May, 2012 | தன்னம்பிக்கை - Part 3

Home » 2012 » May (Page 3)

 
 • Categories


 • Archives


  Follow us on

  விதையென விழு! விருட்சமென எழு!!

  அது 1980ம் வருடம். அப்போது அவருக்கு வயது 21. கல்லூரியில் இளங்கலை வணிகவியல் (ஆ.இர்ம்.) இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கிறார். தங்கள் கிராமத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த தனியார் பள்ளியின் செயல்பாடுகள் சரியில்லாததையும், மாணவர்களுக்குத் தேவையான, தரமான கல்வியைக் கொடுக்க முடியாத சூழலும் இருப்பதை உணர்கிறார். இளமைக்கே உரித்தான வேகத்துடன் சென்று, பள்ளியைத் தான் நடத்திக் கொள்ளுவதாகக் கேட்கிறார்.

  Continue Reading »

  இன்ஸ்டாகிராம்

  சமூக வலைதளங்களில் முதன்மை பெற்று விளங்கும் ‘பேஸ்புக்’ மொபைல் போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து கொள்ள உதவும் இணையதளமான இன்ஸ்டாகிராமை 100 கோடி டாலர் கொடுத்து ஏப்ரல் 12, 2012-ல் வாங்கியது. ஒரு நிறுவனம் தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் 100 கோடி டாலர் விலைக்குப் போவது இணைய வரலாற்றில் கேள்விப்படாத ஒன்று. சோசியல் நெட்வொர்க்கில் புரட்சியை ஏற்படுத்தி இருக்கும் இன்ஸ்டாகிராம் பற்றிய பதிவு தான் இது.
  அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ் கோவில், 2010ம் ஆண்டு கெவின் சிஸ்ட்ரோம் (Kevin Systrom) என்றஇளைஞரால் துவக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் நிறுவனம் 13 ஊழியர்களைக் கொண்டிருந்தது.
  கூகுள் நிறுவன முன்னாள் ஊழியரான கெவின், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர். 2006ம் ஆண்டு மேலாண்மைப் படிப்பை முடித்த கெவின் மேபீல்டு கல்வி நிறுவனத்தில் ஒன்பது மாதம் தொழில் பழகுநர் பயிற்சியும் முடித்தவர்.
  தொழில் பயிற்சி முடித்த கெவின், ஈவான் வில்லியம், ஜேக் டோர்சி, பிஸ்டோன் ஆகியோருடன் இணைந்து ‘டிவிட்டர்’ இணையதளத்தைத் துவக்கினார். அதன் பின்னர் கெவின் ஜி-மெயிலில் சிறிது காலம் பணியாற்றினார்.
  பின்னர் அதிலிருந்து வெளியேறி, மைக்ரீகருடன் (Michel ‘Mike Krieger) இணைந்து, ஆண்டர்ஸன் ஹிப்ரோவிட்ஸ் நிறுவனத்திடமிருந்து 5 லட்சம் டாலர் முதலீடு பெற்று இன்ஸ்டாகிராம் சேவையைத் துவக்கினார்.
  புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்ள உதவும் இணையதளமான இன்ஸ்டாகிராம், மொபைல் போனில் எடுக்கப்பட்ட படங்களை, டிஜிட்டலில் வடிகட்டி சமூக வலைதளங்களில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். இதில் இலவச புகைப்பட பகிர்வுத் திட்டம் என்றஒன்று உள்ளது. அதன் தனித்தன்மை புகைப்படங்கள் சதுர வடிவமாகவோ, கோடாக் இன்ஸ்டாமெட்டிக், போலராய்டு படங்களைப் போன்று மொபைலில் எடுத்த படங்களை மாற்றி அனுப்ப முடியும். ஆரம்பத்தில் ஐபோன் (i-Phone), ஐபாட் (i-Pod) மற்றும் ஐடச் (i-Touch) போன்றவற்றின் பயன்பாட்டில் இன்ஸ்டாகிராமின் சேவையை ஆப்பிள் நிறுவனம் இணைத்துக் கொண்டது. பின்னர் ஏப்ரல் 2012ல் அன்ட்ராய்டு கேமரா தொலைபேசிகளில் இதன் பயன்பாடு இணைத்துக்கொள்ளப்பட்டது.
  இந்த சேவை துவக்கப்பட்ட ஏழாவது மாதத்திலேயே இரண்டு லட்சம் பேர் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள துவங்கிவிட்டனர். 2010ல் 17 லட்சத்து 50 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்கள் மூலம் ஒவ்வொரு நாளும் 2 லட்சத்து 90 ஆயிரம் போட்டோக்கள் அப்லோடு செய்யப்பட்டன.
  இன்ஸ்டாகிராமின் இந்த வளர்ச்சியில் மேலும் இரண்டு நிறுவனங்கள் இதில் 70 லட்சம் டாலரை முதலீடு செய்தன. இன்ஸ்டாகிராமை, பேஸ்புக் வாங்கினால் இதன் சேவை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்றஎதிர்பார்ப்பு இருந்த நிலையில் ஏப்ரல் 12ல் 100 கோடி டாலர் கொடுத்து இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை 13 ஊழியர்களுடன் வாங்கிக் கொண்டது.
  ஜனவரி 2011ல் ‘Best Mobile App’ என்றரன்னர் அப் விருதைப் பெற்றதுடன் இன்ஸ்டாகிராமின் CEO-வான கெவின் “The 100 most creative people (Apple Inc) in business in 2011” பட்டியலில் விருதில் 66வது இடத்தைப் பெற்றார். டிசம்பர் 2011ல் ஆப்பிள் இன்க்-ன் “App of the Year for 2011” விருதைப் பெற்றஇன்ஸ்டாகிராமில் ஒவ்வொரு 12 மணி நேரத்திற்கும் ஒரு லட்சம் போட்டோக்கள் டவுன்லோடு செய்யப்படுகின்றன.

  மேலாண்மை மந்திரங்கள்

  நீங்கள், உங்கள் தாய், தந்தை இப்படி அனைவருமே மேலாளர்கள் தான். நான் மாணவனுக்காகத் தானே இருக்கிறேன். எனக்குக் கீழே யாரும் வேலை பார்க்கவில்லையே, நான் எப்படி மேலாளர் என்று கேட்கலாம். நீங்களும் மேலாளர்கள் தான். ஏனென்றால் உங்களுக்கும் செய்ய வேண்டிய பணிகள் உண்டு. செய்து முடிக்க வேண்டிய வேலைகள் உண்டு. பழக வேண்டிய நண்பர்கள் உண்டு. இந்த வேலைகளைச் செவ்வனே செய்தால் நீங்கள் நல்ல மேலாளர். இல்லையென்றால் நீங்கள் நல்ல மேலாளர் இல்லை.
  ஒரு தலைமைப்பண்புடையவராக இருப்பதற்கோ, ஒரு நல்ல மேலாளராக செயலாற்றவோ, உங்களுக்குக் கீழே ஆயிரம் பேர் வேலை பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், உங்களுக்கும் நிறைய வேலைகள் இருக்கின்றன. பாடத்தைப் படிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. போட்டிகளில் பங்கு கொள்ள வேண்டியிருக்கிறது. தேர்வு எழுத வேண்டியுள்ளது. வீட்டிலுள்ள வேலைகளைச் செய்ய வேண்டும். நண்பர்களோடு பேச வேண்டும். இவற்றை ஒழுங்காகச் செய்தாலே ஒரு மேலாளருடைய வேலையை நீங்கள் செய்கிறீர்கள் என்று பொருள்.
  காலையில் எழுந்திருங்கள்:
  காலையில் ஐந்து மணிக்கு எழுந்துவிடுவது என்பது ஒரு பயனுள்ள செயல். அதைச் செய்தால் நீங்கள் ஒரு நல்ல மேலாளராக இருக்க வாய்ப்புண்டு. நல்ல பல பணிகளைக் காலை ஐந்து மணி முதல் ஏழு மணி வரை செய்து முடிக்க முடியும். பல நல்ல யோசனைகளும், பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் மனதில் தோன்றுவதும் வளர்வதும் இந்த அதிகாலைப் பொழுதுகளில் தான்.
  வாசியுங்கள்:
  சாதாரண கிராமங்களிலிருந்து கற்க வந்திருப்பீர்கள். உங்களுக்கு ஆங்கில அறிவு சற்றுக்குறைவாக இருக்கும். ஆங்கிலம் சரியாகப் பேசத் தெரியவில்லையென்றால் எந்த நிறுவனத்திலும் உங்களை ஒரு மேலாளராக சேர்க்க மாட்டார்கள். ஆங்கில அறிவை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு பாடத்தை எப்படிப் பயில்வது என்பதை திட்டமிட்டு செயல்படுத்துவதும் ஒரு மேலாண்மைத் திறன் தானேஙு
  டாக்டர் அப்துல்கலாம் தமிழ் வழியில் தான் படித்திருக்கிறார். ஆனால் அவரது ஆங்கிலம் அற்புதமானது. எந்த மொழியையும் கற்றுக்கொள்ள முடியும். மொழி பயில்வது என்பது ஒரு கலை. தமிழ் வழியில் படித்தவர்கள் ஆங்கிலம் படிக்கக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. நானே தமிழ் வழிக் கல்வியில் படித்தவன் தான். ஆனால் இன்று ஆங்கிலத்தில் புத்தகங்களைக் கூட எழுத முடிகிறது.
  நான் எழுதிய ‘ஆங் அம்க்ஷண்ற்ண்ர்ன்ள்’ என்ற புத்தகத்தைப் படித்துப் பார்த்தால் யாரும் ஆங்கிலம் கற்க முடியும் என்று உங்களுக்குப் புரியும். தினமும் ஒரு மணி நேரம் ஆங்கிலச் செய்திகளைக் கேட்க வேண்டும். செய்தித்தாள்களைப் படிக்க வேண்டும். ஆங்கிலத்தில் பிரபலமான கதைப் புத்தகங்களைப் படியுங்கள். ஆங்கிலப் புலமை தானாக வரும். மேலாண்மையின் ஒவ்வொரு பிரிவிற்கும் நல்ல புத்தகங்கள் உள்ளன. விற்பனை மேலாண்மையைப் பற்றி ஆங்கிலத்தில், =பிலிப் கோட்லர்’ எழுதிய புத்தகம் உள்ளது. இது தவிர நிறைய நல்ல புத்தகங்கள் உள்ளன. மேலாண்மை என்ற தலைப்பில் பீட்டர் டிரக்கர் எழுதிய புத்தகங்கள் உலகப் புகழ் பெற்றவை. அவற்றைப் படியுங்கள்.
  கௌடில்யர் எழுதிய ‘அர்த்த சாஸ்திரம்’ ஆங்கிலத்தில் உள்ளது. அதைப் படியுங்கள். ராபர்ட் கிரீன் எழுதிய, ’33 ட்ராட்டஜிஸ் ஆப் வார்’, ’48 லாஸ் ஆப் பவர்’, ஸ்டீபன் கோவே எழுதிய ‘செவன் ஹேபிட்ஸ்’, நெப்போலியன் ஹில் எழுதிய ‘லா ஆப் சக்ஸஸ்’ புத்தகங்கள் போன்று நிறைய நல்ல புத்தகங்கள் உள்ளன. அவற்றை வாசிக்க வேண்டும். நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.
  என் அப்பா கடற்படையில் இரண்டாம் உலகப்போரில் பணியாற்றியவர். விவசாயக் குடும்பம் தான். வசதி குறைவான வீடு தான். நான் வசித்ததும் கிராமத்தில் தான். ஆனாலும் நான் சிறுவனாக இருக்கும்போது ஆங்கிலப் பேப்பர் வாங்கிக் கொடுப்பார். எனது தந்தை, “வாசிக்க வேண்டும், நல்ல நல்ல புத்தகங்களைப் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்று கூறுவார். நானும் தவறாமல் ஆங்கிலச் செய்தித்தாள் படிப்பேன். கிராமத்தில் தமிழ் வழிக் கல்வியானாலும் ஆங்கில அறிவு பெறுவதற்கு ஆங்கிலப் பத்திரிக்கை உதவியது.
  ‘என்னால் முடியும்’ என்று நம்புங்கள்:
  படித்து முடித்த பின் நீங்கள் வேலை பார்க்கத் தொடங்கும் போது சிரமங்கள் ஏற்படும். சிரமங்களைக் கண்டு கலங்குவது அறிவுடைமை ஆகாது. இப்போதோ உங்கள் பெற்றோர்கள் கஷ்டப்படுவார்கள். கஷ்டப்பட்டு தான் படிக்க வைத்திருப்பார்கள். இந்த சிரமமான சூழ்நிலையில் என்னால் மேலாளராக முடியாது என்று நினைப்பது தவறு. இன்னும் சொல்லப்போனால், சிரமமான சூழ்நிலையில் தான் சிறந்த தலைவர்கள் உருவாகிறார்கள்.
  ‘பெரிய தொழிலதிபருக்குப் பிள்ளையாகப் பிறந்திருந்தால் நான் பெரிய நிறுவனத்தைத் தொடங்கியிருப்பேன்; நான் கலெக்டர் பிள்ளையாகப் பிறக்கவில்லையே’ என்றெல்லாம் வருத்தப்படாதீர்கள். அதைவிட பெரிய முட்டாள்தனம் வேறில்லை. நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். தொழில் தொடங்குவதற்கு பணம் தேவையில்லை. மனம் தான் தேவை. பெரிய தொழில் தொடங்க முக்கிய முதலே ‘தன்னம்பிக்கை’ தான் என்கிறார் ஆங்கில அகராதியைத் தொகுத்த சாமுவேல் ஜான்சன்.
  இந்தியாவில் உள்ள முதல் நூறு பணக்காரர்களின் பெயர்களை எழுதினால் அவர்களெல்லாம் பெரிய பணக்கார வீட்டில் பிறந்தவர்கள் இல்லை. இன்று உலகப் பணக்காரர்கள் முகேஷ் மற்றும் அனில் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி லாரி டிரைவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? திருபாய் அம்பானியின் இரண்டு பிள்ளைகளில் ஒருவரான முகேஷ் அம்பானி தான் இன்று இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கிறார். அம்பானி சாதாரண டிரக் டிரைவராக இருந்த போது, அவரிடம் பணமில்லை. சிரமமான சூழ்நிலைகள் தான் சிறந்த மேலாளர்களை, தலைசிறந்த தலைவர்களை உருவாக்குகின்றன.
  என்னுடைய இருபது வருடப் பணி அனுபவத்தில் பெரிய பெரிய பிரச்சனைகளையெல்லாம் சந்தித்திருக்கிறேன். வீரப்பனை யாருமே எதிர்க்காத போது அவனைப் பிடிப்பதற்கு முதலில் முயற்சி எடுத்த அனுபவம் எனக்கு உண்டு. என்னுடன் நியமிக்கப்பட்டவர்கள் நான்கு பேர். கர்நாடகாவின் டி.எப்.ஓ. சீனிவாசன், எஸ்.பி. ஹரிகிருஷ்ணா, எஸ்.ஐ. ஷகீல், எஸ்.ஐ. தினேஷ் குமார். நாங்கள் ஐவரும் ஒரு குழுவாக செயல்பட்டோம்.
  முதல் வாரத்திலேயே துப்பாக்கிச் சூடு. வீரப்பன் சுட்டதில் என்னுடன் இருந்த மூன்று பேர் காயமடைந்தார்கள். அதில் ஒருவர் பின்னர் இறந்துவிட்டார். சில நாட்கள் கழித்து நடந்த சண்டையில் நான் திருப்பிச் சுட்டதில் அவர்கள் கூட்டத்தில் இரண்டு பேர் இறந்தார்கள். துப்பாக்கிக் குண்டுகள்; உயிரே போய்விடும்.
  இந்த முயற்சியில் இரண்டு வருடங்கள் முடியும் போது எங்களது ஐந்துபேர் கொண்ட குழுவில் நான்கு பேர் இறந்துவிட்டார்கள். வீரப்பனே அவர்களைச் சுட்டுக்கொன்றான்.
  நான் மட்டும் தான் உயிருடன் இருக்கிறேன். சிரமமான சூழ்நிலைகள் வரும்போது கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் அதுபோன்ற சூழ்நிலைகள் தான் ஒரு சிறந்த அதிகாரியை உருவாக்கும். ஆபத்துக்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எனக்கு இன்று வந்துவிட்டது.
  பிரச்சனைகள் இருக்கிறதென்று பயப்படாதீர்கள். அவற்றை எதிர்கொள்ளுங்கள். பிரச்சனைக்கு வரவேற்பு கொடுங்கள். பிரச்சனைகள் இருந்தால், அவற்றை சமாளித்து அனுபவம் பெற முடியும். பிரச்சனைக்கு தீர்வு கண்டு பழகிய ஒருவர் தான் நல்ல தலைவராக முடியும்.
  நல்ல உறவுகள்:
  நீங்கள் ஒரு நல்ல மேலாளராக அல்லது நல்ல தலைவராக விரும்பினால் நல்லவர்களுடன் உறவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். உறவுகளும் நல்லவையாக இருக்க வேண்டும். கல்லூரி முதல்வருக்குப் பேராசிரியர்களுடனும், அலுவர்களுடனும் நல்ல உறவு வேண்டும். அவர்களது தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  நான் ஒரு காவல்துறை அதிகாரி என்றால் மாநகர காவல் துறையின் 3000 அதிகாரிகளுக்கு என்னென்ன தேவை என்று பார்த்து, அதைச் செய்து கொடுக்க வேண்டும். கடைநிலை ஊழியனாக இருந்தாலும் நாம் அவர்களிடம் நல்ல உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  மேலாண்மை திறமையை எப்படி வளர்த்துக் கொள்வது? உங்களுக்கு எல்லா திறமைகளும் உள்ளன. உங்களை நீங்களே நல்ல மேலாளராக்கிக் கொள்ள முடியும். உங்களை குறைவாக எடை போடாதீர்கள்.
  மேலாண்மைத் திறன்களை வளர்த்துக் கொண்ட மாணவன் வளாக நேர்காணலில் (இஹம்ல்ன்ள் ஐய்ற்ங்ழ்ஸ்ண்ங்ஜ்) தன்னை அதிக விலைக்கு விற்பனை செய்கிறான். சிறந்த கல்லூரிகளில் படித்து முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு சம்பளம் வருடத்திற்கு 12 லட்சம் கொடுக்கிறார்கள். மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம். அதே, கல்லூரியின் கடைசி மாணவனுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் கொடுக்கக்கூட அதே நிறுவனம் தயங்குகிறது.
  முதல் மாணவன் தன்னைத்தானே 12 லட்சத்திற்கு விற்கிறான். கடைசி மாணவன் தன்னை ஒரு லட்சத்திற்குத்தான் விற்கிறான். காரணம் ஒன்றே ஒன்று தான். அது அவர்களிடம் இருக்கிற மேலாண்மைத்திறன்.

  உள்ளத்தோடு உள்ளம்

  இனியொரு விதி செய்வோம்
  பொருளாதாரத்தைப் பலப்படுத்த குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் அவசியம் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்காக சொந்த ஊரை விட்டு வேறொரு ஊருக்கு இடம் பெயர வேண்டியது இன்று தவிர்க்க முடியாததாக இருக்கிறது. வந்து சேர்ந்த ஊரில் குழந்தை, பள்ளி என்று வரும்போது உடனிருந்து கவனிக்க முடியாத நிலை. இதுதான் நம் பாரம்பரியம், கலாச்சாரம் இதில் இருந்து மாறுபட்டு வாழ்தல் கூடாது. இப்படி இப்படி வாழ்ந்தால்தான் வாழும் வாழ்வு அர்த்தமுள்ளதாக மாறும் என்று நீதி போதனைக் கதைகளை எடுத்துச் சொல்ல தாத்தா, பாட்டியை உடனும் வைத்துக் கொள்வதில்லை.

  Continue Reading »