May, 2012 | தன்னம்பிக்கை - Part 2

Home » 2012 » May (Page 2)

 
 • Categories


 • Archives


  Follow us on

  பல இரசம் (பலரசம்)

  அடுத்த விநாடி…… என்கின்றதொரு புத்தகம். அதில், ஆசிரியர் உங்கள் வாழ்வை மாற்றும் வல்லமை படைத்த புத்தகம் இது என்றேதான் முதல் பக்கத்தில் சொல்லியிருக்கின்றார், உண்மைதான் என்று எனக்கு தோன்றுகின்றது. உற்சாகம் புத்தகத்திலிருந்து ஷாம்ப்பெய்ன் பாட்டில் போல் பீறிட்டு கிளம்புகின்றது. ஒரு பக்கத்தில் தீபக் சோப்ரா இன்னொரு பக்கம் தமிழ் பக்தி இலக்கியம் என ஆசிரியருடைய கலவை, கலகலவென புத்தகத்தை இழுத்துச் செல்கின்றது.
  பலரசம் என்னும் நமது தலைப்பில் விவாதிக்க ஏற்றவாறு பல விதமான சுவையான கருத்துக்கள் பார்க்க கிடைக்கின்றது. ஒரு வரியில் சொல்கையில் பல கிளைகள் கிளைக்குமல்லவா மனது…. அதை அப்படியே வடித்துக்காட்டி வளங்காட்டி இருக்கின்றார். மனவளக்கலையை வலிமையாக படைத்துக் காட்டியுள்ளார்.
  எண்ணற்ற எழுத்தாளர்களை மேற்கோள்காட்டியுள்ளது; மேற்கோள் போல் இல்லாதவாறே தெரிவது அவர் வெற்றி. கற்பனையைப் பற்றியும் அதன் வலிமையினைப் பற்றியும் எளமையான எடுத்துக்காட்டுகளோடு புகுந்து விளையாடி இருப்பது என்ன அழகு….. அப்படியே மனதோடு ஒன்றிவிடுகின்றது. சிற்சில சின்னச்சின்ன நெருடல்கள் இருந்தாலும் அவையெல்லாம் பெரிதாக பேசப்படக் கூடியவையல்ல.
  நவரசங்களல் ‘சாந்தம்’ தான் கடைசியாக சேர்க்கப்பட்டது போலும். இரசம் முக பாவனை என்றெல்லாம் நாட்டியத்தில் இலக்கியத்தில் படித்தது பழஇரசம் என்கின்ற தலைப்பு தேர்வானதும் அது பல இரசம் என்றுதான் மாறிவிழப்போகின்றது. என உள்ளுணர்வு சொல்லி விடுகின்றது. மின்சார சிக்கனமென L.E.D லைட்டில் எழுதினால் பல நிழல்கள் விரலிலிருந்து விழுவது போல ஒவ்வொரு திரைப்படமோ? புத்தகமோ? பல இரசங்களை கொண்டிருக்க வேண்டியது அவசியமோ?
  சந்திரபாபு என்று முகில் அவர்கள் எழுதிய கிழக்கு பதிப்பக புத்தகமொன்று படித்துவிட்டு You Tube சென்று அவரது நிறைய பாடல்கள் படிக்கப்பட்டது. ஆமாம்…… பாடல்களலிருந்து படித்துக்கொண்டது அதிகமாகத் தெரிகின்றது. பல இரசத்திற்கு இந்தப் புத்தகமும் அந்தப் புத்தகமும் (ஆளை சொல்கின்றேன்) ஒரு நல்ல எடுத்துக்காட்டு. நகைச்சுவை அச்சொல்லின் முதல் பதத்தில் இருப்பதைப்போல விலை மதிப்பில்லாத கலை என்று உணர்வுப் பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளது. ஒரு நிமிட மேலாளர் என்றொரு ஆங்கிலப் புத்தகத்தை ஒரே மூச்சில் மறுபடியும் (படித்தே.) படித்துக் குடித்தபோது சிரித்துக்கொண்டே நிர்வாகம் செய்வதுதான் எல்லோருக்கும் நல்ல நிர்வாகம் என்று ஆணித்தரமாக கென் ப்ளாஞ்ச்சர்டு சொல்வதை சந்திரபாபு மூலம் புரிந்துகொள்ள முடிந்தது.
  கிரிக்கெட் விளையாட்டின் பல விதமான பந்தது வீச்சுக்களை ஒரே மாதிரியாக எதிர்கொள்ள முடிவு செய்துவது எவ்வளவு உசிதமல்ல என்று ஐம்பது அடித்தபோது புரிந்தது. பல இரசங்களல் மைதானத்தின் பல திசைகளுக்கு பந்துகளை அனுப்பிவைக்கையில் உள்ள சுவையை உணர முடிந்தது. பெருமாளன் பந்து வீச்சு மிகச் சிரமமான நிலையை அடைய; உடனே, இடது கைப்பக்கமாக மட்டையை பிடிக்க ஆரம்பித்தது ஒரு சிறப்பம்சம். களத்தில் நண்பர் கார்த்தியின் திருமண நாள் ‘கேக்’ வெட்டிக் கொண்டாடிய பொழுது இடையே பார்த்தசாரதி கோவில் மாலையை மாற்றச்செய்து மகளுக்கு திருமணக் கோலத்தை பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததொரு இரசவாதம்.
  முதல் ஓவரில் எட்டு வைடு வீசினால் ஓபனிங் இறங்கி ‘தேவுடு’ காப்பது இன்னொரு வகை இரசம். வாழ்கையில் அந்தந்த பிரச்சனைகளுக்கான சமயோசித வார்த்தை வீச்சுக்களை எதிர்கொள்ள சரியான நேரத்தைத்தான் பயன்படுத்த வேண்டும். மறக்க வேண்டியதை மறந்து உற்சாகத்தோடு அடுத்த சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டும் என்பதை எல்லாம், நான் ஸ்ட்ரைக்கில் (‘Non-stike’) நின்றுகொண்டு நடுவரோடு கதைத்த பொழுது, நான் இங்கேயிருந்துப் பந்தை அடிப்பேன்-என்று அடம் பிடிக்கக் கூடாதுங்க என்று தத்துவமாய் உதிர்த்துக் கொண்டிருந்தது நினைவில் வைக்க வேண்டிய இரசம்.
  அதிசயமாக டிராவில் முடிந்த 20-20 மேட்சைப்பற்றி சொல்லிவிட்டு இ.ஆ.ப தேர்வு நேர்முக மாதிரி மன்றத்தில் அமர்ந்த இரசமான அனுபவத்தை பதிவு செய்வோம். தெரியாத புது அணியோடு என்பதனால் கவனமாக ஆடப்பட்ட 17.4 ஓவர்களல் முடிந்துபோன ஆட்டம் படு விறுவிறுப்பாகி பந்துக்குப் பந்து தீப்பற்றிக் கொண்டதுபோல பல இரசமாக அமைந்திருந்தது. இதே கிரவுண்டில் 220ஐ தாண்டிய பாதி அணியே 123 க்கு திருப்திப் பட்டுக்கொண்டது. கடைசி ஓவரில் 18 இரன்களைக் கொடுத்து சமமான நிலையை அடைந்தபோது கோப்பை இனி அடுத்த வாரமே என முடிவானது. கிரிக்கெட்டிலும் கால்பந்து ரேஞ்சுக்கு ஓடி விழுந்ததெல்லாம் புதுவித இரசமாக இருந்தது. நினைவு நிறையநாள் நீடிக்கும்.
  கால்பந்தில் நிறைய, வாழ்க்கை, கலந்திருக்கின்றதைப்போலவே வாழ்விலும், கால்பந்தின் சாரம் கலந்திருக்கின்றது. அலுவலகம், கல்வி முதலியவற்றில் எதையாவது புதிதாக அடைகையில் நாம் தனித்து சாதித்தாக உணர்வதில இரசம் குறைவே. ஒரு பந்தினை இலாவகமாக கோலாக மாற்றிவிட்டால் உடன் இரப்பர் பந்தைப்போல திரும்பி எகிறி நண்பர்களடத்தில் பரவச இரசத்தைப் பகிர்ந்துகொண்டு கைகளைத் தட்டியும் ஆளைத்தூக்கித் தட்டாமாலை சுழற்றி கொண்டாடுவதில் “நண்பர்களே நாம் எல்லோரும் ஒரு அணியின் பாகம்” என்று நினைவுபடுத்திக் கொள்ளுதல் ஒரு உன்னதமான இரசம்.
  சிலர் தனித்து நிற்கும் செயலைத் தவறாகப் புரிந்து கொண்டு தாமொரு அணியிலிருக்கின்றோம் என்பதை மறந்துவிட்டால் கோலடிப்பதில் சந்தோஷம் குறைந்துவிடுகின்றது. அணியில் தனியே தெரிபவர்கள் திரிகின்றார்கள். அணியில் பந்தை விட்டுவிட்டு எதிராளயை பதம் பார்ப்பவர்கள் பதட்ட இரசத்தையும் க்ரோத இரசத்தையும் பரவ விடுகின்றனர். தம் முன்னே உள்ள செயல் பந்து போன்றது. செயல்பாடு விளையாட்டு போன்றது. உடன் அல்லது எதிரே இருக்கும் தனியர்களைக் காட்டிலும் அவர்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் காட்டிலும், பந்தை கோலாக மாற்றுவது போல குறிக்கோள் ஒரு கர்ம யோகமாக இருப்பது முக்கியம். மன எழுச்சிச் சிக்கல்களலிருந்து பந்தைக் கடத்தி வருவதைப்போல, தௌவான ஆட்டக்காரர் கோப்புகளை, பாடத்திட்டத்தை பக்குவமாக முடித்து விடுகின்றார்.
  எதிராளயுடன் வம்பிழுத்துக்கொண்டு கால்பந்து மைதானத்தில் கைகலந்து கராத்தே விளையாடுவது போலத்தான் சக ஆர்வலர்களோடு கருத்துக் குழப்பம் வருவதும். காரியத்தில் கண்ணாயின், சுபம்-சீக்கிரமே. பிரச்சனைகளை தீர்ப்பதை விட்டுவிட்டு பிரச்சனை செய்தவர்களை வெறுப்பதும் இந்தவகை. கால்பந்தை சில நேரங்களல் பின்னோக்கி செலுத்த வேண்டி உள்ளது. அதை ‘மைனஸ் பாஸ்’ என்று சொல்வார்கள். அதைப்போல சில சமயங்களல் நம் சொல் எடுபடவில்லை எனில் பின்வாங்கி முன்னேறுவதில் தவறொன்றும் கிடையாது. அது திட்டமிடுதலில் ஒரு வகை.
  சமீபத்தில் Chess விளையாட்டின் அடுத்த கட்டத்தை காண இயன்றது. இணையதளத்தில் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அதில் ஒன்று இட்ங்ள்ள் விளையாட்டுத்தளம். அதில் ஒரு நிமிடம், மூன்று நிமிடம், ஐந்து நிமிடம், பத்து நிமிடம் என்று பல்வேறு கால அவகாசத்தோடு விளையாடும் தளங்கள் உள்ளன. அதில் விளையாடுவது புத்தம்புது அனுபவமாக இருக்கின்றது. மூளை சிறகடிக்கின்றது. அட்ர்னல் எகிறுகின்றது. இதயத்துடிப்பு உயர்கின்றது. சுருக்கமாகச் சொல்லப் போனால் ஒரு அதி ஆரோக்கியமான இரசமான அனுபவமாக அது இருக்கின்றது.
  ஒரு நிமிடத்திற்குள் பல நகர்த்தல்களை செய்யமுடியும் என்று நண்பர் கூறியபொழுது நம்பச் சிரமமாகவே இருந்தது. நகர்த்திக் காட்டியபொழுது புரிந்தது. சர சரவென நேரம் குறைந்துகொண்டே சென்றபொழுது ஆட்டம் களைகட்டிக்கொள்கின்றது. ஆன் லைனில் என்பதால் ஏதேதோ தூர தேசத்தில் இருப்போருடன் விளையாடுகிறோம் என்கின்ற உணர்வே அலாதியானதே.
  இணையதளங்களல் உலவும் முகப் புத்தக (Face Book) பயன்பாட்டில் நேரும் எண்ணற்ற நன்மைகளுக்கிடையே அவ்வப்போது நிகழ்ந்து போகும் குழப்பங்கள் குறித்தும் நமது தொடரில் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று ஒரு இரசமான கோரிக்கை வைத்தார் நம் நண்பர் ஒருவர் இவர் கிரிக்கெட் விளையாட வருகின்றேன் என்று, நண்பரோடு சேர்ந்து அவரது திருச்சி வீட்டிற்கு பக்கத்தில் இரப்பர் பந்தில் கொஞ்சநேரம் விளையாடிவிட்டு நிறைய நேரம் பழ இரசம் (அப்பாடி,தலைப்பு வந்து விட்டது) அருந்திவிட்டு கிளம்புகின்ற டைப். இவர் நமது மட்டை கிளப்பும் பட்டை கிளப்பும் சத்தத்தைக் கேட்டு சப்த நாடியும் அடங்கி….. அடுத்த முறை பார்க்கலாம், என்று விட்டு பார்க்காமலே இருப்பது வேறு விஷயம்.
  வீட்டில் இரசம் வைக்கப் பழகிக்கொண்டால் வௌநாடு சென்றால் உபயோகப்படும் என்ற உயர்ந்த இலக்கு நிரம்ப நாட்களாய் முயற்சி திருவினையாக்காமலேயே இருக்கின்றது. மூக்கு கண்ணாடி பெயரில் இருப்பதுபோல மூக்கோடு தொடர்பற்றது, மெழுகு வர்த்தியை நன்றாக படிக்க வேண்டும் என்றால் மெழுகு விளக்கு என்றேதான் சொல்வேண்டும். அதிஇரசம் என்ற இனிப்பு வகையை நண்பன் ஒருவகை இரசம் என்றேதான் நினைத்திருக்கின்றான். பெயர்கள் பல நேரங்களல் இரசமான எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுகின்றன. அதிஇரசத்திற்கு கலவை தயாரிப்பது மிக மிக நுணுக்கமான விஷயம் போலும். சின்ன வயதில் அம்மா அதற்கான முஸ்தீபுகளல் தீவிரமாக இறங்குவதைப் பார்த்த பின்பு…. ஓஹோ என்று எகிறிய எதிர்பார்ப்பு…. பண்டம் தயாரானபிறகு பஸ்பமாகிவிட்டது.
  சைகோசோமேட்டிக் இல்னெஸ் எனப்படும், ஒருவித நோயைப்பற்றியும் அதற்கான குணப்படுத்தும் மனவள வலிமையைப் பற்றியும் அடுத்த விநாடி என்றும் கிழக்கு பதிப்பக புத்தகத்தின் ஆசிரியர் நாகூர் ரூமி அழகாக எளமையாக இரசமாக புரிய வைத்து இருக்கின்றார். எண்ணம்போல் வாழ்வு என்பதனை இதைக்காட்டிலும் எப்படி தௌவாக புரிய வைக்க முடியும்? பேவநத்தம் மலை மீது மீண்டும் ஏறும் வாய்ப்பு சமீபத்தில் அமைந்தது. கிழமங்கலம், தேன்கனிக்கோட்டை அருகே ஓசூர் கோட்டம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செங்குத்தாக அமைந்திருந்த மலை மீது பச்சை நிறமே பச்சை நிறமே என்று …… கம்பிகளை கைத்தாங்கலாக பிடித்து ஏறுகின்றமாதிரி வழி அமைந்திருக்கின்றனர். நிறம் பொருந்தாவிடிலும் ஏறும் அனுபவம் அருமையாகவே இருந்தது. “இலைகளை வியக்கும் மரம்” என்னும் தனது புத்தகத்தில் மலைகளைக் குறித்து எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் சிலாகித்து எழுதியிருப்பார். அதை இரசமாக அப்படியே இந்தத் தொடரிலும் வரிக்கு வரி எழுதித் தீர்த்தால்தான் அதே அனுபவத்தை வாசகர்கட்கு அளத்து மகிழ முடியும்.
  தொடர்ச்சி அடுத்த இதழில்

  திறமை தான் நமக்குச் செல்வம்

  ‘உழைப்பவனுக்கு ஒரு காசு, மேய்ப்பவனுக்கு ஒன்பது காசு’ என்பார்கள்.
  செங்கல் அடுக்கி சிமெண்ட் பூசும் மேஸ்திரிக்கு சம்பளம் நானூறு; ஆனால் அவரை வேலை வாங்கும் பொறியாளர் பெறுவது நான்காயிரம். ஏன் இந்த வேறுபாடு?
  முன்னவர் சொன்னதை மட்டும் செய்யக்கூடியர். அதற்கு மேல் ஒரு படிகூட சுயமாக செய்யத் தெரியாது. பின்னவர் எதையும் ஏன் செய்ய வேண்டும், எப்படி, எப்பொழுது செய்ய வேண்டும் என்றெல்லாம் முன் கூட்டியே நன்கு திட்டமிட்டு, அதனை பிறரைக் கொண்டு வெற்றிகரமாக செய்து முடிப்பவர். அதாவது பொறுப்பும், திறமையும் மிக்கவர்.
  ஒரு பணக்காரருக்கு இரண்டு வேலைக்காரர்கள். அவர்களில் ஒருவனுக்கு மட்டும் அதிக சம்பளம் கொடுத்து வந்தது பற்றி மற்ற வேலைக்காரன் அவரிடம் பெரிதும் குறைபட்டுக் கொண்டான். பணக்காரர் அவனை அழைத்து வீட்டின் வெளியே சென்று தெருவில் எவராவது இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு வா என்றார். அவனும் வேகமாக ஓடிச்சென்று பார்த்துவிட்டு, “ஆம் ஐயா, தெரு முனையில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார்” என்றான்.
  இப்பொழுது அந்த பணக்காரர் அடுத்தவனை வெளியே அனுப்பினார். வந்தவன் தெரு முனையில் நின்று கொண்டிருப்பவர் ஒரு ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் என்றும், அவர் பெயர் முருகன் என்றும், அவர் அடுத்த தெருவில் முதல் வீட்டில் குடியிருப்பவர் என்றும், அருகில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருக்கும் தனது பேரனை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்றும் விலாவாரியாக எடுத்துக் கூறினான்.
  பணக்காரன் குறைபட்டுக் கொண்டவனைப் பார்த்து இப்பொழுது புரிகிறதா, அவன் அதிகச் சம்பளம் பெறும் காரணம் என்றார் சிரித்தபடி. சொன்னதை மட்டும் செய்வது என்பது வேலை மட்டும்தான். ஆனால் அதற்கும் மேல் அதிகப்படி சிந்தித்து அழகாக செய்வது என்பது திறமையான வேலை.
  ஊரில் எத்தனையோ மருத்துவர்கள்; வழக்கறிஞர்கள்; பொறியாளர்கள்; இருந்தாலும் ஒரு சிலரிடம் மட்டும் எல்லோரும் போய் மொய்த்துக் கொள்கிறார்களே, ஏன்? ஏனெனில் அவர்கள் மக்களின் எதிர்பார்ப்பினை திறம்பட செய்து முடிக்கிறார்கள். விரும்புகின்ற வெற்றியினை பெற்றுத் தருகிறார்கள்.
  திறமைசாலிகளுக்கே இவ்வுலகம் வழிவிட்டு நிற்கிறது.
  வெட்டி வா என்றால் கட்டிக்கொண்டு வருபவர்கள், எள் என்பதற்கு முன்பே எண்ணெய்யாக நிற்பவர்கள், கோடு ஒன்று போட்டாலே ரோட்டையே போடுபவர்கள் என்று இப்படிப்பட்டவர்களுக்குத் தான் என்றும் எங்கும் மவுசும் மரியாதையும் இருக்கும்.
  வெறும் இச்சை மட்டும் இருந்தாலே அது திறமையாகி விடாது. மூச்சடக்கிக் கட்டினால்தான் ‘முனி’ என்று ஏற்றுக்கொள்வார்கள். திறமைசாலி ஒருபோதும் பொருட்களை வீணாக்கமாட்டான். எதையும் விரைந்து செய்து நிறைவாக்குவான்.
  மனதை அலைபாயவிடாமல், செய்யும் செயல்களில் ஒருநிலைப்படுத்தி, தன்னைக் கட்டுப்படுத்தி, புறச்சூழல்களின் நெருக்கடிகளையும் மீறி, எதிர்பார்த்த முடிவுகளை தரக்கூடியவன் தான் திறமைசாலி. வெறுமனே ‘மாங்கு மாங்கென்று’, செக்கு மாடுபோல், அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருப்பதில் எந்தப் பயனும் இல்லை.
  அதிக நேரம் எடுத்து உழைப்பது என்பது திறமையாகிவிடாது. நேரத்தையும், ஆற்றலையும் வீணாக்காமல், அடைய விரும்பும் முடிவுகளை எட்டிப்பிடிப்பதுதான் திறமையாகும். கடவுள் அருளால் அனைவருக்கும் அருளப்பட்டது தான் திறமை. அதை நாம் விரும்பினாலும் இழக்க முடியாது. அந்த அளவில் அது பணத்தைக் காட்டிலும் மதிப்பு கொண்டது.
  இருக்கும் திறமையைச் சரிவர பயன்படுத்தாமல், ‘குடத்தில் இட்ட விளக்காக’ இருக்கின்றோம். நமது தலையெழுத்தையே மாற்றவல்ல ஏதேனும் ஒரு திறமையாவது எவரிடமும் நிச்சயம் இருக்கும். அதனைத் தேடிப்பிடித்து, சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்தான் அனைவரின் வெற்றி என்பது ஒளிந்து கொண்டு இருக்கிறது.
  சோதனைக் காலங்களில் தான் ஒருவரது திறமை வெளிப்படுகிறது. நமது எதிரிகளே நமது திறமைகளை கூர்மையாக்குகிறார்கள். எதிலும் முழுமையை எதிர்பார்ப்பது, எதையும் தள்ளிப்போட்டுக் கொண்டே போவது போன்றவைகள் திறமைக்கு முட்டுக்கட்டை போடுவன. அலை ஓய்ந்த பின் தலை மூழ்கலாம் என்று காத்திருந்தால் ஒரு போதும் காரியம் நடவாது. திறமையால் தகுதியும், தகுதியால் தக்கதொரு நிலைமையும், நம்மால் நிச்சயம் அடைய முடியும். நேரத்தை முறையாகத் திட்டமிட்டு பயனுள்ள வகையில் செலவழித்தால் நமது திறமை பத்து மடங்கு அதிகரிக்கும்.
  ஆற்றல் என்பது செயலுக்குத் தேவைப்படும் ஒரு மூலப்பொருள்தான். அது நம் கையில் உள்ள அருமையான கைத்துப்பாக்கி போன்றது. திறமை என்பது அதை குறி பார்த்து கையாளும் திறன் போன்றது. திறமையற்றவன் கையில் அந்தத் துப்பாக்கி இருப்பதில் என்ன பயன்?
  எனவே ஆற்றலை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டுமெனில், நமக்கு என்று ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். சரியான திட்டமிடப் படவேண்டும். பொருத்தமான செயல்முறை வேண்டும். செய்யும் செயல் பற்றிய சிறப்பான அறிவும் அனுபவமும் அவசியம் வேண்டும்.
  மேலும் பொறுமையும், இடையறாத பயிற்சியும், புதுமை நோக்கும், தன்னையும் சூழலையும் கட்டுப்படுத்தும் திறனும் இருப்பின் நம்மால் எத்தனையோ காரியங்களை எளிதாகவும், வெற்றிகரமாகவும் முடித்திட முடியும்ஙு

  மாறிவரும் வேளாண்மை!

  உலகத்தின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த பூமியில் உள்ள உயிரினங்களில் மனிதனைத் தவிர மற்ற உயிரனங்களின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்ததாக இல்லை. மனித இனம் மட்டும் பெருகிக் கொண்டே செல்கிறது. இப்படி அதிக மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவால் உணவு உற்பத்தியில் பெரும் தாக்கம் ஏற்பட்டு வருகின்றது.
  இந்திய சுதந்திரம் அடைந்த பொழுது, நமது மக்கள் தொகை 40 கோடி இருந்தது. அந்த மக்களுக்காக நாம் உற்பத்தி செய்த உணவு தானியங்கள் 50 மில்லியன் டன். அந்த கால கட்டத்தில் உலகத்தின் மக்கள் தொகை 200 கோடியாக இருந்தது. இந்த மக்களுக்குக் கிடைத்த உணவு 500 மில்லியன் டன்.
  அந்தக் கால கட்டத்தில் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு உணவு பொருட்கள், கச்சா பொருட்கள், கனரக வாகனங்கள், எலக்ட்ரானிக் உபகரணங்களை எடுத்துச் செல்வதில் பல பொருளாதாரத் தடைகள் இருந்தது. இதனால் உணவுப் பொருட்கள் ஒரு நாட்டில் அதிகமாக விளைவித்தாலும், மற்ற நாட்டுக்கு எடுத்துச் சென்று விற்பது என்பது எளிதான காரியம் இல்லை. இதனால் அந்த நாட்டின் உணவு உற்பத்தியைக் கொண்டு தான் தங்கள் மக்கள் உணவு தேவைகளைப் பெரும்பாலான நாடுகள் பூர்த்தி செய்து கொண்டு இருந்தன.
  ஆனால், தற்போது உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தின் காரணமாக எந்த நாட்டில் விளைவித்த ஒரு பொருளையும் மற்றநாட்டுச் சந்தைக்கு எடுத்துச் சென்று விற்க முடியும். எனவே உணவுப்பொருள்களும் அதற்கு விதிவிலக்கல்ல. எனவே உலகத்தில் எந்த நாட்டில் அதிகமாக உணவுத் தேவை ஏற்பட்டாலோ அல்லது உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டாலோ, மற்றநாடுகளில் இருந்து வியாபாரத்திற்காக உணவுப் பொருள்கள் கொண்டு செல்லக்கூடிய நிலைமை உள்ளது.
  எனவே உணவுப்பொருள்களை உற்பத்தி செய்யும்போது உள்நாட்டுத் தேவைகளை அறிந்து உற்பத்தி செய்வது மட்டும் அல்லாமல், மற்றநாடுகளில் உள்ள தேவைகளை அறிந்து உற்பத்தி செய்யும்போது உணவுப்பொருள் உற்பத்தியாளர்களுக்கு நல்ல விளைச்சல் கிடைக்கிறது.
  இதனால் தற்போது இந்தியாவில் உள்ள 110 கோடி மக்களுக்கு உணவு உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள 500 கோடி மக்களுக்கும் உணவு உற்பத்தித் தேவை அறிய வேண்டிய கட்டாயத்தில் இந்திய விவசாயிகள் உள்ளார்கள்.
  இந்தியாவின் உணவு உற்பத்தி தற்போது உள்ள 110 கோடி மக்களுக்குத் தேவையான 500 கோடியாக அல்லாமல் உலகத்தின் மக்கள் தேவைக்கும் 1000 டன் உற்பத்தி செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
  இந்திய விவசாயிகள் இந்திய உணவுத் தேவையை மட்டும் உற்பத்தி செய்யவில்லை என்றால், மற்றநாட்டிலிருந்து இந்தியா உணவுப்பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். தற்போது, வளைகுடாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் ஏற்படும் பணவீக்கத்தைப் பற்றி சொல்லத் தேவையில்லை. இதற்காக பல மில்லியன் டாலர் அந்நிய செலாவணி தேவைப்படுகிறது. உணவுப் பொருள்களையும் இறக்குமதி செய்தால் மேலும் பல மில்லியன் டாலர் தேவைப்படும். அதனால் இந்தியப் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்திக்க நேரிடும்.
  எனவே இந்திய விவசாயிகள் தங்கள் மக்களுக்காகத் தொடர்ந்து தேவையான உணவுகளை உற்பத்தி செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
  இது மட்டுமல்லாமல், ஆப்ரிக்க கண்டத்தில் ஏற்படும் வறட்சி, ஆஸ்திரேலியா போன்றநாடுகளில் ஏற்படும் பருவ நிலை மாற்றம், மடகாஸ்கர், இந்தோனேசியா போன்ற நாடுகளில் மழையினால் ஏற்படும் பாதிப்புகள் போன்ற காரணங்களினால் உலகத்தில் குறிப்பிட்ட உணவுப்பொருட்களுக்கு உடனடித் தேவை அதிகரிக்கிறது. இதற்கும் இந்திய விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை வெளிநாட்டு சந்தையில் அதிக விலை கிடைப்பதால், அதற்காக உற்பத்தி செய்ய வேண்டிய சூழ்நிலையிலும் உள்ளனர்.
  ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, மடகாஸ்கர் என்ற தீவில் அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு பயிரிடப்பட்ட வெண்ணிலா பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்துவிட்டது. எனவே உலக சந்தையில் வெண்ணிலா விலை 100 மடங்கு உயர்ந்து விட்டது.
  விவசாயிகள் உணவுப் பொருட்களைப் பயிரிடும்போது விளைச்சல் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்ப்பதை விட்டுவிட்டு, விளைபொருட்களுக்கு அடுத்த வருடம் என்ன விலை கிடைக்கும் என்று பொருளாதார நோக்கில் கணக்கிட்டு பயிர் செய்வது நல்லது.
  இதற்கு பதிலாக இந்த வருடம் வெங்காயம் குறைந்த விலைக்கு விற்றது. எனவே அடுத்த வருடம் அதிக விலைக்கு போகும். கடந்த நான்கு ஆண்டுகளாக மஞ்சள் விலை குறைந்து கொண்டு வருகிறது. எனவே அடுத்த வருடம் அதிக விளைச்சல் போகும் என்று தன்னிடம் உள்ள அனைத்து நிலங்களிலும் ஒரே பயிரை சாகுபடி செய்வது போன்றகுருட்டு விவசாயம் பார்ப்பதை விட்டுவிட்டு, சந்தையை எண்ணி விவசாயம் செய்தால், விவசாயம் நல்லதொரு தொழிலாக இருக்கும்.

  நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்

  நம் உடம்பிற்கு ஒரு குறிப்பிட்ட அளவு
  சுண்ணாம்புச்சத்து ((Calcium)) ஒவ்வொரு நாளும் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது. மிகுதியாகிவிடும் சுண்ணாம்பு மட்டும் சிறுநீரின் வழியாக, உடலை விட்டு வெளியேறிவிடும். நம் உடம்பும் நலமுடன் இருக்கும். ஆனால் சில மனிதர்கள் செய்யும் தவறான செயலின் காரணமாக இந்த சுண்ணாம்பு வெளியேற்றம் நடைபெறாமல் போய்விடுகிறது. அந்தத் தவறு யாதெனக் காண்போம்.
  ஒரு குவளையில் 250 மில்லிலிட்டர் தண்ணீரை நிரப்பிக்கொள்ளுவோம். அந்நீரில், ஒரு சிறுகரண்டி உப்பைக் கரைத்தால், அந்த உப்பு நன்றாகக் கரைந்துவிடும். அதே நீரில் கரைக்கப்படும் மற்றொரு கரண்டி உப்புங்கூடக் கரைந்துவிடும். மேலும் ஒரு கரண்டியைக் கரைக்க முயலுவோமானால், அந்த உப்பு, அந்த நீரில் கரையாது, அதன் துகள்கள் நீரினுள் சுற்றிச் சுற்றிவரும்.
  இந்த அளவு நீரில், இந்த அளவுமட்டுந்தான் உப்போ, சீனியோ, நஞ்சோ, அல்லது வேறு ஒரு பொருளோ கரையும் – அதற்குமேல் கரையாது எனும் அளவு ‘கரைசலின் எல்லை” (Saturation Point) எனக் குறிப்பிடப்படும். பூச்சிக்கொல்லி, பூசணத் தடுப்பான், போன்ற பற்பல நச்சுப்பொருட்கள் நாம் உண்ணும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில் அடிக்கப்படுகின்றன.
  அதேபோல, சமைக்கப்பட்ட உணவுகள் கெட்டுவிடாதிருக்கும் பொருட்டு, பற்பல நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயனப் பொருட்களும் கலக்கப்படுகின்றன. காற்றில் உள்ள தூய்மைக் கேட்டின்வழியாகவும் பலவிதமான நஞ்சுகள் நமது உடலுள் செல்லுகின்றன.
  குடிக்கும் நீரிலும் பற்பலவகை கூடாப்பொருட்கள் இருக்கின்றன. இவை போதாதென்கிறாற்போல, குளொரின் (Chlorine) போன்ற கேடுவிளைவிக்கும் பொருட்களும் கலக்கப் படுகின்றன.
  ஒரு மனிதனது உடலினுள், ஒரு நாளைக்கு, எல்லாவகைகளலிருந்தும் உட்செல்லும் மொத்த நஞ்சின் அளவு 16 சிறுகரண்டிஅளவு என, ஒரு புரிந்துணர்வுக்காக வைத்துக் கொள்ளுவோம்.
  ஒரு குவளை நீரில், இரண்டு சிறுகரண்டியளவு மட்டுமே கரையமுடியும் என்றால், இந்த 16 சிறுகரண்டியளவு நஞ்சினைக் கரைக்க, நாம் 8 குவளைகள் தண்ணீர் குடித்தாக வேண்டும்.
  ஒரு முறை நாம் சிறுநீர் கழிக்கும்போது, அந்த ஒரு குவளை நீர் முழுமையும் வௌயேறிவிடாது. மாறாக, முக்கால் குவளைமட்டுமே வௌயேறக்கூடிய வாய்ப்பிருக்கிறது.
  எட்டுக்குவளைத் தண்ணீரை முற்றாக வௌயேற்றினால்தான் நம் உடலினுற் சென்றுள்ள நச்சுப்பொருட்கள் முழுமையும் வௌயேறும். இதன்படி பார்த்தால், ஒருவர், ஒவ்வொரு நாளும் 8 குவளைகள் நந்நீரைக் குடித்துவிட்டு, பத்துத் தடவைகளாவது சிறுநீர் கழிக்கவேண்டும் என்றாகிறது.
  * * * * * *
  ஒருவருக்கு மிக அதிகமாக வியர்க்குமானால், அதன்வழி, அவர் குடித்த நீரில் ஒரு கணிசமான பகுதி வீணாகிப் போகும். இதன் விளைவாக, வௌச்செல்லும் சிறுநீரின் அளவு மிகவும் குறைந்துவிடும். வளரும் பருவத்தைக் கடந்துவிட்டவர்களான 21 வயதிற்கு மேற்பட்டவர்களல் பலர், காற்பந்து, ஒடுவது, உடற்பயிற்சிக்கூடங்களல் செய்யப்படும் மிகக்கடுமையான பயிற்சிகள் போன்ற முரட்டுத்தனமான விளையாட்டுக்களன் வழி, தாங்கள் குடித்த 8 குவளை நீரில் பெரும்பகுதியை வியர்வையாக இழந்துவிடுகிறார்கள்.
  ஒருவர் 8 குவளை நந்நீரைக் குடித்துவிட்டு, 10 முறைகள் சிறுநீர்கழித்து, அவ்வளவு நீரையும் வௌயேற்றும்போது, அவரது உடலினுள் உள்ள 16 சிறுகரண்டியளவிலான நஞ்சு அனைத்தும் வௌயேறிவிடும். இவ்வாறு வௌயேறும் நஞ்சில் பெரும்பகுதி உடம்பினுள் தேவைக்கு மீறிச் சேர்ந்துவிட்ட சுண்ணாம்பாகத்தான் இருக்கும்.
  பெரும்பதியான நோய்களுக்கு அடிப்படைக் காரணியாக உள்ள இந்த மிகைப்பட்ட சுண்ணாம்பு வௌயேறிவிடுவதால், செவ்வனே சிறுநீர் கழிப்போர்க்கு, இனிப்புநீர் நோய், இரத்தம் கெட்டிப்படல், மாரடைப்பு உட்பட பற்பலஇருதய நோய்கள், புற்றுநோய்கள், இளைப்புநோய் (அள்ற்ட்ம்ஹ), உடல்பெருத்துக் குண்டாகுதல் போன்ற எந்தவிதமான கொடிய நோய்களும் ஏற்படமாட்டா.
  * * * * * *
  எதனாலெல்லாம் வௌச் செல்லக்கூடிய சிறுநீரின் அளவு குறைகிறது என்பதை ஒருவர் புரிந்துகொள்ளுவாரேயானால், அவர், தன்னை, இந்நோய்களலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். பேருந்துகளல் பயணஞ் செய்யும்போது, திருமண வீடுகளலிருக்கும் போது, திருவிழாக்களன்போது, கடைத்தெருக்களல் சுற்றிதிரியும்போது, மாநாடுகளல் பங்கேற்றுக் கொண்டிருக்கும்போது, அலுவலகங்களல் மிகவும் ஆழ்ந்து பணியாற்றும்போது, திரையரங்குகளலிருக்கும் போது, தொலைக்காட்சியில் ஆழ்ந்திருக்கும்போது, சுத்தமான ஒதுங்குமிடங்கள் இல்லாதபோது, நந்நீர் பருகாது, பழச்சாறு அல்லது சுவையூட்டப்பட்ட நீர் வகைகளை உட்கொள்ளும்போது, நந்நீர் குடிப்பதைத் தவிர்க்கும்போது போன்ற பல்வேறு காரணங்களால் பெரும்பகுதி மக்கள் போதிய தடவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.
  தடித்த உடலை உடையோர் உணவு உண்ணும்போது உற்று நோக்குங்கள். அவர்கள் தண்ணீரே குடிக்கமாட்டார்கள்! தண்ணீர் குடிக்காததால்தான் தங்களது உடல் பெருத்துவிட்டது எனும் உண்மை அவர்களுக்குத் தெரியாது. சிறுநீர் கழிக்காவிட்டால், எல்லையில்லாது உடற் துன்பம் ஏற்படும் என்பதை நினைவிற் கொண்டு, ஒவ்வொருவரும், எந்தவிதமான நொண்டிச் சாக்குப் போக்கும் சொல்லாது, உறுதியாக அவ்வப்போது ஒன்றுக்கு இருக்கத்தான் வேண்டும்.
  நீங்கள் மிக முக்கியமாக நினைவிற் கொள்ளவேண்டியது யாதெனில்:
  நீங்கள் சற்றே குறைவாக (ஒரு நாளைக்கு 4 அல்லது 5 தடவைகள்) சிறுநீர் கழித்தால், பல ஆண்டுகள் கழித்துத்தான் குண்டான தடித்த உடலையும், இனிப்புநீர் நோயையும், இருதய நோய்களையும், புற்று நோய்களையும் பெறுவீர்கள். மிகமிகக் குறைவாக (எ.கா. நாள்தோறும் 2 அல்லது 3 தடவைகள் மட்டும்) சிறுநீர் கழித்தால், ஐந்தாறு ஆண்டுகளுக்குள் பெருத்த உடலும் பல பெருநோய்களும் வந்துவிடும்.
  * * * * * *
  வௌயேற்றப்படாத சிறுநீர் உடம்பினுள்ளேயே தேங்கியிருக்கமுடியாது. அவ்வாறு தேக்கமுறுமானால், மூத்திரப்பை வெடித்து நாம் இறந்து விடும்படியாகி விடும். இத்தகைய கோளாறுகள் நடந்துவிடாதவாறு, நமது மூளை, தேங்கிவிட்ட சிறுநீரை உடல் முழுதும் மிகை வியர்வையாக ஆக்கி வெளியேற்றிவிடுகிறது.
  இதன் காரணமாகத்தான் பலருக்கும் உள்ளங்கைகள், பாதங்கள், முகம் கழுத்து, போன்ற பகுதிகளல் எந்தநேரமும் வியர்த்துக் கொட்டுகிறது. இந்த நோய் “ஏஹ்ல்ங்ழ்ட்ண்க்ழ்ர்ள்ண்ள்” என்று குறிப்பிடப்படுகிறது. நாம் இதனை, “வியர்வைப் பெருக்கு” என்று குறிப்பிடுவோம்.
  தமிழ்நாட்டில் நான் கண்ட அளவில், கணக்கற்ற மக்கள் இத்தகைய வியர்வைப் பெருக்கால் துன்புறுகின்றனர். இது, “ஹார்மோன் கோளாறு காரணமாக வருகிறது”, அல்லது, “மன உளைச்சல் காரணமாக ஏற்படுகிறது” என்று சொல்லி, “இதனைக் குணப்படுத்துவதற்கான மருத்துவம் ஏதும் கிடையாது” என்றும் நோயுற்றோரை ஆறுதல்படுத்தி அனுப்பிவிடுவதே இன்றைய மருத்துவத்துறையில் வழக்கமாக இருந்துவருகிறது.
  சிங்கப்பூரில் புகழ்பெற்ற தனியார் மருத்துவநிலையஞ் சார்ந்த சில அறுவை மருத்துவர்கள், பெரும் பொருட்செலவில், கழுத்தின் பின்புறம் உள்ள நரம்பை வெட்டிவிடுவதன் வழி, பாதங்களலும் கைகளலும் ஏற்படும் வியர்வைப் பெருக்கை நிறுத்தியுள்ளார்கள்.
  நமது சூழ் இயல் மருத்துவத்தின்வழி (“Ecological Healing System”) மிகவும் எளதாக, செலவோ துன்பமோ ஏதுமில்லாது, இந்நோயை முற்றிலுமாகக் குணப்படுத்தி விடலாம். அதனை அறிந்துகொள்ள, சற்றே பொருத்திருங்கள். நூறு பல்வேறு நோய்களை எவ்வாறு நீங்களாகவே குணப்படுத்திக் கொள்ளலாம் என்ற விவரங்களை, பின்வரும இதழ்களல் விளக்க நினைத்துள்ளேன். அதுவரை நீங்கள் காத்திருக்கத்தான் வேண்டும்.

  நம் மதியே நிம்மதி

  ‘எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனகோர் இடம் வேண்டும்.. அங்கே…..’ இந்தப் பாடலை பாடாத அல்லது கேட்காத தமிழர்கள் இந்த உலகத்தில் இருக்க முடியாது. அந்த அளவுக்கு இந்தப் பாடல் ரொம்ப பிரசித்தம். காரணம் என்ன? எல்லோருக்கும் பிரச்சனை ..ஔந்து கொள்ள ஒரு இடம் வேண்டும் ..அதனால் தான்.
  உண்மையில் நிம்மதி எங்கே கிடைக்கும்? அமைதியான மண்டபத்தில்? ஆள் அரவமற்ற காட்டில்? இந்தப் பிரபஞ்சத்தில்? எங்காவது ஒரு இடத்தில் இருக்குமா? கொஞ்சம் சிரமந்தான். இல்லையா?
  பிரச்சனைகளும், கவலையும் நிம்மதியைத் துண்டாடிவிடுகிறது. வீட்டிற்கு வீடு வாசப்படி என்பார்கள். பிரச்சனை இல்லாத குடும்பமே இல்லை. ஐயோ நிம்மதி இல்லையே என்று அலுத்துக் கொள்ளாதவரே இல்லை.
  மகாபாரதத்தில், பாண்டவர்களும், வனவாசம் புரிந்தார்கள்; ராமாயணத்தில் ராமனும் வனவாசம் சென்றான். தேவர்களும் ஔந்து வாழ வேண்டியிருந்தது. கேட்பவர்களுக்கெல்லாம் வரம் கொடுத்த சிவபெருமானுக்கும் நிம்மதியற்ற காலம் இருந்தது.
  யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லை என்ற கவலையிருந்தால் அணிலுக்கு உடம்பு போதவில்லையே என்ற கவலை உண்டு. ஏழைக்குச் சாப்பாடு பிரச்சனை என்றால், பணக்காரனுக்கு வருமான வரிப் பிரச்சனை. பெருளாதாரம் சரியாக இருந்தாலும் கணவனோ, மனைவியோ சரியில்லாத குடும்பங்களல் பிரச்சனை.
  அப்படிஎன்றால் யாருக்குமே அமைதியான, சந்தோசமான வாழ்க்கை இருந்ததாக தெரியவில்லை.
  நிம்மதிக் குறைவு என்பது எல்லோருக்கும் ஒரு நாள் வந்தே தீர்கிறது. பணக்காரனாலும் சரி, ஏழையானாலும் சரி வாழ்க்கைப் பயணத்தில், ஏதோ ஒரு காலத்தில் கண்டிப்பாக நாய் படும் பாட்டை பட்டே ஆக வேண்டும் என்பது எல்லோருக்குமான விதி. ஆனால் ஜீரணிக்கத் தெரிந்தவனுக்கு மலை கடுகளவு; அது தெரியாதவனுக்கு கடுகு மலையளவு என்பது போல் அதைச் சமாளக்கும் சூத்திரத்தை அறிந்தவன் தான் சாதனையாளனாகிறான்.
  ஒரு சின்ன கதை ..
  முருகனுக்கு பெரும் பணம் இருந்தது. அவனுடைய அப்பா சொத்து, சுகத்தையெல்லாம் விட்டுத் தான் சென்றிருந்தார். பணத்துக்கு குறைவே இல்லை. ஆனால், என்ன செய்வது? அவனுக்கு வாய்த்தவள் சரியில்லை. இதனால், முருகனுக்கு நிம்மதி போய்விட்டது. ஒருநாள், அவனைப் பார்க்க அவனது தந்தையின் நண்பர் வந்தார். முருகன் தனது நிலையை அவரிடம் சொல்லி அழுதான்.
  எனக்கு நிம்மதியே இல்லை, என்று புலம்பினான். அவனது நிலை பரிதாபகரமாக தோன்றினாலும், அவனது நலன் கருதி ஒரு பாடத்தையும் கற்பிக்க நினைத்தார் பெரியவர். “முருகா! இதற்காக நீ கவலைப்படாதே. உனக்கு நிம்மதி வேண்டும்! அவ்வளவுதானே! அப்படிப்பட்ட ஓர் இடத்தைக் காட்டுகிறேன். அங்கு வந்தால், உனக்கு எந்தத்துன்பமும் இல்லை”, என்றார். முருகனுக்கு ஏக மகிழ்ச்சி!
  உடனடியாக அவருடன் கிளம்பி விட்டான். அவர் அவனை நேராக இடுகாட்டிற்கு அழைத்துச் சென்றார். ஒன்றும் புரியாமல் விழித்த முருகன், இங்கு ஏன் என்னை அழைத்து வந்தீர்கள்? என்றான். நீ தானே நிம்மதியை விரும்பினாய். உலகத்தில் மனிதனாய் பிறப்பவன் நிம்மதியாய் உறங்குவது இங்கு உள்ள கல்லறைகளுக்குள் தான். அவன் உலகில் வாழும்வரை பிரச்னைகள் தொடரத்தான் செய்யும். அதைக் கண்டு பயந்தால், மேலும் மேலும் நிம்மதி குலையும். அவற்றை எதிர்த்து நிற்பவனை நிம்மதி தேடி வரும். இப்போது சொல்! நீ பிரச்னைகளைச் சமாளத்து நிம்மதியைத் தேடப் போகிறாயா… இல்லை, இங்கே தோண்டப்பட்டு உள்ள குழிகளுக்குள் புதைந்து கொள்ளப் போகிறாயா? என்றார்.
  முருகனுக்கு புத்தி வந்தது. உண்மை தான்! நான் எனக்கு மட்டுமே பிரச்னைகள் இருக்கிறது என நினைத்தேன். உலகில் ஒவ்வொருவரும் பிரச்னையுடன் தான் இருக்கிறார்கள். பிரச்னைகளை கண்டு ஓடக்கூடாது. நம் மனைவிக்கும் புத்தி சொல்வோம், கேட்டால் கேட்கட்டும். கேட்காவிட்டால் பட்டு திருந்தட்டும், என விட்டுவிட்டான். பிறகு அவன் நிம்மதியாக இருக்க ஆரம்பித்தான்.
  இந்தக் கதையில் ஒரு முக்கியமான கருத்தை புரிந்து கொள்ள வேண்டும். பெரியவர் புத்தி சொல்லும் முன்னும் அவனுக்குப் பிரச்னை இருந்தது. அதற்குப் பிறகும் அவனுக்குப் பிரச்னை இருக்கத்தான் போகிறது. அப்படியானால் நிம்மதி எப்படி அவனுக்கு கிடைத்தது? மனம் பிரச்சனையை வேறு விதமாக ஏற்றுக்கொண்டதின் விளைவுதான் அதற்குக் காரணம்.
  நம் மனம் தான் எல்லா பிரச்சனைகளுக்கு மட்டுமல்ல மன நிம்மதிக்கும் காரணம். மனது எந்த ஒன்றைக் காண்கிறதோ அப்படியே ஆகிவிடுகிறது. அற்புதம் என்று அது முடிவு கட்டிவிட்டால், அது அற்புதமாகவே ஆகிவிடுகிறது. மோசம் என்று தோன்றி விட்டால், மோசமாகவே காட்சி அளக்கிறது. இப்படி பல நேரங்களல் மனது, தன் கணக்கை மாற்றிக் கொள்கிறது.
  மாறுதல் மனதின் இயற்கை. அதில் இன்பம் தோன்றும்போது உடனடியாக நிம்மதி கிடைக்கிறது. இல்லையானால் மன உளைச்சல் தான். இந்தப் பேரிடியை என்னாலே தாங்கவே முடியாது’ என்று சில சமயங்களல் சொல்கிறோம். ஆனாலும், நாம் உயிரோடு தான் இருக்கிறோம். காரணம் என்ன? மனசு, வேறு வழி இல்லாமல் அதைத் தாங்கிவிட்டது என்பதே பொருள்.
  உலகத்தில் எது தவிர்க்க முடியாதது? பிறந்த வயிற்றையும் உடன் பிறப்புகளையும்தான் மாற்ற முடியாதே தவிர, பிற எதுவும் மாற்றத்திற்குரியதே. ஜனனத்தையும், மரணத்தையும் தவிர அனைத்துமே மறுபரிசீலனைக்குரியவை. மனைவியை மாற்றலாம். வீட்டை மாற்றலாம். நண்பர்களை மாற்றலாம், தொழிலை மாற்றலாம். எதையும் மாற்றலாம். மாறுதலுக்குரிய உலகத்தில் நிம்மதி குறைவதற்கு நியாயம் இருப்பதாக தெரியவில்லை.
  மனது நம்முடையது நாம் நினைத்தால் அதை மாற்றிக் கொள்ளலாம். நமக்கு முன்னால் வாழ்ந்து செத்தவர்களெல்லாம், ஆயுட் காலம் முழுவதும் அமைதியாக இருந்து செத்தவர்களல்ல. இனி வரப் போகிறவர்களும், நிரந்தர நிம்மதிக்கு உத்தரவாதம் வாங்கிக் கொண்டு வரப் போகிறவர்களல்ல.
  எந்த துன்பத்திலும் சிக்கிக் கொள்ளாதீர்கள். மனத்தை எளமையாக வைத்திருங்கள். கவலைகளற்ற ஒரு நிலையை மேற்கொள்ளுங்கள். நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடுங்கள்! ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்ற கற்பனைகளல் உங்கள் நிம்மதியை நீங்களே குறைத்திட வேண்டாம். நம்பிக்கையோடு ஒவ்வொரு நிமிடத்தையும் வாழப்பழகுங்கள் நிம்மதி உங்களைத்தேடி வரும்!!!
  எங்கே நிம்மதி? அங்கே கிடைக்குமா? இங்கே கிடைக்குமா?’ என்று தேடினால் நீங்கள் காணமாட்டீர்கள். அது உங்கள் உள்ளத்துக்கு உள்ளேயே ஔ மயமாக நிற்கிறது. ஆமாம். நிம்மதி அது உங்கள் நெஞ்சுக்குள்ளேயே இருக்கிறது! நாம் இந்தப் பூமியில் வந்து பிறப்பதற்கு முன்னதாகவே நமக்காக நம் தாயின் இரு தனங்களலும் பாலைச் சுரக்க வைத்தவன் இறைவன். நாம் பிறந்த பின்னும் நமக்காக இன்னொரு உலகத்தையே கூட அவன் படைத்து வைத்திருக்கக்கூடும்.

  பாதை மாறிய பயணங்கள்

  சமீபகால செய்திகளையும், நிகழ்வுகளையும் பார்க்கின்ற போது, இன்றைய இளைஞர் சக்தி தவறான பாதையை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளப்பட்டு வருவதை எல்லோருமே அறிவோம்.
  ஆனால், வழக்கம் போல நண்பர்களுடன் கருத்துப் பரிமாற்றம், நான்கு சுவர்களுக்குள் விவாதம் என்ற அளவில் முளையிலேயே கருகி விடுகிறது.
  இந்நிலைக்கு காரணம் என்ன? அதில் நம் ஒவ்வொருவரது பங்கு, நம் செயல்பாடுகளில் தேவையான மாற்றம், அதனால் விளையும் மாற்றங்கள் என வகைப்படுத்திச் சிந்திப்போம்.
  பாதைகள் உருவான விதம்:
  ஒருவர் பின் ஒருவராக ஒரே தடத்தில் நடக்கின்றபோது அது பாதையாகிறது. அந்தப் பாதையில் ஆரம்பத்தில் பயணம் செய்தவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகியிருப்பார்கள். பின்னால் சென்றவர்கள் பாதிப்பின்றி பயணித்திருப்பார்கள்.
  “வாழ வேண்டும் என்றெண்ணி மனிதனாக
  வந்ததில்லை; எனினும் நாம் பிறந்து விட்டோம்
  வாழ வேண்டும் உலகில் ஆயுள் மட்டும்
  வாழ்ந்தவர்கள் அனுபவத்தைத் தொடர்ந்து பற்றி”
  இது அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் கூற்று.
  நாம் வாழும் வாழ்க்கை நம் முன்னோர்கள் வழிகாட்டுதலில் அமைய வேண்டும்; அப்படி வாழ்ந்தால் தான் நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக அமையும் என்பது இதன் பொருள்.
  பொருந்தாக் கலாச்சாரம்:
  ஆனால், இன்று மேல்நாட்டு கலாச்சாரத்தின் தாக்கம் நம் உடை, உணவு, வசிப்பிடங்களில் பரவி வருகிறது. இதனால், நம் உடல் ஆரோக்கியம் கெட்டு, தன்னம்பிக்கை இழந்து விரக்தியோடு வாழும் சூழல் தான் உருவாகும்.
  அந்தந்தப் பகுதிகளில் நிலவும் வெயில், குளிர் தான் நாம் அணியும் உடைக்குக் காரணமாயும், உணவுக்கான விளை பொருட்களாயும் உள்ளன. ஆனால் நாம் மேல் நாட்டு மோகத்தின் காரணமாக, பொருளாதார முன்னேற்றத்தால், நமக்கான பாதையிலிருந்து தடம் மாறி, தடுமாறிப் பயணம் செய்கிறோம். இதனால் வரும் விளைவுகள் என்னவென்று தெரிந்து கொள்ளவும் மனமில்லா நிலை தான் இன்று நிலவுகிறது.
  பொது நலம் என்பது புறந்தள்ளப்பட்டு, சுயநலம் முதன்மைப் படுத்தப்பட்டு வேகமாகப் பயணம் நடைபெறுவதால், நியாய உணர்வுள்ளவர்களது குரல் எவர் காதிலும் விழுவதில்லை.
  கிராமங்களில் முன்னேர் செல்லும் வழியில் பின்னேர் சென்றால், நிலமானது ஆழமாக உழப்பட்டு, மண் புரட்டப்பட்டு நல்ல விளைச்சலுக்குக் காரணமாகும் என்று கூறுவதை நாம் அறிவோம்.
  அதுபோல் தான் நம் முன்னோர்களின் அற வாழ்க்கையை ஒட்டி நாம் வாழ்ந்தால், எவ்வித சூழ்நிலையாலும் பாதித்து புரட்டப்பட்ட நம் மனமானது அறநிலையை உணர்ந்து துன்பமில்லா வாழ்க்கைக்கு நம்மை அழைத்துச் செல்லும்.
  விஞ்ஞான வளர்ச்சி:
  இயற்கை வளங்களை வாழ்க்கை வளங்களாக மாற்றும் நம் அறிவின் வெளிப்பாடு தான் விஞ்ஞான முன்னேற்றம்.
  ஓர் உதாரணம் மூலம் இந்த அலங்கோலத்தைப் பார்க்கலாம். பல வெளிநாடுகளில் ஓர் ஆண்டின் பெரும்பாலான மாதங்கள் மிகவும் குளிராக இருக்கும். அதற்கேற்றவாறு அணியும் உடைகளைத் துவைக்க வாஷிங்மிஷின் கண்டுபிடித்தனர். துணிகளை அழுக்குடன் உள்ளே போட்டால், சுத்தப்படுத்தி, காய வைத்துக் கொடுத்துவிடும்.
  எடுத்து பெட்டி போட்டு (Iron Box-ல் அழுத்தி) அணிந்து கொள்வார்கள். எந்தக் குளிராக இருந்தாலும் பாதிப்பில்லை.
  அதேபோல, சமையல் பாத்திரங்கள் (பெரும்பாலும் பீங்கான் மற்றும் கண்ணாடியலானவை) சுத்தம் செய்ய டிஷ்வாஷ் (Dish Wash) என்ற கருவியைப் கண்டுபிடித்தனர். பாத்திரங்களையும் அதனுள் போட்டு, சுத்தம் செய்வதற்கான பவுடரையும் போட்டு விட்டால், தேவையான அளவு நீரை எடுத்துக் கொண்டு சுத்தமாக்கி விடும். இவை குளிர் பிரதேச வாழ்க்கைக்கு சரி. ஆனால், வெப்பப்பகுதி, மித வெப்பப் பகுதியான நம் ஊரில் இன்றைக்கு இந்த மிஷின்களின் உபயோகம் நினைக்க முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது.
  சாதாரண குடிசை வீடுகளில் கூட வாஷிங் மெஷின்கள் உபயோகிக்கப்படுகின்றன. நடுத்தரக் குடும்பங்களில், மேல் தட்டு மக்களின் வீடுகளில் டிஷ்வாஷ் இப்போது அடியெடுத்து வைக்கிறது.
  இதனால் என்ன? பொறாமையா? நல்லது தானேஙு எவ்வளவு நேரம் மிச்சம் என்று நொண்டிச் சமாதானங்கள் பல சொல்லிக் கொள்ளலாம். ஆனால், நம் உணவு, தட்ப வெப்பம் இவற்றின் அடிப்படையில் இந்தக் கருவிகளின் வரவு, நம் உடலை நோய்களின் இருப்பிடமாக அல்லவா மாற்றிவிட்டதுஙு
  டிஷ்வாஷில் நமது சமையல் பாத்திரங்களிலுள்ள எண்ணெய்ப் பசை முழுதும் போகுமா என்றால், சிரமம் தான். நம் ஊர் வழக்கப்படி சாம்பல், தேங்காய் நார் அல்லது பிளாஸ்டிக் வாஷிங்பிரஷ், சோப் போட்டுத் தேய்த்தால் தான் சுத்தமாகும். இதை ஏற்றுக்கொள்ள மனமில்லை.
  வாழ்க்கை விதிகள்:
  ஒவ்வொரு கணமும் இயற்கை நியதிக்குட்பட்டே நகர்கிறது. பிரபஞ்ச இயக்கத்தை எதிர்த்து நம்மால் நிரந்தரமாக ஏதும் செய்ய முடியாது. தற்காலிகமாக ஏதோ ஒரு சிலவற்றைச் செய்யலாம். அவை கூட இயற்கையின் முன்னால் தவிடு பொடியாகி விடுவதை நாம் காண்கிறோம்.
  இயற்கை நியதி தான் நம் வாழ்க்கையின் விதிகள். விதிகளுக்குட்பட்டு விளையாடாவிட்டால், ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்படுவது போல், இயற்கை நியதியை மீறும்போது, நாமும் நம் வாழ்க்கையெனும் நந்தவனத்திலிருந்து வெளியேற்றப்படுகிறோம். இது தெரிந்தும் கூட, இன்னும் வேண்டும் என்ற பேராசையால் வாழ்க்கையை எங்கேயோ எண்ணிக் கொண்டிருப்பவர் பலர்.
  வாழ்க்கைக்கு ஆதாரம் பொருள்வளம். இது அதிகமானால் முதலில் வருவது மகிழ்ச்சி. மிக அதிகமாகும்போது தொடர்ந்து வருவது துன்பம் மட்டும் தான். போதும் என்ற நிறைவு அனைவருக்கும், குறிப்பாக நம் நாட்டு மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேருக்கு வந்தால் கூட, நம் அனைவரது பயணமும் சரியான பாதையில் மகிழ்ச்சியாக அமையும்.
  நம் நாட்டு மக்கள்தொகை சுமார் 122 கோடி. இதில் ஒரு சதவீதம் 1.22 கோடி இவர்கள் யார் தெரியுமா?
  பெரிய தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள், கட்சி நிர்வாகிகள், அரசாங்க அதிகாரிகள், திரையுலகினர், வரிகளை ஏமாற்றுவோர் போன்றோர் தான்.
  பாருஙு பாருஙு வெளிநாட்டைப் பாருஙு
  நாம் சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க நாடுகள் போன்ற பலவற்றை, அங்கு பராமரிக்கப்படும் சுத்தம், சுகாதாரம், போக்குவரத்து முதலிய பலவற்றுக்கு உதாரணமாய் கூறவதை வாடிக்கையாக் கொண்டிருக்கிறோம்.
  ஆனால், நம் நாட்டில் அதுபோன்ற நிலை வருமா? வராதா? என்று பட்டிமண்டபம் தான் நடத்த வேண்டும். அப்படி வந்தால் நாம் ஏற்றுக்கொள்வோமா? ம்ஹீம், நிச்சயமாக முடியாது.
  சலுகைகளின் அடிப்படையில் உலா வருவதென்பது தேன் நெல்லியைச் சுவைப்பது போல் விருப்பமானதல்லவா? சட்டம் போட்டவர்களும், அதைக் கண்காணிக்க வேண்டியவர்களும், அந்தச் சட்டங்களுக்கு மேலாகத் தம்மை நினைத்துக் கொண்டுள்ளனர்.
  ஆனால், வெளிநாடுகளில் சட்டமானது யாரென்று பாராமல், பாகுபாடில்லாமல், அமைச்சரின் நண்பர் என்பது போன்ற பல வரையறைகளையெல்லாம் புறந்தள்ளி, தன் கடமையைச் செய்து வருகிறது. அதனால் தான் அவை வளர்ந்த நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன.
  இதுபோன்ற நிலை நம் நாட்டில் வரவே வராதா? வரும். எல்லோரும் சேர்ந்து அக்காட்சியை மனோசித்திரமாய் கண்டு சட்டங்களை மதித்து வாழும் போதுஙு
  காத்திருங்கள்…

  உனக்குள்ளே உலகம்-24 படிப்பு – வேலை – சில விவரங்கள்

  பிளஸ் – 2 தேர்வுகள் முடிந்துவிட்டது. தேர்வு முடிவுக்காக பல மாணவர்கள் காத்திருக்கிறார்கள். எந்தப் பாடம் எடுத்து மேற்படிப்பு படிப்பது? எந்தக் கல்லூரியில் சேர்வது? சேருகின்றகல்லூரியின் கல்வி கட்டணம் எப்படி அமையும்? விடுதியில் தங்கிப் படிக்க கட்டணம் எவ்வளவு? இந்தக் கல்வி கட்டணத்தை செலுத்துவதற்கு நம் பெற்றோர்களால் முடியுமா? என்றகேள்விக்குறிகளை மனதில் தாங்கி அந்த கேள்விகளுக்கு விடை காண முயலும் மாணவ – மாணவிகள் அதிகமாகி வருகிறார்கள்.
  பொறியியல் கல்லூரியில் சேரவா? மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்கவா? கலை அறிவியல் கல்லூரியில் படித்தால் போதுமா? – என்றெல்லாம் சிந்தித்து தெளிவான ஒரு முடிவை எடுப்பதற்கு தயாராக இருக்கும் நிலையில் மாணவ மாணவிகள் சில தகவல்களை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
  கடந்த 2011-ம் ஆண்டு விவரப்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 502 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளல் பி.இ. (B.E) மற்றும் பி.டெக் (B.Tech) படிப்புகளல் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சுமார் 1 லட்சத்து 38 ஆயிரத்து 234 இடங்கள் உள்ளன. இந்த இடங்களல் தகுதியான மாணவ – மாணவிகளை சேர்த்துக் கொள்வதற்காக “கவுன்சி|ங்” (Counselling) ஒன்றை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.
  கடந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு 1,37,622 விண்ணப்பங்கள் விற்கப்பட்டன. இதனால் – “விண்ணப்பித்த அனைவருக்கும் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கும்” என பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதி|ருந்து ஒன்றை நாம் தெரிந்துகொள்ளலாம். பொறியியல் கல்லூரியில் கவுன்சி|ங்மூலம் சேர விரும்புபவர்கள் குறைந்தபட்ச கல்வித்தகுதி இருந்தாலே சேர்ந்துவிடலாம்.
  அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளைத் தவிர பல தனியார் பல்கலைக்கழகங்களும் பொறியியல் படிப்பை நடத்தி வருகின்றன. அங்கு ஏராளமான பாடப்பிரிவுகளல், மாணவ – மாணவிகளை பொறியியல் படிப்புகளல் சேர்த்துக் கொள்கிறார்கள்.
  எம்.பி.பி.எஸ். (M.B.B.S.) எனப்படும் மருத்துவப் படிப்பை 17 அரசு மருத்துவ கல்லூரிகளல் நடத்தப்படுகின்றன. இந்தக் கல்லூரிகளல் மொத்தம் 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. 8 சுயநிதி மருத்துவ கல்லூரிகளல் சுமார் 650க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இந்த அரசு மருத்துவ கல்லூரிகளல் சேர்ந்து எம்.பி.பி.எஸ். படிப்பதற்கு ஆண்டுக்கு 12,290 ரூபாய் மட்டும்தான். இதேபோல் பல் மருத்துவம் அரசு மருத்துவ கல்லூரியில் பி.டி.எஸ். (B.D.S.) படிப்பை படிக்க 10,290 ரூபாய் கல்வி கட்டணமாக செலுத்தினால் போதும். ஆனால் அதேவேளையில் சுயநிதி மருத்துவ கல்லூரிகளல் அரசு சுயநிதி ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்திற்கு சுமார் 2டீ லட்சம் முதல் 2ணீ லட்சம் வரை ஆண்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளல் அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். படிப்பிற்கு 85,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  அரசு, பொறியியல் – மருத்துவக் கல்லூரிகளல் மிக நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு எளதில் இடம் கிடைக்கிறது. இதேபோல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளலும் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு இடம் கிடைப்பதில் பிரச்சினையில்லை. இருந்தபோதும் அதிக மதிப்பெண்கள் என எத்தனை சதவீதம் மதிப்பெண்களை குறிப்பிடுகிறார்கள் என்பதில்தான் பிரச்சினையே உருவாகிறது.
  முன்பெல்லாம் 60 சதவிகித மதிப்பெண் பெற்றாலே மிகச்சிறந்த மதிப்பெண்கள் என்றார்கள். பின்னர் 70 சதவிகித மதிப்பெண்களை சிறந்த மதிப்பெண் என்றார்கள். அதன்பின்னர் 90 சதவிகித மதிப்பெண்கள் பெற்றவர்களை அறிவாள என முத்திரை குத்தினார்கள். இப்போதெல்லாம் 100 சதவிகித மதிப்பெண்கள் பெற்றவர்களைத்தான் சிறந்த மதிப்பெண்கள் பெற்றவர்கள் என்கிறார்கள். கடந்த ஆண்டுகளல் பிளஸ் – 2 தேர்வில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றவர்கள் அதிகமாகி விட்டார்கள்.
  பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களல் பலர் மிகத் திறமையாக தேர்வு எழுதி 200க்கு 200 மதிப்பெண்களை தாங்கள் படிக்கும் பாடத்தில் பெற்று சாதனை புரிந்துவருகிறார்கள். கடந்து 3 ஆண்டுகளல் பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணிதவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், வணிகவியல், அக்கவுண்டன்சி, வர்த்தக கணிதம் ஆகிய பாடங்களல் எத்தனை பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்கள் என்றவிவரத்தை தெரிந்துகொண்டால் ஒரு உண்மைத் தெளிவாக விளங்கும்.
  கடந்த 2009-ம் ஆண்டில் அதிகபட்சமாக 4,060 பேர் கணிதவியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள். 2011-ம் ஆண்டு 640 பேர் இயற்பியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள். வேதியியல் பாடத்தில் 1,243 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள். இதேபோல் உயிரியல் பாடத்திலும் 615 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள். இப்படி அதிக மதிப்பெண்கள் (200க்கு 200) பெற்றவர்கள் தாங்கள் விரும்பிய படிப்பில் சேர்ந்துவிடுகிறார்கள். ஆனால் 50 சதவீதம் அல்லது அதற்கு குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்கள் மேற்படிப்பில் சேருவதற்கு இயலாமல் திண்டாடித் தவிக்கிறார்கள். ஏதாவது ஒரு படிப்பை விருப்பமில்லாமல் தேர்ந்தெடுத்துக்கிறார்கள். மேற்படிப்பு படிக்க இடம் கிடைக்கிறது என்பதால் ஏதேனும் ஒரு கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார்கள். தோல்வியடைந்த பின்னும் தொடர்ந்து தேர்வு எழுதி எப்படியாவது ஒரு பட்டத்தை (Degree) பெறுகிறார்கள். பின்னர் வேலை கிடைக்கவில்லையே என்றஏக்கத்தில் நாட்களை நகர்த்துகிறார்கள்.
  இனிவரும் காலங்களல் நன்றாக படிப்பவர்களுக்கு மட்டுமே நல்ல வேலை கிடைக்கும் என்பதை இளம்வயதினர் கண்டிப்பாக உணர்ந்துகொள்ள வேண்டும். எல்லோரும் பட்டதாரியாக மாறுவது நல்லதுதான். படித்தவர்கள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறுவதை எல்லோரும் வரவேற்கிறார்கள். ஆனால் பட்டம் பெற்றதால் கண்டிப்பாக வேலைபார்க்க வேண்டும் எண்ணி ஒரு குறிப்பிட்ட வேலைக்காக காத்திருந்து பொழுதை வீணாக கழிப்பது வேதனையான செயல் அல்லவா!
  ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவ – மாணவிகள் கல்வியறிவு படைத்தவர்களாக மாறிவருவது மகிழ்ச்சியான தகவல்தான். ஆனால் கடந்த (2011) ஜூன் மாதம் வெளியிடப்பட்ட தகவ|ன்படி தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களல் இதுவரை 71 லட்சத்து 84 ஆயிரத்து 486 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து வேலைக்காக காத்திருக்கிறார்கள். இவர்களல் 33,84,109 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் 1,41,264 பொறியியல் பட்டதாரிகளும் 18,909 எம்.பி.பி.எஸ். டாக்டர்களும், 1,87,399 இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தவர்களும் 1,06,316 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும் வேலைவாய்ப்பு அலுவலகங்களல் பதிவுசெய்து வேலைக்காக காத்திருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியூட்டும் தகவல் அல்லவா!
  இந்த புள்ள விவரத்தை பார்த்த சிலர் படித்தால் இனி வேலை கிடைக்காதோ என்று எண்ணலாம். படித்தால் கண்டிப்பாக வேலை கிடைப்பதற்கு நல்ல வாய்ப்பு உண்டு. படித்து வெறும் பட்டத்தை மட்டும் கையில் வைத்துக்கொண்டு எனக்கு வேலை கிடைக்கவில்லையென்று கூச்சல் போடுவதை இனி நிறுத்திக்கொள்வது நல்லது.
  இது ஒரு போட்டி உலகம். இங்கு தகுதியுள்ளவர்கள் வேலை தேடி காத்திருக்கிறார்கள். ஆனால் தகுதியுள்ளவர்கள் அத்தனை பேருக்கும் வேலை கிடைப்பதில்லை. ஏனென்றால் திறமையும், தகுதியும் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏராளம் காத்திருக்கின்றன. பள்ளயில் படிக்கும்போதே வேலை பெறுவதற்கு உதவியாக அமையும் நல்ல குணங்களை பெற்றுக்கொள்வது விவேகமான செயலாகும். குறிப்பாக தகவல் தொடர்பு திறன் (Communication Skill), பிறரோடு இணைந்து பழகும் திறன் (Interpersonal Skill), பகுத்தாய்வு திறன் (Analytical Skill), முடிவெடுக்கும் திறன் (Decision Making Skill), இணைந்து பணியாற்றும் திறன் (Team Work) – போன்றபல திறமைகளை படிக்கும்போது பெற்றுக்கொண்டவர்கள் மட்டுமே சிறந்த வேலைவாய்ப்பை பெறுகிறார்கள்.
  எனவே பள்ள – கல்லூரிகளல் படிப்பது அறிவையும் நல்ல பண்பையும் வாழ்க்கைக்குத் தேவையான சிறந்த திறமைகளையும் வளர்ப்பதற்குத்தான் என்பதை இளம் பருவத்திலேயே புரிந்துகொள்ள வேண்டும். பள்ள – கல்லூரிகளல் படிக்கும்போதே வேலை பெறுவதற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டால் மட்டுமே “வேலை உங்கள் கையில்” என்று நீங்கள் உறுதியாக சொல்ல இயலும்.
  தொடரும்.

  வளமான வாழ்வின் அஸ்திவாரம்

  நமக்கென அமைந்த வாழ்க்கையை வாழ்ந்து, காலப்போக்கில் அது கொடுத்த அனுபவத்தின் ஞானத் தெளிவில், வளமான வாழ்க்கையின் ரகசியத்தைக் கண்டுபிடித்து, மிக சொற்ப காலத்திற்கு மட்டும் வளமான வாழ்வை வாழ்வது என்பது, இன்றைய நடைமுறைக்குச் சாத்தியமற்றதாகும்.
  வேகம், வேகம், அசுர வேகத்தில், இங்கே அத்தனை பேரும் முண்டியடித்துக் கொண்டு, முன்னேற்றத்தின் மீது முனைப்பைக் காட்டுவதுடன் நின்றுவிடாது, வெற்றியடைந்து, உடனுக்குடன் வெவ்வேறு உலகத்திற்குச் சென்றுவிடவும் தயாராகிக் கொண்டு இருக்கின்றனர். தனக்கு கிடைத்த வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும், தன் சாதனைகளாக்க துடித்துக்கொண்டு இருக்கும்போது, அதற்கேற்றவழிமுறைகளை அடையாளம் காட்ட வேண்டியுள்ளது.
  அத்தகைய வளமான வாழ்விற்கான அஸ்திவாரம் என்ன என்கின்ற ரகசியத்தை இங்கே போட்டு உடைக்கப் போகின்றேன். அது மிகப்பெரிய வேதாந்த வித்தையல்ல. மிக, மிக எளிமையான முறையானதாகும். அதாவது மூன்று பிரிவுகளாக நம்மை நாம் வகைப்படுத்தி, முறைப்படுத்தி, வளர்த்துக் கொண்டே இருப்போமானால் வளமான வாழ்வு என்பது, ஞானப் பழமாக நமக்கு நிச்சயம் கிட்டும் என்பதில் சந்தேகமில்லை.
  அந்த வளமான வாழ்வின் அஸ்திவாரம் இதுதான்.
  1. சமூகம் சார்ந்த சக்தி (நர்ஸ்ரீண்ஹப் நந்ண்ப்ப்ள்)
  2. சிந்தனைத் தொடர்பான ஆற்றல் (பட்ண்ய்ந்ண்ய்ஞ் நந்ண்ப்ப்ள்)
  3. சூழலை சமாளிக்கும் திறன் (சங்ஞ்ர்ற்ண்ஹற்ண்ய்ஞ் நந்ண்ப்ப்ள்)
  மேற்கண்ட மூன்று பிரிவுகளாக நம்மை நாம் முறைப்படுத்தி, வளர்த்துக் கொண்டே இருப்போமானால் மிகப்பெரிய வெற்றியை அடைவது எளிதாகும்.
  1. சமூகம் சார்ந்த சக்தி
  க்ஷி தன்னைத் தான் அறிதல்
  க்ஷி தன்னைப்போல் பிறரை நினைத்தல்
  க்ஷி தொடர்பு கொள்ளும் திறமையைப் பெற்றிருத்தல்
  க்ஷி உறவை வளர்க்கும் கலையறிந்திருத்தல்
  ஒருவரின் சமூகம் சார்ந்த சக்தி என்பது, மேற்கண்ட அத்தனை சுயவிழிப்புத் தன்மையுடன் தொடர்பு கொண்டு இருப்பதாகும். இத்தகைய சமூகம் சார்ந்த சக்தியின் நிலையைப் பொறுத்தே, ஒருவரின் உன்னதத் தன்மை வெளிப்படும்.
  தன்னைத் தான் அறிதல், தன்னைப் போல் பிறரை நினைத்தல்
  தன் பலம், பலவீனம் என்ன? தற்போதுள்ள வயதிற்குத் தகுந்தபடி உள்ளோமா? நம் உடல் வலிமை மற்றும் உடல் நலம் எந்த நிலையில் உள்ளது? நம்முடைய கல்வித்தகுதி தேவையான அளவு உள்ளதா? நாம் செய்யும் தொழிலில் நமக்கு குறிப்பிடத்தக்க திறமையுள்ளதா? பொதுவான அறிவு வளர்ச்சி எந்த அளவு உள்ளது? நம்முடைய அதிகார வரம்பு நிலை மற்றும் செல்வ செழிப்பு நிலை எந்த அளவு உள்ளது? இதுபோன்ற எண்ணற்ற சுயஅலசல் அடிக்கடி நமக்குள் ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றபோது நம் வளர்ச்சி பெருகிக்கொண்டே இருக்கும்.
  அதுபோல், தன்னைப்போல் பிறரை நினைத்தல் என்பது, என்னுள் இருக்கும் உயிர்தான், என் எதிரே உள்ளவரிடமும் உள்ளது என்கிறஉணர்வை அடைதல், பிறரை துன்புறுத்துவது என்பது, தன்னைத் தானே துன்புறுத்துவதற்குச் சமம் என்று அறிதல். மற்றவரின் சுயம் பாதிக்கப்படாத அளவிற்கு என்னுடைய செயல் அமைய வேண்டும் என்கிறஎண்ணம் மேலோங்கி இருப்பது. “வாடிய பயிரைக் கண்டபோது வாடினேன்” என்றாரே வள்ளலார் அது போன்றதே தன்னைப் போல் பிறரையும் நினைத்தல்.
  தொடர்பு கொள்ளும் திறமையும், உறவை வளர்க்கும் தன்மையும்
  பளிச்சென்றதோற்றத்துடன், சற்றேகவர்ச்சியும், வசீகரமும் கலந்து வெளிப்படும்படி எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது தொடர்பு கொள்ளவும், உறவை வளர்க்கவும் பேருதவியாக இருக்கும். எப்பொழுதும் புன்முறுவல் பூத்த முகத்துடன், அன்புடன் வரவேற்று, அன்னியோன்யமாகப் பேசுவதும் மிக முக்கியமானதாகும்.
  மனித இயல்பு என்னவென்றால் பிறர் தனக்குக் கௌரவம் தரவேண்டும் என விரும்புவது தான். ஆகையால் இதை மனதில் வைத்துக் கொண்டு மற்றவரிடம் தொடர்பு கொண்டால் பலன் கிடைக்கும். மேலும் செயல்களைச் செய்யும் முறையில், நாம் காலத்தைக் கையாளுவது, மனதிற்குத் திருப்தியுள்ள ஒன்றாக அமைந்தாலும், அவைகளால் நட்புறவு அமைகிறதா என்று ஆராய்வது அவசியமாகும். அதுபோல் நமக்கு நேரும் பொருள் மற்றும் சிறு இழப்புக்களால் ஒரு நன்மை விளையுமானால் நாமாக முன்வந்து விட்டுக் கொடுக்கலாம். அது தொடர்பு கொள்ளுவதிலும், உறவை வளர்ப்பதிலும், நல்ல பலன் அளிக்கும்.
  ஒவ்வொரு உறவையும் நாம் எப்படி வைத்திருக்கிறோம் என்பதைப் பொருத்துத்தான், நம்முடைய அன்றாட வாழ்க்கையின் தரம் அமைகின்றது. “சிறு துரும்பும் பல்குத்த உதவும்” என்பது போல ஒவ்வொரு உறவும் ஏதோர் வகையில் பயன்படக்கூடியதே என்பதில் எப்போதும் மனதில் நிலை நிறுத்துவோம்.
  2. சிந்தனைத் தொடர்பான ஆற்றல்
  பக்குவமாய் கேள்வி கேட்பது
  பளிச்சென்று பதில் கண்டுபிடிப்பது
  தெளிவாக இயங்குவது
  சிக்கலில் தெளிவான முடிவு எடுப்பது
  மேற்கண்ட சிந்தனை தொடர்பான ஆற்றல் அனைத்தும் ஒருவரின் படைப்பாற்றல் தன்மையை மேம்படுத்துவதாகும். சிந்தனை தொடர்பான ஆற்றல் ஒருவரிடம் எந்த அளவு வளர்ந்துள்ளதோ, அந்த அளவு அவர் புதிய படைப்பாற்றல் தன்மையுடையவராக இருப்பார்.
  பக்குவமாய் கேள்வி கேட்பதும், பளிச்சென்று பதில் கண்டுபிடிப்பதும்
  ஏன் என்ற கேள்வியில் இருந்து பிறந்தது தான் நாகரிகம். நாம் பிறந்தது முதல், இறக்கின்ற தருணம் வரையிலும், ஏன் என்ற கேள்வியும் உடன் இருந்து கொண்டே இருக்கும். அது மனிதச் சிந்தனையுடன் தொடர்பு கொண்டதாகும். நாம் ஒரு கால கட்டத்தில் வெளிப்படையாக கேள்விகளைக் கேட்கின்றோம். மற்றொரு காலகட்டத்தில், நமக்குள்ளே நாம் கேள்வியைக் கேட்கின்றோம். இப்படித்தான் நம் வாழ்க்கை முழுவதும், கேள்வியும், பதிலுமாய் நிறைந்துள்ளது.
  கேள்வி எழ, எழ அதற்கான பதிலும் வர, வர நாம் உயர்ந்த சிந்தனையுடையவராய் வளர்வோம். ஒரே கேள்வியிலேயே உட்கார்ந்து கொண்டே இருப்போமானால், நாம் தேங்கிக் கிடக்கும் நீராய் நாரிப்போவோம். நம்மில் தேடுதல் இருக்கும் வரைதான் நமக்கு தேவையும் இருக்கும். அதற்கான வாழ்விலும் சுவாரஸ்யம் மிளிரும். நாம் புதியதை நோக்கிப் புறப்பட்டுக்கொண்டே இருக்க, தேடுதல் என்பது தேவைப்படுகின்றது. தேடுதல் என்பது நமக்கு, நாம் படிக்கும் புத்தகம், கேட்கும் சொற்பொழிவு மற்றும் பட்டறிவின் மூலம் அமைவதாகும்.
  சில கேள்விகளும், அதற்குக் கிடைத்த பதில்களும்
  1. கடைகளைத் தேடிப்போய் ஏன் வாடிக்கையாளர்கள் பொருள்களை வாங்க வேண்டும் என்றகேள்விக்கு…
  வீடு தேடிச் சென்று அதுவும், தவணை முறையில் அந்தப் பொருளை கொடுப்போம் என்றபதிலுக்குக் கிடைத்த பலன் பன்மடங்காகும்.
  2. பாடலை வீட்டில் மட்டும் தான் கேட்க முடியுமா? பார்க்க முடியுமா? டெலிபோனை வீட்டில் மட்டும் தான் பேச முடியுமா? என்றகேள்விக்கு…
  போகும் இடமெல்லாம், கேட்கவும், பார்க்கவும், பேசவும் வசதியுள்ள நவீன பொருட்கள் வந்தது. அவைகளால் மற்றவர்க்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் அதை அனுபவிக்கும் வாக்மேன் வந்தது.
  3. பேண்ட், சர்ட் போட்டால்தான் கௌரவம் என்று நினைக்கும் மக்கள் மத்தியில், எப்படி வேட்டி சட்டையைப் பிரபலப்படுத்துவது என்றகேள்விக்கு…
  வேட்டியே கட்டத் தெரியாத, வேட்டியே கட்டாதவர்களையும் கவரும் வகையில் வெள்ளை பனியன், வெள்ளை கைக்குட்டை, வெள்ளை பெல்ட், வெள்ளை செல்போன் கவர் என்று அனைத்தையும் வெள்ளை நிறத்தில் வடிவமைத்து, விற்பனையைப் பெருக்கிய நிறுவனத்தின் சாமர்த்தியத்தை என்ன என்று சொல்லுவது.
  இப்படி எண்ணிலடங்காத கேள்விகளில் இருந்து பிறந்தது தான், நவ நாகரிக உலகின் அத்தனைப் பொருட்களும் என்றால் அது மிகையாகாது.
  கேள்வி பிறந்தது அன்று – நல்ல
  பதில் கிடைத்தது இன்று
  யாவும் நடந்தது நன்று.
  -கவிஞர் கண்ணதாசன்
  தெளிவாக இயங்குவதும் சிக்கலில் தெளிவான முடிவெடுப்பதும் எப்படி என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்….

  சலிப்படைந்தால் சாதனை இல்லை!

  ஒவ்வொரு மகத்தான சாதனைக்குப் பின்னும் கடுமையான, முறையான உழைப்பு இருக்கிறது. சலித்துப் போகாத மனம் இருக்கிறது. இந்த இரண்டும் இல்லாமல் எந்த சிறந்த சாதனையும் நிகழ்ந்து விடுவதில்லை. சாதனைகளைப் பாராட்டுகின்ற மனிதர்கள் சாதித்தவர்களன் திறமைகளைத் தான் பெரும்பாலும் சாதனைகளன் காரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கென சலிக்காமல் உழைத்த உழைப்பை அதிகமாக யாரும் கவனத்தில் கொள்வதில்லை. ஏனென்றால் பரிசுகளும் பாராட்டுகளும் குவியும் போது தான் அவர்களைக் கவனிக்கிறோம். புகழ் சேரும் போது தான் சுற்றி ஒரு கூட்டமும் சேர்கிறது. அந்த ஒரு நிலை வரும் வரையில் அவர்கள் உழைக்கும் போது அவர்கள் தனியர்களே. அவர்கள் இருப்பதைக் கூட உலகம் அறியாமலேயே இருந்து விடவும் கூடும்.
  திறமை மிக முக்கியம். அது தான் முதல் தேவையும் கூட. திறமை இல்லாவிட்டால் உழைப்பு வீண் தான். ஆனால் திறமை இருந்தும் அதற்காக உழைக்கா விட்டால் திறமையும் வீண் தான். இதற்கு எத்தனையோ உதாரணங்களை நாம் நம்மைச் சுற்றியும் பார்க்கலாம். திறமையும் முக்கியம், உழைப்பும் முக்கியம் என்றாலும் எது எந்த அளவு முக்கியம் என்ற கேள்விக்கு விஞ்ஞானி எடிசன் ”1% திறமையும் 99% உழைப்பும்” வெற்றிக்குத் தேவை என்கிறார். இந்தக் கேள்விக்குப் பதில் அளக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் புரிந்த அவரைக் காட்டிலும் பொருத்தமான வேறு நபர் இருக்க முடியாது என்பதால் அதை வெற்றிக்கான சூத்திரமாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  உலக வரலாற்றில் இரண்டு துறைகளல் நோபல் பரிசுகள் பெற்றவர்கள் இருவர். அதில் முதலாமவர் மேரி கியூரி அம்மையார். இயற்பியல், வேதியியல் என்ற இரண்டு துறைகளல் 1903, 1911 ஆம் ஆண்டுகளல் அவர் நோபல் பரிசுகள் பெற்றார். வேதியியலில் நோபல் பரிசு கிடைக்கக் காரணமாக இருந்த ரேடியத்தைக் கண்டுபிடிக்க அவர் உழைத்த உழைப்பு கொஞ்ச நஞ்சமல்ல. அவருக்கு ஆராய்ச்சிக்கேற்ற வசதிகளைச் செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. குதிரை லாயமே அவரது ஆராய்ச்சி சாலையாக அமைக்கப்பட்டது. பொருளை அரைப்பது, கழுவுவது, அடுப்பு மூட்டி சூடாக்குவது போன்ற சில்லறை வேலைகளைச் செய்யக்கூட வேலையாட்கள் இல்லை. அந்த வேலைகளை அவரே தான் செய்தார். கனிமத்தை அரைக்கும் எந்திரத்தைச் செக்குமாடுகள் போல அவரே இழுத்து அரைத்தார். இப்படி ஒரு நாள், இரு நாளல்லை பல ஆண்டு காலம் பல துன்பங்களை ஏற்று உழைத்துத் தான் ரேடியத்தை அவர் கண்டுபிடித்தார்.
  இப்படி ஒவ்வொரு உண்மையான உயர்ந்த சாதனையின் பின்னும் பெரும் உழைப்பு இருக்கிறது. வெற்றிக்கான முயற்சிகளல் பல சமயங்களல் செய்ததையே தொடர்ந்து பல காலம் செய்ய வேண்டி இருக்கும். அந்த உழைப்பு சுவாரசியமானதாக இருப்பது மிக அபூர்வம். எடிசன் குறிப்பிட்ட 1% திறமை இருப்பவர்கள் ஏராளம். ஆனால் அந்த 99% உழைப்பு என்று வரும் போது தான் பல திறமையுள்ளவர்கள் பின்வாங்கி விடுகிறார்கள். அவர்களுக்குத் தொடர்ந்த ஒரே மாதிரியான உழைப்பில் சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. ஒருசில முயற்சிகளல் பலன் கிடைத்து விட வேண்டும் என்கிற எண்ணம் இருந்தால் சாதனை என்பது என்றுமே சாத்தியமில்லை.
  தென்னாப்பிரிக்காவில் பல்லாயிரக்கணக்கான ஆட்கள் சுரங்கத்தைத் தோண்டி வைரத்தை வெட்டி எடுக்கிறார்கள். பல டன் எடையுள்ள மண்ணைத் தோண்டி அப்புறப்படுத்தும் போது தான் அதில் சிறிய வைரத்துண்டு கிடைக்கிறது. தோண்டி எடுப்பதில் வைரத்தை விட மண் தான் அதிகமாகக் கிடைக்கிறது என்று சலிப்படைவதில் அர்த்தமில்லை. அப்படிக் கிடைப்பது தான் நியதி.
  எனவே நாம் அதை எதிர்பார்த்தே அது போன்ற வேலையில் ஈடுபட வேண்டுமே ஒழிய நமக்கு மட்டும் விதிவிலக்கு வேண்டும் என்ற பேராசையில் முயற்சிகள் மேற்கொண்டால் பெருத்த ஏமாற்றத்தையே அடைய நேரிடும்.
  பரிசு வாங்கும் நிகழ்ச்சி போல பயிற்சி செய்யும் நேரங்களும் சுவாரசியமாக இருப்பதில்லை. ஆனால் பெரிய சாதனை புரிந்த அத்தனை பேரின் பயிற்சி நேரங்கள் சாதாரண மக்களன் கற்பனைக்கெட்டாத அளவில் இருக்கின்றன. பலரும் கேளக்கைகளலும் பொழுது போக்குகளலும் ஈடுபட்டிருக்கையிலும், பலரும் உறங்கிக் கொண்டிருக்கையிலும் சாதிக்க நினைப்பவன் தன் சாதனைக்காக விடாமல் உழைக்க வேண்டி இருக்கிறது.
  பல நேரங்களல் சாதனையாளர்கள் சாதனைகளைச் செய்வதைப் பார்க்கையில் அவர்கள் அலட்டிக் கொள்ளாமல், சிறிதும் கஷ்டப்படாமல், அனாயாசமாகச் செய்கிறது போல் தோன்றலாம். ஆனால் அந்த நிலையை அடைய அவர்கள் எந்த அளவு உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை அவர்களைக் கேட்டால் தான் தெரியும்.
  ஃப்ரிட்ஸ் க்ரீஸ்லர் என்ற பிரபல வயலின் மேதை சிறிதும் பிசிறில்லாமல் மிக மிகச் சிறப்பாக ஒரு நிகழ்ச்சியில் வயலின் வாசிப்பதைக் கேட்டு பிரமித்துப் போன ஒரு இளைஞன் சொன்னான். ”இப்படி வாசிக்க வாழ்நாளையே தந்து விடலாம்”. அந்த இசை மேதை அமைதியாகச் சொன்னார். “அப்படித் தான் தந்திருக்கிறேன் இளைஞனே”. அப்படிப்பட்ட ஒரு இசையைத் தர அவர் வாழ்நாள் முழுவதும் உழைத்திருக்கிறார்.
  ஒரு சாதனையைக் காண்கையில் புத்துணர்ச்சி பெற்று அப்படியே சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் வருகிறது. அந்த ஆரம்பப் புத்துணர்ச்சியைக் கடைசி வரை தக்க வைத்துக் கொள்வது என்பது வெகுசிலராலேயே முடிகிறது. அந்த வெகுசிலராலேயே சாதனை புரிய முடிகிறது.
  எனவே எந்தத் துறையில் சாதிக்க ஆசைப்பட்டாலும் முதலில் அதற்கான திறமை உங்களடம் இருக்கிறதா என்று பாருங்கள். அந்தத் திறமை இருக்குமானால் அதை மெருகேற்றவும், வௌக் கொணரவும் முறையான திட்டமிட்ட உழைப்பைத் தர மனதளவில் உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள். மனம் தயாராகா விட்டால் எந்த முயற்சியும் அரைகுறையாகவே முடியும். சாதனையின் உயரத்திற்கேற்ப பயணிக்கும் தூரமும், நேரமும் அதிகமாகத் தான் இருக்கும். அந்தப் பயணத்தில் சலிப்படைந்து விடாதீர்கள். பாதியில் நிறுத்தி விடாதீர்கள். சாதனைப் பயணத்தில் பாதியில் நிறுத்தியவர்களை யாரும் நினைவு வைத்துக் கொள்வதில்லை. சலிப்பு வரும் போதெல்லாம் உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். தொடர்ந்து முயன்றால் ஒரு நாள் கண்டிப்பாக சாதித்து முடித்திருப்பீர்கள்!

  உள்ளம் மாறாமல் எதுவும் மாறாது!

  நம் வாழ்க்கையில் பல சமயங்களல் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள ஆசைப்படுகிறோம். வாழ்க்கைப் புத்தகத்தில் புதியதொரு பொலிவான பக்கத்தைத் திருப்பி அதிலிருந்து அத்தனையையும் சிறப்பாய் செய்யத் துவங்க விரும்புகிறோம். எத்தனையோ புத்தாண்டு ஆரம்பங்களல் அப்படி ஆரம்பித்தும் இருக்கிறோம். சில நேரங்களல் தவறுகளால் வாழ்க்கையில் அடிபட்டு போதுமடா சாமி இனி கண்டிப்பாய் இப்படி இருக்கக் கூடாது என்று நினைத்தும் இருக்கிறோம். ஆனால் நம்மையும் அறியாமல் ஒருசில நாட்களலேயே பழைய வாழ்க்கைக்குத் திரும்பி விடுகிறோம். இது தான் நம்மில் பெரும்பாலானோர் வாழ்க்கையில் நியதியாக இருக்கிறது.
  உண்மையாகத் தானே அப்படி ஆசைப்பட்டோம். நம் நன்மையை எண்ணித் தானே அதை செயல்படுத்த முனைந்தோம். ஆரம்பித்த நேரத்தில் மிகவும் உறுதியாகத் தானே இருந்தோம். பின் எங்கே ஏமாந்தோம்? அந்த உறுதி எப்போது தளர்ந்து போனது? ஏன் பழைய நிலைக்கே மாறி விட்டோம் என்ற கேள்விகள் ஆத்மார்த்தமாய் நமக்கு எழாமல் இருக்க முடியாது. அந்தக் கேள்விகளுக்குப் பதிலை நாம் வௌயே தேடினால் கிடைக்காது. பதிலை நமக்குள்ளேயே தான் தேட வேண்டும்.
  எல்லா மாற்றங்களும் உள்ளத்தில் இருந்தே ஆரம்பிக்கின்றன. உள்ளம் மாறாமல் எதுவும் மாறாது. மாறுவதற்கு வௌயே இருந்து எத்தனையோ உதவிகள் கிடைக்கலாம். மாறுவதற்கு எத்தனையோ சாதகமான சூழ்நிலைகள் வௌயே இருக்கலாம். ஆனால் மனம் நூறு சதவீதம் ஆசைப்பட்டால் ஒழிய எந்த நிரந்தர மாற்றமும் நம்மிடம் ஏற்படாது. இது மிகப்பெரிய மாற்றங்களுக்கு மட்டும் பொருந்தும் உண்மை அல்ல. மிகச்சிறிய மாற்றங்களுக்கும் இதே விதி தான்.
  எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி வீட்டை மிகவும் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ளக்கூடியவர். அவர் மகளோ அவருக்கு நேர்மாறானவர். வீட்டில் எல்லாம் அங்குமிங்கும் இரைந்து கிடக்கும். வேண்டியது வேண்டாதது என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லாம் கண்டபடி விழுந்து கிடக்கும். தாய் மகள் வீட்டுக்குச் சென்று பார்த்த போது தலை சுற்றி விழாத குறை தான். மிகுந்த சிரமம் எடுத்து தாய் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தியதோடு நிற்காமல் அதை அப்படியே தொடர்ந்து ஒழுங்காகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள எல்லா வசதிகளும் செய்து கொடுத்தார். என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று நல்ல ஆலோசனைகளும் வழங்கினார்.
  தாய் முயற்சியால் வீடு மிக அழகானதைப் பார்த்த மகள் “இது என் வீடு தானா என்று எனக்கே சந்தேகமாக இருக்கிறது” என்று வியந்து போனார். ”ஒவ்வொன்றையும் தேடியே நான் இது வரை நிறைய சலித்து விட்டேன்” என்றார். இனி இதே அழகுடன் வீட்டைத் தொடர்ந்து வைத்துக் கொள்வதாக தாயிடம் உறுதிமொழியும் தந்தார். ஆனால் தாய் போன பிறகு மூன்றே நாளல் வீடு பழைய நிலைக்கு மாறியது.
  இன்னொரு உதாரணத்தையும் பார்ப்போம். மருமகன் ஏகப்பட்ட கடன் தொல்லையில் இருப்பதை அறிந்த மாமனார், தன் மகளும் பாதிக்கப்படுவதைச் சகிக்க முடியாமல் மருமகனுக்கு உதவ முன் வந்தார். மகளன் அத்தனை நகைகளும் அடகு வைக்கப்பட்டு வெறும் தாலிச்சரடுடன் இருப்பதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. மருமகனின் வருமானம் முழுவதுமே வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்கே சரியாக உள்ளது என்பதை அறிந்த அவர், யார் யாருக்கு எவ்வளவு தர வேண்டும் என்ற கணக்கெடுத்து அத்தனையும் தந்து மருமகனைக் கடன் தொல்லையில் இருந்து முழுவதுமாக மீட்டார். மகளன் நகைகளையும் மீட்டுத் தந்தார்.
  மருமகன் கண்கலங்க மாமனாருக்கு நன்றி சொன்னான். கடன் தொல்லை இல்லாததால், வட்டி கட்டும் தேவையும் இல்லாததால் இனி எந்த பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாக வாழ்வோம் என்று உறுதியளத்தான். மாமனாரும் நிம்மதியாக வீடு திரும்பினார். ஆனால் ஆறே மாதங்களல் அந்த மருமகன் பழைய நிலைக்கே வந்து விட்டான். பல இடங்களல் கடன் வாங்கி வட்டி கூடத் தர முடியாமல் திண்டாட ஆரம்பித்து விட்டான். மனைவியின் நகைகள் அத்தனையும் அடகுக்கடைக்குப் போய் விட்டன.
  இந்த இரண்டு உதாரணங்களும் அபூர்வமானதல்ல. ஒவ்வொருவரும் தினசரி காண முடிந்தவையே. மாற வேண்டும் என்கிற ஆசையும் அந்த உள்ளத்தில் தானே தோன்றியது. மாறா விட்டால் இருக்கும் சிரமங்களையும் அவர்கள் உணர்ந்தவர்கள் தானே. பின் ஏன் அவர்கள் மாறவில்லை? திரும்பத் திரும்ப பழைய நிலைக்கே அவர்களை இழுத்துச் செல்வது எது?
  மனிதன் மனதில் அவ்வப்போது தோன்றும் எண்ணங்கள் அந்த நேரத்தில் பலம் வாய்ந்தவை அல்ல. அந்த எண்ணங்கள் திரும்பத் திரும்ப எண்ணப்பட்டு, அதனுடன் அதற்கான முக்கியத்துவமும் தொடர்ந்து வலியுறுத்தப்படும் போது தான் அவை பலம் பெற ஆரம்பிக்கின்றன. அப்போது தான் அவை ஆழ்மனதில் பதிகின்றன. உண்மையிலேயே மாற விரும்புபவன் அந்த எண்ணங்கள் வேரூன்றும் வரை மிக கவனமாக பாதுகாக்க வேண்டும். சில முறை நினைத்தால், திடீர் உற்சாக தருணங்களல் நினைத்தால் போதாது. அதே நேரத்தில் அந்த எண்ணங்களுக்கு எதிர்மறையான எண்ணங்களை, எதிரான மனோ பாவத்தை அறவே நீக்க வேண்டும். இந்த இரண்டையும் ஒருங்கே செய்தால் மட்டுமே உண்மையில் உள்ளம் மாறும். அதன்படி எல்லாம் மாறும்.
  மாற முடியாதவர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு இந்த இரண்டையும் தொடர்ந்து செய்யாமல் இருப்பது தான். மேலே சொன்ன இரண்டு உதாரணங்களலும் ஏற்பட்ட தவறுகளைப் பார்ப்போம்.
  வீட்டை தாய் சுத்தப்படுத்தி விட்டுப் போன பிறகு அந்த மகள் முதல் நாள் சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்துக் கொள்ள ஆசைப்பட்டது உண்மை. ஆனால் இரண்டாம் நாள் அந்த எண்ணம் வலுவிழந்தது. மூன்றாம் நாள் அது மிக பலவீனமாகவே உணரப்பட்டது. தொடர்ந்த நாட்களல் அந்த எண்ணம் சமாதியாக்கப்பட்டது. அதனால் தாயிடம் உறுதியளத்த படி ஒவ்வொன்றையும் அந்தந்த இடத்திலேயே வைப்பதும், உபயோகித்த இடங்களைச் சுத்தப்படுத்துவதும் செய்ய முடியாமல் போனது. அந்தச் சில்லரை சிரமங்களைக் கூட எடுக்கவிடாமல் முன்பே பழகி இருந்த ஒழுங்கீனம் பழையபடி அவர் வாழ்க்கையைத் தன் கையில் எடுத்துக் கொள்ளக் காரணம் அதுவே.
  அந்த மருமகனும் கடன் தொல்லையால் அவதிப்பட்ட போது இதிலிருந்து ஒரு முறை தப்பித்தால் போதும், பின் எப்போதும் ஒழுங்காக நடந்து கொள்வேன் என்று உறுதியாக நினைத்தது உண்மை தான். ஆனால் அவனிடம் காணும் பொருளை எல்லாம் வாங்கும் பழக்கம் இருந்தது. அது தேவையோ, தேவை இல்லையோ, யாரிடமாவது பார்த்தால் தானும் வாங்கி விடுவான். தன்னிடம் இருக்கும் பொருளை அடிமாட்டு விலைக்கு விற்று அதிலேயே புதிய மாடலை கடன் வாங்கியாவது வாங்கிக் கொள்வான். இந்தக் குணம் தான் அவனைப் பெரும் கடனில் ஆரம்பத்தில் தள்ளயது. மாற ஆசைப்பட்டவன் மாறுதலுக்கு எதிரான, கண்ட பொருள்களை எல்லாம் வாங்கும் பழக்கத்தை விடுவதற்குத் தேவையான மன உறுதியை வளர்த்துக் கொள்ளவில்லை.
  முதல் பொருளை வாங்கும் போது இப்போது தான் பழைய கஷ்டம் இல்லையே இதை வாங்குவதால் என்ன பெரிய பிரச்சனை வந்து விடப்போகிறது என்று நினைத்தான். அதாவது மாமனாரிடம் சொன்ன போது இருந்த உறுதிக்கு எதிராக சின்ன செயல் செய்தார். அந்த மன உறுதியைத் தொடர்ந்து காப்பாற்றி இருந்தால் அந்த சின்ன விலகலைக் கூட அவன் அனுமதிக்காமல் இருந்திருப்பான். ஒரு விலகல் இன்னொரு விலகலுக்கு வழி ஏற்படுத்த, பின் ஏற்பட்ட சின்ன சின்ன விலகல்கள் சிறிது சிறிதாக ஆரம்ப உறுதியைத் தகர்த்து விட, முன்பே பலமாயிருந்த அந்தப் பழக்கம் மீண்டும் அவனை ஆட்சி புரிய ஆரம்பித்தது.
  எனவே மாற விரும்புவர்கள் உள்ளத்தை மாற்றுங்கள். மாற விரும்பும் ஆசையில் முழுமையாக இருங்கள். அடிக்கடி அதை உறுதிப்படுத்துங்கள். உள்ளத்தில் அதற்கு முரணாக உள்ள ஆசைகளையும் எண்ணங்களையும் அனுமதிக்காதீர்கள். உங்கள் தீர்மானம் உறுதிப்படும் வரை சர்வ ஜாக்கிரதையாக இருங்கள். பழைய ஆசைகளும், எண்ணங்களும் வேரோடு பிடுங்கப்படும் வரை ஜாக்கிரதையாக இருங்கள். அப்படியானால் மட்டுமே விரும்பும் மாற்றங்கள் சாத்தியப்படும்.