Home » Articles » மாறுவேஷம்

 
மாறுவேஷம்


அனந்தகுமார் இரா
Author:

பன்னிரண்டு வருடங்கள் காட்டில் இருந்த பிறகு ஒரு வருடம் நாட்டில் யாரும் அறியாதவாறு இருக்க வேண்டும் என்பது பகடையில் தோற்றதால் வந்த நிபந்தனை. அஞ்ஞாத மாறுவேட வாழ்க்கை மிகவும் கவர்ச்சியாக (attractive என்பதை எப்படி மொழிபெயர்ப்பது? பிறகு?) உள்ளது. அர்ஜுனன் அந்தப்புரத்தில் ஒரு வருடம் இளவரசிக்கு உத்தராவிற்கு நடனம் கற்றுத்தர மறைந்திருக்கின்றான். தர்மர் மாறுவேடத்தில் அதே நாட்டில் அரசரிடத்தில் பணிக்கு இருக்கின்றார் என்றெல்லாம் கதை நகர்கின்றது. ஆக மாறுவேடம் என்பது நிகழ்ந்திருக்கின்றது என்பது வரை நிஜமே… நிற்க
இந்திய ஆட்சிப்பணி பயிற்சியில் (Roll Play) ரோல் ப்ளே என்றவாறான பயிற்சி உத்தி பயன்படுத்தப்படுவது உண்டு. இது எல்லா நிர்வாகப் பயிற்சிகளலும் முக்கியமாக பயனாகின்றது. அவர்களன் காலணியை அணிந்து கொள்க என்கின்ற நேரடி மொழிபெயர்ப்பில் put yourself into their shoes என்று ஆங்கிலத்தில் உள்ளதைச் சொல்லலாம். அதாவது, அவங்க நிலைமைல இருந்து பார்த்தாதான் தெரியும் என்று சொல்வது ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் தன் நிலையில்; அறிவில் ‘நல்லது’ என்று படுகின்ற விஷயத்தைத்தான் செய்ய முற்படுகின்றான். அதை ஏன் செய்தார்கள் என்று புரிந்துகொள்ள அவர்கள் ‘எப்படி’? என அறிந்து கொள்ள வேண்டி இருக்கின்றது. ஒப்பற்ற சாதனைகள் புரிந்தவர்களுக்கும் இதே நிலைதான். நல்ல குணங்களை கைவரப்பெற்றுள்ள நல்லறிவினை சுடரொளயாய் வௌப்படுத்தி, மிளர்கின்ற நட்சத்திரங்களாக நடிக்கின்ற பொழுதுகள் நம்முள் ஆழமான மாற்றங்களை விதைக்க வல்லவை.
மேக்காலூர் என்று சொல்லப்படும் பெரிய வதம்பச்சேரி அரசு ஆரம்பப்பள்ளயை காலச் சக்கரத்தில் பின்புறமாக உருண்டு 1979-80களுக்கு அழைத்துச் செல்வதற்கு ஆசைப்படுகின்றேன். பூவரச மரங்கள் வரிசையாக பூத்துக் குலுங்குகின்ற எல்லைக் கோடுகளுடன் கூடிய இனிய வளாகம். வேலிக்காத்தான் என்கின்ற முட்செடி வேலியாக பள்ளக்கு இருந்தது. அது மழைகாலத்தில் கரங்களை நீட்டியும் வெயிலுக்குள் குறுகியும் காணப்படுவது மனசார.. என்று நினைப்பது உண்டு. வேலிகாத்தான் மரங்கள் மற்ற இடங்களல் ஒழுங்கற்று பரவிக்காணப்படுவதுண்டு கும்பல்…., கும்பலாக…., பல்லடப் பகுதி வறட்சிப் பிரதேசம் என்று பிற்காலத்தில் தஞ்சாவூர்ப் பகுதியை பார்த்த பிறகுதான் நன்றாக புரிய வந்தது. அதுவரையில் கொஞசம் நீர் இருப்பது கூட கொண்டாட்டமாய்தான் தெரிந்தது. இரண்டு மூன்று கிலோமீட்டர்கள் நடந்து போனது கண்ணகி சோழ நாட்டிலிருந்து நடந்ததை ஞாபகப்படுத்தும் காலகட்டம். முள்வேலிகளுக்கு மத்தியில் கல் கட்டிடங்களுக்கு இடையில் நடப்பது சிலப்பதிகாரத்தை மாறுவேடம் போட்டு நடிப்பது போல இன்று தோன்றுகின்றது. இதைப்படிக்கையில் எண்ணற்ற மனதுகள் என்னைப் போலவே மாறுவேடம் இட்டுக்கொண்ட நமது கிராமத்து மேடு பள்ளங்களுக்குள் உலாவரக் காண்கின்றேன். தீரர் செண்பகராமன் விடுதலைப் போராட்ட காலத்திலேயே ஜெர்மனி வரை பயணம் செய்து அங்கே உள்ளவர்களுக்கு பொறாமை உருவாகும் வண்ணம், பெருமை பொங்கும் வண்ணம் வாழ்ந்து பயணம் செய்திருக்கின்றார். அவ்வளவு தூரம் அக்காலத்திலேயே சென்று வந்த அவரது அனுபவங்களை மனதார மாறுவேடமிட்டு அனுபவித்தால் எம்டன் எனும் நீர்மூழ்கிக் கப்பலில் சென்னை வரையில் வந்து போன அனுபவம் கிடைக்கும். மேக்காலுர் பள்ளயிலிருந்து ஜெர்மனி வரை போய்விட்டோம்…. திரும்புவோம்.
அந்தப்பள்ளயில் நாம் நான்காவது ஐந்தாவது மாணவர்களாக இருக்கையில் கிழக்காலூரில் இருந்து இணைந்து விளையாட்டுப் போட்டிகளுக்காக சென்று வருவதுண்டு. ஆண்டு விழாக்களும் அப்படியே. ஏதேதோ விழா காலத்தில் அரசின் நிதிக்காக ஐம்பதிலிருந்து நூறு மாணவர்கள் மாணவிகள் கோலாட்டம் ஆடிக்கொண்டே ஊர் முக்கியஸ்தர்களன் வீடுகள் வழியாக நின்று களப்போடு நடனமாடி ஊர்வலம் செல்வது உண்டு. அங்கெல்லாம் செல்வம் வசூலாகும். தவிரவும், ஒவ்வொரு வீட்டிலும் நீர்மோர், பானகம், எலுமிச்சை சாறு பழரசம் என்றவாறு பல பிடித்த விஷயங்கள் பரிமாறப்படும். அதில் குதூகலமும் சந்தோஷமும் கூத்தாடும் நம் மத்தியில்.
ஆண்டு விழாக்களல் மாறுவேடப் போட்டியைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஐந்து வருடங்களும், எம் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்தாயா? என்று யாராவது ஒரு மாணவன் ஜாக்சன் துரையை கேட்காமல் விடமாட்டான். அதைக் கேட்பது ஆண்டு விழா அன்று ஒரு ஐந்தே நிமிடம்தான் என்றாலும் அதற்கு முன்பு ஒரு மாதமும் பின்பு ஒரு மாதமும் தீவிர அளவிலும், ஏன்? இன்றைக்குக் கூட பின்னால் நினைத்துப் பார்த்தால் ஞாபகம் வைக்கின்ற மாதிரி கட்டபொம்மனாக அதாவது நமக்கு தெரிந்த வரையில் சிவாஜி கணேசனாக மாறிப்போய்விட்ட மாணவர்கள் எத்தனையோ பேர். அந்த வேஷம் போட்டதினால் ஆழ்மனதிற்குள் ஊறிப்போய்விட்ட வீர உணர்ச்சியை எப்படி அளந்து பார்ப்பது? ஜாக்சன் துரைக்கு கலர் மேட்சிங்காக சிவப்பா உயரமாக பரமேஸ்வரனை தான் போடவேண்டும் என்று தேர்ந்தெடுத்தாலும் வசனம் வராதே….? என்று வேறு ஆள் தேர்வானது ரொம்ப நாட்கள் நினைவில் நின்ற செய்தி. கட்டபொம்மனை நினைக்கும் பொழுதெல்லாம் நிறைய பேர் மனதை நிறைக்கும் நடிகர் திலகத்தின் முகம் ஒரு மாறுவேஷம் தானே? அதை எப்படி உணர்ந்து கொள்வது.
இடங்களுக்கு கூட மாறுவேடம் போடப்படுகின்றது. இதில், ஆச்சரியப்பட்டுப்போனது சமீபத்தில் மிஸ்ஸன் இம்பாஸில்-5 என்கின்ற படம் பார்த்தபொழுதுதான். மும்பை என்ற நம் ஊரை படத்தில் காட்டுகின்ற பொழுது தான், அது வௌநாட்டில் எடுக்கப்பட்டது என்பதற்குச் சான்றாக இடது பக்கம் ஸ்டியரிங் வைத்த கார்கள், இருந்ததை காண முடிந்தது. மாறுவேஷமிட்ட இடம் என்பதற்கு உடன் படம் பார்த்த திருச்சி பொறியியல் கல்லூரித் தம்பி பல எடுத்துக்காட்டுகளை படத்தில் சுட்டிக்காட்டினார். ஹா|வுட் படத்தில் கிளைமாக்ஸ் அருகே ஒரு திரையில் பிரபல தமிழ் டிவி ஔபரப்பு நிலையத்தில் தமிழ் தொலைக்காட்சிப் படங்கள் ஓடுவதையெல்லாம் காட்டிக்கொண்டு இருந்ததும் தெரிந்தது. எவ்வளவு யோசிக்கின்றார்கள்? இடத்தையே மாறு வேடத்திற்குட்படுத்த எவ்வளவு தகவல் சேகரிப்பு தேவைப்படுகின்றது. இரு நூற்றுக்கும் மேற்பட்ட உதவி இயக்குநர்கள் பணிபுரிவதால்தான் ஒரு ஹா|வுட் திரைப்படம் உருவாகின்றது, என்பதை நம்புகையில் மாறு வேடமிட, எவ்வளவு உழைக்கவேண்டியுள்ளது என்பது தெரிந்தது. துபாயின் மிக உயரமான கட்டிடத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளும் மணல் புயல் குறித்த காட்சிகளும் நம்மை ஏதோ கூட இருந்தது அனுபவித்தது போன்ற மாயத்தோற்றத்தைக் கொடுத்துவிடுகின்றது. சமீப ஆங்கில நாளதழ் ஒன்றில் வந்திருந்த Glass எனப்படும் தொலைத்தொடர்பு தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதை குறித்தும் இந்தப்படத்தில் பேசியிருக்கின்றார்கள். ஒரு கண்வில்லையை அணிந்து கொண்டு இமைப்பதன் மூலமே புகைப்படமெடுத்து அதனை ஒரு பெட்டிக்குள் உள்ள printer மூலம் அச்சிட்டு எடுப்பதெல்லாம் எவ்வளவு கச்சிதமான மாறு வேடம்? தப்பான காரியங்களுக்கு ஆள் மாறாட்டம் என்றால் இராவணன் பொன் மானாக வேடமிட்டு மார்சனை அனுப்பி வைத்ததில் ஆரம்பித்திருக்கக்கூடும் இந்தத் தொல்லை. மாறுவேஷம் பல சமயங்களல் மிகுந்த பலனுள்ள விஷயங்களல் முடிவுபெறுகின்றது. நம்பிக்கை நேர்முகத்தேர்வுக்காக அறைக்குள்ளே சென்று அமர்பவரின் முகத்தில் ஒரு தேஜஸையும் தௌவையும் உருவாக்கும் என்றால் மிகையாகாது. இதுவும் ஒரு மாறுவேடமே. முகத்தில் அணிந்து கொள்ளக்கூடிய நகையன்றோ புன்னகை. அது சில்லென்ற ஒரு மாறுவேடத்தை போட்டு வைக்கின்றது உள்ளக் குழப்பங்களை குளரச்செய்கின்றது.
இந்தக் கட்டுரையின் இரண்டாவது பத்தியை எழுதுவதற்குள் ஏழு நாட்கள் நகர்ந்துவிட்டன. அதற்குள் இரண்டு விரல்கள் இரண்டு காயங்கள் மறுபடியும் அதே இடத்தில்! இன்னும் இரண்டு அற்புதமான காட்சுகள் வேறு! வாழ்க்கை எவ்வளவு பந்துகளை வீசுகின்றது நம்மை நோக்கி நம்பிக்கையை வரவழைப்பதற்கான மிக முக்கிய வழிகளல் ஒன்று நம்பிக்கை ஏற்கனவே வந்துவிட்டது போல நடிப்பது! என்று நிறைய புத்தகங்களல் படித்திருக்கின்றோம். நிஜம்தான் நிறைய சாதித்துவிட்டவர் போன்ற முகபாவனை பல இடங்களல் வெற்றிபெற்றுத் தருகின்றது.
தத்துவ ரீதியாகப் பார்க்கப் போனால் வாழ்க்கை தனியொரு மனிதராக விளையாடும் மட்டைப்பந்து போலத் தெரிகின்றது. அவுட்டானாலும் அடுத்த இன்னிங்ஸ் தொடர்கின்றது. இடங்களும், பந்து வீச்சாளர்களும் மாறிக்கொண்டே இருக்கின்றார்கள். நின்று விளையாட வேண்டுமல்லவா? அதற்காக நிறைய தெம்பு (stamina வை தெம்பு என மொழி பெயர்ப்பது நன்றாக இருக்கிறதே!) வேண்டி இருக்கின்றது. அதை வரவழைத்துக்கொள்கின்ற வழிகள் நிறைய இருக்கின்றன. மனதை தினந்தோறும் அதற்காக தயாரித்து பயிற்சி கொடுத்து வைத்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது. பட்டினத்தார் வேடமிட்டுக் கொள்ளாமல் பக்குவப்பட்டுப் போவது அருமையான உத்தி. அதுவும் கூடவொரு இரமணமஹரிஷியையும் துணைக்குக் கொண்டால் வசனாமிர்தம். புத்தகத்தில் வருவதைப்போல ஆசாபாசங்களை வரவழைத்துக் கொண்டு உலகத்தில் உலவு என்று சொல்வதை படிக்கலாம்.
ஒருவகையில், அவர் மாறுவேடமிட்டுக் கொள்ளத்தான் சொல்கின்றார் என்று கூட முடிவெடுக்கலாம். குருஷரண்தாஸ் அவர்களது புத்தகத்தில் நீண்ட நேரம் மிகச்சரியாக எத்தனை வருடம் பாண்டவர்கள் வனவாசமும் அஞ்சாத வாசமும் சென்றார்கள்? (எழுத போகின்றோம்) என்று தேடியதில் ….ஏராளமான புதிய விஷயங்கள் தெரியவந்தன.
அவையும் மறக்க முடியாத நன்மையை ஏற்படுத்தித்தர வல்லவையே. ஒரு முக்கியமான தகவல் வந்து…., (வந்து…. போயி என்பதெல்லாம் பேச்சு வழக்கல்லவா? எழுத்து வழக்கில் வந்து…. வந்து குதிக்கிறதென்றால் நாம் இருவரும்….. பேசிக்கொண்டிருக்கின்றோ மென்று…. அர்த்தம்) மஹாபாரதத்திற்குள் மஹா பெரிய விஷயங்கள் புதைந்து கிடக்கின்றன. பார்வைக்கு படுகின்ற விஷயங்கள் பகடையாடுவது போல, உற்றுப்பார்க்கும் பொழுது நிறம்மாறிப் போகும் என்றுதானே உணர்த்த முயற்சி செய்கின்றன அந்த சின்னஞ்சிறு கதைகள். நகுலன் குதிரைகளல் மிகத்திறமை வாய்ந்தவன் ஆமே? எவ்வளவு திறமை என்றுசொல்ல மழை பொழியும் பொழுது அந்த சாரல்கள் நனைப்பதற்கும் முன்பாக கடந்து செல்லுமளவு வளைத்து ஓட்டும் அல்லது வேகமாய் ஓட்டும் திறமை வாய்ந்தவனாமே. இப்பொழுதுள்ள சூழ்நிலைகளல் நனைக்குமளவு மழை பொழிந்தால் மகிழ்ச்சி என்று மகள்கள் விளையாடுகின்றார்கள்.
சதுரங்கம் விளையாடுகையில் மாறுவேடம் இட்டுக்கொள்ளும் கட்டங்கள் ….. (தெடரும்)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2012

ஏமாற்று வேலைகள்…..எச்சரிக்கை நடவடிக்கைகள்!
சாதிக்கலாம் வாங்க
நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்
உங்கள் பிள்ளைகள் புத்திசாலிகளாக வேண்டுமா?
உலக மக்கள் தொகை தினம்
விவசாயத்தின் இப்போதைய தேவை
எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!!
விவசாயம் + தொழில்நுட்பம்
wifi வலையமைப்பு
அம்மாவின் கைகள்
பாதை மாறிய பயணங்கள்
அந்நிய முதலீடும் பண வீக்கமும்
உற்சாக ஊற்று உங்களுக்குளே
மாறுவேஷம்
உங்களால் முடியும்
எழவேண்டும் தன்னம்பிக்கை கலாச்சாரம் …