Home » Articles » உலக சிரிப்பு தினம்

 
உலக சிரிப்பு தினம்


மனோகரன் பி.கே
Author:

‘உலக சிரிப்பு தினம்’ ஆண்டுதோறும் மே மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக் கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினம் முதன் முதலாக 1998 ஜனவரி 11ம் நாள் மும்பையில் ‘சிரிப்பு யோகா இயக்கம்’ என்றஅமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்து கொண்டாடப்பட்டது. இந்த அமைப்பின் நிறுவனர் டாக்டர் கட்டாரியா. தற்போது உலகம் முழுவதும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. உலகளவில் 65 நாடுகளல் சுமார் 6000 சிரிப்பு மன்றங்கள் இயங்கி வருகின்றன.
சிரிப்பின் வாயிலாக உலகில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பது இந்த தினத்தின் நோக்கம். இது சற்று வேடிக்கையாகவும் விந்தையாகவும் தோன்றும். ஆனால் இது சாத்தியம் என்பதை அறிவியல் உண்மைகள் உறுதிப்படுத்துகின்றன. ‘மனிதன் சிரித்தால் மனித மனம் மாறும். மனிதன் மாறினால் அவனைச் சுற்றியுள்ள உலகம் மாறும்’ என்பதுதான் அடிப்படை கோட்பாடு.
‘சிரிக்க தெரிந்த சமுதாய விலங்கு மனிதன்’ என நம்மை மற்றஇனங்களலிருந்து வகைப்படுத்தி அறிவியலார் கூறுவதுண்டு. சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனித இனம் தான். சிரிப்பு என்பது மனிதனுக்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பு. விலங்கினங்களுக்கு அந்தச் சிறப்பு கிடையாது. “சிரிப்பு என்பது சிநேகத்திற்கான முதல் தூது. இறுக்கமான சூழ்நிலையை இணக்கமாக்க உதவுவது. மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பகிரங்க அடையாளம் சிரிப்பு”.
மன இறுக்கத்தை குறைக்க, நட்பை வளர்க்க, ஒருவருக்கொருவர் நெருக்கமாக பழக, இடைவெளியை குறைக்க, மனத்தெளிவு மற்றும் மனமகிழ்ச்சியை உண்டாக்க . . . என்று பல்வேறு வகைகளல் துணை நிற்பது சிரிப்பு. சிரிப்பின் சிறப்புகளை கூறுகையில் ‘அழகின் சிரிப்பு’ என்றார் பாரதிதாசன். ‘துன்பம் வரும் வேளையிலே சிரிங்க…’ என்றார் வள்ளுவர். ‘சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே…’ என்றார் கவியரசு கண்ணதாசன். ‘சிரிப்பு பாதி, அழுகை பாதி சேர்ந்ததல்லவா மனித ஜாதி…’ என்றார் பொதுவுடைமைக் கவிஞர்.
‘ வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்’ என்பார்கள். உண்மைதான். சிரிக்கும் போது மனதில் ஒருவித மகிழ்ச்சியான கலகலப்பான உணர்ச்சி ஏற்படுகிறது. இதனால் உடலில் ஆரோக்கியமான வேதிப்பொருட்கள் (HEALTHY ENZYMES) உற்பத்தியாவதால் அது நோயைத் தீர்க்கும் மருந்தாகிறது. சிரித்து மகிழ்வதால் நோய்கள் வராமல் தடுக்கப்படுவதுடன் வந்த நோய்களும் விரைவில் குணமாவதாக ஆராய்ச்சி உண்மைகள் தெரிவிக்கின்றன.
மனிதன் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்த, மிகவும் பயனுள்ள செய்திகளை மட்டுமே படிக்கவும் சிந்திக்கவும் விரும்புவதில்லை. சிலவற்றை நகைச்சுவையோடு பார்க்கவும், படிக்கவும் விரும்புகிறான். திரைப்படம், டி.வி. சீரியல், நாடகம் எதுவானாலும் அதன் கதைப்போக்குடன் நகைச்சுவை பகுதியும் இருப்பதால்தான் ரசிக்க முடிகிறது. சில பேச்சாளர்கள் நகைச்சுவையுடன் பேசுவதால்தான் அவர்களது பேச்சுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. சிந்திக்க வைக்கும் அதே நேரத்தில் சிரிக்க வைக்கும் வகையிலும் எழுதும் எழுத்தாளர்களை நகைச்சுவை எழுத்தாளர்கள் என்று வாசகர்கள் புகழ்கின்றனர். சிரிப்பின் பலன் எத்தகையது என்பதை அக்பர், பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகளை படிக்கும்போது உணர முடியும்.
அசட்டுச் சிரிப்பு, ஆணவச் சிரிப்பு, ஏளனச் சிரிப்பு, சாகசச் சிரிப்பு, நையாண்டி சிரிப்பு, புன்சிரிப்பு என்று சிரிப்பில் பலவகை உண்டு. இதில் புன்னகைக்கு ஒரு சிறப்பிடம் உண்டு. கண்ணுக்குத் தெரியாமல் உள்ளுக்குள் ஒளிந்து இருக்கும் அழகை வெளிப்படுத்துவது புன்னகை. புன்னகை என்பது எந்தவிதமான ஓசையையும் செய்யாமல் உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சியை முகத்தில் காண்பிக்கும் ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடாகும். உலகம் முழுவதும் உள்ள மக்கள், புன்னகை என்பதனை, மனத்தில் உள்ள மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு சாதனமாகவே கருதுகிறார்கள். மனதில் உள்ள மகிழ்ச்சியானது புன்னகையின் வடிவில் தானாகவே வெளிவருகிறது.
மனிதனின் சோர்வை அகற்றவல்லது சிரிப்பு. சிரிக்கும் உணர்வு இருந்தால் எத்தனை கொடிய துன்பத்தையும் துரத்தமுடியும். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு முறை வெளியூர் சென்ற சமயம் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது. வேறு காருக்காக காத்திருந்த போது, அந்த வழியாக வந்த விவசாயிகள் கார் விபத்தைக் குறித்து கேட்டபொழுது, ‘காருக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது அதனால் காரை மரத்தில் சாத்தி வைத்திருக்கிறோம்…’ என்றாராம். இத்தகைய வஞ்சகமில்லா நகைச்சுவைக்கும், சிரிப்புக்கும் இன்றைய காலகட்டத்தில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்றே கூறவேண்டும்.
மேலை நாடுகளல் டாக்டர்கள் நோயாளகளுக்குச் சிரிப்பு வீடியோக்களைப் பார்க்குமாறு பரிந்துரை செய்கிறார்கள். ‘நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உற்பத்தி செய்யும் வெள்ளை அணுக்களன் இயல்பை ‘சிரிப்பு’ முடுக்கிவிடுகிறது என்பதைச் சிரிப்பு பற்றி ஆராய்ந்த மருத்துவ அறிஞர் வில்லியம் பிரை தன்னுடைய ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளார். சிரிக்கும்போது உடலில் 300 தசைகள் அசைகின்றன. உடலிலும், மனதிலும் உள்ள அழுத்தங்களும், கவலைகளும் வெளியேறுகின்றன. குறிப்பாக முகத்திலுள்ள தசைகளும், நெஞ்சுத் தசைகளும் பலம் பெற்று ஆரோக்கியத்தைத் தருகின்றன. ஒரு நாளல் குழந்தைகள் சராசரியாக 400 தடவைகள் சிரிக்கும் போது பெற்றோர்கள் 15 தடவைகள் மட்டுமே சிரிக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
காரணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் காலையில் ஒரு அரை மணிநேரம் சிரித்துக் கழித்தால் டென்ஷன் இருப்பதில்லை என்பது ஆராய்ச்சி பூர்வமாக நிரூபித்துள்ளார்கள். சிரிப்பதற்கு கூட பயிற்சிகள் தேவைப்படுகினறன. ஐந்து நிமிடம் காலையில் சிரித்துப் பழகலாம். பெருநகரங்களல் தற்போது பலர் ஒன்றுகூடிச் சிரிப்பதை ஒரு வகையான பயிற்சியாக மேற்கொண்டுள்ளனர். நடைப்பயிற்சியாளர்கள் கிளப் போல சிரிப்பு கிளப்புகள் (HUMUROUS CLUBS) ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சுமார் இருபது அல்லது முப்பது பேர் வட்டமாக பூங்காக்களல் அமர்ந்து ஒரு அரை மணிநேரம் வாய்விட்டுச் சிரிக்கப் பழகுகிறார்கள். இதனால் நல்ல பலன் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இப்போது எல்லா நகரங்களலும் சிரிப்பு கிளப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
தினமும் கொஞ்ச நேரம் குழந்தைகள் மனம் விட்டுச் சிரித்தால் அவர்கள் ஆரோக்கியமாக வளர்வார்கள். சிரிப்பு மனதை வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும். மனம் விட்டுச் சிரித்தால் மாரடைப்பை வருவிக்கும் மனஅழுத்த ஹார்மோன்களும், அதன் மூலக்கூறுகளும் பெருமளவு குறைந்து உடல் ஆரோக்கியமடையும்.
சிரித்தால், உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும். அழுதால் நீங்கள் ஒருவரே அழுது கொண்டிருப்பீர்கள். சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்த வேண்டும். சிரிப்பே உலகின் மிகச்சிறந்த மருந்து என்று சொன்னால் அது மிகையல்ல. ‘நீங்கள் மிகழ்ச்சியாக, சந்தோஷமாக, சிரிக்கும் சமயம் மட்டுமே உங்கள் வீட்டில் இருந்து வெளி வாருங்கள். மகிழ்ச்சி அலைகளைப் பரப்புங்கள்’ என்கிறார் சுவாமி விவேகானந்தர். சோக அலைகளை, துக்க சுவடுகளை, கவலை எண்ணங்களை வீட்டில் புதையுங்கள். வெளி உலகில் வந்து பரப்பாதீர்கள் என அறிவுறுத்துகிறார்.
உங்களால் சிரிக்க முடிகிறது என்றால் நல்ல மனதோடு இருக்கிறீர்கள் என்று பொருள். சிரிப்பு அலைகள் நம்மிடம் பிறரை ஈர்க்கும். கவலை அலைகள் பிறரை நம்மிடமிருந்து விரட்டும். சந்தோஷ அலைகள் நம்மை சுற்றி பாஸிடிவ் கரண்ட்டை பரப்பும். சோக அலைகள் நம்மைச்சுற்றி நெகடிவ் கரண்ட் தரும். உயிர் எழுத்துக்களல் ‘அ’ முதல் ‘ஓ’ வரை வரிசையாகத் தொடர்ந்து வேகமாக உச்சரித்தால் சிரிப்பு அலைகள் உருவாகும். “சோகம் நமது ஆரோக்கியச் செல்வத்தைக் குறைக்கும். சிரிப்பு நமது ஆரோக்கியச் செல்வத்தை உயர்த்தும்”.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment