– 2012 – August | தன்னம்பிக்கை

Home » 2012 » August

 
 • Categories


 • Archives


  Follow us on

  தனிமனிதச் சிக்கல்களும் தீர்வுகளும்

  மனித வாழ்க்கை சிக்கல்கள் வருகின்ற ஒன்றுதான். அந்தச் சிக்கலைப் பொறுமையோடும், மன வலிமையோடும் ஏற்று போக்கிக் கொள்வதே அறிவுடைமையாகும்.
  சிக்கல்கள் வந்துவிட்டனவே என்று ஒதுங்கி

  Continue Reading »

  வெற்றிப் படிக்கட்டுக்கள்

  என்னென்ன மாதிரியான சூழல்களை நீங்கள் உங்கள் தொழில் வாழ்வில் சந்திக்க வேண்டியிருக்கும். ஒன்றா இரண்டா சவால்கள்! எல்லாம் சொல்லவே ஒருநாள் போதுமா…? என்று பாடுமளவிற்கு எக்கச்சக்கமான சவால்கள் உங்களுக்காகவே காத்துக் கொண்டிருக்கும்.

  Continue Reading »

  சாணக்கியரின் நேர்மை!

  வரலாற்றில் நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவக் கதை…
  இந்திய வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற அரசர்களுள் ஒருவர் சந்திரகுப்தன். அவரது குரு, தலைமை அமைச்சர் சாணக்கியர். அவர் அரசியல் மேதை. அர்த்தசாஸ்திரம் என்ற அரசியல் வழிகாட்டி நூலை எழுதியவர்.

  Continue Reading »

  கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்

  பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான்.

  Continue Reading »

  நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?

  “நினைவாற்றல் என்பது ஒரு திறமை. சரியில்லாத நினைவாற்றல் என்ற ஒன்று இல்லை. தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்”.

  Continue Reading »

  ஆர்வம் வெற்றியின் ஆரம்பம்

  எவ்வளவோ விசயங்கள் மனதில் வைத்திருந்தேன்; ஆனாலும் ஒன்றிலும் அல்லது அதிகப்பட்ச வெற்றி பெற முடியவில்லை என்ற வருத்தமோ ஆதங்கமோ உங்களுக்குள் உள்ளது என்றால் இந்த கீழ்க் கண்ட கேள்வியை உங்களை நோக்கி கேட்கத் தகுதிபெற்று இரு

  Continue Reading »

  யானைக் கதை

  அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது.

  Continue Reading »

  அகர்

  இன்றளவும் மக்களால் மரங்களின் கடவுள் என்று அழைக்கப்படும் அகர் மரம் உலகின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த வாசனை மர வகைகளில் முதலிடத்தில் இருக்கிறது.
  அகர் மரத்தின் தாயகமான இந்தியாவில் பரவலாக அக்குலேரியா வகை மரங்கள் காணப்படுகின்றன. அதிலும் அக்குலேரியா மெலானசென்ஸ் நட வேகமாக வளரும் தன்மை கொண்டதால் இந்தியாவில் இருந்து இந்தோனேசியாவிற்குக் கொண்டு செல்லப்பட்டு வளர்க்கப்படுகின்றது.
  இன்று அழிந்துவரும் மரப்பயிர் வரிசையில் இருந்து விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்தும் பயிராகவும், நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் பயிராகவும் உருவெடுத்துள்ளது அகர் மரம். வேகமாக வளரும் தன்மை கொண்ட அகர் மரங்கள் பொதுவாக 18 , 40 மீட்டர் உயரம் வரையும், கடல் மட்டத்தில் இருந்து 100 , 1500 மீ வரை உயரமுள்ள பகுதிகளில் செழித்து வளரும் தன்மை கொண்டது. இதைத்தவிர நிழற்பாங்கான இடங்களிலும், காற்றின் ஈரப்பதம் 80-90% உள்ள இடங்களிலும் வளரும் தன்மை கொண்டது அகர் மரம்.
  மற்ற வாசனை மரங்களை விட இயற்கையிலேயே அதிக வாசனைத் தன்மை அகர் மரத்திற்கு உண்டு. இதற்குக் காரணமே அகர் மரம் குறிப்பிட்ட ஆண்டு வளர்ச்சிக்குப்பின் மரத்தின் மையப்பகுதியான ‘பித்’ பகுதி ஒரு சில பூஞ்சை பாக்டீரியாவுடன் இயற்கையாகவே ஒருவித இரசாயன மாற்றத்திற்கு உட்பட்டு எண்ணெய் போன்ற பொருளை உருவாக்குகிறது. இதுவே நாளடைவில் இறுதி அகர்வுட்டாக (Agar WoodAgar Wood) மாறுகிறது.
  அகர்வுட் பல நாடுகளில் பல்வேறு விதமாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. அதுபற்றி பெட்டிச் செய்தியில் பார்க்கவும்.
  அகரின் வளர்ச்சி நிலை:
  அகர் மரமானது ஒரு நடுத்தர வயதுடைய வகை மரமாக இருப்பதாலும், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாலும் அதன் வளர்ச்சி நிலைகளில் கவனம் கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் இதன் வளர்ச்சி தன்மையினைப் பொருத்துத்தான் அதன் மதிப்பு அமையும். இதனால் அகரின் வளர்ச்சியினை 5 , 6 ஆண்டுகள் வரை சிறப்புக் கவனம் மேற்கொள்ள வேண்டும்.

  வாசனைத்திரவிய பொருள்களாக:
  “அகர் எண்ணெய்யானது வாசனைத் திரவமாக (டங்ழ்ச்ன்ம்ங்) தயாரிப்பில் பயன்படுகிறது.
  முஸ்லீம் மதத்தினர் தங்களின் வழிபாட்டிற்கும், வழிபாடுகளின் போது உடுத்தும் ஆடைகளிலும் அகர் வாசனை திரவியங்களைப் பயன்படுத்துகின்றனர்.
  புத்த மதத்தினர் அகர் மரச் சீவல்களை எடுத்து அதில் வரும் வாசனையினை மன அமைதி தருவதற்குப் பயன்படுத்துகின்றனர்.
  அகர் பவுடர் மற்றும் எண்ணெய் கொண்டு அகர் பத்திகள் தயாரிக்கப்படுகின்றன.
  அகர் மரத்தினைக் கொண்டு அழகு சாதனைப் பொருட்களும், சிற்பங்களும் வடிவமைக்கப்படுகின்றன.
  அகரின் பட்டைகள் எழுதுபொருட்கள் தயாரிக்கவும், வாசனைக் காகிதம் தயாரிக்கவும் பயன்படுகிறது.
  சில பகுதிகளில் அகர் இலைகள் டீ தயாரிப்பதில் பயன்படுகின்றது. இப்படி அகரை மூலப்பொருளாகக் கொண்டு சுமார் 550க்கும் மேற்பட்ட பொருட்கள் உலக அளவில் தயாரிக்கப்படுகிறது.”

  ரெசின் உருவாதல்:
  அகர் மரம் நட்ட 5 , 6 ஆண்டுகள் வளர்ச்சி நிலையின் போது மரம் மிருதுவான தன்மையை அடையும். அப்போதுதான் தண்டுத்துளைப்பான் ஏற்படுத்தும் துளையின் வழியாக பூஞ்சை உட்சென்று மாறுதல்களை ஏற்படுத்தும். இந்த மாறுதலால் ஒரடரி பெரஸ் என்ற வாசனை தரும் ரெசின் தோன்றும். அகர் உருவாகும் இந்த முக்கிய நிகழ்வுகள் மரம் நட்ட 5 , 6 வருடத்தில் தொடங்கி, அகர் அறுவடை 7 , 8 வயதில் நிறைவடையும்.
  அகர் உருவாதல் என்பது அகர் மரத்திற்கும், சில பூஞ்சைகளுக்கும் உள்ள வரவு முறையாகும். குறிப்பிட்ட வயதில் மரத்தில் இயற்கையாகவே பூஞ்சை உட்செல்லத்தக்க துளைகள் மரத்தில் உருவாகும். இத்துளை வழியாக செல்லும் பூஞ்சை மரத்தின் சைலம் பகுதியில் சென்று ஒரு வித ரசாயனத்தைச் சுரப்பதால் அகர் என்று அழைக்கப்படும் ரெசின் உருவாக்கப்படுகிறது.
  இன்றைய அதிகப்படியான தேவையைக் கருத்தில் கொண்டு செயற்கை முறையில் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட பூஞ்சையினை மரத்திற்கு மனித செயலினால் செலுத்தப்பட்டு அகர் உருவாக்கம் நிகழச் செய்யப்படுகிறது.
  தற்போதைய நிலையில் அகர் மரம் பல்வேறு வகை உற்பத்திப் பொருள்களுக்கு மூலப்பொருளாக விற்பனை செய்யப்படுகிறது. மரத்தின் பெரிய அடி மரக்கட்டைகள் முதல் மரத்தின் நுனி மர இலைகள் வரை வணிகம் செய்யப்படுகிறது. இதனால் அகரின் யில் உள்நாட்டுத் தேவைக்கே இறக்குமதி செய்யும் நிலை இருப்பதாலும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் அகர்மர சாகுபடியினை மேற்கொள்வதன் மூலம் ஏற்றுமதிக்கான வாய்ப்பினை உருவாக்கிக் கொள்ளலாம்.

  மருத்துவப் பயன்:
  “திபெத், கிழக்கு ஆசிய நாடுகளில் 1000 ஆண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
  ஆசியப் பகுதிகளில் வலி நிவாரணியாகவும், வாந்தி வருவதைத் தடுக்கும் மருந்தாகவும், வயிற்றுப்புண் மற்றும் ஆஸ்துமாவினைக் குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது.
  தரமான அகர் பவுடரினை சீன மருத்துவர்கள் புரைத் தடுப்பானாகப் பயன்படுத்துகின்றனர்.
  மலேசியாவில் அகரின் பட்டைகள் தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்துக் காய்ச்சி வலி நிவாரணியாகப் பயன்படுத்துகின்றனர். மேலும் மஞ்சள்காமாலைக்கும், உடல் வலி நீக்கும் வலி நிவாரணியாகவும் பயன்படுத்துகின்றனர்.
  சீன மருத்துவர்கள் சளி, ஜீரண பிரச்சனைகளைத் தீர்க்கவும் பயன்படுத்துகின்றனர்.
  அகர் கட்டை மற்றும் அகர் ஆயில் தோல் வியாதிகளைப் போக்கவும், சதை இறுக்கத்தைத் தளர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.”

  மதிப்பு நாளுக்கு நாள் உலக அளவில் கூடிக்கொண்டே செல்கிறது. நமது நாட்டில் விவசாய நிலத்தில் வளர்க்க ஏற்ற மரமாகவும், அதிக இலாபம் ஈட்டக்கூடிய மரமாகவும் இருப்பதாலும், உலக நாடுகளில் இதன் தேவை பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே இருப்பதாலும், இந்தியாவில் தற்போதைய நிலையில் உள்நாட்டுத் தேவைக்கே இறக்குமதி செய்யும் நிலை இருப்பதாலும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் அகர்மர சாகுபடியினை மேற்கொள்வதன் மூலம் ஏற்றுமதிக்கான வாய்ப்பினை உருவாக்கிக் கொள்ளலாம்.
  மரம் வளர ஏற்றமண்:
  அகர் மரம் வண்டல் மண் மற்றும் குறைந்த வளமுள்ள பாறை நிலங்களிலும் வளரும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் அகர் மரம் வளர ஏற்றது. அமிலத்தன்மை நிலத்திலும் வளரும். அதேவேளை அந்த நிலத்தின் அமிலத்தன்மை அகர் மரம் வளர வளர குறைந்து சாதாரண தன்மையை நிலம் பெற்றுவிடும்.
  தேயிலைத் தோட்டங்களில், காப்பித் தோட்டத்தில், தென்னை மரங்களுக்கு இடையில், சந்தனத் தோட்டத்தில், குமில், மலை, வேம்பு போன்றவற்றிற்கிடையில் ஊடுமரமாகவும் பயிர் செய்யலாம். இதைத்தவிர வயலின் ஓரத்தில், பள்ளி, கல்லூரி வளாகம், குளங்கள் மற்றும் வாய்க்கால்களின் ஓரங்களிலும் வளர்க்கலாம்.

  விடியல்

  நம்பிக்கை என்று ஒன்றிருந்தால்
  நாளைய உலகம் நமது கையில்Ð
  நாமும் அதிலே நடந்து விட்டால்
  நம் கண்முன் தெரிவது புதிய எழில்!!

  Continue Reading »

  நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்

  ஒருவர் நாள்தோறும் இரண்டுமூன்று தடவைகள்மட்டும் சிறுநீரர் கழிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருப்பாரேயானால், எந்த மாதிரியான துன்பங்களெல்லாம் ஏற்படும் என கடந்த மாத இதழில் கண்டோம்.
  அவ்வாறானால், நாள்தோறும் இருபது முப்பது முறைகள் ஒருவர் சிறுநீர் கழிப்பாரானால், யாது நடக்கும் எனக் கேட்பது முறையான கேள்வியாகும்.
  ஒருவிதத்தில் நோக்கினால், இத்தனை தடவைகள் என்பது ‘அளவுக்கு மிஞ்சி’ என்றாகிவிடும். உண்மையில், இது ஒரு நோயாகும். இதனைக், ‘கட்டுப்படுத்த இயலாத அதிக மூத்திர வெளியேற்றம்’ எனும் பொருள்படும் “பாலியூரியா” (Polyurea) என்ற சொல் மருத்துவ நூல்களில் காணப்படும்.
  ஒருவர் நாள்தோறும் நாலைந்து லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு, அதனை வியர்வையாக வீணடிக்காது, அவ்வளவையும் சிறுநீராகக் கழிப்பாரேயானால், அவர், ஏறத்தாழ 20 தடவைகள் (நோயேதுமில்லாது) சிறுநீர் கழிக்கக்கூடும்.
  இவ்வாறு நிறைய வெளிச்செல்லும் சிறுநீரில் ஒரு பகுதி, உடம்பிலிருந்து வெளித்தள்ளப்படவேண்டிய மிகைப்பட்டனவற்றையும் நச்சுப்பொருட்களையும் நிறைவாக வெளித்தள்ளும்.
  அதன்பிறகு, மீதமுள்ள சிறுநீர், நமது உடலுக்குத் தேவையான நல்ல பொருட்களையுங்கூடக் கரைத்து வெளித்தள்ளிவிடும்.
  இவ்வாறு நிகழும்போது, நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக் குறைந்து, அதனால் சில கோளாறுகள் ஏற்படும்.
  உடல் மெலிந்துபோவது, அத்தகைய ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படக்கூடிய கோளாறுகளில் முக்கியமான ஒன்றாகும். இதனால்தான், சிலர், நாம் முதன் முதல் கண்டதுபோன்ற “எலும்பும்-தோலுமாய்” (Skeletal type) இருக்க நேருகிறது.
  வற்றி-வறண்டுபோயுள்ள, மிகவும் மெலிவான ஒருவரைக் காணும்போது, “நீங்கள் நாள்தோறும் (24 மணிநேரத்தில்) எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள்?” “ஒரு நாளைக்கு எத்தனை தடவைகள் சிறுநீர் கழிக்கிறீர்கள்?” என்று கேட்டுப் பாருங்கள்.
  தாம் நாலைந்து லிட்டர் தண்ணீர் குடிப்பதாகவும், 15 தடவைகளுக்குமேல், 20 அல்லது கூடுதல் தடவைகள் சிறுநீர் கழிப்பதாகவுமே அவர் கூறுவார். நான் இங்கு கூறுவதை இதுவே மெய்ப்பித்துவிடும்.
  இத்தகையோருக்கு உடல் மெலிவது மட்டுமல்லாது, வேறு சில சிறு-சிறு உடல் நலக் குறைபாடுகளும் ஏற்படும்.
  குடற்புண் (Duodenal Ulcer), கண்ணாடி அணியவைக்கும் பார்வைக் குறைபாடுகள், அடிக்கடி ளிதில் அழுதுவிடும் மனப்பான்மை, பொய்சொல்லாத்தன்மை, தவறிழைக்காமை, ‘அனைத்தையும் மிகச்சரியாகச் செய்யவேண்டும்’ என்ற “Perfectionist” மனப்பான்மை, முதலியன), நெஞ்சுப்படபடப்பு, தலைமுடி நரைத்தல், மிகுதியாக முடி கொட்டுதல், காமம் கூடுதல், பெண்களாயின் கைகால்களில் முடிமுளைத்தல், மீசை முளைத்தல், மாதவிலக்குக் கோளாறுகள், கற்பந்தரித்தொர்க்கு அது கலைந்துவிடுதல், போன்றவை நிகழக்கூடும்.
  சிறுநீர் கழிக்காதோர் – மிகுதியாகக் கழிப்போர் ஆகிய இரு சாராரிடையேயும் உடல்நலத்தில் மட்டுமல்லாது, மனநிலையிலும் கெட்ட, அல்லது நல்ல மாற்றங்கள் ஏற்படுவதையும் நான் பதிவுசெய்துள்ளேன்.
  முன் கோபம் ஏற்படுவது, உணர்ச்சி வயப்படுவது போன்றவையெல்லாம் மனநிலை சார்ந்த மாற்றங்கள்தாம்.
  இவற்றிற்கெல்லாம் காரணம், மூளையில் நஞ்சுகள் குவிந்துவிடுவது, அல்லது சத்து நீக்கத்தால் ஏற்படும் மிக முக்கியமான சத்துக்குறைபாடுகள்தாம்.
  சத்துக் குறைபாட்டால் ஏற்படுவனவற்றைக் காட்டிலும், நச்சுக் குவியன் காரணமாக ஏற்படும் மனநிலைக் கோளாறுகள்தாம் மிகவும் கொடூரமானவையாக அமைகின்றன.
  1980-1981-ஆம் ஆண்டுக் காலத்தில், நான் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் டியாகோ நகரத்துப் பல்கலைக்கழகத்திற்கு, வருகைதர பேராசிரியராகச் சென்றிருந்தேன். அதுசமயம், அறிவியல் முனைவர் பட்டத்திற்கான ஓர் ஆராய்ச்சித் தொகுப்புநூல் ஒன்று எனது மதிப்பீட்டிற்காகத் தரப்பட்டது.
  ஆயுள் தண்டனை பெற்ற சிறைக் கைதிகளின் தலைமுடியில், ஆர்சீனிக் நஞ்சு, பித்தளை போன்ற, கடினநிலைத் தன்மைகொண்ட உலோகப்பொருட்களின் அளவு அளவுக்கு மிஞ்சியும், குற்றமிழைக்காதோரின் தலைமுடியில் இத்தகைய நச்சுப் பொருட்கள் மிக, மிகக் குறைவாகவும் (அல்லது இல்லாமலும்) இருப்பதை அந்த ஆய்வாளர் முதன்முதலில் கண்டுபிடித்துள்ளார்.
  மலேசியாவில் உள்ள இணைப்பேராசியை மரீனா முகம்மது அரிப்பின் என்ற ஒருவர், இதனையே இப்போது மறுஉறுதிப்படுத்தியுள்ளார். அதற்காக அவருக்கு, சோல் நகரில், புதிய கண்டுபிடிப்பிற்கான தங்கப் பதக்கம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.எனவே, சிறுநீர் சரிவரக் கழிக்காதிருந்து, அதன்வழி உடம்பினுள் கூடாப்பொருட்கள் மிகுதியாகச் சேர்ந்து, அவை மூளையில் உறைவதின் காரணமாகத், தடித்த உடம்புடைய மக்களது மன நிலையில் கேடுகள் மிகுந்த எண்ண அலைகள் ஏற்படுகின்றன என்ற எனது கண்டுபிடிப்பு, தவறேதுமில்லாது சரியானதாக அமைந்துள்ளது.
  கோலாலம்பூரில் உள்ள திருமதி ஷெல், இங்குள்ள நடராசன் என்பவர், கோவையில் உள்ள “வேவ்டெல் மொபைல் மால்” எனும் நிறுவனத்தையுடைய திரு. சந்திரசேகர் சக்ரவர்த்தி என்பார் போன்ற பற்பலரும் இத்தகைய ஆய்வில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு, எனது கண்டுபிடிப்புக்களை மீண்டும் மீண்டும் மறுஉறுதிப்படுத்தியுள்ளனர்.
  எனது ஆய்வின்படி, தடித்த உடலைத் தங்களது 25, 30 வயதுமுதல் பெறுவோரின் உடல் / மனநிலையில், அவர்களது 40 அல்லது 45 வயதிற்குப் பிறகுதான் கேடுகள் நிறைந்த மாற்றங்கள் ஏற்படுவதாகத் தெரிகிறது.
  இளவயதினரிடையே இனிப்புநீர் நோய் தோன்றினாலுங்கூட, மாரடைப்புநோய் ஒருவது 48 வயதையொட்டித்தான் பெரும்பகுதியனருக்கு ஏற்படுகின்றது.
  தடித்துப் பெருத்த உடலை உடைய இளவயதினரிடையே (எ.கா: 15 முதல் ஏறத்தாழ 35 வயதுடையோரிடையே) கேடுடைய எண்ணமாற்றங்கள் ஏற்படுவதாகத் தெரியவில்லை.
  நச்சுப்பொருட்கள் ஒருவரது உடல் கேடுகள் உண்டாக்கும் அளவிற்குச் சார்ந்து படிந்து ஒரு முற்றிய நிலையை அடைவதற்கு 15 ஆண்டுகளாவது ஆகும்போலத் தெரிகிறது.
  கடந்த 36 ஆண்டுக்கால ஆய்வில், பல்கலைக் கழகத்து மாணவர்கள், பணியாட்கள், பேராசிரியர்கள் ஆகியோரையும், எனது மாற்று மருத்துவ நிலையத்திற்கு மருத்துவம் பார்த்துக்கொள்ள வந்த மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் ஆகியோரை உள்ளடடிக்கி மேற்கொண்ட ஆய்வின் முடிவில் தெளிந்துணர்ந்த விவரங்களை, புள்ளிவிவர ஆய்வுகளுக்கு உட்படுத்தி, அவற்றை எனது பல்வேறு நூல்களில் வெளியிட்டுள்ளேன்.
  ‘மனிதர்களைத் தாக்கும் நோய்கள்’ எனப் பொருள்படும் “Human Diseases” எனும் நூல், இந்தக் கண்டுபிடிப்பின் தொகுப்பினை, மிகத் தெளிவாகப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளேன்.
  இக்கண்டிபிடிப்பைப் பலரும் தாக்கக்கூடும் என்ற அச்சத்தோடுதான் அந்நூலை ஓர் அசட்டுத் துணிச்சலோடு வெளியிட்டேன். நல்லவேளையாக அப்படி ஒருவரும் இதுவரை தாக்கவில்லை. மாறாக, இதனைப் படித்த சிலர் இந்தக் கண்டுபிடிப்புக்களைப் பெரிதும் பாராட்டி, ஏற்றுக் கொள்ளுகிறார்கள். தடித்த உடலுடைய சிலர், வாய்விட்டுச் சிரித்துவிடுகிறார்கள், அவ்வளவுதான்!
  எதையுமே பெரிதும் பொருட்படுத்தாது இருப்பதுங்கூட தடிப்பான உடலுடையோரது மனநிலைகளில் ஒன்றுதான். அவர்கள் தங்களது சொந்தப் பிள்ளைகளிடங்கூட கண்டிப்புடன் நடந்துகொள்ளமாட்டார்கள். அதனால், தடித்த உடலுடையோரை அவர்களது பிள்ளைகள் பெரிதும் விரும்புவார்கள், அன்புடனும் இருப்பார்கள்.
  அடுத்த மாதம், சிறுநீர் கழிப்பதற்கும், உடல்நலம், மனநலம் ஆகியவற்றிற்கும் இடையே உள்ள தொடர்புகளை விளக்கத்தக்க பட்டியல் ஒன்றைத் தந்து விளக்கமாக சொல்கிறேன்.