக்கணக்கா கிலோ எடைகளை துச்சமாக தூக்குவார்.

    Continue Reading »

    எது கனவு?

    ஜென் ஞானி சுவாங் ட்சு ஒரு நாள் காலை எழுந்ததும் தனக்கு ஒரு சந்தேகத்தால் குழப்பம் ஏற்பட்டிருப்பதாகவும் அதைத் தீர்த்து வைக்க உதவுமாறும் தன் சீடர்களைக் கேட்டுக் கொண்டார்.

    Continue Reading »

    விடாமுயற்சியே வெற்றியின் ரகசியம்

    நாம் நினைக்கும் ஒவ்வொரு எண்ணமும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் சூட்சுமமாக நம்மிடமே திரும்புகின்றன.யாருடைய நம்பிக்கையையும் கலைக்க முயலாதீர்.

    Continue Reading »

    மக்காச்சோளம் கற்றுதரும் பாடம்

    நம் வாழ்க்கையில் பல சமயங்களல் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள ஆசைப்படுகிறோம். வாழ்க்கைப் புத்தகத்தில் புதியதொரு பொலிவான பக்கத்தைத் திருப்பி அதிலிருந்து அத்தனையையும் சிறப்பாய் செய்யத் துவங்க விரும்புகிறோம். எத்தனையோ புத்தாண்டு ஆரம்பங்களல் அப்படி ஆரம்பித்தும் இருக்கிறோம்.

    Continue Reading »

    நதிபோல ஓடிக்கொண்டிரு!!

    ஒதுங்கி ஒதுங்கி வாழ்வது தான் வாழ்வா?
    ஒதுங்கியிருந்து கொண்டு நாளை என்னும் கனவில் வாழ்வது தான் வாழ்வா?
    எல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று ஒத்தி வைப்பது தான் வாழ்வா?
    இல்லை . . .
    எப்போதும் செயல்புரிந்து கொண்டிருப்பதுதான் வாழ்க்கை. நதிபோல ஓடிக்கொண்டிருப்பதே வாழ்க்கை. ஆனால் பலர் வாழ்க்கையை பதுங்கிக்கொள்ளும் இடமாகவே வைத்திருக்கிறார்கள்.
    ஓடிக்கொண்டிருப்பதில் தான் உத்வேகமும், உற்சாகமும் இருக்கும்; புத்துணர்வும், புதுவேகமும் இருக்கும். செயல்பட தயங்குகிறவர்கள் அவைகளையெல்லாம் அலைச்சல்களாக நினைத்து அடங்கியிருக்கிறார்கள்.
    எதற்கும் ஆர்வமில்லை, எதையும் தேடிப்போக மனமில்லை, அதுவாகவே வரட்டும் பார்க்கலாம் என்று அமர்ந்திருந்தால், அப்படி எதுவும் வந்து விடாது. எதற்கும் சோம்பல், எதைச் செய்யவும் ஆர்வமின்மை இவைகளுக்கெல்லாம் காரணம் மனத்தளர்வு. அப்படி என்னதான் கிடைக்கப்போகிறது என்ற சலிப்பு. இப்படி தன்னம்பிக்கையில்லாமல் முன்னோக்கி நடக்காமல் பின்னோக்கி நடப்பவர்கள் விழித்துக்கொள்ளுங்கள். எதுவும் தானாக வருவதில்லை எதையும் நாம் தான் கொண்டுவர வேண்டும் என்பதை நம்புங்கள்.
    வாழ்வு என்பது ஒரு துடிப்பு. வாழத் துடிக்கிறவனே வாழக் கற்றுக் கொள்கிறான். எதிலும் எதிர்நீச்சல் போடுகிறான். உங்களுக்குள்ளே ஒரு துடிப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வாழ வேண்டும், முன்னேற வேண்டும் என்ற துடிப்பு ஏற்படும்போது தயக்கம், சோம்பலெல்லாம் காணாமல் போய்விடும். செயல்களில் எளிதானது, கடினமானது என்று எதுவும் கிடையாது. நாம் அதை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. எனவே சோர்வு, அலைச்சல் என்று எடுத்துக் கொள்ளாமல் ஓடிக்கொண்டிருங்கள்.
    வெற்றியில் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட அந்த வெற்றியை நோக்கி ஓடுவதில்தான் அதிக மகிழ்ச்சி இருக்கிறது. மகிழ்ச்சியுடன் ஆர்வத்துடன் ஒரு செயலை செய்ய வேண்டுமானால், அடுத்தவரின் தூண்டுதல்களினால் இல்லாமல் நமக்குள்ளிருந்து ஏற்படும் உந்துதலினால் செயல்பட வேண்டும். உள்ளுணர்வுகளுடன் துணிச்சல் போன்ற வலிமை வெளியே வேறு எங்கிருந்தும் கிடைப்பதில்லை. எந்த திடமான முடிவும் நம்மிலிருந்துதான் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
    வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களெல்லாம் நம்மை உருவாக்கவே ஏற்படுகிறது. அதில் சோர்ந்து போகாமல் அதிலிருந்து புதிய பாடத்தினை, புதிய வழியினைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு செயலை செய்து முடிப்பதற்கு ஒரு வழியில்லை, பல வழிகள் உள்ளன. நாம் காணும் துன்பங்கள்தான் நமக்கு புது வழியினை காட்டித் தருகின்றன. அதே துன்பத்தில் துவண்டு போனோமானால் எல்லா வாசல்களும் அடைபட்டுவிடும். அங்கே தான் பல தற்கொலைகளும் நிகழ்கின்றன. எனவே, துவண்டு விடாமல் நம் உள்ளுணர்வுகளால் உலகை வெல்வோம்.
    விலகியிருந்து பார்க்கும்போது எல்லாமே சிக்கல் நிறைந்ததாகவே தெரியும். துணிவோடு புகுந்து சென்றால் வானமும் தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கும். எனவே எதற்கும் தயக்கம் வேண்டாம். அஞ்சாமல் புறப்படுங்கள்…
    வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆக வேண்டும். எனவே வாழ்க்கையை நேசியுங்கள். உங்களை நேசியுங்கள். வாழ்க்கை உங்கள் உள்ளங்கைக்குள் அடங்கி நிற்கும். செய்யத் துணிபவனுக்கும், எண்ணத் துணிபவனுக்கும் தான் வெற்றி கிட்டுகிறது!

    க்யூரியாசிட்டி

    8 மாதங்கள், மணிக்கு 13,000 கி.மீ. வேகத்தில் 567 மில்லியன் கிலோமீட்டர் பயணம் செய்து ஆகஸ்ட் 6ம் தேதி இந்திய நேரப்படி காலை 11 மணிக்கு செவ்வாய் கிரகத்தை அடைந்து பத்திரமாகத் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது க்யூரியாசிட்டி விண்கலம்.
    ஒரு டன் எடைகொண்ட இந்த விண்கலம் ஒரு நடமாடும் ஆய்வுக் கூடமாகும் (Mars Science Laboratory – MSL). 12 நாடுகள் நிதியுதவியுடன் ரூ.12, 000 கோடி செலவில் நாஸாவால் தயாரிக்கப்பட்ட அணுச்சக்தியில் இயங்கும் 6 சக்கரங்கள் உள்ள இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.
    லேசர் துப்பாக்கிகள், இரசாயன, உயிரியல் ஆய்வுக் கருவிகள், பெரும் சக்திபடைத்த டெலஸ்கோப் உள்ளிட்டவைகளோடு செவ்வாயில் தரையிறங்கிய இந்த விண்கலத்தை அனுப்பிய நாஸா விஞ்ஞானிகள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருந்தார்கள் என்பதுதான் உண்மை.
    அதற்குக் காரணம், செவ்வாய் கிரகத்துக்குள் நுழையும்போது இதன் வேகம் 20,921 கி.மீட்டராக இருந்தது. ஒலியின் வேகத்தைவிட 17 மடங்கு அதிகம். இந்த பயங்கரமான வேகத்தில் கிரகத்துக்குள் நுழையும் க்யூரியாசிட்டி கிட்டத்தட்ட 7 நிமிடங்களில் தரைப்பகுதியை நெருங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தரையைத் தொடுகின்ற கட்டத்தில் வேகம் மணிக்கு 3 கி. மீட்டருக்கும் குறைவாக இருக்க வேண்டும். இல்லாவிடில் விண்கலம் தரையில் மோதி நொருங்கிவிடும்.
    காற்று மண்டலம் வழியே வேகமாகக் கீழ் நோக்கி இறங்குகையில் விண்கலத்தின் வெளிப்பகுதியைத் தாக்கும் வெப்பம் 1600 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு இருக்கும் என்பதால் வெளிப்புறப்பகுதி தீப்பிழம்பாகக் காட்சியளிக்கும். இப்படியான வெப்பம் விண்கலத்தையே அழித்துவிடும். ஆகவேதான் முத்துச்சிற்பி வடிவிலான பெரிய பேழைக்குள் விண்கலம் வைக்கப்பட்டு, இதன் அடிப்புறத்தில் வெப்பத்தடுப்பு கேடயம் பொருத்தப்பட்டு, ஆபத்துக் கட்டத்தைத் தாண்டிய பிறகு வெப்பத் தடுப்புக் கேடயம் தனியே பிரிந்து விழும்படி செய்திருந்தனர்.
    மேலும் ‘க்யூரியாசிட்டி’ விண்கலம் தரையில் இறங்குவதற்கு இதுவரை இல்லாத புதுமுறை கையாளப்பட்டது. விண்கலத்துடன் இணைந்த பிரம்மாண்டமான பாராசூட் விரிந்து கொள்ளும். விண்கலம் கீழே இறங்கும் வேகத்தை பாராசூட் பெரிதும் குறைக்கும். அதாவது பாராசூட்டிலிருந்து விண்கலம் பிரிந்ததும் நான்கு கால்களைக் கொண்ட ஒரு கிரேன் முதலில் வெளியே எட்டிப்பார்க்கும். பின்னர் அந்த கிரேனிலிருந்து நைலான் கயிறுகள் மூலம் விண்கலம் தொங்க ஆரம்பிக்கும். ‘ஸ்கை கிரேன்’ எனப்படும் இந்த கிரேனின் கால்பகுதியிலிருந்து நெருப்பு கீழ்நோக்கிப் பீச்சிட தரையில் பத்திரமாக இறங்கும்படி நாஸா விஞ்ஞானிகள் செய்திருந்தனர்.
    ராக்கெட்டிலிருந்து நெருப்பு பீச்சிட்டால், ராக்கெட் மேல்நோக்கிப் பாய முற்படும். ஸ்கை கிரேனிலிருந்து கீழ்நோக்கி நெருப்பு பீச்சிடும்போது க்யூரியாசிட்டியை மேல்நோக்கித் தள்ளும். செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு சக்தி கீழ்நோக்கி இழுக்கும். இந்த இரு விளைவுகளின் பலனாக க்யூரியாசிட்டி கீழ்நோக்கி இறங்கும் வேகம் மிகவும் குறைக்கப்பட்டு மெல்ல தரையில் இறங்கும். இந்த உத்திதான் சந்திரனில் தரை இறங்குவதற்கும் பயன்படுத்தப்பட்டது.
    இவையனைத்தும் திட்டமிட்டபடி ஒழுங்காக 7 நிமிடத்தில் நடைபெற்றாக வேண்டும் என்ற கவலை தான் நாஸா விஞ்ஞானிகளுக்கு இருந்தது. ஏழு நிமிட பயங்கரம் என்று வர்ணிக்கப்பட்ட நேரத்தில் கிரகத்துக்குள் நுழைந்த க்யூரியாசிட்டி குறிப்பிட்ட இடத்தில் பத்திரமாகத் தரையிறங்கியது.

    க்யூரியாசிட்டி என்ன செய்யும்?
    சுமார் 10 அடி உயரம், 6 சக்கரங்கள் வடிவில் உறுதியான கால்கள் கொண்ட க்யூரியாசிட்டியின் மேல் நோக்கி நீட்டிக் கொண்டிருக்கும் தட்டின் உச்சியில் நெற்றிக்கண். சற்று கீழே காமிரா வடிவில் இரு கண்கள். இவை எந்த பக்கம் வேண்டுமானாலும் திரும்பும்படி அமைக்கப்பட்டுள்ளது. நெற்றிக்கண்ணில் இருந்து கிளம்பும் லேசர் ஒளிக்கற்றையானது சுமார் 7 மீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய கற்களைத் தாக்கிச் சுட்டெரித்து விடும். இது தவிர மேலும் 14 காமிராக்கள் உள்ளன.

    க்யூரியாசிட்டி – சில தகவல்கள்
    – க்யூரியாசிட்டி நகர்ந்து செல்லவும், கருவிகள் இயங்குவதற்கும் தேவைப்படும் மின்சாரத்திற்கு, 5 கிலோ ‘புளூட்டோனியம் 238’ என்ற அணுசக்திப் பொருள் வைக்கப்பட்டுள்ளது. இதன் வெப்பம் மின்சாரமாக மாற்றப்படும். புளூட்டோனியம் 14 ஆண்டுகளுக்கு விண்கலத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.
    – Gale Creater எனப்படும் வட்ட வடிவ பள்ளத்தை 100 விஞ்ஞானிகள் கூடி ஆராய்ந்து தேர்ந்தெடுத்தனர். 23 மாத காலம் இப்பகுதியில் 20 கி.மீ. நடமாடும் க்யூரியாசிட்டி.
    – இதற்கு பெயர் வைப்பதற்காக நாஸாவால் நடத்தப்பட்ட போட்டியில் 6ம் வகுப்பு படிக்கும் ‘கிளாரா மா’ என்னும் 12 வயது அமெரிக்க மாணவி கூறிய பெயர் ஏற்கப்பட்டு க்யூரியாசிட்டி என்று பெயர் வைக்கப்பட்டது. அம்மாணவியைக் கவுரவிக்கும் வகையில் க்யூரியாசிட்டி விண்கலத்தின் மீது அவர் கையொப்பமிட அனுமதிக்கப்பட்டார்
    – க்யூரியாசிட்டி விண்கலம் நடத்தும் சோதனைகள், அதன் முடிவுகளை எல்லாம் ‘மார்க் ஒடிசி’ விண்கலம் தான் முதலில் அறிந்து, பூமிக்கு ஒலி ஒளி பரப்பு செய்யும்.

    குனிந்து கல்லையும், மண்ணையும் அள்ளுவதற்கு கிரேன் வடிவில் ஒரு கரம். இதன் நுனிப்பகுதியில் ஆல்பா கதிர்களையும், எக்ஸ் கதிர்களையும் வெளிப்படுத்தும் கருவியுள்ளது. தேர்ந்தெடுத்த கல்லின் மீது கதிர்களைப் பாய்ச்சும் போது கல்லின் தன்மை, அதில் அடங்கியுள்ள மூலகங்கள் தெரியவரும். இதில் உள்ள துளையிடும் கருவி மூலம் பாறை அல்லது நிலத்தில் துளையிட்டு பொடி வடிவில் சாம்பிள்கள் சேகரிக்கப்பட்டு, ஆராய்ச்சிக் கூடத்தில் பரிசோதிக்கும் பகுதிக்கு எடுத்துச்சென்று 1000 டிகிரி அளவிற்கு சூடேற்றப்பட்டு ஆராயப்படும்.
    கல் தீப்பற்றி எரியும் போது எழும் நெருப்பையும், வெளிப்படும் வாயுவையும் ஆய்வுக் கருவிகள் ஆராய்ந்து அக்கல்லில் உள்ள வேதியியல் பொருட்கள் யாவை என்று கண்டறிந்து கொள்ளும்.

    க்யூரியாசிட்டிக்கும் இந்தியாவிற்கும் உள்ள தொடர்பு:
    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரிலிருக்கும் பாஸ்டினா பகுதியிலிருக்கும் நாஸாவின் மிகப்பெரிய கனவுத்திட்டத்தில் பங்குபெற்ற 14000 ஆராய்ச்சியாளர்களில் பலர் இந்தியர், இந்திய வம்சாவளியினர். குறிப்பாக 7 நிமிட பயங்கரத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கி வேகத்தை மளமளவென சரிய வைத்த பல தொழில்நுட்பக் கருவிகளில் ஒன்றான ‘சூப்பர் சானிக் பாராசூட்’ இந்திய ஆராய்ச்சியாளரால் உருவாக்கப்பட்டது.
    மணிக்கு 180 மைல் வேகத்தில் இறங்கிக் கொண்டிருக்கும் விண்கலத்தின் வேகத்தை மணிக்கு 1.7 கி.மீ. வேகத்திற்கு குறைக்கவும், ஒரு குட்டி ராக்கெட்டின் வேகத்தை எதிர்ப்பு வரிசையில் கட்டுப்படுத்தவும் இந்தியாவின் ஜெ.பி.எல் (ஒங்ற் டழ்ர்ல்ன்ப்ள்ண்ர்ய் கஹக்ஷர்ழ்ஹற்ர்ழ்ஹ்) லேப் தயாரித்த டிசைனைத்தான் நாஸாவின் மார்ஸ் சயின்ஸ் லேபாரட்டரி இறுதிக்கட்டத்தில் பயன்படுத்தியது.

    நிபுணர்கள் செய்ய வேண்டிய பல பணிகளைத் தானே செய்து அந்த ஆராய்ச்சியின் முடிவுகளை பூமிக்கு அனுப்பப் போகிறது. அத்தனை ஆராய்ச்சிகளும் செவ்வாயில் எஹப்ங் இழ்ங்ஹற்ங்ழ் எனப்படும் வட்ட வடிவ பள்ளம் அமைந்த பகுதியில் நடைபெறும். இந்த 154 கி.மீட்டர் குறுக்களவு கொண்ட வட்ட வடிவ பள்ளம் கோடான கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பெரிய விண்கல் செவ்வாயைத் தாக்கிய போது ஏற்பட்டது. இதன் நடுவே 5 கி. மீ. உயரமுள்ள மலையும் உள்ளது.
    இந்த விண்கலம் நான்கு பிரதான நோக்கங்களுக்காக செயலாற்றும்.
    1. செவ்வாயில் என்றேனும் நுண்ணுயிர்கள்தோன்ற வாய்ப்பு இருந்திருக்குமா?
    2. செவ்வாயில் பருவ நிலைமைகள் எத்தன்மை கொண்டவை?
    3. செவ்வாயில் கல், மண், நில அமைப்பு எப்படிப்பட்டவை?
    4. செவ்வாயில் எதிர்காலத்தில் மனிதன் செல்வதற்கு எந்த அளவிற்கு உகந்த நிலைமைகள் உள்ளன?
    கியூரியாசிட்டி அனுப்பும் தகவல்கள் மூலம் 57 கோடி கி.மீ தொலைவிலிருக்கும் செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழத்தேவையான ஆக்ஸிஜன், தண்ணீர் ஆகியவை உள்ளனவா என்றகேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்பது நிபுணர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
    Srini_flower@yahoo.com

    எங்கே எனது உளி?

    ஒரு நாட்டின் எதிர்கால தலைவிதி என்பது ஒவ்வொரு வகுப்பறையிலிருந்து தான் உருவாக்கப்படுகிறது.

     உடல் ஆற்றலும், மன ஆற்றலும் மிகப்பெரிய அளவில் ஒருங்கிணைந்த இனமான இந்த மனித இனிமே நான் அறிந்த வரையில் ஈடுஇணையற்ற ஆற்றலைப் பெற்றது. இப்படிப்பட்ட ஆற்றலை வைத்துக்கொண்டு, அவற்றை சரியான வழியில், நாம் விரும்பியவற்றில் தான் பயன்படுத்துகிறோமா என்றால் பதில் என்னவோ இல்லை தான். ஏனென்றால் அத்தகைய ஆற்றலை வளப்படுத்த நாம் சிறிதும் முயற்சி செய்வதில்லை. அப்படியே சிலர் வளப்படுத்தினாலும், அதை தான் நினைத்த, தனக்குப் பிடித்த செயல்களில் பயன்படுத்த முடிவதில்லை.

    ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய உள்ளார்ந்த மனநிலையில் நிறைய திறமைகளைப் பெற்றவர்களாக இருக்கிறோம். உதாரணமாக, நல்ல இசைக் கலைஞர்ராக, நல்ல எழுத்தாளராக, சிறந்த அறிவியலாளராக, தத்துவஞானியாக, மொழியில் வல்லுநராக, குதிரை ஏற்றத்தில், கராத்தேயில், துப்பாக்கிச் சுடுதலில் என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். நம்முடைய பணியைத் தவிர்த்து இவற்றில் ஏதோ ஒன்றில் நம் மனதைப் பறிக்கொடுத்தவர்களாகவே உள்ளோம். இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

    சரி, இவற்றில் நாம் சாதனை செய்ய முடியாமல், எட்டாக் கனியாகவே இவை இருப்பதற்குக் காரணம் என்ன என்று சிந்திக்கையில் நம் கண்முன் வருபவர்கள் ஆசிரியர்கள். இங்கே நான் ஆசிரியர் என்று குறிப்பிடுவது பள்ளி ஆசிரியரையோ, பணி மேலாளரையோ அல்ல. அவற்றையெல்லாம் தாண்டி நீங்கள் விரும்பும் வாழ்வை, கலையை உங்கள் விரல் பிடித்துக் கற்றுத்தரும் ஆசிரியரை.

    எந்தத் துறையில் ஒருவன் மிகச்சிறந்த வல்லுனனாக, ஆளுமையுடையவனாக வர வேண்டுமானால் அவனுக்கு மிகச் சரியான ஆசிரியர் அமையப் பெற்றிருக்க வேண்டும். இல்லையேல் மிகக் கடினம். தன் வாழ்நாளில் அத்துறையில் அறிந்ததை, அனுபவத்தை அப்படியே மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பவர்.

    அப்படி ஊட்டப்பட்ட அறிவை மாணவன் கிரகித்துக்கொண்டு, பன்மடங்காகப் பெருக்கிக் காட்டுகிறான். இவ்வாறு தலைமுறைக்குத் தலைமுறை மனித ஆற்றலும், வளமும் பெருகிக் கொண்டே செல்கிறது. இத்தகைய ஆசிரிய  மாணவ (Master Desciple) முறையினால் பண்பாடும், அறிவும் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குச் சேதாரமின்றி கடத்தப்படுகிறது. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் குங்பு, கராத்தே கலைகளை கற்றுத்தரும் ஆசிரியர்களையும், கற்றுக்கொள்ளும் மாணவர்களையும் கூறலாம்.

    குங்பு, கராத்தே கலைகளைக் கற்றுத்தரும் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை ஒரு பந்தையக் குதிரைபோல தயார்செய்யும் விதம் மிகச்சிறப்பானதாக இருக்கும். அவற்றைக் கூர்ந்து கவனிக்கும்போது, அந்தக் கலையைக் கற்றுக் கொடுப்பதில் ஆசிரியர் காட்டும் சிரத்தையும், மாணவர்களின் ஆர்வமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.

    அங்கு அவர்களின் கலை தலைமுறை விட்டு தலைமுறைக்கு, பன்மடங்காகப் பெருக்கப்பட்ட அளவில் பரிமாற்றப்படுகிறது என்பதே உண்மை. நாமும் அப்படிப்பட்ட ஆசிரியர்களை எல்லாத் துறையிலும் அமையப் பெற வேண்டும் என மனம் ஏங்க வைத்துவிடுகிறது. இங்கு ஆசிரியர் அமைய வேண்டும் எனக் கூறுவது, அவர்களிடம் எளிதில் கற்றுக்கொண்டு அதனை அப்படியே பிரதிபலிப்பதற்கு அல்ல. அவர்கள்தான் நம்மை ஒருமுகப்படுத்தி, இலக்கைக்காட்டி, நம்மை அதைநோக்கி ஓடவைப்பவர்கள்.

    ஆசிரிய  மாணவ முறையினால் பண்பாடும், அறிவும் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குச் சேதாரமின்றி கடத்தப்படுகிறது.

    லேசாக ஒளிவிட்டுக் கொண்டிருக்கும் விளக்கு போன்ற நம் ஒவ்வொருவருடைய ஆற்றலையும் தூண்டி, சுடர்விட்டு எரியும் சுவாலையாக வளர்க்கும் திறன் கொண்டவர்கள். நாம் அடைய விரும்புவனவற்றை, நம் கனவை, அவர்களும் விரும்பி முழுமையாக அடைந்தவர்கள்.

    நாம் அங்கிருந்து தொடங்கும்போது நல்ல அடித்தளம் அமையப் பெறுகிறோம். ஒருதுறையில் ஒருவர் எட்டும் உயரத்தில் பாதி அவரது ஆசிரியரையே சேரும்  நான் கேட்பது நம்முடைய புராணங்களில் வரும் மிகுந்த கோபப்படும், கொடிய தண்டனைகளை வழங்கும் ஆசிரியர்களை அல்ல.

    கரடு, முரடான கற்களையும் வைரம் பாய்ந்த மரங்களையும் வேண்டிய வடிவில் வடிவமைத்துச் செப்பனிடும் கூறிய உளியைப் போல மனிதப் பேராற்றலை நமக்கு உகந்த வடிவில் வடித்துக்கொடுக்கும் என்னுடைய, உங்களுடைய ஆசிரியர் எனும் உளியை. எங்கே அப்படிப்பட்ட உளிகள் ?

    இந்தக் கட்டுரையை இத்துடன் முடித்துக்கொண்டு பேனாவை வைத்தபோது என்னுடைய நண்பரிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது. என்னை நலம் விசாரித்தவர் சற்றே உடைந்துபோன குரலில் எங்களின் பள்ளி ஆசிரியரின் மறைவைத் தெரிவித்தார். வாழ்க்கை ஓட்டத்தில் என் நினைவில் இருந்து பல வருடங்களாக மறைந்து போனவர் இன்று நிரந்தரமாகவே மறைந்துபோனார் என்று எண்ணும்போதே வருத்தம் ஏற்பட்டது. வருத்தத்தில் தோய்ந்த வார்த்தைகளால் காரணத்தை வினவினேன். வயதும், நோயும், நோயை விதைத்த கவலையும், கவலைக்குக் காரணமான வறுமையும், வறுமையை வழங்கிய சூழலுமெனக் காரணங்களைக் கூறினார் நண்பர்.

    நான் இன்று வளமான வாழ்வு வாழ அன்று விதை விதைத்து, அதைச் சரியே விளையச் செய்தவர் அவர். பேராசிரியராக, பல அடுக்குமாடிக் கட்டிட கல்லூரியில், ‘லேப்டாப்’ கணினியுடன் அவரை நினைவு கூறும் இந்த உயரத்திற்கு என்னை உந்தியவர். உருப்பெருக்கியைத் துணையாகக் கொண்டு தேடினாலும் கிடைக்கப் பெறாத தமிழக கிராமத்தில் தன்னுடைய நாடியைச் சுருக்கிக் கொண்டார். மனம் கண்ணீர்விட வேண்டியும், கண்ணீர் வராத திடத்தைக் கொடுத்தவர்.

    பள்ளி நாட்களில் என் விலாவை இறுகப்பிடித்து தூக்கி இந்த உலகம் உன்னுடையது எடுத்துக்கொள் என்று விண்ணைநோக்கி என்னை எறிந்து எனக்குள் இருந்த அச்சத்தையெல்லாம் போக்கியவர். தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் தந்தவர். அந்த வலுவான கைகளை என் விலா எலும்புகள் இப்போதும் உணர்கின்றன. என் வெற்றிகளைப் பாராட்டியவர், தவறுகளைத் தட்டிக்கொடுத்தவர், பள்ளி கடந்து கல்லூரி சென்ற பின்னரும் என் அப்பா, அவரை நேரில் பார்க்கும் போதெல்லாம் என் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்த போதெல்லாம் அப்பாவிடம் என்னை உயர்த்திக் காட்டியவர்.

    உலகம் அதன் சுழற்சி வேகத்தில் மாறியபோதும் தன் கடைசி நாட்கள் வரை நான் பள்ளியில் கண்ட அதே மிதிவண்டியில் பயணித்தவர். அவரைப்போன்ற எளிமை விரும்பிகளுக்கு இந்த உலகம் தகுதியற்றதாக மாறிப்போனதேன்? பலநூறு வெற்றியாளர்களை உருவாக்கியவர். உதவியென வாயைத் திறந்தால் உதவ எண்ணற்றோர் இருந்தும் கடைசிவரை இறுமாப்பாய் இருந்து இறந்துபோனது என் மனதில் இனம்புரியாத வேதனையைத் தோற்றுவித்துள்ளது.

    என்னைப்போன்ற நூற்றுக்கணக்கான சிறு திரிகளைப் பற்றவைத்த பேரொளிச்சுடர் அணைந்தது எப்படி? சுடர் அணைந்தாலும் அதன் கங்கு என் மனதில் கனன்று கொண்டேதான் இருக்கிறது. எப்போதும் இருக்கும் அந்த பேரொளிச் சுடர் பற்றிய நினைவுகள்… ��்�r���(?���வர் பெயரை உச்சரிக்காமல் பேசி சமாளித்து விடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அவர் சென்றபின், அவர் பெயர் பிரகாஷ் என்று பிராகாசமாக உங்கள் மூளைக்குள் மிகவும் தாமதமாக லைட் எரிவதாக வைத்துக் கொள்வோம். இந்த விதமான ஞாபக சக்தி நமக்குத் தேவையா? அல்லது எப்பொழுது வேண்டுமோ அப்பொழுது வெளிப்படும் ஞாபகசக்தி வேண்டுமா?

    அன்பு நண்பர்களே! நம் பிள்ளைகளும் படிப்பில் சுட்டியாக விளங்க இந்த ஞாபகத்  திறன் அவசியம் வேண்டும். உதாரணமாக, விஞ்ஞானப்பாடப் பரிட்சையில் முதல் கேள்வி முதல் பாடத்திலிருந்துதான் கேட்பார்கள் என்று கூற முடியாது. மொத்தமுள்ள 24 பாடங்களையும் நன்கு படித்திருந்தாலும் இந்தக் கேள்விக்கான பதில் எந்தப் பாடத்தில் இருக்கிறது என்று முதலில் புரிந்து, பின்னர் அதற்கான பதிலை எழுத வேண்டும். இந்த செயல்பாடு என்பது ஒரு நூலகத்தில் துறைவாரியாகவும் அகர வரிசையாகவும் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு சுலபமாக குறிப்பிட்ட புத்தகத்தை எடுக்க முடியுமோ அதுபோல, நம் மூளையானது வரிசைக் கிரையமாக படித்து மூளையின் நினைவாற்றல்    பகுதியில் பதிய வைக்கப்பட்டதிலிருந்து நினைவுக்கு கொண்டு வந்து (Recognition Power) கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விரைவாக பதில்களை எழுத வேண்டும். அப்படியில்லாமல் நான்காவது கேள்விக்கான பதில் பரிட்சை நேரம் முடியும் வரை ஞாபகத்திற்கு வராமல், பரிட்சை கூடத்தை விட்டு வெளியே வந்த பின்னர்  ஞாபகத்திற்கு வருவதால் யாரும் மதிப் பெண்கள் அளிக்கப் போவதில்லை. ஆகவே, நம் குழந்தைகளுக்கு புத்திசாலித்தனமும் ஞாபக சக்தியும் ஒருங்கே பெற்றிருக்க வேண்டும் என்பது புரிகிறதா?

    அன்பு பெற்றோர்களே! மூளையின் ஞாபகத் திறன் அதிகரிக்க ஜின்சங் என்ற தாவரச் சத்து அவசியம் தேவைப்படுகிறது. இந்த தாவரச் சத்தானது நம் மூளையின் நினைவாற்றலை வெளிக்கொண்டு வரும் தன்மையை அதிகப்படுத்தும். அதே போல், நம் நரம்பின் சுருங்கி விரியும் தன்மைக்கு எவ்வாறு ஒமேகா-3 கொழுப்பு அதிகம் தேவையோ அது போல, நம் நரம்பின் வலிமைக்கு ஜின்சங் தாவரச் சத்து அவசியம் தேவை. அதிக வேலைக்கு ஆளாகும் நரம்புகள் அதிகம் சுருங்கி விரிவதால் தளர்ச்சி ஏற்பட வாய்ப்பாகின்றன.

    அவ்வாறு அதிகம் வேலை செய்யும் நரம்புகள் தளர்ச்சியடையாமல் இருக்க இந்த ஜின்சங் தாவரச் சத்து உதவியாக இருக்கும். அதே போல் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகும் நபர்களுக்கும் ஜின்சங் தாவரச் சத்தானது சாந்தப்படுத்தும் மருந்தாக விளங்கும். ஜின்சங் தாவரச் சத்து எடுத்துக் கொள்வதால் நம் மூளையானது இனிமையான தன்மைக்கு (Pleasant Mood) மாறுகிறது. அதே போல் வேண்டாத நினைவுகளில் (Negative thoughts) இருந்து விடுபடவும் ஜின்சங் தாவரச் சத்து உதவும்.

    நம் பிள்ளைகளின் வேண்டாத குண அமைப்புகளைக் கலைந்து நேர்மைறயான குண அமைப்போடு வாழ மலர் மருந்துகளும் உதவியாக இருக்கும். அவை பற்றியும் இங்கு பார்ப்போம்.

    அன்பு பெற்றோர்களே! நம் குழந்தைகள் புத்திசாலியாகவும் சூட்டிகையாகவும்  (ஞாபகத்திறனில் சிறக்கவும்) ஒமேகா-3 கொழுப்பும், ஜின்சங் தாவரச் சத்து மற்றும்  சமச்சீர் புரதம் கொடுத்து, அதனோடு அவர்களுக்கான மலர் மருந்தையும் கொடுத்தால், அவர்களின் வேண்டாத தன்மைகள் குறைந்து, வேண்டிய விதத்தில் படிப்பில் சிறப்படைவார்கள். நம் பிள்ளைகளை புத்திசாலியாக்க உதவுவோம்.

    புரிதலும் சூட்டிகையும்

    அன்பு பெற்றோர்களே!  உலக மக்கள் தொகையில் சுமார் 80 விழுக்காடு மக்கள் சராசரி அறிவோடுதான் தங்கள் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். அடுத்ததாக சுமார் 15 விழுக்காடு மக்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். இவ்வித மக்கள் தங்கள் உடலையும் மனதையும் நல்லவிதமாக வைத்துக் கொண்டால்தான் புத்திசாலியாக வாழ முடியும் என்ற இரகசியத்தை அறிந்து வைத்திருக்கிறார்கள். மீதம் உள்ள ஐந்து சதவித மக்கள்தான் அதிபுத்திசாலிகளாக இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் உடலை வளர்ப்பதை விட மூளைத் திறனை வளர்க்கும் இரகசியங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி 80 விழுக்காடு சராசரி மக்கள், தங்களது மூளைச் செயல் திறனில் நான்கு சதவிகிதத்தைதான் பயன்படுத்துகிறார்கள். புத்திசாலிகள் சுமார் எட்டு சதவிகித மூளைத் திறனையும், அதிபுத்திசாலிகள் 12 சதவிகித மூளைத் திறனையும் பயன்படுத்துகிறார்கள்.

    புத்திசாலித்தனத்திற்கு மதிப்பளிக்கும் பெற்றோர்களே! படிப்பில் சூட்டிகையாக இல்லாத பிள்ளைகள் வாழ்க்கையில் சிரமப்பட்டுதான் மேலே வரவேண்டும் என்பது அப்பிள்ளைகளுக்கும் நன்றாகத் தெரியும்தான். ஆனால், அவர்களின் முயற்சியையும் மீறி படிப்பில் சூட்டிகையாக இருப்பதற்குத் தடையாக இருப்பது அவர்களின் மூளை மற்றும் நரம்புத் திறனாகும். நரம்பு மற்றும் மூளைச் சூட்டிகை குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு என்னதான் பயிற்சியும் முயற்சியும் கொடுத்தாலும் ஓரளவுக்குதான் அவர்களால் தேறமுடியும். சூட்டிகைக் குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு முதலில் தேவை அறிவுரைகளும் கண்டிப்பும் அல்ல. அவர்களுக்கு உண்மையில் தேவை மூளை மற்றும் நரம்பு சூட்டிகையை அதிகரிக்கும் வழிமுறைகள்தான். அவர்களைத் திட்டுவதை விடுத்து அவர்களின் சூட்டிகை அதிகரிக்க உதவி செய்வதே மிகவும் முக்கியமானது. அது பற்றி விரிவாக இங்கு பார்ப்போம்.

    பெற்றோர்களே! உங்கள் குழந்தைகள் புத்திசாலியாகவும் படிப்பில் சுட்டியாகவும் ஆக நரம்பு சூட்டிகையும் ஞாபகசக்தி திறனும் அவசியம் தேவை. நரம்புச் சூட்டிகை பற்றி தெரிந்து கொள்ள, நம் நரம்பின் செயல்பாட்டமைப்பை அறிந்து கொள்ள வேண்டும். நம் நரம்பானது இரு பக்கமும் சுருங்கி விரியும் இலாஸ்டிக்   போன்றஅமைப்பைக் கொண்டதாகும். இது இலகுவாக சுருங்கி விரியவும் வேண்டும், அதே சமயம் அப்படிச் சுருங்கி விரிந்தாலும் அறுபடாமல் இருக்க வேண்டும். இந்த இரு தன்மைகளுக்கும் வேண்டிய சத்துப் பொருட்கள் இல்லாவிட்டால் நரம்புகள்  பிளாஸ்டிக் (Plastic) போல் நீர்த்துச் சூட்டிகை குறைந்துவிடும். நம் நரம்புகள் இலாஸ்டிக் போல் இருக்க உயர் அடர்த்திக் கொழுப்புகளான (High Density Lipoprotein) ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 வகையினம் 1:5 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். ஆனால் நம்மில் அனேகம் பேருக்கு தவறான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால் இந்த விகிதாச்சாரம் 1:70 முதல் 1: 100 வரை இருக்கிறது. அன்பு நண்பர்களே! ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 விகிதாச்சாரம் அதிகமாக அதிகமாக  நம் மூளை மற்றும் நரம்பானது இலகுத் தன்மை இழந்து பிளாஸ்டிக் போல் ஆகிவிடும். இந்த அதிகப்படியான விகிதாச்சாரத்தை குறைக்க ஒமேகா-3 கொழுப்பை அதிகப்படுத்த வேண்டும். இதன் மூலம் நம் மூளையின் சூட்டிகைத் திறன் மேம்படும்.

     

    நிலைப்பாடு மலர் மருந்து
    குழப்பமான மன நிலை, மற்றும் கணக்கில் சோபிக்க முடியாமை வைட் செஸ்நட் (White Chestnut)
    சோம்பேரித்தனம், மூளைச் சோர்வு மற்றும் ஞாபக மறதி அதிகமிருத்தல் ஸ்கிளராந்தஸ் (Scleranthus)

     

    படிக்க சாக்கு போக்கு சொல்லுதல் அல்லது ஏமாற்றுதல் செஸ்நட் பட்  (Chestnut bud)
    தன்னம்பிக்கை குறைவால் படிக்க முடியாமை லார்ச் (Larch)
    கற்பனையில் அதிகமாக மூழ்கி படிப்பதில் கவனம் இல்லாமை கிளமாடிஸ் (Clematis)
    பிடித்த பாடத்தை மட்டுமே படித்தல், பிடிக்காத

    பாடத்தை தவிர்த்தல்

    வால்நட் (Walnut)

     

    பாடம் நடத்தும் ஆசிரியர் சரியில்லை என்று குறை சொல்லுதல் வில்லோ (Willow)

     

    அன்பு நண்பர்களே! அடுத்து நாம் மூளை நினைவாற்றல் திறன் பற்றி பார்ப்போம். நம் மூளை நினைவாற்றல் திறனின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தை பார்ப்போம்.

    ஒரு நாள் கடைத் தெருவில் உங்களின் பள்ளிப்பருவ தோழரை ஏதேச்சையாக சந்திக்க நேரிடுவதாக வைத்துக் கொள்வோம். அவர் இப்பொழுது எந்த ஊரில் இருக்கிறார், என்ன தொழில் செய்கிறார், எத்தனைக் குழந்தைகள் என்பதெல்லாம் உங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அவரின் பெயர் மட்டும் உங்கள் ஞாபகத்திற்கு வரமாட்டேன்கிறது. எப்படியோ அவர் பெயரை உச்சரிக்காமல் பேசி சமாளித்து விடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அவர் சென்றபின், அவர் பெயர் பிரகாஷ் என்று பிராகாசமாக உங்கள் மூளைக்குள் மிகவும் தாமதமாக லைட் எரிவதாக வைத்துக் கொள்வோம். இந்த விதமான ஞாபக சக்தி நமக்குத் தேவையா? அல்லது எப்பொழுது வேண்டுமோ அப்பொழுது வெளிப்படும் ஞாபகசக்தி வேண்டுமா?

    அன்பு நண்பர்களே! நம் பிள்ளைகளும் படிப்பில் சுட்டியாக விளங்க இந்த ஞாபகத்  திறன் அவசியம் வேண்டும். உதாரணமாக, விஞ்ஞானப்பாடப் பரிட்சையில் முதல் கேள்வி முதல் பாடத்திலிருந்துதான் கேட்பார்கள் என்று கூற முடியாது. மொத்தமுள்ள 24 பாடங்களையும் நன்கு படித்திருந்தாலும் இந்தக் கேள்விக்கான பதில் எந்தப் பாடத்தில் இருக்கிறது என்று முதலில் புரிந்து, பின்னர் அதற்கான பதிலை எழுத வேண்டும். இந்த செயல்பாடு என்பது ஒரு நூலகத்தில் துறைவாரியாகவும் அகர வரிசையாகவும் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு சுலபமாக குறிப்பிட்ட புத்தகத்தை எடுக்க முடியுமோ அதுபோல, நம் மூளையானது வரிசைக் கிரையமாக படித்து மூளையின் நினைவாற்றல்    பகுதியில் பதிய வைக்கப்பட்டதிலிருந்து நினைவுக்கு கொண்டு வந்து (Recognition Power) கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விரைவாக பதில்களை எழுத வேண்டும். அப்படியில்லாமல் நான்காவது கேள்விக்கான பதில் பரிட்சை நேரம் முடியும் வரை ஞாபகத்திற்கு வராமல், பரிட்சை கூடத்தை விட்டு வெளியே வந்த பின்னர்  ஞாபகத்திற்கு வருவதால் யாரும் மதிப் பெண்கள் அளிக்கப் போவதில்லை. ஆகவே, நம் குழந்தைகளுக்கு புத்திசாலித்தனமும் ஞாபக சக்தியும் ஒருங்கே பெற்றிருக்க வேண்டும் என்பது புரிகிறதா?

    அன்பு பெற்றோர்களே! மூளையின் ஞாபகத் திறன் அதிகரிக்க ஜின்சங் என்ற தாவரச் சத்து அவசியம் தேவைப்படுகிறது. இந்த தாவரச் சத்தானது நம் மூளையின் நினைவாற்றலை வெளிக்கொண்டு வரும் தன்மையை அதிகப்படுத்தும். அதே போல், நம் நரம்பின் சுருங்கி விரியும் தன்மைக்கு எவ்வாறு ஒமேகா-3 கொழுப்பு அதிகம் தேவையோ அது போல, நம் நரம்பின் வலிமைக்கு ஜின்சங் தாவரச் சத்து அவசியம் தேவை. அதிக வேலைக்கு ஆளாகும் நரம்புகள் அதிகம் சுருங்கி விரிவதால் தளர்ச்சி ஏற்பட வாய்ப்பாகின்றன.

    அவ்வாறு அதிகம் வேலை செய்யும் நரம்புகள் தளர்ச்சியடையாமல் இருக்க இந்த ஜின்சங் தாவரச் சத்து உதவியாக இருக்கும். அதே போல் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகும் நபர்களுக்கும் ஜின்சங் தாவரச் சத்தானது சாந்தப்படுத்தும் மருந்தாக விளங்கும். ஜின்சங் தாவரச் சத்து எடுத்துக் கொள்வதால் நம் மூளையானது இனிமையான தன்மைக்கு (Pleasant Mood) மாறுகிறது. அதே போல் வேண்டாத நினைவுகளில் (Negative thoughts) இருந்து விடுபடவும் ஜின்சங் தாவரச் சத்து உதவும்.

    நம் பிள்ளைகளின் வேண்டாத குண அமைப்புகளைக் கலைந்து நேர்மைறயான குண அமைப்போடு வாழ மலர் மருந்துகளும் உதவியாக இருக்கும். அவை பற்றியும் இங்கு பார்ப்போம்.

    அன்பு பெற்றோர்களே! நம் குழந்தைகள் புத்திசாலியாகவும் சூட்டிகையாகவும்  (ஞாபகத்திறனில் சிறக்கவும்) ஒமேகா-3 கொழுப்பும், ஜின்சங் தாவரச் சத்து மற்றும்  சமச்சீர் புரதம் கொடுத்து, அதனோடு அவர்களுக்கான மலர் மருந்தையும் கொடுத்தால், அவர்களின் வேண்டாத தன்மைகள் குறைந்து, வேண்டிய விதத்தில் படிப்பில் சிறப்படைவார்கள். நம் பிள்ளைகளை புத்திசாலியாக்க உதவுவோம்.

    13 வது ஜனாதிபதி

    நாட்டின் 13வது குடியரசுத் தலைவராக, பிரணாப்முகர்ஜி அவர்கள் ஜூலை 25 அன்று பதவியேற்றார். தில்லியில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற எளிமையான விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா, பிரணாப் முகர்ஜிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    ‘ராஷ்டிரபதி பவன்’ எனப்படும் ஜனாதிபதி மாளிகை இந்திய ஜனநாயகத்தில் கம்பீர அடையாளமாகத் திகழ்கிறது. உலகிலேயே மிகப்பெரிய ஜனாதிபதி மாளிகை என்ற பெருமை படைத்தது ராஷ்டிரபதி பவன். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த மாளிகை தான் இனி பிரணாப் முகர்ஜியின் வீடு.

    இந்த பாரம்பரிய மாளிகை 1911ம் ஆண்டில் ஆங்கிலேய அரசு கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்குத் தலைநகரை மாற்றியபோது ‘வைஸ்ராய் மாளிகை’யாக உருவாக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ‘அரசு இல்லம்’ என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1950ல் குடியரசான பிறகு ‘ராஷ்டிரபதி பவன்’ என்று பெயர் சூட்டப்பட்டது.

    நான்கு ஆயிரம் ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்திருக்கும் ஜனாதிபதி மாளிகை, நான்கு தளங்களில் 340 அறைகளைக் கொண்டுள்ளது. ஜனாதிபதி மாளிகையில் முதலில் குடியேறியவர் இர்வின் பிரபு. ஜனாதிபதி மாளிகையில் குடியேறிய முதல் இந்தியர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான ராஜாஜி. ராஜாஜியைத் தொடர்ந்து, இந்தியாவின் முதல் ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திர பிரசாத் இங்கு வசித்தார்.

    இந்த மாளிகையில், மிகப்பெரிய அறைகளும், பூங்காக்களும் உள்ளன. விருந்தினர்கள் மற்றும் பணியாளர்கள் தங்க தனித்தனி பகுதிகள் உள்ளன. இதன் பிரதான வசிப்பிடப் பகுதி மிகவும் பெரிதாக இருப்பதாக கருதி ராஜாஜி விருந்தினர்களுக்கான பகுதியிலேயே தங்கியிருந்தார். அதே வழக்கத்தை ராஜேந்திர பிரசாத்தும், அவருக்குப் பின்னால் வந்த ஜனாதிபதிகளும் பின்பற்றினார்கள். ஆக, ஜனாதிபதி மாளிகையின் உண்மையான வசிப்பிடப் பகுதியில் தற்போது இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள்தான் தங்குகிறார்கள். மேலும் அரசு நிகழ்ச்சிகளும் அந்தப் பகுதியில்தான் நடைபெறுகின்றன.

    ஜனாதிபதி மாளிகையின் சிறப்பு அம்சங்களில் ஒன்று ‘மொகல் கார்டன்’ எனப்படும் மொகலாயத் தோட்டம். பச்சைப் போர்வையும், பலவண்ண மலர்களுமாய் 342 ஏக்கர் பரப்பில் இது அமைந்துள்ளது. காஷ்மீர் ஸ்ரீநகரின் ஷாலிமர் தோட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மொகலாயத் தோட்டம், உலகம் முழுவதிலும் இருந்து பார்வையாளர்களை ஈர்க்கிறது.

    பிரணாப் முகர்ஜி உரை

    வறுமை: காந்தி, நேரு, படேல், அம்பேத்கர், ராஜேந்திரபிரசாத், ஆசாத் ஆகிய தலைவர்கள் கொண்டிருந்த தேச நலனும், குறிக்கோளும் தொடர வேண்டும். வறுமை ஒழிக்கப்பட வேண்டும். வறுமையைப் போல இழிவான ஒன்று எதுவும் இல்லை. வெறும் வார்த்தைகள் அடங்கிய, வாய்ஜால சமாளிப்பு வாக்குறுதிகளால், ஏழை மக்களுக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. வறுமையை ஒழிக்க, உருப்படியான திட்டங்கள் தீட்டப்பட்டு, வறுமை என்ற வார்த்தையையே இந்தியாவின் அகராதியில் இருந்து அகற்ற வேண்டும்.            ஜனாதிபதிக்கு உதவி செய்ய, மாளிகையில் 200 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அவர் ஓய்வெடுக்க, சிம்லாவிலும், ஐதராபாத்திலும் மாளிகைகள் உள்ளன. முப்படைக்கும் தளபதியான அவர், தனி விமானத்தில், எந்த நாட்டுக்கும் செல்லலாம். குண்டு துளைக்காத மெர்சிடஸ் பென்ஸ் காரில் பயணிக்கலாம். மாதம் ஒன்றுக்கு 1.5 லட்ச ரூபாய் மாத ஊதியம் வழங்கப்படும்.

    பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, மாதந்தோறும் ஓய்வூதியமாக 75 ஆயிரம் ரூபாயும், அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய பங்களாவும் வழங்கப்படும். ஒரு கார், ஒரு தனிச் செயலர் உட்பட, ஐந்து ஊழியர்கள் அவருக்காக பணி அமர்த்தப்படுவர். இலவசமாக விமானத்திலும், ரயிலிலும் நாடு முழுவதும் செல்லலாம்.

    சாதாரண கிராமத்தில் பிறந்து தனது அறிவு, உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றால் இந்த மாபெரும் தேசத்தின் முதல் குடிமகன் என்ற நிலைக்கு உயர்ந்து சாதனை படைத்துள்ளார் பிரணாப் முகர்ஜி. மேற்கு வங்காளத்தில் பிர்பும் மாவட்டத்தின் மிராடி என்கிற கிராமத்தில் 1935, டிசம்பர் 11ம் தேதி பிறந்த பிரணாப் முகர்ஜியின் நீண்ட நெடிய அரசியல் பயணம் குடியரசுத் தலைவர் மாளிகையில் அவரைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. இந்தியாவின் முதல் குடிமகனாகச் சரித்திரத்தில் இடம் பெறும் முதல் வங்காளி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    1973ல் முதன்முதலில் மத்திய அமைச்சரவையில் இணையமைச்சராக அடியெடுத்து வைத்த பிரணாப் முகர்ஜி தொழில் வளர்ச்சி, கப்பல் மற்றும் போக்குவரத்து, நிதி, ராணுவம், வெளிவிவகாரத் துறை, வர்த்தகம் போன்ற முக்கியத் துறைகளில் அங்கம் வகித்தவர். மத்திய அமைச்சரவையிலிருந்து நேரிடையாக குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டோர் வரிசையில் பக்ருதீன் அலி அகமது, ஜைல்சிங் ஆகியோருக்கு அடுத்தபடியாக சேர்ந்திருப்பவர் பிரணாப் முகர்ஜ

    பிரணாப் முகர்ஜி உரை

    பஞ்சம்: அரசியல் சட்டத்தின் காப்பாளனாக இங்கே சில நிமிடங்களுக்கு முன் உறுதிமொழி எடுத்துக்கொண்டேன். அந்த உறுதிமொழி வெறும் வார்த்தைகளாக மட்டுமே இருந்து விடாமல், உண்மையில் உளப்பூர்வமாக நடந்து கொள்வேன். மேற்கு வங்கத்தில், எங்கோ உள்ள ஒரு சிறு கிராமத்திலிருந்து நாட்டின் தலைநகரான டில்லிக்கு வந்து, இத்தனை பெரிய பதவியில் அமர்ந்துள்ளேன். சிறுவனாக இருந்தபோது பஞ்சம் வந்து, அதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததை இன்னும் நான் மறக்கவில்லை.

     

     

     

     

     

     

     

    நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் அனுபவம் பெற்ற ஒருவர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது தேசத்திற்கு ஒரு பெரிய பலம். ராணுவத்தின் முப்படைத் தளபதிகளையும், மூத்த அதிகாரிகளையும் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு பழக்கம் உடையவர். சர்வதேச அளவிலான தலைவர்கள் பலரையும் தனிப்பட்ட முறையில் தெரிந்து வைத்திருப்பவர்.

    குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பின் மக்களுக்கு ஆற்றிய உரையில் “எனக்கு நீங்கள் அளித்துள்ள இந்தக் கௌரவம் என்னை நெகிழச் செய்கிறது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தாண்டியும், பாரபட்சமின்றியும் குடியரசுத் தலைவர் செயல்பட வேண்டியுள்ளது. நாட்டிற்காக பொதுசேவையாற்றி வந்த ஒருவருக்கு நாட்டின் முதல் குடிமகனாகப் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. எனக்கு இதைவிடப் பெரிய கௌரவம் எதுவாக இருக்க முடியும்?” என்று உள்ளம் நெகிழ கூறியிருக்கிறார்.

    பிரணாப் முகர்ஜி உரை

    நான்காவது உலகப்போர்: நாடு வளர்ச்சி அடைவதில், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர் என்பதை மறந்துவிடக்கூடாது. நான்காவது உலகப்போர் என்பது பயங்கரவாதத்துக்கு எதிரானது. இந்தப் போரில் இந்தியா உறுதியுடனும், முனைப்புடனும் தனது பங்களிப்பை செய்யும். வன்முறையால் முன்னேற்றம் அடைந்துவிட முடியாது. இந்தியாவைப் பொறுத்தவரை அமைதியையே விரும்புகிறது. பல ஆண்டுகள் நடக்கும் போரைக் காட்டிலும், சில நிமிட அமைதியே பெரியது. கல்விதான் இந்தியாவின் அடுத்த பொற்காலத்தை நிர்ணயிக்கப்போகும் கருவியாக இருக்கப்போகிறது என்பதே எனது கருத்து.

    இந்திய அரசியலில் குடியரசுத் தலைவர் பதவி என்பது பெரும்பாலும் பெயரளவு தலைமைப் பொறுப்புதான் என்றாலும், ஆற்றலும் அனுபவமும் மிக்க பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி பதவிக்கு புதியதொரு பரிமாணத்தைக் காட்டி அந்தப் பதவிக்கு கௌரவம் சேர்ப்பார் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

    புனித யாத்திரை கயிலயங்கிரி

    பயணத்தைத் தொடங்குமுன் அதற்கான தகவல்கள் சேகரித்தல் மற்றும் உடலையும் மனதையும் தயார்படுத்துதல் மிக முக்கியமான பணியாகும்.
    சாகசம் செய்வதற்குத் திறமையும், தன்னம்பிக்கையும் அவசியம் தேவை. பலருக்குத் திறமை இருக்கும், தன்னம்பிக்கை இருக்காது. சிலருக்குத் தன்னம்பிக்கை இருக்கும், ஆனால் சூழ்நிலை சரியாக இருக்காது. மேலும் பயணம் என்பதை நம் வாழ்க்கையுடன் ஒப்பிடுகிறோம்.
    வாழ்க்கையில் இன்ப துன்பம், ஏற்றஇறக்கம், நட்பு பகை போன்ற பலவும் மாறி மாறி வருவது இயல்பு. அதேபோல் தான் பயணத்திலும் எதிர்பாராத சில சம்பவங்கள் அல்லது சூழ்நிலைகள் குறுக்கிட்டு பயணத்தையே சிதறடித்து விடுவதுண்டு.

    ஆயத்தம்:
    தயார்நிலையில் வைத்தல் என்பது பொருள். உடல் நலத்தையும், மன தைரியத்தையும் சரியான அளவில் வைத்துக் கொள்வது முக்கியமான, அடிப்படைத் தேவையாகும்.

    உடல்:
    பொதுவாக, 50 வயதுக்கு மேல் வாழ்க்கையில் ஓரளவு செட்டில் ஆனவர்கள், பொருளாதாரம் ஒரு பிரச்னையில்லை என்ற நிலையில் உள்ளவர்கள் தான் கயிலைப் பயணம் செல்கிறார்கள் எனப் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
    பயணம் சென்று பார்த்தால், திருமணமாகாதவர்களும், திருமணமான இளைஞர்களும், குழந்தைகளுக்கு 15 வயதுக்கு மேலான குடும்பங்களும் வந்து செல்வதைக் கண்டு வியப்படைந்தேன். சிலர் பெற்றோர், குழந்தைகளுடன் கணவன் மனைவியாக வந்து செல்வது சிறப்பு என்பதால், குடும்பத்துடன் வந்ததாய் கூறினர்.
    ஒருசிலர் தொடர்ந்து பலமுறை இந்தப் புனிதப் பயணத்தை மேற்கொள்கின்றனர். சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் பலமுறை சென்று வரவேண்டும். அது அவர்களது தொழில். ஆனால் செலவு செய்து, ஒருமுறைக்கு மேல் சென்று வருபவர்களை நினைத்தால் தான் வியப்பாக உள்ளது.
    ஒரு காலத்தில் வயதானவர்கள் மட்டுமே சென்றுவந்த கயிலைப் பயணம், இன்று சிறுவர்கள், இளைஞர்கள் எனப்பலரும் சென்று வரும் பயணமாக மாறி வருகிறது.
    கடல் மட்டத்திலிருந்து சுமார் 15,000 அடி உயரத்திற்கு மேல் செல்வதால், அந்தக் குளிர் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஆகியவைகளைத் தாக்குபிடிக்குமளவுக்கு நம் உடல் நலத்தைப் பேண வேண்டியது அவசியம்.
    இன்று வீட்டிலிருந்து கடைக்குச் சென்று வருவதற்குக் கூட வாகனங்களைப் பயன்படுத்தும் நிலை உருவாகிவிட்டது. இப்பயணத்தில் காரில் அமர்ந்து கொண்டு சென்றாலும் கூட, தினமும் உடலைச் சூடு (ரஹழ்ம் ன்ல்) படுத்திக் கொள்ளவும், சாப்பிட்ட உணவு செரித்து, மீண்டும் பசிக்கவும் உடலைத் தயார்செய்வது அவசியம்.

    உணவு:
    எனக்கு இந்த உணவுதான் வேண்டும் என்ற எண்ணத்தை நம் மனதிலிருந்து எடுத்துத் தூர எறிந்துவிட வேண்டும். காலை முகம் கழுவ வெந்நீர், சூடான பானம் (டீ, காபி, பால், போர்ன்விடா, ஹார்லிக்ஸ்) காலைச் சிற்றுண்டியாக கார்ன்பிளாக்ஸ், பிரெட், ஜாம், தேன், வெண்ணெய், உப்புமா, வெண்பொங்கல், பூரிமசாலா போன்றவை மாறி மாறி வழங்கப்படுகின்றன.
    மதியம் பயணத்தின்போது புளி, எலுமிச்சை, தக்காளி மற்றும் வெஜிடபிள் சாதங்களுள் சிலவும் சப்பாத்தி, சப்ஜி, டின்பழவகைகள், இனிப்பு மற்றும் குளிர்பானங்களும் வழங்குகின்றனர். தங்கியுள்ள இடத்தில் அரிசி சாதம், சாம்பார், ரசம், தயிர், மோர், அப்பளம், ஊறுகாய் போன்றவைகளும் வழங்குகின்றனர்.
    மாலை, காபி, பால், டீ, சூப் ஏதாவது தருவதுடன் இரவு சாதம், பருப்பு, ரசம், சப்பாத்தி, சப்ஜி, காய்கறிகளும் மிக நன்றாகவே தருகின்றனர். நம் ஊரில் எதை வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் குளிர் பிரதேசத்தில் அதே அளவு சாப்பிடுவது கூடாது. ஏனென்றால் நமக்கு வேலை ஏதும் இல்லை; உண்ட உணவு சீரணமாவதற்கும் நீண்ட நேரமாகும். பசியும் இருக்காது.
    எனவே, அளவாக, பசியறிந்து சாப்பிடுவது நல்லது. இதைப்புறக்கணித்த பலர் வாந்தி எடுத்ததுடன், மூச்சிறைப்புக்கும் ஆளாகின்றனர். போதும் என்ற உணர்வு வந்த உடனே நிறுத்திவிடுவது நல்லது.
    யாத்ரிகர்கள் மிகப்பெரும்பாலானோர் தினமும் குறைந்தது இருவேளையாவது மாத்திரைகள் சாப்பிடும் அளவிற்கு உடல் நிலையைப் பக்குவமாக வைத்துள்ளனர்.
    நம் ஊரில் இட்லி, புரோட்டா என வெளுத்திக் கட்டியவர்கட்கு, அவை கிடைக்காது. ஒருநாள் ஊத்தப்பம் கூட கொடுத்தனர். எனவே, சாப்பிடப்பிடிக்கவில்லை என்ற உணர்வு வரும். இருந்தாலும் நேரத்துக்கு நேரம் போதிய அளவு உணவு எடுத்துக் கொள்ளாவிட்டால், பலவித உபாதைகளை விலை கொடுத்து வாங்கியதாய் அமைந்துவிடும்.

    மனம்:
    மனதில் நீங்கள் தொடர்ந்து உறுதியாக இல்லாவிட்டால், உடனே உடல் சோர்ந்து, உற்சாகம் குன்றி குளிர், சோம்பல் போன்றவை வந்துவிடும். கயிலைப் பயண நாட்கள் 11 மட்டுமே. இந்தப் பதினோரு நாட்களில் முதல் நான்கு நாட்கள் உறுதியாக இருந்து, அதன்பின் மனம் சோர்ந்துவிட்டால், பயணத்தில் பிடிப்பு இருக்காது.
    அது உடலுக்கு ஏதேனும் கோளாறை உண்டாக்கிவிடும். மனஉறுதி என்பது கட்டாயம் அனைவருக்கும் வேண்டும். பாதியிலேயே திரும்ப வேண்டிய துர்பாக்கிய நிலை உண்டாகிவிடும்.

    பாஸ்போர்ட் விழா:
    கயிலை சென்றுவர, இந்தியாவின் இமயமலைப் பகுதிகளில் பல வழிகளில் இருந்தாலும், நடக்காமல், வாகனத்தில் சென்றுவர எல்லோரும் தேர்ந்தெடுத்துள்ள பாதை நேபாளம், சீனா வழிதான்.
    நேபாளம் சென்றுவர, பாஸ்போர்ட் தேவையில்லை. வாக்காளர் அடையாள அட்டை மட்டும் போதும். ஆனால் சைனா செல்ல பாஸ்போர்ட் மற்றும் விசா கட்டாயம் வேண்டும். எனவே, விமான நிலையங்களில் வழக்கமான எமிக்ரேசன் (Emigration) நடைமுறைகளை நாம் சந்தித்தே ஆக வேண்டும்.
    பாஸ்போர்ட் இல்லாதவர்கட்கு வாங்கித் தருவதற்கு வழிகாட்டுகின்றனர். விசா எடுப்பதை சுற்றுலா நிறுவனங்களே பார்த்துக் கொள்வதால் நமக்கு எவ்விதச் சுமையுமில்லை.

    பரிக்ரமா:
    தமிழில் கிரிவலம் என்று கூறுவதை அங்கு பரிக்ரமா என்று சொல்கின்றனர். சுமார் 42 கி.மீ. தூரம் கயிலயங்கிரியைச் சுற்றிவருவதுதான் இப்புனிதப் பயணத்தின் உச்ச கட்டம்.
    தங்குமிடமான தார்ச்சனிலிருந்து சுமார் 8 கி.மீ. தூரம் வரை நாம் சென்ற வாகனங்களிலேயே அழைத்துச் செல்கின்றனர். அந்த இடம் தர்பூசே எனவும் தெய்வங்களின் பள்ளத்தாக்கு (Valley of Gods) எனவும் அழைக்கப்படுகிறது.
    பரிக்ரமா செல்ல வேண்டாம் என நினைப்பவர்கள் இந்த இடத்திலிருந்து கயிலையை தரிசித்து, வாகனத்திலேயே திரும்பி விடலாம். மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக முதல் 12 கி.மீ. வரையாவது செல்லலாம் என உணர்ச்சி வயப்பட்டு முடிவெடுத்தால்… அதன் விளைவு.
    காத்திருங்கள்…