Home » Articles » wifi வலையமைப்பு

 
wifi வலையமைப்பு


நாகராஜ் கே
Author:

கணினித் தொழில்நுட்பம் பரவலாகிவிட்ட நிலையில், பெரும்பாலான இடங்களில், ஏன் நாம் சுவாசிக்கும் காற்றில் கூட இணையம் கலந்திருக்கிறது. இத்தகைய வாய்ப்பை ஏற்படுத்தி இருப்பது, இத்தாலியின் மார்கோனி விதைத்த விதை தந்த பல கனிகளில் ஒன்றான WiFi Wireless Fidelity எனப்படும் வடமில்லா வலையமைப்பு. தற்போது தொழில்நுட்ப பரிச்சயம் இல்லாத எவரும் எளிதில் உபயோகப்படுத்திக்கொள்ள ஏதுவான வகையில் ‘வைஃபை’ உபகரணங்கள் கிடைக்கின்றன.
விமான நிலையத்தில் இருந்து, தேநீர் விற்கும் குக்கிராமக் கடைகள் வரை எங்கெங்கும் WiFi மயம் தான். தற்போதைய நிலவரப்படி உலகில் மொத்தம் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான ‘வைஃபை’ வலையமைப்பு மையங்கள் (WiFi Hot Spots) இருக்கின்றன. மிகக்குறுகிய காலத்தில் பிரம்மாண்டமான வளர்ச்சியை அடைந்திருக்கும் இந்த தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது, அஹ்ற்றை எப்படி சரியான முறையில் பயன்படுத்துவது, அவற்றில் மறைந்திருக்கும் அபாயங்கள் ஆகியவற்றைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.
1985ம் ஆண்டு அமெரிக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைஆணையம், தொலைத்தொடர்பு தவிர்த்து மின்காந்த அலைகளைப் பயன்படுத்தும் உபகரணங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த சில அலைக்கற்றைகளை (900 MHz, 2.4 GHz, 5.8 GHz Spectrum) பொதுப் பயன்பாட்டுக்கு வழங்கியது. எவரும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி புகுந்து விளையாடிக் கொள்ளலாம் என்றசரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பையும் வெளியிட்டது. மைக்கேல் மார்கஸ் பரிந்துரைத்த இந்த முடிவால் தொலைத்தொடர்புத் தொழிலும், தொழில்நுட்பமும் பல பரிணாமங்களைத் தாண்டியிருக்கிறது இன்று.
இப்படிச் சும்மா கிடைக்கும் அலைக்கற்றைகளை ஒவ்வொருவரும் தங்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்த ஆரம்பித்தனர். அதன் பலனாக சந்தையில் அறிமுகமான தொழில்நுட்பந்தான் WiFi. ஆரம்பத்தில் இந்த தொழில்நுட்பத்தால் பொதுமக்களைப் பெரிதாக ஈர்க்க முடியவில்லை. இதற்குக் காரணம், இந்த வலையமைப்பு உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் போட்டி போட்டு, ‘தங்கள் வழி தனி வழி’ என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு வலையமைப்பு வழிமுறைகளைப் (Network Protocol) பயன்படுத்தினர். இதன் விளைவால் ஒரு நிறுவனத்தின் கருவி மற்றநிறுவனத்தின் கருவியோடு தொடர்பு கொள்ள முடியாமல் போனது. பொதுமக்களிடத்தில் ஒரு சலிப்புணர்வை ஏற்படுத்தியதாலும், தொழில் மந்தமானதாலும் முதலாளிகள் கூட்டு சேர்ந்து அனைவருக்கும் ஒரு பொதுவான வலைத்தொடர்பு முறையை உருவாக்கிப் பின்பற்றும் வகையில் தங்கள் கருவிகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடிவு செய்தனர்.
1988ம் ஆண்டு அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க பொதுவான வழிமுறைகளை வடிவமைக்கும் பொறுப்பு IEEE (Institute of Electrical and Electronic Engineers) வசம் ஒப்படைக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகள், பலமுறைவிவாதித்து 1997ல் 802.11 என்றWiFi-க்கான, பொதுவான தொடர்பு வழிமுறைவெளியிடப்பட்டது. இதன்பின்னர் தான் WiFi-ன் பிரம்மாண்டம் சாமான்யர்களின் வரவேற்பறைவரை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
ஒரே அலைக்கற்றைகளை பல கருவிகள் (WiFi, Microwave Ovens) பயன்படுத்தும்போது எவ்வாறு தகவல்கள் சேதாரமில்லாமல் பயணம் செய்கின்றன என்றசந்தேகம் நமக்கு எழுகிறது. இந்தச் சிக்கல்கலைத் தீர்க்க இரண்டு விதமான தீர்வுகள் கையாளப்படுகின்றன.
ஒன்று, குறிப்பிட்ட கால இடைவெளியிலோ அல்லது தகவல் பரிமாற்றம் பாதிக்கப்படும்போதோ தொடர்பு அலைவரிசையை (Frequency Hopping Spread Spectrum) மாற்றித்தருவது, மற்றொன்று ஒரே நேரத்தில் பல அலைவரிசைகளில் கலந்துகட்டித் (Direct Sequence Spread Spectrum) தகவல்களை அனுப்புவது.
ஒன்றுக்கும் மேற்பட்ட கருவிகளில் மின்காந்த அலைத்தொடர்புகள் ஒன்றையொன்று மோதிக்கொள்ளும் போது (Signal Interference) அதனைச் சமாளிக்க மேற்சொன்ன இரண்டு வழிகளும் பின்பற்றப்படுகின்றன. உதாரணமாக, உங்கள் மொபைல்போனில் அழைப்பு வரும்போது அருகில் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியோ, ரேடியோவோ அதிர்வதைக் கூறலாம்.
ஹெடிலமர் என்ற பொறியாளர் Spread Spectrum தொழில்நுட்பத்தை ஆராய்ச்சி செய்து அதன் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுத்தார். இரண்டாண்டுகளுக்கு முன்னர் அகமதாபாத்தில் குண்டுகள் வெடித்தன. அச்சம்பவத்தின் போது, குண்டுகள் வெடிப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு இந்த இடத்தில், இப்படி குண்டுகள் வெடிக்கப் போகின்றது என்று காவல்துறைக்கு தீவிரவாதிகள் மின்னஞ்சலை அனுப்பினர். குண்டுவெடிப்பு விசாரணைக்கு அந்த மின்னஞ்சல் தான் முக்கிய ஆதாரமாக கருதப்பட்டது.
இதைப்போலவே மின்னஞ்சல் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நிகழ்வு WiFi-ஐ எப்படி பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தியது. இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட குண்டு துளைக்காத சட்டைக்குப் பலியான ஹேமந்த் கர்கரேவை யாரும் மறந்திருக்க மாட்டோம். அவர் தலைமையில் தான் குண்டு வெடிப்புக்குக் காரணமான மின்னஞ்சலின் பூர்வகம் தேடப்பட்ட போது மின்னஞ்சல் முகவரி காட்டியது மும்பையில் தங்கியிருந்த கென்னத் என்றஅமெரிக்கரின் வீடு. பல நாட்கள் விசாரணைக்குப் பின்னர் தான் புரிந்தது, கென்னத் ADSL Router மூலம் wifi வலையமைப்பில் இணையத்தைப் பாவித்து வந்தவர் என்பதும், எந்த பாதுகாப்பும் இன்றி அதைத் திறந்தே வைத்திருப்பதையும் தீவிரவாதிகள் அதைப் பயன்படுத்தி சதிச் செயலை நிறைவேற்றிவிட்டதையும் கண்டுபிடித்தது போலீஸ்.
சதிச்செயலைப் போலீசுக்குத் தெரிவிக்க இணைய இணைப்பைத் திறந்து வைத்திருக்கும் நபரைத் தேடிய போது மாட்டியவர்தான் இந்த கென்னத். ரோட்டோரம் சில நிமிடங்கள் மட்டுமே வாகனத்தை நிறுத்தி மின்னஞ்சல் அனுப்பி மறைந்திருக்கிறார்கள் சதிச்செயலைச் செய்தவர்கள்.
கென்னத்தைப் போல் இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பிருக்கிறது. நீங்கள் wifi பயன்படுத்துபவராக இருந்தால், உங்கள் வலையமைப்பு வழியில் செல்லும் யார் வேண்டுமானாலும் கொக்கி போட்டு பயன்படுத்த முடியாத அளவிற்குப் பாதுகாப்பானதா? என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். உங்கள் வலையமைப்பு பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் பிறநபர்கள் பகிர்ந்து கொள்ளாமல் இருத்தல் நலம். தவிர்க்க முடியவில்லை என்றால், வேலை முடிந்த மறுநிமிடம் வலையமைப்பில் இணைவதற்கான பாஸ்வேடை மாற்றிவிடுவது நல்லது. இதற்குக் காரணம் wifi வலையமைப்பில் ஒருவர் இணைந்துவிட்டால், உங்கள் தொடர்புப் புள்ளியில் நடைபெறும் அனைத்து தகவல் பரிமாற்றங்களையும் (HTTPS பக்கங்களைத் தவிர்த்து) பார்வையிட முடியும்.
உங்கள் WiFi வலையமைப்பின் தொடர்புப் புள்ளியை, கஷ்டமாக இருந்தாலும் வீட்டின் நடுவே வைப்பதுதான் நல்லது. ஜன்னலோரமாகவோ, வாசல் பக்கமாகவோ வைப்பது சொந்த காசில் சூனியத்தை வைப்பது போல வில்லங்கத்தை விருந்துக்கழைப்பதற்கு ஒப்பாகும். ஏனென்றால் கட்டிடங்களுக்குள் WiFi பயணிக்க முடிந்த தூரம் சுமார் 30 மீட்டர்கள் தான் என்பதால் அதற்கேற்றஇடத்தைத் தேர்வு செய்து கொள்வது சிறப்பு.
பாதுகாப்பு முறைகள் கொஞ்சம் பயமுறுத்தினாலும், வீடுகளில் இணைய இணைப்பினைப் பகிர்வதற்கு WiFi மிகவும் விருப்பப்படக் காரணம் அதன் வசதி மற்றும் செயல்படுதலில் உள்ள எளிமைத் தன்மை. மைக்கேல் மார்கன் பரிந்துரைத்த அலைக்கற்றைகுறித்தான முடிவுகள் ஆரம்பத்தில் வெற்றி பெறாமல் போனதும் கவலைப்படாமல் Spread Spectrum முறையை உலகுக்களித்த தலைவி ஹெடி லமர் என எல்லோரும் சேர்ந்து அளித்த ஊட்டத்தின் விளைவு இன்று எங்கெங்கும் பிரம்மாண்டமாய் பரவலாகி வருகிறது WiFi. சில ஆண்டுகளுக்கு முன்னர் புனே நகரத்தில் கூட நகர் முழுமைக்குமான WiFi வழங்குவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன.
30 மீட்டர் முதல் அதிகபட்சம் 50 மீட்டர் வரை பயணிக்கும் WiFi வலையமைப்பு 50 கி.மீட்டர் பயணித்தால் எப்படி இருக்கும்? அதேபோல் வேகத்தில் 54 Mbps லிருந்து 1024 Mbps ஆக வேகமெடுத்தால் எப்படி இருக்கும் என்றயோசனைக்குச் செயல் வடிவம் கொடுத்து ரண்ஊண் வலையமைப்பின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வந்திருக்கும் தொழில்நுட்பம் தான் WiMedia (802.15.3) Utßm WiMax (802.16) இதைப்பற்றிய பதிவை அடுத்த இதழில் பார்ப்போம்…

 

1 Comment

  1. Great article. I’ve enjoyed this contribution. Its nice to see every questions answered in a blog post like this. I will add this post on my blog and link to it. Thanks for a clear informative post, I’ve learned a lot. I hope to see videos though as I can be A.D.D and reading articles is not my favorite thing to do online. So what I do sometimes is just print the whole thing and read offline.

Leave a Reply to Dana Raquel Bryant


 

 


July 2012

ஏமாற்று வேலைகள்…..எச்சரிக்கை நடவடிக்கைகள்!
சாதிக்கலாம் வாங்க
நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்
உங்கள் பிள்ளைகள் புத்திசாலிகளாக வேண்டுமா?
உலக மக்கள் தொகை தினம்
விவசாயத்தின் இப்போதைய தேவை
எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!!
விவசாயம் + தொழில்நுட்பம்
wifi வலையமைப்பு
அம்மாவின் கைகள்
பாதை மாறிய பயணங்கள்
அந்நிய முதலீடும் பண வீக்கமும்
உற்சாக ஊற்று உங்களுக்குளே
மாறுவேஷம்
உங்களால் முடியும்
எழவேண்டும் தன்னம்பிக்கை கலாச்சாரம் …