Home » Articles » பல இரசம் (பலரசம்)

 
பல இரசம் (பலரசம்)


அனந்தகுமார் இரா
Author:

அடுத்த விநாடி…… என்கின்றதொரு புத்தகம். அதில், ஆசிரியர் உங்கள் வாழ்வை மாற்றும் வல்லமை படைத்த புத்தகம் இது என்றேதான் முதல் பக்கத்தில் சொல்லியிருக்கின்றார், உண்மைதான் என்று எனக்கு தோன்றுகின்றது. உற்சாகம் புத்தகத்திலிருந்து ஷாம்ப்பெய்ன் பாட்டில் போல் பீறிட்டு கிளம்புகின்றது. ஒரு பக்கத்தில் தீபக் சோப்ரா இன்னொரு பக்கம் தமிழ் பக்தி இலக்கியம் என ஆசிரியருடைய கலவை, கலகலவென புத்தகத்தை இழுத்துச் செல்கின்றது.
பலரசம் என்னும் நமது தலைப்பில் விவாதிக்க ஏற்றவாறு பல விதமான சுவையான கருத்துக்கள் பார்க்க கிடைக்கின்றது. ஒரு வரியில் சொல்கையில் பல கிளைகள் கிளைக்குமல்லவா மனது…. அதை அப்படியே வடித்துக்காட்டி வளங்காட்டி இருக்கின்றார். மனவளக்கலையை வலிமையாக படைத்துக் காட்டியுள்ளார்.
எண்ணற்ற எழுத்தாளர்களை மேற்கோள்காட்டியுள்ளது; மேற்கோள் போல் இல்லாதவாறே தெரிவது அவர் வெற்றி. கற்பனையைப் பற்றியும் அதன் வலிமையினைப் பற்றியும் எளமையான எடுத்துக்காட்டுகளோடு புகுந்து விளையாடி இருப்பது என்ன அழகு….. அப்படியே மனதோடு ஒன்றிவிடுகின்றது. சிற்சில சின்னச்சின்ன நெருடல்கள் இருந்தாலும் அவையெல்லாம் பெரிதாக பேசப்படக் கூடியவையல்ல.
நவரசங்களல் ‘சாந்தம்’ தான் கடைசியாக சேர்க்கப்பட்டது போலும். இரசம் முக பாவனை என்றெல்லாம் நாட்டியத்தில் இலக்கியத்தில் படித்தது பழஇரசம் என்கின்ற தலைப்பு தேர்வானதும் அது பல இரசம் என்றுதான் மாறிவிழப்போகின்றது. என உள்ளுணர்வு சொல்லி விடுகின்றது. மின்சார சிக்கனமென L.E.D லைட்டில் எழுதினால் பல நிழல்கள் விரலிலிருந்து விழுவது போல ஒவ்வொரு திரைப்படமோ? புத்தகமோ? பல இரசங்களை கொண்டிருக்க வேண்டியது அவசியமோ?
சந்திரபாபு என்று முகில் அவர்கள் எழுதிய கிழக்கு பதிப்பக புத்தகமொன்று படித்துவிட்டு You Tube சென்று அவரது நிறைய பாடல்கள் படிக்கப்பட்டது. ஆமாம்…… பாடல்களலிருந்து படித்துக்கொண்டது அதிகமாகத் தெரிகின்றது. பல இரசத்திற்கு இந்தப் புத்தகமும் அந்தப் புத்தகமும் (ஆளை சொல்கின்றேன்) ஒரு நல்ல எடுத்துக்காட்டு. நகைச்சுவை அச்சொல்லின் முதல் பதத்தில் இருப்பதைப்போல விலை மதிப்பில்லாத கலை என்று உணர்வுப் பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளது. ஒரு நிமிட மேலாளர் என்றொரு ஆங்கிலப் புத்தகத்தை ஒரே மூச்சில் மறுபடியும் (படித்தே.) படித்துக் குடித்தபோது சிரித்துக்கொண்டே நிர்வாகம் செய்வதுதான் எல்லோருக்கும் நல்ல நிர்வாகம் என்று ஆணித்தரமாக கென் ப்ளாஞ்ச்சர்டு சொல்வதை சந்திரபாபு மூலம் புரிந்துகொள்ள முடிந்தது.
கிரிக்கெட் விளையாட்டின் பல விதமான பந்தது வீச்சுக்களை ஒரே மாதிரியாக எதிர்கொள்ள முடிவு செய்துவது எவ்வளவு உசிதமல்ல என்று ஐம்பது அடித்தபோது புரிந்தது. பல இரசங்களல் மைதானத்தின் பல திசைகளுக்கு பந்துகளை அனுப்பிவைக்கையில் உள்ள சுவையை உணர முடிந்தது. பெருமாளன் பந்து வீச்சு மிகச் சிரமமான நிலையை அடைய; உடனே, இடது கைப்பக்கமாக மட்டையை பிடிக்க ஆரம்பித்தது ஒரு சிறப்பம்சம். களத்தில் நண்பர் கார்த்தியின் திருமண நாள் ‘கேக்’ வெட்டிக் கொண்டாடிய பொழுது இடையே பார்த்தசாரதி கோவில் மாலையை மாற்றச்செய்து மகளுக்கு திருமணக் கோலத்தை பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததொரு இரசவாதம்.
முதல் ஓவரில் எட்டு வைடு வீசினால் ஓபனிங் இறங்கி ‘தேவுடு’ காப்பது இன்னொரு வகை இரசம். வாழ்கையில் அந்தந்த பிரச்சனைகளுக்கான சமயோசித வார்த்தை வீச்சுக்களை எதிர்கொள்ள சரியான நேரத்தைத்தான் பயன்படுத்த வேண்டும். மறக்க வேண்டியதை மறந்து உற்சாகத்தோடு அடுத்த சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டும் என்பதை எல்லாம், நான் ஸ்ட்ரைக்கில் (‘Non-stike’) நின்றுகொண்டு நடுவரோடு கதைத்த பொழுது, நான் இங்கேயிருந்துப் பந்தை அடிப்பேன்-என்று அடம் பிடிக்கக் கூடாதுங்க என்று தத்துவமாய் உதிர்த்துக் கொண்டிருந்தது நினைவில் வைக்க வேண்டிய இரசம்.
அதிசயமாக டிராவில் முடிந்த 20-20 மேட்சைப்பற்றி சொல்லிவிட்டு இ.ஆ.ப தேர்வு நேர்முக மாதிரி மன்றத்தில் அமர்ந்த இரசமான அனுபவத்தை பதிவு செய்வோம். தெரியாத புது அணியோடு என்பதனால் கவனமாக ஆடப்பட்ட 17.4 ஓவர்களல் முடிந்துபோன ஆட்டம் படு விறுவிறுப்பாகி பந்துக்குப் பந்து தீப்பற்றிக் கொண்டதுபோல பல இரசமாக அமைந்திருந்தது. இதே கிரவுண்டில் 220ஐ தாண்டிய பாதி அணியே 123 க்கு திருப்திப் பட்டுக்கொண்டது. கடைசி ஓவரில் 18 இரன்களைக் கொடுத்து சமமான நிலையை அடைந்தபோது கோப்பை இனி அடுத்த வாரமே என முடிவானது. கிரிக்கெட்டிலும் கால்பந்து ரேஞ்சுக்கு ஓடி விழுந்ததெல்லாம் புதுவித இரசமாக இருந்தது. நினைவு நிறையநாள் நீடிக்கும்.
கால்பந்தில் நிறைய, வாழ்க்கை, கலந்திருக்கின்றதைப்போலவே வாழ்விலும், கால்பந்தின் சாரம் கலந்திருக்கின்றது. அலுவலகம், கல்வி முதலியவற்றில் எதையாவது புதிதாக அடைகையில் நாம் தனித்து சாதித்தாக உணர்வதில இரசம் குறைவே. ஒரு பந்தினை இலாவகமாக கோலாக மாற்றிவிட்டால் உடன் இரப்பர் பந்தைப்போல திரும்பி எகிறி நண்பர்களடத்தில் பரவச இரசத்தைப் பகிர்ந்துகொண்டு கைகளைத் தட்டியும் ஆளைத்தூக்கித் தட்டாமாலை சுழற்றி கொண்டாடுவதில் “நண்பர்களே நாம் எல்லோரும் ஒரு அணியின் பாகம்” என்று நினைவுபடுத்திக் கொள்ளுதல் ஒரு உன்னதமான இரசம்.
சிலர் தனித்து நிற்கும் செயலைத் தவறாகப் புரிந்து கொண்டு தாமொரு அணியிலிருக்கின்றோம் என்பதை மறந்துவிட்டால் கோலடிப்பதில் சந்தோஷம் குறைந்துவிடுகின்றது. அணியில் தனியே தெரிபவர்கள் திரிகின்றார்கள். அணியில் பந்தை விட்டுவிட்டு எதிராளயை பதம் பார்ப்பவர்கள் பதட்ட இரசத்தையும் க்ரோத இரசத்தையும் பரவ விடுகின்றனர். தம் முன்னே உள்ள செயல் பந்து போன்றது. செயல்பாடு விளையாட்டு போன்றது. உடன் அல்லது எதிரே இருக்கும் தனியர்களைக் காட்டிலும் அவர்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் காட்டிலும், பந்தை கோலாக மாற்றுவது போல குறிக்கோள் ஒரு கர்ம யோகமாக இருப்பது முக்கியம். மன எழுச்சிச் சிக்கல்களலிருந்து பந்தைக் கடத்தி வருவதைப்போல, தௌவான ஆட்டக்காரர் கோப்புகளை, பாடத்திட்டத்தை பக்குவமாக முடித்து விடுகின்றார்.
எதிராளயுடன் வம்பிழுத்துக்கொண்டு கால்பந்து மைதானத்தில் கைகலந்து கராத்தே விளையாடுவது போலத்தான் சக ஆர்வலர்களோடு கருத்துக் குழப்பம் வருவதும். காரியத்தில் கண்ணாயின், சுபம்-சீக்கிரமே. பிரச்சனைகளை தீர்ப்பதை விட்டுவிட்டு பிரச்சனை செய்தவர்களை வெறுப்பதும் இந்தவகை. கால்பந்தை சில நேரங்களல் பின்னோக்கி செலுத்த வேண்டி உள்ளது. அதை ‘மைனஸ் பாஸ்’ என்று சொல்வார்கள். அதைப்போல சில சமயங்களல் நம் சொல் எடுபடவில்லை எனில் பின்வாங்கி முன்னேறுவதில் தவறொன்றும் கிடையாது. அது திட்டமிடுதலில் ஒரு வகை.
சமீபத்தில் Chess விளையாட்டின் அடுத்த கட்டத்தை காண இயன்றது. இணையதளத்தில் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அதில் ஒன்று இட்ங்ள்ள் விளையாட்டுத்தளம். அதில் ஒரு நிமிடம், மூன்று நிமிடம், ஐந்து நிமிடம், பத்து நிமிடம் என்று பல்வேறு கால அவகாசத்தோடு விளையாடும் தளங்கள் உள்ளன. அதில் விளையாடுவது புத்தம்புது அனுபவமாக இருக்கின்றது. மூளை சிறகடிக்கின்றது. அட்ர்னல் எகிறுகின்றது. இதயத்துடிப்பு உயர்கின்றது. சுருக்கமாகச் சொல்லப் போனால் ஒரு அதி ஆரோக்கியமான இரசமான அனுபவமாக அது இருக்கின்றது.
ஒரு நிமிடத்திற்குள் பல நகர்த்தல்களை செய்யமுடியும் என்று நண்பர் கூறியபொழுது நம்பச் சிரமமாகவே இருந்தது. நகர்த்திக் காட்டியபொழுது புரிந்தது. சர சரவென நேரம் குறைந்துகொண்டே சென்றபொழுது ஆட்டம் களைகட்டிக்கொள்கின்றது. ஆன் லைனில் என்பதால் ஏதேதோ தூர தேசத்தில் இருப்போருடன் விளையாடுகிறோம் என்கின்ற உணர்வே அலாதியானதே.
இணையதளங்களல் உலவும் முகப் புத்தக (Face Book) பயன்பாட்டில் நேரும் எண்ணற்ற நன்மைகளுக்கிடையே அவ்வப்போது நிகழ்ந்து போகும் குழப்பங்கள் குறித்தும் நமது தொடரில் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று ஒரு இரசமான கோரிக்கை வைத்தார் நம் நண்பர் ஒருவர் இவர் கிரிக்கெட் விளையாட வருகின்றேன் என்று, நண்பரோடு சேர்ந்து அவரது திருச்சி வீட்டிற்கு பக்கத்தில் இரப்பர் பந்தில் கொஞ்சநேரம் விளையாடிவிட்டு நிறைய நேரம் பழ இரசம் (அப்பாடி,தலைப்பு வந்து விட்டது) அருந்திவிட்டு கிளம்புகின்ற டைப். இவர் நமது மட்டை கிளப்பும் பட்டை கிளப்பும் சத்தத்தைக் கேட்டு சப்த நாடியும் அடங்கி….. அடுத்த முறை பார்க்கலாம், என்று விட்டு பார்க்காமலே இருப்பது வேறு விஷயம்.
வீட்டில் இரசம் வைக்கப் பழகிக்கொண்டால் வௌநாடு சென்றால் உபயோகப்படும் என்ற உயர்ந்த இலக்கு நிரம்ப நாட்களாய் முயற்சி திருவினையாக்காமலேயே இருக்கின்றது. மூக்கு கண்ணாடி பெயரில் இருப்பதுபோல மூக்கோடு தொடர்பற்றது, மெழுகு வர்த்தியை நன்றாக படிக்க வேண்டும் என்றால் மெழுகு விளக்கு என்றேதான் சொல்வேண்டும். அதிஇரசம் என்ற இனிப்பு வகையை நண்பன் ஒருவகை இரசம் என்றேதான் நினைத்திருக்கின்றான். பெயர்கள் பல நேரங்களல் இரசமான எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுகின்றன. அதிஇரசத்திற்கு கலவை தயாரிப்பது மிக மிக நுணுக்கமான விஷயம் போலும். சின்ன வயதில் அம்மா அதற்கான முஸ்தீபுகளல் தீவிரமாக இறங்குவதைப் பார்த்த பின்பு…. ஓஹோ என்று எகிறிய எதிர்பார்ப்பு…. பண்டம் தயாரானபிறகு பஸ்பமாகிவிட்டது.
சைகோசோமேட்டிக் இல்னெஸ் எனப்படும், ஒருவித நோயைப்பற்றியும் அதற்கான குணப்படுத்தும் மனவள வலிமையைப் பற்றியும் அடுத்த விநாடி என்றும் கிழக்கு பதிப்பக புத்தகத்தின் ஆசிரியர் நாகூர் ரூமி அழகாக எளமையாக இரசமாக புரிய வைத்து இருக்கின்றார். எண்ணம்போல் வாழ்வு என்பதனை இதைக்காட்டிலும் எப்படி தௌவாக புரிய வைக்க முடியும்? பேவநத்தம் மலை மீது மீண்டும் ஏறும் வாய்ப்பு சமீபத்தில் அமைந்தது. கிழமங்கலம், தேன்கனிக்கோட்டை அருகே ஓசூர் கோட்டம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செங்குத்தாக அமைந்திருந்த மலை மீது பச்சை நிறமே பச்சை நிறமே என்று …… கம்பிகளை கைத்தாங்கலாக பிடித்து ஏறுகின்றமாதிரி வழி அமைந்திருக்கின்றனர். நிறம் பொருந்தாவிடிலும் ஏறும் அனுபவம் அருமையாகவே இருந்தது. “இலைகளை வியக்கும் மரம்” என்னும் தனது புத்தகத்தில் மலைகளைக் குறித்து எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் சிலாகித்து எழுதியிருப்பார். அதை இரசமாக அப்படியே இந்தத் தொடரிலும் வரிக்கு வரி எழுதித் தீர்த்தால்தான் அதே அனுபவத்தை வாசகர்கட்கு அளத்து மகிழ முடியும்.
தொடர்ச்சி அடுத்த இதழில்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment