– 2012 – June | தன்னம்பிக்கை

Home » 2012 » June

 
 • Categories


 • Archives


  Follow us on

  நாளைய உலகின் நாயகன் நீயே…!

  “நேற்று என்பது வெறும் கனவு
  நாளை என்பதோ கற்பனை மட்டுமே
  இன்று சிறப்பாக வாழ்ந்தால்
  அது நேற்றைய கனவையும் இனிமையாக்கும்
  நாளைய தினத்தையும் நம்பிக்கைக்குரியதாக்கும்
  அதனால் இன்றைய தினத்தைக் கவனி
  அதில் தான் விடியலுக்கான தீர்வே உள்ளது”

  Continue Reading »

  கருப்பு வெள்ளைக் கட்டங்களில் மனிதர்கள்

  சிப்பாயாக
  குதிரை வீரனாக
  மதகுருவாக
  யானை மேல் தளபதியாக
  உயர்வு தாழ்வுகள்
  வசதி வாய்ப்புகளுக்கேற்ப.

  Continue Reading »

  உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள்..

  ஒருவர் தம்முடைய உணர்ச்சிகளையோ, அல்லது மற்றவர்கள் உணர்ச்சிகளையோ அடையாளம் கண்டு, மதிப்பீடு செய்து அதை திறம்பட மேலாண்மை செய்யும் ஆற்றல், திறமையை உணர்வுசார் நுண்ணறிவு (Emotional Intelligence) என்பர்.

  Continue Reading »

  பிலோ இருதயநாத்

  இந்தியாவில் உள்ள பல்வேறு ஆதிவாசிகளை, நாடோடிகளை நேரில் சென்று சந்தித்து அவர்கள் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொண்டு அதை தமிழ் இலக்கியங்களுடன் ஒப்பிட்டு மிக நுட்பமாக கட்டுரைகள் எழுதியவர் பிலோ இருதயநாத்.

  Continue Reading »

  கல்விச் சந்தை

  கற்பதற்குக் கல்வி என்ற காலம் எங்கு போனது?
  விற்பதற்கே கல்வி என்ற கோலம் இன்று ஆனது!
  புற்றீசல் போலத் தொழிற் கல்விக் கூடங்கள்!
  பெற்றவரின் சேமிப்பைச் சரியாகக் குறி வைத்து…
  கல்லூரிக்கும் விளம்பரங்கள்! கூறு போட்டுக் கூவி
  கொடுக்கிறார்கள்-என எண்ண வைக்கும் அவலங்கள்!

  Continue Reading »

  உனக்குள்ளே உலகம்-25

  பிளஸ் – 2 தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன.
  அடுத்து என்ன செய்யவேண்டும்? மேற்படிப்பு படிக்கலாமா? ஏதேனும் வேலையில் சேரலாமா? போட்டித் தேர்வுகள் எழுதி வேலைவாய்ப்பைப் பெறலாமா? – என பலவித குழப்பங்களைத்தாங்கி பிளஸ் – 2 முடித்த இதயங்கள் வலம் வருகின்றன.
  “நீ இந்தப் பாடம் எடுத்துப் படித்தால்தான் உனக்கு நல்லது. உடனே வேலை கிடைக்கும்”.
  “உன் மதிப்பெண்களுக்கு ஏற்றபடிப்பு இதுதான். செலவும் குறைவு”.
  “நீ மேற்படிப்பு படிப்பதைவிட வேலையில் சேருவதுதான் நல்லது”
  – என்று பலரும் “ஆலோசனை” என்றபெயரில் அறிவுரைகளையும், முடிவுகளையும் பிளஸ் – 2 முடித்தவர்கள்மீது திணித்துவிடுகிறார்கள்.
  அலைபாயும் உள்ளத்தோடு அலைந்து திரியும் பிளஸ் – 2 முடித்த மாணவ – மாணவிகளல் சிலர் முடிவு எடுக்க முடியாமல் திண்டாடுகிறார்கள்.
  அப்பா சொல்வதைக் கேட்கலாமா? அம்மா கூறுவதை கவனிக்கலாமா? அண்ணனின் ஆலோசனையை ஏற்கலாமா? நண்பனின் விருப்பத்தை நிறைவேற்றலாமா? தோழி சொல்வதை கேட்டு நடக்கலாமா? பக்கத்து வீட்டுக்காரர்கள் சொல்வதைக் கேட்டு முடிவு எடுக்கலாமா? ஆசிரியர்கள் சொல்வதைக் கேட்கலாமா? டி.வி. ஆலோசகர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாமா? – என்றகுழப்பம் இவர்கள் மனதில் உருவாகிவிடுகிறது.
  இவைதவிர சின்ன வயதுமுதல் தங்களுக்குள் இருக்கும் ஆசைகளும், விருப்பங்களும் பிளஸ் – 2 படிக்கும் மாணவர்கள் முடிவுகள் எடுப்பதற்கு துணை நிற்கின்றன. இருந்தபோதும் தங்கள் பெற்றோரின் குடும்ப வருமானம் மற்றும் அவர்கள் பெற்றமதிப்பெண்களைக் கருத்தில்கொண்டு பிளஸ் – 2 முடித்தவர்கள் எதிர்கால முடிவை தெளிவாக எடுத்தால் மட்டுமே இவர்களது வாழ்க்கை இனிமையானதாக அமையும்.
  சிறந்த மதிப்பெண்கள் பெற்றவர்கள் தங்கள் எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படவேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு உதவிக்கரம்நீட்ட எத்தனையோ அமைப்புகள் தயார்நிலையில் இருக்கின்றன. அந்த வாய்ப்புகளைத் தெளிவாக பயன்படுத்தியவர்கள் சாதனைகள் படைத்திருக்கிறார்கள். மதுரையில் பரோட்டா கடையில் வேலைபார்த்த மாணவர் வீரபாண்டியன். பிளஸ் – 2 தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றதால் வறுமையில் இருந்தபோதும் அவரது வாழ்க்கை வசந்தமானது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்றஇந்திய அளவில் உயர்ந்த பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வில் (Civil Services Examination) சிறப்பான வெற்றிபெற்று, இன்று அவர் ஒரு சிறந்த அதிகாரியாகத் திகழ்கிறார். இவரது வாழ்க்கை, பள்ளகளல் படிக்கும் மாணவர்களுக்கு வாழ்க்கை பாடமாக அமையும்.
  மதுரை திரு.வி.க. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளயில் பிளஸ் – 2 படித்த மாணவர் க. து தந்தை பெயர் கணேசன். தாயார் பெயர் பெருமாளக்காள். இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். 2000-ம் ஆண்டில் பிளஸ்-2 தேர்வு எழுதி புவியியல் பாடத்தில் தமிழகத்திலேயே இரண்டாம் இடம் பெற்றார். இவர் பிளஸ்-2 தேர்வில் புவியியல் பாடத்தில் பெற்றமதிப்பெண்கள் 200க்கு 197 ஆகும். இவரது மகத்தான வெற்றியைப்பற்றிய செய்திகளைத் தாங்கி பல நாளதழ்கள் புகழாரம் சூட்டின. அப்போதைய தமிழக முதலமைச்சர் மாணவர் வீரபாண்டியனின் மேற்படிப்பு செலவுகளுக்காக 1 லட்சம் ரூபாய் வழங்கினார். அந்தப் பணத்தை வங்கியில் 5 ஆண்டுகளுக்கு டெபாசிட்செய்து அதிலிருந்து கிடைக்கும் வட்டிப் பணத்தை தனது மேற்படிப்புச் செலவுக்காக வைத்துக்கொண்டார் வீரபாண்டியன். மேலும் பலரும், பல அமைப்புகளுக்கு உதவிக்கரம் நீட்டின.
  மாணவர் வீரபாண்டியன் தனது மேற்படிப்புக்கு சென்னையிலுள்ள லயோலா கல்லூரியைத் தேர்ந்தெடுத்தார். பி.ஏ., சமூகவியல் படிப்பை படிப்பதற்கு விண்ணப்பித்தார். அந்தக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் இன்னாசிமுத்து மாணவர் வீரபாண்டியன் கல்விக் கட்டணம் செலுத்தாமலேயே பட்டப்படிப்பு படிக்க அனுமதியளத்தார். கல்லூரி விடுதியிலும் எந்தக் கட்டணமும் செலுத்தாமல் தங்கியிருந்து படிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
  பள்ளயில் படிக்கும்போதே ஐ.ஏ.எஸ்., கனவுகளோடு தனது கல்வியைத் தொடர்ந்த வீரபாண்டியன், கல்லூரியில் சேர்ந்தபின்பும் தனது விருப்பத்தை நிறைவேற்றதொடர்ந்து முயற்சிசெய்தார். பின்னர், சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றார். படிக்கும்போதே பல பயிற்சி மையங்களல் மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான பயிற்சி அளக்கும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். முடிவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்றஉயர்பணிகளுக்காக நடத்தப்பட்ட சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 53 – வது ரேங்க் பெற்றார்.
  2008 – ஆம் ஆண்டு வீரபாண்டியன் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதும்போது அந்தத் தேர்வை எழுதுவதற்காக 3 லட்சத்து 18 ஆயிரத்து 843 பேர் விண்ணப்பித்திருந்தார்கள். இவர்களல் மொத்தம் 791 பேர் மட்டும் சிவில் சர்வீசஸ் பணிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களல் ஒருவராக வீரபாண்டியன் திகழ்ந்தது மிகப்பெரிய சாதனையாகும். வீரபாண்டியனின் அப்பா கணேசன் பாத்திர வியாபாரம் செய்து வந்தார் என்பதும் அம்மா மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளயாக பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். உயர்கல்வி பெறுவதற்கும், உயர்பதவியை அடைவதற்கும் “வறுமை ஒரு தடையல்ல” என்பதற்கு உதாரணமாக திகழ்பவர் வீரபாண்டியன்.
  எனவே பிளஸ் – 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் உயர்கல்வியைப் பற்றியும், வேலைவாய்ப்பைப்பற்றியும் கவலைப்படவேண்டிய அவசியமில்லை. இதைப்போலவே மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றவர்களும் அதிகமாக வருத்தப்படவேண்டிய தேவையில்லை. ஏனென்றால் தமிழகத்தில் ஏராளமான தொழிற்கல்வி நிறுவனங்களும், கலை அறிவியல் கல்வி நிறுவனங்களும் உள்ளன. மாணவர்கள் பெற்றமதிப்பெண்களுக்குஏற்ப அந்தக் கல்லூரிகளல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பிளஸ் – 2 தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களும் சேர்ந்து படிப்பதற்கு வசதியாக பல கல்வி நிலையங்கள் செயல்படுவதால் அந்த வாய்ப்பை குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
  “நான் குறைந்த மதிப்பெண்கள் பெற்றுவிட்டேன் இனி என்னால் நல்ல இன்ஜினியரிங் கல்லூரியில் சேர முடியாது” – என்று எண்ணி வருந்தி மேற்படிப்பை தொடர விரும்பாமல் கவலைப்பட்டு நாட்களை நகர்த்தி தனது எதிர்காலத்தை வீணாக்கியவர்களும் உண்டு. ஆனால் அதேவேளையில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காததால் உடனே ஒரு மாற்றுப்பாதையை தேர்ந்தெடுத்து வேறுஒரு சிறந்த படிப்பில் சேர்ந்து சிகரத்தைத் தொட்டவர்களும் இருக்கிறார்கள்.
  விரும்பியது கிடைக்கவில்லையென்றால் கிடைத்ததை விரும்பக் கற்றுக்கொள்ளவேண்டும். அப்போதுதான் மேற்படிப்பு பற்றிய பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை எளதில் காணலாம்.

  மாற ஆசைப்படுகிறீர்களா?

  மகாகவி காளிதாசரின் ஒரு கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு தான் இது. இதில் ஒருவருடைய வாழ்க்கை எத்தனை நீண்டதாக இருந்தாலும் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கும் காலம் என்னவோ நிகழ்காலம் மட்டுமே என்கிறார்.
  நல்லதோ, கெட்டதோ பல நிகழ்வுகள் நடந்து முடிந்து, நமது வாழ்க்கையின் வரலாறாகப் பதிவாகிவிட்டது. கடந்து போன அந்தக் காலத்தில் நடந்து முடிந்திருக்கிற நிகழ்வுகளை நம் விருப்பப்படி மாற்றியமைத்திட முடியாது.
  இனி எத்தனை காலம் நாம் இருக்கப் போகிறோம்? அந்தக் காலத்தில் என்னவெல்லாம் நடக்கப் போகின்றன? என்ற கேள்விக்குறியை எழுப்பும் எதிர்கால நிகழ்வுகளை நாம் எட்டிப்பார்க்க முடியாது.
  உண்மை நிலை இப்படி இருக்கும்போது நம் கட்டுப்பாட்டில் இல்லாத கடந்த கால நிகழ்வுகளின் நினைவுகளிலும், எதிர்காலக் கனவுகளிலும் மூழ்கிக்கொண்டு, நம் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய நிகழ்காலத்தை நாம் வீணடித்துக் கொண்டிருப்பது வேடிக்கையிலும் வேடிக்கையானது.
  இந்தக் கணம் மட்டுமே நம்முடையது. நாம் நினைத்தபடி எப்படியும் நடந்துகொள்ள இந்தக் கணத்தில் மட்டுமே முடியும். முழுமையாக நம்மால் செயலாற்ற முடிந்த இந்த கணத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே நமது வாழ்க்கை நிர்ணயம் செய்யப்படுகிறது.
  எனது ஆசிரியர் திரு. த. வரதராஜன் அவர்கள் அடிக்கடி சொல்லும் ஒரு கருத்து என் நினைவுக்கு வருகிறது. “80 வயதில் நாம் கம்பை ஊன்றி நடக்கப் போகின்றோம் என்பதற்காக இப்போதே கம்பை ஊன்றி நடக்கப் பழகலாமா?” என்பார். ஆமாம், நாம் அதிகமாகக் கோட்டை விடுவது நிகழ்காலத்தைத் தான்.
  கடந்த காலத்தில் அப்படியாகி விட்டது, இப்படியாகி விட்டது என்று வருத்தப்பட்டும், நாளை என்ன நடக்குமோ? என்று கவலைப்பட்டுக் கொண்டும் இருந்தால் என்ன நிகழ்ந்து விடப்போகிறது. நேற்றைய வருத்தங்களால் கடந்த காலம் மாறப்போவதுமில்லை. நாளைய கவலைகளால் எதிர்காலம் சிறந்துவிடப் போவதுமில்லை. வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் எல்லா வெற்றிகளுக்கும், மேன்மைகளுக்கும் அடிப்படையான சூட்சுமமாக இருப்பது கடந்த காலமோ, எதிர்காலமோ அல்ல. இந்தக் கணம் மட்டுமே. இந்தக் கணத்தில் தான் நம்மால் எல்லாவற்றையும் செய்ய முடியும். எனவே நாம் கவனிக்க வேண்டிய முக்கியமானது இந்தக் கணமே.
  உதாரணமாக, இரவில் நமது கிராமத்தில் இருந்து காரின் முன் விளக்குகள் சரியாக எரிந்தாலே போதும். பயண தூரம் அத்தனையையும் சிரமம் இன்றிக் கடந்து விடலாம்.100 கி.மீ. தூரமுள்ள நகருக்குக் காரில் செல்வதாகக் கொள்வோம். இருட்டில் பயணம் மேற்கொள்வதால் நாம் சென்று சேரும் நகர் வரையிலான 100 கி.மீ.க்கும் தெருவிளக்கு வேண்டும் என்பது அவசியமில்லை. நமது காரின் முன் விளக்குகள் சரியாக எரிந்தாலே போதும். பயண தூரம் அத்தனையையும் சிரமம் இன்றிக் கடந்து விடலாம்.
  காரின் முன் விளக்குகளால் சில அடி தூரங்கள் மட்டுமே தான் வெளிச்சத்தைத் தர முடியும் என்பதால் பயணத் தூரம் வரை தெருவிளக்கு எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பது நகைப்புக்குரியதாகி விடுகிறது. இதைப்போலத் தான் நாம் ஒவ்வொருவரும் எதிர்காலத்திற்காக தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
  இதை மிக அழகாக தாமஸ் கார்லைல் “நம்முடைய முக்கியமான வேலை தூரத்தில் மிக மங்கலாகத் தெரிவது என்ன என்று தெரிந்து கொள்வதல்ல. நம் கண் முன்னால் இருப்பது என்ன என்று தெரிந்து கொண்டு அதைச் சிறப்பாகச் செய்வது தான்” என்று கூறியிருப்பார். கார்லைல் கூறியபடி இந்தக் கணத்தை நாம் எல்லோரும் சிறப்பாக உபயோகித்தால் எதிர்காலம் தானாகச் சிறப்பாய் அமைந்துவிடும்.கடைசி வரை நம்மால் செயல்பட முடிந்த காலம் நிகழ்காலம் மட்டுமே என்பதை இதன் மூலம் அறியலாம். எனவே நிகழ்காலத்தில் மிகுந்த கவனத்தைச் செலுத்த வேண்டும். நேற்றைய நிகழ்வுகளில் இருந்து ஏதாவது பாடம் இந்தக் கணத்தில் உணர்வோமானால் அது நம்மை பக்குவப்படுத்தி அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும். நாளைய நாளின் வெற்றிக்காகத் திட்டமிட்டு ஏதாவது இந்தக் கணத்தில் செய்வோமானால் அது நம்மை முதல்நிலை நோக்கி முன்னேற்றும். ஆக, இந்த கணத்தில் நாம் மேற்கொள்ளும் செயல்தான் நேற்றைய அனுபவத்திற்கும், நாளைய நடப்பிற்கும் பாலமாக அமைந்து வெற்றியை ஈட்டித்தரும். எனவே நமக்குத் தரப்பட்டிருக்கும் நேரத்தில், நமக்கு அமைந்த சூழ்நிலையில் எப்படி முடிந்த அளவு சிறப்பாகச் செயல்படலாம் என்று யோசித்து அதன் வழி செயல்படுங்கள்.மாற ஆசைப்படுகிறீர்களா? அதற்கான முதல் முயற்சியை இந்தக் கணத்திலேயே ஆரம்பியுங்கள். ஏதாவது சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அதற்கான முதல் அடியை இந்தக் கணத்தில் வையுங்கள். நாளை என்பது நம்மிடம் இல்லை என்பதை உணர்ந்து, நம்மிடம் உள்ள இந்தக் கணத்தையே சரியாகப் பயன்படுத்துங்கள். காளிதாசர், “நதி நீரோட்டத்தில் நாம் ஒரு முறை காலை நனைத்த நீரில் இன்னொரு முறை நனைக்க முடியாது. ஒவ்வொரு முறையும் நீர் புதிதாகவே வரும். அதைப்போல தான் கால ஓட்டத்தில் ஒவ்வொரு கணங்களும் புதியவையே. இந்தக் கணத்தில் வாழும் முறையைப் பொறுத்தே நமது வெற்றிகளும், தோல்விகளும் தீர்மானிக்கப்படுகின்றன” என்று சொன்னதுபோல் நமது முழுக்கட்டுப்பாட்டில் இருப்பது இந்தக் கணம் தான். அதில் தான் வாழ்க்கையின் வெற்றிச் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.

  பல இரசம் (பலரசம்)

  The Difficulty of Being Good என்றொரு புத்தகத்தில் ‘சிசிபஸ்’ என்கின்ற கிரேக்க கதாபாத்திரம் ஒன்ற குறித்து எழுதியிருந்தார்….. என்ன ஆச்சரியம் ஒஷோவின் மனமற்ற நிலை என்கின்றதொரு புத்தகத்திலும் இதே கதாபாத்திரம் குறித்து படித்ததாக ஞாபகம்.
  தொடங்கிவிட்டது குருஷேத்திரம்; படிக்கின்ற காலத்தில் இப்படி இரு தொடர்புள்ள சிறிய மனதிற்கு பிடித்த புள்ள (பாய்ன்ட் Point-ஐ இப்படிதான் அடுத்த விநாடியிலும் சொல்லியிருக்கின்றார்) கிடைத்துவிட்டால்….. மணிக்கணக்கில் அல்லது சில நேரங்களல் நாள், வார, மாத, வருட கணக்கில் தேடி அதைக் கண்டு பிடித்துக் கடைசி வெற்றிடப் பக்கங்களல் தேதிவாரியான முயற்சிக் குறிப்புகளோடு எழுதி வைத்திருப்பது உண்டு. அவ்வாறான Cross-reference-கள் படிப்பை ஒரு இரசமான அனுபவம் ஆக்குகின்றன. புத்திக்கூர்மை என்பது இப்படிப்பட்ட தருணங்களல் உருவாகின்ற விஷயமே. ஒரு ஞாயிற்றுக்கிழமையின் ஒருமணி நேர தேடுதலில் சிசிபஸைக் கண்டுபிடிக்க (இரண்டு புத்தகங்களலும் ஒருசேர) முடியவில்லை. இந்த மாதிரியான சந்தர்ப்பங்களல் இடைவௌ கொடுத்துவிட்டு, அந்தக் கேள்வியினை இரு புத்தகங்களன் பின்பக்கத்திலும் கேள்வித்தாள் தொகுப்பின் (இரு புத்தகங்களைப் பற்றிய விவரங்கள், பக்க எண், எழுத்தாளர், தலைப்பு என்பது போன்ற) தேடிய இடங்கள் குறித்த குறிப்பையும் தேதியோடு மற்றும் அனுபவ வசனத்தோடு பதிவு செய்துவிட வேண்டியதுதான். அதன்பிறகு வேறேதோ படித்துக்கொண்டு இருக்கும்பொழுது இந்த புத்தகங்களல் இருந்து பதில் வௌப்படும்.
  நீங்கள் மிகக் கவனமாக நெருக்கமாகப் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்களா? என்று பிரஸ்டீஜ் என்கின்ற திரைப்படத்தின் ஆரம்பக்காட்சியில் இயக்குநர் கிரிஸ்டோஃபர் நோலன் நம்மைத் தயார்படுத்துவதற்காக என்று கருதுவதைப் போல, இவ்வாறான தேடல் பதிவுகள் நம் படிப்பு அனுபவத்தில் பரபரப்பு துறுதுறு இரசம் சேர்ந்து, அனுபவத்தை சுகானுபவம் ஆக்குகின்றன. சிசிபஸை தேடிய வகையில் அவனுடைய வேலையைப்போலவே தேடலும் ஆகிவிட்டது. என்ன வேலை அவனுடையது என்று ஒரு சில வினாடிகளல் பார்ப்போமே!
  அனுபவத்தை காகிதத்தில் இறக்கி இன்னொரு மனதிற்குள் ஏற்றுவது என்பது ஒரு வகையான இரசவாதமே. இரசவாதிகளைப் பற்றி கூறிவிட வேண்டுமோ? ஆய்வகத்தில் தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருளை பாதரசம் கொண்டு உருவாக்கிவிட முடியும் என்று முயன்றோர் இவர்கள்.

  சுண்டுவிரலும் மோதிர விரலும் இணையுமிடத்தில்
  முக்கால் செ.மீ கிழிந்து போனால்……. ஏகப்பட்ட
  சந்தோசத்தில் குதித்து…… எல்லோரும் ஓடிவந்து
  பாராட்டி சந்தோசப்பட்டு தட்டிக் கொடுத்து…….
  இன்னும் இதுபோல நிறைய அனுபவம் அடையுங்கள் என்று
  ஆசிர்வதிக்கின்ற நிகழ்வு…….
  ஒரு கிரிக்கெட் போட்டியில் நிகழ்ந்தது.
  மிகவும் காரசாரமாக ஆடிக்கொண்டிருந்த அபாயகரமானதொரு துவக்க மட்டையாளரைக் காட்-அன்ட்-போல்ட் முறையில் அசுர வேகத்தில் வந்த பந்தை மின்னல் வேகத்தல் பிடித்து நிறுத்தியமையால் ஏற்பட்ட விளைவுதான் மேற்சொன்ன ……. சுண்டுவிரலில் ஆரம்பிக்கின்ற பத்தியில் சொல்லத் தொடங்கிய நிகழ்வு. இரத்தம் சொட்டச் சொட்ட வௌயிலிருந்து மருத்துவர் ஓடிவந்து முதலுதவி செய்யப் பெயரளவில் ஒரு கட்டுப் போட்டுக்கொண்டு பந்து வீச்சைத் தொடர ஏதோ ஒரு மேட்சில் அனில் கும்ளே…… ஒரு Inspiration ஆக இருந்தார்.
  ‘வேகப்பந்து வீசுவதால் உதிரம் உதிர (உதிர்வதால் தான் உதிரம் என்று பெயரோ? ……. கவிதை …….. கவிதை!) வாய்ப்பு சென்ட்ரிப்யூகல் போர்ஸ் காரணமாக இருக்கின்றது என்ற அறிவு சொன்னது. மேலே சொல்லியது மைய விலக்கு விசை. மைய நோக்கு விசை என்பது சென்ட்ரிபீடல் force இவ்விரண்டுக்கும் ஆறாம் வகுப்பு பிசிக்ஸ் புக்கில் நிறைய விளக்கம் கொடுத்தார்கள். இதை ஞாபகம் வைத்துக்கொள்வதற்காக (fugal) ப்பூ என்றால் போ…. அதாவது வௌயே போ…… பீடல் என்றால் பீட்டர்….. பீட்டர் விடுவது என்பது ஆங்கிலத்தில் பல்வேறு காரணங்களுக்காக பேசி யாரையாவது நோக்கி, உள்நோக்கிச் சுற்றி வருவது என்கின்றவாறு…. ஞாபகம் வைத்துக்கொண்டு படித்தால் இன்னும் பந்து வீச கையை சுற்றினால் இரத்தம் அதிகமாக வௌயேறும் என்று மூளை சொன்னது.
  ஆரம்ப பள்ள வயதில், கை விரல்களன் (Inter phalangial joint, Meta carpal and first phalangial joint) என்று ஆங்கிலத்தில் சொல்லும் முள மீது வேப்பங் கொட்டையின் உள்ளே உள்ள கடினமான ஓட்டை வைத்து தட்டி விட்டு, கையை சுற்றி இரத்தத் துளயினை வேடிக்கையாக வரவழைத்தது நினைவுவருகின்றது (என்னவெல்லாமோ செய்திருக்கிறோமோ? – எதற்காக?) அதேசமயம் இன்னொன்றும் ஞாபகம் வந்து Counter- argument ஆனது. அதாவது நல்ல Auto-suggestion உடன், நம்பிக்கை உடன் இன்னும் விக்கெட்டுகளை சாய்க்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் இரத்தம் வௌயேறாது……. வலியும் இருக்காது என்கின்ற நம்பிக்கை உந்தித்தள்ள, பந்தைத் தள்ள, இன்னும் மூன்று…… விக்கட்டுகள் அடுத்தடுத்த இரு ஓவர்களல் சரிய… முதல் முதலாக சிறந்த பந்து வீச்சுக்கான சக்குபாய் கோப்பை கரங்களுக்கு வந்தது. அதற்கு முன்பு சிறந்த மட்டை வீச்சுக்குத்தானே கிடைத்திருந்தது.
  சென்றவாரம் யாருக்குமே கிடைக்காமல் காத்திருந்த கோப்பை கிழிந்த கைகளைத்தான் சென்று சேரவேண்டுமென்று ஒரு வாரம் தவமிருந்ததோ என்னவோ? சச்சின் நூறாவது சதம் அடித்துவிட்டும் சலனமில்லாமல் நின்றிருந்தார் என்று சொல்கின்ற, ஐம்பது கிலோ எடை குறைந்ததாக கருதுகின்ற சின்னச் சின்ன பெரிய சந்தோசங்களை எல்லா உள்ளங்களும் அவரவர்குப் பிடித்த வாழ்க்கை விளையாட்டிலேயே புரிந்து அனுபவித்தால் இரசவாதம் கைவரும்.
  இரண்டு விரல்களைச் சேர்த்து பாண்டேஜ் போட்டபிறகு …. உணவை நான்கு வயது குழந்தை று மூளை Rejoinder போட்டது. வேகமாக அட்ரீனல் பம்ப் ஆகி உதிரப் போக்கை கட்டுப்படுத்தி, வலி மறப்பு செய்து துல்லியமான இடத்தில் பந்தை பிட்ச் செய்து போதுமான அளவு pace என்னும் வேகத்தையும் காட்டச் செய்து இருக்கின்றது.
  ஊட்டி விடுவது ஒரு மோன இரசம். சிறு கை அளாவிய கூழ் கிடைக்கத்தான் கரம் காயமானதோ? என தோன்றியது. உத்வேகம் அட்ரீனலை பம்ப் செய்ய, அது Vaso Constrictor அதாவது இரத்த குழாய்களை (குறிப்பாக) Peripheral என்று சொல்லக்கூடிய வௌப்புற இரத்த நாளங்களைச் சுருங்கச் செய்து இதய குழாய்களை விரித்துக் கண் பாவையை விரிவடையச் செய்து சிறப்பான முடிவுகளை வழங்கச்செய்யும் என்று மூளை Rejoinder போட்டது. வேகமாக அட்ரீனல் பம்ப் ஆகி உதிரப் போக்கை கட்டுப்படுத்தி, வலி மறப்பு செய்து துல்லியமான இடத்தில் பந்தை பிட்ச் செய்து போதுமான அளவு pace என்னும் வேகத்தையும் காட்டச் செய்து இருக்கின்றது.
  அறிவியலையும் உணர்வியலையும் சேர்ந்த அவியலாக; இந்த விளையாட்டுச் செய்தி வளர்ந்து கொண்டு இருக்கின்றது. சொன்னால் நம்பவே மாட்டீர்கள், தோழி ஒருவர் Hot box ஐ Induction stove மீது வைத்து சூடாக்கி கொண்டு இருக்கின்றது என்று சொல்லக் கேட்டோம். வெப்ப அரிதிற் கடத்தி என்பது குறித்து அரைமணி நேரம் பாடம் எடுக்கப்பட்டது; பெரிதாக ஒன்றும் பலன் இல்லை என்றபோதிலும், கிண்டல் செய்வதாக கோபம் வரக்கூடிய அபாயமென்னவோ அப்படியே இருக்கின்றது. பயப்பட வேண்டிய விஷயமே!
  உள்ளமும் உடலும் எப்படிப் பின்னிப் பிணைந்திருக்கின்றது அதை விளையாட்டுக்கள் எப்படிக் கூர்மை ஆக்குகின்றன. வாழ்வின் பல்சுவைகளை ஒன்றாகப் போட்டுக் குலுக்கி எடுத்த பல இரசங்களாக எப்படி அனுபவத் தேடல்களை நாம் திட்டமிட்டுச் சேர்க்க வேண்டும் என்றெல்லாம், இந்தக்கட்டுரையின் ஆழமான கருத்தாகக் கொண்டு, வேண்டிய அளவில் எடுத்துக்கொள்ள அப்படியே விட்டு விடுகின்றோம்.
  சிசிபஸ் பற்றி சொல்லாவிட்டால் எப்படி? அவர் ஒரு கிரேக்க வீரர். கடவுள் ஒரு தண்டனைப் பணி கொடுத்திருந்தாராம். என்ன என்றால் ஒரு பெரிய பாறையை முழு வலிமையும் திரட்டி ஒரு உயரமான, கடினமான மலை மீது உருட்டிக் செல்ல வேண்டும்.
  சிரமமான வேலைதான். சரி அவ்வாறு சென்றடைந்த பிறகு ….. உச்சியிலிருந்து அது உருண்டு கீழே விழுந்துவிடும், பிறகு…. ? பிறகென்ன? அவர் மீண்டும் அதை உயரத்திற்கு உருட்ட வேண்டியதுதான். ஏற்ற வேண்டியது தான்.
  இவ்வாறான கதை கிரேக்க புராணத்தில் உள்ளது.
  இதுபோலவே நிறைய மானுட வாழ்வுப் பணிகளும் உள்ளது என்று அறிஞர்கள் சொல்கின்றார்களாம். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், நாம் மிக மிக சிரமப்பட்டு செய்த காரியங்களுக்கு, குறிப்பாக பத்து, பன்னிரண்டாவது, கல்லூரி தேர்வுகளுக்குத் தலா ஐந்து சதவீகிதம் ‘கம்மியாக’ கஷ்டப்பட்டிருந்தால் கூட இதே நிலைக்கு வந்திருக்கலாமோ என்று தோன்றும். சில வேளைகளல், சில வேலைகளைப் பகீரதப் பிரயத்தனப்பட்டு செய்தும் கண்விழித்தும் எழுதியும் காலையில் அடித்துவிட்டு தூக்கிப்போட்ட நினைவுகள் எவ்வளவோ? இந்தத் தொடரில் காதல் குறித்து எழுதுவது இல்லை……. எனவே இன்னொரு எடுத்துக்காட்டை சொல்லப்போவதுமில்லை……….. சொல்ல வருவது என்ன என்றால் …. வேலைகளல் பல இரசமிருக்கின்றது. நாம்தான் பருகும் மனப்பாங்கை வரவழைக்க வேண்டும் என்பதுதான்.

  வெற்றியாளர்கள் இரண்டு வகை…

  உலகின் எதிர்காலப் பாதையைச் சரியாகக் கணித்து, அந்தத் திசையில் எல்லோரையும் விட வேகமாக ஓடி முதடத்தைப் பிடிப்பவர்கள் ஒரு வகை… அப்படி இல்லாமல் தானே ஒரு திசையைத் தீர்மானித்து, ஒட்டுமொத்த உலகத்தையும் அந்தத் திசையில் தன் பின்னால் ஓடிவரச் செய்பவர்கள் இரண்டாவது வகை…
  பில்கேட்ஸ் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர் ‘உழைக்க மட்டுமல்ல… உழைப்பை விட்டு விலகியும் இருக்கத் தெரிய வேண்டும்…’ – இதுதான் பில்கேட்ஸ் நமக்கு உணர்த்தியிருக்கும் பாடம். அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஒரு பொருள் இருக்கிறது. ஒரு எம்.பி.ஏ. பாடத் திட்டத்துக்கு நிகரான வாழ்க்கைமுறை அவருடையது.
  பள்ளக்கூட காலத்திலேயே பில்கேட்ஸ் ‘பாடத்தைத் தொடங்கிவிட்டார் கொடுக்கிற பாடத் திட்டத்தைப் படிப்பதை விட விருப்பமானதைப் படிப்பதுதான் சிறந்தது என்பதை நம்பினார் மற்ற மாணவர்களடமிருந்து வேறுபட்டு, படிப்பில் ஆர்வமில்லாமல் இருந்த பில்கேட்ஸை, சியாட்டில் நகரின் ‘லேக்சைட் (Lake Side) பள்ளயில் அவருடைய பெற்றோர் சேர்த்தனர். அங்கே பில்கேட்ஸை ஈர்த்தது ராட்சத சைஸில் பூதம் போல இருந்த கம்ப்யூட்டர்.
  அந்தக் காலத்தில் கம்ப்யூட்டரை விஞ்ஞானக் கூடங்களல் மட்டுமே பயன்படுத்தினார்கள். இரவு பகலாக அதன் முன் தவமாகக் கிடந்த பில்கேட்ஸ், தானாகவே புத்தகங்களையும், கையேடுகளையும் படித்து கம்ப்யூட்டர் மொழியான ‘பேசிக்’கில் (BASIC) புரோகிராம் எழுதத் தொடங்கினார். அவருடைய பள்ளத் தோழர் பால் அலெனுக்கும் அதே ஆர்வம். திடீரென்று ஒருநாள், ‘இனிமேல் மாணவர்கள் கம்ப்யூட்டரை இலவசமாகப் பயன்படுத்த முடியாது’ என்ற அறிவிப்பு வந்தது. இருவரும் கவலைப்பட்டனர். அந்தக் காலகட்டத்தில் கம்ப்யூட்டரை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தும் பழக்கம் அதிகமாக இருந்தது ‘அந்த கம்ப்யூட்டரில் ஏதாவது குறைபாடு இருந்தால் வாடகை கொடுக்கத் தேவையில்லை’ என்று வாடகைக்குக் கொடுக்கும் நிறுவனங்கள் அறிவித்திருந்தன. குறைபாடுகள் அதிகம் இருக்கவும் செய்தன.
  பில்கேட்ஸ் நினைத்திருந்தால் வாடகைக்கு கம்ப்யூட்டர் எடுத்து, அதில் உள்ள குறைபாடுகளைச் சொல்லி, வாடகை கட்டாமல் பயன்படுத்தியிருக்க முடியும். ஆனால், அவர் கம்ப்யூட்டர் வாடகைக்குத் தரும் நிறுவனங்களல் ஒன்றான ‘கம்ப்யூட்டர் சென்டர் கார்ப்பரேஷனு’க்குச் சென்று அவர்கள் கம்ப்யூட்டரில் உள்ள குறைபாடுகளைக் கண்டுபிடித்துத் தருவதாக ஒப்பந்தம் செய்துகொண்டார். அதனால், அந்தக் குறைபாடுகள் நீக்கப்பட்டு, அவர்களுக்கு வாடகைப் பணம் பெருகியது. பில்கேட்ஸ் சம்பளமாகப் பெற்றுக்கொண்டது இலவசமாக கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் உரிமையை!
  கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்துவதைவிட, புதிய திசையில் வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளும் கலை அவரிடம் நிறையவே இருந்தது வாகனப் போக்குவரத்து விவரத்தை கம்ப்யூட்டரில் உள்ளடும் ‘டேட்டா என்ட்ரி’ வேலை 17 வயது பள்ள மாணவன் பில்கேட்ஸூக்குக் கிடைத்தது. ஒவ்வொரு வாகனமும் கடந்து செல்லும் போது காகிதச் சுருளல் ஒரு துளை போடப்படும். அந்தத் துளைகளை எண்ணி கம்ப்யூட்டரில் என்டர் செய்வதுதான் வேலை.
  துளைகளை எண்ணிச் சொல்வதற்கு சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்து, ‘டிராஃப்- ஓ -டேட்டா’ (Traf-O-Data) என்று பெயரிட்ட பில்கேட்ஸூக்கு, இந்தத் தொழிலில் நல்ல லாபம்! போக்குவரத்து விவரங்களை அலசி அதை நெறிப்படுத்துவதற்காகப் பல நகராட்சிகள் அந்தக் கருவியை நாடியபோது, ‘இனிமேல் நாங்களே அந்த வேலையை நகராட்சிகளுக்குச் செய்துதருவோம்’ என்று அமெரிக்க மத்திய அரசு அறிவித்துவிட்டது. பில்கேட்ஸின் பிஸினஸ் படுத்துவிட்டது.
  இந்தச் சமயத்தில் அவர் ஹார்வர்ட் கல்லூரியில் இணைந்தார் அதற்குப் பக்கத்திலேயே பால் அலெனுக்கு ஒரு வேலை கிடைத்தது. இருவரும் அடிக்கடி சந்தித்தனர். 1975 ஜனவரி மாதம் ‘பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ்’ இதழில் ‘உலகின் முதல் மைக்ரோ கம்ப்யூட்டர் அல்டெய்ர் 8800’ என்று வந்த கட்டுரையை எடுத்துக்கொண்டு பில்கேட்ஸிடம் ஓடிவந்தார் அலென். அதைத் தயாரித்த எம்.ஐ.டி.எஸ். (M.I.T.S) நிறுவனத்தைத் தொடர்புகொண்ட கேட்ஸூம் அலெனும், ‘உங்கள் கம்ப்யூட்டரில் பேசிக் புரோகிராம் பயன்படுத்த முடிந்தால் நன்றாக இருக்கும். அதைச் செயல்படுத்த உதவும் பேசிக் இன்டர்பிரட்டர் (புரோகிராமை கம்ப்யூட்டர் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றித்தரும் இடைநிலை சாஃப்ட்வேர்) எங்களடம் இருக்கிறது’ என்று அள்ளவிட்டனர். உண்மையில் அவர்களடம் ‘அல்டெய்ர்’ ரக கம்ப்யூட்டர் ஒன்றுகூட கிடையாது.

  ‘எம்.ஐ.டி.எஸ்-ஸின் ஹார்ட்வேர், தனது சாஃப்ட்வேர் இரண்டும் சேர்ந்து முழுமையான கம்ப்யூட்டராக இயங்கும்’ என்ற ஒப்பந்தம் போட்டார் பில்கேட்ஸ். இனி இங்கு என்ன வேலை என்று ஹார்வர்டில் இருந்து வௌயேறினார். 1975 ஏப்ரலில் ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனம் உருவானது. இனி எதிர்காலம் மைக்ரோ கம்ப்யூட்டருக்குத்தான் என்பதை உணர்ந்த பில்கேட்ஸ், தன்னுடைய சாஃப்ட்வேர் உரிமையை கம்ப்யூட்டர் தயாரிக்கும் பிற நிறுவனங்களுக்கும் விற்பனை செய்தார்.

  இதில் எம்.ஐ.டி.எஸ். அதிருப்தி அடைந்ததைப் பற்றியோ, கோர்ட்டுக்கு இழுத்ததைப் பற்றியோ கவலைப்படவில்லை. வெறும் ‘பேசிக்’ புரோகிராமோடு நிற்காமல் ‘ஃபோர்ட்ரான்’, ‘கோபால்’ ஆகிய மொழிகளுக்கும் இன்டர்பிரட்டர் உருவாக்கினார்.
  அவற்றை கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களடமே கொடுத்து கம்ப்யூட்டரோடு பொட்டலம் கட்டி விற்கும்படி ஒப்பந்தம் போட்டார். பில்கேட்ஸின் சாஃப்ட்வேர் இல்லாமல் கம்ப்யூட்டர் முழுமையடையாது என்ற நிலையை உருவாக்கிவிட்டார். மிகப்பெரிய கம்ப்யூட்டர் நிறுவனமான ஐபிஎம் மைக்ரோசாஃப்ட் நிறுவனக் கதவுகளைத் தட்டியதுதான் பில்கேட்ஸின் வாழ்வில் திருப்புமுனை! அப்படியரு சூழ்நிலையைக் கையாள்வது எப்படி என்ற பாடத்திட்டம் உருவானது.அலெனுக்கு ஒரு வேலை கிடைத்தது. இருவரும் அடிக்கடி சந்தித்தனர். 1975 ஜனவரி மாதம் ‘பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ்’ இதழில் ‘உலகின் முதல் மைக்ரோ கம்ப்யூட்டர் அல்டெய்ர் 8800’ என்று வந்த கட்டுரையை எடுத்துக்கொண்டு பில்கேட்ஸிடம் ஓடிவந்தார் அலென். அதைத் தயாரித்த எம்.ஐ.டி.எஸ். (ஙஐபந) நிறுவனத்தைத் தொடர்புகொண்ட கேட்ஸூம் அலெனும், ‘உங்கள் கம்ப்யூட்டரில் பேசிக் புரோகிராம் பயன்படுத்த முடிந்தால் நன்றாக இருக்கும். அதைச் செயல்படுத்த உதவும் பேசிக் இன்டர்பிரட்டர் (புரோகிராமை கம்ப்யூட்டர் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றித்தரும் இடைநிலை சாஃப்ட்வேர்) எங்களடம் இருக்கிறது’ என்று அள்ளவிட்டனர். உண்மையில் அவர்களடம் ‘அல்டெய்ர்’ ரக கம்ப்யூட்டர் ஒன்றுகூட கிடையாது.
  ‘எம்.ஐ.டி.எஸ்-ஸின் ஹார்ட்வேர், தனது சாஃப்ட்வேர் இரண்டும் சேர்ந்து முழுமையான கம்ப்யூட்டராக இயங்கும்’ என்ற ஒப்பந்தம் போட்டார் பில்கேட்ஸ். இனி இங்கு என்ன வேலை என்று ஹார்வர்டில் இருந்து வௌயேறினார். 1975 ஏப்ரலில் ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனம் உருவானது.

  வேளாண்மை அன்றும்…இன்றும்… இனியும்

  மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப புதிய பயிர்களைத் தேர்வு செய்வதிலும், அதில் அதிக விளைச்சலை எடுப்பதிலும் தமிழக விவசாயிகள் மிகவும் கைதேர்ந்தவர்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் புதிய புதிய பயிர்கள் பயிரிட்டு கடைசியில் சரியான விலை கட்டுபடியாகாத காரணத்தால் அந்த பயிர்களைப் பயிரிடுவதை விட்டு மீண்டும் புதிய பயிர்களை தேடி அழைவது நமக்கு வாடிக்கை ஆகிவிட்டது.
  இந்த மக்காச்சோளத்தில் அப்படி என்ன தான் இருக்கிறதோ தெரியவில்லை, இந்த பயிர் தமிழகத்து விவசாயிகளிடம் வந்த பிறகு தொடர்ச்சியாக இதன் பயிரிடும் விளைநிலம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. விளைச்சல் திறனும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தொடர்ச்சியாக கன்னியாகுமரி முதல் சென்னை வரை அனைத்து மாவட்டங்களிலும் மக்காச்சோளம் பயிரிடுதலின் பரப்பளவு அதிகரித்துக்கொண்டே வருகிறது.
  மக்காச்சோளம், இந்தியாவின் பாரம்பரிய பயிர் இல்லை. இது மெக்சிகோ நாட்டை தாயகமாகக் கொண்டது. உலகத்தில் தற்போது பயிரிடப்படும் அனைத்து மக்காச்சோளமும் மெக்சிகோ நாட்டில் இருந்து தான் வந்தது.
  இந்த மக்காச்சோளம் முதலில் சிறிய பல கதிர்களைக் கொண்ட பயிராக இருந்து வந்தது. இது மனிதன் தனக்கு தேவையானது போல் மக்காச்சோளத்தின் அமைப்பை பயிர் இனப்பெருக்க உத்தி மூலம் தற்போதைய ஒன்று அல்லது இரண்டு மூட்டை வரக்கூடிய மக்காச்சோளப் பயிராக மாற்றி அமைத்துக் கொண்டு பயிரிட ஆரம்பித்தான்.
  மக்காச்சோளப் பயிர் நீங்கள் கொடுக்கும் உரம், தண்ணீர் அளவுக்கு ஏற்றது போல் தன்னால் இஸ்ன்ற மக்காச்சோள மணிகளைக் கொடுக்கும். இதுதான் இந்த பயிரின் வெற்றி ரகசியம். அதிகமாக உரம் இட்டு, நீர்ப்பாய்ச்சிய விவசாயிகளுக்கு அதிக மகசூல் தரவல்லது.
  எனவே ஒரு ஏக்கருக்கு 3 முதல் 4 டன் வரை விளைச்சல் எடுக்கும் விவசாயிகள் இருக்கிறார்கள். ஒரு போகம் விவசாயம் செய்தாலும் அதற்கு ஏற்ற மழை மற்றும் உரம் இருந்தால் புஞ்சையில் கொடுக்கும் அதே மகசூல் கொடுக்கவல்லது.
  அதிக மகசூல் கிடைப்பதால் மட்டுமே ஒரு பயிர் அனைவரின் வரவேற்பைப் பெற்றுவிட முடியாது. இந்த மக்காச்சோளம் பயிரிடுதலில் தற்போது வேலை பொருட்கள் கிடைக்காத சமயத்தில் எப்படி சமாளிப்பது. தற்போது இருக்கும் மக்காச்சோள அறுவடை இயந்திரத்தில் சிறு மாற்றங்களைச் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். எனவே அறுவடை இயந்திரம் அனைத்து பகுதிகளிலும், அனைத்து பருவங்களிலும் கிடைக்கிறது. எனவே அறுவடை பற்றி விவசாயிகள் எந்த பருவத்தில் பயிர் செய்தாலும் கவலைப்படத் தேவையில்லை.
  அறுவடை செய்தால் மட்டும் போதுமா? விளைவித்த பொருளுக்குச் சரியான விலை கிடைக்காமல், காணாமல் போன பல பயிர் வகைகள் அட்டவணையில் நீளமாக உள்ளது. ஆனால் மக்காச்சோளம் வருடத்தில் எந்த மாதத்தில் கொடுத்தாலும் வாங்க தயாராக இருக்கும் கோழி பண்ணையாளர்கள் தமிழகத்தில் உள்ளனர்.
  கோழிப்பண்ணைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சத்துணவு முட்டை, தனிமனிதனுக்கு இறைச்சி கிடைக்கும் அளவு, வாங்கும் பொருளாதார ஆதாரம் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே கோழி தேவைகள் அதிகரிக்கும் காரணத்தால் தமிழகத்திற்குத் தேவையான மக்காச்சோளத் தேவை அதிகமாக இருக்கிறது. ஆனால் இதை 50 சதம் தான் தமிழக விவசாயிகள் பூர்த்தி செய்து வருகிறார்கள். எனவே தொடர்ச்சியான தேவைகள் இருப்பதால் மக்காச்சோளம் விலை எப்போதும் கிலோ 9 11 வரை நல்ல நிலையில் உள்ளது.
  இந்தியாவில் மக்காச்சோளத் தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்த கோழி, பன்றி, மாட்டு பண்ணைகள் வளர்ச்சி அதிகம் உள்ளதால், தொடர்ந்து மக்காச்சோளத்திற்கு நல்ல விலை கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறது.
  எனவே எந்த ஒரு பயிராக இருந்தாலும், நல்ல கட்டுபடியான விலை, எளிமையாக பயிரிடும் முறை, தொடர்ச்சியான தேவை, அதை நம்பி உள்ள தொழில்கள், நல்ல முன்னேற்றம் ஆகிய காரணிகளை அறிந்து பயிர் செய்தால் விவசாயிகள் தொடர்ந்து விவசாயத்தை வெற்றிகரமாக செய்ய முடியும்.