Home » Post » நல்ல தலைமை…

 
நல்ல தலைமை…


ஆசிரியர் குழு
Author:

கப்பலில், கேப்டனின் குரல் ஒலிப்பெருக்கிகளில் ஒலித்தது. “கப்பலின் அடித்தளத்தில், சிறு ஓட்டை விழுந்துவிட்டது. கடல் தண்ணீர் உள்ளே புகத் துவங்கியிருக்கிறது. கப்பலின் எடையை நாம் உடனடியாகக் குறைத்தாக வேண்டும். பயணிகள் தேவையற்றதைத் தூக்கி கடலில் எரியுமாறு கேட்டுக் கொள்கிறேன்”.

அமெரிக்கர், அருகிலிருந்த கம்யூட்டர்களை எடுத்து வெளியே வீசினார். “எங்கள் நாட்டில் இது எக்கச்சக்கமாக கிடைக்கும்”.

ரஷ்யர், கம்யூனிசப் புத்தகங்களை எடுத்துத் தண்ணீரில் எறிந்தார். “எங்கள் நாட்டில் இவை ஏராளமாகக் கிடைக்கும்”.

இந்தியர் தன் அருகில் நின்றிருந்த அரசியல் தலைவரைத் தூக்கிக் கடலில் வீசினார். “எங்கள் நாட்டில் இவர்கள் தெருவுக்குத் தெரு கிடைப்பார்கள்”.

ஒரு தலைவன் என்பவன் மற்றவரால் இப்படியா கணிக்கப்பட வேண்டும்?

இன்னொருவர் தலையின் மீது ஏறி அமர்ந்து ஆளப்பார்ப்பது மிக அருவருப்பான அம்சம்.
நீங்கள் அதிகாரத்தைச் செலுத்த விரும்பினால், ஒரு சிறந்த தலைவராக இருப்பதைவிட, அடிமைகளை வைத்திருக்க ஆசைப்படுகிறீர்கள் என்று அர்த்தம்.

அப்படியொரு எண்ணம் இருந்தால், அதை முதலில் கழற்றி வீசுங்கள். வலிமையால், உரிமையால், பதவியால் மற்றவர்களை விட சில அடி உயரத்தில் உட்கார்ந்து விடுவது அல்ல நல்ல தலைமை.

மற்றவர்களை ஊக்குவிக்கும் மனம் உங்களுக்கு வேண்டும். உங்கள் அன்பினாலும், அக்கறையாலும், உங்களிடம் மாறாத அன்பு கொண்டவர்களாக அவர்கள் மாற வேண்டும்.

உங்கள் அண்மை அவர்களுக்கு நம்பிக்கையையும், துணிவையும் தர வேண்டும். அப்படித்தந்தால், நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்டு நடக்க மற்றவர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையை இனிமையானதாக மாற்றுவதன் மூலமே, அவர்களிடமிருந்து முழுமையான ஈடுபாட்டையும், திறமையையும் எதிர்பார்க்கலாம்.

நீங்கள் இல்லாதபோது இருந்ததைவிட உங்கள் அரவணைப்பில்தான் பன்மடங்கு சிறப்பாகப் பரிமளிக்க முடிகிறது என உங்கள் குழுவினர் உணர வேண்டும்.

உங்கள் பங்களிப்பு மதிப்புமிக்கது என்று உணர்ந்துவிட்டால் இயல்பாகவே மற்றவர்கள் உங்களைச் சூழ்ந்து கொள்வார்கள் தடையின்றி தலைவராக ஏற்பார்கள்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2012

ஏமாற்று வேலைகள்…..எச்சரிக்கை நடவடிக்கைகள்!
சாதிக்கலாம் வாங்க
நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்
உங்கள் பிள்ளைகள் புத்திசாலிகளாக வேண்டுமா?
உலக மக்கள் தொகை தினம்
விவசாயத்தின் இப்போதைய தேவை
எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!!
விவசாயம் + தொழில்நுட்பம்
wifi வலையமைப்பு
அம்மாவின் கைகள்
பாதை மாறிய பயணங்கள்
அந்நிய முதலீடும் பண வீக்கமும்
உற்சாக ஊற்று உங்களுக்குளே
மாறுவேஷம்
உங்களால் முடியும்
எழவேண்டும் தன்னம்பிக்கை கலாச்சாரம் …