– 2012 – July | தன்னம்பிக்கை

Home » 2012 » July

 
  • Categories


  • Archives


    Follow us on

    சாலையோர உணவகங்கள் – எச்சரிக்கை ரிப்போர்ட்

    இரண்டு வாரங்களுக்கு முன்னர் எனது நண்பர் தனக்கு அடிக்கடி சிறுநீர் ரத்தமாகப் போகிறது என்று சொல்லி மருத்துவரிடம் சென்றான். சிகிச்சை தரும்போது பிரச்சனை சரியாவதும், சில வாரங்களில் மீண்டும் அதே பிரச்சனையுடன் அவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்வதும் வாடிக்கையாகிவிட்டது.

    Continue Reading »

    உழவும் பசுவும் ஒழிந்த கதை!

    ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின் இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு. ஒன்று குருகுலக்கல்வி, மற்றொன்று நமது பாரம்பரிய விவசாயம்.

    Continue Reading »

    மாற்றத்திற்கு ஆசைப்படு…

    மேலைநாடுகள் ஒவ்வொன்றுக்கும் இன்று வரையிலும் இந்தியா என்பது ஒரு அதிசய நாடே..

    இன்னும் சொல்லப்போனால் ஆச்சரியமான நாடும் கூட. இத்தனை ஏற்றத்தாழ்வுகள், மொழிகள், மதங்கள், ஜாதிப்பிரிவுகள், குழப்பங்கள், போராட்டங்கள், கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், லஞ்சம், ஊழல் என்று தொடர்ந்து நடந்து கொண்டிருந்த போது எந்த புரட்சியும் நடக்காமல் இன்னமும் ஏன் இந்த மக்கள் இத்தனை சகிப்பாளர்களாக இருக்கிறார்கள் என்று உள்ளுக்குள் தோன்றும்.

    Continue Reading »

    வெற்றி தானாக உங்களைத் தேடி வர…

    சங்கரன் பிள்ளை தன் இரண்டு நண்பர்களுடன் ரயில் நிலையம் வந்தார். மூவருக்கும் சேர்த்து ஒரே ஒரு பயணச்சீட்டு வாங்கினார்.

    கிராமத்தில் இருந்து வந்திருந்த மூன்று பேர் இதைக் கவனித்தனர். ஒற்றை டிக்கெட்டில் எப்படி மூவர் பயணம் செல்ல முடியும் என்று அவர்களுக்கு பிரமிப்பு.

    ரயில் ஒரு டிக்கெட் வாங்கியவர்களையே அவர்கள் கவனித்தனர்.

    Continue Reading »

    நல்ல தலைமை…

    கப்பலில், கேப்டனின் குரல் ஒலிப்பெருக்கிகளில் ஒலித்தது. “கப்பலின் அடித்தளத்தில், சிறு ஓட்டை விழுந்துவிட்டது. கடல் தண்ணீர் உள்ளே புகத் துவங்கியிருக்கிறது. கப்பலின் எடையை நாம் உடனடியாகக் குறைத்தாக வேண்டும். பயணிகள் தேவையற்றதைத் தூக்கி கடலில் எரியுமாறு கேட்டுக் கொள்கிறேன்”.

    Continue Reading »

    ஏமாற்று வேலைகள்…..எச்சரிக்கை நடவடிக்கைகள்!

    அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சில பொருட்கள் உண்மையைப்போலவே தோற்றமளித்து “போலி” வடிவில் பயன்பாட்டுக்கு வருகின்றன. அசலைப்போலவே சில “நகல்கள்” தோன்றுகின்றன. உண்மையான பொருட்களைவிட போலியாய்த் தயாரிக்கப்பட்ட பொருட்கள் கண்ணைக் கவரும் விதத்தில் தோன்றி நம்மை வாங்கத் தூண்டுகின்றன.
    கல்வித்துறையையும் இந்தப் “போலிகள்” விட்டுவைக்கவில்லை. தேர்வு எழுதுவதற்குக்கூட போலி மாணவர்களை அனுப்பித் தேர்வு எழுதசெய்யும் கொடுமைகளும் அவ்வப்போது இந்திய அளவில் நடைபெறுகின்றன. போலியாக மதிப்பெண் பட்டியலைத் தயாரித்து அதன்மூலம் மேற்படிப்பில் சேர்ந்து நல்ல வேலையைப் பெற்றுக்கொள்ள முயல்பவர்களும் இப்போது அதிகமாகிவிட்டார்கள்.
    கடந்த வருடம் (2011) – “போலி மதிப்பெண் சான்றிதழ்” கொடுத்து மருத்துவ கல்லூரியில் சேர முயற்சி செய்த 10 மாணவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த மாணவர்கள்மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். அரசு தேர்வுத்துறைஇயக்ககத்திற்கு இந்தச் சான்றிதழ்களை அனுப்பியபோதுதான் மதிப்பெண் சான்றிதழ்களில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    இதைப்போலவே கடந்த ஆண்டு (2011) ஜூலை மாதம் 4-ம் தேதி பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கவுன்சிலிங் தொடங்கியது. அங்கும் 41 மாணவர்கள் போலி மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைப்போலவே இருப்பிடச் சான்றிதழ், சாதி சான்றிதழ் போன்றவைகளும் போலியாகத் தயாரிக்கப்பட்டு பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்காக மாணவ – மாணவிகள் மேற்கொண்ட முயற்சிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
    “தவறு என்று தெரியாமல் மோசம்போய் எங்கள் வாழ்க்கையைப் பறிகொடுத்துவிட்டோம்” என்று போலி மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பித்த 8 மாணவிகள் கண்ணீர்விட்டு போலீசாரிடம் கதறி அழுதார்கள். இந்த 8 மாணவிகளும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பிளஸ்-2 தேர்வில் 1000 மதிப்பெண்களுக்குமேல் பெற்றவர்கள். “டாக்டர் ஆகவேண்டும்” என ஆசையில் தங்கள் தேர்வுத்தாளை “மறுமதிப்பீடு” செய்ய விண்ணப்பித்தார்கள். அப்போது அவர்களோடு தொடர்புகொண்ட “மர்ம மனிதன்” ஒருவன் “மறுமதிப்பீடு சான்றிதழ்” கிடைக்க கால தாமதம் ஆகும் என்றும், பணம் கொடுத்தால் ஒரே வாரத்தில் சான்றிதழ் வாங்கித் தருவோம் என்றும் உறுதியாகச் சொன்னான். இதை நம்பிய மாணவிகளின் பெற்றோர் அந்த மர்ம மனிதனிடம் 10 ஆயிரம் முதல் ஏராளமான பணத்தையும் கொடுத்தார்கள். “மறுமதிப்பீட்டுச் சான்றிதழ் பொய்யானது” என தெரியாமல் அவர்கள் மேற்படிப்புக்கு விண்ணப்பம் செய்தார்கள். திருநெல்வேலி, சேலம், புதுச்சேரி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர் எனப் பல பகுதிகளைச்சேர்ந்த இந்த மாணவிகள் அனைவரும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    பிளஸ்-2 விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யும்போது அலுவலகத்தைச் சாராத பலர் தேர்வுத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள்போல நடிக்கிறார்கள். சிலர் புரோக்கர்போலவும் செயல்படுகிறார்கள். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை இவர்கள் தனித்தனியாகச் சந்திக்கிறார்கள். “நாங்கள் கேட்கும் பணம் தந்தால் உங்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்குவோம்” என்று ஆசை வார்த்தைகள் கூறுகிறார்கள். ஆனால் பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் இவர்கள் போலி சான்றிதழ்கள்தான் தருவார்கள் என்பது தெரியாததால் இந்த மோசடியில் இவர்கள் சிக்கிக்கொண்டார்கள்.
    மாணவ – மாணவிகள் இத்தகைய முறைகேடுகளில் சிக்கியது எப்படி? என்றவிவரம் தெரியும்போது அதிர்ச்சியும், ஆச்சரியமும்தான் நமக்கு காத்திருக்கிறது.
    இந்த மோசடி குறித்து அரசு தேர்வுத்துறைஇயக்குனர் கருத்து தெரிவிக்கும்போது – “சான்றிதழ் மோசடி என்பது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும். மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்த சில மாணவர்கள் முதலிலேயே போலி மார்க் பட்டியலைத்தான் சமர்ப்பித்துள்ளனர். அதை மருத்துவத் தேர்வுக்குழு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 10 சான்றிதழ்கள் போலியாக இருப்பதாக தெரிவித்தனர். இந்த ரகசியம் வெளியே தெரிந்தால் அந்த மாணவர்களின் ஒரிஜினல் சான்றிதழை நாங்கள் கைப்பற்றமுடியாது. அதனால்தான் கவுன்சிலிங்குக்கு வரும்வரை காத்திருந்தோம். போலிச் சான்றிதழ் விவகாரத்தில் ஈடுபட்ட மாணவி ஒருவரின் தந்தை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து புதிய மதிப்பெண் சான்றிதழ் பெற்றிருக்கிறார். போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரிப்பு தொடர்புடைய அத்தனைபேர்மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” – என்றும் குறிப்பிட்டார்.
    பிளஸ்-2 தேர்வு எழுதும்போது ஆள்மாறாட்டம் நடைபெறாமல் இருப்பதற்கு புகைப்படம் ஒட்டிய “ஹால் டிக்கெட்” மாணவ – மாணவிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தப் புகைப்படத்தை மாற்றிவிட்டு வேறு ஒருவரின் புகைப்படத்தை ஹால் டிக்கெட்டில் ஒட்டி ஆள்மாறாட்டம் செய்ததை சமீபத்தில் கண்டுபிடித்தார்கள்.
    ஆள்மாறாட்டம், போலி மதிப்பெண் பட்டியல் போன்ற“போலி”களைத் தடுப்பதற்குப் பள்ளிக் கல்வித் துறையினர் பல நடவடிக்கைகளை இப்போது மேற்கொண்டு வருகிறார்கள். ஆள்மாறாட்டம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்ததால் தற்போது பிளஸ்-2 தேர்வின்போது ஹால் டிக்கெட்டில் தேர்வு எழுதும் மாணவர்களின் புகைப்படத்தை ஸ்கேன் செய்து கொடுத்தார்கள். அதே படத்தை “ஸ்கேன்” செய்து பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழில் சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
    இதன்படி, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழில் இரண்டு இடங்களில் இரகசிய அடையாளங்களாக “பார் கோடுகள்” (Bar Code) உள்ளன. இதன்மூலம் மாணவ – மாணவிகளின் பெயர், பிறந்த தேதி, பாடவாரியாக பெற்றமதிப்பெண்கள், படித்த பள்ளி, மாணவரின் கையொப்பம் போன்றஅனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். இவ்வளவு பாதுகாப்பு வசதிகள் இருப்பதால் ஆள்மாறாட்டம் செய்வதற்கு வழியில்லை.
    இத்தகைய புதிய மாற்றத்தினால் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரித்து வழங்குவதற்கான வாய்ப்புகளும் மிகவும் குறைவாக உள்ளன.
    அண்ணா பல்கலைக்கழகம் இந்த வருடம் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேராமல் இருப்பதற்கு புதிய நடைமுறைகளை கடைபிடிக்க உள்ளது. அதாவது – மாணவர்கள் சமர்ப்பித்த பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழை ஏற்கனவே அரசு தேர்வுகள் துறைஅனுப்பிய மதிப்பெண் பட்டியலோடு ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். இரண்டு மதிப்பெண்களும் சரியாக இருக்கிறதா? என்பதை ஆய்வுசெய்வார்கள். அப்போது மதிப்பெண்களில் வித்தியாசம் இருந்தால் அந்த சான்றிதழ் போலி மதிப்பெண் சான்றிதழ் என அடையாளம் காணப்பட்டு உடனே தக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளார்கள். இந்த இரண்டு மதிப்பெண்களும் சரியாக இருந்தால் மட்டுமே பொறியியல் கல்லூரியில் மாணவ – மாணவிகளைச் சேர்த்துக்கொள்கிறார்கள்.
    அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்களை மட்டுமே மருத்துவ கல்லூரிகளிலும் சிறந்த பொறியியல் கல்வியை வழங்கும் நிறுவனங்களிலும் சேர்த்துக் கொள்கிறார்கள் என்பதால் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களும் குறுக்கு வழிகளில் மதிப்பெண்களைப் பெறமுயற்சி செய்கிறார்கள். இத்தகைய முறைகேடான செயல்களில் பெற்றோர்கள் ஈடுபடுவதற்கு அவர்களின் பிள்ளைகளின் பிடிவாதமும் சில பெற்றோர்களின் வினோத ஆசையும்தான் காரணமாக அமைகிறது.
    “நான் படிக்கவில்லை. என் பிள்ளையை எப்படியாவது படிக்க வைக்கவேண்டும்” என்று பெற்றோர்கள் ஆசைப்படுவது தவறில்லை. ஆனால் அதேவேளையில் தேவையான மதிப்பெண்களைப் பெறாத தங்கள் பிள்ளைகளை அவர்களின் மதிப்பெண் தகுதிக்கு ஏற்றமேற்படிப்பில் சேர்க்காமல் குறுக்கு வழிகளில் ஆசையை நிறைவேற்றமுயலுவது முடிவில் அவஸ்தையை உருவாக்கிவிடும்.
    கல்வித் துறையில் முறைகேடான செயல்களில் ஈடுபடுபவர்களுக்குத் தக்க தண்டனை உரிய நேரத்தில் கிடைக்கும்” – என்பதை உணர்ந்து செயல்பட்டால் வாழ்க்கையில் தவறுகளைத் தவிர்த்துவிடலாம்.
    எனவே – மதிப்பெண் சான்றிதழ்களில் மதிப்பெண்களைத் திருத்தும் தவறுகள் நடக்காமல் இருப்பதற்குப் பெற்றோர்கள் – மாணவர்கள் – கல்வித்துறைஅலுவலர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
    “திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால்
    திருட்டை ஒழிக்க முடியாது” – என்பது ஒரு புகழ்பெற்றபாடல் வரிகளாகும். இந்த இனிய பாடல் வரிகளை மனதில்கொண்டு தவறு செய்ய முயற்சி செய்பவர்கள் அந்தத் தவறைநிறுத்திக்கொண்டால் மட்டுமே பாதுகாப்பு நடவடிக்கைகள் பலன்தரும். அப்போதுதான் கல்வித்துறைக்கு போலி மதிப்பெண் சான்றிதழ்களால் ஏற்பட்ட களங்கமும் துடைக்கப்படும்.
    தொடரும்.

    சாதிக்கலாம் வாங்க

    2012ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக அளவில் 6வது ரேங்க் பெற்று சாதனை புரிந்துள்ளார் திரு. பிரசன்ன வெங்கடேஷ். தன்னுடைய அம்மா இறந்த 3 நாட்களில் முதன்மைத் தேர்வை எதிர்கொண்டு இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார்.
    எப்படி முடிந்தது இந்தச் சாதனை… இதற்காகப்பட்ட கஷ்டங்கள் என்னென்ன… இது எத்தனை ஆண்டு கனவு… என்று பல்வேறு கேள்விகளை முன் வைத்தபோது அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டதிலிருந்து….

    ஐ.ஏ.எஸ். என்றஇலக்கை எப்போது முடிவு செய்தீர்கள்?
    ஐ.ஏ.எஸ். என்ற இலக்கை என் மனதில் பதியம் போட்டு வளர்த்தது என்னுடைய அப்பா வெங்கட்ராமன் அவர்கள் தான். நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே ஐ.ஏ.எஸ். என்றகனவை என்னுள் அவர் விதைத்தார். தற்போது அவரின் கனவு நனவாகி உள்ளது. “நீ என்னவாக ஆக வேண்டும் என நினைக்கிறாயோ, அதுவாகவே நீ ஆவாய்” என்ற விவேகானந்தரின் சொற்களுக்கு ஏற்ப என்னுடைய கனவான ஐ.ஏ.எஸ். தற்போது நனவாகி உள்ளது.
    ஐ.ஏ.எஸ். என்ற இலக்கு நோக்கிய பயணத்தில் தங்களின் முன் தயாரிப்பைப் பற்றி…
    திருச்சியில் பிளஸ் 2 முடித்த பிறகு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. அக்ரி எடுத்து படித்தேன். அக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் பலர் ஏற்கனவே ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன். அவர்களுடைய வெற்றி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட நிகழ்வுகள் பல எங்கள் பல்கலையில் நடந்தது. அவர்களின் அனுபவங்கள் எனக்கு ஒரு உத்வேகத்தைத் தந்தது. அவர்களின் பேச்சுக்கள் எனக்குள் இருந்த ஐ.ஏ.எஸ். என்ற தீயை தூண்டிவிட்டது. ஐ.ஏ.எஸ். தேர்வை எப்படி எதிர்கொள்வது? எத்தகைய முன் தயாரிப்புகளை மேற்கொள்வது? எப்படி பயிற்சி செய்வது? என்றபல கேள்விகளுக்கு விடையாகக் கிடைத்தது அவர்களின் பேச்சுக்கள். அவர்களின் வழிகாட்டுதல் படி பாடங்களைத் தேர்வு செய்து படித்தேன்.
    தங்களின் வெற்றிக்கு ‘இன்ஸ்பரேசன்’ என்று யாரைக் குறிப்பிடுவீர்கள்?
    என்னுடைய ‘இன்ஸ்பரேசன்’ என்றால் திரு. சைலேந்திரபாபு, ஐ.பி.எஸ்., திரு. இறையன்பு, ஐ.ஏ.எஸ். மற்றும் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர் திரு. டி. சங்கர் அவர்கள் தான். திரு. சைலேந்திரபாபு, ஐ.பி.எஸ். மற்றும் திரு. இறையன்பு ஐ.ஏ.எஸ். போன்றவர்களின் ‘மோட்டிவேசன் ஸ்பீச்’ எனக்குத் தன்னம்பிக்கையைத் தந்தது. குறிப்பாக, திரு. சங்கர் அவர்களின் வழிகாட்டுதல்கள் எனக்கு பெரிய உந்து சக்தியாக இருந்தது. ‘உன்னால் முடியும்’, ‘நீ இதைச் சாதிப்பாய்’ என்று கூறி தன்னம்பிக்கையையும், ஊக்கத்தையும் கொடுத்தவர் திரு. சங்கர் அவர்கள்.
    தமிழ் வழியில் படித்த நீங்கள் தேர்வை எதிர்கொள்ளும்போது கடினமாக இருந்ததாக உணர்ந்தீர்களா?
    என்னைப் பொறுத்த அளவில் மொழி ஒரு பிரச்சனையே இல்லை. முடியும் என்ற எண்ணமும், சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தால் போதும். எந்த மொழியில் கல்வி கற்றிருந்தாலும் வெற்றி பெறமுடியும். முயற்சியும், பயிற்சியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு நானே உதாரணமாக இருக்கிறேன்.
    வேளாண்மைக் கல்வி கற்ற நீங்கள் பொது நிர்வாகம் மற்றும் புவியியல் பாடங்களை விருப்பப் பாடங்களாக எடுத்து எப்படிச் சாதிக்க முடிந்தது?
    ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்டிப்பாக பொது நிர்வாகத்தைத் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் பொது நிர்வாகத்தைத் தேர்ந்தெடுத்தேன். இரண்டு மாதங்கள் மட்டுமே இந்தப் பாடத்தை படித்துத் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். புவியியல் தேர்விற்குக் காரணம் திரு. சங்கர் அவர்களின் வழிகாட்டுதல். மிக எளிமையாகக் கற்றுத்தந்தார். அவரின் தொழில்நுட்ப வழிகாட்டல் தான் அந்தப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறஉதவியது. என்.சி.ஆர்.டி. ருபான்ற மத்திய அரசு வெளியிடும் நூல்கள் புவியியல் பற்றிய புத்தகங்கள் மற்றும் ஹிந்து ஆங்கில நாளிதழ் போன்றவை உதவின. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடப் புத்தகங்களைப் படித்ததால் ஒரு Basic Idea கிடைத்தது.
    எப்படி முதன்மைத் தேர்வை எதிர்கொண்டீர்கள்?
    ஒவ்வொரு வெற்றிக்கும், சாதனைக்கும் உந்துசக்தியாக விளங்கிய என்னுடைய அம்மா மஞ்சுளா அவர்கள் முதன்மைத் தேர்விற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் இறந்து விட்டார். அதுவும் தவிர எனக்கு 1000F காய்ச்சல். இத்தகைய கடினமான சூழ்நிலை ஒருபுறம். எப்படியாவது இந்தத் தேர்வை எழுதி சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் மற்றொரு புறம்.
    பெரிய மனப்போராட்டத்திற்கு இடையே முதன்மைத் தேர்வை எதிர்கொண்டேன். இறுதியில் வெற்றியாக முடிந்தது. எனக்கு கிடைத்த இந்த வெற்றிக்கு இடையூறாக இருந்த தடைகளை எல்லாம் வெற்றிப் படிக்கற்களாக மாற்றி வெற்றி பெற்றிருக்கிறேன் என்றால் அதற்கு என் அம்மாவின் ஆசி தான் காரணம் என்று நினைக்கிறேன். திடமான மனத்தையும், தன்னம்பிக்கையையும் என்னுடைய அம்மா எனக்குக் கற்றுக்கொடுத்திருந்ததால் மெயின் தேர்வில் என்னால் வெற்றி பெறமுடிந்தது.
    நேர்முகத் தேர்வை எப்படி எதிர்கொண்டீர்கள்?
    நேர்முகத் தேர்வில் வெற்றி பெற அர்ப்பணிப்பு உணர்வும், ஆளுமைத் திறனும் வேண்டும். பன்முகத் தன்மையைப் பரிசோதிக்கும் களமாகவே நேர்முகத் தேர்வு இருக்கும். அதைப்போலவே தான் எனக்கும் இருந்தது. நேர்முகத் தேர்வில் நான் எதிர்கொண்ட கேள்விகளில் முக்கியமானது, வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வறுமையின் பிடியிலேயே இருக்கக் காரணம் என்ன? அதைத் தீர்ப்பதற்கு என்ன வழி? என்னுடைய பதிலாக, “இத்தகைய பிரச்சனைக்குக் காரணம் இடைத்தரகர்கள் தான். உற்பத்தியில் பங்கு கொள்ளாத அவர்களுக்குத் தான் இலாபத்தில் பெறும் பகுதி செல்கிறது. அத்தகைய இடைத்தரகர்களின் தலையீட்டை குறைத்தால் மட்டுமே இத்தகைய பிரச்சனைகளைச் சரிசெய்ய முடியும்.
    ஒரு பக்கம் தானியங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம் மக்கள் பசியுடன் இருக்கிறார்கள். இவர்களுக்கு இடையே ஒரு பாலமாகவும், ஒரு தொடர்பாளனாகவும் (Link) நான் இருந்து இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைப்பேன்” என்று கூறினேன்.
    மற்றொரு கேள்வி, விவசாயிகளின் தற்கொலை பற்றியது. “சரியான விலைக்கொள்கை இல்லாததது தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளக் காரணம்.
    உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு ஏற்றவிலை நிர்ணயம் செய்ய வேண்டும். விளைச்சலுக்குச் சரியான விலை நிர்ணயம் செய்தால் இத்தகைய தற்கொலைகளைத் தடுக்கலாம்” என்பதை என்னுடைய பதிலாகக் கூறினேன்.
    இப்படிப் பல கேள்விகள் நடைமுறையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்கத் தேவையான தீர்வுகளை முன்வைத்தே அமைந்தது.
    இந்தச் சாதனைக்குப் பின்னால் இருந்தவர்களைப் பற்றி…
    என்னுடைய சாதனைக்கு உறுதுணையாக இருந்தது சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர் திரு. சங்கர் அவர்கள். மற்றொரு பக்கபலம் என்னுடைய சகோதரர் திரு. அம்சராஜன். பொருளாதாரத்திலிருந்து பல வகையிலும் எனக்கு உதவியவர். நான் சோர்வடையும் போதெல்லாம் தோள் கொடுத்து என் கஷ்டங்களில் பங்கெடுத்துக் கொண்ட எனது நண்பர்கள் பாலா, ஐயப்பன், பார்வதி. இவர்களின் நம்பிக்கை தரும் வார்த்தைகள் மற்றும் உதவிகளே என் வெற்றிக்குக் காரணம். இவர்களையெல்லாம் இப்போது நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.
    எதிர்காலத்தில் சமுதாயத்திற்கு தங்களின் பங்களிப்பு எப்படிப்பட்டதாக இருக்கும்?
    இந்த நாடு தான் எல்லாவற்றையும் எனக்குக் கொடுத்தது. இந்த நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் முடிந்தவற்றைச் செய்ய வேண்டும். என்னுடைய படிப்பு இந்த நாட்டிற்காகத்தான் பயன்பட வேண்டும் என்பது தான் என் இலட்சியம். குறிப்பாக, விவசாயத்தை மேம்படுத்தி விவசாயிகளின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும். சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் கல்விக்காக பாடுபட வேண்டும். இதுவே என்னுடைய எதிர்கால இலக்காக இருக்கும்.
    ஐ.ஏ.எஸ். எழுதக் காத்திருப்போருக்கு தாங்கள் கூறுவது…
    நம்மால் முடியும் என்ற மன நிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு விடாமுயற்சியுடன் முழுமையாகத் தயாரானால் நீங்களும் ஒரு ஐ.ஏ.எஸ். தான்.

    நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்

    சென்ற இதழில், நான்காம் வகையைச் சேர்ந்த தடிப்புத்தன்மை உடையோர் / உடற்கூறுடையோர் (Obesity Type IV) பற்றி விளக்கத் தொடங்கியிருந்தேன்.
    அதிகமான அளவு உணவு கொள்ளுவதால் மட்டும் கொடிய நோய்கள் வருவதில்லை. ஆனால், சிறுநீர் போதிய அளவிற்குக் கழிக்காமல் இருப்பதுதான் அத்தகைய நோய்கள் வருவதற்கான காரணங்கள் என்று விளக்கியிருந்தேன்.
    ஒவ்வொரு நாளும் 2 அல்லது 3 முறைகள் மட்டுமே சிறுநீர் கழிப்போர் வெகு விரைவில் தடித்த உடலையும் அதனைச் சார்ந்துள்ள பற்பல நோய்களையும் பெறுவார்கள் எனவும், இவையெல்லாம் கழிக்கப்படும் சிறுநீரின் அளவை ஒட்டித்தான் தோன்றும் எனவுங்கூடக் கூறியிருந்தேன்.
    நிறையத் தண்ணீரைக் குடித்துவிட்டு (ஏறத்தாழ 3 அல்லது 4 லிட்டர் அளவு). ஒவ்வொரு நாளும் 2 அல்லது 3 தடவைகள் மட்டும் சிறுநீர் கழிப்போர்க்கு, வெகு விரைவில் (ஐந்து ஆண்டுகளைப் போல) இனிப்பு நீர் நோய் மட்டும் வரும் என எனது 38 ஆண்டுகால ஆய்வின் வழி கண்டுபிடித்துள்ளேன்.
    இரண்டாம் வகை இனிப்பு நீர் நோய்க்கும் (Type-2, Non-insulin Dependent Diabetes Mellitus) இனிப்பான உணவுகளை அல்லது சீனி-சர்க்கரையை மிக அதிகமாக உண்பதற்கும், உறுதியாக, மிக மிக உறுதியாக, எந்தத் தொடர்பும் கிடையாது.
    குறைவாக சிறுநீர் கழிப்பது மட்டுமே இனிப்பு நீர் நோய்க்கான காரணி என்பதை நான் ஐயத்திற்குச் சிறிதும் இடமில்லாதவாறு கூறுவதாக எடுத்துக் கொள்ளுங்கள்.
    மாறாக, மிக மிக அதிகமாக எந்த நேரமும் இனிப்புக்களையே உண்போர்க்கு முதலாம் வகையான (Type-1, Insulin Dependent Diabetes Mellitus) இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டிய இனிப்பு நீர் நோய் மட்டுமே வரும். இதனையும் உறுதிபடக் கூறுகிறேன்.
    யார் ஒருவர் தண்ணீரை மிகக் குறைவாகக் குடிக்கிறாரோ, அவர் குறைவாகத் தான் சிறுநீர் கழிப்பார். போதிய தண்ணீர் உடலில் இல்லாத காரணத்தால், போதிய சிறுநீர் உண்டாகாது. எனவே, அவரும் ஒவ்வொரு நாளும் இரண்டு, மூன்று முறை மட்டுமே சிறுநீர் கழிப்பார்.
    இத்தகையோருக்கு, இரண்டாம் வகை இனிப்பு நீர் நோயும், கூடவே மாரடைப்பும் (Heart Attack) உறுதியாக உண்டாவதை எனது ஆய்வின் வழி, புள்ளியியலுக்கு ஏற்ப (to a statistically significant level) கண்டுபிடித்துள்ளேன்.
    நிறையத் தண்ணீர் குடித்துவிட்டுக் குறைவாகச் சிறநீர் கழிப்போர்க்கு மாரடைப்பு உண்டாவதில்லை.
    இன்னொரு விவரம் என்னவெனில், புற்றுநோய் மட்டும் மேற்குறிப்பிட்ட இரு சாரார்க்குமே, சிறு வேறுபாடுகளோடு தோன்றக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
    நீரை நிறையக் குடித்துவிட்டுச் சிறுநீர் குறைவாகக் கழிப்போர்க்கு, பெரும்பகுதி, புற்றற்ற நீர்க்கட்டிகள் தாம் (Benign Cyst) தோன்றுவதாகத் தெரிகிறது. இவை வெகு விரைவாக, இரண்டொரு ஆண்டுகளுக்குள்ளேயே கூடத் தோன்றிவிடுகின்றன.
    நீரும் குடிக்காமல் சிறுநீரும் கழிக்காமல் இருப்போர்க்குப் புற்றுக்கட்டிகள் விரைவில் தோன்றுகின்றன. இவை நிகழ, ஏழெட்டு ஆண்டுகள் கூட ஆகலாம்.
    இவற்றையெல்லாம்விட மிகக் கொடுமையான நோயாகிய குட்டநோய் (Leprosy) யார் ஒருவர் கொஞ்சங்கூடத் தண்ணீர் குடிக்காமலும் சிறிதுகூடச் சிறுநீரே கழிக்காமலும் இருக்கிறாரோ அவருக்குத்தான் ஏற்படுகின்றது.
    உடம்பினுள் உள்ள, மிகைப்படும் சுண்ணாம்பு உட்பட ஏனைய கழிவுப்பொருட்களும் நஞ்சுகளும் அவ்வப்போது வெளியேறாக் காரணத்தால், அவை உடலினுள்ளேயே மிகக் கெட்டியாகிவிடுகின்றன. இவற்றை உடம்பை விட்டு வெளியேற்றுவதற்காகவே மூளைக்குத் தென்படும் ஒரே வழி, மென்மையான சதைப் பகுதிகளை அழுகவைத்து, அவற்றின் வழி வெளியேற்றுவது தான். அதைத்தான் நாம் குட்டம் என்கிறோம்.
    இந்தக் குட்டம் உண்டான பிறகு, அழுகிவிட்ட சதையை உண்பதற்காக உடலுக்கு வெளிப்புறத்தில் இருந்து குடியேறும் பேக்டீரியாதான் மைக்கோபாக்டீரியம் லெப்ரே ஆகும்.
    உண்மை இவ்வாறு இருக்க, இதுவரை மருத்துவத்துறையில் இந்த பேக்டீரியாக் கிருமிதொற்றுவதால் தான் குட்டம் ஏற்படுகிறது என்று தவறுதலாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
    சிறுகுடலில் அமிலத்தின் காரணமாகப் புண் (Duodenal Ulcer) ஏற்பட்ட பிறகு, அந்தக் காயத்தில் உள்ள சதையை உண்பதற்காகத்தான் ‘ஹெட்ச் பைலோரி’ (Helicobactor Pylori = H) எனும் பாக்டீரியாக்கிருமி அங்கு வந்து சேருகிறது.
    இதனையே, மிகவும் தவறுதலான புரிந்துணர்வின் காரணமாக, இந்த பேக்டீரியாதான் குடற்புண் தோன்றுவதற்கான காரணம் என்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரு மருத்துவ ஆய்வு நிபுணர்களான பேர்ரி ஜே. மார்ஷல் என்பவரும் (Barry J. Marshall) ஜே. ராபின் வார்ரன் (J. Robin Warren) என்பவரும் அறிவியல் நூற்களின் வழி ஆழமாகச் சிந்திக்காமலேயே அறிவித்துவிட்டனர்.
    இதில் வியப்பிற்குரியது யாதெனில், அவ்விருவருக்கும் 2005ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசையும் ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் வழங்கிவிட்டார்கள்.
    அதனைத் தொடர்ந்து உங்களில் யாராவது குடற்புண்ணுக்காகவென மருத்துவம் பார்த்துக் கொள்ள இப்போது போவீர்களானால், உங்கள் ஊரில் உள்ள மருத்துவர்கள் கூட, பெரும்பாலும் ‘உயிர்க்கொல்லி நச்சு மருந்தைக்’ (Anti-biotics) கொடுத்துவிட்டுத்தான் அமில முறிவு மருந்தையும் கொடுப்பார்கள்.
    குடற்புண் எவ்வாறு பாக்டீரியாக் கிருமிகளால் உண்டாவது இல்லையோ, அதேபோல குட்டநோயும் பாக்டீரியாவால் தோன்றுவது இல்லை. குட்டநோய் உடையவரது மனைவியோ கணவனோ நிறைய நீர் குடித்துச் சிறுநீரும் நன்றாகக் கழிப்பவராக இருந்தால், அவருக்குக் குட்டநோய் ஒருபோதும் தோன்றாது. ஏனெனில், அது தொற்று நோய் அல்லஙு
    கால்சியம் எனும் சுண்ணாம்பை நமது உடலினுள் கூடுதலாகச் சேர விடாமலும் சார விடாமலும் இருப்போமேயானால், புற்றற்ற கட்டி ஒருபோதும் புற்றுநோயாக மாறாது என்பதை நிரூபிப்பதற்காக நானே எனது உடம்பினுள் புற்றற்ற கட்டி ஒன்றினை உருவாக்கி, அது 12.5 ஷ் 12.2 செ.மீ. வரை வளர்ந்த பிறகுங்கூட புற்றுநோயாக மாறாமல் இருந்தது என்பதை அண்மையில் மெய்ப்பித்தேன். (இதனைப் பற்றிய உண்மை வரலாற்றை, அறுவை மருத்துவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்களோடு, விரிவாக வேறொரு வழியில் விளக்குகிறேன்).
    அதேபோல குட்டநோய் உள்ள ஒருவரது… லெப்பர் பாக்டீரியாக்கள் எனது உடலினுள் செலுத்திக் கொண்டு நான் எப்போதும் வாழ்ந்துவரும் வழக்கப்படி நந்நீரையும் இரண்டு லிட்டர் அளவு குடித்துக்கொண்டு, எட்டுப் பத்துத் தடவைகள் சிறுநீரையும் கழித்துக்கொண்டு, எனக்கு குட்டம் தோன்றவில்லை என்பதை மெய்ப்பிக்க நான் தயாராக உள்ளேன்.
    மேலுள்ள விவரங்கள் யாவும் உண்மை என்பதைத் தெளிவுபடுத்தும் பொருட்டே நான் இதனை இவ்வளவு ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றேன்.
    “சொல்லுதல் யார்க்கும் எளிது, அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்” எனும் குறளின் பொருளை உணர்ந்த நிலையில் தான் இவ்வாறு சூளுரைக்கின்றேன்.
    தொடரும்…

    உங்கள் பிள்ளைகள் புத்திசாலிகளாக வேண்டுமா?

    நாம் நம் குழந்தைகளைப் பள்ளக்கு அனுப்புவது அறிவாளயாக்கவா அல்லது புத்திசாலியாக்கவா என்று தெரியுமா? அன்பு பெற்றோர்களே! நம் குழந்தைகளை நாம் எப்படி உருவாக்க வேண்டும் என்பதில் ஒரு தௌவான நிலைப்பாட்டை எடுக்க அறிவாளத்தனத்திற்கும் புத்திசாலித்தனத்திற்கும் உள்ள அடிப்படையான வேறுபாட்டுத் தன்மைகளை முதலில் பார்ப்போம்.
    அறிவாளத்தனம் / புத்திசாலித்தனம்
    அறிவு என்பது வெறும் படிப்பு (Theortical) மற்றும் படிப்பித்தலில் (Instructional) கிடைக்கும் தகவல் (Information) தொகுப்பாகும். இதைக் கொண்டு தன் சுய அனுபவத்தால் உண்டான காரண அறிவைத் தர்க்க ரீதியாக கையாண்டு வாழ்க்கை முடிவுகளை எடுப்பது அறிவாளத்தனமாகும்.
    புத்தி என்பது செயல்பாட்டிலும் (Practical) அனுபவத்திலும் (Experiencial) கிடைக்கும் புரிதல் தன்மையாகும். அதாவது, தன் சுய அனுபவம் மற்றும் அடுத்தவர் அனுபவத்திலிருந்து உணர்தல் (புரிதல்) அடிப்படையில் வாழ்க்கை முடிவுகளை எடுப்பது புத்திசாலித்தனமாகும்.
    அறிவாளயாக பணம் இழப்பு, கால விரையம், அதிக உழைப்பு, மற்றும் வேண்டாத அனுபவ பாதிப்புகள் ஆகியவைகளுக்கு ஆட்பட வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு விழிப்புணர்வற்ற அனுபவக் குப்பையாக இருக்கும்.
    புத்திசாலியாக இதெல்லாம் தேவையே இல்லை. அடுத்தவர் வாழ்க்கை அனுபவத்தை விருப்பு வெறுப்பு இன்றி சுயமாகப் புரிந்து கொண்டு செயல்பட்டால் போதுமானது. வாழ்க்கை ஒரு விழிப்புணர்வான ஆனந்தமான அனுபவமாக இருக்கும்
    அறிவாளக்கு அறிவுரைகள் தேவைப்பட்டாலும் அது கசக்கவே செய்யும். அறிவுரையை விட்டுவிட்டு அறிவுரை சொன்னவரை ஆராய்ந்து, விமர்சனம் செய் ஆரம்ப்பித்துவிடுவர்.
    புத்திசாலிக்கு அறிவுரைகள் தேவையில்லை. வழிகாட்டுதலும் முன்னுதாரணங்களும் தந்தால் போதும். சொன்னது யார் என்று பார்ப்பதைவிட சொன்னது என்ன என்பதற்கு முக்கியத்துவம் தருவர்.
    அறிவாளக் குழந்தைகளை நாம் வாழும் வரைதான் பாதுகாத்து, காப்பாற்றமுடியும். நமக்குப் பிறகு நம் பாரம்பரியத் தன்மை (Legacy), சொத்து மற்றும் நற்பெயர் ஆகியவை காப்பாற்றப்படும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை.
    புத்திசாலிக் குழந்தைகள் தங்களையும், நம்மையும், நம் பாரம்பரியத் தன்மை மற்றும் நற்பெயரை நமக்குப் பிறகும் பாதுகாத்து மேம்படுத்துவர்.
    அறிவாளத்தனத்தால் தன் முனைப்பு, அகந்தை (Ego), மற்றும் ஆணவம் அதிகப்பட்டு, மற்றவர்களை விட நாம் எவ்வளவோ தேவலாம் என்றநினைப்பால் மேம்பாடடைவதை நிறுத்தி, வாழ்க்கையை ஓட்டுவர்.
    புத்திசாலித்தனத்தால் விருப்பு வெறுப்பு விடுத்து, ஒழுக்க முறைகளைக் கடைபிடித்து, தன்னம்பிக்கை வளர்த்து, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கி மேம்பட்ட வாழ்க்கையை வாழ முற்படுவர்.
    அறிவாள பழுத்த அனுபவஸ்தராகி எப்படி வாழக்கூடாது என்பதற்கு முன்னுதாரணமாவார். இதனால் தன் நஷ்டம் புத்திசாலிக்குப் பாடமாகிறது.
    புத்திசாலி பண்பட்ட ஞானியாகி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகி, தானும் மற்றவர்களும் பலனடைவார்கள்.
    அறிவாள தோல்வி அடையாமல் பார்த்துக் கொள்வதிலேயே கவனமாக இருந்து இறுதியில் மிகப் பெரிய தோல்வியை சந்திப்பார்.
    புத்திசாலி தற்காலிகத் தோல்விகளை மனப்பூர்வமாக ஏற்று அவற்றில் பாடம் கற்று, இறுதியில் மிகப் பெரிய வெற்றியை அடைவார்.
    அறிவாளகள் புத்திசாலிகளைத் தவிர்க்க முற்படுவர்.
    புத்திசாலிகள் அறிவாளகளைப் பயன்படுத்திக் கொள்வர்.
    உண்மையில் இன்றைய அநேக பள்ளகள் நம் குழந்தைகளை அறிவாளயாக்கி வேலைக்குதான் தயார்படுத்துகின்றன. அப்படி அவர்கள் நம் பிள்ளகளைத் தயார்படுத்துவதன் மூலம் அவர்கள் புத்திசாலித்தனமாக பணம் சம்பாதிக்கிறார்கள். அப்படி நம் பிள்ளைகள் பெற்ற அறிவைக் கொண்டு இன்னொரு புத்திசாலியிடம் வேலைக்குத்தான் போக முடியும். ஆனால், நம் குழந்தைகளை நாம் புத்திசாலிகளாக உருவாக்கினால், அவர்கள் பல அறிவாளகளுக்கு வேலை கொடுத்து சிறப்பாக வாழ்வார்கள். ஆகவே, நம் குழந்தைகளை அதிகம் படிக்க வைத்து அறிவாளகளாக்குவதை விட புத்திசாலிகளாக ஆக வழிகாட்டினால் அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள்.
    படிக்காத பெற்றோர்கள் நாம்தான் படிக்க வில்லையே நம் பிள்ளைகளாவது படித்து வாழ்க்கையில் நம்மை போல் அல்லாமல் பெரிய நிலைக்கு வரட்டுமே என்று பிள்ளைகளைப் படி படி என்று கண்டிப்பு காட்டி வருத்தெடுப்பதும் உண்டு. நன்கு படித்த பெற்றோர்களோ நாம் நன்றாகப் படித்தும் செல்வச் செழிப்பை காண முடியவில்லையே என்று தங்கள் பிள்ளைகளைத் தொழில் செய்ய கட்டாயப்படுத்தி, அதற்குத் தயாராகாத பிள்ளைகளை வீண் செய்துவிடுவதும் உண்டு. நாம் பார்த்த இந்த இரண்டுமே அவரவர் பார்வையில் சரி அல்லது தவறாகப் படலாம்.
    நாம் பார்த்த இரு வேறு வழிகளல் எது சரி என்று தெரிந்து கொள்ள, நம் இரு குழந்தைகளை இரு வேறு விதங்களல் வளர விட்டு எது சரிபடுகிறது என்று பார்க்கவா முடியும்? ஆக, இது சாத்தியமில்லை. அதே சமயம், எது வேலைக்கு ஆகும் என்று தெரிந்து கொள்ள நம்மோடு ஒன்றாக படித்தவர்களல், வாழ்ந்தவர்களல் எப்படிப்பட்ட தன்மைகளைக் கொண்டவர்கள் இப்பொழுது வாழ்க்கையில் எப்படி வளர்ந்திருக்கிறார்கள் என்பதை விருப்பு வெறுப்பு இன்றி ஆராய்ந்து பார்ப்போமேயானால், நமக்கு ஒரு உண்மை புரிய வரும். அந்த உண்மை என்னவென்றால், அதிக படிப்பாளயாக, அறிவாளயாக இருந்தவர்களைவிட யதார்த்தவாதிகளாக, புத்திசாலிகளாக இருந்தவர்கள்தான் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளைக் குவித்துள்ளனர் என்பதை உணர முடியும்.
    நம் குழந்தைகளை வெறும் அறிவாளயாக்கி நம் அறிவுரைகளைக் கேட்டு நடக்கச் செய்து, நம்மைச் அதிகம் சார்ந்து இருக்கச் செய்யும் பட்சத்தில், வெற்றி பெற்றால் அது அவனால் வந்தது என்றும், தோல்வி என்றால் அது நம்மால் ஏற்பட்டது என்றும் கூறும் நிலைக்கு ஆளாக நேரிடும். அதுவே, நம் குழந்தைகளை சுயமாக சிந்திக்கவும் செயல்படவும் செய்து, முடிவுகளை சுயமாக எடுக்க வழிவிட்டு, அவனது வெற்றிக்கும் தோல்விக்கும் அவனே காரணம் என்று உணரும்படி வழிகாட்டினால், அவன் ஜெயிப்பது சாத்தியமாகும். நம் குழந்தைகள், நம்மையும் மற்றவர்களையும் பார்த்து, உணர்ந்த புத்தியால் சுய முடிவு எடுத்து செய்யும் எதற்கும் அவர்களே முழு பொறுப்பு என்பதை அவர்கள் உணர வேண்டும். இதுவே வெற்றிக்கு வழியாகும். ஆகவே, நம் குழந்தைகளை அப்படி இரு, இப்படி செய் என்று அறிவுரைகள் கூறி வளர்ப்பதை விடுத்து, புத்திசாலிகளாக வளர வாய்ப்பு மட்டும் தந்தால் போதும். அவர்கள் கண்டிப்பாக நம்மைவிட மேம்பட்டு வருவார்கள். அன்பு நண்பர்களே! நம் குழந்தைகள் அறிவாளகளாக இருப்பதைக் காட்டிலும் புத்திசாலிகளாக இருப்பது நல்லது என்று இப்பொழுது புரியும் என்று நினைக்கிறேன்.
    அன்பு பெற்றோர்களே! ‘கண்டதையும் கற்றவன் பண்டிதனாவான்’ என்பது முதுமொழியாகும். இதை இரு விதத்தில் அர்த்தம் கொள்ள முடியும். ஒன்று சகட்டுமேனிக்கு படிப்பவன் எல்லாம் தெரிந்த அறிவாளயாவான். இன்னொரு அர்த்தம் கண்ணால் கண்ட அனுபவத்தில் கற்றுக் கொள்ளும் எவனும் பாண்டித்தியம் பெற்றபுத்திசாலியாவான் என்பதாகும். ஆக, முதலில் பார்த்த அர்த்தம் நிறையப் படித்தால்தான் உருப்பட முடியும் என்று ஆழமாக நம்பும் அறிவாளகளுக்கானது. இரண்டாவது, ஏட்டுப் படிப்பு இல்லா விட்டாலும், உலக மக்களைப் பார்த்து கற்றுக் கொள்ளும் வாழ்வியல் பாடத்தால் அருமையாக வாழலாம் என்று உள்ளுணர்வாக உணர்ந்த புத்திசாலிகளுக்கானது. இதில் எது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் தேவையோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.
    பல காலம் செலவழித்து, உழைத்து, படித்து, பட்டம் பெற்று திறன்மிக்க அறிவாளயாவர் பலர்.
    சில காலம் திட்டம் போட்டு, பலருக்கு வேலை கொடுத்து, செழிப்பாக இருப்பர் புத்திசாலி சிலர்.

    உலக மக்கள் தொகை தினம்

    1986ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியது. மக்கள் தொகைப் பெருக்கத்தின் அபாயத்தை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை 1987ம் ஆண்டு முதல் ஜூலை 11ம் தேதியை உலக மக்கள்தொகை தினமாக அறிவித்தது. மக்கள்தொகை பெருக்கத்தின் தீமைகளையும், சிறுகுடும்ப நெறியின் நன்மைகளையும் எடுத்துரைப்பது அந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
    20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் 200 கோடிக்கும் குறைவாக இருந்த மக்கள்தொகை நூற்றாண்டின் இறுதியில் 600 கோடியை தாண்டிவிட்டது. அதாவது பத்தொன்பது நூற்றாண்டுகளின் அதிகரித்த மக்கள்தொகையைப் போல் இரண்டு மடங்கு ஒரே நூற்றாண்டில் அதிகரித்திருக்கிறது என்பதுதான் வேதனை தரும் உண்மை.
    2011ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி உலக மக்கள்தொகை 700 கோடியைத் தொட்டுவிட்டது. 700 கோடியைத் தொட்ட பெண்குழந்தை, இந்தியாவில் உத்திரப்பிரதேச மாநிலம் லக்னௌ புறநகர்ப்பகுதியில் வாழும் ஒரு ஏழைத்தம்பதிக்குப் பிறந்ததாகவும், அந்தக் குழந்தைக்கு நர்கீஸ் என்று பெயர் சூட்டப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின. பிலிப்பைன்சும், ரஷ்யாவும் தங்கள் நாட்டில், 700 கோடியாவது குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளன. இதனால் எந்த நாட்டில் 700 கோடியாவது குழந்தை பிறந்தது என்பதை யாரும் அறுதியிட்டு கூற முடியாது.
    உலகம் முழுவதும் மக்கள்தொகையை மிகச்சரியாக கணிப்பதற்கான அளவு கோல்கள் எந்த நாட்டிடமும் இல்லை என்பதால், 700 கோடியாவது குழந்தை எது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தக்குழப்பம் குறித்து ஐ.நா., மக்கள்தொகைப் பிரிவு தலைவர் கெர்ஹார்டு ஹெய்லிக் கூறுகையில், =உலகின் குறிப்பிட்ட இடத்தில் தான், 700 கோடியாவது குழந்தை பிறக்கும் எனக்கூறுவது சரியாக இருக்க முடியாது. காரணம் சரியான புள்ளிவிவரங்கள், வசதிகள் கொண்ட நாடுகள் மிகவும் குறைவு. ஆகவே, மிகச்சரியாக கணிக்கவே முடியாது’ என்றார்.
    உலகின் மக்கள்தொகை 700 கோடியைத் தொட்டுள்ளதை வரவேற்கும் வகையில் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் தனது அறிக்கையில் ‘நமது பூமி நெரிசலாகி வருகிறது என்று பலர் கூறுகின்றனர். நான் அவ்வாறு கருதவில்லை. நமது பலம் 700 கோடியாக உயர்ந்துள்ளது. பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலின் அடிப்படையில் சமூகத்தைத் தட்டி எழுப்பவும் அனைவரும் நன்மை பெறவும் இந்த பலத்தை நாம் பயன்படுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
    உலக மக்கள்தொகையில் 20 சதவீதம் சீனநாட்டுக்கு உரியது. 18 சதவீதம் இந்தியாவுக்கு உரியது. ஆனால் அமெரிக்காவின் பங்கு வெறும் 5 சதவீதம் தான். இந்தியாவில் முன்பு ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்’ என்ற திட்டமும், தற்போது ‘வீட்டுக்கு ஒரு மரம், வீட்டுக்கு ஒரு குழந்தை’ என்ற திட்டமும் நடைமுறையில் இருந்தாலும் குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டம் அத்தனை தீவிரமாக கடைபிடிக்கப்படவில்லை. ஆனால், சீனாவில் அப்படியல்ல. ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை என்பது அரசின் விதி. அதற்கு அதிகமாகப் பிள்ளைபெற்றால் அக்குழந்தைக்கு அரசின் சலுகைகள் பள்ளி முதல் வேலைவாய்ப்பு வரை கிடைக்காது. மக்கள்தொகைப் பெருக்கத்தை சீனா திறமையாகக் கட்டுப்படுத்திவிட்டது.
    ஆனால், இப்போது சீனாவில் வேறுவிதமான பிரச்சனை உருவெடுத்துள்ளது. சீனா மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் காட்டிய தீவிரத்தின் விளைவு, இன்று அந்நாட்டில் சிறார்களைவிட முதியோரும் நடுத்தரவயதினரும்தான் அதிகம். மனித ஆற்றல் குறைந்து செய்வதறியாது தவிக்கிறது சீனா. ஒருவகையில் பார்த்தால் இந்தியா சீனாவைப்போல் குடும்பக்கட்டுப்பாடு விஷயத்தில் அத்தனை கடுமையாக இல்லாததும் நல்லதாகவே அமைந்துவிட்டது. இந்தியாவில் தண்ணீர், உணவு உள்ளிட்ட பற்றாக்குறைக்குக் காரணம் நிலப்பரப்பு அல்ல. நாட்டில் உள்ள அத்தனை கோடி மக்களுக்கும் உணவும், உயிர்வாழ்விற்கான காற்றும், நீரும் நிறையவே இருக்கிறது. இதையெல்லாம் நாம் பாழ்படுத்தாமலும், அந்நியர் வந்து பாழ்படுத்தவிடாமலும் காத்து நின்றாலே அனைவருக்கும் உணவும் கிடைக்கும். வாழ இடமும் இருக்கும்.
    இன்று இந்தியாவின் இயற்கை வளங்கள் இந்திய மக்களின் தேவைக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக அன்னிய நாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஏற்றுமதிக்காக பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் உண்மை.
    அறியப்பட்ட வளங்களைக் கணக்கில் கொண்டு உலக மக்கள்தொகை மிகையாக (Over Population) கருதப்படுகிறது. நாளைய தினம் மனிதனின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இயற்கையின் இரகசியங்கள் முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு புதுப்புது வளங்கள் கண்டறியப்படுமானால் இருக்கும் இந்த மக்கள்தொகை குறைவானதாக (Under Population) கருதப்படும் நிலை ஏற்படக்கூடும்.
    அதேபோல மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் கேடுகளைவிட மக்கள்தொகை குறைந்துவிட்டால் அது பேராபத்தில் முடிந்துவிடும் என்ற கணிப்பும் இருக்கின்றன. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டின் காரணமாக உழைக்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்து, ஓய்வெடுக்கும் மூத்த மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடும் என்பதை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
    இவையனைத்தும் எதிர்காலத்தில் நிலவும் சமூக, பொருளாதார, இயற்கை சூழலைப் பொறுத்தது. இன்றைய சூழலில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள்தொகை ஒரு நாட்டிற்குச் சொத்தா? அல்லது சுமையா? என்றால் தொழிலாளர்களின் தேவை பெருமளவில் இருக்கும் சில நாடுகளுக்கு வேண்டுமானால் அது சொத்தாக இருக்கலாம். இந்தியாவைப் பொறுத்தமட்டில் மக்கள்தொகைப் பெருக்கம் ஒரு சுமையாக இருக்கிறது என்பதே உண்மை. அதன்பொருட்டே சிறுகுடும்ப நெறியைப் பின்பற்றுவோருக்கு அரசு பல்வேறு சலுகைகளையும், உதவிகளையும் அளிக்கிறது.
    உலகளாவிய பொருளாதார மாற்றங்களின் காரணமாக அண்மைக் காலங்களில் மக்களில் ஒரு சிறு பகுதியினர் வெளிநாடுகளிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் நல்ல வேலைவாய்ப்பையும், உயர்ந்த வருமானத்தையும் பெறுவதை வைத்துக்கொண்டு பெருகிவரும் மக்கள்தொகை நாட்டுக்கு ஒரு சொத்து என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது.
    பல்வேறு துறைகளில் சாதனைகள் படைக்கப்பட்டிருந்தாலும் வறுமை, வேலையின்மை, கல்லாமை ஆகிய சமுதாயக் குறைகள் இன்னும் அகற்றப்படவில்லை. வளர்ச்சியின் பலன்கள் அடித்தள மக்களை இன்னும் சென்றடையவில்லை என்பதை பாரதப் பிரதமர் அண்மையில் வேதனையோடு குறிப்பிட்டுள்ளார். முன்னேற்றத்தின் வளர்ச்சி வேகத்தைவிட மக்கள்தொகை பெருக்கத்தின் வேகம் அதிகமாகவே இருப்பதே இதற்கு முக்கியக் காரணம்.
    எனவே மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். சிறிய குடும்பமே சிறப்பான குடும்பம் என்பதை உணர்த்த வேண்டும். அறிவுறுத்தலின் மூலமே அறியாமையை அகற்ற முடியும். எழுத்தறிவுப் பெருக்கமும் குறிப்பாக பெண் கல்வி வளர்ச்சியும் ஏற்பட்டால்தான் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
    ஒரு ஆண் கல்வி பெற்றால் தனி நபரின் கல்வியே. ஆனால் ஒரு பெண் கல்வி பெற்றால் அது ஒரு குடும்பம் முழுவதும் கல்வியாகும் என்ற மகாத்மாவின் கருத்தை சிந்தையில் கொள்ள வேண்டும். கல்விக்குச் செலவிடும் ஒரு ரூபாய், குடும்ப நலத்திட்ட பிரச்சாரத்திற்கும், கருத்தடை சாதனைங்களை வழங்குவதற்கு செலவிடப்படும் பத்து ரூபாய்க்குச் சமம்.
    மனிதன் வேலை செய்யும் வெறும் ‘ஹார்டுவேர்’ ஆக மட்டும் இருந்தால் போதாது. சிந்திக்கும், முடிவெடுக்கும், நிர்வகிக்கும் ஒரு ‘சாஃப்ட்வேர்’ ஆக கல்வி அவனுக்குள் புகுத்தப்பட்டால் மனித உழைப்பு மனித முதலீடாக மாறும். மக்கள்தொகை கல்வி மனித முதலீடு.
    உலகில் மக்கள் சக்திக்கு இணையாக வேறு சக்தி இல்லை. மனிதனின் சக்திக்கு அடிப்படை அவனுடைய மூளையின் திறனே ஆகும். ஆனால் அதனை முழுமையாகப் பயன்படுத்தும் சக்தியை மனிதன் இன்னும் பெறவில்லை. இந்தக் குறையைப் போக்க தேவைப்படுவது அறிவு. அந்த அறிவை வளர்ப்பது கல்வி.
    ‘இந்தியா ஏழைகள் வாழும் செல்வந்த நாடு’ என்பார்கள். ‘இந்தியாவில் செம்மைப்படுத்தப்படாத, பக்குவப்படுத்தப்படாத, வெளிச்சத்திற்கு வராத பல திறமைகள் புதைந்து கிடப்பது போல, உலகில் வேறு எங்கும் இல்லை’ என்றும் கூறுகிறார். 20ம் நூற்றாண்டின் தலைசிறந்த நிர்வாகி என்று கருதப்படும் ஜாக் வெல்ச் (Jack Welsch). இதைத்தான் ‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்’ என்கிறது திரைப்பாடல்.
    இயற்கையின் உன்னத படைப்பு மனிதன். இயற்கை வளம் மிகுந்த இந்தியாவில் மகாசக்தியாக விளங்கும் மனித சக்தியை அறிவியல் தொழில்நுட்பத்தோடு இணைத்து ஆக்க வழியில் ஈடுபடுத்தினால் சுமையாக கருதப்படும் மக்கள்தொகை சொத்தாக மாறும்..