– 2012 – July | தன்னம்பிக்கை

Home » 2012 » July (Page 2)

 
 • Categories


 • Archives


  Follow us on

  விவசாயத்தின் இப்போதைய தேவை

  ஃபோர்பஸ் (Forbes) பத்திரிக்கை ஆசியாவிலேயே இந்தியாவில்தான் அதிக அளவு கோடீஸ்வரர்கள் உள்ளார்கள் என்று கூறுகிறது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்திருக்கிறது.
  தொழிற்சாலைகளில் அதிகப்படியான உற்பத்தி, மென்பொருள் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி, தொலைத்தொடர்புத் துறையிலும், சேவைத் துறையிலும் உயர்ந்த நிலையை அடைந்தது என்று பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு நிறுவனங்களின் அதிகமான முதலீடு தான் இத்தகைய வளர்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
  இப்படி உலகளவில், பல்வேறு பொருளாதார இடர்பாடுகளுக்கு இடையிலும், பல துறைகளிலும் நல்ல முன்னேற்றமடைந்த போதிலும் வேளாண்மையும், அதைச் சார்ந்த துறைகளும் மகிழ்வளிக்கும் அளவில் வளரவில்லை.
  பல காரணங்களால் பரம்பரையாக விவசாயம் செய்யும் விவசாயிகளும் வேளாண்மையை வெற்றிகரமாக செய்ய இயலாத நிலைக்குத் தற்போது தள்ளப்பட்டுள்ளனர். இதனால் உணவு தானியங்களின் உற்பத்தி தேக்கநிலை அடைந்துவிட்டது. வேளாண் உற்பத்தியை, குறிப்பாக உணவு தானியங்கள் உற்பத்தியைப் பெருக்க துரிதமாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இத்தருணத்தில் விளைநிலங்களின் பரப்பளவும், குறைந்து கொண்டு போவது மிகவும் கவலைப்பட வேண்டிய ஒரு நிலைப்பாடாகும்.
  உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய சூழ்நிலை ஒருபுறம் இருந்தாலும், உற்பத்தி செய்த உணவுப் பண்டங்களை முறையாக சேமிப்பது என்பதும் மிகப்பெரிய சவால். விவசாயிகள் உற்பத்தி செய்யும்போது பருவநிலை சாதகமாக இருந்தால் உற்பத்தி மிக அதிக அளவில் கிடைக்கிறது. உதாரணமாக, தக்காளி போன்ற காய்கறிகள் சந்தையில் ஏற்படும் ஏற்றஇறக்கங்களை அனைவரும் கண்கூடாகப் பார்க்கிறோம். கோடைகாலத்தில் தக்காளி விலை அதிகமாகவும், அடைமழை காலங்களில் தக்காளி உற்பத்தி அதிகமாக இருந்தால் அதைச் சேமித்து பதப்படுத்தும் வசதி இல்லாத காரணத்தால் தக்காளியின் விலை கிலோ 1 ரூபாய் வரை குறைந்தும் விடுகிறது.
  உற்பத்தியைப் பெருக்குவது மட்டும் ஒருபுறம் இருக்க உற்பத்தி செய்த உணவுப் பொருட்களை சந்தையில் போதுமான விலை கிடைக்கவில்லை என்றால் எப்படி பதப்படுத்தி, மதிப்பீட்டுப் பொருளாக விற்பனை செய்வது போன்ற உத்திகளைக் கையாண்டால் விவசாயம் இலாபகரமான தொழிலாக செய்வது மட்டும் அல்லாமல், தொடர்ந்து விவசாயம் செய்யும் மக்களின் எண்ணிக்கையும் குறையாது.
  விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாயம் செய்தால், உணவு உற்பத்தி பன்மடங்கு உயரும். விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்தலாம். நாட்டில் மற்ற துறைகளின் வளர்ச்சிக்கும் நல்ல உதவிகரமாக இருக்கும்.
  இஸ்ரேல் நாடு 3% அளவே நீரைக் கொண்டிருந்தாலும், வேலை ஆட்களே இல்லாத நிலையிலும், நிலத்திற்கு பதில் பாறை, சுண்ணாம்பு, பாலை நிலங்கள் என்றுள்ள நிலையிலும் எவ்வாறு விவசாய உற்பத்தித் திறனில் நம்பர் 1-ஆக உள்ளது என்பதை நாம் சிந்தித்துப் பார்த்தால், அந்நாட்டு விவசாயிகள் காலத்திற்கேற்ப புதிய கருவிகளையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவது தான்.
  இன்று நிலவும் மிகவும் இக்கட்டான விவசாய சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை உள்ளவர்கள் தொழில்நுட்பங்கள், புதுமை மற்றும் அறிவார்ந்த செயல்முறைகளுக்கு அதிமுக்கியத்துவம் தருவார்கள். நேர்மறை மனோபாவம் கொண்ட இவர்கள் எல்லாப் பிரச்சனைகளுக்கும், அதற்குள்ளேயே தீர்வுகளைக் காண்பார்கள். இவர்களுக்கு விவசாயத் தொழில் ஒரு சுமையோ, சாபமோ, வறுமையோ அல்லஙு

  எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!!

  அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள், தங்களின் மரபுகள், வரலாறு, கலைகள், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் போன்றவற்றில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்து வடஅமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) நிர்வாகிகளிடம் நாம் தொடர்பு கொண்டோம்.

  Continue Reading »

  விவசாயம் + தொழில்நுட்பம்

  தன்னம்பிக்கையில் வெளிவரும் இந்தப் புதிய தொடர் இதுவரை விவசாயம் பற்றிய உங்கள் அனைவரின் கண்ணோட்டத்தையும் மாற்றி அமைக்கும். நமது மனப்பாங்கை, சிந்தனையை மாற்றுவதன் மூலம் நமது வாழ்வியல் தொழிலான விவசாயத்தையும், எளிதில் லாபகரமாக மாற்றிக் கொள்ளமுடியும் என்பதை இந்தத் தொடர் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
  இனி வெற்றிகளைக் குவிக்கவும், சாதனைகளைப் படைக்கவும் உங்கள் முழு ஆற்றலை மட்டும் பயன்படுத்தினால் போதும்; வாய்ச்சொல் வீரர்கள், எதிர்மறை எண்ணம் கொண்டவர்களை அடியோடு விலக்கிவிட்டு உங்களுக்கென தனிவழியை ஏற்படுத்திக் கொண்டால் ஒன்றை நூறாக்கும், நூறை இலட்சமாக்கும் விவசாயம் உங்கள் சொல்படி கேட்கும்.
  நீங்களும் விவசாயத்தில் சாதனைகள் புரியலாம்; இலட்சங்களை கோடிகளை சம்பாதிக்கலாம்.
  எல்லா வளங்களும் உள்ள இந்தியாவில் இன்று வேளாண்மை சாத்தியமில்லை என்பதற்குக் காரணம் நம் அணுகுமுறையில், நம் முயற்சியில் உள்ள ஏதோ ஒரு சிக்கல் தான் என்பதே உண்மை. அந்தப் பிரச்சனையை, சிக்கலைத் தீர்க்கவே இந்த விவசாயம் + தொழில்நுட்பம் தொடர்
  இனி விவசாயத்தில் சாதிக்க இரண்டே இரண்டு செயல்களைச் செய்தாலே போதும்.
  1.விவசாயத்தை இனி வெறும், பாரம்பரியமாக மட்டும் செய்யாமல் தேர்ந்த ‘தொழில் நிறுவனமாக’ மேற்கொள்ள வேண்டும்.
  2.’விவசாயி’ என்பதிலிருந்து ‘விவசாயத் தொழில் முனைவோராக’ மாற வேண்டும்.
  இந்த அடிப்படை மாற்றங்களைச் செய்யாமல் நுனிப்புல் மேய்வது போல் பயிரை மட்டும் வளர்த்துக் கொண்டிருந்தால் இனி விவசாயத்தில் எந்தக் காலத்திலும் வெற்றி பெறவே முடியாது.
  நம் அணுகுமுறை, புதிய தொழில்நுட்பங்கள், புதுமையான கணினி வழி மேற்பார்வை, இளைஞர்களை ஈர்க்கும் வண்ணம் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, பொறியியல், தகவல் பரிமாற்றம், டாட்காம் போன்றவற்றைச் சார்ந்ததாக அமைய வேண்டும்.
  இன்று திரும்பிய பக்கமெல்லாம் “முடியாது” விவசாயம் அழிவை நோக்கிப் பயணிக்கிறது; பெருத்த நஷ்டம்; வேலைக்கு ஆள் இல்லை; நீர் வளம் இல்லை; விளை பொருளுக்கு ஏற்றவிலை இல்லை. தொடர்ந்து உயரும் இடுபொருள் விலை என பல்வேறு குரல்கள், அதிர்வுகள். ஆனால் இதுபோன்றஎண்ணற்ற எதிர்மறை எண்ணங்களுக்கு நடுவே நம்மவர்கள் சிலர் வெற்றிகரமாக வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களுக்கும் “தன்னம்பிக்கை டானிக்” தருகிறார்கள். அது எப்படி சாத்தியமானது? இப்படித்தான்.
  விவசாயத்தில் பல படிநிலைகள் உள்ள போதும் மிக எளிதாக இரண்டு நிலைகளாகப் பிரித்து வெற்றி காண்கிறார்கள்.
  1. பயிர் தேர்வு முதல் விளைச்சல்: தேவை அறிவார்ந்த, அறிவியல் பூர்வ, சுற்றுச்சூழலுக்கு உகந்த நஞ்சில்லா தொழில்நுட்பம்
  2. விளைச்சல் முதல் லாபம் வரை: தேவை பிசினஸ் அணுகுமுறை, தேர்ந்த தொழில்நிர்வாக முறை, சந்தைப்படுத்துதல் போன்றவை
  இவர்களைப் போலவே, இனி நாமும் எல்லோரும் செல்லும் பழைய, பழகிய, பாதையை விட்டு விட்டு, நமக்கென ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுப்போம். நம் வேலையை கடினமான முடியாத சவாலில் இருந்து ஆரம்பிப்போம். நமக்கென ஒரு புதிய சரித்திரம் படைத்து மற்றவர்களுக்கு, மற்ற நாடுகளுக்கு ஒரு புதிய படிப்பினையைத் தரத் தயாராவோம்…

  wifi வலையமைப்பு

  கணினித் தொழில்நுட்பம் பரவலாகிவிட்ட நிலையில், பெரும்பாலான இடங்களில், ஏன் நாம் சுவாசிக்கும் காற்றில் கூட இணையம் கலந்திருக்கிறது. இத்தகைய வாய்ப்பை ஏற்படுத்தி இருப்பது, இத்தாலியின் மார்கோனி விதைத்த விதை தந்த பல கனிகளில் ஒன்றான WiFi Wireless Fidelity எனப்படும் வடமில்லா வலையமைப்பு. தற்போது தொழில்நுட்ப பரிச்சயம் இல்லாத எவரும் எளிதில் உபயோகப்படுத்திக்கொள்ள ஏதுவான வகையில் ‘வைஃபை’ உபகரணங்கள் கிடைக்கின்றன.
  விமான நிலையத்தில் இருந்து, தேநீர் விற்கும் குக்கிராமக் கடைகள் வரை எங்கெங்கும் WiFi மயம் தான். தற்போதைய நிலவரப்படி உலகில் மொத்தம் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான ‘வைஃபை’ வலையமைப்பு மையங்கள் (WiFi Hot Spots) இருக்கின்றன. மிகக்குறுகிய காலத்தில் பிரம்மாண்டமான வளர்ச்சியை அடைந்திருக்கும் இந்த தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது, அஹ்ற்றை எப்படி சரியான முறையில் பயன்படுத்துவது, அவற்றில் மறைந்திருக்கும் அபாயங்கள் ஆகியவற்றைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.
  1985ம் ஆண்டு அமெரிக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைஆணையம், தொலைத்தொடர்பு தவிர்த்து மின்காந்த அலைகளைப் பயன்படுத்தும் உபகரணங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த சில அலைக்கற்றைகளை (900 MHz, 2.4 GHz, 5.8 GHz Spectrum) பொதுப் பயன்பாட்டுக்கு வழங்கியது. எவரும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி புகுந்து விளையாடிக் கொள்ளலாம் என்றசரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பையும் வெளியிட்டது. மைக்கேல் மார்கஸ் பரிந்துரைத்த இந்த முடிவால் தொலைத்தொடர்புத் தொழிலும், தொழில்நுட்பமும் பல பரிணாமங்களைத் தாண்டியிருக்கிறது இன்று.
  இப்படிச் சும்மா கிடைக்கும் அலைக்கற்றைகளை ஒவ்வொருவரும் தங்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்த ஆரம்பித்தனர். அதன் பலனாக சந்தையில் அறிமுகமான தொழில்நுட்பந்தான் WiFi. ஆரம்பத்தில் இந்த தொழில்நுட்பத்தால் பொதுமக்களைப் பெரிதாக ஈர்க்க முடியவில்லை. இதற்குக் காரணம், இந்த வலையமைப்பு உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் போட்டி போட்டு, ‘தங்கள் வழி தனி வழி’ என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு வலையமைப்பு வழிமுறைகளைப் (Network Protocol) பயன்படுத்தினர். இதன் விளைவால் ஒரு நிறுவனத்தின் கருவி மற்றநிறுவனத்தின் கருவியோடு தொடர்பு கொள்ள முடியாமல் போனது. பொதுமக்களிடத்தில் ஒரு சலிப்புணர்வை ஏற்படுத்தியதாலும், தொழில் மந்தமானதாலும் முதலாளிகள் கூட்டு சேர்ந்து அனைவருக்கும் ஒரு பொதுவான வலைத்தொடர்பு முறையை உருவாக்கிப் பின்பற்றும் வகையில் தங்கள் கருவிகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடிவு செய்தனர்.
  1988ம் ஆண்டு அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க பொதுவான வழிமுறைகளை வடிவமைக்கும் பொறுப்பு IEEE (Institute of Electrical and Electronic Engineers) வசம் ஒப்படைக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகள், பலமுறைவிவாதித்து 1997ல் 802.11 என்றWiFi-க்கான, பொதுவான தொடர்பு வழிமுறைவெளியிடப்பட்டது. இதன்பின்னர் தான் WiFi-ன் பிரம்மாண்டம் சாமான்யர்களின் வரவேற்பறைவரை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
  ஒரே அலைக்கற்றைகளை பல கருவிகள் (WiFi, Microwave Ovens) பயன்படுத்தும்போது எவ்வாறு தகவல்கள் சேதாரமில்லாமல் பயணம் செய்கின்றன என்றசந்தேகம் நமக்கு எழுகிறது. இந்தச் சிக்கல்கலைத் தீர்க்க இரண்டு விதமான தீர்வுகள் கையாளப்படுகின்றன.
  ஒன்று, குறிப்பிட்ட கால இடைவெளியிலோ அல்லது தகவல் பரிமாற்றம் பாதிக்கப்படும்போதோ தொடர்பு அலைவரிசையை (Frequency Hopping Spread Spectrum) மாற்றித்தருவது, மற்றொன்று ஒரே நேரத்தில் பல அலைவரிசைகளில் கலந்துகட்டித் (Direct Sequence Spread Spectrum) தகவல்களை அனுப்புவது.
  ஒன்றுக்கும் மேற்பட்ட கருவிகளில் மின்காந்த அலைத்தொடர்புகள் ஒன்றையொன்று மோதிக்கொள்ளும் போது (Signal Interference) அதனைச் சமாளிக்க மேற்சொன்ன இரண்டு வழிகளும் பின்பற்றப்படுகின்றன. உதாரணமாக, உங்கள் மொபைல்போனில் அழைப்பு வரும்போது அருகில் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியோ, ரேடியோவோ அதிர்வதைக் கூறலாம்.
  ஹெடிலமர் என்ற பொறியாளர் Spread Spectrum தொழில்நுட்பத்தை ஆராய்ச்சி செய்து அதன் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுத்தார். இரண்டாண்டுகளுக்கு முன்னர் அகமதாபாத்தில் குண்டுகள் வெடித்தன. அச்சம்பவத்தின் போது, குண்டுகள் வெடிப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு இந்த இடத்தில், இப்படி குண்டுகள் வெடிக்கப் போகின்றது என்று காவல்துறைக்கு தீவிரவாதிகள் மின்னஞ்சலை அனுப்பினர். குண்டுவெடிப்பு விசாரணைக்கு அந்த மின்னஞ்சல் தான் முக்கிய ஆதாரமாக கருதப்பட்டது.
  இதைப்போலவே மின்னஞ்சல் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நிகழ்வு WiFi-ஐ எப்படி பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தியது. இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட குண்டு துளைக்காத சட்டைக்குப் பலியான ஹேமந்த் கர்கரேவை யாரும் மறந்திருக்க மாட்டோம். அவர் தலைமையில் தான் குண்டு வெடிப்புக்குக் காரணமான மின்னஞ்சலின் பூர்வகம் தேடப்பட்ட போது மின்னஞ்சல் முகவரி காட்டியது மும்பையில் தங்கியிருந்த கென்னத் என்றஅமெரிக்கரின் வீடு. பல நாட்கள் விசாரணைக்குப் பின்னர் தான் புரிந்தது, கென்னத் ADSL Router மூலம் wifi வலையமைப்பில் இணையத்தைப் பாவித்து வந்தவர் என்பதும், எந்த பாதுகாப்பும் இன்றி அதைத் திறந்தே வைத்திருப்பதையும் தீவிரவாதிகள் அதைப் பயன்படுத்தி சதிச் செயலை நிறைவேற்றிவிட்டதையும் கண்டுபிடித்தது போலீஸ்.
  சதிச்செயலைப் போலீசுக்குத் தெரிவிக்க இணைய இணைப்பைத் திறந்து வைத்திருக்கும் நபரைத் தேடிய போது மாட்டியவர்தான் இந்த கென்னத். ரோட்டோரம் சில நிமிடங்கள் மட்டுமே வாகனத்தை நிறுத்தி மின்னஞ்சல் அனுப்பி மறைந்திருக்கிறார்கள் சதிச்செயலைச் செய்தவர்கள்.
  கென்னத்தைப் போல் இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பிருக்கிறது. நீங்கள் wifi பயன்படுத்துபவராக இருந்தால், உங்கள் வலையமைப்பு வழியில் செல்லும் யார் வேண்டுமானாலும் கொக்கி போட்டு பயன்படுத்த முடியாத அளவிற்குப் பாதுகாப்பானதா? என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். உங்கள் வலையமைப்பு பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் பிறநபர்கள் பகிர்ந்து கொள்ளாமல் இருத்தல் நலம். தவிர்க்க முடியவில்லை என்றால், வேலை முடிந்த மறுநிமிடம் வலையமைப்பில் இணைவதற்கான பாஸ்வேடை மாற்றிவிடுவது நல்லது. இதற்குக் காரணம் wifi வலையமைப்பில் ஒருவர் இணைந்துவிட்டால், உங்கள் தொடர்புப் புள்ளியில் நடைபெறும் அனைத்து தகவல் பரிமாற்றங்களையும் (HTTPS பக்கங்களைத் தவிர்த்து) பார்வையிட முடியும்.
  உங்கள் WiFi வலையமைப்பின் தொடர்புப் புள்ளியை, கஷ்டமாக இருந்தாலும் வீட்டின் நடுவே வைப்பதுதான் நல்லது. ஜன்னலோரமாகவோ, வாசல் பக்கமாகவோ வைப்பது சொந்த காசில் சூனியத்தை வைப்பது போல வில்லங்கத்தை விருந்துக்கழைப்பதற்கு ஒப்பாகும். ஏனென்றால் கட்டிடங்களுக்குள் WiFi பயணிக்க முடிந்த தூரம் சுமார் 30 மீட்டர்கள் தான் என்பதால் அதற்கேற்றஇடத்தைத் தேர்வு செய்து கொள்வது சிறப்பு.
  பாதுகாப்பு முறைகள் கொஞ்சம் பயமுறுத்தினாலும், வீடுகளில் இணைய இணைப்பினைப் பகிர்வதற்கு WiFi மிகவும் விருப்பப்படக் காரணம் அதன் வசதி மற்றும் செயல்படுதலில் உள்ள எளிமைத் தன்மை. மைக்கேல் மார்கன் பரிந்துரைத்த அலைக்கற்றைகுறித்தான முடிவுகள் ஆரம்பத்தில் வெற்றி பெறாமல் போனதும் கவலைப்படாமல் Spread Spectrum முறையை உலகுக்களித்த தலைவி ஹெடி லமர் என எல்லோரும் சேர்ந்து அளித்த ஊட்டத்தின் விளைவு இன்று எங்கெங்கும் பிரம்மாண்டமாய் பரவலாகி வருகிறது WiFi. சில ஆண்டுகளுக்கு முன்னர் புனே நகரத்தில் கூட நகர் முழுமைக்குமான WiFi வழங்குவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன.
  30 மீட்டர் முதல் அதிகபட்சம் 50 மீட்டர் வரை பயணிக்கும் WiFi வலையமைப்பு 50 கி.மீட்டர் பயணித்தால் எப்படி இருக்கும்? அதேபோல் வேகத்தில் 54 Mbps லிருந்து 1024 Mbps ஆக வேகமெடுத்தால் எப்படி இருக்கும் என்றயோசனைக்குச் செயல் வடிவம் கொடுத்து ரண்ஊண் வலையமைப்பின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வந்திருக்கும் தொழில்நுட்பம் தான் WiMedia (802.15.3) Utßm WiMax (802.16) இதைப்பற்றிய பதிவை அடுத்த இதழில் பார்ப்போம்…

  அம்மாவின் கைகள்

  சில மாதங்களுக்கு முன்பு, சூலூரில் உள்ள எனது நண்பரும் இராணுவ அதிகாரியுமான திரு. ரித்விக் உபாத்யாயா அவர்களின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் புகைப்படம், யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்து அதைப் பற்றிக் கேட்கவே இல்லை. அவரோடு காரில் பயணம் செய்யும்போது அதேபோன்ற கைகளின் புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். ஆவலில் அது யாருடைய கைகள் என்று கேட்டேன்.
  அவர் புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும்படியாகச் சொன்னார். புகைப்படத்தை அருகில் தொட்டுப் பார்த்த போது அது வயதான பெண்ணின் கைகள் என்பதைக் கண்டுகொண்டேன். முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள். நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கின்றன. நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன. யாராக இருக்கும் என்று மனது ஏதேதோ துறவிகளை, ஞானிகளை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது. அவர் அந்த கைகளைப் பெருமூச்சுடன் பார்த்து ஆதங்கமான குரலில் அது என் அம்மாவின் கைகள் என்று சொன்னார். ஆச்சரியமாக இருந்தது. “எதற்காக அம்மாவின் கைகளை மட்டும் புகைப்படமாக வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். “அந்தக் கைகள் தான் என்னை வளர்த்தன. என் நினைவில் எப்போதுமே அம்மாவின் கைகள் தான் இருக்கின்றன. அம்மாவின் முகத்தை விட, அந்தக் கைகளைக் காணும்போது தான் நான் அதிகம் நெகிழ்ந்து போகின்றேன்.
  அம்மா இறப்பதற்கு சில மணிநேரம் முன்பாக இந்தப் புகைப்படத்தை எடுத்தேன். இந்தக் கைகள் இப்போது உலகில் இல்லை. ஆனால் இதே கைகளால் வளர்க்கப்பட்டவன் உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். என் அம்மா எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து ஓய்வு எடுத்ததே இல்லை. அப்பா பொறுப்பற்றமுறையில் குடித்து, குடும்ப வருமானத்தை அழித்து 32 வயதில் இறந்து போனார். அம்மா படிக்காதவர். ஒரு டாக்டரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார். பகல் முழுவதும் அவர்கள் வீட்டினைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, நாய்களைப் பராமரிப்பது போன்றவேலைகள். மாலையில் இன்னும் இரண்டு வீடுகள். அங்கும் அதேபோல் சுத்தம் செய்யும் வேலை தான். எத்தனை ஆயிரம் பாத்திரங்களை அம்மாவின் கைகள் விளக்கிச் சுத்தம் செய்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே மனது கஷ்டமாக இருக்கிறது.
  இரவு வீடு திரும்பிய பிறகு, சமைத்து எங்களைச் சாப்பிட வைத்து உறங்கச் செய்துவிட்டு அதன் பின்னும் அம்மா இருட்டிலேயே கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டு இருப்பார்கள். சமையல் அறையில் தான் உறக்கம். அப்போதும் கைகள் அசைந்த படியே தான் இருக்கும். எங்கள் மூவரையும் பள்ளிக்கூடம் அழைத்துப் போகையில் யார் அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு நடப்பது என்பதில் போட்டியே இருக்கும்.
  அந்தக் கைகளைப் பிடித்துக் கொள்வதில் அப்படி ஒரு நெருக்கம். நம்பிக்கை கிடைக்கும். அது போலவே உடல் நலம் இல்லாத நாட்களில் அம்மாவின் கைகள் மாறி மாறி நெற்றியைத் தடவிய படியே இருக்கும். அம்மா நிதானமாகச் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை. தனது காலச் சிரமங்களையும் அம்மா தன் கைகளின் வழியே முறியடித்து எங்களை வளர்த்தபடியே இருந்தார். மருத்துவரின் வீட்டில் அம்மா ஒரு நாள் ஊறுகாய் ஜாடியை உடைத்துவிட்டார் என்று அடி வாங்குவதைப் பார்த்தேன். அம்மாவின் கன்னத்தில் மருத்துவரின் மனைவி மாறிமாறி அறைந்து கொண்டு இருந்தார். அம்மா அழவே இல்லை. ஆனால் நாங்கள் பார்த்துக் கொண்டு இருப்பதைத் தாங்க முடியாமல் விடுவிடுவென எங்களை இழுத்துக் கொண்டு அந்த வீட்டில் இருந்து வெளியேறினாள். வழியில் பேசவே இல்லை. அம்மாவை எந்தக் கைகளும் ஆறுதல் படுத்தவோ, அணைத்துக் கொள்ளவோ இல்லை. அவள் கடவுள் மீது கூட அதிக நம்பிக்கைக் கொண்டு இருந்தாள் என்று தோன்றவில்லை. வீட்டில் சாமி கும்பிடவோ, கோயிலுக்குப் போய் வழிபடவோ அதிக ஈடுபாடு காட்டியதே இல்லை. வேலை… வேலை… அது மட்டுமே தன் பிள்ளைகளை முன்னேற்றும் என்று அலுப்பின்றி இயங்கிக் கொண்டு இருந்தார்.
  சிறுவயதில் அந்தக் கைகளின் முக்கியத்துவத்தை நான் புரிந்து கொள்ளவே இல்லை. ஆசையாகச் சமைத்துத் தந்த உணவைப் பிடிக்கவில்லை என்று தூக்கி வீசி இருக்கிறேன். கஷ்டப்பட்டு பள்ளியில் இடம் வாங்கித் தந்தபோது படிக்க பிடிக்கவில்லை என்று போகாமல் இருந்திருக்கிறேன். கைச் செலவுக்குத் தந்த காசு போதவில்லை என்று அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டில் திருடி இருக்கிறேன். மற்றசிறுவர்களைப் போல் சைக்கிள் வாங்கித் தரமாட்டேன் என்கிறார் என்று கடுமையான வசைவுகளால் திட்டி இருக்கிறேன்.
  அம்மா எதற்கும் கோபித்துக் கொண்டதே இல்லை. அம்மா கஷ்டப்படுகிறார் என்று தெரிந்த போதும் யார் அவளை இப்படிக் கஷ்டப்படச் சொன்னது என்று தான் அந்த நாளில் தோன்றியது. கல்லூரி வயதில் நண்பர்களோடு சேர்ந்து சுற்றவும், புதுப்புது ஆடைகள் வாங்கவும், குடிக்கவும் எத்தனையோ பொய்கள் சொல்லியிருக்கிறேன். என் அண்ணனும் தங்கையும் கூட இப்படித்தான் செய்திருக்கிறார்கள். ஆனால் அம்மா அதற்காக எவரையும் கோபித்துக் கொள்ளவே இல்லை.
  கல்லூரி இறுதியாண்டில் மஞ்சள் காமாலை வந்து, நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் அம்மா, அப்போது தான் அவர் எங்களை எவ்வளவு அக்கறையோடு, ஆதரவோடு காப்பாற்றி வந்திருக்கிறார் என்று புரிந்தது. அதன் பிறகு, என்னைத் திருத்திக் கொண்டு தீவிரமாகப் படிக்கத் துவங்கி ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்து கடுமையாக உழைத்துப் பதவி உயர்வு பெற்றேன். அம்மாவை என்னுடனே வைத்துக் கொண்டேன். நான் சம்பாதிக்கத் துவங்கிய போதும், அம்மா ஒரு போதும் எதையும் என்னிடம் கேட்டதே இல்லை. நானாக அவருக்கு எதையாவது வாங்கித் தர வேண்டும் என்று நினைத்து தங்க வளையல் வாங்கித் தருகிறேன் என்று அழைத்துப் போனேன்.
  முதிய வயதில் அம்மா மிகுந்த கூச்சத்துடன் எனக்கு ஒரே ஒரு வாட்ச் வேண்டும். சின்ன வயதில் வாட்ச் கட்டிக் கொண்டு வேலைக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அது நடக்கவே இல்லை. அதன் பிறகு எனக்குள் இருந்த கடிகாரம் ஓடு… ஓடு… என்று என்னை விரட்டத் துவங்கியது. அலாரம் இல்லாமலே எழுந்து கொள்ளப் பழகிவிட்டேன். இப்போது வயதாகிவிட்டது. சில நாட்கள் என்னை அறியாமல் ஆறு மணிவரை உறங்கிவிடுகிறேன். இரவு உணவை ஏழு மணிக்குச் சாப்பிட்டு விடுகிறேன். ஒரு வாட்ச் வாங்கித் தருகிறாயா? என்று கேட்டார்.
  அம்மா விருப்பப்படி ஒரு வாட்ச் வாங்கித் தந்தேன். ஒரு பள்ளிச் சிறுமியைப் போல அதை ஆசையாக அம்மா எல்லோரிடமும் காட்டினாள். அதை அணிந்து கொள்வதில் அம்மா காட்டிய ஆர்வம் என்னை நெகிழ்வூட்டியது. அதன் பிறகு அம்மா, நான் திருமணம் செய்து டெல்லி, பெங்களூர் என்று வேலையாக அலைந்த போது கூடவே இருந்தார். டெல்லியில் எதிர்பாராத நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நான் கூடவே இருந்தேன். அப்போது தான் அந்த முதிய கைகளைப் பார்த்தேன். அது எவ்வளவு உழைத்திருக்கிறது. எவ்வளவு, தூய்மைப்படுத்தியிருக்கிறது. எவ்வளவு அன்பைப் பகிர்ந்து தந்திருக்கிறது. அதை ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பிறகு ஒரு நாள், எனது கேமராவை எடுத்துவந்து, புகைப்படம் எடுத்துக் கொண்டேன். இன்று அம்மா என்னோடு இல்லை. ஆனால் இந்த கைகள் என்னை வழி நடத்துகின்றன.
  ஒவ்வொரு நாளும் நான் எப்படி வளர்க்கப்பட்டேன் என்பதை இந்தக் கைகள் நினைவுபடுத்துகின்றன. இதை வணங்குவதைத் தவிர வேறு நான் என்ன செய்து விட முடியும்? என்றார். இராணுவ அதிகாரியினுடைய முகம் தெரியாத அந்தத் தாயின் கைகளை நானும் தொட்டு வணங்கினேன். அந்த கைகள் யாரோ ஒருவரின் தாயின் கைகள் மட்டுமில்லை. உலகெங்கும் உழைத்து ஓய்ந்து போன தாயின் கைகள் யாவும் ஒன்று போலத்தான் இருக்கின்றன. அவை எதையும் யாசிக்கவில்லை. அணைத்துக் கொள்ளவும், ஆதரவு தரவும், அன்பு காட்டவுமே நீளுகின்றன. அதை நாம் புறந்தள்ளிப் போயிருக்கிறோம். அலட்சியமாகத் தவிர்த்து இருக்கிறோம்.
  இலக்கு இல்லாத எனது பயணத்தில் யார் யார் வீடுகளிலோ தங்கி இருக்கிறேன். சாப்பிட்டு இருந்திருக்கிறேன். எனது உடைகளை துவைத்து வாங்கி அணிந்து இருக்கிறேன். அந்த கைகளுக்கு நான் என்ன நன்றி செய்து இருக்கிறேன். ஒரு நிமிடம் என் மனம் அத்தனை கைகளையும் வணங்கி தீராத நன்றி சொன்னது.
  “கை விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது இன்னொரு கைகள் நம்மோடு சேர்ந்து கொள்ளத்தான்ஙு என்று எங்கோ படித்தேன். அதை நிறைய நேரங்களில் நாம் உணர்வதே இல்லை. நம் மீது அன்பு காட்டும் மக்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்?”
  முடிவு நம்மிடமே இருக்கிறதுஙு

  பாதை மாறிய பயணங்கள்

  முன்பெல்லாம் ஆண்டுக்கு ஒருமுறைவிழா, பண்டிகை என ஊரே அமர்க்களப்படும். சாதி, மத பேதமின்றி, சகோதர உணர்வோடும் பயபக்தியோடும் செயல்பட்டனர். அன்றும் கரகாட்டம் என்ற நிகழ்ச்சி நடந்தது.
  அதிலே அளவுமுறை, கட்டுப்பாடு இருந்தது. ஆனால், இன்று 24 மணி நேரமும் நம் வீட்டுக்குள்ளேயே, நம் அனுமதியில்லாமல் நம்மிடமிருந்து பணமும் பெற்றுக்கொண்டு, நம் மனதையும், பண்புகளையும் சீரழிக்கும் எத்தனை கரகாட்டங்கள் டி.வி.யில் ஒளிபரப்பப்படுகின்றன.
  இவைகளைக் காண்பதற்கு எதை வேண்டுமானாலும் தியாகம் செய்யும் மனப்பாங்குடன் இல்லத்தரசிகள், குழந்தைகள் தேர்வுக்குப் படிக்கும் சில நாட்கள் கூட இவர்களால் அக்காட்சிகளைக் காணாவிட்டால் தலைவெடித்துவிடும் என்ற நிலை பல வீடுகளில்.
  நீ உன் நண்பன் வீட்டிற்குச் சென்று “குரூப் ஸ்டடி” செய் என்றோ, வேறு ஏதோ தேடிப்பிடிக்கும் காரணங்கள் கூறியோ மது போதையாளர்களைவிட மோசமாக மனம் பாதித்த நிலையில் வாழ்வதை அறியும் போது கோபம் வருகிறது.
  என்ன செய்ய முடியும்?
  மாணவர் / இளைஞர் போதைப்பழக்கம்:
  பொடிகளாலும், மதுவாலும் இன்று இளைஞர் சமுதாயம் எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பதை விடுமுறைநாட்களில், மாலை நேரங்களில் டாஸ்மாக் கடை முன்பு அலைமோதும் கூட்டம் வாயிலாகவும், பொதுஇடங்களில் பண்பாடில்லாமல் நடந்துகொள்ளும் தவறான செயல்களாலும் அறியலாம். பெரியவர்களுக்கு மதிப்பு என்பதோ, அவர்கள் கூறும் அறிவுரைகளைக் கேட்பது என்பதோ குறைந்து கொண்டே வருகிறது. இதற்கான காரணத்தை இரண்டாகப் பிரிக்கலாம்.
  ஒன்று: பெற்றோரின் பங்கு, தம் குழந்தைகள் நன்கு படிக்க வேண்டும், நல்ல வேலைக்குச் சென்று அதிக சம்பளம் பெற வேண்டும், அதற்காக என்ன கஷ்டமும் படத்தயார் இது பெற்றோரின் மனநிலை.
  ஆனால் தம் குழந்தை நல்லவர்களுடன் பழகுகிறானா? நல்ல பண்புகளைக் கொண்டிருக்கிறானா? என்பதைக் கண்காணிப்பதில் தயக்கம். நல்லது சொல்லப்போய், ஏதாவது இசகு பிசகாக நடந்துவிட்டால், இவர்களது விருப்பமெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிடுமே என்றபயம்.
  இந்த பயத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, அடியாத மாடு படியாது என்றபழமொழிப்படி தினமும் இடைவிடாமுயற்சியோடு நல்ல பண்புகளைக் கூறி வந்தால், கட்டாயம் மாறுவார்கள். அடிக்க வேண்டும் என்பதல்ல. தொடர்ந்து கூறுவதுடன் தாமும் அதுபோல் செய்ய வேண்டும்.
  மற்றது சமுதாயப் புல்லுருவிகள் பங்கு: யார் இவர்கள்?பெரிய நெட் ஒர்க்கில், கடைசியாக இளைஞர்கட்கு, மாணவ சமுதாயத்துக்கு போதையுண்டாக்கும் பொடிகளை சப்ளை செய்பவர்கள், தமது சிறு சுய லாபத்துக்காக ஒரு கலாச்சாரத்தையே கறையானாக அரிப்பவர்கள் இவர்கள்.
  எப்படி இவர்களுக்கு மனம் வருகிறது? தங்கள் குழந்தைகட்குத் தருவார்களா? நிச்சயமாகத் தரமாட்டார்கள்.
  ‘நாய் விற்றகாசு குரைக்குமா?’ என்று நியாயப்படுத்தும் போக்கு, நாயை விற்றால் சமுதாயத்துக்கு பாதிப்பில்லை. நாய்க்கறி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை கூடும். வேறு பாதிப்பில்லை.
  ஆனால் போதைப் பொடிகளால், அவைகளை உபயோகிப்போரின் உடல், மனம் சிதைந்து ஆரோக்கியம் கெட்டு, மன அமைதி பறிக்கப்பட்டு நிராதரவான நிலைக்குச் செல்வதைத் தான் காண முடியும்.
  இதற்கு அவர்கள் மட்டுமே காரணமா? பெரிய நெட்வொர்க் என்று கூறினோமல்லவா, ஆட்சியாளர்கள், தாதாக்கள், அடியாட்கள், காவல்துறையினர், எளிதில் விலைபோகும் ஏமாளிகள் எனப் பெரிய பட்டாளமே உள்ளது.
  தமது பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள, அடுத்த முறைதேர்தலில் செலவு செய்ய எனப்பல காரணங்களைக் கூறிக்கொண்டு, போதைப் பொடி விற்பனையாளர்களது கவனிப்புக்கு ஆளாகி, சமுதாயச் சீரழிவுக்குத் துணை போகின்றனர்.
  எந்தத் துறையில் தான் இது இல்லை?
  இதோ மேலும் ஓர் உதாரணம்.
  கோவையிலிருந்து பெங்களூருக்கு தினசரி இரவு புறப்படும் டிராவல்ஸ் பஸ்களின் எண்ணிக்கை சுமார் 160, இதைவிட கூடுதலாகவும் இருக்கலாம். ஒரு பஸ்ஸில் சராசரியாக 30 பேர் என்றால் சுமார் 4800 பேர். நபர் ஒருவருக்கு கட்டணமாக ரூ. 400 முதல் ரூ. 700 ஏன் அதற்கும் மேலே கூட்டத்தைப் பொறுத்து வசூலிக்கின்றனர்.
  கோவையிலிருந்து பெங்களூருக்கு இரவு புறப்படும் ரயில் ஏதேனும் உள்ளதா? தேடிப்பார்த்தேன்; தெரியவில்லை. ஒரு ரயிலுக்கு சுமார் 2000 பேர் என்றால், குறைந்தது இரு ரயில்கள் கோவையிலிருந்து பெங்களூருக்கு இரவில் புறப்பட வேண்டும். இதைச் செயல்படுத்த எது தடையாக உள்ளது. புதிதாகப் பாதை அமைக்க வேண்டுமா? தேவையில்லை,
  புதிய ரயில் நிலையங்கள் கட்ட வேண்டுமா? தேவையில்லை,
  வேறு என்ன தான் தடை?
  டிராவல்ஸ் பஸ் உரிமையாளர்களின் அன்பான உபசரிப்பு தான் தடையாக உள்ளது என சமீபத்தில் செய்தி ஒன்று கிடைத்தது.
  வருமானம் அதிகரிக்கவும், மக்களுக்குக் குறிப்பாக வறுமைக்கோட்டுக்குக் கீழ் வசிப்பவர்கட்கு உதவிடவும், சாலை விபத்துக்களைக் குறைத்திடவும் உடனே புதிதாக ஒரு ரயிலையாவது விடலாமே.
  யார் செய்வது?
  பயணத்துக்கு மக்கள் தயார். ஆனால் (ரயில்) வாகனம் தான் இல்லை.
  பெறும் சம்பளமும், வசதிகளும், DA-வும் போதாது என்று தனியார் டிராவல்ஸ் பஸ் உரிமையாளர்களது அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்கும் ஆட்சியாளரும், இரயில்வே நிர்வாகமும் இருக்கும் வரை மாறிய திசையில், அதாவது… மாற்றப்பட்ட திசையில் தான் பயணம் செய்தாக வேண்டுமென்றநிர்பந்தம்.
  இதுபோல் இன்னும் பல கூறலாம்.
  தடம் மாறிய பயணம்:
  இது என்றுமே தடுமாற்றம் தான் தரும். தவறான பாதையில் எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் பரவாயில்லை. திரும்பிவந்து, சரியான பாதையில் செல்வது தான் புத்திசாலித்தனம். சிந்திக்கும் ஆறாவது அறிவைப் பெற்றுள்ள மனிதனின் சிறப்பியல்பு, இதுதான்.
  ஆனால், இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். இனி திரும்பிச்சென்று சரியான வேறு பாதையைக் கண்டுபிடித்து பயணம் சென்றால், ஆயுளே முடிந்துவிடும் எனப்பலர் எண்ணலாம்.
  தவறான பாதையில் பயணத்தை முழுமையாக முடித்தால், பாதிப்பு மிக அதிகம். பயணத்தைப் பாதியில் திருத்தி அமைத்துக்கொள்ளும்போது காலவிரயமானாலும், குறைவான பாதிப்பே உண்டாகும். ஏனெனில் நமக்கு இருப்பது ஒரு வாழ்க்கை தானேஙு சரி, அடுத்த பிறவியில் பார்த்துக் கொள்ளலாம் என ஒத்திப்போட முடியாதேஙு
  அடுத்த பிறவி:
  லூயிஸ் எல். ஹே என்றஅமெரிக்கப் பாட்டி இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு வயது 85. அவரது 72வது வயதில் பால்ரூம் டான்ஸ் கற்றுக்கொள்ள ஆசை வந்தது. வயதான காலத்தில் ஏன் சிரமப்பட வேண்டும். அடுத்த பிறவியில் பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டார். நான்காண்டுகள் கழித்து 76வது வயதில் ஏன் அடுத்த பிறவி வரை காத்திருக்க வேண்டும். இந்த பிறவியிலேயே கற்றுக்கொள்ளலாமே என முடிவெடுத்துக் கற்றுக் கொண்டார்.
  அதேபோல் தன் 75வது வயதில் யோகா கற்றுக்கொண்டார். அவர் கூறுகிறார், “புரதச்சத்து நிறைந்த உணவு, அதிகளவு காய்கறிகள், சிறிது பழங்கள் மட்டுமே சாப்பிடுகிறேன். அதிகமான உடற்பயிற்சி, யோகா செய்கிறேன். என்னை நான் நேசிக்கிறேன். எல்லோரையும் மன்னித்து மற்றவர்களுக்காக விட்டுக் கொடுக்கிறேன். குழந்தைப்பருவ நாட்களை விட இப்போது அதிக சுறுசுறுப்பாக என்னால் செயல்பட முடிகிறது”.
  வாழ்க்கையில் இந்தப் பாட்டி படாத கஷ்டங்களே இல்லை. ஒரு பெண்ணுக்குத் தலையானதையே பலமுறைஇழந்து, அதனால் புற்றுநோய் வந்து, அதையும் தன் மனவலிமையால் மட்டுமே, எவ்வித மருந்துகளும் சாப்பிடாமல் குணப்படுத்திக் கொண்டவர். இதுபோல் பலர் உள்ளனர். நாம் சோர்ந்துவிடும்போது, தோல்வி அடையும்போது, பயப்படும்போது, இவர்களை நினைத்தாலே போதும். நம் உடலும், மனமும் புத்துணர்ச்சியுடன் செயல்பட ஆரம்பித்துவிடும்.
  சரியான பாதை:
  பொதுவாக இன்றைய சமுதாயச் சிக்கல்களுக்கு அடிப்படையான காரணம் நமது தவறான உணவுப்பழக்கமும், அதன் தொடர்ச்சியாக நோய்களும், மனபாதிப்பும். இயன்றவரை பழங்கள், காய்களை அதிகஅளவில் உணவில் சேர்த்துக் கொண்டு, எதைச் சாப்பிட்டாலும், உதடுகளை மூடி, முழு கவனத்தோடு நன்றாக மென்று விழுங்க வேண்டும். சாப்பிடும்போதோ சாப்பிட்ட பின் அரை மணிக்குள்ளோ தண்ணீர் கட்டாயம் குடிக்கக் கூடாது.
  ஏதாவது சில உடற்பயிற்சிகளை, அவரவருக்கு தகுந்தாற்போல கட்டாயம் செய்ய வேண்டும். இது நமது உடல் உள்உறுப்புகளைத் தூய்மைப்படுத்துகிறது.
  மனப்பயிற்சியின் மூச்சுப்பயிற்சி மிகவும் அவசியம். முழு நினைவோடு மூச்சை இழுத்துவிடவும். இதுபோல் 25 முறைஒருவாரம் செய்த பின், மூச்சை இழுத்து, இயன்றவரை நிறுத்திவிடவும். இதுபோல் 25 முறைதொடர்ந்து வாழ்நாள் உள்ளவரை செய்யவும். இதுதான் சரியான பாதை.
  சிறுவயது முதல் நம்மை அறிந்தோ அறியாமலோ நாம் உட்பட பலரை வெறுத்திருக்கிறோம். அந்தப்பதிவுகளையெல்லாம் நம் மனதிலிருந்து வெளியேற்றவேண்டும். காலை கண்ணாடியில் நம் முகத்தைப் பார்த்து கண்களை உற்றுநோக்கி, ஒவ்வொருவரும் தம்மையே நேசிப்பதாயும், முழுமையாக ஏற்றுக்கொள்வதாயும், எல்லோரையும் மன்னிப்பதாயும் பலமுறைகூறுங்கள்.
  இதனால் மாணவர்கள் நினைவாற்றல் கூடுகிறது. இளைஞர்கட்கு விரும்பிய பணி மற்றும் வாழ்க்கை அமைகிறது. குடும்பத்தில் அன்பான சூழல் அமைகிறது. என்றுமே தன்னம்பிக்கையோடு, சுறுசுறுப்போடு செயல்பட முடிகிறது. முதுமைக்காலம் மகிழ்ச்சியாக அமைகிறது. இன்னும் வேறு என்ன செய்ய வேண்டும்? பாதையை மாற்றுங்கள். பயணத்தை மகிழ்ச்சியாக்குங்கள்.

  அந்நிய முதலீடும் பண வீக்கமும்

  கடந்த இரண்டு வருடங்களாக பத்திரிக்கைகளில் இடைவிடாது வரும் தலைப்பு பணவீக்கம். பணவீக்கம் என்றால் என்ன? ஒரு நாட்டில் அரசாங்கம் அடிக்கும் பணத்தின் மதிப்பு குறைவது தான் பணவீக்கம். பணவீக்கம் அதிகமானால் உங்களால் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்திற்கு முதலில் இருந்ததை விட குறைவான அளவே பொருட்களை வாங்க முடியும்.
  இந்திய அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் கணக்கிடும் பணவீக்க அளவு கடந்த சில ஆண்டுகளாக சராசரியாக கிட்டத்தட்ட பத்து சதவீதம். இது உலகத்தில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது மிக அதிகம். இந்தியாவில் ஏன் இந்த அளவு பணவீக்கம்? பணவீக்கம் எப்படி உருவாகிறது? இது பொதுமக்களை எப்படி பாதிக்கிறது? என்பதைப் பார்ப்போம்.
  பணவீக்கத்தைப் புரிந்து கொள்ள முதலில் பணம் எப்படி உருவாகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் பணம் ரிசர்வ் வங்கியால் அச்சிடப்படுகிறது. ஆனால் நீங்கள் கண்ணில் பார்க்கும் ரூபாய் நோட்டு மட்டும் பணமல்ல. பணம் அடிப்பதைத் தவிர ரிசர்வ் வங்கி பல்வேறு வழிகளில் நமது நாட்டில் பணத்தை உருவாக்குகிறது.
  வங்கிகளுக்கு கடன் அளிப்பது அதில் ஒரு முக்கியமான வழிமுறை. இதை வங்கிகள் மக்களுக்கு கடனாகக் கொடுக்கின்றன. நாட்டிற்கு உள்ளே வரும் அந்நிய முதலீட்டின் மூலமும் பணம் உருவாக்கப்படுகிறது. இதைத்தவிர உலக வங்கி போன்ற நிறுவனங்கள் பல்வேறு திட்டங்கள் மூலமும் (இதுவும் ஒரு வழியில் அந்நிய முதலீடு தான்) பணம் உருவாக்கப்படுகிறது.
  பணவீக்கத்திற்கான காரணங்களில் முக்கியமானது நாட்டில் உள்ளே வர அனுமதிக்கப்பட்ட வரையறை அற்ற அந்நிய முதலீடு.
  தற்போது மேற்கத்திய நாடுகளில் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்த பெரும்பாலான நாடுகளில் மிகக் குறைவான வட்டியில் பணம் கொடுக்கப்படுகிறது. இந்தப் பணத்தை கடனாக பெறும் பெரும் நிறுவனங்கள் இங்கே கிடைக்கும் அதிகப்படியான லாபத்திற்காக இதை இங்கே முதலிடுகின்றன.
  பெரு நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை வீட்டு விலையும், நிலத்தின் விலையும் இந்த அளவு உயர்ந்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இந்த அந்நிய முதலீடுகள்.
  இருப்பிடத் துறையில் நுழையும் அதீதமான இந்தப் பணம் படிப்படியாக பரந்த பொருளாதாரத்தில் நுழைந்து அனைத்து விலைகளும் அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கிறது. உதாரணமாக, அமெரிக்க அரசால் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க கடந்த மூன்றாண்டுகளில் ஒரு கோடி கோடிஙுஙு (இருமுறை கோடிஙு தவறாக எழுதப்படவில்லை)க்கும் மேலே பணம் அச்சடிக்கப்பட்டு இருக்கிறது.
  இந்த அளவு பணம் அமெரிக்காவில் பணவீக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் இதில் பெரும்பாலான பணம் ஆசிய நாடுகளில் முதலிடப்பட்டு அந்த நாடுகளில் பணவீக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
  இந்தியாவும் இதனால் பாதிக்கப்பட்ட ஒரு நாடு. இதையே ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் போன்றவை குறைவான அளவில் செய்கின்றன. சுருக்கமாக சொல்வதென்றால் மற்ற நாடுகளில் எந்த ஒரு பொருளாதார பாதுகாப்பும் இன்றி அச்சிடப்படும் பணம் (கிட்டத்தட்ட அரசால் அடிக்கப்படும் கள்ள பணம்) நமது நாட்டில் நிரந்தர சொத்துக்களை வாங்கப் பயன்படுத்தப்பட்டு, விலைவாசி ஏறுவதற்கும் காரணமாகின்றது. அந்நிய முதலீடு நமக்கு நல்லது இல்லையா? அந்நிய முதலீடு என்பது குறைவான அளவில் முறையாக பயன்படுத்தப்பட்டால் ஒரு வேளை நன்மை இருக்கலாம்.
  நாம் சுயசார்போடு இருந்தால் அந்நிய முதலீடு என்பது தேவை இல்லை. நாம் ஏற்றுமதி செய்யும் பொருட்களின் அளவும், இறக்குமதி செய்யும் பொருட்களின் அளவும் சமமான இருந்தாலும் நமக்கு அந்நிய முதலீடு தேவை இல்லை.
  புதிய பொருளாதாரக் கொள்கை உருவாகும் வரை இங்கு அந்நிய முதலீடு என்பது மிகக் குறைவாகவே இருந்தது. புதிய பொருளாதார கொள்கை உருவான பின்னர் அந்நிய முதலீடு என்பது இந்தியாவை காக்க வந்த கடவுள் என்ற அளவில் அரசும், வியாபார நிறுவனங்களும், பத்திரிக்கைகளும் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டன.
  வளர்ந்த நாடுகளின் பெரும் நிறுவனங்கள் மற்றும் நமது பெரும் நிறுவனங்கள் நமது மனித வளத்தையும், இயற்கை வளங்களையும் குறைவாக வாங்க இந்தப் பிரசாரங்கள் பெரிதும் பயன்பட்டன. அரசு அந்நிய முதலீட்டை ஈர்க்க தகுந்த கட்டமைப்புகளை உருவாக்குகின்றோம் எனக்கூறி, மக்களின் நல்வாழ்வுக்காக நூற்றாண்டுகளாக இருந்த விவசாய மற்றும் வாழ்வியல் கட்டமைப்புக்களைச் சீர்குலைத்தது.
  வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் சொந்த நாடுகளில் கற்பனை கூட செய்து பார்த்திராத அளவு இலவச நிலம், வரி குறைப்பு என சலுகைகளை அள்ளி வழங்கியது.
  இந்த நிலங்கள் பெரும்பாலானவை ஏழைகளிடம் இருந்து பிடுங்கப்பட்டவை என்பது கூடுதல் தகவல். இந்த நிறுவனங்களுக்காக ஏரிகள் அழிக்கப்பட்டன. கடற்கரைகள் தாரை வார்க்கப்பட்டன. பெரும் மலைகள் மண்ணோடு மண்ணாக ஆக்கப்பட்டன. இந்த பத்தாண்டுகளில் மக்களிடம் இருந்து நிறுவனங்களுக்கு நடந்த அசையாத சொத்து பரிமாற்றம் அளவு எந்த காலத்திலும் நடந்திருக்க முடியாது. அதேபோல இந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சுற்றுப்புற சூழல் அடைந்த சேதம் எப்போதும் நடந்திராது.
  அதேநேரம் மக்களிடம் நுகர்வோர் கலாச்சாரம் திட்டமிட்டு வளர்க்கப்பட்டது. பத்திரிக்கைத் துறையில் மறைமுகமாக நுழைந்த அந்நிய முதலீடு இந்தப் பத்திரிக்கைகளை வெளிநாடு மற்றும் உள்நாட்டு பெருநிறுவனங்களின் அடிமைகளாக மாற்றியது. இந்தியா வல்லரசாகும், நமது கவலைகள் தீரும் என்ற போலியான கனவுகளை இந்தப் பத்திரிக்கைகள் திட்டமிட்டு மக்களிடம் ஏற்படுத்தின. இந்தப் பத்திரிக்கைகள் மக்களுக்குத் தற்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் தெரியாத வண்ணம் எதிர்கால கனவுகளை விற்பனை செய்தன.
  அந்நிய முதலீட்டிற்கு ஆதரவாக அரசும் பெரும் நிறுவனங்களும் எப்போதும் பதிலாக சொல்லும் இரு வார்த்தைகள் “வளர்ச்சி” மற்றும் “வேலைவாய்ப்பு”.
  ஆனால் உண்மை என்னவென்றால் இந்த முதலீடுகள் உருவாக்கிய ஒவ்வொரு வேலைக்கும், விவசாயம், சிறுதொழில்கள் போன்ற துறைகளில் இவர்கள் எத்தனையோ வேலைகளைப் பறித்து இருக்கிறார்கள். இன்று இந்தியா வளர்ந்த நாடுகளுக்குக் குறைவான விலையில் பொருட்களை உற்பத்தி செய்து கொடுக்கும் ஒரு பட்டறையாக மாறியதற்கு இந்த அந்நிய முதலீடு ஒரு முக்கிய காரணம். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு பதிலாக மக்களின் சொத்துக்களைப் பிடுங்கி அவர்களை அன்றாடம் காய்ச்சிகளாக மாறும் நிலையை இது ஏற்படுத்தி இருக்கிறது. விவசாயிகள் தற்கொலை செய்வதற்கும், நமது நாடு உணவு பற்றாக்குறையில் தவிப்பதற்கும் இன்னும் பல பிரச்சனைகளுக்கும் வரைமுறை அற்ற இந்த அந்நிய முதலீடு ஏதோ ஒரு வகையில் காரணமாக இருக்கிறது.
  அதேநேரம் இந்த பன்னாட்டு நிறுவனங்கள் நீண்ட நாள் முதலீடு செய்வதற்குப் பதிலாக பெரும் லாபத்தை ஒரு குறுகிய காலத்தில் அடையும் நோக்கத்தில் செய்யும் முதலீடுகள் நாட்டின் பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளிவிடும்.
  மொத்தத்தில் அந்நிய முதலீட்டின் மீது மிகக் கவனமாக மீள்பார்வை தேவை. அந்நிய முதலீட்டின் மீதும், அதற்கும் பணவீக்கத்திற்கும் இருக்கும் தொடர்பு குறித்தும் நேர்மையான விவாதம் நடத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் நமது எதிர்காலம் பெரும் கேள்விக்குறி ஆகிவிடும்.

  உற்சாக ஊற்று உங்களுக்குளே

  ஒரு உன்னத உயர்வுக்கு அடிப்படையானது உற்சாகம் என்கின்ற உத்வேகம் என்றால் அது மிகையாகாது. உற்சாகம் எங்கே நிறைய உள்ளதோ அங்கே அனைத்து அம்சங்களும் அற்புதமானதாக அமைவது நிச்சயம். உற்சாகம் உள்ள மனமே உயர்வாக எண்ணவும் செய்யும். அயர்வரியாது உழைக்கவும் முடியும். அனைவரின் அன்பையும் பெற்று அதிசயமானதாகத் தோன்றவும் முடியும்.
  உற்சாகம் என்பது எப்போதும் எல்லோருக்குள்ளும் பீரிட்டு எழும் ஊற்றாக பிறந்து கொண்டே இருக்கின்றது. அத்தகைய உற்சாகத்தை, மெருகு குழையாது, மேன்மையுடையதாகவே வைத்துக்கொண்டு இருக்க வேண்டுமானால், நாம் ஒரு சில விசயங்களில் எப்போதும் மிகவும் விழிப்போடு இருக்க வேண்டும். உதாரணத்திற்கு நம்மைச் சூழ்ந்துள்ள,

  • நண்பர்கள்
  • குழந்தைகள்
  • சகபணியாளர்கள்
  • போட்டியாளர்கள்
  • வாடிக்கையாளர்கள்

  நண்பர்களிடம்:
  நம்மைச் சூழ்ந்தள்ள நம் நண்பர்களோடு நமக்கிருக்கும் தொடர்பும், நம் உற்சாகத்தைக் கூட்டவும், குறைக்கவும் செய்கின்றன. ஆகையினால் எப்போதும் நம் நண்பர்களிடம் பரிவாய் நடந்து கொள்வோம். அப்போது அவர்கள் நம்மை விரும்புவார்கள். அதனால் நம் உற்சாகம் பெருகும். நம் நண்பர்களுக்கு எந்தவகையிலாவது நாம் பயனுள்ளவர்களாக இருக்கும் பட்சத்திலும் மற்றும் அவர்களின் உறவை மதிக்கக்கூடிய தன்மையை அவ்வப்போது ஏதோர் வகையில் வெளிப்படுத்துகின்ற போதிலும், எல்லாவற்றிற்கும் மேலாக நாம் அவர்களுக்கு எந்த அளவு உண்மைத் தன்மை உள்ளவர்களாக இருக்கின்றோம் என்பதைப் பொருத்தும் தான், நம் நண்பர்களுக்கு, நம்மைக் காட்டிலும் மிகச்சிறந்த மனிதர் அவர்களுக்கு யாரும் இருக்க முடியாது என்கின்ற நிலை உருவாகும். இத்தகைய நிலைபெற்ற நண்பர்கள் நம்மைச் சூழ்ந்து இருக்கும் பட்சத்தில் நம் உற்சாகத்திற்கு எந்தக் குறையும் இருக்காது.
  குழந்தைகளிடம்:
  குடும்பம் என்பது கோவில். அந்தக் கோவில் ùல்காடுக்கும் அமைதியும், ஆனந்தமும் தான் நம் உற்சாகத்தின் ஊற்றுக்கண். குடும்பத்தில் அமைதி கிடைக்கவில்லை என்றால், உலகில் எந்த வெற்றியாளனும் உருவாக முடியாது. அதிலும் பெற்றகுழந்தைகளின் ஒத்துழைப்பு என்பது, அந்தக் குடும்பத்தின் உயர்வுக்காக உழைக்கும் தலைவனுக்கு, ஊக்கம் தருகின்ற உற்சாகமாகும். அப்பேற்பட்ட குழந்தைகளிடம் நாம் நடந்து கொள்கின்ற முறையிலே கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக குழந்தைகள் மனம் எதை எதிர்பார்க்கும் என்றால், பெற்றோர்கள் தன் மீது அதிகம் பிரியம் காட்ட வேண்டும் என்றும், தனக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கும். மேலும் அவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் தம் பெற்றோர்களே ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்றும் எண்ணும்.
  குழந்தைகள் நோய்வாய்ப்படும்போதும் துன்புறும் சமயமும் அவர்களின் மீது மிகுந்த அக்கறை காட்டி அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டும் என்றும் நினைக்கும். மேலும் இந்த உலகம் எப்படிப்பட்டது, இதிலே நாம் எப்படி பாதுகாப்பாக, மிகழ்வுடன் வாழ்வது என்கின்ற வழியை எதிர்பார்க்கக் கூடியதாகவும் இருக்கும். மேற்கண்ட அத்தனை விசயங்களையும், நாம் தான் பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டும். அப்படி நிறைவேற்றும் போது நம் குழந்தைகளின் மூலம் நமக்குக் கிடைக்கும் உற்சாகம் என்பது என்றைக்கும் குறையாததாக இருக்கும்.
  சகபணியாளர்களிடம்:
  சகபணியாளர்களிடம் துணிந்து நாம் பொறுப்புக்களை கொடுக்கின்ற போது, அவர்களை அறியாமலே அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உழைப்பது மட்டுமின்றி, நம்முடைய உற்சாக பெருக்கிற்கும் உறுதுணையாக இருப்பார்கள். மேலும் அவர்களுக்கு சேர வேண்டிய நியாயமான சலுகைகளை, அவர்கள் கேட்கும் முன்பே நாம் வழங்குகின்ற போது, நமக்கு அவர்கள் அளவு கடந்த உண்மைத்தன்மை உள்ளவர்களாக மாறிவிடுகின்றார்கள் மற்றும் சக பணியாளர்களின் சிறுசிறு தவறுகளை பெரிதுபடுத்தாது, மேலும் தெரியாது செய்த குற்றங்களை பொறுத்துக் கொள்வதன் மூலமும் அவர்களின் முழு ஒத்துழைப்பை நாம் பெற முடியும். சுருக்கமாகச் சொல்வதென்றால், நம் சுயநலத்தை பெரிதாக கருதாது, பொதுநலத்தின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும்போது அனைவரின் அன்பையும், அரவணைப்பையும் பெற்று நம் உற்சாகம் கெடாதவாறு பார்த்துக் கொள்ளலாம்.
  போட்டியாளர்களிடம்:
  போட்டியாளர்களை முற்றிலுமாக புறந்தள்ளிவிடக் கூடாது. எப்போது வேண்டும் என்றாலும் அவர்கள் நம் உற்சாகத்திற்கு ஊறுவிளைவிக்கக்கூடும். ஆகையினால் எப்போதும் அவர்கள் மீது ஒரு கண் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். போட்டியாளர்களை தோற்கடிப்பதல்ல நம் வெற்றி. நம் வெற்றிகளை நாமே தோற்கடிப்பதே நம் வெற்றியாகும்.
  போட்டியாளர்களை நம்முடைய பரம எதிரியாக பாவிக்காது, நம் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் சமயம், நியாயமான முறையில் நாம் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறெல்லாம் நாம் நம்மை முறைப்படுத்தி இயங்கும் போது எப்போதும் போட்டியாளர்களால் நம் உற்சாகத்திற்கு இடையூறு இருக்காது.
  வாடிக்கையாளர்களிடம்:
  நம்முடைய வாடிக்கையாளர்களிடம் நாம் மிக சுமூகமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். நம் வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்பினை எளிதாக புரிந்துகொண்டு அதற்கேற்றால் போல் நம்மை நாம் வடிவமைத்துக் கொள்ள வேண்டும். மேலும் நம் வாடிக்கையாளர்கள் சூழ்நிலையின் காரணமாக நமக்கு இழைக்கும் சிறுசிறு நஷ்டங்களை பொறுத்துக் கொள்வதுடன், அத்தனை பொறுப்புக்களையும் நாமே முன்வந்து ஏற்று செயல்புரிகின்றபோது, அவர்களின் பரிபூரண ஒத்துழைப்பு நமக்குக் கிடைக்கும். அவ்வாறு இருக்கின்றபோது நம் உற்சாகம் சீர்குழையாது இருக்கும்.
  எனவே மேற்கண்ட விசயங்கள் அத்தனையும் நம்முடைய உற்சாகம் குறையாது, பெருகிக் கொண்டே இருக்க காரண காரியமாக அமைவதால், அவற்றின் மீது மிகுந்த கவனம் செலுத்தி செயல்படுகின்ற போது நம்மில் உற்சாகம் பெருகிக் கொண்டே இருக்கும். நம் உற்சாகம் பெருக, பெருக நாம் உழைக்கும் உழைப்பும் அதிகமாகும். உழைப்பு அதிகமாகும். உழைப்பு அதிகமாகவும் போது உயர்வு தானே வரும். உயர்வு வரவர, நம் வாழ்வு எல்லா வளமும் நலமும் பெற்று நிச்சயம் சந்தோசமாக அமையும்.

  மாறுவேஷம்

  பன்னிரண்டு வருடங்கள் காட்டில் இருந்த பிறகு ஒரு வருடம் நாட்டில் யாரும் அறியாதவாறு இருக்க வேண்டும் என்பது பகடையில் தோற்றதால் வந்த நிபந்தனை. அஞ்ஞாத மாறுவேட வாழ்க்கை மிகவும் கவர்ச்சியாக (attractive என்பதை எப்படி மொழிபெயர்ப்பது? பிறகு?) உள்ளது. அர்ஜுனன் அந்தப்புரத்தில் ஒரு வருடம் இளவரசிக்கு உத்தராவிற்கு நடனம் கற்றுத்தர மறைந்திருக்கின்றான். தர்மர் மாறுவேடத்தில் அதே நாட்டில் அரசரிடத்தில் பணிக்கு இருக்கின்றார் என்றெல்லாம் கதை நகர்கின்றது. ஆக மாறுவேடம் என்பது நிகழ்ந்திருக்கின்றது என்பது வரை நிஜமே… நிற்க
  இந்திய ஆட்சிப்பணி பயிற்சியில் (Roll Play) ரோல் ப்ளே என்றவாறான பயிற்சி உத்தி பயன்படுத்தப்படுவது உண்டு. இது எல்லா நிர்வாகப் பயிற்சிகளலும் முக்கியமாக பயனாகின்றது. அவர்களன் காலணியை அணிந்து கொள்க என்கின்ற நேரடி மொழிபெயர்ப்பில் put yourself into their shoes என்று ஆங்கிலத்தில் உள்ளதைச் சொல்லலாம். அதாவது, அவங்க நிலைமைல இருந்து பார்த்தாதான் தெரியும் என்று சொல்வது ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் தன் நிலையில்; அறிவில் ‘நல்லது’ என்று படுகின்ற விஷயத்தைத்தான் செய்ய முற்படுகின்றான். அதை ஏன் செய்தார்கள் என்று புரிந்துகொள்ள அவர்கள் ‘எப்படி’? என அறிந்து கொள்ள வேண்டி இருக்கின்றது. ஒப்பற்ற சாதனைகள் புரிந்தவர்களுக்கும் இதே நிலைதான். நல்ல குணங்களை கைவரப்பெற்றுள்ள நல்லறிவினை சுடரொளயாய் வௌப்படுத்தி, மிளர்கின்ற நட்சத்திரங்களாக நடிக்கின்ற பொழுதுகள் நம்முள் ஆழமான மாற்றங்களை விதைக்க வல்லவை.
  மேக்காலூர் என்று சொல்லப்படும் பெரிய வதம்பச்சேரி அரசு ஆரம்பப்பள்ளயை காலச் சக்கரத்தில் பின்புறமாக உருண்டு 1979-80களுக்கு அழைத்துச் செல்வதற்கு ஆசைப்படுகின்றேன். பூவரச மரங்கள் வரிசையாக பூத்துக் குலுங்குகின்ற எல்லைக் கோடுகளுடன் கூடிய இனிய வளாகம். வேலிக்காத்தான் என்கின்ற முட்செடி வேலியாக பள்ளக்கு இருந்தது. அது மழைகாலத்தில் கரங்களை நீட்டியும் வெயிலுக்குள் குறுகியும் காணப்படுவது மனசார.. என்று நினைப்பது உண்டு. வேலிகாத்தான் மரங்கள் மற்ற இடங்களல் ஒழுங்கற்று பரவிக்காணப்படுவதுண்டு கும்பல்…., கும்பலாக…., பல்லடப் பகுதி வறட்சிப் பிரதேசம் என்று பிற்காலத்தில் தஞ்சாவூர்ப் பகுதியை பார்த்த பிறகுதான் நன்றாக புரிய வந்தது. அதுவரையில் கொஞசம் நீர் இருப்பது கூட கொண்டாட்டமாய்தான் தெரிந்தது. இரண்டு மூன்று கிலோமீட்டர்கள் நடந்து போனது கண்ணகி சோழ நாட்டிலிருந்து நடந்ததை ஞாபகப்படுத்தும் காலகட்டம். முள்வேலிகளுக்கு மத்தியில் கல் கட்டிடங்களுக்கு இடையில் நடப்பது சிலப்பதிகாரத்தை மாறுவேடம் போட்டு நடிப்பது போல இன்று தோன்றுகின்றது. இதைப்படிக்கையில் எண்ணற்ற மனதுகள் என்னைப் போலவே மாறுவேடம் இட்டுக்கொண்ட நமது கிராமத்து மேடு பள்ளங்களுக்குள் உலாவரக் காண்கின்றேன். தீரர் செண்பகராமன் விடுதலைப் போராட்ட காலத்திலேயே ஜெர்மனி வரை பயணம் செய்து அங்கே உள்ளவர்களுக்கு பொறாமை உருவாகும் வண்ணம், பெருமை பொங்கும் வண்ணம் வாழ்ந்து பயணம் செய்திருக்கின்றார். அவ்வளவு தூரம் அக்காலத்திலேயே சென்று வந்த அவரது அனுபவங்களை மனதார மாறுவேடமிட்டு அனுபவித்தால் எம்டன் எனும் நீர்மூழ்கிக் கப்பலில் சென்னை வரையில் வந்து போன அனுபவம் கிடைக்கும். மேக்காலுர் பள்ளயிலிருந்து ஜெர்மனி வரை போய்விட்டோம்…. திரும்புவோம்.
  அந்தப்பள்ளயில் நாம் நான்காவது ஐந்தாவது மாணவர்களாக இருக்கையில் கிழக்காலூரில் இருந்து இணைந்து விளையாட்டுப் போட்டிகளுக்காக சென்று வருவதுண்டு. ஆண்டு விழாக்களும் அப்படியே. ஏதேதோ விழா காலத்தில் அரசின் நிதிக்காக ஐம்பதிலிருந்து நூறு மாணவர்கள் மாணவிகள் கோலாட்டம் ஆடிக்கொண்டே ஊர் முக்கியஸ்தர்களன் வீடுகள் வழியாக நின்று களப்போடு நடனமாடி ஊர்வலம் செல்வது உண்டு. அங்கெல்லாம் செல்வம் வசூலாகும். தவிரவும், ஒவ்வொரு வீட்டிலும் நீர்மோர், பானகம், எலுமிச்சை சாறு பழரசம் என்றவாறு பல பிடித்த விஷயங்கள் பரிமாறப்படும். அதில் குதூகலமும் சந்தோஷமும் கூத்தாடும் நம் மத்தியில்.
  ஆண்டு விழாக்களல் மாறுவேடப் போட்டியைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஐந்து வருடங்களும், எம் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்தாயா? என்று யாராவது ஒரு மாணவன் ஜாக்சன் துரையை கேட்காமல் விடமாட்டான். அதைக் கேட்பது ஆண்டு விழா அன்று ஒரு ஐந்தே நிமிடம்தான் என்றாலும் அதற்கு முன்பு ஒரு மாதமும் பின்பு ஒரு மாதமும் தீவிர அளவிலும், ஏன்? இன்றைக்குக் கூட பின்னால் நினைத்துப் பார்த்தால் ஞாபகம் வைக்கின்ற மாதிரி கட்டபொம்மனாக அதாவது நமக்கு தெரிந்த வரையில் சிவாஜி கணேசனாக மாறிப்போய்விட்ட மாணவர்கள் எத்தனையோ பேர். அந்த வேஷம் போட்டதினால் ஆழ்மனதிற்குள் ஊறிப்போய்விட்ட வீர உணர்ச்சியை எப்படி அளந்து பார்ப்பது? ஜாக்சன் துரைக்கு கலர் மேட்சிங்காக சிவப்பா உயரமாக பரமேஸ்வரனை தான் போடவேண்டும் என்று தேர்ந்தெடுத்தாலும் வசனம் வராதே….? என்று வேறு ஆள் தேர்வானது ரொம்ப நாட்கள் நினைவில் நின்ற செய்தி. கட்டபொம்மனை நினைக்கும் பொழுதெல்லாம் நிறைய பேர் மனதை நிறைக்கும் நடிகர் திலகத்தின் முகம் ஒரு மாறுவேஷம் தானே? அதை எப்படி உணர்ந்து கொள்வது.
  இடங்களுக்கு கூட மாறுவேடம் போடப்படுகின்றது. இதில், ஆச்சரியப்பட்டுப்போனது சமீபத்தில் மிஸ்ஸன் இம்பாஸில்-5 என்கின்ற படம் பார்த்தபொழுதுதான். மும்பை என்ற நம் ஊரை படத்தில் காட்டுகின்ற பொழுது தான், அது வௌநாட்டில் எடுக்கப்பட்டது என்பதற்குச் சான்றாக இடது பக்கம் ஸ்டியரிங் வைத்த கார்கள், இருந்ததை காண முடிந்தது. மாறுவேஷமிட்ட இடம் என்பதற்கு உடன் படம் பார்த்த திருச்சி பொறியியல் கல்லூரித் தம்பி பல எடுத்துக்காட்டுகளை படத்தில் சுட்டிக்காட்டினார். ஹா|வுட் படத்தில் கிளைமாக்ஸ் அருகே ஒரு திரையில் பிரபல தமிழ் டிவி ஔபரப்பு நிலையத்தில் தமிழ் தொலைக்காட்சிப் படங்கள் ஓடுவதையெல்லாம் காட்டிக்கொண்டு இருந்ததும் தெரிந்தது. எவ்வளவு யோசிக்கின்றார்கள்? இடத்தையே மாறு வேடத்திற்குட்படுத்த எவ்வளவு தகவல் சேகரிப்பு தேவைப்படுகின்றது. இரு நூற்றுக்கும் மேற்பட்ட உதவி இயக்குநர்கள் பணிபுரிவதால்தான் ஒரு ஹா|வுட் திரைப்படம் உருவாகின்றது, என்பதை நம்புகையில் மாறு வேடமிட, எவ்வளவு உழைக்கவேண்டியுள்ளது என்பது தெரிந்தது. துபாயின் மிக உயரமான கட்டிடத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளும் மணல் புயல் குறித்த காட்சிகளும் நம்மை ஏதோ கூட இருந்தது அனுபவித்தது போன்ற மாயத்தோற்றத்தைக் கொடுத்துவிடுகின்றது. சமீப ஆங்கில நாளதழ் ஒன்றில் வந்திருந்த Glass எனப்படும் தொலைத்தொடர்பு தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதை குறித்தும் இந்தப்படத்தில் பேசியிருக்கின்றார்கள். ஒரு கண்வில்லையை அணிந்து கொண்டு இமைப்பதன் மூலமே புகைப்படமெடுத்து அதனை ஒரு பெட்டிக்குள் உள்ள printer மூலம் அச்சிட்டு எடுப்பதெல்லாம் எவ்வளவு கச்சிதமான மாறு வேடம்? தப்பான காரியங்களுக்கு ஆள் மாறாட்டம் என்றால் இராவணன் பொன் மானாக வேடமிட்டு மார்சனை அனுப்பி வைத்ததில் ஆரம்பித்திருக்கக்கூடும் இந்தத் தொல்லை. மாறுவேஷம் பல சமயங்களல் மிகுந்த பலனுள்ள விஷயங்களல் முடிவுபெறுகின்றது. நம்பிக்கை நேர்முகத்தேர்வுக்காக அறைக்குள்ளே சென்று அமர்பவரின் முகத்தில் ஒரு தேஜஸையும் தௌவையும் உருவாக்கும் என்றால் மிகையாகாது. இதுவும் ஒரு மாறுவேடமே. முகத்தில் அணிந்து கொள்ளக்கூடிய நகையன்றோ புன்னகை. அது சில்லென்ற ஒரு மாறுவேடத்தை போட்டு வைக்கின்றது உள்ளக் குழப்பங்களை குளரச்செய்கின்றது.
  இந்தக் கட்டுரையின் இரண்டாவது பத்தியை எழுதுவதற்குள் ஏழு நாட்கள் நகர்ந்துவிட்டன. அதற்குள் இரண்டு விரல்கள் இரண்டு காயங்கள் மறுபடியும் அதே இடத்தில்! இன்னும் இரண்டு அற்புதமான காட்சுகள் வேறு! வாழ்க்கை எவ்வளவு பந்துகளை வீசுகின்றது நம்மை நோக்கி நம்பிக்கையை வரவழைப்பதற்கான மிக முக்கிய வழிகளல் ஒன்று நம்பிக்கை ஏற்கனவே வந்துவிட்டது போல நடிப்பது! என்று நிறைய புத்தகங்களல் படித்திருக்கின்றோம். நிஜம்தான் நிறைய சாதித்துவிட்டவர் போன்ற முகபாவனை பல இடங்களல் வெற்றிபெற்றுத் தருகின்றது.
  தத்துவ ரீதியாகப் பார்க்கப் போனால் வாழ்க்கை தனியொரு மனிதராக விளையாடும் மட்டைப்பந்து போலத் தெரிகின்றது. அவுட்டானாலும் அடுத்த இன்னிங்ஸ் தொடர்கின்றது. இடங்களும், பந்து வீச்சாளர்களும் மாறிக்கொண்டே இருக்கின்றார்கள். நின்று விளையாட வேண்டுமல்லவா? அதற்காக நிறைய தெம்பு (stamina வை தெம்பு என மொழி பெயர்ப்பது நன்றாக இருக்கிறதே!) வேண்டி இருக்கின்றது. அதை வரவழைத்துக்கொள்கின்ற வழிகள் நிறைய இருக்கின்றன. மனதை தினந்தோறும் அதற்காக தயாரித்து பயிற்சி கொடுத்து வைத்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது. பட்டினத்தார் வேடமிட்டுக் கொள்ளாமல் பக்குவப்பட்டுப் போவது அருமையான உத்தி. அதுவும் கூடவொரு இரமணமஹரிஷியையும் துணைக்குக் கொண்டால் வசனாமிர்தம். புத்தகத்தில் வருவதைப்போல ஆசாபாசங்களை வரவழைத்துக் கொண்டு உலகத்தில் உலவு என்று சொல்வதை படிக்கலாம்.
  ஒருவகையில், அவர் மாறுவேடமிட்டுக் கொள்ளத்தான் சொல்கின்றார் என்று கூட முடிவெடுக்கலாம். குருஷரண்தாஸ் அவர்களது புத்தகத்தில் நீண்ட நேரம் மிகச்சரியாக எத்தனை வருடம் பாண்டவர்கள் வனவாசமும் அஞ்சாத வாசமும் சென்றார்கள்? (எழுத போகின்றோம்) என்று தேடியதில் ….ஏராளமான புதிய விஷயங்கள் தெரியவந்தன.
  அவையும் மறக்க முடியாத நன்மையை ஏற்படுத்தித்தர வல்லவையே. ஒரு முக்கியமான தகவல் வந்து…., (வந்து…. போயி என்பதெல்லாம் பேச்சு வழக்கல்லவா? எழுத்து வழக்கில் வந்து…. வந்து குதிக்கிறதென்றால் நாம் இருவரும்….. பேசிக்கொண்டிருக்கின்றோ மென்று…. அர்த்தம்) மஹாபாரதத்திற்குள் மஹா பெரிய விஷயங்கள் புதைந்து கிடக்கின்றன. பார்வைக்கு படுகின்ற விஷயங்கள் பகடையாடுவது போல, உற்றுப்பார்க்கும் பொழுது நிறம்மாறிப் போகும் என்றுதானே உணர்த்த முயற்சி செய்கின்றன அந்த சின்னஞ்சிறு கதைகள். நகுலன் குதிரைகளல் மிகத்திறமை வாய்ந்தவன் ஆமே? எவ்வளவு திறமை என்றுசொல்ல மழை பொழியும் பொழுது அந்த சாரல்கள் நனைப்பதற்கும் முன்பாக கடந்து செல்லுமளவு வளைத்து ஓட்டும் அல்லது வேகமாய் ஓட்டும் திறமை வாய்ந்தவனாமே. இப்பொழுதுள்ள சூழ்நிலைகளல் நனைக்குமளவு மழை பொழிந்தால் மகிழ்ச்சி என்று மகள்கள் விளையாடுகின்றார்கள்.
  சதுரங்கம் விளையாடுகையில் மாறுவேடம் இட்டுக்கொள்ளும் கட்டங்கள் ….. (தெடரும்)

  உங்களால் முடியும்

  பாறைகள் குவிந்துகிடக்கிற இடம், பார்ப்பவர் கண்களன் தன்மைக்கேற்ப கலைக் கூடமாகவோ குவாரியாகவோ மாறுகிறது.
  ஆள் நடமாட்டமில்லாத இடத்தில், விவசாயத்திற்கும் பயனில்லாத வெற்றிடம், சிலர் கண்களல் மட்டும் ஓய்வு நேர இல்லங்கள் உருவாக்குவதற்குறிய இடமாகத் தெரிகிறது.
  மறந்துவிடாதீர்கள்! ஒரு பொருளோ, இடமோ, மனித ஆற்றலோ நிகழ்காலத்தில் என்னவாக இருக்கிறது என்பதல்ல முக்கியம். எதிர்காலத்தில் என்னவாக வளரும் என்பதுதான் முக்கியம். வாய்ப்புகள் வழியில் வரும் வரை காத்திருக்காமல், விலகிச் செல்லும் வாய்ப்புகளைக் கூட வழிமறித்துப் பயன்படுத்தும் துடிப்பு இருந்தால் இத்தகைய புதுமைகள் புத்தியில் உதிக்கும். இப்படிப் புதுமையாய் சிந்திப்பதில் முதல்தடை… விமர்சனங்கள்.
  ஆர்வமாய்ப் புதிய விஷயங்களைச் சொல்ல வருபவர்கள் கூட, விமர்சனங்கள் வந்ததும் துவண்டு விடுவார்கள். அதனால்தான் ஓர் அறிஞர் சொன்னார், “புதுமையாய் சிந்திக்க அறிவு மட்டும் போதாது, துணிவும் அவசியம்” என்று. சமுத்திரம் என்பது குடிக்கப் பயன்படாத தண்ணீர் என்று ஆதிகாலத்தில் அநேகம் பேர் அலட்சியம் செய்திருப்பார்கள்.
  அதில் உப்பு இருக்கிறது என்று ஒருவன் முதலில் கண்டுபிடித்திருப்பான், முத்து கிடைக்கிறது என்று இன்னொருவன் கண்டுபிடித்திருப்பான். மீன்பிடித்துச் சாப்பிடலாம் என்று மற்றொருவன் கண்டுபிடித்திருப்பான்.
  காலங்காலமாய் இருக்கிற கடல், தேவையில்லாத தண்ணீர்ப் பரப்பு என்று விலகி நடக்காமல் வித்தியாசமாய்ச் சிந்தித்தவன் தான் இந்தப் புதுமைகளையெல்லாம் பூமிக்குக் கொடுத்தான். இந்தப் புதுமைக் கண்ணோட்டம் என்பது, பணம் சம்பாதிக்கும் முறை என்று மட்டும் பார்த்தால், வளர்ச்சி இருக்காது. புதுமைக் கண்ணோட்ட வழிகள் வாழ்க்கையை சுவாரசியமாக்கிக் கொள்கிற முறை. அதுவே ஒரு வாழ்க்கை முறை.
  கண்ணில் படுகிற எதிலும் எண்ணிலடங்காத வாய்ப்புகள் இருக்கின்றன என்கிற நம்பிக்கை இதற்கான முதல் தேவை. சாதாரணமான ஒன்றைக் கூட சுவாரசியமாய் மாற்றுகிற படைப்பாற்றல் இதற்கான இரண்டாவது தேவை. படைப்பாற்றல் என்கிற கண்ணுக்குத் தெரியாத சக்திக்கு சொல் வடிவம் கொடுக்கிற திறமை, இதற்கான மூன்றாவது தேவை. ஒன்றை சுவாரசியமாக சிந்தித்து, செயல்படுத்தும் வரையில் பின்வாங்காத முயற்சியும் உழைப்பும் நான்காவது தேவை.
  இந்த அம்சங்களை யாரெல்லாம் வளர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள், அதிசயமான வெற்றிகளை அனாயசமாகப் பெற்று விடுகிறார்கள். உங்களுக்குள் ஒரு தீப்பொறி இருந்தால், ஊதி ஊதி வளர்க்க வேண்டியவர் நீங்கள் தான். அது பெரு நெருப்பாக உருவம் பெறும் வரை உங்களால் தான் அதைக் காப்பாற்ற முடியும். அதுவரையில் அதன் வௌச்சம் ஊருக்குத் தெரியாது.
  உங்களுக்குள் உதிக்கிற புதிய கண்ணோட்டங்கள் ஒவ்வொன்றுமே அத்தகைய தீப்பொறிகள்தான். உற்சாகமாய் ஊதி ஊதிப் பெருக்குங்கள் உங்களால் முடியும்.