Home » Articles » விவசாயம் + தொழில்நுட்பம்

 
விவசாயம் + தொழில்நுட்பம்


ஜெய்சங்கர்
Author:

தன்னம்பிக்கையில் வெளிவரும் இந்தப் புதிய தொடர் இதுவரை விவசாயம் பற்றிய உங்கள் அனைவரின் கண்ணோட்டத்தையும் மாற்றி அமைக்கும். நமது மனப்பாங்கை, சிந்தனையை மாற்றுவதன் மூலம் நமது வாழ்வியல் தொழிலான விவசாயத்தையும், எளிதில் லாபகரமாக மாற்றிக் கொள்ளமுடியும் என்பதை இந்தத் தொடர் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
இனி வெற்றிகளைக் குவிக்கவும், சாதனைகளைப் படைக்கவும் உங்கள் முழு ஆற்றலை மட்டும் பயன்படுத்தினால் போதும்; வாய்ச்சொல் வீரர்கள், எதிர்மறை எண்ணம் கொண்டவர்களை அடியோடு விலக்கிவிட்டு உங்களுக்கென தனிவழியை ஏற்படுத்திக் கொண்டால் ஒன்றை நூறாக்கும், நூறை இலட்சமாக்கும் விவசாயம் உங்கள் சொல்படி கேட்கும்.
நீங்களும் விவசாயத்தில் சாதனைகள் புரியலாம்; இலட்சங்களை கோடிகளை சம்பாதிக்கலாம்.
எல்லா வளங்களும் உள்ள இந்தியாவில் இன்று வேளாண்மை சாத்தியமில்லை என்பதற்குக் காரணம் நம் அணுகுமுறையில், நம் முயற்சியில் உள்ள ஏதோ ஒரு சிக்கல் தான் என்பதே உண்மை. அந்தப் பிரச்சனையை, சிக்கலைத் தீர்க்கவே இந்த விவசாயம் + தொழில்நுட்பம் தொடர்
இனி விவசாயத்தில் சாதிக்க இரண்டே இரண்டு செயல்களைச் செய்தாலே போதும்.
1.விவசாயத்தை இனி வெறும், பாரம்பரியமாக மட்டும் செய்யாமல் தேர்ந்த ‘தொழில் நிறுவனமாக’ மேற்கொள்ள வேண்டும்.
2.’விவசாயி’ என்பதிலிருந்து ‘விவசாயத் தொழில் முனைவோராக’ மாற வேண்டும்.
இந்த அடிப்படை மாற்றங்களைச் செய்யாமல் நுனிப்புல் மேய்வது போல் பயிரை மட்டும் வளர்த்துக் கொண்டிருந்தால் இனி விவசாயத்தில் எந்தக் காலத்திலும் வெற்றி பெறவே முடியாது.
நம் அணுகுமுறை, புதிய தொழில்நுட்பங்கள், புதுமையான கணினி வழி மேற்பார்வை, இளைஞர்களை ஈர்க்கும் வண்ணம் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, பொறியியல், தகவல் பரிமாற்றம், டாட்காம் போன்றவற்றைச் சார்ந்ததாக அமைய வேண்டும்.
இன்று திரும்பிய பக்கமெல்லாம் “முடியாது” விவசாயம் அழிவை நோக்கிப் பயணிக்கிறது; பெருத்த நஷ்டம்; வேலைக்கு ஆள் இல்லை; நீர் வளம் இல்லை; விளை பொருளுக்கு ஏற்றவிலை இல்லை. தொடர்ந்து உயரும் இடுபொருள் விலை என பல்வேறு குரல்கள், அதிர்வுகள். ஆனால் இதுபோன்றஎண்ணற்ற எதிர்மறை எண்ணங்களுக்கு நடுவே நம்மவர்கள் சிலர் வெற்றிகரமாக வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களுக்கும் “தன்னம்பிக்கை டானிக்” தருகிறார்கள். அது எப்படி சாத்தியமானது? இப்படித்தான்.
விவசாயத்தில் பல படிநிலைகள் உள்ள போதும் மிக எளிதாக இரண்டு நிலைகளாகப் பிரித்து வெற்றி காண்கிறார்கள்.
1. பயிர் தேர்வு முதல் விளைச்சல்: தேவை அறிவார்ந்த, அறிவியல் பூர்வ, சுற்றுச்சூழலுக்கு உகந்த நஞ்சில்லா தொழில்நுட்பம்
2. விளைச்சல் முதல் லாபம் வரை: தேவை பிசினஸ் அணுகுமுறை, தேர்ந்த தொழில்நிர்வாக முறை, சந்தைப்படுத்துதல் போன்றவை
இவர்களைப் போலவே, இனி நாமும் எல்லோரும் செல்லும் பழைய, பழகிய, பாதையை விட்டு விட்டு, நமக்கென ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுப்போம். நம் வேலையை கடினமான முடியாத சவாலில் இருந்து ஆரம்பிப்போம். நமக்கென ஒரு புதிய சரித்திரம் படைத்து மற்றவர்களுக்கு, மற்ற நாடுகளுக்கு ஒரு புதிய படிப்பினையைத் தரத் தயாராவோம்…

 

1 Comment

  1. சீரங்கன் பொியசாமி says:

    தங்களுடைய கட்டுரை சிறப்பாக உள்ளது.இலங்கையிலும் இதே நிலைமைதான். விவசாயம் என்றால் தூர ஓடும் எம் இளைஞா்களிற்கு வழிகாட்டும் ​போது நல்ல பயன் கிடைக்கும்.

Post a Comment


 

 


July 2012

ஏமாற்று வேலைகள்…..எச்சரிக்கை நடவடிக்கைகள்!
சாதிக்கலாம் வாங்க
நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்
உங்கள் பிள்ளைகள் புத்திசாலிகளாக வேண்டுமா?
உலக மக்கள் தொகை தினம்
விவசாயத்தின் இப்போதைய தேவை
எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!!
விவசாயம் + தொழில்நுட்பம்
wifi வலையமைப்பு
அம்மாவின் கைகள்
பாதை மாறிய பயணங்கள்
அந்நிய முதலீடும் பண வீக்கமும்
உற்சாக ஊற்று உங்களுக்குளே
மாறுவேஷம்
உங்களால் முடியும்
எழவேண்டும் தன்னம்பிக்கை கலாச்சாரம் …